கடைசிப் பக்கங்களுக்காக...மதுமிதா!!

வலைப்பதிவர் பெயர்: கப்பி பய

வலைப்பூ பெயர் : கப்பி பய

சுட்டி(url) :http://kappiguys.blogspot.com

ஊர்: காஞ்சிபுரம்...இப்பொழுது இருப்பது மாண்டிவிடியோ

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிளில் எதையோ தேடும் போது முதலில் ஒரு தமிழ் திவைப் பார்த்தேன். அது வரை ஆங்கில பதிவுகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன..

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : இருங்க பார்த்து சொல்றேன்...விய வருடம்,.சித்திரை 8...அன்றைக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் போல் வேலையே இல்லாமல் பயங்கர வெட்டி....வழக்கம் போல் தமிழ்மணத்தை திறந்து ஒவ்வொரு பதிவா படிச்சு மதியம் வரை பொழுதைக் கழித்தேன்...சிறிது நேரத்தில் அடி மனசு ஆசை திடீரென வெளியில் வந்து தலையில் தட்ட இந்த பதிவை ஆரம்பித்தேன்...

இது எத்தனையாவது பதிவு:16...கத்துக்குட்டிங்கோவ்

இப்பதிவின் சுட்டி(url) : http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_09.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஏற்கனவே சொன்னது போல் எழுத வேண்டும் என்ற அடி மனசு ஆசை தான்

சந்தித்த அனுபவங்கள்:பல துறைகளில் பல வகையான பதிவுகள்....ஆச்சரியமூட்டும் தகவல்கள்..குழாயடிச் சண்டைகளுக்கு நிகரான பதிவர்களின் சண்டைகள்..தனி நபர் தாக்குதல்கள்...பல விவாதங்கள், வாக்குவாதங்கள்...

பெற்ற நண்பர்கள்:யாவரும் கேளிர்...

கற்றவை: கையளவு...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்...நினைத்ததை எழுத முடிகிற சுதந்திரம்...யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள் என்ற தைரியம்..

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து பதிவது...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

நன்றி!!3 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நான் சொல்ல நினைத்ததுனு 'ஐ லவ் யூ' னு எழுதுனதும் நட்பு வட்டாரம் தப்பா நினைச்சுடுச்சு...பசங்க கலாய்க்க ஆரம்பிச்சுட்டானுங்க...சும்மா ஜோக்குன்னு நினைச்சு போட்டது நமக்கே வினையாயிடுச்சு!!

அந்த கலங்கத்தை துடைப்பதற்காக அதை தூக்கிடறேன்!!!

சொன்னது...

kappi paya enga muneritaronu nenaithal.... innum kappiave irukenu solluraru

சொன்னது...

ஹி ஹி ஹி..வா சுப்பு!!