?!

சில வருடங்களுக்கு முன் பெண்களுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று சொல்லி எல்லோர் வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுக்க பச்சை புடவை ஸ்டாக் ஏராளமாக நின்றது காரணமா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை. இந்த முறை சித்தி விட்டிற்குச் சென்றபோது அம்மாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு இந்த வருடம் பெண்கள் தத்தம் அக்காவிற்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். அப்போது தான் குடும்பத்திற்கு நல்லது நடக்குமாம். என் அம்மாவிடம் பெரியம்மாவிற்கு மறக்காமல் புடவை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.

"இவங்கள தவுஸண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா"ன்னு விவேக் டயலாக் தான் ஞாபகம் வந்தது.

****************

தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் எதையுமே பார்க்கவில்லை. எல்லா நடிகநடிகைகளும் எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள் போல. விளம்பரங்களைப் பார்க்கும்போதே கடியாக இருந்தது. பள்ளிக்காலத்தில் தூர்தர்ஷனில் வந்த சிறப்பு நிகழ்ச்சிகளை அசைபோட்டுக் கொண்டே கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தீபாவளிக்கு டிடியில் சிம்ரன் பேட்டி போட்டிருந்தார்கள். 'நேருக்கு நேர்' ரிலீஸான சமயம் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் பயாலஜி ரெகார்ட் நோட் சப்மிட் செய்ய வேண்டியிருந்தது. அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது.

*****************

வோல்வோ பேருந்து விட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அதில் பயணம் செய்யவில்லையே என்ற கவலை இரண்டு வாரங்கள் முன்புதான் தீர்ந்தது. அதற்கு முன் சிலமுறை நொடிப்பொழுதுகளில் பேருந்தை தவறவிட்டிருக்கிறேன். அன்றும் ஓடிப்போய் தான் ஏறினேன்.

தொப்பி போட்ட டிரைவர் கண்டக்டரை ஏற்கனவே வெளியில் இருந்து பார்த்திருந்தாலும் அப்போது பார்க்கையில் சிரிப்பு வரத்தான் செயதது. டிவிடி ப்ளேயரில் பாட்டு போடுகிறார்கள். பயணம் செய்பவர்கள் வோல்வோ பற்றியும் புது டீலக்ஸ் பேருந்துகளைப் பற்றியும் கருத்து சொல்லியபடியே பயணிக்கிறார்கள். சாலையில் இருவரில் ஒருவராவது பேருந்தை திரும்பிப் பார்க்கிறார்கள்.

டிரைவர் அருகில் ரியர் வ்யூ LCD எப்படியிருக்கிறதென பார்க்க கிட்டவில்லை. கிண்டி-வேளச்சேரிக்கு 18 ரூபாய் கொஞ்சமில்ல ரொம்பவே அதிகம்தான். தூரமான இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் வசதியாக இருக்கும்.

*****************

அலுவலகத்தில் டீ குடிக்கப் பட்டாளமாகச் செல்லும்போது நண்பன் புதிதாக சேர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து கண்டதும் காதலாகிவிட்டான். அவளிடம் காதலைச் சொல்ல அவனுக்கு நான் சொல்லிக் கொடுத்த டயலாக்

"நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"

பசங்க அடிக்க வந்துட்டாங்க.

****************

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.

- நல்லசிவம் (அன்பே சிவம் - கமல்ஹாசன்)
அதே நம்பிக்கையில் (இந்த டயலாக்லாம் எனக்கே ரொம்ப ஓவராத்தான் இருக்கு :D) இப்போது அமெரிக்க வாசம். சிலப்பல தீர்மானங்களோட இருக்கேன். அதில் முக்கியமானது கீத்துக்கொட்டாய், சங்கம், தேன் கிண்ணம், கப்பி நான்கிலும் வாரத்திற்கு ஒவ்வொரு பதிவாவது இடுவது. எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))26 பின்னூட்டங்கள்:

சொன்னது...

???????????????????????????????????????????????????????????????????????

சொன்னது...

//இந்த வருடம் பெண்கள் தத்தம் அக்காவிற்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். ///

இதுவே நகைகள் என்றால் பயந்து போய் இருப்பாங்க :P
புடவை ரொம்ப cheap தானே

சொன்னது...

இந்த வருசம் தீபாவளிக்கு சன் டிவி பார்த்து நொந்து போனேன்.அழகிய தமிழ் மகன் ரொம்ப வித்தியாசமான படம்ன்னு சொல்லி கொன்னுடாங்க

சொன்னது...

//நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"

பசங்க அடிக்க வந்துட்டாங்க.

///

அடிக்கலையா..too bad

சொன்னது...

//எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))
//

excuse me என்ன பண்ணீங்க???
சொல்லிட்டு போங்க கப்பி

சொன்னது...

//எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))//

அதான...

சொன்னது...

//அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது.//

இதை படிச்சிட்டு அநியாயத்துக்கு சிரிச்சிட்டேன் :)))))))))))

சொன்னது...

//பசங்க அடிக்க வந்துட்டாங்க.

///

அடிக்கலையா..too bad//

ரிப்பீட்டேய் :))

சொன்னது...

இந்த புடவை வாங்கற விஷயம் எல்லாம் என்ன ஒரு மார்க்கெட்டிங் உத்தி....நம்ம மக்களை நல்லா புரிஞ்சி வச்சு இருக்காங்க...MBA படிச்சா கூட இதெல்லாம் சொல்லி தர மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி கெளப்பி விடரவங்க அஞ்சு ஏழை பசங்களுக்கு துணி எடுத்து கொடுக்கணும், இரண்டு ஏழை பசங்க படிப்புக்கு உதவனும்...இப்படி கெளப்பி விட்டா நல்ல இருக்கும்.
இந்த தீபாவளிக்கும் நீங்க எதாச்சும் வரைய முயற்சி பண்ணி இருக்கலாம்...ஷ்ரியா, அசின் பேட்டி எல்லாம் போட்டாங்க;)

சொன்னது...

rasithu padithane enga irukeenga nalama?

சொன்னது...

//எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))//

CONFIRMED KTM NEE THAAN !!! :-))

சொன்னது...

\\கீத்துக்கொட்டாய், சங்கம், தேன் கிண்ணம், கப்பி நான்கிலும் வாரத்திற்கு ஒவ்வொரு பதிவாவது இடுவது\\

நல்லது :)

சொன்னது...

//எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))////
நீங்க பண்ண மேட்டரு எல்லாம் ஒவ்வொண்ணா அவுத்து விடாலே பத்து பிளக்குல தினம் எட்டு பதிவு போடலாமே!! :-P

சொன்னது...

//அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது//

ஆகா.. புல்லரிக்குது போங்க :-)))

//பசங்க அடிக்க வந்துட்டாங்க//

அது சரி, அந்தப் பொண்ணு கிட்ட உங்க நண்பர் உதை வாங்கினாரா இல்லையான்னு சொல்லலியே :-)

சொன்னது...

துர்கா

//இதுவே நகைகள் என்றால் பயந்து போய் இருப்பாங்க :P
புடவை ரொம்ப cheap தானே//

அதானே..ரொம்ப கரெக்டா சொன்னீங்க :)))


//அழகிய தமிழ் மகன் ரொம்ப வித்தியாசமான படம்ன்னு சொல்லி கொன்னுடாங்க
//

பின்னவித்தியாசமான படம் தானே..கெரகம்

//அடிக்கலையா..too bad//

ஆகா..ஏன் இந்த கொலவெறி? :)))

//excuse me என்ன பண்ணீங்க???
சொல்லிட்டு போங்க கப்பி//

ஹி ஹி :)


J K

மாப்பு... :))

Sathiya

சரியா சொன்னீங்க..ஆனா அப்படியெல்லாம் சொன்னா நெறய பேர் செய்ய மாட்டாங்களே..இப்படி சொன்னாத்தான் லாபம் அதிகம் :))

//இந்த தீபாவளிக்கும் நீங்க எதாச்சும் வரைய முயற்சி பண்ணி இருக்கலாம்...ஷ்ரியா, அசின் பேட்டி எல்லாம் போட்டாங்க;)
//

:))

என்ன இருந்தாலும் தலைவி சிம்ரன் ரேஞ்சுக்கு வருமா :)))))

சொன்னது...

கா.பி

//rasithu padithane enga irukeenga nalama?//

நன்றிப்பா..டல்லாஸ்ல பொட்டி தட்டிட்டு இருக்கேன் :))..சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன் :)))

தேவ்

//CONFIRMED KTM NEE THAAN !!! :-))/

அண்ணே....நோஓஓஓஓ :))


கோபிநாத்

நல்லா யோசிச்சு சொல்லுங்கண்ணே..நல்லது தானா? :))))

சொன்னது...

g3

//இதை படிச்சிட்டு அநியாயத்துக்கு சிரிச்சிட்டேன் :)))))))))))//

எப்பவும் நியாயமா இருக்கனும்ங்க..அநியாயம் பண்ணாதீங்க ;))))

//ரிப்பீட்டேய் :))//

உங்களுக்குமா கொலவெறி?? அடுத்த முறை மீட் பண்ணும்போது வெயிட்டா ஒரு ட்ரீட் கொடுக்கலாம்னு இருந்தேன்..யோசிக்கனும் போல ;)))


cvr

//நீங்க பண்ண மேட்டரு எல்லாம் ஒவ்வொண்ணா அவுத்து விடாலே பத்து பிளக்குல தினம் எட்டு பதிவு போடலாமே!! :-P
//

அண்ணாச்சி...என்னாச்சு??? நீங்களே தம்பியை டேமேஜ் பண்ணலாமா?? என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னில்லையா? :))))


சேதுக்கரசி

//ஆகா.. புல்லரிக்குது போங்க :-)))//

ஹி ஹி :)

//
அது சரி, அந்தப் பொண்ணு கிட்ட உங்க நண்பர் உதை வாங்கினாரா இல்லையான்னு சொல்லலியே :-)//

உதை வாங்க வைக்க தான் முயற்சி பண்ணேன்..ஆனா பையன் தெளிவாயிட்டான்..ஜஸ்ட்டு மிஸ்ஸு :)))

சொன்னது...

சுவரொட்டிய விட்டுட்டியே கப்பி!

எவ்வளவோ பண்ணுற.. அத பண்ண மாட்டியா என்ன?

இந்த கண்டது காதலை என்னிக்கு தான் விடுவாங்க நம்ம பயபுள்ளைகங்க...

சொன்னது...

வாய்யா கப்பி, புதரகம் வந்தாச்சா? எந்த ஊரு?

நல்லா இருக்கியா?

சொன்னது...

புலி

//சுவரொட்டிய விட்டுட்டியே கப்பி!//

அது அடிக்கடி போடறதுதானேன்னு விட்டுட்டேன்..கண்டுக்காத நைனா :))

//
இந்த கண்டது காதலை என்னிக்கு தான் விடுவாங்க நம்ம பயபுள்ளைகங்க...
//

அது எப்படிய்யா விட முடியும்?? சின்ன புள்ளத்தனமா கேட்டுட்டு இருக்கீங்க? :))))கொத்ஸ்

//வாய்யா கப்பி, புதரகம் வந்தாச்சா? எந்த ஊரு?

நல்லா இருக்கியா?
//

ஷோக்கா கீரேன் தல :))

டல்லாஸ்ல கொஞ்சம் டல்லா உக்காந்திருக்கேன் :)))

சொன்னது...

ஏலேய் படிக்கட்டுலே பதிவை பாத்திக்கட்டுறத எப்போ விட போறே? :(

சொன்னது...

ராமண்ணே

//ஏலேய் படிக்கட்டுலே பதிவை பாத்திக்கட்டுறத எப்போ விட போறே? :(
//

வேற மொக்கை தோனுற வரைக்கும் விட மாட்டோம்ல :))))

சொன்னது...

//நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"//

அட்ரா சக்கை !!
அட்ரா சக்கை !!

அட்ரா சக்கை !!

அட்ரா சக்கை !!

:)))))))

சொன்னது...

இப்பேர்ப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த பதிவை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேனே?
:(

சொன்னது...

//எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))//

காஞ்சி தமிழ் மகன்னு சரியாத் தான் படம் எடுத்துருக்காங்க.
:)

சொன்னது...

Nice posts :) Most of em made me laugh :)