எல்லா சனிக்கிழமைகளையும் போலத்தான் சென்ற வாரமும் சோம்பலாக விடிந்தது. போர்வைக்கு வெளியே கைநீட்டி அலைபேசியை எடுத்து நேரம் பார்ப்பதற்குள்ளாகவே கைவிரல்கள் விறைக்க ஆரம்பித்தன. மீண்டும் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு இரண்டு நாட்களுக்கு என்னென்ன திரைப்படம் பார்க்கலாமென்றும் ஆன்லைனில் யார் இருப்பார்கள் என்றும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் நண்பர்கள் வருவார்களா என்றும் எண்ணியபடி எந்த தடயமுமின்றி மற்றுமொரு வாரமும் கடந்துபோனதை அசைபோட்டபடியிருந்தேன்.
நீண்ட நாட்களாக தொடர்பிலில்லாத நண்பன் ஒருவனிடமிருந்து ஜிடாக் அரட்டைக்கான அழைப்பு எழுந்து உட்கார வைத்தது. அவனுடன் கல்லூரி முடிந்து ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் ஒன்றாக சுற்றியவர்கள். அவன் திருவள்ளூர். விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் ஒன்றாகத்தான் வருவோம். ஏனோ இடையில் இத்தனை வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. எங்களுக்குள் பொதுவான நண்பர்களிடம் பேசும்போது அவனைப் பற்றி விசாரித்திருக்கிறேன். எப்போதாவது ஓர்குட்டில் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்றே பல நண்பர்களுடனான தொடர்பு குறைந்துவருகிறது. ஓர்குட் இருக்கவே பலரின் பெயர்களாவது மறக்காமல் இருக்கிறது.
ஜிடாக் அழைப்பை ஏற்றதும் உடனே பேசினான். கடந்த மாதமே டல்லாஸ் வந்திருக்கிறான். நான் இங்கு இருக்கிறேன் என்பதை தற்செயலாக ஓர்குட்டில் பார்த்திருக்கிறான். ஓர்குட் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஊர்ப்பெயரை டல்லாஸ் என்று மாற்றியிருந்தேன். (இன்னும் ப்ளாக்கர் பக்கத்தில் கூட மாற்றவில்லை. சோம்பல்தான். வேறேன்ன). உடனே தொலைபேசி எண்ணை வாங்கி அழைத்தேன். நான் தங்கியிருக்கும் ஏரியாவிலேயே தான் இருந்திருக்கிறான். முகவரி தந்ததும் உடனே கிளம்பிவந்தான்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு. இருவருமே கல்லூரி நாட்களிலிருந்து ரொம்பவும் மாறிவிடவில்லை என்பது அவன் வந்ததுமே தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏழெட்டு வருடக் கதையைப் பேசியபடி இருந்தோம். விடுதி நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தில்(4 சிடிகளில்) அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு "இப்படியாடா இருந்தோம்" என்றான் சிரித்தபடி. விடுதி வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள், நண்பர்களிடையான சண்டைகள், மன வருத்தங்கள், எதிர்கொண்ட சவால்கள், குடும்பம், நண்பர்களின் திருமணம், பணி மாற்றங்கள் என பேசப்பேச பேசுவதற்கான விஷயம் இன்னும் நிறையவே மீதமிருந்தது. அந்த வாரமே சியாட்டலுக்குச் சென்றுவிட்டான். இதன்பின் அவனை எப்போது சந்திப்பேனோ ஆனால் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வாரயிறுதி மறக்கமுடியாத ஒன்றாகிப் போனது.
***********************************
புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கொடுத்த சுட்டி
Machines 'to match man by 2029' - பிபிசி செய்திக் கட்டுரை
நமக்கெல்லாம் இது எச்சரிக்கை மணி! கி.பி 2029-ல் மெஷின்கள் பதிவெழுதும். சண்டையிடும். மொக்கை போடும். இப்போதே போட்டிக்குத் தயாராகிக் கொள்வோம்!!
****************************
சென்ற வாரம் ஓட்டுநர் உரிமத்திற்கான எழுத்துத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். அன்று முதுகில் தட்டி வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள். எனக்கு இடது கண்ணில் லேசான பார்வைக் குறை உண்டு. ஆனால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லையாதலால் கண்ணாடி அணியாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறேன். கண்பார்வை சோதனையின் போது 'Vision Tester'ல் படிக்கச் சொன்னார். இரண்டு கண்களையும் அதில் பொறுத்திப் பார்த்ததில் மூன்று வரிசைகளில் இருந்ததில் எனக்கு இடது வரிசை காலியாகவே தெரிந்தது. நடுவிலும் வலதுபக்கத்திலும் உள்ள எண்களைப் படித்துக் காட்டினேன். இடது வரிசையில் இருப்பதையும் படிக்கச் சொன்னார். 'இடது வரிசையில் எண்கள் எதுவுமில்லையே' என நான் கேட்க, ஒரு துண்டுச்சீட்டைத் தந்து இடது வரிசையில் ஏதாவது தெரிந்தால் எழுதிக்கொடு இல்லையென்றால் மருத்துவரைப் பார்த்துவிட்டு வா என்று கலாய்த்துவிட்டு அடுத்தவரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
ஓரளவு தெரிந்த கண் மொத்தமாக ஃப்யூஸ் போய்விட்ட அதிர்ச்சியில் மீண்டும் பார்த்தால் இடது வரிசை காலியாகவே தெரிந்தது. என் மேலிருந்த நம்பிக்கையில் இடது வரிசை காலியாகத் தான் இருக்க வேண்டுமென அந்த அலுவலர் பார்க்காத சமயத்தில் இடது கண் துவாரத்தில் வலது கண்ணைப் பொருத்திப் பார்த்தால் அதிர்ச்சி. இடது வரிசையில் எண்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குத் தெரியவில்லை. இந்தளவுக்கு கண் ஃப்யூஸ் போயிருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. வலது கண்ணில் பார்த்து எண்களை மனப்பாடம் செய்துகொண்டு பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன். உரிமம் வாங்கப்போகும்போது இன்னொருமுறை எப்படியாவது ஏமாற்றவேண்டும். அல்லது அதற்குள் ஒரு சோடாபுட்டியை மாட்டவேண்டும்.
*****************************
எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.
****************************
எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலிகள். பள்ளி நாட்களில் ஓசியில் வார இதழ்கள் படிக்கத்தந்து சுஜாதா என்ற பெயரை அறிமுகப்படுத்திய பக்கத்து கடைக்காரரின் சிரைக்காத முகமும், மாவட்ட நூலகத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடித்தேடி படித்த நாட்களும், டிவி தொடர்களாக வந்த அவரது நாவல்களும், அறிவியல் கட்டுரைகளும், கற்றதும் பெற்றதும், வேலையில் சேர்ந்தபிறகு வாங்கிக்குவித்த அவரின் புத்தகங்களும், அவரது ஆளுமை குறித்தான பிரமிப்பும் அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும், சினிமாவிற்காக அவர் செய்துகொண்ட சமரசங்களும், நண்பர்களுடனான பல விவாதங்களும் இன்னும் பலவும் நினைவுகளாக நிழலாடுகின்றன.
வாழ்க நின் புகழ்!
*************************
இந்த மாத ?! தத்துவம்
"Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"
- Paulo Coelho (Veronika decides to die நாவலில்)
?! - பிப்ரவரி
கப்பி | Kappi 25 பின்னூட்டங்கள்
வகை ஃபீலிங்ஸு
அம்மாவின் புகைப்படம்
அம்மாவின் அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அழுக்கேறியிருந்தது. முன் எப்போதோ ஏதோவொரு பண்டிகை நாளில் வைக்கப்பட்ட சந்தனத்தின் கறை சட்டங்களில் படிந்திருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்தபோது அவளுக்கு வயது 22. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அட்டையில் வரையப்பட்ட நீல வானத்தின் முன் நின்றுகொண்டிருப்பாள். அருகில் ஒரு மேடையில் பூச்செடி வைக்கப்பட்டிருக்கும். ப்ளாஸ்டிக் பூச்செடியாக இருக்கலாம். அதே நாளில் அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த புகைப்படம் தான் பிடிக்கும். என் அக்காவைக் கருவுற்றிருந்த மூன்றாம் மாதத்தில் எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறாள். பிறந்த மூன்றாம் நாளே ஜுரத்தில் வலிப்பு வந்து என் அக்கா இறந்தாள்.
அப்பாவுடன் சண்டையிட்ட நாட்களில் கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். ஒரு தீபாவளி நாளில் ஏற்பட்ட சண்டையின் உச்சகட்டத்தில் அப்பா அந்த புகைப்படத்தை வீசி எறிந்ததில் கண்ணாடி உடைந்து அறையெங்கும் சிதறியது. அடிவாங்கி களைத்திருந்தவள் ஆவேசம் கொண்டது போல் எழுந்துவந்து கண்ணாடித் துகள்களை பெருக்கிக் கூட்டினாள். அப்பா எப்போதும்போல் வெளியே நின்று புகைக்கத் தொடங்கினார். கண்ணாடித் துகள்களை தெருவோரம் கொட்டிவிட்டு வாசலில் நின்றிருந்த அப்பாவை ரெளத்திரப் பார்வை பார்த்துவிட்டு புகைப்படத்தை சுவற்றில் மாட்டி அறைக்குள் சென்றவள் அன்று மாலை வரை வெளியில் வரவில்லை. மாலை அப்பா அந்த புகைப்படத்திற்கு புதிதாக கரும்பச்சையில் சட்டம் மாட்டிவந்தார்.
நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களது அம்மாக்களின் இளவயது புகைப்படங்கள் எங்காவது இருக்கிறதா என்று என் கண்கள் துழாவும். தினகர் வீட்டில் அவன் அம்மா புகைப்படம் இருக்கும். ஆனால் அது அவன் பிறந்தபிறகு எடுத்ததாக இருக்கவேண்டும். சிறிது வயதானவராகத் தெரிவார். மற்ற நண்பர்கள் வீடுகளில் பார்த்ததில்லை. ஒரு முறை துரையின் அம்மாவைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர்கள் அப்பா வீட்டுப் பரணில் பத்திரமாக இருப்பதாகவும் சொன்னார்.
அம்மாவின் புகைப்படத்தின் பிரதி ஊரில் பாட்டி வீட்டுக் கூடத்திலும் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் இருந்ததை விட சிறிது வெளிறிப்போய் இருக்கும். தாய்மாமாவைக் கட்டிகொண்டு பக்கத்து வீட்டிலேயே இருக்கும் பெரியம்மாவின் புகைப்படமோ திருமணமே ஆகாமல் பெற்றோருடனே தங்கிவிட்ட சித்தியின் புகைப்படமோ அங்கு நான் பார்த்ததில்லை.
சித்தப்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மூன்றில் மட்டும்தான் அம்மா இருப்பாள். தாலி கட்டும்போது எடுத்திருந்த புகைப்படத்தில் அம்மாவின் கால் மட்டும் தெரியும். மற்றொரு புகைப்படத்தில் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றபடி ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பாள். மூன்றாவது எல்லோரும் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் எடுக்க எல்லோரும் நின்றபோது அம்மாவைக் காணவில்லை. நானும் மாமாவும் அவளைத் தேடிச் சென்றோம். பின்னறையில் வேலையாட்களுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தவளை அழைத்துவந்து எடுத்த அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாயிருப்பாள்.
சின்ன மாமாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா அவளிடம் "உங்கம்மாவைப் பாருடா...தலையெல்லாம் நரைச்சுப்போய் கிழவி மாதிரி இருக்கா" என்று கிண்டலடித்தார். நான் "உங்களுக்கு மட்டும் நரைக்கலையா?" என்று அவருடன் சண்டையை ஆரம்பித்தேன். அவள் சிரித்தபடி பார்த்திருந்தாள்.
மாமாவிற்கு பெண் குழந்தை பிறந்தபோது அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். குழந்தையை விதவிதமாகப் படம் பிடித்துவிட்டு பின்னர் எல்லோரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் படம்பிடித்துக்கொண்டோம். எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மா தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. பெரியம்மா சித்தியுடன் ஒன்று, அப்பாவுடனும் என்னுடனும் ஒன்று, எல்லோரும் சேர்ந்து ஒன்று என்று மூன்றே புகைப்படங்களுக்குத்தான் வந்து நின்றாள். தனியாக ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. எல்லோரும் கேட்டும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகும் கூட அவள் தனியாக எந்த புகைப்படமும் எடுக்கவிட்டதில்லை. அவளுக்குத் தெரியாமல் பக்கவாட்டில் புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் நேருக்கு நேராக எடுக்கவிடுவதில்லை.
இன்று எப்படியாவது சமாதானப்படுத்தி அவளை ஒரு புகைப்படம் எடுத்தே தீரவேண்டும். இந்த புகைப்படத்தில் இருப்பதுபோல நிற்கவைத்து எடுக்க வேண்டும். வெளியில் நீல வான பின்னணியில். இதில் இருப்பதைப் போலவே. அதற்கு சம்மதிக்கவில்லையென்றால் வீட்டினுள்ளே வைத்தாவது ஒன்று எடுத்துவிட வேண்டும்.
"அந்த போட்டோவைக் கையில வச்சுட்டு என்னடா பண்ற?" காபி ஆற்றியபடியே அருகில் வந்தமர்ந்தாள் அம்மா.
"ஒன்னுமில்ல..சும்மாதாம்மா உன் போட்டோவை பார்த்துட்டிருக்கேன்..ஒரு போட்டோ எடுக்கறேன்..திரும்பு". பக்கத்திலிருந்த கேமராவைக் கையில் எடுத்தேன்.
"ஒன்னும் வேண்டாம் அதை இப்படி கொடுத்துட்டு காபியைக் குடி".
சிரித்தபடி கேமராவை வாங்கி தூர வைத்துவிட்டு தலையில் தட்டினாள். மறுபேச்சின்றி காபி கோப்பையை வாங்கி குடிக்கத் தொடங்கினேன்.
கப்பி | Kappi 17 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்
சரித்திர நாயகன்
புர்ர்ர்ரட்சி புதல்வன்
டர்ரு டான்ஸர்
ஏழரையாவது அதிசயம்
சோதனை நாயகன்
நடன சூறாவ'லி'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
சாம் ஆண்டர்சன் நடித்த 'யாருக்கு யாரோ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!!
படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் பாடல் காட்சிகள்:
சாம் ஆண்டர்சன் ஓர்குட் குழுமம் - http://www.orkut.com/Community.aspx?cmm=43224008
டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே!!
கப்பி | Kappi 42 பின்னூட்டங்கள்
வகை சினிமா
?! - ஜனவரி
இரண்டு வாரங்களாக ஜோதா அக்பர் (Jodhaa Akbar) பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக சிறிது ஏமாற்றி வந்த ரஹ்மான் Back to form. இன் லம்ஹோ(In Lamho) பாடலில் மதுஸ்ரீ சொக்க வைக்கிறார். சுஃபி இசையில் ரஹ்மானின் பாடல்கள் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும். இந்த படத்தில் க்வாஜா மேரே க்வாஜா(Khwaja Mere Khwaja) பாடல். ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஜாவேத் அலி பாடியிருக்கும் Jashn-E-Baharaa அருமையான மெலடி. Azeem-O-Shaan Shehansha பாடல் அதிரவைக்கிறது. Mann Mohana பாடல் இன்னொரு இனிமையான் மெலடி. Jashn-E-Bahara பாடலுக்கான Instrumentalலில் புல்லாங்குழல் மனதை வருடுகிறது. Khwaja பாடலுக்கான Instrumental அருமை. பிப்ரவரி 15 திரைப்படம் வெளியாகிறது.
சமையலில் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்கள்
* நாம் சமைப்பதை கேவலமாக இருப்பதாக நாமே சொல்லிவிடக் கூடாது
* நாம் சமைப்பது தான் சிறந்தது என்று பெருமிதம் கொள்ள வேண்டும்
* சாப்பிடும்போது நாக்கு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட வேண்டும்
மூன்றாவது அதிமுக்கியமானது
சமையலில் ஓரளவு தேறிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். உருகுவேயில் இருந்தபோது நான்கைந்து வகைகள் மட்டுமே தெரியும். இப்போது புதிது புதிதாக முயற்சித்து எது செய்தாலும் சாப்பிடக்கூடிய அளவிலாவது வந்துவிடுகிறது. அறையில் நால்வருமே நன்றாக சமையல் செய்வதால் தினம் தினம் விருந்து தான்.
நடுங்க வைக்கும் குளிரில் கலிபோர்னியாவின் சான் டியகோ(San Diego)வில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றிருந்தோம். தண்ணீரில் நனையக்கூடிய ஒரு விளையாட்டிற்கு நாங்கள் தயங்கிக்கொண்டே சென்றோம். தன் தாத்தாவுடன் வந்திருந்த சுட்டிப்பெண் 'எனக்கு குளிரவில்லை. முழுதாக நனைய வேண்டும்' என்று கூறியபடியே குதூகலத்துடன் எங்கள் அருகில் அமர்ந்தாள். அந்த வண்டி நகரவும் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம். குளிரில் உடல் நடுங்கினாலும் அதை முகத்தில் காட்டாமல் 'எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயமே இல்லை' என்று உற்சாகமூட்டினாள். பாதி தூரம் கடந்ததும் 'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது.
சென்ற மாதம் மயாமி சென்றிருந்தபோது தங்கியிருந்த நண்பரின் வீடு இன்னும் பயமுறுத்தியபடி இருக்கிறது. கேரளா போல் இருந்த அந்த பகுதியில் அவர் ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வீட்டுக்கு சொந்தக்காரர் நடுத்தர வயதான அர்ஜெண்டின பெண்மணியாம். நாங்கள் சென்றபோது அவர் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறார். இரண்டு கருப்பு பூனைகள் வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. பார்வைக் குறையுள்ள கிழட்டு வெள்ளைப் பூனை வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு காதும் கேட்காதாம். பார்க்கும்போதே பயமாகத்தான் இருந்தது. இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை. கதவு மூடியபடிதான் இருந்தது.
அந்த பெண் வீடு முழுக்க கலைப்பொருட்கள் வாங்கி அடுக்கிவைத்திருக்கிறார். வெண்கல சிலைகள், அழகிய வேலைப்பாட்டுடனான திரைச்சீலைகள், மரத்தினாலான மேசை நாற்காலிகள், சிறிய பலிங்கு சிலைகள் என வீடு முழுக்க நிரப்பியிருக்கிறார். மின்விசிறியில் ஏலியன் முகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார். சுவரில் அங்கங்கே மிருகவதை எதிர்த்து வாசகங்கள். இந்த பொருட்களையெல்லாம் குறைவான விலையிலோ அல்லது இலவசமாக கிடைக்கும்போதோ தான் வாங்கி வருவார் என நண்பர் சொன்னார். அந்த வீட்டைப் பார்க்கும்போது ஒரு சேட்டு வீடு போன்றோ பேய் பங்களா போன்றோ அல்லது நாடக கம்பெனி போன்றோ தான் தோன்றியது.
தாய் குரங்கைக் கொன்றுவிட்டு அதன் குட்டியை காப்பாற்றும் சிறுத்தை!!
இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்.
இந்த மாத ?! தத்துவம்
Forrest Gump திரைப்படத்திலிருந்து...
"Life is like a box of chocolates. You never know what you're gonna get."
கப்பி | Kappi 24 பின்னூட்டங்கள்
எழுதியதில் பிடித்தது - 2007
It does not matter how slowly you go so long as you do not stop
-Confucius
சென்ற ஆண்டு எழுதிய மொத்த இடுகைகள் -
இந்த பதிவில் - 34
சங்கத்தில் - 8
கீத்துக்கொட்டாயில் - 7
எழுதிய பிறகு "ஏன் எழுதினோம்" என்று தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு. அப்படியான பதிவுகள் தொடர்ந்து எழுதுவதற்கே ஒவ்வாமையையும் அயர்ச்சியையும் ஏற்படுத்திவிடுவதால் பெரும்பாலும் தவிர்க்க முயல்வேன். அப்படியும் மொக்கைகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது.
திரைப்படம் குறித்தான பதிவுகள் விமர்சனம் என்பதை விட அத்திரைப்படம் குறித்தான அறிமுகப் பதிவாகவேயிருக்கும். மோசமான திரைப்படங்களைப் பார்த்து கடுப்பாகி மொக்கை என விமர்சனம் எழுதுவதை விட நல்ல படங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருக்கிறது.
சென்ற ஆண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். என்னளவில் திருப்திகரமாகவே இருந்தன. நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் சட்டியிலும் இல்லை. அகப்பையிலும் வரவில்லை. (என்னால் கவிதை எழுத முடியாதென்பதை எப்போதோ உணர்ந்துகொண்டேன்)
நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொசுவத்தி சுத்துவது பொழுதுபோக்கு. கொசுவத்தி பதிவுகள்
நிறையவே இருக்கும். நிகழ்காலத்தை மறக்க கடந்த காலத்தை மனதில் ஓட்டிப்பார்ப்பது ஒருவித போதைதான்.
சங்கத்தில் எழுதிய பதிவுகளும் இங்கு எழுதிய சில பதிவுகளும் கிச்சுக்கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதியவை.
சென்ற வருடம் நிறைய ஊர் சுற்றினாலும் பாணதீர்த்தம்-குற்றாலம் குறித்தும் பழவேற்காடு குறித்தும் மட்டுமே எழுதியிருக்கிறேன்.
மற்றபடி மொக்கைகள் நிறையவே இருக்கும். பிடித்த, 'பிடித்த' வீடியோக்களை இட்டிருக்கிறேன். 'ஃபீலிங்க்ஸு' என ஓவராக பொங்கியிருக்கிறேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.
சங்கத்தில் அட்லாஸ் ஆனதும் நிரந்தர சிங்கமானதும்(சிங்கம் சும்மாவே இருந்தாலும்) பெருமை. சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவுகளுக்கான பரிந்துரையில் பாஸ்டன் பாலா இடம் கொடுத்தது மிகப் பெரிய அங்கீகாரம்.
வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதிவிடுவது என்று நல்ல மூடில் இருக்கும்போதெல்லாம் முடிவெடுத்தாலும் தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. மனசாட்சி "சரக்கு அவ்வளவுதான்டா சோம்பேறி" என்று கூவுவதை ஸ்மைலி போட்டு மழுப்பிவிடுகிறேன். மேலே கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவத்தை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கலாம்.
பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஆப்புக்கு ஆப்பு என இத்தொடரில் எழுத அழைத்த அண்ணன் சிவிஆருக்கு பிடித்த பதிவு - இராஜேந்திரன் கதை
நான் அழைக்கும் ஐவர் (மன்னிச்சிருங்க மக்கா :D)
கைப்ஸ்
இராம்
ஜி
தம்பி
இளா
கப்பி | Kappi 8 பின்னூட்டங்கள்
வகை சுயசொறிதல், பதிவர் வட்டம்
One Hundred Years of Solitude
Love in the time of Cholera, Of Love and Other Demons நாவல்களை வாசித்த நாட்களிலிருந்தே மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude (நூற்றாண்டு காலத் தனிமை) நாவலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த இரு நாவல்களும், இணையத்தில் படித்திருந்த மார்க்வெஸ்ஸின் கட்டுரைகளும், நூற்றாண்டு கால தனிமை நாவல் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்த நாவலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சென்னையில் அலுவலகத்தில் நடந்த ஒரு சிறிய புத்தக கண்காட்சியில் வாங்கிய நான்கு புத்தகங்களில் இரண்டு மார்க்வெஸ் எழுதியது. One Hundred Years of Solitude மற்றும் மார்க்வெஸ்ஸின் சிறுகதை தொகுப்பு. முதலில் கையில் எடுத்தது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை. இந்த பதிவு அந்த புத்தகம் குறித்த என்னளவினால் ஆன குறிப்பே. அதைக் குறித்த முழுமையான பதிவை எழுதிவிட முடியுமெனத் தோன்றவில்லை.
இந்த நாவல் கற்பனை நகரமான மகந்தோ(Macondo) என்ற நகரில் வாழ்ந்த பொயந்தியா(Buendia) வம்சாவளியினரின் கதை. நூறாண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் மகந்தோ நகரின் வளர்ச்சி, வீழ்ச்சி, கொண்டாட்டங்கள், துக்கங்கள், காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறாமலிருந்தவைகள் என அந்நகருடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளை பொயந்தியா குடும்பத்தினர் வாயிலாக சொல்லியிருக்கிறார் மார்க்வெஸ். ஹோசே ஆர்காதியோ பொயந்தியா(Jose Arcadio Buendia)வும் அவன் குழுவினரும் மகந்தோ நகரை நிர்மானித்து அங்கு வாழ்கிறார்கள். அவன் மனைவி உர்சுலா(Ursula). பொயந்தியா எப்போதும் கற்பனையில் வாழும் மனிதன். எப்போதாவது மகந்தோவிற்கு வரும் நாடோடிகளே அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்பு. நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளாலும் கருவிகளாலும் ஈர்க்கப்படும் பொயந்தியா அவர்களுடன் நட்புகொள்கிறான். உர்சுலா குடும்பத்தினை தன் கட்டுப்பாட்டுள் வைத்திருப்பவள். அவளுக்குத் தெரியாமல் அந்த குடும்பத்திலோ மகந்தோ நகரிலோ எதுவும் நடப்பதில்லை. அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை இந்த நாவல் மூலம் சொல்கிறார் மார்க்வெஸ்.
பொயந்தியா தம்பதியினரின் மகன் ஆரெலியனோ பொயந்தியா (Aureliano Buendia) அரசாங்கத்திற்கெதிராக போரில் இறங்குகிறான். பதினெட்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறான். மற்றொரு மகன் ஹோசே ஆர்காதியோ(Jose Arcadio) நாடோடிகளுடன் சென்றுவிடுகிறான். அவர்களின் மகள் அமராண்தா(Amaranta) காதலை நிராகரித்துவிட்டு மணமாகாமல் இருக்கிறாள். ஹோசே ஆர்காதியோவின் மகன் ஆர்காதியோ, ஆர்காதியோவின் மகள் ரெமெதியோ(Remedios), மகன் ஆர்காதியோ செகுந்தோ(Arcadio Secundo), அவனது மனைவி பெர்னாண்டா(Fernanda), இவர்களது பிள்ளைகள் என நாவல் முழுக்க கதாபாத்திரங்களால் நிரம்பிவழிகிறது.
ஒரே குடும்பத்தினராயினும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசியங்கள். உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களும் அவர்களின் செய்கைகளும் அதை மார்க்வெஸ் விவரிக்கும் விதமும் நம்மை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தும் ஒவ்வொருவரும் தன்னளவில் தனிமையிலேயே இருக்கின்றனர். அந்த நூற்றாண்டு காலத் தனிமையின் கதையே இந்த நாவல்.
இறந்துபோனவர்கள் தாகத்துடன் நடமாடுவது, இறந்தவர்களுடன் நேருக்கு நேராக பேசுவது, நாடோடிகளின் கண்டுபிடிப்புகள், மஞ்சள் பட்டாம்பூச்சிகள் புடைசூழ வரும் கதாபாத்திரம், வீட்டினுள் நிர்வாணமாக அலைந்துகொண்டிருக்கும் ரெமெதியோஸ் என்ற அழகி, பார்வை மங்கிவிட்ட பிறகும் தன் பிற உணர்ச்சிகள் மூலம் அனைத்தையும் பார்த்து வரும் உர்சுலா, ஐந்து வருடங்கள் தொடர்ந்து பெய்யும் மழை, பல தலைமுறைகளாக வீட்டை ஆக்கிரமிக்கும் எறும்புகள், எதிலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத சோபியா(Sofia), வீட்டில் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று செய்யும் பெர்னாண்டா, வாலுடன் பிறக்கும் குழந்தை, வெள்ளியை உருக்கி மீண்டும் மீண்டும் மீன்கள் செய்யும் கலோனல் ஆரெலியெனோ, புத்தகங்களில் மூழ்கியிருக்கும் இன்னொரு தலைமுறை ஆரெலியெனோ, பொயந்தியா குடும்பத்தினரின் நூற்றாண்டு கால வாழ்வை முன்னமே கணித்து எழுதிய நாடோடி என நாவல் முழுக்க நம்மை மயக்கச் செய்யும் எழுத்து. 'மேஜிக்கல் ரியலிசம்' குறித்து எனக்கு தெளிவான புரிதல் கிடையாது என்ற போதிலும் இந்த நாவலில் அதை பொருத்திப் பார்க்க முடிந்தது.
இந்த நாவலைப் படித்து முடிக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பல பக்கங்களை மீண்டும் மீண்டும் படித்தேன். மீண்டும் மீண்டும் அவற்றைப் படிப்பதே சுகானுபவமாக இருந்தது. குறிப்பாக பெர்னாண்டாவின் எண்ணவோட்டமாக இரண்டு பக்கங்களுக்கு மேல் முற்றுப்புள்ளி இல்லாமல் செல்லும் ஒரு பகுதியை நான்கைந்து முறை வாசித்து மகிழ்ந்தேன். வாசிக்கையில் இந்நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வெறுமையையும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த நாவலை படித்து முடிக்கவே முடியாதென்று கருதி ஒரு வாரம் படிக்காமல் இருந்தேன். இப்போது படித்து முடித்ததும் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது.
ஆரெலியெனோக்களும், ஆர்காதியோகளும் ரெமெதியோக்களும் நிறைந்திருக்கும் இந்நாவலில் பெயர்கள் குழம்பும் சமயங்களில் நாவலின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் பொயந்தியா வம்சாவளியினரின் பட்டியலை அடிக்கடி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மகந்தோவின் வாயிலாக மார்க்வெஸ் காலச் சுழற்சியில் பல மாற்றங்களையடைந்து அனைத்தும் ஆரம்ப நிலையையே அடைந்துவிடுவதைக் குறிப்பிடுகிறார். மகந்தோவை எந்த நாட்டோடும் நாகரீகத்தோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
மார்க்வெஸ்ஸின் மாஸ்டர் பீஸ்-ஆகப் போற்றப்படும் இந்நாவலை பல தளங்களிலும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு சாதாரண வாசகன் என்ற நிலையிலேயே எனது புரிதல்கள் அமைந்திருககிறது. இந்நாவல் குறித்தான கட்டுரைகளைப் படித்த பின் மறுவாசிப்பில் எனது புரிதல்கள் விரிவடையலாம். பின்னாட்களிலும் இந்த புத்தகத்தைக் கையில் எடுக்கும் பொழுதெல்லாம் மாயவித்தைகளைக் காணும் சிறுவனின் மனநிலையில் இருப்பேன் என்றே தோன்றுகிறது.
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை புத்தகம், மார்க்வெஸ்
மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும்
ராகவன் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அவரது மனைவி கயல்விழியாக நடித்தவர் கமலினி முகர்ஜி. கமலினி நடித்திருக்கும் 'கோதாவரி' என்ற தெலுங்கு படம் நன்றாக இருக்கும். நன்றாக இருக்குமென நினைத்து நாம் பார்க்கும் பல படங்கள் சொதப்புவதும் மொக்கை படம் பார்க்கும் மனநிலையோடு இருக்கும் போது நல்ல படங்கள் சிக்குவதும் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற தத்துவத்தை உணர்த்துகின்றன. தத்துவவாதி அத்தனை பேரும் தண்ணியடிக்க மாட்டார்கள். ஆனால் தண்ணியடிக்கும் அத்தனை பேரும் தத்துவம் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு படத்தில் 'இல்லை இல்லை' என பஞ்சப்பாட்டு பாடும் தன் மனைவியிடம் 'இல்லைன்னு சொல்லாதே! எல்லாமே காலியா இருக்கு'ன்னு சொல்லுன்னாராம் கலைவாணர். கலைவாணர் அரங்கம் சென்னை அண்ணா சாலையில் இருக்கிறது. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தால், சிக்னலில் வண்டியை கோட்டின் முன்னாலேயே நிறுத்தினால், பச்சை விளக்கு எரிந்த பிறகு வண்டியெடுத்தால், ஹெல்மெட் அணிந்தால், இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்பினால், ஓவர்டேக் செய்யும் வண்டிக்கு வழிவிட்டால், சாலையைக் கடப்பவருக்காக வண்டியை நிறுத்தினால், இன்ஷூரன்ஸ், ஆர்.சி அத்தனையும் பக்காவாக வைத்திருந்தால், டிராபிக் போலிஸ் பணம் வாங்குவதற்கான வாய்ப்பே கொடுக்காவிட்டால் உங்களை மடையன் என்று கூறிவிடுவார்கள். என் மாமா சிறுவயதில் என்னை 'மாங்கா மடையன்' என்று தான் கூப்பிடுவார். மடையனுக்கு மாங்காய் எப்படி அடைமொழியாக வர முடியும்? 'எப்படா முடியும்' என்று ஒவ்வொரு வாரம் ஆரம்பிக்கும்போதும் தோன்றுவதும் முடியும்போது எப்படி முடிந்தது என்று தெரியாமலே போவதும் பெரிய காமெடி. காமெடி கஷ்டப்பட்டு எழுதினா வராது.இஷ்டப்பட்டு எழுதினா தான் வரும். வரும் வரும்னு ரொம்ப நாளா பில்டப் கொடுத்திட்டிருக்க 'பீமா' பொங்கலுக்கு வந்துடும் போல. பொங்கலுக்கு தாத்தா பாட்டி ஊருக்குப் போய் நாலு நாள் சுகமா இருந்து சில பல வருடங்கள் ஆச்சு. சில பல வருடங்கள் கழித்து இந்த பதிவை படிச்சா இம்புட்டு மொக்கையா போட்டிருக்கோம்னு சிரிப்பா வரும். இப்பவே அப்படித்தான் இருக்கு. அப்படி இப்படின்னு இருபது வரிக்கு எழுதியாச்சு. அடுத்து என்ன எழுதலாம்னு காபியே குடிச்சிகிட்டே யோசிச்சிட்டிருக்கேன். சென்னைல காபிக்கு சிறந்த இடம் எது? அ) சரவண பவன். ஆ) வசந்த பவன் இ) அடையார் சங்கீதா. இங்க போனா வாய்க்கு நல்லா சாப்பாடு கிடைக்கும். ஆனா பர்ஸுக்கு நல்லதில்லையே. எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்கறது யாரு? ஒருத்தனுக்கு நல்லதா இருக்கறது இன்னொருத்தனுக்கு கெட்டதாயிடுது. கெட்டுப் போன பால்ல தான் கல்யாணங்களில் காபி போடுவாங்கன்னு நினைக்கறேன். கல்யாணத்துக்கெல்லாம் போனா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தா ஜாலியா பொழுது போகும். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டிருக்க பெருசுங்க, இந்த மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லேயர் பவுடர் அடிச்சுட்டு வர ஆண்ட்டிஸ், என்னிக்குமில்லாம அன்னிக்கு மட்டும் பக்காவா டிரெஸ் பண்ணி செண்ட் அடிச்சுட்டு வர மாம்ஸ்ங்க, கல்யாண மண்டபத்தை கிரவுண்டாக்கி விளையாடற பொடிசுங்க, கக்கத்துல கேஷ்-பேக் வச்சிட்டு திரியற பொண்ணு/மாப்பிள்ளையோட மாமா/சித்தப்பா, வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள பக்கத்து இலையை எடுத்துப்போடறவங்க, பின்னாடி சேரைப் புடிச்சுகிட்டு அடுத்த பந்திக்கு இடம் போடறவர், தாம்பூலம் கொடுக்கற தாத்தா. தாத்தா இறந்து பத்து வருடம் ஆகிறது. அவர் இறந்த போது என் அப்பாவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து நான் அழுதேன். அவர் இறந்தது அப்போது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அதிர்ச்சியும் பரபரப்பும் உண்டாக்கவேண்டுமென இந்த செய்தி சேனல்கள் செய்யும் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. எந்த சேனலை திருப்பினாலும் ஒரே நிகழ்ச்சி வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அரங்கங்களில் ஒளிபரப்பாகிறது. ஆனால் அத்தனையும் பார்க்க ஆளிருக்கிறது. நண்பர் ஒருவருக்கு 'அசத்த போவது யாரு' ஒரு வாரம் பார்க்கவில்லையென்றாலும் தூக்கம் வராது. புலம்ப ஆரம்பித்துவிடுவார். புலம்பல் பார்ட்டிகளிடம் பெரும்பாலும் கோபம் வருவதில்லை. யார் எவ்வளவு புலம்பினாலும் 'ம்' கொட்டிக் கேட்டுக்கொண்டு 'விடுங்க. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்'ன்னு அறிவுரை சொல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கவழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடிவதில்லை. 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் 'ஏ ஆத்தா' பாடலை மலைக்கோட்டையில் ரீமிக்ஸ் செய்திருந்தது ஓரளவு நன்றாகவேயிருந்தது. ஆனால் ரீமிக்ஸ் என்றாலே நடுவில் ஆங்கில ராப் சேர்த்துவிடுவதும் பழைய பாடலை மொத்தமாக சொதப்புவதும் கடி. வார இதழ்களில் கடி ஜோக் என்ற வகை போய் இப்போதெல்லாம் ஜோக் என்றாலே கடி மட்டும் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நேரில் பார்த்ததில்லை. பார்க்காத இடங்களென்றால் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஆங்கிலத்தில் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல்கள் இணையத்தில் பரவலாகக் கிடைத்தாலும் IMDb-யின் டாப்-250ல் உள்ள திரைப்படங்களை நம்பலாம். வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். 'Lahe Raho Munnabhai' ஒரு நேரத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் டாப்-10ல் இருந்தது. நம்மாட்கள் குத்தியிருப்பார்கள். கத்தி குத்து வாங்கிய நண்பனின் கதையை எழுதலாம் என யோசித்தேன். அவன் கத்திக்குத்து வாங்கியதற்கான காரணம் எனக்கே மொக்கையாகப்பட்டதால் எழுதவில்லை. எழுத வேண்டுமென நினைத்து எழுதாமல் விடுகின்ற விஷயங்கள் நிறைய. நிறைய விஷயங்கள் எனக்கு புரிவதேயில்லை. அருஞ்சொற்பொருளுடன் யாராவது விளக்கினால்தான் மண்டையில் ஏறுகிறது. உச்சிவெயில் மண்டையைப் பிளக்க மட்டையாடிய நாட்களைப் போலில்லை. இப்போது ஒரு ஓவர் பெளலிங் போட்டாலே மூச்சு வாங்குகிறது. மூச்சு விடாம மொக்கை போடறதுக்கு மட்டும் என்றைக்குமே சலிக்கவில்லை. சலிப்படைந்த எதையும் தொடருவதற்கும் மனம் ஒப்புவதில்லை. தொடரை தொடர புரட்சி போட்டோகிராபர் சிவிஆரையும், ஒரு வாரம் முழுக்க பதிவு போட்டு டயர்டாகி இப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களையும் அப்ஸ்காண்ட் ஆன அண்ணாச்சி இராயல் அவர்களையும் பணிவன்புடன் அழைக்கிறேன். வெளங்கிரும்.
கப்பி | Kappi 34 பின்னூட்டங்கள்
வகை மொக்கையே தான்
டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)
"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன"
ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு. இன்னொரு பாட்டுக்கு ராஜீவ் வருவார். அந்த பாடல் நடுவில் வரும் வரிகள்
"இவ பொண்ணா பொறந்ததாலே
பல பொறுப்பு வந்தது மேலே"
ஆனா இந்த பாட்டோட ஆரம்பம், மெட்டு சுத்தமா மறந்துபோச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
இன்று பேச்சுவாக்கில் இந்த பாடல்கள் பற்றிய நினைவுகள் வந்ததும் தூர்தர்ஷன் பற்றி கொசுவத்தி சுத்தல் தான்... மக்கள்ஸ் யாராவது ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருப்பீங்க..இருந்தாலும் நானும் என் பங்குக்கு சுத்தறேன் :))
தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த, ஆண்டெனா குத்துமதிப்பாக ஏதோவொரு திசையில இருக்கும்போது "அப்படியே விடு. நல்லா தெரியுது"ன்னு உள்ளருந்து குரல் வர, "அட தெரியுதாம்ல"ன்னு அவசரமா ஓடும்போது ஆண்டெனாவை ஆட்டி விட்டு படம் மறுபடியும் தெரியாமப் போக, இப்ப மறுபடியும் ஆண்டெனாவை ஒரு சுத்து சுத்தி படம் குத்துமதிப்பா தெரியற மாதிரி வச்சிட்டு, கம்பியை இறுக்கி கட்டிட்டு ஓடிவந்து எந்த நிகழ்ச்சி போட்டாலும் 'பெப்பரப்பே'ன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்த காலம் கண் முன்னாடி ப்ளாஷ் அடிச்சுட்டு போகுது. சொல்லி வைத்தாற்போல் சுவாரசியமான நிகழ்ச்சி ஏதாவது ஒளிபரப்பாகும்போது காற்றில் ஆண்டெனா திரும்பியிருக்கும். ஆண்டெனா எந்த பக்கம் பார்க்குதோ அந்த பக்கம் தான் மெட்ராஸ் இருக்குன்னு ஒவ்வொரு தடவையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஞாயித்துக்கிழமை ஏழே காலுக்கு ரங்கோலில ஆரம்பிக்கும். பழைய, புதிய ஹிந்தி பாடல்கள். ராஜ் கபூர், கிஷோர் குமார்ன்னு பழசுல ஆரம்பிச்சு முடிக்கும்போது புது பாடல்கள் ஒளிபரப்புவாங்க. ஒன்பது மணிக்கு ராமாயணம், மகாபாரதம். நடுவில் ராமானந்த சாகர், காலச் சக்கரம் எல்லாம் பேசுவாங்க. சந்திரகாந்தா மறக்க முடியுமா? டைட்டில் பாட்டு சூப்பரா இருக்கும். அப்புறம் க்ரூர் சிங்..யக்கூஊஉ. :))
பத்து மணிக்கு மிலிந்த் சோமன் நடிச்ச ஒரு விஞ்ஞானத் தொடர் ஒளிபரப்பாகும். பெயர் மறந்துபோச்சு.அப்புறம் ஜங்கிள் புக். டைட்டில் பாட்டு அப்படியே ஞாபகம் இருக்கு.
ஒரு மணிக்கு காதுகேளாதோருக்கான செய்திகள். அதைக் கத்துக்கிற ஆர்வம் கொஞ்ச நாள் இருந்தது. இப்ப குவிஜு டைம். நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி காட்டினா அதுக்கு என்ன அர்த்தம்?
பிற்பகல் மாநில மொழி திரைப்படங்கள். ஆங்கில அகர வரிசையில். தமிழ் படம் எப்படா வரும்னு எல்லா மொழி படங்களையும் ஒன்னு விடாம சப்-டைட்டிலோடு சப்பு கொட்டிட்டு பார்த்திருப்போம். தமிழ் படம் ஒளிபரப்பற அன்னைக்கு தொடர்ச்சியா ரெண்டு படம். கொண்டாட்டம் தான். மாலை தமிழ் படம் எதுனா அரதப்பழசான படமாயிருக்கும். மணாளனே மங்கையின் பாக்கியத்தை பத்தாவது முறையா போட்டாலும் விடாமப் பார்ப்போம்ல :))
வாரநாட்களில் மாலையில் 5 மணிக்கு ஆரம்பித்து கார்ட்டூன் போடுவாங்க. அப்புறம் வரிசையா மனைமாட்சி, நல்வாழ்வு, பல்சுவை நிகழ்ச்சி, சிறுவர் பூங்கா, வயலும் வாழ்வும். 6.55க்கு முன்னோட்டம், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு. காவல் துறை கட்டுப்பாட்டு அறை, எழும்பூர், சென்னை-600008.
7 மணிக்கும் 8.30க்கும் செய்திகள். ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபாலன், நிரஞ்சன். கடைசியா கண்ணாத்தாள் ஞாபகம் இருக்கு.
7.05க்கு சில நாடகங்கள் ஞாபகம் இருக்கு. விழுதுகள், எஸ்.வி. சேகரோட வண்ணக் கோலங்கள், விவேக்கின் மேல் மாடி காலி, கே.பாலசந்தரோட நாடகம் ஏதோ. அப்புறம் படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல வருவாரே, ரவி ராகவேந்தரா, அவரோட நாடகம் ஒன்னு. வாத்தியார்-னு பட்டபெயரோட ஒரு நடிகர்-இயக்குனர் இருப்பாரே. அப்புறம் கிரேசி மோகன் ரெண்டு சீரியல் பண்ணினாருன்னு நினைக்கறேன்.
செவ்வாய்க்கிழமை 7.30க்கு டிடி செட்ல போட்ட நாடகம். அப்பவே செம மொக்கையா இருக்கும். அதுல வழுக்கைத் தலையோட ஒருத்தர் எல்லா வாரமும் வருவார். அவர் பேரும் மறந்துபோச்சு.
புதன்கிழமை சித்ரஹார். காம்பியரருக்காகவே பார்த்த நிகழ்ச்சி. இதுல முழுக்க புதுப்பாடலகள் தான். 'சாப்பிட வாங்க' நிகழ்ச்சியில வசந்த் அண்ட் கோ ஓனர் கோட்சூட்டோட வந்து சுடச்சுட ருசிச்சு சாப்பிடுவார். அப்புறம் ஒரு குக்கரோ மிக்ஸியோ பரிசு கொடுத்துட்டு போஸ் கொடுப்பார்.
வியாழக்கிழமை எதிரொலி போட்டு மொக்கை போடுவாங்க. நடராஜன், கண்ணன்னு நிலைய இயக்குனர்கள் வந்து ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் சொல்வாங்க. ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பப்படும் படமும் சொல்லிட்டு போவாங்க.
வெள்ளிக்கிழமை ஊரே எதிர்பார்க்கும் 'ஒலியும் ஒளியும்'. ஒரு வாரம்கூட பார்க்காம விட்டதுல்ல.
ஒன்பது மணிக்கு மேல டப்பிங் நாடகங்கள். சாந்தி, ஜுனூன், கானூன், சுவாபிமான், வக்த்ன்னு மெகா சீரியல்களின் தாத்தாக்கள். சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன்.
சனிக்கிழமை காலைல ஏதோ விஞ்ஞான நிகழ்ச்சியெல்லாம் போடுவாங்க. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.
இப்போது வரும் 'கனா காணும் காலங்கள்'க்கெல்லாம் சீனியர் 'ஸ்கூல் டேஸ்'. பள்ளி மாணவர்கள் வைத்து எடுக்கப்பட்ட சீரியல். செம ஜாலியா இருக்கும். மிகவும் விரும்பிப் பார்த்த தொடர்.
பண்டிகை நாட்கள்ல சிறப்பு நிகழ்ச்சிகள்னா அது தூர்தர்ஷன் தான். செவ்வாய்க்கிழமை நாடகத்துக்கு போட்ட செட்டையே இன்னும் கொஞ்சம் மாற்றி ரெடி பண்ணிடுவாங்க. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொலைபேசியில் அழைத்து பதில் சொல்லனும். வரிசையா ஒரு பத்து பேர் போனோடு உக்காந்திருப்பாங்க. அதுக்கப்புறம் குலுக்கல். அதுக்கப்புறம் வெற்றி பெற்றவர்கள் 'இயக்குனர், சென்னை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை' என்ற முகவரிக்கு ஒரு கடுதாசி போடனும். அதுக்கப்புறம் பரிசு அனுப்புவாங்க.
ஒரு வருடப்பிறப்பிற்கு சந்திரபோஸ் நடத்திய ஒரு மெல்லிசை நிகழ்ச்சி தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே மாதிரி நகைச்சுவை நாடகங்களும் அடிக்கடி மறுஒளிபரப்பு செய்யப்படும்.
ஒரு தீபாவளிக்கு சிம்ரன் பேட்டி பார்த்துட்டே கரப்பான்பூச்சி வரைஞ்சதை ஏற்கனவே சொல்லியிருக்கேன் :D
பட்டிமன்றங்களில் தமிழறிஞர்கள் அருமையா பேசுவாங்க. அவ்வை நடராசன், அறிவொளி, தா.கு. பாலசுப்ரமணியம் இப்படி பலபேர்.கம்பன் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், தமிழ் கவியரங்கங்கள் வாரவாரம் ஒளிபரப்பாகும்.
தலைவர் வர்ற போலியோ விளம்பரம் ஞாபகம் இருக்கா? எப்படா அதை ஒளிபரப்புவாங்கன்னு காத்துட்டிருந்தது ஞாபகமிருக்கும். இதுமாதிரி பாடல்கள் நிறைய ஒளிபரப்புவாங்க. 'மிலே சுர் மேரா துமாரா' யாருக்கும் மறந்திருக்காது.
(இந்த வீடியோவை பிடிச்சுட்டு யூடியூப்புக்குள்ள போனா ஒரு சுரங்கமே இருக்கு;))
தடங்கலுக்கு வருந்துகிறோம். டிடி-2க்கு மாத்தறதுக்காக இதோட நிறுத்திடறேன். பின்னூட்டத்துல விட்டதை தொடருவோம் :))
டிடி மெட்ரோ:
காஞ்சிபுரத்துல டிடி மெட்ரோ தெரியும். ஆனா தாத்தா ஊருல தெரியாது. விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது நண்பர்களை டிடி-2 தெரியாதான்னு கலாய்ச்சிருக்கேன். டிடி-2ல் பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான். அதுவும் எல்லாமே டப்பிங் தொடர்களாகத் தான் இருக்கும்.
மாலையில் டக் டேல்ஸ், ஹீ-மேன், சூப்பர் மேன், டிடி'ஸ் காமெடி ஷோ,டிஸ்னியின் மற்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வெகு சில சீரியல்கள் தான் ஞாபகம் இருக்கு. ஸ்ரீமான் - ஸ்ரீமதி விடாமல் பார்த்த நகைச்சுவைத் தொடர். செம ஜாலியா இருக்கும். அதே மாதிரி படோஸன் - அடுத்த வீட்டுப் பெண் சீரியல். கலக்கலா இருக்கும்.
சூப்பர் ஹிட் போட்டி - பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சி. கொஞ்சநாள் அழகான தொகுப்பாளினி வந்தாங்க. அப்புறம் காமெடி நாடகம் போட்டு இடையில் பாடல்கள் ஒளிபரப்பினார்கள்.
Fugitive - The Most Wantedன்னு ஒரு நிகழ்ச்சி. உண்மைச் சம்பவங்கள், குற்றங்களைப் பற்றிய துப்பறியும் தொடர். கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரே வரதட்சணை வழக்குல கைதான ஞாபகம்.
சீ ஹாக்ஸ்-னு கப்பல் படையை வச்சு ஒரு சீரியல் நல்லாயிருக்கும். மாதவன் நடிச்சது. மத்த சீரியல் பெயரெல்லாம் மறந்துபோச்சு.
எங்க வீட்டுல இருந்த ஈ.சி.(EC) டி.வி கிட்டத்தட்ட 12-13 வருஷத்துக்கு இருந்தது. கேபிள் இணைப்பு கொடுத்த பின்னும் பொதிகை நிகழ்ச்சிகள் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற தனியார் சேனல்கள் வந்த பின்னாலும் பொதிகை நிகழ்ச்சிகளின் தரம் எப்போதும் மேலே தான். BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் இப்போதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. நான் போன் போட்டு பங்கேற்றிருக்கும் ஒரே நிகழ்ச்சி அது. ஆனா தப்பா தான் பதில் சொன்னேன் :))
தூர்தர்ஷன் மூஜிக் 'டொண்ட டொண்ட டொண்டடொய்ங்ங்ங்'ன்னு பேக்ரவுண்ட்ல ஓட கொசுவத்தி சுத்தியாச்சு. நீங்களும் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பற்றி் சொல்லுங்களேன். :))
கப்பி | Kappi 44 பின்னூட்டங்கள்
வகை கொசுவத்தி, தூர்தர்ஷன்
ஒரு ரீமிக்ஸ் - ஒரு புகைப்படம்
புகைப்படம்
டிஸ்கி: பதிவர் வட்டம் லேபிள் சும்மா தமாசுக்கு..நுண்ணரசியல் லேது :))
**
ரீமிக்ஸ்
காட்சிகள் பாட்டோடு பக்காவா ஒத்துப்போக கலக்கலா பண்ணியிருக்காங்க..
கப்பி | Kappi 8 பின்னூட்டங்கள்
வகை டெக்கு, பதிவர் வட்டம்
பஞ்ச டயலாக்ஸு
அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?
நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பில்ல
இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்பிட்டிருக்காங்க
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு!!
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாராயணா
ஆத்தா நான் பாசாயிட்டேன்
சிரிங்கடா சிரிங்க..பூமாதேவி சிரிக்க போறா..எல்லாரும் உள்ள போப்போறோம்
சார்..கடை எப்ப சார் தொறப்பீங்க?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ்சாமி
பத்த வச்சுட்டீயே பரட்டை!!
மார்க் மை வோர்ட்ஸ்! ஹி வில் கோ ப்ளேசஸ்!!
மலை மேல பொட்டிக்கடை வச்சிருக்க அம்மா சொன்னாங்க
ஏன்னா நீ என் நண்பன்
இங்க பார்றா கிச்சா
கககபோ
கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு..பர்ர்ர்றந்து போச்சு
கொடுத்த காசுக்கு மேலயே கூவறானே
கலக்கிட்டடா காபி!
தெய்வமே..எங்கியோ போயிட்டீங்க!!
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமா இருக்கு
வீரம்னா என்ன தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கறது
ஏன்?
இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்
ஒங்க கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வெக்குதுடா!!
வொய் ப்ளட்? சேம் ப்ளட்!
அடிச்ச கைப்புள்ளைக்கே இப்படின்னா அடிவாங்கினவன் உயிரோட இருப்பான்ற?
ஏன் இந்த கொலவெறி??
என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
வெறும் பணம்
ஏன்னா நீ என் நண்பன்
யாருடா நீ?
வருவானாடா? அவன் வருவானாடா?
நான் தனி ஆள் இல்ல!
எஸ்கேஏஏஏப்ப்ப்ப்
என்ன கொடுமை சரவணன் இது
தவுசண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா
ஐயாம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்
ஆணியே புடுங்க வேணாம்
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?
நட்புன்னா என்ன தெரியுமா?
ஹூ இஸ் த டிஸ்டபன்ஸ்
என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா
கூடை வச்சிருக்கவங்களுக்கு விளக்கு கொடுக்கறதில்ல
யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தற??
நான் வேனும்னா படிச்சு டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிடவா?
தொப்பி..தொப்பி
நீங்க நல்லவரா கெட்டவரா?
யாரு சார் நீங்க?
இந்த கோட்டத்தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரப்படாது
மாப்பு..வச்சுட்டான்யா ஆப்பு
நாக்கு தெள்ளிதே
உக்காந்து யோசிப்பாய்ங்களோ
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீயே
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
செயினு..மோதரம்...
இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா
இப்பவே கண்ணக்கட்டுதே
எப்ப இருந்து சார் இந்த திமிரு? கொஞ்சம் படிச்சவுடனேயா? இல்ல வேலைல சேர்ந்ததுமா?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
இதெல்லாம் பெருமையா? கடமை!!
சூப்பர் சாப்பாடுடா..அக்குவாஃபீனா இருக்குதாடா
நல்லா வருவீங்க தம்பி! நல்லா வருவீங்க!!
ச்சும்மா..ச்சும்மா
ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஃபினிஷிங் சரியில்லயே!
ம்ம்ம்முடியல!!!
மொ.கு 1 : பொது வாழ்க்கையில அடிக்கடி உபயோகிக்கற டயலாக்ஸு தான்..வேறொன்னுமில்ல .. இப்போதைக்கு இவ்ளோ தான்..பொறவு பார்ட் 2 போட்ருவோம்
மொ.கு 2 : தலைவர் டயலாக்ஸ் சிலதைத் தவிர மத்ததெல்லாம் வேணும்னே வேணாம்னு விட்டாச்சு. அவரை மாதிரி NTPK கேசுங்க டயலாக்கெல்லாம் வேணாம்னே விட்டாச்சு
மொ.கு 3 : ம்ம்ம்ம்முடியல :))
கப்பி | Kappi 21 பின்னூட்டங்கள்
?! - டிசம்பர் (?!)
ஒருமாதமாக இருந்த கைகால் நடுக்கம் சென்ற சனிக்கிழமை சரியானது. நடுக்கத்திற்கான காரணம் தியேட்டர் பக்கம் போகாமலிருந்தது. 'பில்லா' பார்க்கச் சென்றிருந்தோம். பின் வரிசையில் இருந்த குழந்தை நமீதா திரையில் தோன்றிய காட்சியில் "இது யாருப்பா? அவனுக்கு அக்காவா? அண்ணியா? சித்தியா? தங்கச்சியா?" என ஆரம்பித்து படம் முழுக்க கேள்விகள் தான். செம ஜாலி.
குழந்தையில் பாட்டியும் இன்னொருவரும் "இந்தி டான்ல இப்படி இருக்கும். பழைய டான்ல தேங்காய் சீனிவாசன் வருவான்ல. படம் வேகமாவே போலியே" என லைவ் விமர்சனம் செய்துகொண்டிருந்தனர்.
இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் யாராவது ஸ்லோமோஷனில் நடந்துகொண்டேயிருக்கிறார்கள். ரிச்சாக எடுக்கிறோமென்று எல்லாருமே மாடலிங் செய்துகொண்டிருந்தது போல் தோன்றியது. அஜீத் 'வெத்தலைய போட்டேண்டி' பாடலுக்கு ஆடிய நடனம் 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை நினைவுபடுத்தியது. அதே ஸ்டெப்ஸ்தான். 'மை நேம் இஸ் பில்லா'.....வேணாம் அழுதுடுவேன். விஷ்னுவர்தன் எப்போதுமே இடைவேளைக்குப் பிறகு ரொம்ப இழுக்காமல் படத்தை முடித்துவிடுவார். இந்த படத்திலும் அதே. முதல் பாதி தான் கொஞ்சம் இழுவை. ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம் - தலக்காகவும், படமாக்கப்பட்ட விதத்துக்காகவும்(நயனுக்காகவும்னு சேர்க்கலாம்..ஆனா அம்மணி ஏமாத்திப்புட்டாங்க..படம் ஃபுல்லா அவங்க காஸ்ட்யூம் மாதிரியே அவங்க ரியாக்ஷனும் ஒரேஏஏஏ மாதிரி தான் இருந்துச்சு). படம் எப்படியும் ஓடிடும்.
கல்லூரி - மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பாய் இருந்தால் மட்டும் போதுமா என்ன? படம் ரொம்ப போரடிக்கலை. ஓவர் செண்டியும் இல்லை. ஆனா பாலாஜி சக்திவேல் ஏமாத்திட்டார். அட்லீஸ்ட் என்னை. என் நண்பனுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது.
எவனோ ஒருவன் - ப்ரிண்ட் சரியில்ல. இன்னும் பார்க்கல.
******************************
சென்ற வாரம் இங்கு ஒரு அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. டாக்ஸியில் அமர்ந்ததும் வயதான டிரைவர் "இந்தியாவா" எனக் கேட்டுவிட்டு தான் ஈரான் என்றும் தன் பெயரையும் சொன்னார். உடனே எனக்கு தம்பியண்ணனின் ஞாபகம் வந்தது ஏன் எனத் தெரியவில்லை ;).
பழைய இந்தி திரைப்படங்கள் பார்த்திருப்பதாயும் ராஜ்குமாரைப் பிடிக்குமென்றும் சொன்னார். இந்தியாவைப் பற்றியும் ஈரானைப் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொண்டு வந்த போது அலுவலகம் வந்துவிட்டிருந்தது. எனக்காக காத்திருப்பதாகச் சொன்னார். உள்ளே எவ்வளவு நேரமாகும் என்றும் தெரியாது. வெயிட்டிங் என்று இவர் எவ்வளவு வாங்குவார் என்றும் தெரியாது. எனவே வேண்டாமெனக் கூறி வந்ததற்கான பணத்தைக் கொடுத்தேன். "நான் உனக்காக செய்யவில்லை. இந்தியாவிற்காகத் தான் காத்திருப்பதாகச் சொன்னேன்" என டயலாக் விட்டு என்னுடனே உள்ளே வந்து வரவேற்பரையில் அமர்ந்துகொண்டார். அவர் சீரியசாக சொன்னாரோ என்னமோ ஆனால் "அரைமணி நேரம் காத்திருந்து முப்பது டாலர் சம்பாதிக்க தாத்தா என்னமா டயலாக் விடுறாரு" என்று எனக்குத் தோன்றியதற்கு நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை என்னை ஏமாத்தியிருந்த ஆட்டோக்காரர்களும் கடைகாரர்களும் காரணமாக இருக்கலாம்.
***************************************
நேற்று திடீரென இந்த பாட்டு ஞாபகம் வந்தது. கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு யூடியூப்ல தேடிப் பிடிச்சேன். சூப்பர் பாட்டு. பெண் குரல் செமையா இருக்கும். ஆனா அவங்க பேரு தெரியாது.
***************************************
இந்த ஊர் தண்ணி ரொம்பவே மோசமாயிருக்கு. தலைல கை வச்சா பத்துவிரலுக்கு இருபது முடி கையோட வருது. நெத்தி பெருசாயிட்டே இருக்கு. ஊருக்குப் போகும்போது எங்கப்பாரு அளவுக்கு முடியிருந்தாலே சந்தோசப்படுவேன்.
***************************************
நேற்று நெட்டில் படம் பாரத்துக் கொண்டிருக்கும்போது அறை நண்பர் "என்னடா கப்பி படமா? பாதி படம் பார்த்துட்டிருக்கும்போதே அப்படியே தூங்கிடுவ. மீதி படத்தை கனவுலதான் பார்ப்ப.தூங்கி எழுந்ததும் லேப்டாப்பை தொறந்து விமர்சனம்னு எழுதுவ"ன்னு கலாயச்சிட்டு இருந்தார். "இல்ல தல..நான் எழுதறதெல்லாம் ரொம்ப நாள் முன்ன பாத்த படங்கதான்..இப்ப பாக்கறது எதுக்குமே எழுதலை"ன்னு சொன்னேன். "அடப்பாவி அப்போ இத்தினி மாசம் கழிச்சு அந்த படத்துக்கெல்லாமே இப்பத்தான் கனவுல கதை டெவலப் பண்றயா"ன்னு சதாய்ச்சுட்டாரு.
****************************************
இந்த வெத்து ஏரியால எழுத நெறய விஷயம் தோன்றினாலும் எதுவுமே வேணாம்னு விட்டாச்சு. காரணம் கீழ இருக்க தத்துவம்.
***************************************
இந்த மாத ?! தத்துவம்
"சும்மா இருப்பதே சுகம்"
***************************************
கப்பி | Kappi 20 பின்னூட்டங்கள்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 7
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 1 - சிறில் அலெக்ஸ்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 2 - லக்கிலுக்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 3 - வினையூக்கி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 4 - ஜி.ராகவன்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 5 - ஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 6 - தம்பி
"This is the final boarding call for all passengers traveling to Chennai by flight Air India flight 403. Passengers are requested to board the flight immediately. We wish you a pleasant journey. Thank you"
அறிவிப்பைக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்த சுரேஷ் செல்போனில் தன் மனைவி சந்தியாவிற்கு அஞ்சலியிடம் தான் கிளம்பிவிட்டதாகத் தகவல் சொல்லிவிட்டு வரிசையில சென்றான். சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணுக்கு புன்னகையை பதிலாக்கிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். அவன் நினைவுகள் ஆம்பலைச் சுற்றியே இருந்தன. ஆம்பலைப் பற்றிய குழப்பத்தை விடவும் அவள் ப்ரொஃபைலில் சந்தியா தோழியாக இருந்ததை நினைக்கையில் அவனுக்கு தலை கிறுகிறுத்தது.
ஆம்பலுடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து அவளுடன் நடந்த உரையாடல்களை அசைபோட்டான். ஆம்பலின் தொலைபேசி எண்ணை வைத்து அவளது முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளுடன் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அண்ணன் என்று அவள் சொன்னதிலிருந்து மெயிலில் மட்டுமே தொடர்பு வைத்திருக்கிறான். தொலைபேசி எண்ணை மாற்றியிருப்பாளா? அவள் சொன்ன கதைகளில் எது உண்மை? சுரேஷ்களை மட்டும் ஏன் தேடித்தேடி வலை விரிக்கிறாள்? ஆர்குட்டில் தன் போட்டோவைப் போட்டதற்கு முதன்முறையாக வருத்தப்பட்டான். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிலிருந்து திரும்புவதற்குள் ஆம்பல் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
சுரேஷ் தன் பெட்டிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்தான். தொலைவிலிருந்து சந்தியா அஞ்சலி கையசைத்தாள். அவளருகில் நின்றிருந்த ஆம்பலைக் கண்டதும் அவன் கண்கள் இருண்டன.
****************************************************************
இரவு மணி ஒன்று. "Criminal Behavior: A Psychological Approach" என்ற புத்தகம் கையிலிருக்க பிரபுவின் நினைவெல்லாம் அந்த கொலை வழக்கைச் சுற்றியே இருந்தது. பிணத்தின் கையில் அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ஆறாவது விரல் அவரை அலைகழித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இது பணத்திற்காகவோ அல்லது அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றோ நடந்த கொலை தான் என்று நினைத்தார். ஆனால் பிணத்தைப் பார்த்த பிறகு அவருக்கு இது சாதாரண கொலையாகப் படவில்லை. அதற்கேற்றாற் போல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். காரணமும் துப்பும் எதுவும் தோன்றாமல் சலிப்படைந்தவராய் 'நம்ம வேலையைப் பார்ப்போம். போலீஸ் பார்த்துக்கிடட்டும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். சட்டென ராகவனின் நினைவு வந்தது.
முதன்முதலாக சந்தித்தபோதும் இன்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் குறித்து பேசிக்கொண்டிருந்த போதும் ராகவனிடம் ஒரு தவிப்பு தெரிந்ததை உணர்ந்திருந்தார். கொலை விசாரணையில் இன்ஸ்பெக்டருக்கு இயல்பாக இருக்கும் தவிப்பு என்றே நினைத்திருந்தார். ஆனால் இப்போது யோசிக்கையில் அவருக்கு ராகவன் தன்னிடம் எதையோ மறைப்பதாகத் தோன்றியது. வாரத்திற்கு இரண்டு மூன்று கொலைகள் நடக்கும் இந்த ஏரியாவில் இந்த வழக்கில் மட்டும் ராகவன் அதிகம் கவனம் செலுத்துவதும், ஆறாம் விரல் பற்றி அவர் குறிப்பிட்ட போது அவன் அதிர்ச்சியடைந்ததும் பிரபுவிற்கு புதிராகவே இருந்தது. ஆர்க்குட்டில் நட்பாகியதாக ஏதோ பெயர் சொன்னாரே? ஆம்பல். அதற்கும் இந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
படுத்தவாறே தலையணை அடியில் வைத்திருந்த தன் செல்போனை துழாவி எடுத்தார் பிரபு.
*******************************************************
ஆம்பல். ஆம்பல். ஆம்பல்.
நான்காவது ரவுண்ட் விஸ்கி ராவாக உள்ளே சென்றது. நிமிடத்திற்கு ஒரு முறை அருகிலிருந்த லேப்டாப்பில் ஆர்க்குட் பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்துகொண்டிருந்தான். கொலை நடந்த தினத்திலிருந்து ஆம்பல் ஆர்க்குட் பக்கமே வரவில்லை. தொடர்ந்து அனுப்பிய மெயில்களுக்கும் பதிலில்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான்.
ஆம்பலினால் வேலையிலும் ஒருமனதாக ஈடுபட முடியாமல் போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. விஸ்கி பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் குடித்துவிட்டு சோபாவில் சாய்ந்தான். ஆம்பலை மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த ஃபைலைத் திறந்தான்.
கொலையான பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கிறாள். ஒரே குண்டு. அருகாமையில் இருந்து சுட்டிருக்க வேண்டும். அல்லது துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். ஆறாவது விரல் பற்றி படித்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதே நேரம் அது மூடநம்பிக்கைக்காக வைத்துக்கொண்ட விரலா அல்லது இந்த கொலைக்கான காரணத்துடன் சம்பந்தப்பட்டதா எனக் குழம்பினான்.
அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கொலையைக் குறித்து ஒவ்வொரு விஷயமாக அசைபோட்டான். ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை. கொலை செய்தவனும் அந்த பெண்ணும் ஒன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி காட்டி மிரட்டி திருடும் ரவுடிகள் ஏரியாவில் யாருமில்லை. அருகில் காரோ பைக்கோ சென்ற வண்டித்தடம் எதுவுமில்லை. மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்கலாம். ஏற்கனவே விசாரித்ததில் அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வண்டி நின்றிருந்ததாக யாரும் சொல்லவில்லை. கொலையாளி வந்த காரியத்தை வேகமாக முடித்துவிட்டு தப்பியிருக்கிறான். முகம் அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்தபின் முகத்தைத் தாக்கியிருக்கிறான்.
இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து ஆர்க்குட்டைத் திறந்தான். ஆர்க்குட் தேடுகட்டத்தில் ஆம்பல் பெயரையிட்டு தேடினான்.
பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து அவன் மனைவி கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
************************************
சிறுகதை சித்தர், போர்வாள் தேவ் அவர்கள் தொடர்வார்.
சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி என ஜி.ரா தெளிவாக சொல்லியும் நான் குழப்(ம்)பிட்டேன். மாப்பு கேட்டுக்கறேன். :( .
கப்பி | Kappi 14 பின்னூட்டங்கள்
வகை தொடர்கதை, பதிவர் வட்டம்
?!
சில வருடங்களுக்கு முன் பெண்களுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று சொல்லி எல்லோர் வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுக்க பச்சை புடவை ஸ்டாக் ஏராளமாக நின்றது காரணமா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை. இந்த முறை சித்தி விட்டிற்குச் சென்றபோது அம்மாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு இந்த வருடம் பெண்கள் தத்தம் அக்காவிற்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். அப்போது தான் குடும்பத்திற்கு நல்லது நடக்குமாம். என் அம்மாவிடம் பெரியம்மாவிற்கு மறக்காமல் புடவை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.
"இவங்கள தவுஸண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா"ன்னு விவேக் டயலாக் தான் ஞாபகம் வந்தது.
****************
தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் எதையுமே பார்க்கவில்லை. எல்லா நடிகநடிகைகளும் எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள் போல. விளம்பரங்களைப் பார்க்கும்போதே கடியாக இருந்தது. பள்ளிக்காலத்தில் தூர்தர்ஷனில் வந்த சிறப்பு நிகழ்ச்சிகளை அசைபோட்டுக் கொண்டே கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஒரு தீபாவளிக்கு டிடியில் சிம்ரன் பேட்டி போட்டிருந்தார்கள். 'நேருக்கு நேர்' ரிலீஸான சமயம் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் பயாலஜி ரெகார்ட் நோட் சப்மிட் செய்ய வேண்டியிருந்தது. அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது.
*****************
வோல்வோ பேருந்து விட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அதில் பயணம் செய்யவில்லையே என்ற கவலை இரண்டு வாரங்கள் முன்புதான் தீர்ந்தது. அதற்கு முன் சிலமுறை நொடிப்பொழுதுகளில் பேருந்தை தவறவிட்டிருக்கிறேன். அன்றும் ஓடிப்போய் தான் ஏறினேன்.
தொப்பி போட்ட டிரைவர் கண்டக்டரை ஏற்கனவே வெளியில் இருந்து பார்த்திருந்தாலும் அப்போது பார்க்கையில் சிரிப்பு வரத்தான் செயதது. டிவிடி ப்ளேயரில் பாட்டு போடுகிறார்கள். பயணம் செய்பவர்கள் வோல்வோ பற்றியும் புது டீலக்ஸ் பேருந்துகளைப் பற்றியும் கருத்து சொல்லியபடியே பயணிக்கிறார்கள். சாலையில் இருவரில் ஒருவராவது பேருந்தை திரும்பிப் பார்க்கிறார்கள்.
டிரைவர் அருகில் ரியர் வ்யூ LCD எப்படியிருக்கிறதென பார்க்க கிட்டவில்லை. கிண்டி-வேளச்சேரிக்கு 18 ரூபாய் கொஞ்சமில்ல ரொம்பவே அதிகம்தான். தூரமான இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் வசதியாக இருக்கும்.
*****************
அலுவலகத்தில் டீ குடிக்கப் பட்டாளமாகச் செல்லும்போது நண்பன் புதிதாக சேர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து கண்டதும் காதலாகிவிட்டான். அவளிடம் காதலைச் சொல்ல அவனுக்கு நான் சொல்லிக் கொடுத்த டயலாக்
"நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"
பசங்க அடிக்க வந்துட்டாங்க.
****************
அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
- நல்லசிவம் (அன்பே சிவம் - கமல்ஹாசன்)
அதே நம்பிக்கையில் (இந்த டயலாக்லாம் எனக்கே ரொம்ப ஓவராத்தான் இருக்கு :D) இப்போது அமெரிக்க வாசம். சிலப்பல தீர்மானங்களோட இருக்கேன். அதில் முக்கியமானது கீத்துக்கொட்டாய், சங்கம், தேன் கிண்ணம், கப்பி நான்கிலும் வாரத்திற்கு ஒவ்வொரு பதிவாவது இடுவது. எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை ஃபீலிங்ஸு, சொந்தக் கதை
அருவிஸ் ஆஃப் நெல்லை
பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"
சென்ற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதியைக் கழிக்க எந்தெந்த படங்களைப் பார்க்கலாமென விவாதித்துக் கொண்டிருந்தபோது தென்காசிக்கார நண்பன் மட்டும் ஊருக்குச் செல்வதாகச் சொன்னான். "எங்களோட அப்ப இந்த வாரம் படம் பார்க்க வர மாட்டியா? அப்ப நாங்க உன்னோட ஊருக்கு வர்றோம். இங்கயிருந்து நேரா திருநெல்வேலி போய் அங்கயிருந்து பாபநாசம் போறோம்..பாணதீர்த்தம் ஃபால்ஸ் போயிட்டு அன்னைக்கு சாயங்காலம் தென்காசி வந்துடலாம். உங்க வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் குத்தாலம்லா பாத்துட்டு நைட் கிளம்பி வந்துடலாம். நாங்களும் வரோம்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு" என்று திடீர் திட்டம் ஒன்றைப் போட்டு அவனுடன் கிளம்பிவிட்டோம்.
கோயம்பேடு சென்றால் தென்காசி, திருநெல்வேலி இரண்டுக்குமே அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து காலியாக இருந்தது. முதலில் தென்காசி-குத்தாலம்..அடுத்த நாள் பாபநாசம் என திட்டத்தை மாற்றி தென்காசி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து எடுக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றும் திருநெல்வேலி பேருந்து 10 நிமிடத்தில் எடுக்கப்போவதாக சொன்னதும் மீண்டும் திட்டத்தை மாற்றி திருநெல்வேலிக்கே செல்ல பேருந்து மாறி ஏறினோம்.
திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு தென்காசி பேருந்தில் ஏறிவிட்டோம். நண்பனின் வீட்டிற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவன் அப்பா ஏற்பாடு செய்த காரிலேயே பழைய குற்றாலம் அருவிக்குச் சென்றோம். கூட்டம் நிறைய இல்லை. முதல் ரவுண்ட் குளியலைப் போட்டோம். குளிரில் கைகள் விறைத்துக் கொண்டாலும் அரை மணி நேரத்திற்காவது வெளியே வருவதில்லை என்ற முடிவோடு குளித்தோம். தண்ணீர் அவ்வளவு வேகமாக விழவில்லை. அளவு குறைவு தான்.
அருவியிலும் ம்பு போட்டும் சோப்பு போட்டும் குளிக்கும் நபர்களைக் கண்டால் அப்படியே அடிக்கலாம் போலிருக்கும். வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான். அவர்களிடமிருந்து தப்பி ஓரமாக தண்ணீர் வேகமாக விழும் இடமாக ஒதுங்கி நின்று திருப்தியாக குளித்தோம்.
சூடாக பஜ்ஜி, டீ அடித்துவிட்டு அங்கிருந்து ஐந்தருவிக்கு கிளம்பினோம். ஐந்தருவியில் இரண்டு பெண்களுக்கு. மூன்று ஆண்களுக்கு. இரண்டாவதாக உள்ள அருவியில் தண்ணீர் பெரிய பாறையில் பக்கவாட்டில் விழுகிறது. அந்த பாறையில் படுத்தவாறே அருமையாகக் குளிக்கலாம். இங்கும் பாறை சந்தில் உள்ளே சென்று எவனையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் குளித்தோம்.
சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?
அங்கிருந்து குற்றாலம் மெயின் அருவிக்கு வந்தோம். தண்ணீரும் குறைச்சல். கூட்டமும் அதிகம். அதனால் அங்கு குளிக்கவில்லை. பொங்குமாக்கடலில் விழுந்து இறந்து போன கல்லூரி ஜூனியர் நினைவுக்கு வந்து சிறிது நேரம் கல்லூரி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம்.
நான் அதுவரை பாபநாசம் சென்றதில்லை. பாணதீர்த்தம் ரோஜா படத்தில் மதுபாலா ஆடிய அருவி என்பது மட்டும் தான் தெரியும். அடுத்த நாள் காலை தென்காசியிலிருந்து பாபநாசம் கிளம்பினோம். அங்கிருந்து காரையார் அணை சுமார் இருபது கிலோமீட்டர். ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து படகில் பாணதீர்த்தம் செல்லவேண்டும். அங்கு கடைகள் எதுவும் இருக்காது என்று டிரைவர் கூறியதால் பாபநாசத்திலேயே வயிறு முட்ட சாப்பிட்டு காரையாருக்குச் சென்றோம். காரையார் அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அணை மிகவும் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றபோது மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
படகில் கதை பேசியபடி சென்றுகொண்டிருந்த போது நண்பன் என்னை திரும்பிப் பார்க்கச் சொன்னான். திரும்பினால் அந்த பக்கம் பாணதீர்த்தம் அருவி. பார்த்ததுமே வாயடைத்துப் போனது. அருவி அந்தளவு கம்பீரமாக பிரம்மாண்டமாக இருந்தது. படகிலிருந்து ஒத்தையடி பாதை வழியாக அருவிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் சென்றபோது தான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று கிளம்பியது. அருவியில் மொத்தமே ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள்.
அருவியின் ஒரு பக்கம் மட்டும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியாது. தண்ணீர் அந்தளவு வேகமாக விழுகிறது. முன்னால் விழுந்து நிற்கும் தண்ணீரில் விழுந்தால் கூட பிழைப்பது அரிது. ஐந்தருவி, பழைய குற்றாலத்தை விடவும் தண்ணீர் வேகமாக விழுந்தது. அந்த வேகத்தில் தோள்பட்டையிலும் கழுத்திலும் லேசாக வலியெடுக்கவே ஆரம்பித்தது. ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம். தண்ணீர் மிகவும் இனிப்பாக இருந்தது. அந்த தண்ணீரில் குளித்து அதை குடித்து வாழ்ந்தால் ஒரு நோயும் வராது போல. அந்தளவு சுத்தம். சுவை.
குளித்துக்கொண்டிருக்கும் போது கிழே காலடியில் வானவில். பாறையில் எங்களுக்காகவே தோன்றிய வானவில். அப்போது கவிதை தான் எதுவும் தோன்றவில்லை. நல்ல வேளை. அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் எவனாவது அருவியிலேயே குதித்திருப்பான்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்தோம். கிளம்ப மனமே இல்லை. இதற்கு முன் பல அருவிகளில் குளித்திருந்தாலும் பாணதீர்த்தத்தின் பிரம்மாண்டம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் கிளம்பும்போது இரண்டு படகுகளில் கூட்டம் வந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் திருப்தியாக குளித்திருக்க முடியாது. இங்கும் கூட்டத்தில் இடிபட்டு ஷஅம்பு சோப்பினால் பாணதீர்த்தமே பிடிக்காமல் கூட போயிருக்கும்.
அங்கிருந்து பாபநாசம் வரும் வழியில் சேர்வலார் அணைக்கு செல்லும் பாதை பிரிந்தது. அதையும் சென்று பார்த்துவிடுவோம் என்று சென்றோம். அங்கிருந்த காவலாளி "யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க" என்று கேட்டார். "கேட்கறதுக்கு யாருமே இல்ல..அப்படியே உள்ள வந்துட்டோம்" என்றதும் "சரி பார்த்துட்டு போங்க..போட்டோ எடுக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சேர்வலார் அணை மழைத் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும் அணையாம். மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கால் மணி நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.
இனிப்பு கடை வைத்தால் "சாந்தி ஸ்வீட்ஸ்" என்று வைத்தால்தான் வியாபாரம் நடக்கும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல. திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது "சாந்தி ஸ்வீட்ஸ்" கடைகள். அதிலும் 'அக்மார்க்', 'ஒரிஜினல்', 'அசல்' என பட்டங்களுடன். ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது. அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்.
வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல எளிதாக இடம் கிடைத்ததால் ரிடர்னுக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எங்கள் லாஜிக் பொய்த்துப் போனது. பேருந்து நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். அரசுப் பேருந்தில் ஏறுவதற்கே வாய்ப்பில்லை என முடிவு செய்து மீண்டும் ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து தனியார் பேருந்துகளில் டிக்கெட் வாங்க முயற்சித்தோம். அதுவும் கிடைக்காததால் மீண்டும் புது பேருந்து நிலையம் வந்து அடித்து பிடித்து திருவனந்தபுரதிலிருந்து வந்த பழைய அரசுப் பேருந்தில் ஏறி, மதுரை வரை டிரைவர் கேபினில் அமர்ந்துவந்து, மதுரையிலிருந்து கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஓட்டை சீட்டைப் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை ஓட்டுநர் வண்டி ஓட்டியதைப் பின்னால் உட்கார்ந்து பார்த்ததில் அவரின் ரசிகனாகிவிட்டேன். அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.
சென்று வந்து ஒரு மாதத்திற்கு் ஆகிவிட்டது. இன்று ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதும் பாணதீர்த்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் அதன் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலவில்லை. அதில் குளித்த சுகமும் மறக்கவில்லை. அருவியில் சீசன் வரும்போதெல்லாம் சென்றுவர வேண்டும். அதுவும் பக்கத்திலேயே நண்பன் வீடு இருக்கும்போது சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் கூட பிரச்சனை இல்லை.
கப்பி | Kappi 29 பின்னூட்டங்கள்
வகை பயணம்
?!
ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா, முன்னால் குழந்தை பின்னால் மனைவியுடன் பைக் ஓட்டும் 35 வயது குடும்பஸ்தர், மாநகர பேருந்து - சென்னை சாலைகளில் வண்டி ஓட்டும்போது இந்த மூன்றில் எதற்கு அதிகம் பயப்படுவீர்கள்?
பழைய மகாபலிபுரம் சாலையில் (இப்போது இராஜீவ் காந்தி சாலை) அலுவலகத்துக்கு பைக்கில் செல்லும் வேளைகளில் ஒவ்வொரு பேருந்தையும் ஓவர்-டேக் செய்யும்போதும் "அப்பாடா உயிரோட ஓவர்டேக் பண்ணிட்டோம்டா" என்று தோன்றுகிறது. உயிர் பயம் அதிகமாகிவிட்டது.
அலுவலகத்தில் தொலைந்து போன பொருட்களின் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அடையாள அட்டை, ஹெட்ல்போன், கைப்பை, கிரெடிட் கார்ட், பஸ் பாஸ்களுக்கிடையில் சட்டென கண்ணில் பட்டது ' Money purse without money". என்னமா பீல் பண்ணியிருக்காங்க
சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும்பொது அதிசயமாக உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இருந்து சுண்டல் விற்றுக்கொண்டே ஒருவர் வந்தார். நான்கைந்து பேர் வாங்கினார்கள். கடைசி இருக்கைகளில் யாரும் வாங்கவில்லை. அவர் இறங்கிக்கொண்டே சொன்ன டயலாக் "No peace of mind"
பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் காஞ்சிபுரம் தாண்டியதும் பேச ஆரம்பித்தார். அவர் கோவிலுக்கு வந்த கதையில் ஆரம்பித்து, அவரது டாக்டர் மகன், மகன் திருமணத்திற்கு வரதட்சனை வாங்காதது, வடிவேலு காமெடி, திருவண்ணாமலை கோயில், ரஜினி, சரத்குமார், காமராஜர், கக்கன், தன் சொந்த கடை, மென்பொருள் துறையில் சம்பளம், அவரது தம்பி மகன், அவருக்கு பார்த்த பெண் ஜாதகம் பொருந்தியும் கலர் கம்மியாக இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் விட்டது, 1970-ல் நடந்த கொலை கேஸ் என கிண்டி வரும் வரையில் பேசிக்கொண்டே வந்தார். 'உம்' கொட்ட ஆளிருந்தால் வயதானவர்களுக்கு கொண்டாட்டம் தான். வீட்டுக்கு வந்ததும் இதை நண்பனிடம் சொன்னதும் 'நாயகன்' டெல்லி கணேஷ் ஸ்டையில் 'ப்ளாக்கரே' என்று அழைத்து "பிள்ளாக்கு எழுத மேட்டர் கிடைச்சுடுச்சா" என்றான். நான் இளித்தேன்.
Johnny Ghaddar படம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். நான் பார்த்த அடுத்த நாளே தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டார்கள். மெலோடியில் மாலை காட்சிக்கே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். படம் அட்டகாசமாக இருந்தது. நம்மூரில் மொக்கை இந்தி படமெல்லாம் ஓடும். இது போன்ற வெகு சில நல்ல படங்கள் ஊத்திக் கொள்கின்றன. நடிப்பு, திரைக்கதை, காட்சிகள் படமாக்கிய விதம், பின்னணி இசை(ஷங்கர்-எஹ்சன்-லாய்) என அத்தனையும் சிறப்பு. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
வோடபோன் புது விளம்பரம் பார்த்தீங்களா? கலக்கலா இருக்கு.
தமிழ் செய்தித்தாள் தலைப்புச் செய்தி போல் ஆச்சரியக்குறியும் கேள்விக்குறியும் சேர்ந்து இருக்கிறதா? இதில் "வாழ்க்கைங்கறது.." என விக்ரமன் பட ஸ்டைலில் ஆரம்பித்து பெரிய தத்துவமே (மொக்கை தத்துவம் தான்) அடங்கியிருக்கிறது. தத்துவம் புரிந்தவர்கள் "எழரைஏழரைஏழரை" என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். இல்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தத்துவத்தை சரியாக சொல்பவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் எமோஷனல் பேட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படும். பிடிக்காத தத்துவங்களுக்கு அழுவாச்சி பதிலாக அளிக்கப்படும். ஜிடாக்கில் ஏற்கனவே இந்த தத்துவத்தை அறியப் பெற்றவர்கள் பெட்டி கொடுத்துவிட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம். வைல்ட் கார்ட் ரவுண்டும் உண்டு.
சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் யார்?
A. ரஜினி. B. கஜினி.
இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))
கப்பி | Kappi 27 பின்னூட்டங்கள்
A Note in the Margin - Che Guevera
ஜூன் 14,1928 - அக்டோபர் 9,1967
The stars drew light across the night sky in that little mountain village, and the silence and the cold made the darkness vanish away. It was - I don't know how to explain it - as if everything solid melted away into the ether, eliminating all individuality and absorbing us, rigid, into the immense darkness. Not a single cloud to lend perspective to the space blocked any portion of the starry sky. Less than a few meters away the dim light of a lamp lost its power to fade the darkness.
The man's face was indistinct in the shadows; I could only see what seemed like the spark of his eyes and the gleam of his front teeth.
I still can't say whether it was the atmosphere or the personality of that individual that prepared me for the revelation, but I know that many times and from many different people I had heard those same arguments and that they had never made an impression on me. Our interlocutor was, in fact, a very interesting character. From a country in Europe, he escaped the knife of dogmatism as a young man, he knew the taste of fear ( one of the few experiences making you value life), and afterwards he had wandered from country to country, gathering thousands of adventures, until he and his bones finally ended up in this isolated region, patiently waiting for the moment of great reckoning to arrive.
After exchanging a few meaningless words and platitudes, each of us marking territory, the discussion began to falter and we were about to go our separate ways, when he let out his idiosyncratic, childlike laugh, highlighting the asymmetry of four front incisors:"The future belongs to the people, and gradually, or in one strike, they will take power. here and in every country".

"The terrible thing is, the people need to be educated, and this they cannot do before taking power, only after. They can only learn at the cost of their own mistakes, which will be very serious and will cost many innocent lives. Or perhaps not, maybe those lives will not have been innocent because they will have committed the huge sin against nature;meaning, a lack of ability to adapt. All of them, those unable to adapt - you and I, for example - will die cursing the power they helped, through great sacrifice, to create. Revolution is impersonal; it will take their lives, even utilizing their memory as an example or as an instrument for domesticating the youth who follow them. My sin is greater because I, more astute and with greater experience, call it what you like, will die knowing that my sacrifice stems only from an inflexibility symbolizing our rotten civilization, which is crumbling. I also know - and this won't alter the course of history or your personal view of me - that you will die with a clenched fist and a tense jaw, the epitome of hatred and struggle, because you are not a symbol (some inanimate example) but a genuine member of the society to be destroyed; the spirit of the beehive speaks through your mouth and motivates your actions. You are as useful as I am, but you are not aware of how useful your contribution is to the society that sacrifices you."

I saw his teeth and the cheeky grin with which he foretold history, I felt his handshake and, like a distant murmur, his formal goodbye. The night, folding in at contact with his words, overtook me again, enveloping me within it. But despite his words, I now knew...I knew that when the great guiding spirit cleaves humanity into two antagonistic halves, I would be with the people. I know this, I see it printed in the night sky that I, eclectic dissembler of doctrine and psychoanalyst of dogma, howling like one possessed, will assault the barricades or the trenches, will take my bloodstained weapon and, consumed with fury, slaughter any enemy who falls into my hands. And I see, as if a great exhaustion smothers this fresh exaltation, I see myself, immolated in the genuine revolution, the great equalizer of individual will, proclaiming the ultimate mea culpa. I feel my nostrils dilate, savoring the acrid smell of gunpowder and blood, of the enemy's death; I steel my body, ready to do battle, and prepare myself to be a sacred space within which the bestial howl of the triumphant proletariat can resound with new energy and new hope.
- சே குவேராவின் The Motorcycle Diaries-ல் இருந்து.
கப்பி | Kappi 8 பின்னூட்டங்கள்
வகை Che Guevera, புத்தகம்
பழவேற்காடு aka Pulicat
"மாப்பிள்ள வாள மீனு பழவேற்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு வெளாங்கு மீனு மீஞ்சூரு தானுங்கோ"
பல மாதங்களாகவே பழவேற்காட்டிற்கு செல்லலாமென கிளம்பும் போதெல்லாம் ஏற்கனவே இது போன்ற சில இடங்களுக்குச் சென்று 'பல்ப்' வாங்கியது நினைவுக்கு வந்து தள்ளிப்போட்டுவிடுவோம். ஏரியில் தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பழவேற்காட்டிற்கு பிரிந்து செல்லும் சாலை மோசமாக இருந்தால் அதில் பைக் ஓட்டவேண்டுமே என்ற தயக்கமுமே காரணம். இந்த இரண்டு பயத்திற்குமே மூல காரணம் தடா அருவிதான். நாங்கள் சென்னையிலிருந்து பைக்கில் சென்றபோது தடாவில் தண்ணீரும் இல்லை. சாலையும் படுமோசம். அன்று பைக் வாய்விட்டு அழுதது எங்களுக்கே கேட்டது. :))
புது திரைப்படம் எதுவும் வெளியாகாத, அறையில் புதிதாக சிடி எதுவும் சிக்காத, டிவியில் கிரிக்கெட் மேட்ச் போடாத இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஒரு வார இறுதிநாளில் 'பல்ப்' வாங்கினாலும் பரவாயில்லையென நானும் என் நண்பனும் பழவேற்காட்டிற்குக் கிளம்பினோம்.
பழவேற்காடு ஏரி சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை - 5 எண்ணூர் சாலையிலிருந்து பிரியுமிடத்தில் நேராக எண்ணூர் சாலையில் சென்று மீஞ்சூர் வழியாக பழவேற்காடு சென்றடையலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலையிலேயே பொன்னேரி வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் பழவேற்காட்டை அடையலாம். மீஞ்சூர் வழியாக சாலை மிகவும் மோசமாக இருக்குமென கேள்விப்பட்டதால் தங்க நாற்கரச் சாலையிலேயே வண்டியை விரட்டினோம்.
நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவது எப்போதுமே சுகம் தான். அதிலும் நகரின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிவிட்டு நெடுஞ்சாலைகளில் முகத்திலறையும் பேய்க்காற்றுடன் ஓட்டும்போது ஏற்படும் சுகம் அலாதியானது. எப்போதாவது நம்மை தாண்டிச் செல்லும் கார்களைத் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் வேகத்தில் நமக்குப் பிறகுதான். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பிடித்த பாடலைகளை கேட்டுக்கொண்டு சென்றால் வண்டி ஓட்டும் களைப்பே தெரியாது. அங்கங்கே விபத்தில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் வண்டிகளைப் பார்க்கும்போது மட்டும் உயிர் பயம் எட்டிப்பார்க்கும் :)
பொன்னேரி வரை சாலை நன்றாகவே இருந்தது. என் அப்பா முதன்முதலில் வேலைக்கு சேர்ந்தது பொன்னேரியில்தான். திருமணமான்பின் தான் காஞ்சிபுரத்திற்கு மாற்றல் வாங்கி வந்தார். அவர் வேலை செயதபோது ஊர் எப்படி இருந்திருக்குமென எண்ணியபடியே பொன்னேரியைக் கடந்தோம். பொன்னேரியிலிருந்து பழவேற்காடு 20 கி.மீ. இப்போது சாலையை அகலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு சாலை மோசமாக இருந்தது. போக்குவரத்து அதிகமில்லை. பழவேற்காட்டை நெருங்கும்போதே ஒரு சிறிய ஏரி வறண்டு கிடந்தது வயிற்றில் புளியைக் கரைத்தது. தேடி வந்த ஏரி இதுவாகயிருந்தால் அப்படியே ஒரு யூ-டர்ன் போட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே ஊருக்குள் சென்றோம்.
பழவேற்காடு சிறிய கிராமம் தான். ஊருக்குள் நுழைந்ததுமே டாஸ்மாக் அன்புடன் வரவேற்றது. ரேஷன் கடை இல்லாத ஊரிலெல்லாம் கூட டாஸ்மாக் இருக்கிறது. அதைக் கடந்ததும் கடைத்தெரு. பக்கத்திலேயே மீன் மார்க்கெட். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே ஏரிக்கு வழி கேட்டோம். அந்த தெருவின் கடைசியில் ஏரி ஆரம்பிப்பதாக சொன்னார்.
பைக்கை பார்க் செய்துவிட்டு ஏரியை நோட்டம் விடும்போதே ஒரு படகுக்காரர் எங்களிடம் வந்து நானூறு ரூபாய்க்கு ஏரி கடலுடன் சேரும் இடத்திற்கு(6 கி.மீ) அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இரண்டு பேருக்கு நானூறு ரூபாய் அதிகமென நானும் என் நண்பனும் பேரத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேராக இருந்தாலும் நானூறுதான் என அவர் சொல்ல, பேரம் பேசுதலின் அடிப்படை விதியை உபயோகித்தோம். [வேறென்ன பாதி விலைக்கு கேட்பது தான்:)]. 'உஙகளை ஏமாத்தி சம்பாதிக்க மாட்டோம் சார்..இங்க யாரை வேணும்னாலும் கேளுங்க..வாடகை போட்டு(boat), டீசல் செலவுக்கெல்லாம் இருநூறுக்கு கட்டாது சார்' என்றார். 'உங்களை ஏமாத்தி' டயலாக்கை வைத்து இதுவரை எத்தனை பேர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்ற கணக்கு சட்டென மனதில் தோன்றியது. இறுதியில் முந்நூறு ரூபாய்க்கு பேரம் பேசி போட்டில் ஏறினோம்.
அண்ணன் படகு ஓட்டின ஒரு மணி நேரமும் இதே போஸ் தான் :)
ஏரி எவ்வளவு ஆழமென அவரிடம் கேட்டுக்கொண்டே அந்த பக்கம் திரும்பினால் நட்டநடு ஏரியில் நின்றபடி ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் அதிகபட்சம் ஐந்தடி ஆழம் தான் இருக்குமாம். ஏரி உள்ளே செல்லச் செல்ல ஆழம் அதிகமாகுமாம். மிதமான காற்று முகத்தைவருட கடலை நோக்கிப் போனோம். ஏறத்தாழ அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டார். மணல் திட்டிற்கு அந்தப் பக்கம் கடல். கடற்கரையில் காலார நடந்தோம். இடப்பக்கம் கடல், வலப்பக்கம் ஏரி என நன்றாக இருந்தது. கடல் அலைகள் குறைவாக அமைதியாகவே இருந்தது. காற்று பக்கவாட்டிலிருந்து வீசியதால் அலைகள் உருவாக்கம் பார்க்க அழகாகயிருந்தது. குடும்பத்துடன் வருபவர்கள் அங்கு இளைப்பாறி உணவருந்த ஏற்றவாறு அந்த மணல் திட்டில் சிறு குடிசைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அரைமணி நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு திரும்பிவிட்டோம்.
60 கி.மீ நீளமுள்ள பழவேற்காடு ஏரியை ஒட்டி பல கிராமங்கள் இருப்பதாகவும் சிறுசிறு தீவுகளிலும் மக்கள் வசிப்பதாகவும் படகோட்டி சொன்னார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பறவைகள் நிறைய வருமாம். திரும்ப வரும்போதே எதிரில் வந்த படகுக்காரர் பேருந்தில் சுற்றுலா பயணிகள் வந்து இறங்கியிருப்பதாகச் சொல்ல இவருக்கு சந்தோஷம்."வர்றவங்க எப்பவும் ரெண்டு மூணு அவர் பீச்சுல இருப்பாங்க..குளிச்சுட்டு சாப்பிட்டுத்தான் கிளம்புவாங்க..நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க..டூரிஸ்ட் வந்துருக்காங்களாம்..போனவுடனே அடுத்த டிரிப் வந்துடுவேன்" என்றார்.
மணி ஒன்றரை தான் ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்தில் சென்னைக்கே வந்து சாப்பிடலாம் என வண்டியை விரட்டி வடபழனி 'நம்ம வீட்டில்' அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து கட்டையைச் சாய்த்தோம். செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லாமலிருக்கும் இன்னொரு நாள் மீண்டும் சென்று வரலாம்.
வீடியோ அலைபேசி கேம்ரால எடுத்தது. எடுக்கும்போது பார்க்க நல்லாத்தான் இருந்தது..இப்ப பார்க்க காமெடி ஆயிடுச்சுல்ல? :)))
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை பயணம்
Gandhi - My Father
"நான் மோகன்தாஸ் காந்தியின் மகன் இல்லை. மோகன்தாஸ் காந்திதான் என் அப்பா" - குடிபோதையில் தகராறு செய்வதால் தன்னைக் கைது செய்ய வரும் போலீஸிடம் ஹரிலால் காந்தி சொல்லும் இந்த வசனம் தான் காந்தி-மை ஃபாதர் திரைப்படம். மோகன்தாஸ் காந்திக்கும் அவரின் மூத்த மகனான ஹரிலாலுக்குமான உறவைச் சொல்லும் திரைப்படம்.
தந்தையைப் போலவே பாரிஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவோடிருக்கும் ஹரிலாலை தன் கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்க தன் முதல் தொண்டனாக அடையாளம் காண்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுகிறார் ஹரிலால். தந்தையின் பேச்சை மறுத்துப் பேசாத தனயனாக ஆங்கில அரசுக்கு எதிராக சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். ஆனாலும் பாரிஸ்டர் ஆக வேண்டுமென்ற தன் கனவை தன் தாய் கஸ்தூரிபா மூலமாகவும் தானாகவும் காந்தியிடம் தெரிவிக்கிறார். ஆனாலும் ஹரிலால் பாரிஸ்டர் ஆவதற்கான கல்வித்தகுதி இல்லாதவர் எனக் கருதும் காந்தி அவரைத் தன்னுடனேயே அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். தன் நண்பர் மூலம் பாரிஸ்டர் படிக்கக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப்பையும் மற்றொரு இளைஞருக்கு கொடுத்துவிடுகிறார். இதனால் ஹரிலாலுக்கும் காந்திக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது.
தன் மனைவியுடன் இந்தியா திரும்பும் ஹரிலால் துணி வியாபாரம் செய்கிறான். இங்கு வந்து படித்தும் அவனால் பரிட்சையில் தேற முடியவில்லை. ஏழ்மையும் தோல்வியும் அவனை மதுவிற்கு அடிமையாக்குகிறது. காந்தி அந்நிய துணிகளை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது இங்கிலாந்திலிருந்து துணிகளை வரவழைத்து அவற்றை விற்கவும் முடியாமல் நஷ்டப்படுகிறான் ஹரிலால்.
ஹரிலாலின் மனைவி அவனைப் பிரிந்து காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறாள். அங்கு இறந்துவிடுகிறாள். கஸ்தூரிபா ஹரிலாலை சமாதானப்படுத்துகிறார். அவன் மீண்டும் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறான். சிறிது நாட்களில் மீண்டும் பெற்றோரை விட்டு விலகுகிறான். இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான். கஸ்தூரிபாவும் காந்தியும் அவனை சந்தித்துப் பேசுகிறார்கள். மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான். வியாபாரத்தையெல்லாம் விட்டுவிட்டு நாடோடியாகிறான். குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் சுற்றித் திரிகிறான். இறுதியில் காந்தி இறந்து ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் அநாதையாக இறக்கிறான் ஹரிலால்.
மோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மகனுக்குமான உறவைச் சொல்லும் இந்த் படத்தில் காந்தி என்னும் ஆளுமையைத் தாண்டி அவரை ஒரு சாதாரண தந்தையாகக் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தன் கொள்கைகளிலும் முடிவுகளிலும் உறுதியாக இருக்கும் காந்தி ஹரிலாலின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. தன் மகனை தன் முதல் தொண்டனாகக் கண்டு பெருமிதம் கொள்ளும் காந்தி அவனுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் கொள்ளவில்லை.
அதே நேரத்தில் ஹரிதாஸ் ஒரு குழப்பவாதியாகவே இருக்கிறார். தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவே பெற்றோரிடமிருந்து பிரிந்துவந்து துணி வியாபாரம் செய்து நஷ்டப்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். மனைவியுடன் சண்டையிடுகிறார். பொது இடங்களில் காந்தியை அவதூறாகப் பேசுகிறார். மீண்டும் பெற்றோருடன் சேர்கிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து விலகுகிறார். இவ்வாறாக ஹரிலால் ஒரு குழப்பவாதியாகவே தெரிகிறார்.
இருவருக்குமிடையே கஸ்தூரிபா. தன் மகனுக்காக ஆரம்பத்திலிருந்தே காந்தியுடன் சண்டைபோடும் கஸ்தூரிபா இறுதியில் அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதை எண்ணிக் கலங்குகிறார். தன் மகன்கள் அவர்களின் விருப்பப்படியான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென காந்தியுடன் விவாதிக்கிறார் கஸ்தூரிபா. ஆனாலும் கணவனின் சொல்லையும் மீற முடியாமல் மகனின் நிலையைக் கண்டு தவிக்கிறார். இறுதியில் தந்தைக்கும் மகனுக்குமான பிணக்கைத் தீர்க்கமுடியாமல் வருந்துகிறார்.
ஹரிலாலின் மனைவி குலாப் கணவனின் பேச்சைத் தட்டாத சராசரி மனைவியாக இருக்கிறார். ஏழ்மையிலும் குடும்பத்தை சரியாக நிர்வகிக்கிறார். ஹரிலால் குடித்துவிட்டு சண்டைபோடும் வேளைகளில் அடங்கிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிலாலைப் பிரிந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு இறந்துவிடுகிறார்.
தேர்ந்த நடிப்பு படத்தின் பெரும்பலம். குலாப்'பாக பூமிகா நிறைவாக நடித்திருக்கிறார். பாந்தமான முகமும் சோகம் இழையோடும் கண்களும் அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகிறது.மோகன்தாஸ் காந்தியாக தர்ஷன் ஜரிவாலா திறம்பட நடித்திருக்கிறார். இளமைக் கால காந்தியாக சிறிது உடல்வாகாக இருப்பதுபோல் தோன்றினாலும் வயதான காந்தியாக அருமையாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற பாடி லேங்குவேஜ் பெரும்பலம். ஆனால் ஒப்பனையில் காது பெரிதாக ஓட்டப்பட்டது பல காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது
கஸ்தூரிபாயாக ஷெவாலி சா. அவரின் கண்களே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. பாசத்தில் தவிக்கும்போதும், கணவர் மேல் கோபம் கொள்ளும்போதும் ஹரிலால் குடித்துவிட்டு வரும்போது அவனை வெறுக்கும்போதும் சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷ்ய் கண்ணா ஹரிலாலாக அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஹரிலாலைக் கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, தந்தையிடம் பாரிஸ்டர் ஆகும் ஆசையை சொல்லும் காட்சி, விரக்தியின் உட்சத்தில் திருவிழா கூட்டத்தின் நடுவில் வெறி கொண்டு தன் இயலாமையை உரக்க அறிவிக்கும் காட்சி, மனைவி இறந்ததும் அழும் காட்சி, ரயிலில் தன் பெற்றோரை சந்தித்து 'காந்தி மகாத்மா ஆவதற்கு கஸ்தூரிபா தான் காரணம். கஸ்தூரிபா வாழ்க!" என கோஷமிடும் காட்சி என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடக்கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்க் கொண்டுவந்த இயக்குனர் பெரோஸ்கானைப் பாராட்ட வேண்டும். தேர்ந்த காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் வசனங்கள் குறிப்பிடும்படியில்லை. ஒரு சாதாரண படத்திற்க்கான வசனங்கள் போலவே இருந்தது ஏமாற்றம். அனில் கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். தலைவர்களைப் புனிதபிம்பமாக்கி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கும் சமுதாயத்தில் தந்தையாக வெற்றியடையாதவராக, குடும்பத்தை திருபதிப்படுத்தாதவராக மோகன்தாஸ் காந்தியை திரையில் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
படம் நிறைய யோசிக்க வைக்கும். தேசத்தைப் பற்றியும் ஹரிலால் பற்றியும் காந்தியைப் பற்றியும் உஙகள் தந்தையைப் பற்றியும்.
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை சினிமா
ராஜேந்திரன் கதை
ராஜேந்திரன் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வயது 31. பணம் கையாடல் செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்கியபோது அவனுக்கு வயது 37. வீட்டிற்கு மூத்தமகனான ராஜேந்திரன் விவசாயம் பார்த்தபடியே தான் படித்தான். பத்தாம் வகுப்பில் ஃபெயிலான போதும் அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவன் தாய் மாமன் நடேசனின் அறிவுரையால் செய்யாறில் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினான். பின்னர் பேருக்கு ப்ளஸ் டூ முடித்துவிட்டு நடேசனின் மகளை திருமணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவனை கூட்டுறவு வங்கித் தேர்வு எழுத வைத்ததும் அவன் மாமா தான்.
சொந்தமாக நிலமிருந்ததால் அரசாங்க உத்தியோகத்திற்குப் போக வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ராஜேந்திரனுக்கு இல்லை. இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு தம்பிகள் சென்னையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் ஆறேழு ஏக்கர் வரும். அதை வைத்து விவசாயம் பார்த்தபடி இருந்துவிடலாம் என்றுதான் இருந்தான். நடேசன் அவனை வலுக்கட்டாயமாக பரிட்சை எழுதவைத்து கட்சியில் ஆளைப் பிடித்து செய்யாறிலேயே கூட்டுறவு வங்கியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
அவனுடன் கிளார்க்காக வேலை பார்க்கும் செல்வமும் மேற்பார்வையாளர் குமரேசனும் ராஜேந்திரனுக்கு நண்பர்களாயினர். அக்கம்பக்கம் கிராமத்து மக்கள் விவசாயக்கடன் வாங்குவதற்காக வரும்போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தான். அதனால் வங்கிக்கு வரும் விவசாயிகளிடையே நல்ல பெயர். ஆரம்பத்தில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தவன் சிறுசிறு பணத்தட்டுப்பாடு வரும்போது கை நீட்ட ஆரம்பித்தான். விதிகளை மீறி கடன் கொடுப்பது, பணம் வாங்கிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வது என இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். மூவரும் சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். எப்போதாவது வரும் ஆடிட்டருக்கும் கணிசமான தொகை செல்லும். இதைப்போலவே எல்லா வங்கிகளுமே நடப்பதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்வும் அவனை விட்டுப்போனது.
ஊரிலிருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தான். தன் பெயரிலும் மனைவி பெயரிலும் நிலம் வாங்கிப்போட்டான். தன் தம்பிக்கு தடபுடலாகத் திருமணம் செய்துவைத்தான். சொந்தத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தான். கோயிலுக்கு திருவிழாவின் போதெல்லாம் கல்வெட்டில் பெயர் வருமளவு பணம் கொடுத்தான். இப்படி ஊருக்குள் நல்ல பெயர் எடுத்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலை ஆனான்.
ஓரிரு வருடங்களுக்கு முன் கடன் தொகை கட்டமுடியாமல் போன ஒருவனது வீட்டை ஜப்தி செய்தார்கள். அவன் கோர்ட்டில் கேஸ் போட்டான். அதனால் பழைய கணக்குகளை நோண்டத் தொடங்கினார்கள். இதை முன்னமே அறிந்துகொண்ட செல்வம் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான். குமரேசனும் ராஜேந்திரனும் சிக்கிக் கொண்டார்கள். தன்னை நேர்மையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தால் வங்கியின் மேலாளர் இவர்கள் மட்டுமே தவறு செய்ததாக தலைமை அலுவலகத்துக்கு எழுதிக் கொடுத்தார். இருவரின் வேலையும் பறிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
இருவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரேசன் தன் நண்பர்கள் மூலம் பணம் செலவு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிட்டான். இப்படியொரு வழியிருப்பது தெரியாமல் ராஜேந்திரன் தனியாக சிக்கினான். தனியாக வழக்கறிஞரைப் பிடித்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.
துறையில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக தன் கையிலிருந்த பணத்தையெல்ல்லாம் கொடுத்தான். ஆனால் யாருக்கு கொடுத்தால் வேலை ஆகுமென்ற நெளிவு சுளிவு தெரியாததால் பணம் செலவானதுதான் மிச்சம். அவன் மேலான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
ராஜேந்திரனின் மனைவி சுந்தரி அவனுக்கு வேலை போனதிலிருந்து இளைத்துப் போய்விட்டாள். அவளது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துத்தான் வேலைக்காக செலவு செய்தான். அவளுக்கு பணம் செலவாவதை விட எப்படியாவது மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டால் போதும் என்றே எண்ணினாள். வீட்டின் பின்கட்டில் ஒட்டடை படிந்துகிடந்த தையல் மிஷினை தூசு தட்டினாள்.
ராஜேந்திரனுக்கு ஒரு மகன். ஒரு மகள். மகன் ஆறாம் வகுப்பும் மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்து ரேங்குக்குள் வரும் மகன் இப்போது சில பாடங்களில் பெயிலாவது சுந்தரிக்குக் கவலையைக் கூட்டியது.
நடேசன் ராஜேந்திரனிடம் வீணாக இப்படி செலவு செய்யாமல் ஊரில் விவசாயத்தை ஒழுங்காக கவனிக்கும்படி அறிவுரை கூறினார். "வேலையில்லாம ஊருக்கு வந்தா ஒருத்தனும் மதிக்க மாட்டான்" என்று சொல்லிவிட்டான் ராஜேந்திரன். அவர் தான் அடிக்கடி சுந்தரிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
தங்கள் வீட்டின் பின்புறம் மந்தரிக்கப்பட்ட எலுமிச்சை பழம், மிளகாய் இருந்ததாயும் அதனால் தான் தன் குடுமபத்திற்குக் கேடு வருவதாயும் ராஜேந்திரன் பணம் கையாடல் செய்திருக்கமாட்டான் என்றும் அவனது தாய் சொல்லிவருகிறாள். மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து "யார் தான் செய்யல? அவனுக்கு மட்டும் ஏனிப்படி" என்று புலம்புவது அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
ராஜேந்திரனின் அக்கா கணவர்களுக்கு உள்ளூர சந்தோஷம் தான். வேலையிலிருந்தபோது அவன் தங்களை மதிக்காததாயும் இப்போதும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் தண்ணியடிக்கும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
ராஜேந்திரனிடம் கடன் வாங்கிய சிலர் தானாக வந்து திருப்பிக்கொடுத்தார்கள். சிலர் அவன் சென்று கேட்டும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனும் இப்போது கடன் வாங்கப் பழகிவிட்டான். ஆரம்பத்தில் தன் மதிப்பு போய்விடும் என்று எதையாவது விற்று செலவு செய்துகொண்டிருந்தவன் இப்போது கடன் வாங்கத் தயங்குவதில்லை. நிலத்தை மட்டும் விற்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான். காலையிலும் மாலையிலும் சைக்கிளில் ஊருக்கு சென்று விவசாயம் செய்துகொண்டிருக்கிறான்.
சென்ற வாரம் வட்டச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பேசினான். எழுபத்தைந்தாயிரம் இருந்தால் வேலை வாங்கிடலாம் என்று அவர் சொன்னதும் கையோடு கொண்டுபோயிருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டு இந்த மாதக் கடைசிக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் கணக்குப்படி, வேலையை திரும்பப் பெறுவதற்காக நேற்று வரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் செலவு செய்திருக்கிறான்.
இன்னும் ஆறு மாதம் கழித்து இன்னொருவருக்கு லஞ்சம் கொடுக்க செய்யாறில் தான் கட்டிய வீட்டை விற்க ஏற்பாடு செய்வான். அப்போது சுந்தரியின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்காமல் அடமானம் வைத்து லஞ்சம் கொடுப்பான். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு செலவு செய்துவிட்டு வேலை திரும்பக் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததும் ஊரில் நிலத்தை விற்று கடனையெல்லாம் அடைத்துவிட்டு செய்யாறில் உயர்நிலை பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை வைப்பான். அவன் கூட்டுறவு வங்கியில் வேலை செய்ததையோ அவர்களுக்கு சொந்தமாக நிலமிருந்ததையோ அவன் மகனும் மகளும் மறந்துவிடுவார்கள்.
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை

