?!

ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா, முன்னால் குழந்தை பின்னால் மனைவியுடன் பைக் ஓட்டும் 35 வயது குடும்பஸ்தர், மாநகர பேருந்து - சென்னை சாலைகளில் வண்டி ஓட்டும்போது இந்த மூன்றில் எதற்கு அதிகம் பயப்படுவீர்கள்?

பழைய மகாபலிபுரம் சாலையில் (இப்போது இராஜீவ் காந்தி சாலை) அலுவலகத்துக்கு பைக்கில் செல்லும் வேளைகளில் ஒவ்வொரு பேருந்தையும் ஓவர்-டேக் செய்யும்போதும் "அப்பாடா உயிரோட ஓவர்டேக் பண்ணிட்டோம்டா" என்று தோன்றுகிறது. உயிர் பயம் அதிகமாகிவிட்டது.

*******************************


அலுவலகத்தில் தொலைந்து போன பொருட்களின் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். அடையாள அட்டை, ஹெட்ல்போன், கைப்பை, கிரெடிட் கார்ட், பஸ் பாஸ்களுக்கிடையில் சட்டென கண்ணில் பட்டது ' Money purse without money". என்னமா பீல் பண்ணியிருக்காங்க

*******************************


சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும்பொது அதிசயமாக உட்கார இடம் கிடைத்தது. முன்னால் இருந்து சுண்டல் விற்றுக்கொண்டே ஒருவர் வந்தார். நான்கைந்து பேர் வாங்கினார்கள். கடைசி இருக்கைகளில் யாரும் வாங்கவில்லை. அவர் இறங்கிக்கொண்டே சொன்ன டயலாக் "No peace of mind"

*******************************


பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் காஞ்சிபுரம் தாண்டியதும் பேச ஆரம்பித்தார். அவர் கோவிலுக்கு வந்த கதையில் ஆரம்பித்து, அவரது டாக்டர் மகன், மகன் திருமணத்திற்கு வரதட்சனை வாங்காதது, வடிவேலு காமெடி, திருவண்ணாமலை கோயில், ரஜினி, சரத்குமார், காமராஜர், கக்கன், தன் சொந்த கடை, மென்பொருள் துறையில் சம்பளம், அவரது தம்பி மகன், அவருக்கு பார்த்த பெண் ஜாதகம் பொருந்தியும் கலர் கம்மியாக இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் விட்டது, 1970-ல் நடந்த கொலை கேஸ் என கிண்டி வரும் வரையில் பேசிக்கொண்டே வந்தார். 'உம்' கொட்ட ஆளிருந்தால் வயதானவர்களுக்கு கொண்டாட்டம் தான். வீட்டுக்கு வந்ததும் இதை நண்பனிடம் சொன்னதும் 'நாயகன்' டெல்லி கணேஷ் ஸ்டையில் 'ப்ளாக்கரே' என்று அழைத்து "பிள்ளாக்கு எழுத மேட்டர் கிடைச்சுடுச்சா" என்றான். நான் இளித்தேன்.

*******************************


Johnny Ghaddar படம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். நான் பார்த்த அடுத்த நாளே தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டார்கள். மெலோடியில் மாலை காட்சிக்கே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். படம் அட்டகாசமாக இருந்தது. நம்மூரில் மொக்கை இந்தி படமெல்லாம் ஓடும். இது போன்ற வெகு சில நல்ல படங்கள் ஊத்திக் கொள்கின்றன. நடிப்பு, திரைக்கதை, காட்சிகள் படமாக்கிய விதம், பின்னணி இசை(ஷங்கர்-எஹ்சன்-லாய்) என அத்தனையும் சிறப்பு. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

*******************************


வோடபோன் புது விளம்பரம் பார்த்தீங்களா? கலக்கலா இருக்கு.*******************************

?!

தமிழ் செய்தித்தாள் தலைப்புச் செய்தி போல் ஆச்சரியக்குறியும் கேள்விக்குறியும் சேர்ந்து இருக்கிறதா? இதில் "வாழ்க்கைங்கறது.." என விக்ரமன் பட ஸ்டைலில் ஆரம்பித்து பெரிய தத்துவமே (மொக்கை தத்துவம் தான்) அடங்கியிருக்கிறது. தத்துவம் புரிந்தவர்கள் "எழரைஏழரைஏழரை" என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். இல்லையெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தத்துவத்தை சரியாக சொல்பவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் எமோஷனல் பேட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படும். பிடிக்காத தத்துவங்களுக்கு அழுவாச்சி பதிலாக அளிக்கப்படும். ஜிடாக்கில் ஏற்கனவே இந்த தத்துவத்தை அறியப் பெற்றவர்கள் பெட்டி கொடுத்துவிட்டு போட்டியில் கலந்துகொள்ளலாம். வைல்ட் கார்ட் ரவுண்டும் உண்டு.

*******************************

சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ரஜினி. B. கஜினி.

இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))27 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா - Obviously.

நல்லாயிருங்க!

சொன்னது...

:)

உனக்கு மட்டும்தான் சிரிப்பான் போட தெரியுமா?

கிகிகிகி

சொன்னது...

அடடா இப்பலாம் எஸ் எம் எஸ் போட்டி வைக்கலன்னா எவனுமே டீவி புரொக்ராம் பாக்கறதேல்ல.

சொன்னது...

//
சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ரஜினி. B. கஜினி.

இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))
//
Ssappppaaaaaaaaaaa.....
mudiyalai

சொன்னது...

அறிவுஜீவி சார், இப்போ ஒரு அட்டெண்டன்ஸ்.. பிறகு வந்து படிக்கிறேன். :-)

சொன்னது...

கப்பிசார் கப்பி சார்! நல்லா இருக்க்குங்க பதிவு! அடிக்கடி போடுங்க இது போல!

சொன்னது...

நல்லா இருக்கு அப்பு. இப்படியே வாரம் ஒன்னு போடுங்க. கலக்கலா இருக்கு

சொன்னது...

மோகன்தாஸ்

//ஆக்டிவா/ஸ்கூட்டி ஓட்டும் அக்கா - Obviously.//

என் வோட்டோட சேர்த்து இதோட 5 ஆச்சு :))

தம்பி

பழிக்கு பழி..ரத்தத்துக்கு ரத்தம்..ஸ்மைலிக்கு ஸ்மைலி :)))


//அடடா இப்பலாம் எஸ் எம் எஸ் போட்டி வைக்கலன்னா எவனுமே டீவி புரொக்ராம் பாக்கறதேல்ல.//

அதை வச்சு மக்களை என்னமா ஏமாத்தறாங்க மக்கா :)))


மங்களூர் சிவா

//Ssappppaaaaaaaaaaa.....
mudiyalai//

வாங்க :))

சொன்னது...

மை ஃபிரண்ட்

எழுதியிருக்கதே அரைப் பக்கம்...அதையும் அப்புறம் வந்து படிக்கறேன்னு சொன்னா எப்படி? :)))


அபி அப்பா

டாங்க்ஸ்ண்ணே :)டாங்க்ஸ் விவ்ஸ்

வாரம் ஒன்னா?? ரொம்ம்ம்ப கஷ்டமா இருக்கே :))

சொன்னது...

கப்பி ஜடியாவுக்கு நன்றி.... கிகிகிகி

சொன்னது...

குடும்ஸ்தன் ஆனாலே இந்த உயிர் பயம் எல்லாம் வர தான் செய்யும்... :)

ஆக்டிவா/ஸ்கூட்டி என் ஒட்டை சேர்த்துக்கோ... :)

பீல் பண்ணியவன் டி.ஆர். ரசிகரானு செக் பண்ணு...

அட் நல்லா இருக்கு

சொன்னது...

அபி அப்பாவை வழி மொழிந்த இளாவை பின் தொடர்ந்து, 'கலக்கல்'!?

சொன்னது...

:-))))))

சொன்னது...

வாக்கர்

//கப்பி ஜடியாவுக்கு நன்றி//

எந்த ஐடியாவை சொல்றீங்கண்ணே? :))


புலி

//குடும்ஸ்தன் ஆனாலே இந்த உயிர் பயம் எல்லாம் வர தான் செய்யும்... :)//

யாரு குடும்பஸ்தன் ஆனாலே? அண்ணே ரோட்டுல அரை மண்டையனுங்க வண்டி ஓட்டறதை பார்த்தா எல்லாருக்குமே தான் உயிர் பயம் வரும்..உடனே குடும்பஸ்தன்னு கலாய்க்கறதா? :))))


//
ஆக்டிவா/ஸ்கூட்டி என் ஒட்டை சேர்த்துக்கோ... :)
//

டீஃபால்டா ஏற்கனவே சேர்த்துட்டனே...உங்க ஓட்டு எதுக்கு விழும்னு எனக்கு தெரியாதா :))

//
அட் நல்லா இருக்கு//

ஆமா..ஆமா...பயங்கரமா செலவு பண்றாங்க..எங்க பார்த்தாலும் செவப்பு தான்...

சொன்னது...

boston bala

கலக்கல் அப்புறம் '?!' போட்டு 'பஞ்ச் பாலா' ஆயிட்டீங்களே :))

டாங்க்ஸ் தல :)

CVR

தம்பிக்கு சொன்னதே தான் உங்களுக்கும் :))))

சொன்னது...

?????!!!!!!!!

சொன்னது...

:)

கிகிகிகி

சொன்னது...

பதிவின் தலைப்பை ஸ்பானிஷ் மொழியில் எழுதியிருக்கிறீர்களா ?
:-)

சொன்னது...

செல்லம் ஒனக்கு மலேசிய மாரியாத்தா வைச்ச அறிவுஜீவி பட்டம் சரிதான்... :)


என்னாமா யோசிக்கிறே!!! :)

சொன்னது...

கப்பி எஸ்.எம்.எஸ் அனுப்புனேன்ய்யா வந்துச்சா??!!!

சொன்னது...

kappi diffrent a nalla irundhadhu padhivu

சொன்னது...

இம்சை அரசி

வாங்க :))

தள

என்ன 'கிகிகி'ன்னு கிளி மாதிரி சவுண்ட் விட்டுட்டு போறீங்க :)))

பாலராஜன்கீதா

//பதிவின் தலைப்பை ஸ்பானிஷ் மொழியில் எழுதியிருக்கிறீர்களா ?
:-)//

வாங்க ஊர்ஸ்..அது ஸ்பானிஷ் இல்ல..ஊருக்கே புரியற மொழி தான் :)))

சொன்னது...

ராமண்ணே

வழக்கம் போல கேட்கறேன்...ஏன் இந்த கொலவெறி? :)))

தேவ்

எஸ்.எம்.எஸ் உங்களுக்கு நீங்களே அனுப்பிக்கனும்னே...கண்டிஷன்ஸ் அப்ளை :))

கா.பி

நன்றிப்பா :)

சொன்னது...

இந்த கேள்விக்கான பதிலை உங்கள் மொபைலில் 'KAPPI' என்று அடித்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்ஷன் A அல்லது B டைப் செய்து உங்கள் நம்பருக்கே அனுப்பி விடையைத் தெரிந்துகொள்ளுங்கள். :))////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

சொன்னது...

//நாகை சிவா said...

குடும்ஸ்தன் ஆனாலே இந்த உயிர் பயம் எல்லாம் வர தான் செய்யும்... :)

ஆக்டிவா/ஸ்கூட்டி என் ஒட்டை சேர்த்துக்கோ... :)

பீல் பண்ணியவன் டி.ஆர். ரசிகரானு செக் பண்ணு...

அட நல்லா இருக்கு//

ரிப்பீட்டே!!!

சொன்னது...

?! :) :( :'( :@ :x :O

சொன்னது...

குசும்பன்

ஓய் ஃபீலிங்க்ஸ் :))))


வெட்டிண்ணே

ரீப்பீட்டா....நான் அப்பீட்டு :)))

ஜி

மக்கா...டென்ஷசன்ல இருக்கியளா? :)))