சாக்ரடீஸும் நானும்

சாக்ரடீஸ் ஒரு முறை தன் சீடர்களுடன் சந்தையில் ஒவ்வொரு கடையாக 'விண்டோ ஷாப்பிங்' செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் " நீங்கள் தான் எதுவும் வாங்கப் போவதில்லையே, பின் எதற்காக எல்லாக் கடைகளுக்கும் செல்கிறீர்கள்" எனக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் " இந்த உலகத்தில எவை எல்லாம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடிகிறது என்பதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

இந்த மாதிரி நானும் யோசிக்க ஆரம்பிச்சதுல மண்டை காய்ந்துவிட்டது....இங்கு வந்ததில் பல விஷயங்களை இழந்திருந்தாலும் இது மாதிரி கடையில் வாங்கும் அல்லது பணம் செலவு செய்து கிடைக்கும் விஷயங்களில் இழந்திருக்கிறேன் என யோசித்தேன்...

உதாரணத்துக்கு சாப்பாட்டு அயிட்டங்களில் பார்த்தால் பாலாஜி இட்லி கடையில் கல்தோசை,பரோட்டா இரவு உணவு..... ஹாட் சிப்ஸ்,சரவண,வசந்த பவன்களில் காபி....

உதயம்,கமலா,காசி,AVM,தேவி கருமாரியில் வாரம் ஒரு முறையாவது நைட் ஷோ... எந்த குப்பை படமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு படமாவது பார்க்கா விட்டால் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கம் வராது.....

மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்...

எந்த தியேட்டரிலும் பார்க்காத படம் இல்லையென்றால் ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கோ அல்லது வாடகைக்கோ ஏதாவது ஒரு பட டிவிடி....

வெள்ளி காலையில் சுடச்சுட வீடு தேடி வரும் விகடன்...குமுதம்,குங்குமம்,சினிக்கூத்து எனக் களஞ்சியங்கள்....

ஹிக்கின்பாதம்ஸ்,லாண்ட் மார்க் கடைகள்.... ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஆங்கில நாவல்கள்...

அப்புறம் எப்பவாவது போகும் ஸ்பென்சர்ஸ்,பெசண்ட் நகர்.... அங்க போய் நமக்கு ஒன்னும் செலவு இல்ல...ஆனா கூட வர்றவனை அவிச்சுடலாம்...அவன் தலையில பெரிய துண்டைப் போட்டுட்டு வரலாம்...

இது மாதிரி யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாயிட்டே போகுது.... மனக்கவலையும் அதிகமாகுது.....இது மாதிரி பல விஷயங்கள் இல்லாம ரொம்ப நாள் நம்மால தாக்கு புடிக்க முடியாது!!!!

இந்த விஷயத்துல நாம சாக்ரடீஸ் என்ன..அவர் கஸின் ப்ரதர் 'பல்ப'ரடீஸ் அளவுக்கு கூட வர முடியாது!!!!6 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி
காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்... //

இது எங்கே இருக்கு?

நான் நம்ம வீட்டுலேதான் இதெல்லாம்
ரிலீஸ்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே:-))))

அதையும் பார்த்துட்டு 'நம்ம மக்கள்' கதறி அழுதாலும்
விடமாட்டென்னு விமரிசனமும் போட்டுருவேன்:-)

சொன்னது...

நல்ல கற்பனை கப்பி. சாக்ரடீசு ஒரு தத்துவஞானி அவர் எது இல்லாம உயிர் வாழ முடியும்னு பாத்தாரு, நீங்க யாரு அதை பத்தியெல்லாம் சிந்திக்க.

சொன்னது...

:) பலபரடீஸ்ஸா :)

சரி..
http://sukas.blogspot.com/2006/06/blog-post_15.html

இந்த விளையாட்டுக்கு வாங்க.. நான் தான் அநியாயத்துக்கு சுருக்கி எழுதீட்டேன்.. நீங்களாவது நல்லா எழுதுங்க..

சொன்னது...

வாங்க துளசியக்கா....

விருகம்பாக்கத்துல இருக்க சூப்பர் தியேட்டர் அது...கட்டை சேர் தான்...ஆனா ஊருக்கு தெரியாம போன பல லோ-பட்ஜெட் படங்கள் அங்க ரிலீஸ் ஆகும்... படம் பார்க்கும் போதே பல கமெண்ட்ஸ் பறக்கும்...

முக்கியமா எல்லா சத்யராஜ் படங்களும் அங்க தான் பார்போம்!!!

சொன்னது...

விடுங்க தம்பி...எல்லாம் ஒரு ஆகோ தான்...

சொன்னது...

நன்றி சுகா..

கூடிய விரைவில் எழுதுகிறேன்...