நரிகளுக்கு நடுவில்!

என் நண்பன் SnoozenBooze-ன் ஆங்கிலப் புலம்பலின் தமிழாக்கம். என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!


நரிகளுக்கு நடுவில்!

இது என் இடமல்ல!
நரிகளுக்கு நடுவில்
மானாக உணர்கிறேன்!

மான்,நரி,சிங்கம், சிறுத்தை,
கீரி, பாம்பு
அனைத்திற்கும் ஒரே கூண்டு!

தனித்தன்மை இழந்து
தன்பலம் மறந்து
மயக்கத்திலே திரிகின்றன!

கூண்டிலுள்ள மற்றொரு மான்
என்னையும் நரியென
எண்ணுகிறது!

போலிப் புன்னகையும்
முகத்துதியும் இவ்விடத்தை
வெறுக்கச் செய்கின்றன.

இது என் இடமல்ல!
இங்கிருக்க எனக்கு
விருப்பமல்ல!

என் இடத்தில்
மனம் மகிழும் போது
வாய்விட்டு சிரிக்கலாம்!
சோகம் கவிழ்கையில்
புன்னகை புரியலாம்!

போலி வேடங்கள்
ஏதும் பூணாமல்
'நானாக' இருக்கலாம்!

கோபத்தை முகத்திலும்
அன்பைக் கண்களிலும்
வெளிக்காட்டலாம்!

கேளிக்கையும் கேலியும்
கூத்தாடும் அரங்கம்!

ஒவ்வொரு பகலும்
பல கதைகளையும்
ஒவ்வொரு இரவும்
பல கனவுகளையும்
புனையும் களம்!

ஒவ்வொரு நாளும்
அதே நிகழ்வுகள்!
ஆனால்
புதுப்புது அனுபவங்கள்!

அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!!12 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!

சொன்னது...

//அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!! //
அது எந்த இடங்க....

//நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!! //

எல்லாத்துக்கும் Same blood தான், என்ன ஒன்னு இன்னும் தனித்தன்மை இழக்க வில்லை. இழப்பது மாதிரி தெரிந்தால் உடனே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.

சொன்னது...

//அது எந்த இடங்க....//

படிச்ச காலேஜ் பாஸு..

i call it college , the only kingdom where the kings sit at the last" - இப்படி அவன் எழுதினத நான் மாத்தி எழுதினேன் :D

சொன்னது...

நமக்கும் கடைசி பெஞ்ச் தான். நல்லா தான் இருக்கு........

//படிச்ச காலேஜ் பாஸு..//

அது சரி, படிச்ச காலேஜா.......... இது என்ன புது கதையா இருக்கு.........
கப்பி பய தானே எழுதுவது............
:)))))
அது சரி, நீங்களும் அப்ப காமெடி பண்ணுவீங்கள.... அத மறந்துட்டேன்.

சொன்னது...

//அது சரி, படிச்ச காலேஜா.......... இது என்ன புது கதையா இருக்கு.........
//

ச்சே..இது மாதிரி யாரும் கவனிக்காதப்போ கதை விடலாம்னு பாத்தா..ஜஸ்டு மிஸ்ஸு..


//நல்லா தான் இருக்கு........//

நீங்க மட்டும் இப்படி காமெடி பண்ணலாமா??

சொன்னது...

antha edathukku map please.....

சொன்னது...

கொஞ்சம் கொசுவத்தி சுத்தினா உனக்கே ஞாபகம் வரும் நண்பா..

சொன்னது...

காலத்த பின்னால தள்ளுறீங்க கப்பி நிலவன்...

சொன்னது...

:))))))))))))

செந்தழல் ரவி

சொன்னது...

சினிமா பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு போல ஆ.வல்டன் எதிர்பார்க்கிறேன்

சொன்னது...

வாங்க ரவி
இப்படித்தான் நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது :))

சொன்னது...

//சினிமா பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு போல ஆ.வல்டன் எதிர்பார்க்கிறேன்
//

இரண்டாம் பகுதி படிச்சீங்களா? இன்னும் எழுத முயற்சிக்கிறேன் கா.பி [கார்த்திக் பிரபு இல்ல காதல் பித்தன்] :)