பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 7

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 1 - சிறில் அலெக்ஸ்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 2 - லக்கிலுக்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 3 - வினையூக்கி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 4 - ஜி.ராகவன்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 5 - ஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் 6 - தம்பி

"This is the final boarding call for all passengers traveling to Chennai by flight Air India flight 403. Passengers are requested to board the flight immediately. We wish you a pleasant journey. Thank you"

அறிவிப்பைக் கேட்டதும் சுயநினைவுக்கு வந்த சுரேஷ் செல்போனில் தன் மனைவி சந்தியாவிற்கு அஞ்சலியிடம் தான் கிளம்பிவிட்டதாகத் தகவல் சொல்லிவிட்டு வரிசையில சென்றான். சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணுக்கு புன்னகையை பதிலாக்கிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். அவன் நினைவுகள் ஆம்பலைச் சுற்றியே இருந்தன. ஆம்பலைப் பற்றிய குழப்பத்தை விடவும் அவள் ப்ரொஃபைலில் சந்தியா தோழியாக இருந்ததை நினைக்கையில் அவனுக்கு தலை கிறுகிறுத்தது.

ஆம்பலுடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து அவளுடன் நடந்த உரையாடல்களை அசைபோட்டான். ஆம்பலின் தொலைபேசி எண்ணை வைத்து அவளது முகவரியைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளுடன் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அண்ணன் என்று அவள் சொன்னதிலிருந்து மெயிலில் மட்டுமே தொடர்பு வைத்திருக்கிறான். தொலைபேசி எண்ணை மாற்றியிருப்பாளா? அவள் சொன்ன கதைகளில் எது உண்மை? சுரேஷ்களை மட்டும் ஏன் தேடித்தேடி வலை விரிக்கிறாள்? ஆர்குட்டில் தன் போட்டோவைப் போட்டதற்கு முதன்முறையாக வருத்தப்பட்டான். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிலிருந்து திரும்புவதற்குள் ஆம்பல் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

சுரேஷ் தன் பெட்டிகளை டிராலியில் தள்ளிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வந்தான். தொலைவிலிருந்து சந்தியா அஞ்சலி கையசைத்தாள். அவளருகில் நின்றிருந்த ஆம்பலைக் கண்டதும் அவன் கண்கள் இருண்டன.


****************************************************************


இரவு மணி ஒன்று. "Criminal Behavior: A Psychological Approach" என்ற புத்தகம் கையிலிருக்க பிரபுவின் நினைவெல்லாம் அந்த கொலை வழக்கைச் சுற்றியே இருந்தது. பிணத்தின் கையில் அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ஆறாவது விரல் அவரை அலைகழித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இது பணத்திற்காகவோ அல்லது அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றோ நடந்த கொலை தான் என்று நினைத்தார். ஆனால் பிணத்தைப் பார்த்த பிறகு அவருக்கு இது சாதாரண கொலையாகப் படவில்லை. அதற்கேற்றாற் போல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். காரணமும் துப்பும் எதுவும் தோன்றாமல் சலிப்படைந்தவராய் 'நம்ம வேலையைப் பார்ப்போம். போலீஸ் பார்த்துக்கிடட்டும்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். சட்டென ராகவனின் நினைவு வந்தது.

முதன்முதலாக சந்தித்தபோதும் இன்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் குறித்து பேசிக்கொண்டிருந்த போதும் ராகவனிடம் ஒரு தவிப்பு தெரிந்ததை உணர்ந்திருந்தார். கொலை விசாரணையில் இன்ஸ்பெக்டருக்கு இயல்பாக இருக்கும் தவிப்பு என்றே நினைத்திருந்தார். ஆனால் இப்போது யோசிக்கையில் அவருக்கு ராகவன் தன்னிடம் எதையோ மறைப்பதாகத் தோன்றியது. வாரத்திற்கு இரண்டு மூன்று கொலைகள் நடக்கும் இந்த ஏரியாவில் இந்த வழக்கில் மட்டும் ராகவன் அதிகம் கவனம் செலுத்துவதும், ஆறாம் விரல் பற்றி அவர் குறிப்பிட்ட போது அவன் அதிர்ச்சியடைந்ததும் பிரபுவிற்கு புதிராகவே இருந்தது. ஆர்க்குட்டில் நட்பாகியதாக ஏதோ பெயர் சொன்னாரே? ஆம்பல். அதற்கும் இந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?

படுத்தவாறே தலையணை அடியில் வைத்திருந்த தன் செல்போனை துழாவி எடுத்தார் பிரபு.


*******************************************************

ஆம்பல். ஆம்பல். ஆம்பல்.

நான்காவது ரவுண்ட் விஸ்கி ராவாக உள்ளே சென்றது. நிமிடத்திற்கு ஒரு முறை அருகிலிருந்த லேப்டாப்பில் ஆர்க்குட் பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்துகொண்டிருந்தான். கொலை நடந்த தினத்திலிருந்து ஆம்பல் ஆர்க்குட் பக்கமே வரவில்லை. தொடர்ந்து அனுப்பிய மெயில்களுக்கும் பதிலில்லை. குழப்பத்தின் உச்சத்தில் இருந்தான்.

ஆம்பலினால் வேலையிலும் ஒருமனதாக ஈடுபட முடியாமல் போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. விஸ்கி பாட்டிலை அப்படியே கவிழ்த்துக் குடித்துவிட்டு சோபாவில் சாய்ந்தான். ஆம்பலை மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த ஃபைலைத் திறந்தான்.

கொலையான பெண்ணின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கிறாள். ஒரே குண்டு. அருகாமையில் இருந்து சுட்டிருக்க வேண்டும். அல்லது துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவனாய் இருக்க வேண்டும். ஆறாவது விரல் பற்றி படித்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதே நேரம் அது மூடநம்பிக்கைக்காக வைத்துக்கொண்ட விரலா அல்லது இந்த கொலைக்கான காரணத்துடன் சம்பந்தப்பட்டதா எனக் குழம்பினான்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கொலையைக் குறித்து ஒவ்வொரு விஷயமாக அசைபோட்டான். ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த கொலை. கொலை செய்தவனும் அந்த பெண்ணும் ஒன்றாக வந்திருக்க வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி காட்டி மிரட்டி திருடும் ரவுடிகள் ஏரியாவில் யாருமில்லை. அருகில் காரோ பைக்கோ சென்ற வண்டித்தடம் எதுவுமில்லை. மெயின் ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்கலாம். ஏற்கனவே விசாரித்ததில் அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வண்டி நின்றிருந்ததாக யாரும் சொல்லவில்லை. கொலையாளி வந்த காரியத்தை வேகமாக முடித்துவிட்டு தப்பியிருக்கிறான். முகம் அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்தபின் முகத்தைத் தாக்கியிருக்கிறான்.

இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து ஆர்க்குட்டைத் திறந்தான். ஆர்க்குட் தேடுகட்டத்தில் ஆம்பல் பெயரையிட்டு தேடினான்.

பக்கத்தில் டேபிள் மேல் வைக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து அவன் மனைவி கயல்விழி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.


************************************


சிறுகதை சித்தர், போர்வாள் தேவ் அவர்கள் தொடர்வார்.


சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி என ஜி.ரா தெளிவாக சொல்லியும் நான் குழப்(ம்)பிட்டேன். மாப்பு கேட்டுக்கறேன். :( .14 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி கண்ணா.. சுரேஷ் மனைவியின் பெயர் அஞ்சலி இல்லையா?

இது யாருப்பா சந்தடி கேப்ல்ல சந்தியா... உன் ஆர்குட் புரொப்பலைப் பார்க்கணும் போல இருக்கே :-)

சொன்னது...

ரகளையாக கொண்டு வந்து இருக்க ராசா... :)

மீண்டும் கயல்விழியா ;)

சொன்னது...

//சுரேஷ் மனைவியின் பெயர் அஞ்சலி இல்லையா?//

Same question :-))

Kadha ekkachakkama suthudhu.. ella sikkalaiyum eppadi avizha pogudhunnu poruthirundhu paaka vendiyadhu dhaan :)

சொன்னது...

தேவ், G3

சுரேஷின் மனைவி பெயர் இப்போதுதான் முதன்முறையாக சொல்லப்படுகிறது. ஜி.ரா சுரேஷ் அஞ்சலியை சந்திக்கப் போவதாக குறிப்பிட்டாரே தவிர அவனது மனைவி என்று சொல்லவில்லை...ஆக அஞ்சலி யாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ;)

நன்றிகள் :)


புலி

கயல்விழி பேர் வச்சதுக்கு வே.வி படமும் காரணம் ;)

நன்றி!

சொன்னது...

///இது யாருப்பா சந்தடி கேப்ல்ல சந்தியா... உன் ஆர்குட் புரொப்பலைப் பார்க்கணும் போல இருக்கே :-)/////

ஆம்பல் கதையை எழுத போய்,கப்பியோட கதை வெளியில வந்துருச்சே????
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னோட கதைக்கு வாழ்த்துக்கள் கப்பி!! :-)

சொன்னது...

சூப்பர் க்ரைம் கதையை விருவிருப்பு குறையாம எடுத்துட்டு போயிருக்க கப்பி!!

அடுத்து நம்ம master story teller தேவ்-ஆ???
சூப்பரு!!
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்!! ;)

சொன்னது...

சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி என ஜி.ரா தெளிவாக சொல்லியும் நான் குழப்(ம்)பிட்டேன். மாப்பு கேட்டுக்கறேன். :( .//சூப்பர் க்ரைம் கதையை விருவிருப்பு குறையாம எடுத்துட்டு போயிருக்க கப்பி!!//

நன்றி சிவிஆர்

சொன்னது...

//கப்பி பய சொன்னது...

தேவ், G3

சுரேஷின் மனைவி பெயர் இப்போதுதான் முதன்முறையாக சொல்லப்படுகிறது. ஜி.ரா சுரேஷ் அஞ்சலியை சந்திக்கப் போவதாக குறிப்பிட்டாரே தவிர அவனது மனைவி என்று சொல்லவில்லை...ஆக அஞ்சலி யாரென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ;)

நன்றிகள் :) //

அஞ்சலி என் சின்ன வயசு கேர்ள் ஃப்ரண்டுங்ணா :P

சொன்னது...

//ஆம்பல் கதையை எழுத போய்,கப்பியோட கதை வெளியில வந்துருச்சே????
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னோட கதைக்கு வாழ்த்துக்கள் கப்பி!! :-)//

ரிப்பீட்டேய்!...

கதை நல்லாயிருக்கு கப்பி.

சொன்னது...

ஹாய் கப்பி,

கதையை விருவிருப்பாக நகர்த்தியிருக்கிறீர்கள்,பாராட்டுக்கள்!

[பெண் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் சூட்டும் பெயர்கள் நல்லா இருக்கு]\\ஆம்பல். ஆம்பல். ஆம்பல்.

நான்காவது ரவுண்ட் விஸ்கி ராவாக உள்ளே சென்றது. நிமிடத்திற்கு ஒரு முறை அருகிலிருந்த லேப்டாப்பில் ஆர்க்குட் பக்கத்தை ரிஃப்ரெஷ் செய்துகொண்டிருந்தான்.\\

இந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் ராகவனின் பெயரை ஒருமுறையேனும் குறிப்பிடாமல்,
'அவன்' என்று குறிப்பிடபட்டிருப்பது ராகவன் என்பதை கதையினை படிப்பவர்களே உணர்ந்துக்கொள்ளும் வகையில் நீங்கள் எழுதியிருப்பது அருமை!

தேவ் அண்ணா கதையினை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என அறிய ஆவலுடன் வெயிட்டிங்!

சொன்னது...

:) இன்னும் திருப்பங்கள். சுவாரசியம் சுவாரசியந்தான்.

அடுத்தாரு தேவா? அப்ப கலக்கல்தான் தேவா :)

சொன்னது...

சுரேஷின் மனைவி பெயர் அஞ்சலி தான். சுரேஷ் ராகவனின் மனைவி பெயர் கயல் விழி. இங்கு ராகவன் - அல்லது சுரேஷ் என்ற பெயர் இல்லாவிட்டாலும் வருவது சுரேஷ் ராகவந்தான். வாசகர்கள் ஊகிக்க வேண்டுமென கதாசிரியர் நினைத்து விட்டார். கதை அருமையாகச் சென்று கொண்டிருக்கிறது

சொன்னது...

is this story ended??? but i couldn't find any links after 11th part...

சொன்னது...

//is this story ended??? but i couldn't find any links after 11th part...//

அனானி

இந்த கதைக்கு முடிவே கிடையாது :))