'சுகா'னுபவங்கள் ஆறு

"கோட்டோவியக் கோ" சுகாவின் ஆணையை ஏற்று என்னுடைய 'அலுக்காத ஆறு'..... எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை முறையானாலும் எனக்கு சலிப்பு ஏற்படுத்தாத இந்த ஆறு விஷயங்கள் குறித்து சிறிது விரிவாக:


1.எனக்கு நினைவு தெரிந்து என் மூன்றாம் வகுப்பிலிருந்து நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். தலைவரின் எந்த படமாகயிருந்தாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதை மீண்டும் பார்ப்பது என்றைக்கும் அலுக்காது. சிறு வயதில் 'மாப்பிள்ளை'யில் ஆரம்பித்து த்லைவரின் படங்களை வரிசையாக சொல்வதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தலைவரின் இண்ட்ரோ பாடலைப் பக்கத்து வீட்டு அண்ணனை எழுதித் தரச் சொல்லி மனப்பாடம் செய்வோம்.

கல்லூரியில் புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி, ஹாஸ்டல் டே போன்ற நாட்களில் வருடா வருடம் தவறாமல் திரையிடப்படும் படம் பாட்ஷா தான். அந்த நான்கு வருடங்களில் பாட்ஷா வை மட்டும் குறைந்தப்ட்சம் 20 முறையாவது திரையிட்டிருப்போம்.

தலைவர் சில சமயங்களில் சொதப்பும் போது அவருக்காக வக்காலத்து வாங்கி நண்பர்களுடன் சண்டையிடுவதும் தனி சுகம் தான்.

2. ஒவ்வொரு முறையும் பயணம் நமக்கு புது அனுபவத்தைத் தருகிறது. ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது. 'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது. அதிலும் கூட்ட நெரிசல் மிக்க பண்டிகை நாட்களில் சக பயணிகளை பார்த்துக் கொண்டு வந்தாலே நேரம் கடந்துவிடுகிறது.

நண்பர்களுடன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது டூர் அடிக்காவிட்டால் மனதில் ஒரு சோகம் குடி கொண்டுவிடுகிறது.

3.எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி கொண்ட கிரிக்கெட். பள்ளி விடுமுறை நாட்களில் காலை 6 மணிக்கே க்ரவுண்டுக்கு போய் ஒரு ஸ்டம்பை நட்டு பிட்ச் பிடிப்பதில் ஆரம்பித்து மாலை இருட்டுகிற வரை விளையாடி நாள் முழுக்க கிரிக்கெட்டே வாழ்க்கையாக இருக்கும்,
கல்லூரியிலும் ஹாஸ்டலில் நுழையும்போதே கைகள் பேட்டையும் பந்தையும் தேட ஆரம்பித்துவிடும். பரிட்சை நாட்களிலும் மதியம் பரிட்சை என்றால காலையில் கிரிக்கெட் விளையாடி பல பேரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவோம். வருடாவருடம் விடுதியில் நடத்தும் வெள்ளொளி கிரிக்கெட் போட்டியும் அப்போது கொடுக்கும் நேர்முக வர்ண்னைகளும் அம்பயரிங்கில் நடக்கும் தகராறுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை.

4.குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எந்த விளையாட்டும் மகிழ்ச்சியைத் தர முடியாது. அதிலும் கல்யாண சமயங்களிலும் விடுமுறைகளிலும் அவர்களுடன் விளையாடுவதும், திடீரென காரணமே இல்லாமல் அழும் குழந்தையை சமாதானம் செய்வதும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு சமரசம் செய்வதும் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது.

5.வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருள் கவிந்து நிறம் மாறும் மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து காற்றாடுவது, மேக ஒட்டடைகள் இல்லாத கோடை இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களை பலவாறாக உருவகிப்பது, படுத்துக் கொண்டே இரவு முழுவதும் நிலவுடன் பயணிப்பது, மன நிறைவைத் தரும் சூரிய அஸ்தமனம், தொலைதூரத்தில் இருந்து திரண்டு வரும் மழை மேகங்களும் இடி மின்னலும் தரும் பயமும் கிளர்ச்சியும் என வானம் பல வகையில் நம்முடன் உறவு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம் மனநிலைக்கேற்ப வானம் உருமாறிக் கொண்டிருக்கிறது.

6.காபி....ஆடும் ஆட்டம் அனைத்தும் அரை சாண் வயிற்றுக்குத்தான் என்றாலும் இந்த காபி குடிக்கும் சுகம் இருக்கே..அதை அனுபவிக்கனும்...ஆராயக் கூடாது..யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க..கோயில் கட்டறாங்க...காபியை முதன் முதலில் கண்டுபிடித்தது யாருன்னு தெரிந்தால் அவருக்கு நான் சிலை வைப்பேன்...தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,

7.

ஓ...ஆறு தான் எழுதனுமோ...

இந்த விளையாட்டுக்கு நானே லேட்டா தான் வந்திருக்கேன்...ஏற்கனவே பல பேருக்கு விளையாடிட்டு இருக்கறதால யார் யார் இன்னும் வரலைனு தெரியல..அதனால ஒரு ஈஸியான வழி...தமிழ்மணத்துல இப்போ மறுமொழியப்பட்ட இடுகைகளில் முதல் ஆறு பேரை விளையாட்டுல சேத்துக்கலாம்..அவங்க ஏற்கனவே விளையாடிட்டு இருந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..

1.Boston Bala
2.மகேந்திரன். பெ
3.icarus prakash
4.பெனாத்தல் சுரேஷ்
5.நிலா
6.சந்தோஷ்22 பின்னூட்டங்கள்:

சொன்னது...

போட்டாச்சு போட்டாச்சு


(யாருப்பா இது பட்டியல் போட்டு ஆளுங்கள பழச சிந்திக்க உட்றது நீங்கள்ளாம் எதாவது சுழ்ற்ச்சி ஏவாரம் பாக்கலாம்யா:))

சொன்னது...

//தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,//

இங்கேயும் அதே கதை தான்.
நம்ம ஆறை போயி பாருங்கள்...
அம்மாவின் காபி..........

சொன்னது...

பீல் பண்ணாதீங்க மகேந்திரன்...சிக்கினா வூடு கட்டி அடிக்கலாம் :))

சொன்னது...

சிவா..
ஏற்கனவே உங்க ஆறை படிச்சுட்டேன்...பின்னூட்டம் போடறதுக்குள்ள பின்னாடி ஒருத்தன் நின்னு முறைச்சுட்டு இருந்தான்..அதான் அட்டெண்டன்ஸ் கொடுக்காம வந்துட்டேன்...

சொன்னது...

கப்பி பயலின் காப்பி அனுபவங்கள்னு ஒரு பதிவு போடலாமே!

சுவையாக இருந்தன!

சொன்னது...

முறைத்தவன் எவன் சொல்லுங்க, தட்டிடலாம்.

சொன்னது...

நன்றி எஸ்.கே..

காப்பி குறித்து ஒரு பதிவு போடுவதற்கு இருந்தேன்..அதற்குள் இந்த ஆறில் ஒன்றாக வந்துவிட்டது...கடந்த ஒரு மாதமாக நல்ல காபி குடிக்காமல் பைத்தியம் பிடித்தாற் போல் இருக்கிறது...

நீங்க குடிக்கற காப்பி பத்தி தானே கேட்டீங்க?? இல்லை பரிட்சைகளில் அடித்த காப்பியா??

சொன்னது...

//முறைத்தவன் எவன் சொல்லுங்க, தட்டிடலாம்//

நானே தட்டறதுக்கு நாள் பாத்துட்டு இருக்கேன்...நம்ம மேல பயம் போயிடுச்சு...கூடிய சீக்கிரம் தட்டி வச்சாதான் சரிப்படும்...

சொன்னது...

ஆஹா ... என்ன பட்டமெல்லாம் கொடுத்துட்டீங்க :) இதெல்லாம் கெடைக்கும்ன்னு தெரிஞ்சா ஒரு அறுபது பேர கூப்பிடலாம் போல...

எதாவது quote பண்ணி எழுதலாம்ன்னு பார்த்தா .. நீங்க எழுதுன எல்லாத்தையுமே எழுதனும் போல..

குழந்தைகள் ... காபி .. விளையாட்டு.. வானம்.. ரஜினி.. ஜன்னல் பயணம் ..எல்லாமே ஒருவித போதை தான்.. பிளாட்டினம் செய்யும் மருந்து கிடைத்தாலும் போதும் என்று மட்டும் தோன்றாதது :)

கலக்கீட்டீங்க .. (கப்பி பய ன்னு சொல்றதுக்குத்தான் கொஞ்சம் சங்கடமாவே இருக்கு)

சுகா

சொன்னது...

சுகா..
வசூல் ராஜால சொல்றா மாதிரி நாமளே இப்படித்தான் மாத்தி மாத்தி பட்டம் கொடுத்தக்கனும்..இதுக்காக தீவுத்திடல்ல மீட்டிங்கா போட முடியும்??

//கப்பி பய ன்னு சொல்றதுக்குத்தான் கொஞ்சம் சங்கடமாவே இருக்கு//

"பூவை பூவுன்னு சொல்லலாம்..நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்(புஷ்பம்)" - என்ன படம் இதுன்னு மறந்து போச்சு...இந்த டயலாக் தான் ஞாபகம் வருது...

கப்பி பயலைச் சுருக்கி கப்பி-னு கூப்பிடுங்களேன்....

என் நிஜப் பேரை சொன்னா அத சொல்றதுக்கு இன்னும் கஷ்டப்படுவீங்க :)) அவ்ளோ அரிதான பெயர்...

சொன்னது...

அதுவும்தான்!
'காப்பியரில்'காப்பி பண்ணின அனுபவங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக்கலாமே!!
:))

இப்ப அந்த அரிதான நிஜப் பெயரை தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆசை வந்துடுச்சே!

சொன்னது...

//..இதுக்காக தீவுத்திடல்ல மீட்டிங்கா போட முடியும்??// :-) ஹ ஹா..

// அவ்ளோ அரிதான பெயர்... //
ஹும்.. ஒரு தடவை சென்னைல இருந்து லுஃப்தான்ஸால போகும் போது போர்டிங் பாஸ் குடுக்கறவர் மயக்கம் போடாத குறை.. அன்னைக்கு வந்த ஆறாவது 'கார்த்திகேயன் சுப்ரமணியம்' நான் :) ..

சொன்னது...

//'காப்பியரில்'காப்பி பண்ணின அனுபவங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக்கலாமே!! //

ரைட்டு விடுங்க...ஒரு 'காப்பி'யமே எழுதிடுவோம்.. :))

நிஜப் பெயர்...என் பேரை சொல்லி அதுக்கு வர ரியாக்ஷனைப் பார்க்க என் ஆசையைக் கிளரிட்டீங்க...

சொன்னது...

//ஆறாவது 'கார்த்திகேயன் சுப்ரமணியம்' நான் //

'ஐஐடி கார்த்திக்' பற்றி விமானத்தில் நடக்கும் உரையாடலாக ஒரு சிறுகதை படித்திருக்கிறேன்..சுஜாதா என நினைக்கிறேன்..

கார்த்திக் என்ற பெயரை வைத்து ஒரு ஊரையே கூட்டலாம்...

சொன்னது...

"கப்பிபயலின் காப்பிக் காப்பியம்"

செம டைட்டில்!

சொன்னது...

//"கப்பிபயலின் காப்பிக் காப்பியம்"
//

ஹி ஹி ஹி "காப்பி forever" -னு tag line கொடுத்துடலாமா..

சொன்னது...

//ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது//

உண்மை.

//'மாமா மடியில் உக்காந்துக்கோடா'//

வீட்ல வெவரம் தான், அப்பவே மாமா மடியில தான் உட்கார வச்சிருக்காங்க!!!!!!!

சொன்னது...

//வீட்ல வெவரம் தான், அப்பவே மாமா மடியில தான் உட்கார வச்சிருக்காங்க!!!!!!!//

:))..ஒன்னும் சொல்றதுக்கில்ல..

சொன்னது...

Good writing my dear junior

சொன்னது...

நன்றி தல!!!

சொன்னது...

கப்பி,
உங்க ஆறு பதிவு நல்லாருக்குங்க.

//'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது.// சின்ன விஷயம் தான்னாலும் ரசிச்சு எழுதி இருக்கீங்க. நானும் ரசித்தேன்.

சொன்னது...

நன்றி கைப்புள்ள..

//சின்ன விஷயம் தான்னாலும் ரசிச்சு எழுதி இருக்கீங்க. நானும் ரசித்தேன்.//

பாராட்டுல என்னையே வெக்கப் பட வச்சுட்டீங்க :)))

டாங்க்ஸ் கைப்பு..