வந்து இரண்டு வாரம் ஆகிறது. இன்னும் உருகுவே பத்தி எழுதவில்லையே என ஒரே ஃபீலிங்க்ஸ்...அதற்கு தான் இது.... பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்கு இன்னும் இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 2500 பீஸோ அழ வேண்டும். வஙகிக் கணக்கு தொடங்குவது பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வாரம் ஆகுமாம். நம் ஊரில் வீடு தேடி வந்து கண்டதுக்கு கடன் தருகிறார்கள்...இங்கு இதற்கே இப்படி இழுத்தடிக்கிறார்கள்.
அலுவலகத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கத்(?!) தொடங்கி விட்டதால் கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக எழுத வேண்டியிருக்கிறது. நிற்க.
மாண்டிவிடியோ...அமைதியான நகரம்...மக்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்...நட்புடன் பழகுகிறார்கள்...கடைகளில் ஸ்பானிஷ் தெரியாமல் திணறுகையில் தானே வந்து உதவுகிறார்கள்...உலகின் 30 பாதுகாப்பான இடங்களில் ஒன்றாம்...கம்பெனி வண்டியிலேயே தினமும் பயணிப்பதால் நக்ரை இன்னும் முழுமையாக சுற்ற ஆரம்பிக்கவில்லை...
எல்லாவற்றுக்கும் இறக்குமதியை ந்ம்பி இருக்கும் நாடு....காய்கறிகள் கூட சிலி, ஈக்வேடார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன...இங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவது மாடு மற்றும் பன்றி கறி தான்!!!
இனி சொந்தக் கதைக்கு வருவோம்.....ராம்ப்லா எனப்படும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு பார்த்து குடியாயிற்று. ..நம்ம ஊர்ல இந்த மாதிரி பீச் ஏரியாவில் இருக்கனும்னா வாடகைக்கு நம்ம சொத்தையே எழுதி தர வேண்டி இருக்கும்...இங்க இந்த ஊரே பீச்சா இருப்பதால் சீப்பா இருக்கு!!!
'நளன்' ஒருத்தன் ரூம் மேட்டா கிடைச்சிருக்கான்...சூப்பரா சமைக்கறான்...நம்ம வேலை மைக்ரோவேவ்ல அரிசி வச்சு சாதம் பொங்கறது....அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்...அவன் ஏதாவது இரண்டு மூன்று காய்களை சேர்த்து குழம்புக்கும் கூட்டுக்கும் நடுவில் ஒரு அயிட்டம் சமைப்பான். ஒரே கவலை..எது செய்தாலும் அதில் உருளைக் கிழங்கு போடலைனா அவனுக்கு ஜீரணமாகாது.....என்ன செஞ்சா என்ன..நம்ம சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்தது...
இங்கு குறைஞ்சது 50 இந்தியர்களாவது இருப்பார்கள் என்று வந்தால் மொத்தம் 20 பேர் தான்..அதுலயும் 4 பேர் தான் தமிழ்...ஆனா வாரவாரம் கெட்-டூகெதர் ன்ற பேருல யார் வீட்டுலாவது ஓசில நல்ல சாப்பாடு போடறாங்க..
வந்த முதல் வாரமே இங்க இருக்க ஒரு ஆசிய ரெஸ்டாரென்டுக்கு போனோம்...மெனு கார்ட்ல இருந்தது எல்லாம் தாய், மலாய் அயிட்டங்கள்...இந்திய உணவு நான்கோ ஐந்தோ தான்...சமோசா, கொஃப்தா, ராகுல் ஜோஷ்னு பேரு வச்சு ஒரு டிஷ். அப்புறம் பேரு வாயில நுழையாத இரண்டு டிஷ்...'நாண்' வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் முன்னால் ஆர்டர் பண்ணனுமாம்...
பக்கத்துல 'V' இருக்க அயிட்டம் மெனுகார்ட்ல மொத்தமே 3 தான்...அதுல ஒரு மீன் அயிட்டத்தை அவன் எப்படி சைவமா மாத்தி தருவான்னு தெரியாம வாய்ல பேரு நுழையாத ஒரு டிஷ் ஆர்டர் பண்ணியாச்சு....
அதுக்குள்ள சமோசாவை என்ன கொடுமை பண்ணி வச்சிருக்காங்களோனு அதை ஒரு ப்ளேட் கொண்டு வர சொன்னோம்...அவன் கொண்டு வந்த ச்மோசாவிலேயே பசி அடங்கிடுச்சு..அவ்வளவு சூப்பரா எப்படி தான் செய்தானோ...நம்ம ஊருக்கு வந்து சமோசா செய்யறதை மட்டும் நல்லா கத்துக்கிட்டு வந்தவன் போல...
சமோசாவால வாயை அடைச்சவன் பின்னாடியே அதுக்கு ஒரு சட்னி கொண்டு வந்தான்...காரத்துல எங்களை திக்கு முக்காட வச்சிட்டானுங்க...நம்ம ஊர் ஆந்திரா மெஸ் சட்னியெல்லாம் தோற்றுவிடும்...அவ்வளவு காரம்... வெங்காயம், மிளகாய் மசாலா எல்லாம் போட்டு சூப்பரா பண்ணியிருந்தான்.....அதுலயும் கூட வந்த இரண்டு ஆந்திரா பசங்களுக்கு இத்தனை நாள் கழிச்சு இவ்வளவு காரமா சாப்பிட்டதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...
சமோசா காலியானாலும் அந்த சட்னியை சும்மாவே தொட்டு நக்க ஆரம்பிச்சிட்டோம்..அந்தளவு எங்களை மயக்கிடுச்சு...
அடுத்தது அந்த பெயர் தெரியாத அயிட்டம் பெரிய ஆப்பு.....கத்தரிக்காயும் பன்னீரும் போட்டு உப்பில்லாம கொண்டு வந்தான்....வாயில வைக்க முடியல....மறுபடியும் அந்த சட்னி தான் காப்பாற்றியது...அவன் கொடுத்த அரை ப்ளேட் சாதத்துல அந்த சட்னியை கலந்தடித்து பாதி வயிறு நிரம்பியது....
வயிறு நிரம்பவில்லையென்றாலும் நம்ம ஊர் சாப்பாடு என்ற மனத் திருப்தி தான்...
இங்கு இன்னொரு நலல விஷயம்...வாரவாரம் கெட்-டூகெதர் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுகிறார்கள்...நேற்று தக்காளி ரசம்...ஒரிஜினல் ஆந்திரா ஊறுகாய்...
இன்னும் இரு வாரங்களில் அர்ஜெண்டினா போக ஒரு ப்ளான் போட்டு இருக்கோம்...இப்படி கம்பெனி காசுல ஊர் சுத்தினா தானே உண்டு...நாம என்னைக்கு நம்ம காசுல இங்கெல்லாம் வரப் போறோம்!!!
உருகுவேயில் காரசட்னி
கப்பி | Kappi
வகை உருகுவே, சொந்தக் கதை
Subscribe to:
Post Comments (Atom)
13 பின்னூட்டங்கள்:
தொடர்ந்து எழுதுங்கள்.எனக்கு அங்கு site manager ஆக செல்ல ஒரு வாய்ப்பு வந்தது,ஆனால் குடும்பம் குழந்தையை அழைத்து கொண்டு அங்கு செல்ல வேண்டுமா என்று யோசித்து நழுவிவிட்டேன்.
Domestic Airlines கிடையாது என்று படித்த ஞாபகம்,அது உண்மையா?
சென்னையிலிருந்து மாண்டிவிடியோ செல்ல எத்தனை மணி நேரம் ஆயிற்று என்பதையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்...
வாங்க சாமி...
குடும்பத்துடன் இங்கு இருப்பதில் ஒரே பிரச்சனை சமையல் பொருட்கள் தான்...'அஞ்சறை பெட்டி' அயிட்டங்களில் ஒன்று கூட இங்கு கிடைக்காது!!!
இங்கு கம்பெனியில் 5 பேர் குடும்பத்துடன் இருக்கிறார்கள்..வரும் நாட்களில் அவர்களை அட்டாக் செய்யத்தான் ப்ளான் போட்டிருக்கோம்...
உருகுவே மிகவும் சிறிது...அதனால் இங்கு அதிகமாக உள்நாட்டு விமானங்கள் கிடையாது...ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே உள்நாட்டு விமான வசதி இருக்கிறது...
இங்கு ரயில் போக்குவரத்தும் கிடையாது!!!
இந்தியாவில் இருந்து இங்கு வர கிட்டத்தட்ட 40 மணி நேரம் ஆயிற்று!!
சென்னை-டெல்லி-ஆம்ஸ்டெர்டாம்-சா பாலோ-மாண்டிவிடியோ....கிட்டத்தட்ட செங்கோண முக்கோனப் பாதையில் வந்தேன்...
தென்னாப்பிரிக்கா வழியாக வந்தால் விரைவாக வரலாம்..ஆனால் இப்போது தென்னாப்பிரிக்கா வழியாக பயணிக்க transit விசா தேவைப்படுகிறது...
SEÑOR. KAPPI
TOMASTE MATE??
ஹி ஹி! மாத்தே குடித்தீர்களா?
யாராவது குடுத்தா வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
கப்புன்னு மூக்க புடுச்சுட்டு ரெண்டு உறுஞ்சு ! அவ்வளவுதான்.
saludos
SEÑOR. KAPPI
TOMASTE MATE??
ஹி ஹி! மாத்தே குடித்தீர்களா?
யாராவது குடுத்தா வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
கப்புன்னு மூக்க புடுச்சுட்டு ரெண்டு உறுஞ்சு ! அவ்வளவுதான்.
saludos
பெரு(சு) Bien Viendos!!!
மாத்தே இன்னும் ட்ரை பண்ணலைங்க...என் ப்ராஜெக்ட்ல எவனும் குடிக்க மாட்டேங்கிறான்...பக்கத்து ப்ராஜெக்ட்ல ஒருத்தன் எப்பவும் உறிஞ்சுட்டு இருக்கான்...இனி மேல் தான் அவன்கிட்ட ரிலேஷன் டெவலப் பண்ணி வாங்கி குடிக்கனும்...
அது (Bien Viendos!!!) இல்லீங்க.
VIENDO அப்படின்னா பாத்துகிட்டு இருக்கேன்னு அர்த்தம்.
BIEN VENIDOS அப்படின்னா நல்வரவு.
அர்ஜெண்டினா போனா நெறயா நம் நாட்டவர்கள் இருப்பார்கள்.
ஆனால் தமிழ் பேசறவங்க குறைவு.
அடிக்(கடி) பதிவு போடுங்க.
விடுங்க பாஸ்...டங் ஸ்லிப் ஆயிடுச்சு...நான் சொல்ல வந்தது venidos தான்...
இனி நீங்க தான் எனக்கு ஸ்பானிஷ் குரு....
//அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்//
ஆகா நீங்களும் நம்ம கோஷ்டி தானா? ஆமாங்க இதுமாதிரி ரொம்ப கஷ்டமான வேலை ஏதும் கிடையாது.. மாரல் சப்போர்ட் குடுத்து மோடிவேஷன் டாக் எல்லாம் குடுத்து அவனையே சமைக்க வக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை தான். உருகுவேயில் நல்ல வடிவான அழகான மக்கள் என்று பார்த்து இருக்கிறேன் அப்படியா என்ன?
ஆமா சந்தோஷ்..இது மாதிரி ரூம்மேட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்..
//உருகுவேயில் நல்ல வடிவான அழகான மக்கள் என்று பார்த்து இருக்கிறேன் அப்படியா என்ன?//
ஹி ஹி ஹி..டிபிகல் லத்தீன் அமெரிக்க மக்கள்...
கொஞ்சம் அந்த லத்தீன் அமெரிக்க மக்களை போட்டோ பிடிச்சி போடுங்களேன்...
போட்டா புடிச்சு வச்சிருக்கேன்..இன்னும் சிஸ்டத்துல ஏத்தல...ஏத்தினதும் ஒரு ஷோ ஒட்டிடுவோம் :)
apo.. konjam padangal podurathu ;-)
போடறேன் யாத்திரீகன்..வெயிட் எ னிமிட் பார் ஃபைவ் னிமிட்ஸ்..
உங்க கருத்து? Post a Comment