என் நண்பன் SnoozenBooze-ன் ஆங்கிலப் புலம்பலின் தமிழாக்கம். என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!
நரிகளுக்கு நடுவில்!
இது என் இடமல்ல!
நரிகளுக்கு நடுவில்
மானாக உணர்கிறேன்!
மான்,நரி,சிங்கம், சிறுத்தை,
கீரி, பாம்பு
அனைத்திற்கும் ஒரே கூண்டு!
தனித்தன்மை இழந்து
தன்பலம் மறந்து
மயக்கத்திலே திரிகின்றன!
கூண்டிலுள்ள மற்றொரு மான்
என்னையும் நரியென
எண்ணுகிறது!
போலிப் புன்னகையும்
முகத்துதியும் இவ்விடத்தை
வெறுக்கச் செய்கின்றன.
இது என் இடமல்ல!
இங்கிருக்க எனக்கு
விருப்பமல்ல!
என் இடத்தில்
மனம் மகிழும் போது
வாய்விட்டு சிரிக்கலாம்!
சோகம் கவிழ்கையில்
புன்னகை புரியலாம்!
போலி வேடங்கள்
ஏதும் பூணாமல்
'நானாக' இருக்கலாம்!
கோபத்தை முகத்திலும்
அன்பைக் கண்களிலும்
வெளிக்காட்டலாம்!
கேளிக்கையும் கேலியும்
கூத்தாடும் அரங்கம்!
ஒவ்வொரு பகலும்
பல கதைகளையும்
ஒவ்வொரு இரவும்
பல கனவுகளையும்
புனையும் களம்!
ஒவ்வொரு நாளும்
அதே நிகழ்வுகள்!
ஆனால்
புதுப்புது அனுபவங்கள்!
அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!!
நரிகளுக்கு நடுவில்!
கப்பி | Kappi 12 பின்னூட்டங்கள்
வகை கவித..
'சுகா'னுபவங்கள் ஆறு
"கோட்டோவியக் கோ" சுகாவின் ஆணையை ஏற்று என்னுடைய 'அலுக்காத ஆறு'..... எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை முறையானாலும் எனக்கு சலிப்பு ஏற்படுத்தாத இந்த ஆறு விஷயங்கள் குறித்து சிறிது விரிவாக:
1.எனக்கு நினைவு தெரிந்து என் மூன்றாம் வகுப்பிலிருந்து நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். தலைவரின் எந்த படமாகயிருந்தாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதை மீண்டும் பார்ப்பது என்றைக்கும் அலுக்காது. சிறு வயதில் 'மாப்பிள்ளை'யில் ஆரம்பித்து த்லைவரின் படங்களை வரிசையாக சொல்வதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தலைவரின் இண்ட்ரோ பாடலைப் பக்கத்து வீட்டு அண்ணனை எழுதித் தரச் சொல்லி மனப்பாடம் செய்வோம்.
கல்லூரியில் புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி, ஹாஸ்டல் டே போன்ற நாட்களில் வருடா வருடம் தவறாமல் திரையிடப்படும் படம் பாட்ஷா தான். அந்த நான்கு வருடங்களில் பாட்ஷா வை மட்டும் குறைந்தப்ட்சம் 20 முறையாவது திரையிட்டிருப்போம்.
தலைவர் சில சமயங்களில் சொதப்பும் போது அவருக்காக வக்காலத்து வாங்கி நண்பர்களுடன் சண்டையிடுவதும் தனி சுகம் தான்.
2. ஒவ்வொரு முறையும் பயணம் நமக்கு புது அனுபவத்தைத் தருகிறது. ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது. 'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது. அதிலும் கூட்ட நெரிசல் மிக்க பண்டிகை நாட்களில் சக பயணிகளை பார்த்துக் கொண்டு வந்தாலே நேரம் கடந்துவிடுகிறது.
நண்பர்களுடன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது டூர் அடிக்காவிட்டால் மனதில் ஒரு சோகம் குடி கொண்டுவிடுகிறது.
3.எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி கொண்ட கிரிக்கெட். பள்ளி விடுமுறை நாட்களில் காலை 6 மணிக்கே க்ரவுண்டுக்கு போய் ஒரு ஸ்டம்பை நட்டு பிட்ச் பிடிப்பதில் ஆரம்பித்து மாலை இருட்டுகிற வரை விளையாடி நாள் முழுக்க கிரிக்கெட்டே வாழ்க்கையாக இருக்கும்,
கல்லூரியிலும் ஹாஸ்டலில் நுழையும்போதே கைகள் பேட்டையும் பந்தையும் தேட ஆரம்பித்துவிடும். பரிட்சை நாட்களிலும் மதியம் பரிட்சை என்றால காலையில் கிரிக்கெட் விளையாடி பல பேரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவோம். வருடாவருடம் விடுதியில் நடத்தும் வெள்ளொளி கிரிக்கெட் போட்டியும் அப்போது கொடுக்கும் நேர்முக வர்ண்னைகளும் அம்பயரிங்கில் நடக்கும் தகராறுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை.
4.குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எந்த விளையாட்டும் மகிழ்ச்சியைத் தர முடியாது. அதிலும் கல்யாண சமயங்களிலும் விடுமுறைகளிலும் அவர்களுடன் விளையாடுவதும், திடீரென காரணமே இல்லாமல் அழும் குழந்தையை சமாதானம் செய்வதும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு சமரசம் செய்வதும் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது.
5.வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருள் கவிந்து நிறம் மாறும் மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து காற்றாடுவது, மேக ஒட்டடைகள் இல்லாத கோடை இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களை பலவாறாக உருவகிப்பது, படுத்துக் கொண்டே இரவு முழுவதும் நிலவுடன் பயணிப்பது, மன நிறைவைத் தரும் சூரிய அஸ்தமனம், தொலைதூரத்தில் இருந்து திரண்டு வரும் மழை மேகங்களும் இடி மின்னலும் தரும் பயமும் கிளர்ச்சியும் என வானம் பல வகையில் நம்முடன் உறவு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம் மனநிலைக்கேற்ப வானம் உருமாறிக் கொண்டிருக்கிறது.
6.காபி....ஆடும் ஆட்டம் அனைத்தும் அரை சாண் வயிற்றுக்குத்தான் என்றாலும் இந்த காபி குடிக்கும் சுகம் இருக்கே..அதை அனுபவிக்கனும்...ஆராயக் கூடாது..யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க..கோயில் கட்டறாங்க...காபியை முதன் முதலில் கண்டுபிடித்தது யாருன்னு தெரிந்தால் அவருக்கு நான் சிலை வைப்பேன்...தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,
7.
ஓ...ஆறு தான் எழுதனுமோ...
இந்த விளையாட்டுக்கு நானே லேட்டா தான் வந்திருக்கேன்...ஏற்கனவே பல பேருக்கு விளையாடிட்டு இருக்கறதால யார் யார் இன்னும் வரலைனு தெரியல..அதனால ஒரு ஈஸியான வழி...தமிழ்மணத்துல இப்போ மறுமொழியப்பட்ட இடுகைகளில் முதல் ஆறு பேரை விளையாட்டுல சேத்துக்கலாம்..அவங்க ஏற்கனவே விளையாடிட்டு இருந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..
1.Boston Bala
2.மகேந்திரன். பெ
3.icarus prakash
4.பெனாத்தல் சுரேஷ்
5.நிலா
6.சந்தோஷ்
கப்பி | Kappi 22 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை
சாக்ரடீஸும் நானும்
சாக்ரடீஸ் ஒரு முறை தன் சீடர்களுடன் சந்தையில் ஒவ்வொரு கடையாக 'விண்டோ ஷாப்பிங்' செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் " நீங்கள் தான் எதுவும் வாங்கப் போவதில்லையே, பின் எதற்காக எல்லாக் கடைகளுக்கும் செல்கிறீர்கள்" எனக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் " இந்த உலகத்தில எவை எல்லாம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடிகிறது என்பதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
இந்த மாதிரி நானும் யோசிக்க ஆரம்பிச்சதுல மண்டை காய்ந்துவிட்டது....இங்கு வந்ததில் பல விஷயங்களை இழந்திருந்தாலும் இது மாதிரி கடையில் வாங்கும் அல்லது பணம் செலவு செய்து கிடைக்கும் விஷயங்களில் இழந்திருக்கிறேன் என யோசித்தேன்...
உதாரணத்துக்கு சாப்பாட்டு அயிட்டங்களில் பார்த்தால் பாலாஜி இட்லி கடையில் கல்தோசை,பரோட்டா இரவு உணவு..... ஹாட் சிப்ஸ்,சரவண,வசந்த பவன்களில் காபி....
உதயம்,கமலா,காசி,AVM,தேவி கருமாரியில் வாரம் ஒரு முறையாவது நைட் ஷோ... எந்த குப்பை படமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு படமாவது பார்க்கா விட்டால் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கம் வராது.....
மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்...
எந்த தியேட்டரிலும் பார்க்காத படம் இல்லையென்றால் ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கோ அல்லது வாடகைக்கோ ஏதாவது ஒரு பட டிவிடி....
வெள்ளி காலையில் சுடச்சுட வீடு தேடி வரும் விகடன்...குமுதம்,குங்குமம்,சினிக்கூத்து எனக் களஞ்சியங்கள்....
ஹிக்கின்பாதம்ஸ்,லாண்ட் மார்க் கடைகள்.... ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஆங்கில நாவல்கள்...
அப்புறம் எப்பவாவது போகும் ஸ்பென்சர்ஸ்,பெசண்ட் நகர்.... அங்க போய் நமக்கு ஒன்னும் செலவு இல்ல...ஆனா கூட வர்றவனை அவிச்சுடலாம்...அவன் தலையில பெரிய துண்டைப் போட்டுட்டு வரலாம்...
இது மாதிரி யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாயிட்டே போகுது.... மனக்கவலையும் அதிகமாகுது.....இது மாதிரி பல விஷயங்கள் இல்லாம ரொம்ப நாள் நம்மால தாக்கு புடிக்க முடியாது!!!!
இந்த விஷயத்துல நாம சாக்ரடீஸ் என்ன..அவர் கஸின் ப்ரதர் 'பல்ப'ரடீஸ் அளவுக்கு கூட வர முடியாது!!!!
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை
உருகுவேயில் காரசட்னி
வந்து இரண்டு வாரம் ஆகிறது. இன்னும் உருகுவே பத்தி எழுதவில்லையே என ஒரே ஃபீலிங்க்ஸ்...அதற்கு தான் இது.... பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்கு இன்னும் இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 2500 பீஸோ அழ வேண்டும். வஙகிக் கணக்கு தொடங்குவது பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வாரம் ஆகுமாம். நம் ஊரில் வீடு தேடி வந்து கண்டதுக்கு கடன் தருகிறார்கள்...இங்கு இதற்கே இப்படி இழுத்தடிக்கிறார்கள்.
அலுவலகத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கத்(?!) தொடங்கி விட்டதால் கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக எழுத வேண்டியிருக்கிறது. நிற்க.
மாண்டிவிடியோ...அமைதியான நகரம்...மக்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்...நட்புடன் பழகுகிறார்கள்...கடைகளில் ஸ்பானிஷ் தெரியாமல் திணறுகையில் தானே வந்து உதவுகிறார்கள்...உலகின் 30 பாதுகாப்பான இடங்களில் ஒன்றாம்...கம்பெனி வண்டியிலேயே தினமும் பயணிப்பதால் நக்ரை இன்னும் முழுமையாக சுற்ற ஆரம்பிக்கவில்லை...
எல்லாவற்றுக்கும் இறக்குமதியை ந்ம்பி இருக்கும் நாடு....காய்கறிகள் கூட சிலி, ஈக்வேடார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன...இங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவது மாடு மற்றும் பன்றி கறி தான்!!!
இனி சொந்தக் கதைக்கு வருவோம்.....ராம்ப்லா எனப்படும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு பார்த்து குடியாயிற்று. ..நம்ம ஊர்ல இந்த மாதிரி பீச் ஏரியாவில் இருக்கனும்னா வாடகைக்கு நம்ம சொத்தையே எழுதி தர வேண்டி இருக்கும்...இங்க இந்த ஊரே பீச்சா இருப்பதால் சீப்பா இருக்கு!!!
'நளன்' ஒருத்தன் ரூம் மேட்டா கிடைச்சிருக்கான்...சூப்பரா சமைக்கறான்...நம்ம வேலை மைக்ரோவேவ்ல அரிசி வச்சு சாதம் பொங்கறது....அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்...அவன் ஏதாவது இரண்டு மூன்று காய்களை சேர்த்து குழம்புக்கும் கூட்டுக்கும் நடுவில் ஒரு அயிட்டம் சமைப்பான். ஒரே கவலை..எது செய்தாலும் அதில் உருளைக் கிழங்கு போடலைனா அவனுக்கு ஜீரணமாகாது.....என்ன செஞ்சா என்ன..நம்ம சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்தது...
இங்கு குறைஞ்சது 50 இந்தியர்களாவது இருப்பார்கள் என்று வந்தால் மொத்தம் 20 பேர் தான்..அதுலயும் 4 பேர் தான் தமிழ்...ஆனா வாரவாரம் கெட்-டூகெதர் ன்ற பேருல யார் வீட்டுலாவது ஓசில நல்ல சாப்பாடு போடறாங்க..
வந்த முதல் வாரமே இங்க இருக்க ஒரு ஆசிய ரெஸ்டாரென்டுக்கு போனோம்...மெனு கார்ட்ல இருந்தது எல்லாம் தாய், மலாய் அயிட்டங்கள்...இந்திய உணவு நான்கோ ஐந்தோ தான்...சமோசா, கொஃப்தா, ராகுல் ஜோஷ்னு பேரு வச்சு ஒரு டிஷ். அப்புறம் பேரு வாயில நுழையாத இரண்டு டிஷ்...'நாண்' வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் முன்னால் ஆர்டர் பண்ணனுமாம்...
பக்கத்துல 'V' இருக்க அயிட்டம் மெனுகார்ட்ல மொத்தமே 3 தான்...அதுல ஒரு மீன் அயிட்டத்தை அவன் எப்படி சைவமா மாத்தி தருவான்னு தெரியாம வாய்ல பேரு நுழையாத ஒரு டிஷ் ஆர்டர் பண்ணியாச்சு....
அதுக்குள்ள சமோசாவை என்ன கொடுமை பண்ணி வச்சிருக்காங்களோனு அதை ஒரு ப்ளேட் கொண்டு வர சொன்னோம்...அவன் கொண்டு வந்த ச்மோசாவிலேயே பசி அடங்கிடுச்சு..அவ்வளவு சூப்பரா எப்படி தான் செய்தானோ...நம்ம ஊருக்கு வந்து சமோசா செய்யறதை மட்டும் நல்லா கத்துக்கிட்டு வந்தவன் போல...
சமோசாவால வாயை அடைச்சவன் பின்னாடியே அதுக்கு ஒரு சட்னி கொண்டு வந்தான்...காரத்துல எங்களை திக்கு முக்காட வச்சிட்டானுங்க...நம்ம ஊர் ஆந்திரா மெஸ் சட்னியெல்லாம் தோற்றுவிடும்...அவ்வளவு காரம்... வெங்காயம், மிளகாய் மசாலா எல்லாம் போட்டு சூப்பரா பண்ணியிருந்தான்.....அதுலயும் கூட வந்த இரண்டு ஆந்திரா பசங்களுக்கு இத்தனை நாள் கழிச்சு இவ்வளவு காரமா சாப்பிட்டதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...
சமோசா காலியானாலும் அந்த சட்னியை சும்மாவே தொட்டு நக்க ஆரம்பிச்சிட்டோம்..அந்தளவு எங்களை மயக்கிடுச்சு...
அடுத்தது அந்த பெயர் தெரியாத அயிட்டம் பெரிய ஆப்பு.....கத்தரிக்காயும் பன்னீரும் போட்டு உப்பில்லாம கொண்டு வந்தான்....வாயில வைக்க முடியல....மறுபடியும் அந்த சட்னி தான் காப்பாற்றியது...அவன் கொடுத்த அரை ப்ளேட் சாதத்துல அந்த சட்னியை கலந்தடித்து பாதி வயிறு நிரம்பியது....
வயிறு நிரம்பவில்லையென்றாலும் நம்ம ஊர் சாப்பாடு என்ற மனத் திருப்தி தான்...
இங்கு இன்னொரு நலல விஷயம்...வாரவாரம் கெட்-டூகெதர் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுகிறார்கள்...நேற்று தக்காளி ரசம்...ஒரிஜினல் ஆந்திரா ஊறுகாய்...
இன்னும் இரு வாரங்களில் அர்ஜெண்டினா போக ஒரு ப்ளான் போட்டு இருக்கோம்...இப்படி கம்பெனி காசுல ஊர் சுத்தினா தானே உண்டு...நாம என்னைக்கு நம்ம காசுல இங்கெல்லாம் வரப் போறோம்!!!
கப்பி | Kappi 13 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
கடைசிப் பக்கங்களுக்காக...மதுமிதா!!
வலைப்பதிவர் பெயர்: கப்பி பய
வலைப்பூ பெயர் : கப்பி பய
சுட்டி(url) :http://kappiguys.blogspot.com
ஊர்: காஞ்சிபுரம்...இப்பொழுது இருப்பது மாண்டிவிடியோ
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிளில் எதையோ தேடும் போது முதலில் ஒரு தமிழ் திவைப் பார்த்தேன். அது வரை ஆங்கில பதிவுகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன..
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : இருங்க பார்த்து சொல்றேன்...விய வருடம்,.சித்திரை 8...அன்றைக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் போல் வேலையே இல்லாமல் பயங்கர வெட்டி....வழக்கம் போல் தமிழ்மணத்தை திறந்து ஒவ்வொரு பதிவா படிச்சு மதியம் வரை பொழுதைக் கழித்தேன்...சிறிது நேரத்தில் அடி மனசு ஆசை திடீரென வெளியில் வந்து தலையில் தட்ட இந்த பதிவை ஆரம்பித்தேன்...
இது எத்தனையாவது பதிவு:16...கத்துக்குட்டிங்கோவ்
இப்பதிவின் சுட்டி(url) : http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_09.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஏற்கனவே சொன்னது போல் எழுத வேண்டும் என்ற அடி மனசு ஆசை தான்
சந்தித்த அனுபவங்கள்:பல துறைகளில் பல வகையான பதிவுகள்....ஆச்சரியமூட்டும் தகவல்கள்..குழாயடிச் சண்டைகளுக்கு நிகரான பதிவர்களின் சண்டைகள்..தனி நபர் தாக்குதல்கள்...பல விவாதங்கள், வாக்குவாதங்கள்...
பெற்ற நண்பர்கள்:யாவரும் கேளிர்...
கற்றவை: கையளவு...
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்...நினைத்ததை எழுத முடிகிற சுதந்திரம்...யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள் என்ற தைரியம்..
இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து பதிவது...
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
நன்றி!!
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை பொது
பேர் சொல்லும் பிள்ளைகள்
படிக்கற காலத்துல பல பேருக்கு பல பட்டப்பெயர்கள் வச்சாலும் சில பேருக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பெயர் பச்சக்குன்னு ஒட்டிக்கும். .சொந்த பேரு அவனுங்களுக்கே மறந்து போற அளவுக்கு எல்லாருமே பட்டப்பெயரை வச்சு கூப்பிடுவாங்க...இந்த பெயர்களுக்கு அவனுங்க காப்பிரைட்டே வச்சிருக்கானுங்க... அந்த பட்ட பெயர்கள்ல பலது வெளியே சொல்ல முடியாது...சென்ஸார்ட்...அதுல சொல்ல முடிந்த பெயர்களில் எனக்கு ஞாபகம் வந்ததை இங்க போட்டிருக்கேன்...
சிறுவன்-பால் வடியும் முகத்தோட பத்தாம் கிளாஸ் பையன் மாதிரி இருப்பான்..
புலாஸ்-புலாசுலாக்கியோட ஷார்ட் ஃபார்ம்....ஆக்சுவலா அவனே உயரத்துல ஒரு ஷார்ட் ஃபார்ம் தான்..
மூனடியார்-நாலடியார் தம்பி..புலாஸை விட சின்ன பையன்
சுள்ளான்-ஆள் நாலடி இருந்தாலும் அவன் செய்கிற சில்மிஷங்களுக்காக..
காய்-காரணம் சொல்ல முடியாதுங்கோவ்
லோ ஹிப் - பேண்ட் இடுப்புலயே நிக்காது!!
அலெக்ஸ் - வாத்தியார் பெயரை பையனுக்கு வச்சு அவனை அசிங்கப் படுத்தியாச்சு!!
டோப்பு- கஞசா குடிக்கி மாதிரி அரைத் தூக்கத்துலயே திரிவான்
கும்தாஜ்-மும்தாஜ்க்கு போட்டியா களமிறக்கப்பட்டவன்.
கப்பை- ஃபீல்டிங் மிஸ் பண்றதை கப்பை-னு சொல்லுவோம்...ஆனா இவனுக்கு அந்த பேரு ஏன்னு பெயர்க்காரணம் மறந்து போச்சு
அங்குச்சாமி-அவன் 1st இயர் ரூம்ல இந்த பேரை யாரோ கிறுக்கி வச்சிருந்ததால அவனுக்கும் இந்த பேரு
தாத்தா-நோயாளி...வாரத்துக்கு ஒரு தடவை வயிறு பிரச்னை பண்ணி சாகற நிலைமையில இருந்தவன்..எதுன்னாலும் ரொம்ப பொறுப்பான பதில் சொல்பவன்.
கனல்-விளையாடும் போது பந்தை காட்டான் மாதிரி எறிவான்..
வேல் கொப்பரை-மனசுல விவேக் ஓபராய்னு நினைச்சுக்கிட்டு சுத்துனா இந்த பேரு தான் மிஞ்சும்
மொன்னை-மத்தவங்கள அவன் மொன்னைனு கூப்பிட்டு ஆரம்பிச்சு அவன் பேரே மொன்னை ஆயிடுச்சு....இது தான் பாப்புலர் பெய்ர்..காலேஜ்ல பாதி பேருக்கு அவன் உண்மையான பெய்ர் தெரியாது.
ஆபிசர்-பொறுப்பானவன், பண்பானவன்
ஷில்பன்-as in சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்...இந்த பேரு பசங்களுக்கு வச்சதில்லை...யாருக்கு வச்சதுன்னு சொல்ல மாட்டேன்!!
டிங்கு - அவன் நடை அப்படி
நாய் - ராய்-னு பேரை வச்சிகிட்டு மதுரைல சுத்தினா நல்லா இருக்குமா..அதான் நாய்னு மாத்தியாச்சு
ஓடுகாலி - ஹாஸ்டல்ல எல்லா ரூம்லயும் படுத்து தூங்கற ஜீவராசி
தக்காளி - கொழுக் மொழுக்
பயில்வான் - அவ்ளோ பலசாலி..பேட் கூட தூக்கமுடியாது.
கொசு-பயில்வானுக்கு போட்டியா உடம்பு வச்சிருக்கவன்
டான் - இருப்பதிலேயே கேவலமான பெயர். மனசுல தன்னைப் பத்தி ரொம்ப ஓவரா நினைச்சுக்கிட்டு திரிஞ்சவனுக்கு வச்ச பேரு...பிற்காலத்தில் இது ஒரு கெட்ட வார்த்தையா மாறிடுச்சு...இந்த பேரை வச்சு மத்த பசங்கள கூப்பிட்டா அவனுங்களுக்கு ம்கா கேவலம்
மாஸ்டர் - சின்ன டான்.
இன்னும் பல பேரு இருக்கு...ஆனா இதெல்லாம் தான் டக்குனு ஞாபகத்துக்கு வந்தது. படிக்கற காலத்துல தான் இப்படின்னா வேலைக்கு சேர்ந்த அப்புறமும் பேர் வைக்கிற பழக்கம் போகல..
தல - வயசுல பெரியவர்..யார் வேணும்னாலும் ஓட்டலாம்..அவிக்கலாம்...
கேப்டன்-மதுரைக்கார தல
சல்லி-சல்லித்தனமாக நடக்கும் PL
பெரிய சல்லி-அதைவிட சல்லித்தனமான GL
கில்லி - இவங்க இரண்டு பேர் நடுவில சிக்கினாலும் எல்லாத்துலயும் எஸ்கேப் ஆகும் PM
குட்டி சல்லி-சல்லியோட சிஷ்யன்
இது மாதிரி அடுத்தவனுக்கு பேர் வைக்கிற சுகமே தனி தான்..
கப்பி | Kappi 4 பின்னூட்டங்கள்
உருகுவே - வேட்டிய உருவுமா??
என் இனியத் தமிழ் மக்களே
உங்கள் பாசத்துக்குரிய கப்பி பய இன்று முதல் உருகுவேயிலிருந்து...
வரும்போது சொல்லாம வந்துட்டேன்...கோவிச்சுக்காதீங்க..
கிட்டத்தட்ட 45 மணி நேரமா உட்கார்ந்தே இருப்பதால் பயங்கர களைப்பு...என் பயணக் கட்டுரையை பார்ட் பார்ட்டா பொறுமையா அப்புறமா எழுதறேன்...கவலைப்படாதீங்க...
இங்க வேற ஸ்பானிஷ் கீ போர்ட் கொடுத்துட்டாங்க...தடவி தடவி அடிக்க வேண்டியிருக்கு...இங்க செட்டில் ஆனதுக்கப்புறம் என் சோகக் கதைய ஆரம்பிக்கறேன்..
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
புரளி!!! ('சினிக்கூத்து' பதிவு)
புரோட்டா வாங்கிக் கொடுத்து புரளி கேக்கற இந்த காலத்துல தானா வந்து காதுல விழுந்த மேட்டரு...
உங்க கிட்ட சொல்லாம இரண்டு நாளா ஒழுங்கான தூக்கம் இல்ல...
கர்நாடகாவுல பெங்களூரிலிருந்து 150 கி.மீ-ல காற்றாலை ஒன்னு இருக்கு. அதுல நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான ராட்சத காற்றாலை விசிறி ஒன்னு இருக்கு (ஒரு விசிறிக்கே ஒரு கோடி ஆகுமாம்...விசிறிகள் கவனிக்க.)
அந்த விசிறில 'R.S.Surya' என்று எழுதி இருந்ததை 'Surya Jothika' என்று மாத்திட்டாங்களாம். இது அந்த ஏரியால வேலை பார்க்கிற நம்பத்தகுந்த வ்ட்டாரம் சொன்ன த்கவல்.
இந்த பதிவினால் ஏற்படப் போகும் நன்மைகள் பற்றி தெரியாமல் "யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..இதையெல்லாம் ஒரு பதிவா போடனுமா" என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவினால் ஆன பயன்...
1.சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம். வெடி வெச்சு கொண்டாடலாம்.
2.சூர்யாவையோ ஜோதிகாவையோ ஒரு தலையா காதலிச்ச யாராவது தூக்க மருந்தாலோ தூக்கு கயிராலோ தங்கள் காதலை அமரக் காதல் ஆக்கலாம்.. கடைக் காரர்களுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் மக்கள் தொகையும் குறையும்.
3. மேற்சொன்னவர்கள் மற்றும் ரசிகர்கள் என திரிபவர்கள் மனம் மாறி தங்கள் பொழப்பைப் பார்க்கப் போகலாம்.
4. ஏதாவது பத்திரிகை நிருபர் இதைப் படித்துவிட்டு தானே கண்டுபிடித்த செய்தியாக தன் பத்திரிகையில் வெளியிடலாம். இதனால் பல லட்சம் வாசகர்கள் பயனடையலாம்.
5. இந்த பதிவிற்கு அடிக் கணக்கு (ஹிட் கவுண்ட்!!!) அதிகமாகலாம்.
6. இதைப் படித்து இம்ப்ரெஸ் ஆகிய ஆண்கள் சூர்யா அளவிற்கு காற்றாலை விசிறி இல்லாவிட்டாலும் தங்கள் வீட்டு டேபிள் ஃபேனுக்கு தங்கள் காதலி (அ) மணைவியின் பெயரை வைக்கலாம்.
இப்படியெல்லாம் காரணம் சொன்னாலும் மனசாட்சி உள்ள இருந்து கத்துவது நிற்க மாட்டேங்குது..."போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைச்சு உருப்படற வழியப் பாருங்கப்பு...பொழப்பப் பாக்காம புரளி பேசிட்டு திரியறானுவ"
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை சினிமா
ப்ளஸ்-2 கவிதைகள்
இந்த பதிவில் இடப்போகும் கவிதைகள் நான் பள்ளிக்காலத்தில் எழுதியவை. அவை பற்றி நானே மறந்திருந்த நிலையில் இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்கையில் அந்த பழைய கவிதைப் புத்தகம் கிடைத்தது. இப்போது படித்துப் பார்க்கையில் 'சின்னப் புள்ள தனமாக"த் தான் இருக்கிறது. ஆனால் மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் மனனம் செய்விக்காமல் லெமூரியா-வில் ஆரம்பித்துப் பல தகவல்களைச் சொன்னதோடு தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை வாசிக்கத் தந்த என் தமிழ் ஐயா அருள்ராஜ் தான் நினைவுக்கு வருகிறார்.
நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கல்லூரியில் எங்கள் துறையின் மாத இதழில் எனக்குத் தோன்றுவதை கவிதை என்ற பெயரில் எழுதி வந்தேன். அந்த இதழின் பொறுப்பும் எங்களிடமே இருந்ததால் (உயிர் நண்பன் தான் எடிட்டர்) எந்த கவிதையும் நிராகரிக்கப்பட்டதும் இல்லை. இதில் எனக்கே ஆச்சரியமான விஷயம் சில கவிதைகளுக்குப் பாராட்டுக்கள் வந்தது தான்.
கல்லூரி முடிந்தபின் வாசிப்பு அதிகமானதும் தான் கவிதை எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. சுயமதீப்பிட்டிலேயே என்னுடைய கவிதைகள் பாவப்பட்ட நிலையில் இருந்ததால் கவிதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.
கீழே உள்ள் கவிதைகள் அனைத்தும் நான் 11, 12-ஆம் வகுப்புகளில் படித்த போது எழுதியவை. இப்போது அவற்றைப் படிக்கும்போது பல கவிதைகள் ஏற்கனவே எங்கேயோ படித்து வார்த்தைகளை மட்டும் மாற்றி எழுதியிருப்பது போல் தோன்றுகிறது(அப்போது அப்படி தோன்றியதில்லை!!).
நாற்பது பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருந்தாலும் அவற்றில் தேறியதாக நான் கருதுவதை மட்டும் இங்கு இடுகிறேன்.
கற்றவன் ஒதுங்குகிறான்
கல்லாதவன் பதுங்குகிறான்
அரசியல்வாதியைக் கண்டு!
பதிவில் இடலாம் என்று தைரியம் தந்த இந்த கவிதை(?) பத்தாவது பக்கத்திலதான் கிடைத்தது.
ஒரு நாள் தமிழ் வகுப்பில் ஐயா பத்து நிமிடங்கள் கொடுத்து அதற்குள் நான்கு வரியில் ஒரு கவிதை எழுத சொன்னார். அப்போது நான் எழுதியது கீழே.இதை அப்போது எழுதியபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியும் பெருமையும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
எந்தப் பாம்பு கடித்ததோ..
வானில் எங்கும் நீலம்!
வாயில் நுரை தள்ளியதோ..
அங்கே வெண்மேகம்!
அதே போல் பெரும்பாலான சமயங்களில் சமூக,அரசியல் சார்ந்த கருத்துக்களையே கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன்.
அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியும்
மாணவனின் பாடப் புத்தகமும்
ஒன்றுதான்!
இரண்டுமே பல சமயங்களில்
மறக்கப்படுகின்றன!
எல்லா கவிதைகளுமே வார்த்தைகளை வரிகளாக உடைத்துப்போட்டு எழுதியவையாகவே இருக்கின்றன.
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஒரு கவிதையின் பகுதி....
குழலினிது யாழினிது வேண்டாம்!
இனியாவது குழந்தைகளை
இனிமையாய் வளர்ப்போம்!
இதையெல்லாம் விட வாக்குமூல கவிதை ஒன்று இருக்கிறது... எனக்கே இப்போது படிக்கையில் சிரிப்பு வருகிறது...பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பத்தில் இதை எழுதி வைத்திருக்கிறேன்...எந்த சூழ்நிலையில் எழுதினேன் என நினைவில்லை..
கற்பனை வறண்டு போகவில்லை
கவிமிகு சொல்லுக்குப் பஞ்சமில்லை
எண்ணும் மனதிலும் குழப்பமில்லை
ஆயினும் என்ன செய்வது
எனக்கு எழுத வரவில்லை!!
இதற்குப் பிறகும் இருபது பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். பல கவிதைகள் கப்பித் தனமாக இருக்கின்றன. ஒரு காதல் கவிதை கூட இல்லை.
இந்த பதிவில் நான் கவிதையென குறிப்பிட்டுள்ள அனைத்தையுமே அப்போது எழுதியதில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வார்த்தைகளுடன் அதே வடிவத்துடன் இங்கு இட்டிருக்கிறேன்.இவை எந்த இலக்கணத்தைக் கொண்டும் எழுதியவை அல்ல. தோன்றிய கருத்துக்களை, வார்த்தைகளை உடைத்துப் போட்டு கவிதை என்று ஆர்வக் கோளாறினால் எழுதி வைத்ததாகவே கருதுகிறேன்.
இந்த கவிதைகளை எழுதியதற்கும் அதற்கென ஒரு பதிவு இட்டதற்க்கும் என்னை நானே மன்னித்துக் கொள்கிறேன்.
கப்பி | Kappi 5 பின்னூட்டங்கள்
வகை கவித..
உருகுவே - வேட்டிய உருவுவேன்
ஊரு பேரே பயமுறுத்துது...
அடுத்த வாரம் உருகுவே போறேன்..ஒரு ஆறு மாசத்துக்கு மாண்டிவிடியோல இருந்து தான் தமிழ்ச் சேவை...
உருகுவேயில் தமிழ்ப் பதிவர்கள் யாராவது உள்ளனரா?? தெரிந்தால் சொல்லுங்கள்..
இந்தப் பதிவை அர்ஜெண்டினாவிலிருந்து பார்த்திருக்கிறார்கள்...உருகுவேயில் இருந்து ஹிட் இல்லை...
அப்புறம் எந்த கட்சிக்காவது தென் அமெரிக்கப் பிரதிநிதி தேவைனா சொல்லுங்க.... ஆஃபரைப் பொறுத்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து வாங்கிய பணம் தீரும்வரை கட்சியின் கொள்கைக்காகப் போராடுவேன்....
அங்க போனதும் எவனாவது ஒரு டாக்ஸிகாரன் "ஸ்பானிஷ் தெரியாத நீயெல்லாம் எதுக்கு இங்க வந்த?"-னு கேக்காம இருக்கனும். அது தான் இப்போதைக்கு ஒரே கவலை!!
கப்பி | Kappi 9 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
கையூட்ட்ட்ட்டுடுடுடு!!!!!!!
சொந்தக் கதையும் சில புரிதல்களும் சந்தேகங்களும் ...
கையூட்டு (எ) லஞ்சம் இருக்கக் கூடாதுன்றது நம்ம லட்சியங்கள்ல ஒன்னு...
'காசு கொடுக்காம ஒன்னுமே நடக்காது' என்று எல்லாரும்(?!) ஒருமித்த கருத்து கொண்ட வ.போ.அ ல நடந்த சம்பவம் முதல்ல...
எல்.எல்.ஆர் எடுக்க போனபோது போக்குவரத்து விதிகளைப் பத்தி ஒருத்தர் வந்து பேசிட்டு, பரிட்சை வச்சாங்க...எல்லாம் முடிச்சு வெளியே வரும்போது ஒருத்தர் 'கொடி நாள்' கலெக்ஷன் பண்ணிட்டு இருந்தாரு...
எனக்கு பெரிய குழப்பம்..."இது உண்மையாவே கொடி நாள் நிதிக்கு தானா...இல்ல இவனுங்க ஆட்டைய போட்றுவாங்களா"-னு யோசிச்சுட்டு இருக்கும்போதே அவரு என்கிட்ட ஒரு ரசீதை நீட்டினாரு..
நான் மெதுவா என்கிட்ட காசு இல்ல-னு சொன்னவுடனே அவரு "கொடுங்க தம்பி...கொடி நாளுக்கு தானே கேக்கறோம்"-ங்கிறாரு...அதுவும் குறைஞ்சது 30 ரூபாய் தரணுமாம்...இது உண்மையாவே கொடி நாளுக்கா இல்ல லஞ்சமா-னு தெரியாமலே 30 ரூபாய் கொடுத்துட்டு வந்தேன்...
வீட்டுக்கு வந்து என் நண்பனிடம் இதை சொன்னா "அவங்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல..எந்த நாளும் கொடி நாள் தான்"-ன்னு சுகி சிவம் ரேஞ்சுக்கு பேசறான்...
லைசென்ஸ் வாங்றதுக்கு டிரைவிங் ஸ்கூல் கார் ஓட்ட கத்துக்கிட்டு அவங்க மூலமா வாங்கினதால லஞ்சம் எதுவும் கொடுக்கல-ன்னு ஒரு திருப்தி...
("நம்ம சார்பா டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கொடுத்திருப்பாரோ??"
"ச்சீ ச்சீ இருக்காது")
அடுத்தது அடிக்கடி நான் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சம்பவம்...
கல்லூரியில நான்காவது வருடம் படிக்கும் போது நாலு பசங்க ஒன்னா சேர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தோம்...கொஞ்ச நாட்கள் அப்புறம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு ஒருத்தர் வந்தாரு...
"உங்க அப்ளிகேஷன்லாம் வெரிஃபிகேஷனுக்கு ஸ்டேஷன் வந்திருக்கு தம்பி" (ச்சே..ச்சே..எத்தனை 'ஷ')
"அப்படிங்களா...பாத்து அனுப்பிடுங்க..தேங்க்ஸ்ங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் தம்பி..அதுக்கு முன்னாடி சில ஃபார்மாலிட்டீஸ் இருக்குப்பா"
"நாங்க எதுனா கையெழுத்து போடனுங்களா??"
"அதில்லப்பா...உங்க நாலு பேரோட டாகுமெண்ட்ஸ்தான் வந்திருக்கு. இதுக்காக தான் நான் ஸ்டேஷன்ல இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கேன் (அரை கிமீ பாஸூ..) அது ம்ட்டுமில்லாம எஸ்.ஐ கையெழுத்து போட்டதும் நான் தான் பாஸ்போர்ட் ஆபீஸ் கொண்டு போய் கொடுக்கனும்...அதுனால ஃபார்மாலிட்டீஸ்லாம் பாத்து முடிச்சுடுங்க"
(அடப்பாவிகளா லஞ்சம் கொடுக்கறது ஃபார்மாலிட்டியா....)
"என்ன ஃபார்மாலிட்டி சார்"
"ஒருத்தருக்கு 400 ரூபா செலவு ஆகும்பா"
சொல்லி முடிக்கறதுக்குள்ள பக்கத்துல இருந்த 2 பேரு பணத்தை எடுத்துட்டு வர போய்ட்டானுங்க....
நானும் இன்னொருத்தனும் மட்டும் நிக்கறோம்...
"இல்ல சார்..பரவாயில்ல...ஃபார்மாலிட்டி-லாம் கொடுக்கறது இல்ல"
"என்ன புரியாம பேசறீங்க..எல்லாரும் கொடுக்கறது தானே"
"இருக்கட்டும் சார்"
"உங்களுக்காகத்தான் தம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்"
"இல்ல சார்.. கொடுக்கறது இல்ல"
அதுக்குள்ள மத்த 2 பேரும் ஆளுக்கு 300 ரூபாயை எடுத்து நீட்டிட்டாங்க
"அப்போ உங்களுக்குத் தான் லேட்டாகப் போகுது...வர்றேன்"-னு கிளம்பிட்டாரு...
கொடுத்த 2 பேரும் "டேய் நீங்க 2 பேரும் கொடுக்க வேண்டியது தானே...இப்போ உங்க 2 பேரோட சேத்து காசு கொடுத்த எங்களோடதும் நிறுத்தி வச்சுட்டா என்ன பண்றது"-னு முறைக்கறானுங்க..
"அதெல்லாம் கரெக்டா நடந்துப்பாங்க..உங்களோடது முதல்ல வந்துடும் விடுங்கடா"-னு அவனுங்கள தேத்தி அனுப்பியாச்சு...இருந்தாலும் மனசுல ஒரு சின்ன குறுகுறுப்பு...என்ன தான் நடக்கும்னு...
2 வாரம் கழிச்சு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டு விட்டாங்க...அங்க போனா எஸ்.ஐ ஐடி கார்டை வாங்கி பார்த்துட்டு வெரிஃபிகேஷ்னை முடிச்சுட்டு அனுப்பிட்டாரு...ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுவும் இல்ல!!!
பாஸ்போர்ட்டும் 1 மாசத்துல வந்துடுச்சு...காசு கொடுக்காம வேலை ஆகும்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாச்சு
அடுத்தது நான் முழு சுயவுணர்வுடன் லஞ்சம் கொடுத்த கேவலம்....
பொதுவாகவே போக்குவரத்து காவலர்கள் தான் வசூல் ராஜாக்கள்...
என் சித்தப்பா ஒருத்தரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் தான்....இது மாதிரி மடக்கி காசு வாங்கறதுக்கு கேவலமான ஒரு சப்பைக்கட்டு காரணம் சொல்வாரு...
"ஒவ்வொரு தடவையும் நாங்க மடக்கி பிடிச்சு ரூல்ஸ்படி அவனை ஃபைன் கட்ட சொன்னா எவனும் மதிக்க மாட்டான்...நாங்க காசு வாங்கறதால 'இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு பேசாம லைசென்ஸ், இன்சூரன்ஸ் எடுத்துடலாம்'-னு ஒழுங்கா இருப்பாங்க"
லாஜிக் சகிக்கலை....
விஷயத்துக்கு வருவோம்....வண்டி வாங்கின புதுசுல கொஞ்ச நாள் ஆர்.சி புக் வராம இருந்துச்சு... ஒரு நாள் நைட் ஷோ படம் பாத்துட்டு மவுண்ட் ரோட்ல இருந்து வடபழனி ரூம் வரைக்கும் சிக்காம வந்தாச்சு...
வீட்டுக்கு வந்த்தும் ஒருத்தன் ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாப்ல விட சொன்னான்...
வடபழனி சிக்னல்ல கண்டிப்பா நம்ம ஆட்கள் இருப்பாங்க-ன்னு ஒரு குறுக்கு சந்துக்குள்ள போனா அந்த முட்டு சந்துல லைட் எல்லாத்தையும் அணைச்சுட்டு ஜீப்ல இருக்காங்க...
வண்டிக்குள்ள எஸ்.ஐ...வெளிய 3 பி.சி..
முன்னாடி நின்ன ஏட்டு வண்டிய நிறுத்தி டாகுமெண்ட்ஸ் எடுக்க சொன்னாரு...இருந்தாதானே எடுக்கறதுக்கு....
"வண்டி போன வாரம் தான் சார் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கு...டாகுமெண்ட்ஸ் ஊர்ல இருக்கு சார்"
"ஏன் தம்பி, சர்க்கரை-னு கைல எழுதி நக்கினா தித்திக்குமா...வீட்டுல டாகுமெண்ட் வச்சுக்கிட்டு வண்டிய எதுக்கு எடுத்த?? உன் வண்டி தான்னு எப்படி தெரியும்?"
"வண்டி வெளிய எடுக்கறது இல்ல சார்...ஃப்ரெண்டு ஊருக்கு போகனும்கறதால லேட் ஆயிடுச்சேன்னு கொண்டு வந்தோம் சார்..பக்கத்து தெருல தான் சார் வீடு"
"அதெல்லாம் தெரியாதுப்பா..வண்டிய ஓரமா விட்டுட்டு போ...நாளைக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி வண்டிய எடுத்துக்கோ"
இங்க தான் நம்ம அறியாமை தலை விரிச்சு ஆடுது.... வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லைனா கோர்ட்டுக்குத்தான் போகனுமா இல்ல ஸ்பாட் ஃபைன் எதுனா இருக்கா?? ...ரூல்ஸ் எதுவும் தெரியாம அவர்ட்ட என்ன பேசறது...
"சாரி சார்...இனிமே வண்டி எடுக்க மாட்டோம் சார்"
"அதெல்லாம் பேசிட்டு இருக்காதப்பா..வண்டிய விட்டுட்டு போ"
"சார் ஸ்பாட் ஃபைன் எதுனா இருந்தா.."
"சார்...இவங்க ஃபைன் கட்டறாங்களாம்...சாரைப் போய் பாருங்கப்பா"
மனசுக்குள்ள ஃபைன் கட்ட உண்மையாவே ஏதோ ரூல் இருக்கனுமே-னு நினைச்சுக்கிட்டே எஸ்.ஐ பக்கத்துல போய் நின்னோம்..
"200 ரூபாய் எடுங்கப்பா"
"200 ரூபாயா"
"இவங்க வேலைக்கு ஆக மாட்டாங்க ..வண்டி சாவிய கொடுத்துட்டு போங்கப்பா"
ஏட்டு எங்களிடம் பக்கத்து வண்டி காரரை காட்டி "இதோ இவரும் 200 ரூபா கொடுத்துட்டு தானே போறாரு....இல்லனா வண்டிய விட்டுட்டு போங்கப்பா"
இன்னைக்கு கொள்கைக்கு விரோதமா நடக்க வேண்டி இருக்கேன்னு ஃபீல் பண்ணிகிட்டே 100 ரூபாய் எடுத்து
"அவ்ளோதான் சார் இருக்கு"-ன்னு நீட்டினேன்...
வண்டிய விட்டுட்டு போகலாமா-னு யோசிக்க கூட இல்ல...
"இன்னும் 50 ரூபா கொடுப்பா"
"ஊருக்கு போறதுக்கு காசு இல்ல சார்"
"சரி சரி பாத்து போ"
"தாங்க்ஸ் சார்"
உச்சகட்ட கேவலம்...மனசாட்சி ரத்தக்கண்ணீர் விட்டு அழுவுது...
லஞ்சம் கொடுக்கறதை கேவலம்னு பேசிட்டு அதையே செய்துவிட்டு நிற்கும் மகா கேவலம்...
சத்தியமா ரொம்ப ஃபீல் பண்ணினேன்..நம்புங்க...
அடிப்படையா வண்டி ஓட்றவன் தெரிஞ்சுக்க வேண்டியது...வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லனா கோர்ட்டுக்குத் தான் போகனுமா..இல்ல சட்டப்படியான ஸ்பாட் ஃபைன் எதுனா உண்டா...அதுக்கூட தெரியல..
பாஸ்போர்ட் விஷயத்துல கொடுக்க முடியாது-ன்னு சொன்ன என்னால இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியல..
இந்த சம்பவங்க்ளில் இருந்து என் அறிவுக்கெட்டிய விஷயங்கள்:
>> லஞ்சம் கேட்டு நாம முடியாது-ன்னு சொன்னாலும் வேலை நடக்கும்...என்ன கொஞ்சம் தாமதம் ஆகலாம்
>> நம் மேல் எந்த தப்பும் இல்லாத போது நம்மால் தெளிவாக இருக்க முடிகிறது
>> லஞ்சம் வாங்க, கொடுக்க எல்லாருமே ஏதாவது justification வச்சிருக்காங்க.
>> லஞசம் கொடுக்கறோம்-னு தெரியாமலேயே பல இடங்களில் நாம் அந்த இழி செயலை செய்து கொண்டிருக்கிறோம்
>> லஞ்சம் வாங்குபவர்கள் கொடுக்கத் த்யாராக இருக்கிறார்கள் and vice versa...
>> அடிப்படையான விஷயங்களில் கூட நம் விழிப்புணர்ச்சி அதள பாதாளத்தில் தான் இருக்கிறது.
>> தனிமனித ஒழுக்கம் தான் இது மாதிரி இழி செயல்கள் ஒழிய ஒரே வழி (அந்நியன் பட ஒன் லைனோ??)
இதுக்கு மேல ஒன்னும் சொல்லத் தோணல...ஒரே பீலிங்ஸூ...
பி.கு:
1. தலைப்பு மட்டும் கையூட்டுனு வச்சுட்டு மத்த இடத்துல லஞ்சம்-ன் எழுதினது ஏன்-னு தெரியல
2. சொன்ன எல்லா சம்பவங்களிலும் காவல் துறையே வந்ததுக்கு நான் பொறுப்பில்ல...இதுல எந்த உள்குத்தும் இல்ல..
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
"இந்தி தெரியாத நீயெல்லாம்...."
மொழிப் பிரச்சனையால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஆத்மாவின் கூக்குரல்...
தமிழையே மெட்ராஸ் தமிழ்,மதுரை தமிழ், எதுலயும் சேராத தமிழ்-னு எல்லாத்தையும் கலந்து பேசறவன் நான்...
மதுரைல காலேஜ் படிக்கும்போது 'மெட்ராஸ் பாசை பேசிட்டு திரியறான்'-வாங்க...லீவ்ல காஞ்சிபுரம் வந்தா இஙக இருக்கவனுங்க 'மதுர பாஷை நல்லா கத்துக்கிட்டியே மச்சி'-னு வெறுப்பேத்துவானுங்க....இவனுங்க நடுவுல மாட்டிக்கிட்டு மதுரை தமிழுக்கும் மெட்ராஸ் தமிழுக்கும் மாறி மாறி தவ்விகிட்டு இருந்தேன்..
நம்ம கூட்டத்துல வேற 'ஒவ்வொரு தமிழுக்கும்' ஒரு பையன் இருப்பான்...இவனுங்களுக்கு ந்டுவுல பெரிய identity crisis வ்ர்ற நிலைக்கே போயிட்டேன்...அதுக்கப்புறம் எல்லாத் தமிழையும் mix பண்ணி ஆளுக்கு ஏத்த மாதிரி பேச பழகிட்டேன்...
இதுக்கு நடுவுல ஃப்ரெஞ்ச்,ஜெர்மன் -னு ஆர்வக் கோளாறுல தத்தக்கா பித்த்க்கா-னு கத்துக்கிட்ட மொழிகளும் உண்டு...
ஆனா பிரச்சனை வந்தது இந்தியால தான்...
ஸ்கூல்ல ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் ஹிந்தி கத்துக்கொடுத்தாங்க.... இந்த 'தக்ஷின் பாரத்......சபா' வோட புக்கையே text book-ஆ கொடுத்து சொல்லித் தந்தாங்க...அவங்க கத்துக் கொடுத்த கணக்கு படி ப்ராத்மிக், மத்திமா(மத்த பேரு-லாம் மறந்து போச்சு!!) மாதிரி 5-வ்து லெவல் வரைக்கும் படிச்சாச்சு...
அந்த திமிர்ல இந்தி தெரியும்-னு சொல்லிக்கிட்டு திரிஞ்சுட்டு இருந்தேன்....
காலேஜ்லயும் இந்தி படத்துக்கெல்லாம் போனா நாம தான் translator.... படத்துல எதுவும் புரியலன்னாலும் நாமளே ஏதாவது டயலாக் சொல்லி சமாளிச்சுக்கலாம்..ஏன்னா கூட வர்றவங்க இன்னும் நம்மல நம்பிட்டுதான் இருப்பாய்ங்க...
காலேஜ் முடிச்சு மெட்ராஸ் வந்தப்புறமும் மெலொடி,ஈகா-னு போய் நம்ம இந்தி அறிவை வளர்த்துக்கிட்டிருந்தேன்....
இந்தி புலமைக்கு வந்துச்சு ஒரு சவால்...ஆபீஸ்ல இருந்து '2 மாசம் டெல்லிக்கு போய் குப்பை கொட்டுடா'-னு தொரத்திட்டாங்க...
கூட வந்த 3 பேருல ஒருத்தன் உண்மையாவே இந்தி நல்லா பேசுவான்...ஒருத்தன் என்ன மாதிரி..ஆனா படிக்கற காலத்துல எல்லாத்தையும் நல்லா மனப்பாடம் செஞ்சு வச்சுருந்தான்...
இன்னொருத்தர் சுத்தம்..அவருக்கு தெரிஞ்ச ஒரே மொழி மதுர தமிளு தான்...(ஒரு தடவை மனுஷன் தனியா டீக்கடைக்கு போய் 'ஆப் கோ ச்சாய்'-னு கேட்டு 10 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு அவன் இவரை கண்டுக்காம டீயே குடிக்காம வந்தாரு..)
கிதர்,கித்னா,கஹா,ரொட்டி, ச்சாவல் சாஹியே-னு உயிர் வாழத் தேவையான அளவு இந்தியை வச்சுக்கிட்டு maintain பண்ணிக்கிட்டு இருந்தேன்...
போகப் போக இந்தில பேசற confidence எக்குத்தப்பா அதிகமாயிடுச்சு... ஆட்டோ பேரம் பேசற வேலையே ஏத்துக்கிட்டாச்சு... எல்லா ஆட்டோலயும் மீட்டர் இருக்கும்..பெரும்பாலான ஆட்டோகாரங்க மீட்டர்லயே வருவாங்க...அதுனால ஆட்டோ புடிக்கறது ஈஸியா போயிட்டு இருந்தது...
வழக்கமா நொய்டா-ல இருந்து கன்னாட் ப்ளேஸ்-க்கு 70 ரூபா வாங்குவாங்க...ஒரு நாள் ஒரு ஆட்டோகாரன் மீட்டர்ல வர முடியாதுன்னுட்டான்...
"சாட்(60) ருப்யே சாஹியே"-னான்...அப்போ தான் மூளைக்குள்ள தூங்கிட்டிருந்த இந்தி அறிவு வெளிய வந்து சாட்-னா அறுபதா எண்பதா-னு பட்டிமன்றம் நடத்துச்சு...அவன் 80 ரூபா கேட்டு ஏமாத்த பாக்கறான்னு மண்டைக்குள்ள ஒரு பல்பு...நான் உடனே நமக்கு பழக்கப்பட்ட நம்பர் 'சத்த்ர்'(70)னேன்...
கூட வந்த இந்தி தெரிஞ்ச பய இத கேட்டு நீ பேரம் பேசினது போதும்னு அவன் பேச ஆரம்பிச்சான்..அதுக்குள்ள ஆட்டோ காரனும் முழிச்சுக்கிட்டு எழுபது ரூபாய்க்கு கம்மியா வர முடியாதுன்னுட்டான்...
'சரி..புதுசா 2 வார்த்தை கத்துக்கிட்டதுக்கு 10 ரூபாய்'னு மனசை தேத்திக்கிட்டேன்...
ஆனா அத விட பெரிய அசிங்கம் காத்துட்டிருந்தது அப்போ தெரியாது...
ஒரு வாரம் கழிச்சு கரோல் பாக் போக கிளம்பினோம்..2 பேரு முன்னாடியே அங்க போய் வெயிட் பண்ணிட்டிருந்தாங்க...
ஆட்டோல வழக்கம் போல நானே பேரம் பேசி கிளம்பியாச்சு... ஆட்டோல போகும்போதே அவனுங்க போன் பண்ணி 'Bikanirwala' -ன்ற ஸ்வீட் கடை முன்னாடி நிக்கறதா சொன்னாங்க...
ஆட்டோ சத்தத்துல அவனுங்க என்ன சொல்றாங்க-னு கேக்காம 'bikanwala' போகனும்-னு ஆட்டோகாரன்-ட சொன்னேன்...உடனே அவன் டென்ஷனா திரும்பினான்...
"அது bikanwala இல்ல...bikanirwala...நீ என்ன மெட்ராஸா?? இந்தி ஒழுங்கா தெரியாத நீயெல்லாம் இந்தியனா??"-னான் (சத்தியமா அவன் பேசினது புரிஞ்சுது)
வந்துச்சு கோபம்..."இந்தி தெரிஞ்சாதான் இந்தியனா...உனக்கு தமிழ் தெரியுமா...இங்க இருக்க இவ்வளவு இந்தி தெரிஞ்சா போதும்.."-னு எனக்கு தெரிஞ்ச இந்தில ஆட்டோல இருந்து இறங்குற வரை கத்திட்டு இருந்தேன்...(அத அவன் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை-ன்றது வேற விஷயம்)
'இப்ப என்னடா சொல்ல வர்ற?'-னு நீங்க கேக்கலாம்...
'நீ அசிங்கப்பட்டதுக்கு என்ன பண்றது'-னு உங்களுக்கு தோனலாம்...
ஆனா அந்த ஆட்டோகாரன் அப்படி பேசக் காரணம், இந்த சம்பவத்தோட impact, மொழி தெரியாத ஊரில் மனிதர்கள் படும் பாடு-னு பல sensitive issues இருக்கு...
அதனால moral of the story-ய நீங்களே பின்னூட்டத்துல போடுங்க...
கப்பி | Kappi 47 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
அதிமுக செய்த தவறுகள்
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னமே திமுக தான் ஜெயிக்கும் என ஒருமித்த கருத்து நிலவுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...
அதற்குள் முதல்வர் கலைஞருக்கு கடிதம் எல்லாம் வந்துவிட்டது...
அதிமுக-வின் தோல்விக்கு அல்லது திமுக-வின் (கூட்டணியின்?) வெற்றிக்கு காரணங்கள் என்ன?? அதிமுக சறுக்கியது எங்கே?...
2001-2004 அரசு
2001-2004 வரை அதிமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வென்றால் திரும்பவும் அதே போன்ற நிலை வராது என்பதற்கான நிச்சயமற்ற நிலையே நடுநிலையாள்ர்களும் கூட திமுக கூட்டணியை ஆதரிக்க வைத்திருக்கலாம்.
இந்த அரசின் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூட 2004-க்கு முந்தைய அரசை மறக்கத் த்யாராக இல்லை.
கூட்டணி
மதிமுக, விசி கூட்டணி எதிர்பார்த்த அளவு வோட்டு வாங்க உதவவில்லை. தலித் வோட்டுகள் சிதறின.
தென்மாவட்டங்களில் மதிமுக-வின் வோட்டு வங்கியும் போதவில்லை.மக்களிடையே வைகோ மேல் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரசாரம்
வைகோ தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பே பிரசாரத்தைத் துவங்கினாலும் கடைசி நேரத்தில் reinforce செய்யத் தவறிவிட்டார்.
அதே போல் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக பிரசாரம் செய்யாததும் தொண்டர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மாறன் குடும்பத்தைப் சுற்றியே வியூகம் அமைத்ததும் மக்களிடையே சலசலப்பை உண்டாக்கினாலும் அவை வோட்டுகளாக மாறவில்லை.
அதே போல் என்ன தான் சன் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் ஜெயா டிவியை விட சன் டிவியைத் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற முகத்திலறையும் உண்மை....
இலவசங்களை முதலில் நையாண்டி பேசிவிட்டு பின்னர் தானும் அறிவித்தது தோல்வி பயமாகச் சித்தரிக்கப்பட்டது.
'பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் ஏன் ஏற்கனவே செயல்படுத்தவில்லை' என்ற கேள்விக்கும் அதிரடியான பதில் இல்லை.
நடிகர்களை வைத்து பிரசாரம் செய்ததும் பயனளித்ததாகத் தெரியவில்லை.
'கருத்துக்கணிப்புகளில் ஜெயிக்கற கட்சிக்கு வோட்டு' என்று திமுக கூட்டணி proactive-ஆக பிரசாரம் செய்ய அதிமுக அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் வழிமுறை எதுவும் பின்பற்றவில்லை.
மத்திய அரசுடனான உறவு
மத்திய அரசுடன் சூமூகமான உறவு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது தாங்களே சொல்லிக்கொண்டது மக்களை யோசிக்க வைத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் இருந்தால் மத்திய அரசின் உதவிகள் நேரடியாகத் தமிழகத்துக்கு வரும் என்ற மாயையை உருவாக்கவே இந்த விஷயம் பயன்பட்டது.
அரசின் செயல்பாடு
சட்டமன்றம் ஆளுங்கட்சியின் செயற்குழு கூட்டம் போல் நடந்தது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மற்றும் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களின் செயல்பாடும் ஏமாற்றத்தியே அளித்தன.
மக்களுக்கு உதவக்கூடிய பல நல்ல திட்டங்கள் அரசு கொண்டுவந்தாலும் முந்தைய திமுக அரசின் திட்டங்களைக் கிடப்பில் போட்டது, அரசுப் பணியாளரிகள் வேலை நீக்கம், TASMAC, இது போல் பல விஷயங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.
அரசு மாற்றம்
மக்களிடையே ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு. இதை அதிமுக-வின் தவறு என குறிப்பிட முடியாவிட்டலும் இந்த அரசு மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தால் ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் யோசிக்க மாட்டார்கள்.
இது போக பல காரணங்கள் உள்ளன...சசிகலா குடும்பம், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவாக இல்லாதது, பல விஷயங்களில் அரசு கொண்ட சார்புநிலை...இது போல் பல...
இந்த தேர்தலை திமுக கூட்டணியின் வெற்றியாகக் கொள்ளாமல் அதிமுக-வின் தோல்வியாகக் காண்பதே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை பொது
ஜூவி ஆவி...திமுக கையில் சாவி...
திமுக கூட்டணி 207..
அதிமுக கூட்டணி 26..
பாஜக 1..
ஏற்கனவே ஜூ.வி-யின் கருத்துக்கணிப்புக்கு வைகோ தேவையான அளவு பப்ளிசிட்டி கொடுத்ததால் இந்த கணிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது...
எந்த கூட்டணிக்கும் க்ளீன் ஸ்வீப் கிடைக்காது என்று ஒருமித்த கருத்து பரவி வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜூ.வி கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 207 இடங்களில் முன்னணி எனக் கூறியுள்ளது...
disclaimer-ல் இருபது தொகுதிகள் வரை ரிசல்ட் மாறலாம் என்கிறார்கள்...
திமுக கூட்டணிக்கும் அமோக வெற்றி வாய்ப்பைக் கொடுத்தாலும் திமுக(117) தனித்து ஆட்சி அமைப்பது முடியாது என்றே கணித்திருக்கிறார்கள்..
பல தொகுதிகளில் நூலிழை முன்னணி என்றே இந்த கணிப்பில் குறிப்பிட்டாலும் திமுக-விற்கு இது 'லாஸ்ட் மினிட் அட்வான்டேஜை' தரும்...
அதிமுக ஆட்சிமுறை குறித்து அதிருப்தி அலை இல்லை என்றும், திமுக முன்னணிக்கு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதே திமுக முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது...2004 தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் மீதான கசப்பு நீங்காததும் காரணம்....
நாடாளுமன்ற தொகுதி வாரியாக வெளியாகியுள்ள இந்த கணிப்பு 2004 தேர்தல் போன்ற pattern-னே திரும்ப வரும் என்கிறது...இந்த 40-ல் அதிமுக கூட்டணி எந்த தொகுதியிலும் அது உள்ளடக்கிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னணியில் இல்லை...
சென்னையில் ராயபுரம், ஆர்.கே.நகர்,ஆலந்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுக முன்ன்ணி என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...ஆனால் பல தலைகளுக்கு இந்த கணிப்பு 'ஆப்பு' என் கூறியிருக்கிறது...
முக்கியமாக, விஜயகாந்த்...கட்சியில் அவர் மட்டுமாவது ஜெயிப்பார் என பரவலாக் கருதி வந்த நிலையில் கேப்டன் விருத்தாசலத்தில் இரண்டாவது இடம்!!!திமுக வோட்டைப் பிரிப்பார் என மற்ற கணிப்புகள் சொல்ல ஜூவி அவர் பிரிக்கப்போவது விடுதலை சிறுத்தைகள்,அதிமுக வோட்டுகளை என்கிறது...பன்ருட்டியாருக்கும் இரண்டாவ்து இடமே...
அதிமுக-விற்கு முன்னணி என்று குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் பலவும் புதுமுகங்கள் நிற்கும் தொகுதியே...பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என்றே கணிக்கிறது...
இடைத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளில் கூட கும்மிடிப்பூண்டியை மட்டுமே தக்க வைக்க முடிந்திருக்கிறது...காஞ்சியில் பாமக ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது...
தளியில் பாஜக வெல்லவும் அதன் வேட்பாளரே காரணம் என்கிறது கணிப்பு...
திமுக-விற்கு 132-ல் 117 தவிர , காங்கிரஸ் 48-ல் 44, பாமக 31-ல் 27, சி.பி.எம் 13-ல் 12, சி.பி.ஐ 10-ல் 7 என இந்த முன்னணியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது...
அதே நேரத்தில், அதிமுக 188-ல் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது...மதிமுக-வும் 35-ல் நான்கே தொகுதிகள் தான்...மதிமுக,விடுதலை சிறுத்தைகளுடனான கூட்டணி அதிமுக-விற்கு உதவியதாகத் தெரியவில்லை...
இவர்களில் 10 பேர் தனிக்கட்சி ஆட்சி என்றும் 5 பேர் கூட்டணி ஆட்சி என்றும் கணித்திள்ளனர்..
ஆனந்த விகடனில் வெளியாகியிள்ள வாசகர் கணிப்பிலும் 15 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் திமுக-வே வெல்லும் என கணித்துள்ளனர்.இவர்களிலும் பெரும்பாலான வாசகர்கள் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது...
இந்த வாசக்ர்கள் 2004-ல் திமுக ஆதரவாக 40-0 என கணித்தவர்கள் எனக் கொண்டாலும் ஜூ.வி-யின் கணிப்பும், நக்கீரனின் கணிப்பும்(206-28) குமுதம் ரிப்போர்டர்(145-80) கணிப்பும் கூட திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது...
திமுக கூட்டணி வென்றாலும் திமுக தனித்து ஆட்சி அமைக்க இய்லாது என்றே தோன்றுகிறது...
தமிழ்கம் கூட்டணி ஆட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது!!!
கப்பி | Kappi 1 பின்னூட்டம்
வகை பொது
பாம்ம்ம்ம்....பீம்ம்ம்....
'நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று...மதுரை வந்து சேந்துப்புட்டேன் இன்று' - என background intro song மனதுக்குள் ஓட கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடுதியில் கழித்த முதல் இரவு.....
தியாகராசர் பொறியியற் கல்லூரி....திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துல இருக்க Govt. Aided College.....
மிதமான ragging கலாசாரம் உள்ள கல்லூரி ( 1980s-ல rag பண்ணதுக்காக final year பையனை first year பையன் வெட்டி கொன்னது தவிர குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லை!!! )...
hostel வாழ்க்கை பத்தி கேக்கவே வேண்டாம்..... என்னைப் பொறுத்தவரை day scholars-ஆக கல்லூரியில் படிக்க நேர்ந்தவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள்.....
எல்லா கல்லூரிகளையும் போல் even semester வந்தா ஒரே ஆட்டம் தான்....college day, sports day, culturals day, hostel day,block day...அப்புறம் final year-னா extra-வா 3 மாடிக்கும் ஒவ்வொரு wing day....
இந்த எல்லா days-க்கும், மத்த விழாக்களுக்கும், tour-களுக்கும் பொதுவானது தான் இந்த 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
பெரும்பாலும் எல்லா கல்லூரிகளிலும் 'சல புல' இருக்கும்...அந்த கல்லூரிக்கென்று தனியாக ஒரு பாட்டும் இருக்கும்.....அப்படி TCE-க்கு கிடைத்த அமர பாடல் தான் 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்' போடுவதற்கு சத்தமாக கத்தினால் மட்டும் போதாது..... எல்லோரும் rhythmic-காக கத்த வேண்டும்....
அனைவரும் வட்டமாக நின்று கொள்ள நடுவில் உள்ளவன் பெருங்குரலெடுத்து ஆரம்பிக்க வேண்டும்...
ந.உ: ஏஏஏ...பாம்ம்ம்ம் பீம்ம்ம் டய்யாங் டக்கர.... கொய்யா மாரி...
குழு:பம்..பம்..பம்..
ந.உ:அப்துல் ரஹீம்...
குழு:பம்..பம்..பம்..
ந.உ.: ரங்காச்சாரி....
குழு:பம்..பம்..பம்.. (அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி...ஒரு 3 4 தடவை repeat பண்ணனும்...)
இதற்குப்பின் 'சல புல' போட வேண்டும்....
'சல புல' பற்றி தெரியாதவர்களுக்காக...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
இதையே ராகம், தாளம் எல்லாம் மாற்றி பாட வேண்டும்....
புதுப்பேட்டை 'ஒரு நாளில்' melody, remix(composer dream!!) போல் வேகத்தை ஏற்றி இறக்கி கத்த வேண்டும்...இதற்கான முழு பொறுப்பும் நடுவில் உள்ளவனிடமே இருக்கும்...அவன் வேகத்திற்கு ஏற்றவாறு மற்ற்வர்களும் 'ஊ ஆ' வை மாற்றி பாட வேண்டும்....
இந்த அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி யாரென்று எவனுக்கும் தெரியாது.....பல ஆய்வுகளுக்கு பிறகு அவர்கள் hostel-இன் முதல் வார்டன்களாகத்தான் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தோம்...
இந்த 'பாம் பீம்' மொழி, இனம், டிபார்ட்மெண்ட் அனைத்தையும் கடந்தது....யார் 'பாம் பீம்' போட்டாலும் அதில் பங்கேற்பது பெருமையாக நினைக்கப்பட்டது....
'கண்ட நாள் முதல்' படத்துல லைலா சொல்வாளே அது போல "சந்தோஷம், துக்கம், சேர்வு, பிரிவு, சோர்வு, புத்துணர்ச்சி"-னு எல்லாத்துக்கும் இந்த 'பாம்..பீம்' தான்....
last working day அன்று....
எல்லா department பசங்களும் ஒன்னா சேந்து main block-ல கல்லூரியே அதிர போட்ட அந்த 'பாம்..பீம்'....
ப்ரின்சிபால் வந்து 'போதும் கிளம்புங்க'-னு கிளப்பி விடும் வரையில் போட்ட அந்த 'பாம்..பீம்'....
இதுக்குப் பின் எப்போது 'பாம்..பீம்' போட முடியுமோ என தொண்டை கிழிய அன்று போட்ட 'பாம்..பீம்'....
கடைசி 'பாம்..பீம்' முடிந்ததும் அனைவரையும் சூழ்ந்த அந்த பேரமைதி.......
'பாம் பீம்' பல நினைவுகளை முடிச்சிடும் கயிறாக இருக்கிறது......
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை
தடா அருவி (கால்வாய்?!)
சென்னை-ல இருந்து 70 km-ல தடா ஊரு...அங்க இருந்து 20km-ல ஒரு அருவி....
என் நண்பன் PRK-வோட உயிர் நண்பன்(??) எவனோ இந்த அருவி பத்தி ரொம்ப புகழ்ந்து FWD அனுப்பி இருக்கான்...இவனும் அதை நம்பி எங்களை கிளப்பிட்டான். நானும் என்ன என்னவோ சொல்லி escape ஆகலாம்-னு பார்த்தா முடியல...சரி bike-ல லாங்க் போய் ரொம்ப நாள் ஆச்சு-னு கிளம்பிட்டோம்...
இங்க இருந்து தடா வரைக்கும் super ரோடு...Golden Quadilateral...1 மணி நேரத்துல போயாச்சு...(போற வழி fulla எல்லா ஊர்லயும் பெண்கள் ரோட்டோரம் நின்னு National Permit லாரிகளுக்கு கை காட்டி நிறுத்த்றாங்களே...ஏன்????)
அடுத்த 20 km போறதுக்கு ஒன்றரை மணி நேரம் ஆச்சு....15 km சாதாரண ரோடு...மெதுவா உருட்டிட்டு போயாச்சு....
அடுத்த 5 km ரோடே கிடையாது....bike ad-க்கெல்லாம் 'கரடு முரடான் பாதைக்கு' அங்க தான் shooting எடுப்பாங்க போல...
காட்டு வழில மக்கள் நடந்து,பைக்ல போய் அதனால உருவான பாதை..ஒன்னு பெரிய பெரிய கல்லா இருக்கும்....இல்லைனா ஆத்த்ங்கரை மாதிரி மணல் இருக்கும்....
சுத்தி முத்தி பாத்தா 'காக்க காக்க'-ல தேவதர்ஷினி தலைய வெட்டி போய் வெப்பாங்களே ஏதோ '...சீமா' அந்த ஏரியா மாதிரி இருக்கு...
சுத்து வட்டாரத்துல ஆள்நடமாட்டம் கடை எதுவும் கிடையாது...(அங்க ஒருத்தன் Pulsor puncture ஆகி நின்னுடுச்சு...அவன்லாம் எப்படி ஊர் போய் சேர்ந்தானோ...)
அங்க இருந்தவங்க எல்லாம் madras-காரங்க தான்....வார வாரம் கிளம்பி வந்துடுவாங்க போல....
3 km அந்த காட்டு பாதைல போனா ஒரு கால்வாய்...அங்க குளிச்சுட்டு இருந்தவங்க 'இன்னும் 2 km போனீங்கன்னா இத விட நல்ல இடம் இருக்கு. M80-ல வந்தவங்களே போறாங்க...நீங்க Unicorn, Achiever-லாம் வச்சிருக்கீங்க'-னு உசுப்பேத்திட்டாங்க...
அங்க இருந்து 2 km உள்ள போனா அதே மாதிரியே ஒரு கால்வாய்...என்ன கொஞ்சம் மரம் இருந்துச்சு...
அங்க போனா 2 group-க்கு சண்டை...ஒன்னா சமைச்சு சாப்பிட்டு, தண்ணி அடிச்சுட்டு அவனுங்களுக்குள்ள அடிச்சுக்கறாங்க...
ஒரு சூனா-பானா வந்து எங்க கிட்ட பஞ்சாயத்து...அவனுங்க அடிச்சுக்கிட்ட கதைய எங்க கிட்ட சொல்லிட்டு ' 5 மண்க்கெல்லாம் இங்க இருந்து கிளம்பிடுங்க..அப்புறம் உங்களுக்கு தான் பிரச்னை. இங்க பெரிய சண்டை நடக்கப்போது...அவனுங்க வண்டி நம்பர் நோட் பண்ணியாச்சு...விஜயகாந்த் கட்சி செயலாளரோட மச்சான் மேல கை வச்சுட்டாங்க...எப்படி கும்மிடிப்பூண்டி தாண்டறாங்க-னு பாக்கலாம்...'-னு ஒரே கைப்புள்ள பேச்சு...நம்ம ஆள் எங்க கிட்ட கதை சொல்லிட்டு இருக்கும்போதே எதிர் பக்கத்துல இருந்து கல் பறக்குது....ஆனாலும் அண்ணன் கும்மிடிப்பூண்டி-ல வச்சு தான் அவங்கள தூக்கறதுன்ற ஒரே லட்சியத்துக்காக கிளம்பி போய்ட்டாரு.....
அவனுங்க கிளம்பினதும் அங்க இருந்த இன்னொருத்தன் கிட்ட 'இங்க ஃபால்ஸ் ஒன்னு இருக்குனு சொன்னாங்களே எங்கடா?'-னு கேட்டா அது இன்னும் ஒரு மணி நேரம் நடந்து போகனும்கறான். அங்கயும் மெட்ரோ வாட்டர் குழாய் மாதிரி தான் த்ண்ணி வருமாம்.
இதுக்கு மேல ஃபால்ஸ் போறதுக்கு 5 மணி ஆகிடும்..அப்புறம் 'கைப்புள்ள' கோச்சுக்க போறாருன்னு முதல்ல பாத்த இடத்துலயே குளிக்கலாம்னு திரும்ப வந்துட்டோம்.
வரும்போது 'கைப்புள்ள' மறுபடியும் வண்டிய நிறுத்தி சாவி எடுத்து வச்சுக்கிட்டு 'நீங்க் எந்த ஏரியா'-னான். PRK உடனே 'அங்க தானே எங்க கூட பேசுனீங்க'-னு கேட்டதும் அவனுக்கு கொஞசம் போதை தெளிஞ்சு 'டேய், இவங்க நம்ம friend..நீங்க போங்க sir'-னு பெருந்தண்மையா எங்கள அனுப்பிட்டாரு...
இவ்ளோ தூரம் வந்ததுக்கு அந்த கால்வாய்லயாவது உடம்ப நனைச்சுட்டு போலாம்னு இறங்கினா அது 2 அடி கால்வாய். அதுலயும் கூட வந்த ஜோவின் breast stroke பண்ணி நீந்தி அவன் திறமைய காமிச்சான்....
இவ்ளோ rod-களையும் சேர்த்து வாங்கிட்டு மறுபடி 3 km அந்த கல்பாதை-ல வண்டிய உருட்டிட்டு வந்து பக்கத்து ஊருல சூடா டீ அடிச்சுட்டு வந்தாச்சு...
ஆதலினால் மக்களே இனி யாராவது தடா-ல ஃபால்ஸ் இருக்குன்னு சொன்னா நம்பிடாதீங்க!!!!!!
கப்பி | Kappi 2 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை, பயணம்
ஓ போடு!!
இந்திய தேர்தல் சட்டம் பிரதிநிதித்துவ முறையில் மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர் ஞானி பல முறை பல மேடைகளில் கூறி வந்திருக்கிறார். விகடனில் 'ஓ போடு'-விலும் பல முறை குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது 'ஓ போடு' என்ற பிரசார இயக்கம் ஒன்றை ஆரம்பித்து '49 ஓ பற்றி பிரசாரம் செய்து வருகிறார்.
'49 ஓ'-விற்கு தனியாக ஓட்டு இயந்திரத்தில் பட்டன் கொடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில் அதை பற்றி மக்களிடம் விழிப்புனர்ச்சி ஏற்பட்த்தும் வகையில் இந்த அமைப்பு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
மேலும் விபரங்கள்: www.ohpodu.org
இந்த 49-ஓ பட்டன் வரும் வரை வோட்டு போடாமல் விடாதீர்கள். நீங்கள் போடும் வோட்டால் உங்கள் தொகுதியில் போட்டியிட்ட ஒரு நல்லவர் (relative term தான்) ஜெயிக்க முடியாவிட்டாலும் அவருக்கு டெபாசிட்டாவது திரும்ப கிடைக்கட்டும்!!!!
கப்பி | Kappi 0 பின்னூட்டங்கள்
வகை பொது
தமிழுக்கு வந்த சோதனை
அப்பாடா...ஒரு வழியா தமிழ் ட்ரென்ஸ்லேட்டர் லின்க் கன்டு புடிச்சு தமிழ்ல முதல் பதிவு போட்டாச்சு !!!நன்றி:http://www.iit.edu/~laksvij/language/tamil.html
கப்பி | Kappi 2 பின்னூட்டங்கள்
நானும் போடறேன்டா Bloggu!!!!
என் mudhal thamizh blog-ன் தமிழாக்கம்!!!!
நாம இவ்வளவு நாள் கொஞ்சம் வேலை பார்த்துட்டு பொறுப்பா நல்ல பையனா இருந்தா...ஒரு மாசமா வேலையே இல்லாம வெட்டி...
பொழுது போகனுமே-னு net-ல மேஞ்சுட்டு இருந்தா...சும்ம கொடுக்க்றாங்க-னு ஆளாளுக்கு blogspot வச்சுருக்கானுவ...
நாம மட்டும் லேசா...அதான் முடிவு பண்ணிட்டேன்...
நானும் போடறேன்டா Bl0gggu...
தமிழ் blog-ஆ மாத்த அறிவை வளர்த்துட்டிருக்கேன்....
கப்பி | Kappi 2 பின்னூட்டங்கள்

