மொழிப் பிரச்சனையால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஆத்மாவின் கூக்குரல்...
தமிழையே மெட்ராஸ் தமிழ்,மதுரை தமிழ், எதுலயும் சேராத தமிழ்-னு எல்லாத்தையும் கலந்து பேசறவன் நான்...
மதுரைல காலேஜ் படிக்கும்போது 'மெட்ராஸ் பாசை பேசிட்டு திரியறான்'-வாங்க...லீவ்ல காஞ்சிபுரம் வந்தா இஙக இருக்கவனுங்க 'மதுர பாஷை நல்லா கத்துக்கிட்டியே மச்சி'-னு வெறுப்பேத்துவானுங்க....இவனுங்க நடுவுல மாட்டிக்கிட்டு மதுரை தமிழுக்கும் மெட்ராஸ் தமிழுக்கும் மாறி மாறி தவ்விகிட்டு இருந்தேன்..
நம்ம கூட்டத்துல வேற 'ஒவ்வொரு தமிழுக்கும்' ஒரு பையன் இருப்பான்...இவனுங்களுக்கு ந்டுவுல பெரிய identity crisis வ்ர்ற நிலைக்கே போயிட்டேன்...அதுக்கப்புறம் எல்லாத் தமிழையும் mix பண்ணி ஆளுக்கு ஏத்த மாதிரி பேச பழகிட்டேன்...
இதுக்கு நடுவுல ஃப்ரெஞ்ச்,ஜெர்மன் -னு ஆர்வக் கோளாறுல தத்தக்கா பித்த்க்கா-னு கத்துக்கிட்ட மொழிகளும் உண்டு...
ஆனா பிரச்சனை வந்தது இந்தியால தான்...
ஸ்கூல்ல ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் ஹிந்தி கத்துக்கொடுத்தாங்க.... இந்த 'தக்ஷின் பாரத்......சபா' வோட புக்கையே text book-ஆ கொடுத்து சொல்லித் தந்தாங்க...அவங்க கத்துக் கொடுத்த கணக்கு படி ப்ராத்மிக், மத்திமா(மத்த பேரு-லாம் மறந்து போச்சு!!) மாதிரி 5-வ்து லெவல் வரைக்கும் படிச்சாச்சு...
அந்த திமிர்ல இந்தி தெரியும்-னு சொல்லிக்கிட்டு திரிஞ்சுட்டு இருந்தேன்....
காலேஜ்லயும் இந்தி படத்துக்கெல்லாம் போனா நாம தான் translator.... படத்துல எதுவும் புரியலன்னாலும் நாமளே ஏதாவது டயலாக் சொல்லி சமாளிச்சுக்கலாம்..ஏன்னா கூட வர்றவங்க இன்னும் நம்மல நம்பிட்டுதான் இருப்பாய்ங்க...
காலேஜ் முடிச்சு மெட்ராஸ் வந்தப்புறமும் மெலொடி,ஈகா-னு போய் நம்ம இந்தி அறிவை வளர்த்துக்கிட்டிருந்தேன்....
இந்தி புலமைக்கு வந்துச்சு ஒரு சவால்...ஆபீஸ்ல இருந்து '2 மாசம் டெல்லிக்கு போய் குப்பை கொட்டுடா'-னு தொரத்திட்டாங்க...
கூட வந்த 3 பேருல ஒருத்தன் உண்மையாவே இந்தி நல்லா பேசுவான்...ஒருத்தன் என்ன மாதிரி..ஆனா படிக்கற காலத்துல எல்லாத்தையும் நல்லா மனப்பாடம் செஞ்சு வச்சுருந்தான்...
இன்னொருத்தர் சுத்தம்..அவருக்கு தெரிஞ்ச ஒரே மொழி மதுர தமிளு தான்...(ஒரு தடவை மனுஷன் தனியா டீக்கடைக்கு போய் 'ஆப் கோ ச்சாய்'-னு கேட்டு 10 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு அவன் இவரை கண்டுக்காம டீயே குடிக்காம வந்தாரு..)
கிதர்,கித்னா,கஹா,ரொட்டி, ச்சாவல் சாஹியே-னு உயிர் வாழத் தேவையான அளவு இந்தியை வச்சுக்கிட்டு maintain பண்ணிக்கிட்டு இருந்தேன்...
போகப் போக இந்தில பேசற confidence எக்குத்தப்பா அதிகமாயிடுச்சு... ஆட்டோ பேரம் பேசற வேலையே ஏத்துக்கிட்டாச்சு... எல்லா ஆட்டோலயும் மீட்டர் இருக்கும்..பெரும்பாலான ஆட்டோகாரங்க மீட்டர்லயே வருவாங்க...அதுனால ஆட்டோ புடிக்கறது ஈஸியா போயிட்டு இருந்தது...
வழக்கமா நொய்டா-ல இருந்து கன்னாட் ப்ளேஸ்-க்கு 70 ரூபா வாங்குவாங்க...ஒரு நாள் ஒரு ஆட்டோகாரன் மீட்டர்ல வர முடியாதுன்னுட்டான்...
"சாட்(60) ருப்யே சாஹியே"-னான்...அப்போ தான் மூளைக்குள்ள தூங்கிட்டிருந்த இந்தி அறிவு வெளிய வந்து சாட்-னா அறுபதா எண்பதா-னு பட்டிமன்றம் நடத்துச்சு...அவன் 80 ரூபா கேட்டு ஏமாத்த பாக்கறான்னு மண்டைக்குள்ள ஒரு பல்பு...நான் உடனே நமக்கு பழக்கப்பட்ட நம்பர் 'சத்த்ர்'(70)னேன்...
கூட வந்த இந்தி தெரிஞ்ச பய இத கேட்டு நீ பேரம் பேசினது போதும்னு அவன் பேச ஆரம்பிச்சான்..அதுக்குள்ள ஆட்டோ காரனும் முழிச்சுக்கிட்டு எழுபது ரூபாய்க்கு கம்மியா வர முடியாதுன்னுட்டான்...
'சரி..புதுசா 2 வார்த்தை கத்துக்கிட்டதுக்கு 10 ரூபாய்'னு மனசை தேத்திக்கிட்டேன்...
ஆனா அத விட பெரிய அசிங்கம் காத்துட்டிருந்தது அப்போ தெரியாது...
ஒரு வாரம் கழிச்சு கரோல் பாக் போக கிளம்பினோம்..2 பேரு முன்னாடியே அங்க போய் வெயிட் பண்ணிட்டிருந்தாங்க...
ஆட்டோல வழக்கம் போல நானே பேரம் பேசி கிளம்பியாச்சு... ஆட்டோல போகும்போதே அவனுங்க போன் பண்ணி 'Bikanirwala' -ன்ற ஸ்வீட் கடை முன்னாடி நிக்கறதா சொன்னாங்க...
ஆட்டோ சத்தத்துல அவனுங்க என்ன சொல்றாங்க-னு கேக்காம 'bikanwala' போகனும்-னு ஆட்டோகாரன்-ட சொன்னேன்...உடனே அவன் டென்ஷனா திரும்பினான்...
"அது bikanwala இல்ல...bikanirwala...நீ என்ன மெட்ராஸா?? இந்தி ஒழுங்கா தெரியாத நீயெல்லாம் இந்தியனா??"-னான் (சத்தியமா அவன் பேசினது புரிஞ்சுது)
வந்துச்சு கோபம்..."இந்தி தெரிஞ்சாதான் இந்தியனா...உனக்கு தமிழ் தெரியுமா...இங்க இருக்க இவ்வளவு இந்தி தெரிஞ்சா போதும்.."-னு எனக்கு தெரிஞ்ச இந்தில ஆட்டோல இருந்து இறங்குற வரை கத்திட்டு இருந்தேன்...(அத அவன் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை-ன்றது வேற விஷயம்)
'இப்ப என்னடா சொல்ல வர்ற?'-னு நீங்க கேக்கலாம்...
'நீ அசிங்கப்பட்டதுக்கு என்ன பண்றது'-னு உங்களுக்கு தோனலாம்...
ஆனா அந்த ஆட்டோகாரன் அப்படி பேசக் காரணம், இந்த சம்பவத்தோட impact, மொழி தெரியாத ஊரில் மனிதர்கள் படும் பாடு-னு பல sensitive issues இருக்கு...
அதனால moral of the story-ய நீங்களே பின்னூட்டத்துல போடுங்க...
"இந்தி தெரியாத நீயெல்லாம்...."
கப்பி | Kappi
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
Subscribe to:
Post Comments (Atom)
47 பின்னூட்டங்கள்:
கதையின் நீதி என்னன்னா ஆட்டோ காரன் ஒவர் ரிஆக்ட் பண்ணி இருன்தாலும் நம்ம ஓலுங்கா ஹிந்தி படிச்சிருக்கலாம். கருனாநிதி பண்ண வேலையால நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சு.
//லீவ்ல காஞ்சிபுரம் வந்தா இஙக இருக்கவனுங்க 'மதுர பாஷை நல்லா கத்துக்கிட்டியே மச்சி'-னு வெறுப்பேத்துவானுங்க //
நாங்களும் காஞ்சிபுரம்தான்.
:-)
இந்தி திணிப்பு போராட்டம் என்று ஒன்று அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது...?
இப்போ இருக்கிற நிலையில் இந்தி கட்டாயப்பாடம் ஆக்கப்பட வேண்டும்!
வாங்க aim,
ஜீவா சொலவது போல் இந்தி திணிப்பு போராட்டம் என்று ஒன்று அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டது என்றாலும் அதற்கு கலைஞரை மட்டும் குற்றம் சொல்வது சரியெனப் படவில்லை...
பாலராஜன்கீதா, நம்ம ஊர்க்காரங்களா...அடிக்கடி வாங்க...
இங்கு பின்னூட்டமாக நேற்று ஏற்பட்ட அனுபவத்தை இடுகிறேன்..
நண்பர்களுடன் குடகில் உள்ள தலை காவேரி சென்று திரும்ப வருகையில் சுமோ டிரைவரிடம் (தமிழ் தெரிந்த கன்னடர்) அங்கு பேசும் மொழிகள் குறித்து பேசிக்கொண்டு வந்தோம்..அப்போது அவர் சொன்னது..
"இங்க இருக்கவங்க எல்லாருமே தமிழ் புரிஞ்சுப்பாங்க,பேசுவாங்க...இங்க மட்டுமில்ல நீங்க எங்க போனாலும் தமிழ்லயே பேசுங்க..தமிழ் தெரிஞ்சவங்க எல்லா ஊர்லயும் இருப்பாங்க...தமிழ் scripts இருக்கிற மொழி அதனால கண்டிப்பா தமிழ் எல்லா ஊர்லயும் இருக்கும்..சொந்த மொழில பேச என்ன தயக்கம்.."
இதுக்கு என்ன சொல்றீங்க?
சரி. மேட்டர் விஷயத்தை சொல்லக்காணுமே. ஆட்டோக்காரன் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆனான்?
நமக்கும் இந்தி தெரியாதுங்கோய்.
இந்தப் பிரச்சினை நம்ம ஊர்ல இருந்து போறவுக நிறைய பேருக்கு இருக்கு. ஆனா ஒரு விஷயம் பாருங்க, நம்ம மக்கள்ல பெரும்பாலானவுக (குறிப்பா மக்களோடு கலக்க வேண்டிய பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள்) அங்க போயி ஒரு ரெண்டு மாசத்துக்குள்ள அந்த மொழியக் கத்துக்கிருவாக. இதேதான்யா பல ஊர்லயும் பிரச்சினை - நான் ஒரிஸ்ஸா, பஞ்சாப்பும் போயிருக்கேன் - மத்த ஊர்களில நான் வச்சுப் பொழைக்கிற இந்தி இந்த ஊர்களில செல்லுபடியானதே கெடையாது. வங்காளம், அஸ்ஸாமுக்குப் போன நண்பர்களும் இதேதான் சொன்னாங்க. நம்ம தமிழை வச்சு ஆந்திரா கர்நாடகா கேரளால ஒப்பேத்துற மாதிரிதான் அது.
தேசிய மொழியைக் கத்துக்கிறது முக்கியம்தான், அதுவும் வேற மாநிலங்களுக்குப் போகும் ஆசையுள்ளவர்கள்! அதுனால நீங்க இந்தி மட்டுமில்ல இயற்பியல் வானவியல் அறிவியல் புவியியல் இதெல்லாம் படிக்காததுக்குக் கூட கருணாநிதிதான் காரணமின்னு நினைக்கிறது என்ன நியாயமோ சொல்லுங்க... நமக்குத்தான் ஏதாச்சும் காரணம் கெடைச்சாப் போதுமே..
நான் ஆம்ஸ்டர்டாமுக்கு போனபோது டச்சுமொழி தெரியாததால் பிரச்சனை ஏற்பட்டது.
டச்சுமொழி சொல்லித்தராத பள்ளிக்கூடம் ஒழிக.
நான் அடுத்த வருடம் சீனா போவேன்.
சீனமொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படும்.சீனம் சொல்லித்தராத பள்ளிக்கூடம் ஒழிக.
ஐயா சாமி.......
நாம் எந்த ஊர்ல பொழைப்போம்னு நம்மளுக்கே தெரியாது.ஸ்கோலுக்கு எப்படியா தெரியும்?எல்லா மொழியையும் பள்ளிக்கூடத்துல கத்துத்தரணும்னு சொன்னா நியாயமாய்யா?
ஆங்கிலம்,தமிழ் மட்டும் பள்ளீகளில் சொல்லித்தந்தால் போதும்.மற்ற மொழிகளை பிரைவேட்டா படிச்சுக்க வேண்டியதுதான்.
இந்தி கட்டாயப்படமாக்கப்படுவதை நான் மிகவும் வன்மையாக எதிர்க்கிறேன்.
http://holyox.blogspot.com/2006_01_29_holyox_archive.html
You can't force someone (Tamils) just because you are big in numbers (Hindi). It was not an option given by the central govt to learn Hindi. It was a forced movement on the non-Hindi ppls in India.
Stop blaming KK but just try to understand the facts behind.
இந்தி தெரிந்தால் இந்தியா மட்டுமல்ல,
பாக்கிஸ்தான்,பங்களாதேஸ்,நேபாளம்,
ஆப்கானிஸ்தான்,அரபு நாடுகள் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம்.இது எனது
நேரடி அனுபவம்!!!.
உலகப்பொதுமொழி ஆங்கிலத்தை கற்கும்போது நமது தேசியமொழி இந்தி கற்பதில் தவறென்ன???.மற்ற அனைத்து மாநிலவத்தரைப் போல தமிழ் மக்களாகிய நாமும் இந்(தி)த விசயத்தில் தெளிவு பெறவேண்டும். நம் தமிழ்மக்கள் அண்டை மாநிலமக்களிடம் கூட ஆங்கிலத்தில் பேசி,அவர்கள் நகைப்பிற்கு ஆளாவதை தவிர்க்க முயற்சி செய்யவேண்டும்.
அன்புடன்,
துபாய் ராஜா.
//நான் வச்சுப் பொழைக்கிற இந்தி இந்த ஊர்களில செல்லுபடியானதே கெடையாது..நம்ம தமிழை வச்சு ஆந்திரா கர்நாடகா கேரளால ஒப்பேத்துற மாதிரிதான் அது//
உண்மை தான் ப்ரதீப்..நானும் கவனித்திருக்கிறேன்...அருகருகே இருந்தாலும் டெல்லியில் பேசும் இந்தியும் ஆக்ராவில் பேசும் இந்தியும் ஒன்றல்ல...
ப்ரதீப், அனானி இரண்டு பேர் சொல்றது மாதிரி எல்லாத்துக்கும் ஒருத்தரை குறை சொல்வது தவறுதான்...
//அண்டை மாநிலமக்களிடம் கூட ஆங்கிலத்தில் பேசி,அவர்கள் நகைப்பிற்கு ஆளாவதை//
துபாய் ராஜா...இதென்ன புதுக்கதை...ஆங்கிலத்தில் பேசினால் நகைக்கிறார்களா???
//ஆங்கிலம்,தமிழ் மட்டும் பள்ளீகளில் சொல்லித்தந்தால் போதும்.மற்ற மொழிகளை பிரைவேட்டா படிச்சுக்க வேண்டியதுதான்//
செல்வன்..
தேவை இருப்பவர்கள் மட்டும் மற்ற மொழிகளை கற்கலாம் என்பது ஏற்புடையதுதான்...ஆனால் தேசிய மொழியை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும்-ங்கறாங்களே அவங்களுக்கு என்ன பதில் சொல்றது??
செல்வன்..
தேவை இருப்பவர்கள் மட்டும் மற்ற மொழிகளை கற்கலாம் என்பது ஏற்புடையதுதான்...ஆனால் தேசிய மொழியை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும்-ங்கறாங்களே அவங்களுக்கு என்ன பதில் சொல்றது??//
தேசிய விளையாட்டு ஆக்கிய தான் அவங்க தினமும் விளையாடறாங்களான்னு கேட்டு சொல்லுங்க.
இந்தி தேசிய மொழியா இருக்க தகுதி இல்லாத மொழி.
தூக்குங்க அதை
தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளை தேசியமொழியாக்க போராடுவோம்.
//அண்டை மாநிலமக்களிடம் கூட ஆங்கிலத்தில் பேசி,அவர்கள் நகைப்பிற்கு ஆளாவதை//
துபாய் ராஜா...இதென்ன புதுக்கதை...ஆங்கிலத்தில் பேசினால் நகைக்கிறார்களா???.
" அன்னியமொழி ஆங்கிலம் பேசுகிறாய். தேசியமொழி இந்தி தெரியாதென்கிறாயே???என்றுதான்.."
அன்புடன்,
துபாய் ராஜா.
//கருனாநிதி பண்ண வேலையால நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சு. //
//நமது தேசியமொழி இந்தி கற்பதில் தவறென்ன???.//
ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா!!!..., இந்தி தேசிய மொழின்னு யாரு சொன்னது?
சரி சச்சரவு தொடங்கறதுக்கு முன்னாடியே, வழக்கமான கருத்துக்கள சொல்லி வச்சிரலாம்.
1. அரசியல் சட்டத்துல சொல்லப்படல. அரசியல் சட்டம், இந்தியை அரசாங்க மொழியாக பயன்படுத்துவதைத்தான் குறிப்பிடுகிறது.
2. Our country is not a nation state. It is a federation of several states. Each state has its own sub-culture, language etc... It has to be accepted for peaceful co-existence.
3. கழகங்கள் இந்தி மொழிய எதிர்க்கல, இந்தி திணிப்பைத்தான் எதிர்த்தார்கள்.
4. அப்படியே இந்தி கற்றுகொண்டே ஆகவேண்டும் என்று ஆர்வமாக இருந்தால், தஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா, மத்திய அரசு செய்தி ஒலிபரப்புத்துறை (என்று நினைக்கிறேன், இலவசமாக) மூலம் படிக்கலாம்.
செல்வன்,
நன்றி...
தேசியமொழியா? என்ன தகுதி? என்ன தேவை? இந்தியா போன்ற நாட்டுக்கு அதன் பங்களிப்பு என்ன?
பெத்த ராயுடு,
நீங்க சொல்றது மாதிரி இந்தி இப்போ ஆட்சி மொழியாக மட்டும் தான் உள்ளதா??? என்பது சர்ச்சைக்குரிய கேள்வி...
முத்து குறிப்பிடுவது போல் இந்தியின் பங்களிப்பும் விவாதத்துக்குரியதே...
peaceful co-existence-க்கு இந்தியால் ஆபத்து வருமென்றால் அதை ஆட்சி மொழியில் இருந்து நீக்குவதில் என்ன தவறு...
அதே நேரத்தில் தனி மனித survival-க்காக இந்தி கற்றுதானே ஆக வேண்டும்..
இந்தி ஆதரவு/எதிர்ப்பை இந்த இரண்டு context-லும் பார்க்க வேண்டும் அல்லவா...
எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லை. கருணாநிதி தடுத்தார் என்பவர்கள், தயவு செய்து அதற்கான ஆதாரங்களை கொடுங்கள். ஹிந்தி திணிப்பைதான் எதிர்த்தனர். இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
தலைமுறைகள் ஹிந்தி படிக்காததால் வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று புலம்புவது தின-மலம் கூட்டத்தின் வேலை.
நான் படித்த பள்ளியில், கல்லூரியில் ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தது.
ஆகவே ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைக்காதீர்கள்.
//சரி. மேட்டர் விஷயத்தை சொல்லக்காணுமே. ஆட்டோக்காரன் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆனான்?
//
தெரியலயேப்பா தெரியலயே...
//அன்னியமொழி ஆங்கிலம் பேசுகிறாய். தேசியமொழி இந்தி தெரியாதென்கிறாயே???என்றுதான்//
துபாய் ராஜா..இது உங்களுக்கே ஓவரா தெரியல..
// தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லை//
அருன்மொழி..வாஸ்தவமான பேச்சு...
இந்தி திணிப்பிற்கும் இந்தி கற்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நம் ஆட்கள் உணர மறுக்கிறார்கள் இல்லையெனில் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்...
naatukku oru common mozhi irrupathu nallathu.
எனக்கென்னவோ அந்த ஆட்டோக்காரர் சவுண்ட் விட்டதற்கு ஹிந்தி வெறி காரணம் என்று தோன்றவில்லை. நாம் சொல்ல விரும்புவதை அவர் புரிந்துகொள்ள முடியாமைக்கு நமது மொழி அறிவு குறைவு காரணமாக இருந்தது கண்டு அவர் எரிச்சலாகியிருக்கலாம். இது நம்மூரிலும் நடக்கும்.
பெங்களூரில் கன்னடம் தெரியாமல் நானும் கஷ்டப்படுகிறேன். கற்றுக்கொள்ளவும் ஆசையில்லை. ஏனெனில் தமிழிலேயெ நன்றாக சமாளிக்கலாம் (காவேரி பிரச்சினை வந்தாலொழிந்து).
இந்த பிரச்சினை பற்றி வேறு ஒரு வலைப்பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் இங்கும் செல்லும் என்பதால் அதை கீழே பதிக்கிறேன்:
http://www.blogger.com/publish-comment.do?blogID=25891451&postID=114773020464941717&r=ok&mod=true
ஹிந்தியை பாடத்திட்டமாகப் படிக்கும் பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழி, நம் தாய் மொழியைவிட வலுவாகவுள்ளது. யாம் வசித்துவரும் கன்னட தேசத்தில் மொழிப்பற்று அரசியல்வாதிகளால் அல்ல, பொது மக்களாலேயே வளர்ச்சி பெற்று ஒரு சமூக பண்பாக உள்ளது. ஆனால் இங்கு வாழும் மக்கள் பிற மொழிகளையும் பேசுகிறார்கள். தமிழ் மீடியங்களாகவுள்ள பள்ளிகள் உள்ளன.
இந்தியாவை வேறு ஒரு நாடாகக் கருதும் வட கிழக்கு மாநில மக்கள்கூட ஹிந்தியில் பேசுகிறார்கள்.
ஹிந்தி கற்றதால் தாய் மொழி வளர்ச்சியானது பாதிக்கப்படவில்லை. நன்கு வளர்ந்துள்ளது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு போல் இது ஒரு திராவிடப் புளுகு.
ராமசாமி நாயக்கரால்தான் தமிழகத்திலே ஜாதி வெறி குறைந்தது என்று ஒரு புளுகு இருக்கிறது. உண்மையில் ராமசாமி நாயக்கரின் தொடர்பு இல்லாத மாநிலங்களில்தான் ஜாதி வெறி குறைந்து காணப்படுகிறது. மனிதருக்கு மனிதர்கள் மலத்தை புகட்டுவதில்லை.
ஒரு மலையாளிக்கு, இன்னொரு மலையாளிதான் முக்கியம். ஆனால் தமிழனுக்கு மற்றொரு தமிழனின் ஜாதிதான் முக்கியம். திராவிடத்தின் விளைவு இது.
ம்யூஸ்,
ஆட்டோகாரன் சவுண்ட் விட்டதற்கு நீங்கள் சொல்லும் எரிச்சலை சகிப்புத்தன்மை என்று எடுத்துக்கொள்ளலாமா??
//ஏனெனில் தமிழிலேயெ நன்றாக சமாளிக்கலாம் (காவேரி பிரச்சினை வந்தாலொழிந்து).//
வழிமொழிகிறேன்..
//யாம் வசித்துவரும் கன்னட தேசத்தில் மொழிப்பற்று அரசியல்வாதிகளால் அல்ல, பொது மக்களாலேயே வளர்ச்சி பெற்று ஒரு சமூக பண்பாக உள்ளது.//
உண்மை...கேரளாவையும் உதாரணமாகச் சொல்லலாம்.. தமிழர்களிடையே பொதுவாக எதிலுமே விழிப்புணர்வு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
இதுவரைக்கும் எல்லாரும் கலைஞர்,அண்ணா வரையில் சொல்லிட்டிருந்தாங்க...நீங்க ஈ.வெ.ரா-கு போயிட்டீங்க...
"ஜாதியை ஒழிக்க திராவிட இயக்கம் முயன்றதால் தங்கள் ஜாதியைக் காப்பாற்றும் பற்று மக்களுக்கு அதிகமாகிவிட்டது" என்கிறீர்களா???
அல்லது திராவிட இயக்கத்தின் மொழிப் போராட்டத்தால் ஜாதி வெறி பெருகிற்றா?? என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை...
>>>"ஜாதியை ஒழிக்க திராவிட இயக்கம் முயன்றதால்.....<<<
எனக்கு வயது 32. திருமணமாகவில்லை. அப்பாவியான எனக்கு ஹார்ட் அட்டாக் வரவேண்டும் என நினைத்து இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே. நியாயமா?
ஓ. ஓகோ. இப்போது புரிகிறது. அவர்கள் பார்ப்பன ஜாதியை மட்டும் அழிக்க செய்துவரும் முயற்சி பற்றி சொல்லுகிறீர்களா. அப்போ நீங்கள் கேட்டது சரிதான்.
>>>அல்லது திராவிட இயக்கத்தின் மொழிப் போராட்டத்தால் ஜாதி வெறி பெருகிற்றா?? <<<
அவர்கள் எல்லாவற்றையுமே ஜாதியோடு இணைத்துத்தான் பார்த்தார்கள். அவர்கள் வீட்டு காளை மாடு கன்று போடாததற்குக்கூட அவர்கள் ஜாதியை துணைக்கழைக்கிறார்கள்.
//காளை மாடு கன்று போடாததற்குக்கூட //
காளை மாடு கன்று போடுமா ? சாணி தானே போடும் :)
பகுத்தறிவு பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறீர்களே கோவிகண்ணன். இறந்தவர்களுக்கு திவசம் செய்வது மூடநம்பிக்கை. ஆனால் பிறந்த நாட்களில் பெரியார் சிலைக்கு மாலை போடுவதும், அண்ணா சமாதியில் அஞலி செலுத்துவதும் பகுத்தறிவு. அந்த வகையில் திராவிடர் கழகத்தினர் வீட்டு காளை மாடும் கன்று போட்டாக வேண்டும்.
>>>சாணி தானே போடும் :) <<<
அப்படியே சாணி மட்டும் போட்டாலும் அது பார்ப்பன சாணியாக இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் திராவிட கொள்கை.
//இதுவரைக்கும் எல்லாரும் கலைஞர்,அண்ணா வரையில் சொல்லிட்டிருந்தாங்க...நீங்க ஈ.வெ.ரா-கு போயிட்டீங்க...//
அவரு ராமசாமி பக்தர். அவர் பெயரை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் எது நடந்து இருந்தாலும் அதற்கு காரணம் ராமசாமி என்பார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒருத்தர் கிடைச்சுடறாங்க!!!
///இங்கு பின்னூட்டமாக நேற்று ஏற்பட்ட அனுபவத்தை இடுகிறேன்..
நண்பர்களுடன் குடகில் உள்ள தலை காவேரி சென்று திரும்ப வருகையில் சுமோ டிரைவரிடம் (தமிழ் தெரிந்த கன்னடர்) அங்கு பேசும் மொழிகள் குறித்து பேசிக்கொண்டு வந்தோம்..அப்போது அவர் சொன்னது..
"இங்க இருக்கவங்க எல்லாருமே தமிழ் புரிஞ்சுப்பாங்க,பேசுவாங்க...இங்க மட்டுமில்ல நீங்க எங்க போனாலும் தமிழ்லயே பேசுங்க..தமிழ் தெரிஞ்சவங்க எல்லா ஊர்லயும் இருப்பாங்க...தமிழ் scripts இருக்கிற மொழி அதனால கண்டிப்பா தமிழ் எல்லா ஊர்லயும் இருக்கும்..சொந்த மொழில பேச என்ன தயக்கம்.."
இதுக்கு என்ன சொல்றீங்க?//
அப்படி எல்லாம் இல்ல. அங்க இருக்குற எல்லா தொழில் காரனுக்கும் எல்லா மொழியும் தெரியும். உங்களால 1000 ரூவா லாபம்னா சும்மா அகநானூறு, புறநானூறு எல்லாம் எடுத்து விடுவாங்க.
அந்த டிரைவர் தமிழ் பேசறதுக்கு முன்னாடியே நாங்க பேரம் பேசிட்டோம் பிரசன்னா :)
கப்பி பயலே,
பெயர்க்காரணம் தருவீர்களா?
மிக நல்லதொரு தலைப்பு.. நானும் அதே தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில் எல்லாப் பரீட்சைகளையும் எழுதிப் பின் ஐந்து வருடங்கள் ஹிந்தி வகுப்புக்கள் எடுத்தேன்.. தற்பொழுது பெங்களூரில் கன்னடம் தத்தக்கா பித்தக்கா என்று வரும்பொழுது ஹிந்தி ஒன்றே கைகொடுக்கிறது. எங்களை (என் உடன்பிறப்புக்களையும்) சிறு வயதிலேயே ஹிந்தி படிக்க வைத்த என் தந்தைக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்....
ஆயினும் தற்பொழுது நான் அலுவலக நண்பர்களுடன் ஹிந்தியில் உரையாடுகையில் அவர்கள் என்னைப் பார்த்து நகைச்சுவையாகக் கேட்கின்றனர்.. 'நீங்கள் எப்படி ஹிந்தியில் பேசுகிறீர்கள்?' என்று. நான் ஏனென்று வினவினால், 'இல்லை, தமிழ்நாட்டிலுள்ளவர்கள் பெரும்பாலும் ஹிந்தி பேச மாட்டார்களே' என்ற பதிலே வருகிறது அவர்களிடமிருந்து!
ஏனோ தெரியவில்லை... அறிஞர் அண்ணா மீது கோபம் வந்தது திடீரென்று. அவர்தானே அந்நாளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்!!! ஆயினும் நம் மக்கள் தற்போதைய நிலவரங்கள் புரிந்து நமது தேசிய மொழியினைக் கற்றால் நல்லது!
பாராட்டுக்கள்..
//பார்த்து நகைச்சுவையாகக் கேட்கின்றனர்.. 'நீங்கள் எப்படி ஹிந்தியில் பேசுகிறீர்கள்?' என்று.//
"வாயால தான்.."
//பெரும்பாலும் ஹிந்தி பேச மாட்டார்களே' //
"ஆமா பசும்பாலோட தான் பேசுவாங்க"
//ஏனோ தெரியவில்லை//
"B னோ தெரியுதா"
//தலைமை தாங்கி நடத்தினார்//
"ஏன் கண் மை கிடைக்கலையா"
"ஏதாவது சொல்லு"
"ஏதாவது"
இது மாதிரி கப்பித் தனமா பேசித் திரிஞ்ச பய புள்ளைக எல்லாம் சேர்ந்து 'kappi guys'-னு பேரு வச்சுக்கிட்டோம்...
எங்கள பாத்தாலே பத்தடி தள்ளிப் போவாய்ங்க...அந்தளவுக்கு கப்பி...
அதுல ஒருத்தன் தான் இந்த கப்பி பய...
பாராட்டுக்களுக்கு நன்றி இராகவன் (எ) சரவணன்...
ஹிந்தி கற்றுக் கொள்வது தனி மனித உரிமை,ஆனால் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அதன் திணிப்பை எதிர்த்தே ..ஹிந்தியைக் கற்றுக் கொண்டால் தான் இந்தியன் என்பது கூட்டாட்சித் தத்துவத்தை கேலி செய்வது ..இந்தியா என்பதே பல மொழிப் பேசுவோருக்கான் நாடு ...இந்திப் பேசுவோருக்கான நாடு அல்ல ..மற்ற மொழி நண்பர்களுடன் ஆங்கிலம் பேசவதால் கிண்டல் அடிக்கப் படும் நண்பர்களுக்கு ..அவர்கள் கிண்டல் அடிப்பதற்கு ஒன்றுமில்லை ..என்னிடமும் பலர் கேட்டு என்னுடைய பதில்களால் பலர் என்னைக் கிண்டலிப்பதற்கு வரவே மாட்டார்காள் .அவர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியவில்லை ..
முஸ் --ஈ வெ ரா வை எல்லாவற்றிர்கும் இழுக்காதீர்.சாதிப் பிடிப்பு வட இந்தியாவில் குறைந்தது என்பது காமடி ..எந்த ஆதாரத்தில் சொல்லுகிறேர்கள் என்பது புரியவில்லை ..
துபாய் ராஜா told
//அன்னியமொழி ஆங்கிலம் பேசுகிறாய். தேசியமொழி இந்தி தெரியாதென்கிறாயே???என்றுதான்//
We are raped by british one time. This Hindi-rapists say that as a pretext to make tamil a permanent prostitute.
We won't watch our language, our culture being raped by any body.
Learning any language is one's own will.
regarding 'National Language'
As already mentioned in this blod by some body that official India is 'Union of Indid'(Aikkiya India).
It is a Federation state. That is country consists of more than one Nation.
Nation according to Communism:
1) Common Language
2) Broader Landscape.
3) Notable History and Culture.
4) A state(govt) to represent the Nation.
The important thing is that how these 4 points are evaluated.
Ex #1:
Jews - at the time of World war
have No state, No broader Landscape(They spread across europe).
But they had those two in their history. And they had that ambition to become a Nation.
Ex #2:
Afro-Amricans - They had Broader Landscape, They had common Language, They had common culture, They had no State.
All the above came due to the three, or four hundred years of their history in America.
Their nationality is different from Africans.
Ex #3:
Due to the reason applicable to Ex#2, Tamilians and Eila Tamilians are different Nationals(Though belong to same Race).
Muse - solluvathu athanayum Dubakooraka(Not true) ullathu.
Kannada language develope ahi ullathaga avar kuruvathey karnataka patriya arivu avarukku suthamaka illai enpathai kattugerathu.
Appurum Mukhiyamaga onru Karnataka is not just Bangalore.
Even in Bangalore it is Feudlist and Imperialists are dominant.
That is why most of the people won't like Bangalore as compared to chennai(something they feel as 'anniyamaga').
(Some vedalai payalgal(Aduls) will like bangalore due to its climate and multi state kugilies)
This is because most of Bangalore are previously villages('Hallis').
And still the aboriginal people are living in those hallis.
Rural mentality(regressive mentality) in Urban area.
Thus Bangalore exemplifies typical Indian like third worlds, Where Imperialism ally with Feudalism. and National Capitalists die.
This perception will help you understand each and every unique problems of Bangalore and Bangalore like cities(Noida - I am not sure about this Noida)
'Muse' never have this historical perception until he shun away his endevours to find answers only in Puranams.
போனபெர்ட்
பின்னூட்டத்துக்கு நன்றி...
அருமையான உதாரணங்கள்...
என் கருத்தை இன்னும் 3 4 நாட்களில் இடுகிறேன்..பயண வேலைகளில் கொஞ்சம் பிஸி...
இந்தி தேசிய மொழியா? எப்படி????
எப்படி எப்படி எப்படி?
டெல்லிக்குப் போனதால இந்தி தெரியல்லை என்று அழுகிறீர்கள், போகா விட்டால்??? எப்படி?
7 கோடி தமிழரில் எத்தனை பேர் டெல்லிக்குப் போய் ஆட்டோக் காரனுடன் சண்டை போடுகிறார்கள். ஒரே ஒருவர், இதற்காக 7 கோடி தமிழரும் இந்தி கற்க வேண்டுமா? கொடுமை ஐயா.
சரி, கருணானிதி, அண்ணத்துரை எல்லாரும் திருந்தி, இந்தி கற்க அனுமதித்து இப்ப எல்லோரும் இந்தி கற்று விட்டீர்கள் என்று வைத்து கொண்டால். "உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே, பிறகு எதற்குத் தமிழ் என்று எல்லாமே இந்தியென்று ஆகி விட்டால்? எனக்குப் பகீரென்கிறது. சிலருக்கு " அதுக்கென்ன?"
ஜெயபால்..
பதிவைத் தவறாக புரிந்துகொண்டீர்கள்...இந்தி தெரியவில்லை என அழுவதற்க்காகவோ..7 கோடி தமிழர்கள் இந்தி கற்க வேண்டும் என வக்காலத்து வாங்குவதற்காகவோ இட்ட பதிவல்ல இது...
டெல்லியில் எனக்கு நேர்ந்த அனுபவத்தையும் அந்த தனிப்பட்ட ஆட்டோகாரரின் மொழி சகிப்புத்த்ன்மையற்ற செயலையுமே குறிப்பிட விரும்பினேன்...
// கருணானிதி, அண்ணத்துரை எல்லாரும் திருந்தி//
யாரும் திருந்தத் தேவையில்லை..என்னைப் பொறுத்த வரை தமிழகத்தின் மொழிக் கொள்கையில் எந்த மாற்றத்துக்கும் அவசியம் இல்லை...
//"உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே, பிறகு எதற்குத் தமிழ் என்று எல்லாமே இந்தியென்று ஆகி விட்டால்?"//
என்ன லாஜிக்-ங்க இது :))
Hey..
Are you from Kanchipuram ? Which school did you go to ..
Glad to see kacnhipuram name on yur blog.
--
Fellow Kanchi guy
Hey..
Are you from Kanchipuram ? Which school did you go to ..
Glad to see kacnhipuram name on yur blog.
--
Fellow Kanchi guy
காஞ்சி தந்த தவப் புதல்வன் தான் அனானி :))
கப்பி!
நல்லாருக்குங்க உங்க பதிவு. டெல்லியில கொஞ்சம் கோவக்கார பசங்க 'கரம் கூன்'னு சொல்லுவாங்க-சூடான ரத்தம். ஆனா எல்லாரும் அப்படி இருக்குறதில்ல. இந்தி தெரியலைன்னாலும் உதவி பண்ணறவங்க எங்கேயாச்சும் இருக்கத் தான் செய்வாங்க. ஆனா மத்த நகரங்களோட ஒப்பிட்டு பாக்கும் போது ஆங்கில அறிவும் சராசரி மக்களுக்கு கம்மி. Socks, Kerchief போன்ற சொற்களையும் இந்தியிலத் தான் சொல்றாங்க. நானும் அஞ்சு வருசம் டெல்லியில் குப்பை கொட்டிருக்கேன். எனக்கு தெரிஞ்சவரு ஒருத்தரு டேக்ஸி காரன் டேட் சோ ரூப்யா(150) கேட்டதுக்கு நான் டாய் சோ(250) தான் தருவேன்னு அடம்பிடிச்சிருக்காரு. நல்ல காலம் இந்தி தெரிஞ்ச ஒருத்தரு வந்து 100 ரூபாயைக் காப்பாத்திட்டாரு.
நீங்க கேட்ட Moral: Be a Roman when you are in Rome. அம்புட்டுத் தேன்.
//Socks, Kerchief போன்ற சொற்களையும் இந்தியிலத் தான் சொல்றாங்க.//
நானும் கவனித்திருக்கிறேன்...நாம் ஏன் அவ்வாறு தமிழ் சொற்களை உபயோகிப்பதில்லை என்றும் யோசித்திருக்கிறேன்...
//நல்ல காலம் இந்தி தெரிஞ்ச ஒருத்தரு வந்து 100 ரூபாயைக் காப்பாத்திட்டாரு.
//
யாரந்த சங்கத்து சிங்கம்??
//Be a Roman when you are in Rome.//
agreed.
Hindi is not 'THE' National Language of India. Hindi is 'A' National Language of India.
http://216.239.59.104/search?q=cache:iHWhCUt4kh8J:rajbhasha.nic.in/1018engrs.pdf+%22National+Language%22+of+India&hl=en&gl=in&ct=clnk&cd=23&client=firefox-a
Article 343படி இந்திய விற்கு ஹிந்தி மட்டும் ஆட்சி மொழி, தேசிய மொழி அல்ல . புரிந்துகொள்ளுங்கள்.. ஐரோப்பிய நாடுகளும் அனைத்து உலக நாடுகளும் தத்தம் தாய்மொழியை போற்றுகின்றன.. முன்னுரிமை தருகின்றன.. எந்த மொழி திணிப்பையும் ஒத்துக்கொள்வது இல்லை..
எனது மற்ற மொழி ஆசிரியர்களும், பல மாநிலத்தை சேர்ந்த கல்வி, பொருளாதாரம், பண்பாடு சார்ந்த பெருமக்களும் தமிழர்களின் தனித்தன்மைக்கு அவர்களது மொழி , பண்பாடு சார்ந்த ஈடுபாடே காரணம் எனவும், குறிப்பாக ஆந்திர மக்கள் மேற்கண்டவை இல்லாததால் தங்கள் அடயாளத்தை இழப்பதாகவும் (எனது andrapradesh ஜேர்மன் ஆசிரியர், Hyderabad) கூறுகின்றனர்.. வெளி நாடுகளில் குறிப்பாக விஷயம் தெரிந்த வட, தென் மாநிலத்தவர் தமிழர்களை போற்றுகின்றனர், காரணம் நமது மொழி, பண்பாடு சார்ந்த எண்ணங்கள்..
தமிழ்நாட்டு அரசியல் தெரிந்தோ தெரியாமலோ இவ்விடயத்தில் நல்லதே செய்துள்ளது.. வெளி நாட்டவர் யாரும் மற்ற மொழிகளை எண்ணி வருந்துவதில்லை, நாடுகள் மொழி சார்த்த இனமாகவே தங்களை அமைத்துக் கொண்டுள்ளன.. British ஆதிக்கத்தால் நாம் ஹிந்தியை ஏற்கவேண்டி யுள்ளது.. ஒரு போதும் நாம் ஹிந்தி தெரியவில்லை, படிக்கவில்லை எனக்குற வெட்கப்படதேவைல்லை.. அண்ணாவையும், கருணாநிதியையும் குறை கூர அவசியமில்லை.. ஏனெனில் article 343, 345 படி ஹிந்தி மட்டும் நமது தேசியமொழி இல்லை.. நமக்கு 22க்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் உள்ளன.. வியாபர நிமித்தமாக ஹிந்தி யை படிப்பது அவரவர் விருப்பம்.. 2 மாதங்கள் போதும்.. அதற்காக நமது பெரும்பான்மை (நமது தாத்தா, பாட்டி, அப்பா அம்மா) தேர்தெடுத்த அரசியவாதிகளை குறை சொல்வது நியாயமில்லை..
எதை எதையோ மேல் நாட்டவரைக் கொண்டு மேற்கோள் காட்டும் நாம் மொழி சார்த்த விடயத்தில், அணைத்து உலக நாடுகளையும் எடுத்துக்காட்டாக கொள்வது நல்லது..
நீங்கள் (பெரும்பாலும்) உச்சரிக்கும் எல்லா நாடுகளின் பெயர்களும் , அவைகளின் கட்டமைப்பும் மொழி சார்ந்தே உள்ளதை உணர்வீர்கள்.. (ஒரு சில தேசங்களை சொல்லிப் பாருங்கள்)
அதிஷ்டவசமாக அரசியல் வாதிகள் செய்த நல்லதை குறை காண்பது நியாயமில்லை.. ஒப்பீட்டளவில் மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்கள் உழைப்பால் மிகவும் முன்னேறியுள்ளனர்.. உறுதியாக சொல்வேன் நாம் கவலை படுவது மற்றவர்கள் கேலி பேசுவதை எண்ணித் தான்.. நாம் வருத்தப்பட ஒன்றும் இல்லை, கேட்பவர்கள் விஷயம் புரியாதவர்கள்.. விசயம் புரிந்தவர்கள் கேட்பதில்லை..
கிட்டத்தட்ட இந்தியாவின் பல மாநிலங்களை வேலை செய்துள்ளேன்..
அவர்கள் நம்மீது செய்ய முயல்வது திணிப்பு தான்.. நாமாக விரும்பியே (நோக்க ங்கள் அடிப்படையில்) ஒரு மொழியை கற்க இயலும்..
ஐரோப்பியர்கள் தம் மொழி மீது கொண்ட , போற்றுகின்ற பற்று , நம்மவர்கள் மற்றும் சில ஊடகங்களால் நமக்கு 'வெறி' என்று ஊட்டப்படுவது மட்டும் உண்மை.. (குறிப்பு தமிழ் 4 நாடுகளில் ஆட்சி மொழி , 8 நாடுகளில் தேசியமொழி, ஹிந்தி அப்படி இல்லை)..
வளம் கொண்ட மொழியை விட்டு மற்றவர்கள் ஏளனம் எண்ணி வருந்துதல் , அரசியல் வாதிகளை குறை சொல்லல் அவசியமில்லை.. காலம் அதற்கு தக்க பதில் சொல்லும்.. சொல்லும் காலம் நெருங்கி விட்டது..
sources:
http://www.merinews.com/catFull.jsp?articleID=126953
http://en.wikipedia.org/wiki/Languages_of_India#Classical_languages_of_India
// Neither the Constitution of Indianor Indian law specifies a National language. Article 343 of the constitution specifies that the official language of the Union shall be Hindi in Devanagari script. Article 354 specifies that the legislature of a State may by law adopt any one or more of the languages in use in the State or Hindi as the Language or Languages to be used for all or any of the official purposes of that State.[4] Section 8 of The Official Languages Act of 1963 (as amended in 1967) empowers the Union Government to make rules regarding the languages which may be used for the official purposes of the Union, for transaction of business in Parliament, and for communication between the Union Government and the states.
India does not have the concept of a single "national language". The Indian Constitution does not recognize Hindias the national language of India. Instead, "official languages" are recognized for individual states. Article 343 of the Indian Constitution recognises Hindi in Devanāgarī script as the official language of the Union Government only not for state. The states have their own official languages, depending on their linguistic demographics. For example, the state of Tamil Nadu has Tamilas its sole official language, while the state of Jammu and Kashmir has Kashmiri, Urdu and Dogri as its official languages. The Constitution also allows for the continuation of use of the English language for official purposes. Article 345 provides constitutional recognition to "official languages" of the union to include any one or more of the languages in use in the state or Hindi language adopted by a state legislature as the official language of that state. Until the Twenty-First Amendment of the Constitution in 1967, the country recognised 14 official regional languages. The Eighth Schedule and the Seventy-First Amendment provided for the inclusion of Sindhi, Konkani, Manipuri and Nepali, thereby increasing the number of official regional languages of India to 18[18]. Individual states, whose borders are mostly drawn on socio-linguistic lines, are free to decide their own language for internal administration and education. In 2004, the government elevated Tamil,[19][20][21] to the newly created official status of "Classical Language", followed by Sanskrit[22] in 2005. The Constitution of India recognises 22 languages, spoken in different parts the country//
//எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லை. கருணாநிதி தடுத்தார் என்பவர்கள், தயவு செய்து அதற்கான ஆதாரங்களை கொடுங்கள். ஹிந்தி திணிப்பைதான் எதிர்த்தனர். இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
தலைமுறைகள் ஹிந்தி படிக்காததால் வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று புலம்புவது தின-மலம் கூட்டத்தின் வேலை.
நான் படித்த பள்ளியில், கல்லூரியில் ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தது.
ஆகவே ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைக்காதீர்கள்.//
ஆம், நீங்கள் சொல்வது மிகச் சரி..
India does NOT have a National Language
Part XVII of the constitution:
This part 17, defines an OFFICIAL language, NOT a national language.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17.html
Article 345: This gives the State govt., power to decide its own "OFFICIAL LANGUAGE"
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17345.html
Article 343: This defines Hindi in devangari script and English to be the "OFFICIAL LANGUAGES" of union govt.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17343.html
DIFFERENCE between National and Official Language:
NATIONAL LANGUAGE: Defines the people of the nation, culture, history.
OFFICIAL LANGUAGE: A language that is used for official communication
While a National language by default can become the Official language, an Official language has to be APPROVED legally to become the National language.
All languages spoken in India, starting from the most populous to the least are our national languages, because all of them define the people of this nation, culture and their history collectively.
India has NO LEGALLY DEFINED NATIONAL LANGUAGES ONLY 23 OFFICIAL languages as per the constitution.
Anna Durai and Two dogs theory !
(Former Tamil Nadu Chief Minister (1967-1969) C. N. Annadurai was a great orator and writer. He sprinkled his speeches and writings with little stories (fables) to drive home his points. Here is a short story he told to drive home the irrationality of arguments for making Hindi the link language of India.)
A man had two dogs - a big one and a small one. He wanted his dogs to go in and out of the house freely without him having to keep the house door open all the time. So he built two "trap doors" - one big trap door for the big dog and one small for the small dog. Neighbors who saw these two doors laughed at him and called him an idiot. Why put a big door and a small door? All that was needed was the big door. Both the big and the small dog could use it!
Indian government's arguments for making Hindi the official or link language of India are as ridiculous as the need for a big door and a small door for the big dog and the small dog. Indian government agrees that English is needed for communication with the world, and every school in India teaches English after the fifth grade. Then the Indian government says that all of us should know Hindi also in order to communicate amongst ourselves within India. I ask, "Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"
Why English ?
A question that is often asked is "Why are the Tamils willing to learn English but not Hindi?"
My answer would be "Why not Swahili ?"
Even though the answer is actually a question, the answer to my question is the answer to the earlier question too – "No significant use".
If the technical journals and other scientific articles and information/knowledge is in Swahili, people will learn it and not English. The same logic can be used for any other language.
What do we get with Hindi?
Quite often learning/speaking Hindi is associated with patriotism. Does it mean learning Tamil or any other Indian language is unpatriotic ? or is it lesser Indian language than Hindi ? Why is there such a skewed logic ?
Hindi helps you to communicate with the majority Indians is another answer. As far as Tamil Nadu is concerned, Tamil is the majority language so its good to know it. If a Tamil, moves out of TN, he should learn the local language of the region and not Hindi. Till then, a mixture of English and a few words can keep him alive in another state. Making Hindi compulsory in TN for the few who travel outside TN is absurd. What is the percentage of Tamils traveling outside TN?
Now that the jobs are predominantly created in the southern states, will the North Indian in general and Hindi person specifically learn a South Indian language – any one ? or in other words, most Hindi speaking person tend to look for Bangalore, would they learn Kannada ? Shouldn't they learn Kannada?
Respect is a two way street, if you can't learn my language, why should I learn another language ? Unless and until, I see a benefit in learning another language, I don't intend to.
Unravelling the Myths - I
1) It promotes tourism since many north Indians would come down south to visit.
This is a pretty silly argument since NO region would changes it linguistic character for the sake of tourists dropping in unless and until their very source of livelihood depended on those tourists. This is not the case for TN. TN does not depend on tourism industry.
But still, I would like to add these points to counter:
France does NOT promote English which is widely used in the European Union but still it has the highest number of tourists flocking to the nation.
http://en.wikipedia.org/wiki/World_Tourism_Rankings
Moreover, it makes perfect sense for the TN government to advertise and attract foreign tourists since better income can be generated from dollars and euros instead of just rupees.
2) It helps the TN people to move up north to get a job
As far as I know, many Tamils have moved up north and have picked up the dominant language in that region for their survival. When Tamils moving up north have picked up the dominant language, why can't the north Indians moving to TN, pick up Tamil?
Moreover, what is the percentage of people who want to go up north to get a job? Is it okay for the state to waste its resources on a minuscule number instead of promoting other vocational courses that would produce skilled man power to contribute to the economy?
I think it does not make any sense to burden the whole population with another language when the time and resources can be used for learning a new subject or a vocational course that can generate income inside TN. This is specifically valid since India as a country is short on money and other critical resources that are essential for generating jobs/income.
By concentrating more on the vocational training and in learning new subjects instead of Hindi, TN can help in generating more jobs for the people in TN.
Unravelling the Myths - II
3) It makes it possible for TN to attract "talented migrants" like Bangalore.
Chennai is a leader based on available labour and low attrition whereas Bangalore suffers due to high attrition rate.
http://www.deccanherald.com/deccanherald/Apr282006/realty121272006427.asp
The above link talks about the A T Kearney's Indian City Services Attractiveness Index 2005
One of the primary reasons that was stated for Chennai being "attractive" for investments is because it had a lower "attrition rate". This "lower attrition rate" is largely attributed to the "stable population" in Chennai while B'lore has a "floating population" that would be willing to shift bases quite often unlike Chennai which produces the man-power from its "internal human resources".
While this is not the only reason for the attrition rate, this plays an important role in keeping the attrition rate low according to Nasscom survey.
4) Hyderabad/AP has better software growth because they speak "hyderabadi" which helps to attract new talents from north India.
Karnataka logged in a software export growth of 36 per cent to touch Rs 37,600 crore for 2005-06 from Rs 27,600 crore during the last fiscal. Tamil Nadu's contribution during the fiscal was Rs 14,115 crore (Rs 10,730 crore) and Andhra Pradesh touched Rs 12,521 crore (Rs 8,270 crore), according to numbers released by respective STPI centres.
http://www.thehindubusinessline.com/2006/05/07/stories/2006050702500300.htm
While there is a huge difference between Karnataka and TN in terms of software exports, AP/Hyderabad has still not caught up with TN.
Unravelling the Myths - III
5)Hindi is a dominant language and it makes sense to learn it
What do you mean by dominant language? Numbers??
If numbers mean superiority, then the people of the world will be learning "Chinese/Mandarin" and not English. Also, India would have come second in the Olympics.
Hindi in Devanagari script is ONE of the Official Languages in India along with 20 or so other languages including Tamil, Telugu, Malayalam, Kannada, Marathi, Gujarati, English etc.
Specifically, Hindi in devanagari script is the Official language along with English in the central government and is also use by a few states and union territories. Out of the 28 states and 7 UTs, 10 States and 3 UTs use Hindi as one of the Official Languages. This still leaves the majority (18 states, 4 UTs) beyond their ambit.
Tamil:
1)Official language of India/TN/Pondicherry
2) Classical language
3) Official language of Singapore
4) official language of Sri Lanka
5) constitutionally recognized by the government of South Africa.
http://en.wikipedia.org/wiki/Tamil_language
6) Hindi helps the economy.
Tamil Nadu's contribution to the Indian economy:
Cars – 21 %
Heavy Commercial Vehicles – 33%
Auto Components – 35%
Railway Coaches – 49%
Cotton Yarn – 32%
Leather Tanning Industry – 70%
Software -14%
Power Driven Pumps – 50 %
http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu
Its comes third in terms of FDI investments after Maharashtra and Delhi region.
TN has achieved this without Hindi. I am NOT going to elaborate much on the BIMARU (Bihar, Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh; including Jharkhand, Chhattisgarh, Uttaranchal) states. They have not shown any remarkable progress with Hindi. It basically means, Hindi does NOT influence the market.
Unravelling the Myths - IV
7) It is all because of Karunanidhi
The present day politicians use the language issue but they are not the initiators.
The few individuals who know about the anti-hindi agitation believe that it happened in the 1960s but the first anti hindi agitation happened in 1937-38 – yes, before independence!
The policy guidance issued to Congress Ministers and legislators did not specifically state the need and urgency for the implementation of its language policy through the teaching of Hindustani (Hindi) in schools. However, the Congress Ministry in Madras Presidency chose to implement the language policy outline of the Indian National Congress in 1937/1938 which led to an agitation against Hindi in the province.
The Congress leaders refused to acknowledge that the anti-Hindi agitation in the Tamil region of the Madras Presidency was backed by a majority of the people in the region. Such was the dogmatic position of Mahatma Gandhi that he always referred to the anti-Hindi stance in Tamilnadu as being supported only by some people.
However, Mahatma Gandhi (for whom the pre-eminent status of Hindi-Hindustani as the official/national language, was never a matter for any accommodation or adjustment of any different view point and who could see the position of Hindi-Hindustani mostly in terms of Hindu-Muslim unity backed by the history of pro-Hindi movement within the Hindustani speaking states, for his own political expediency) revealed that he was not against the use of Criminal Law provisions against anti-Hindi agitators when he called implicitly the anti-Hindi agitation as "picketing nuisance" ( Harijan, 10 Sept. 1938).
http://www.languageinindia.com/dec2005/languagepolicy1936-1.html
Gandhi viewed everything as Hindu-Muslim and was not able to see the differences in language throughout India which was a major flaw in his thought process.
Two Tamils died in police custody in this first agitation: Thalamuthu and Natarajan.
The decision to withdraw compulsory Hindi education from Madras Presidency was taken on January 21, 1940.
Present Day:
It is not just one individual or a single party that opposes Hindi imposition in TN.
TN chamber of commerce and industry opposes Hindi: Feb 08, 2006
http://www.thehindubusinessline.com/2006/02/09/stories/2006020902541900.htm
MDMK opposes Hindi
"The party will not allow any move to impose Hindi on Tamils in any manner."
http://www.hindu.com/2004/10/30/stories/2004103009840400.htm
Jayalalitha against Hindi:
In a demi-official letter, she said, "It is with great pain and anguish that I wish to bring to your notice the recent practice resorted to by the National Highways Authority of India of inscribing place names in Hindi on the kilometre stones on the NH being laid in Tamil Nadu."
http://www.hinduonnet.com/2004/12/22/stories/2004122210530100.htm
DMK, AIADMK, MDMK
The Lok Sabha was adjourned for 15 minutes today during question hour as a bitter debate triggered off between members from Tamil Nadu and those from the Hindi-speaking belt on whether the milestones on the National Highway should show the distance in Hindi in the non-Hindi-speaking states.
Mr P.H. Pandian (AIADMK), however, supported the issue raised by Dr Krishnam(MDMK) and wanted a reply from the government. Members of the DMK and other members from Tamil Nadu also supported the question.
http://www.tribuneindia.com/2003/20030306/nation.htm#3
As can be seen in the few examples given, opposition to hindi imposition in any form cuts across all party lines in TN. Even the PMK and DPI oppose hindi imposition. It is not a question a specific politician's quest for power.
3-Language System:
The three language system was introduced by the central government in the 1960s to pacify the revolting southerners. The National Policy on Education, 1968 talks about the Three Language Policy.
The main idea was:
Non-hindi state should learn:
Regional language
English
Hindi
Hindi speaking states should learn:
Hindi
English
A southern Language.
The idea of three language policy is to have:
Even workload:
The north Indians will have 3-languages to learn which is same as that of the south. Earlier, the Hindi speaking states can get away with only Hindi and English but now, they had to teach a southern language as the third language.
This was not followed by the Hindi speaking states and hence, TN which had a strong party in the state refused to entertain any Hindi in TN.
Why then are people from Kerala, Andhra, Karnataka comparatively better off in Hindi ?
Andhra:
The Nawabs who ruled the Hyderabad region had made Urdu compulsory during their reign and hence the people there were exposed to Urdu (Hindi like) since early times. Even now, Urdu is one of the Official Languages of the state.
Karnataka:
In the case of Karnataka, Hindi is still not compulsory but is indirectly imposed by the Congress and Janata Dal who rule the state. Karnataka lacks a strong party from the state.
Kerala:
Kerala was the only state that implemented the 3-language policy even though the Hindi speaking states ignored a southern language.
http://www.languageinindia.com/dec2002/karnatakaeducationpolicy.html
http://www.ling.upenn.edu/~jason2/papers/natlang.htm
http://ncert.nic.in/sites/publication/schoolcurriculum/Position_Papers/Indian%20Languages%20.pdf
Articles on 1965 Hindi Imposition
Bureaucracy by Doublespeak:
To spread Hindi, the government is spending $2,100,000 this year.
http://www.time.com/time/magazine/article/0,9171,839158,00.html
The above link talks about Hindi imposition in 1965. As you can see, India was spending 2.1 Million USD for Hindi evangelization. This was in the year 1965, when India had a literacy rate of about 24 %. We were importing 2 ship loads of wheat a day to barely survive and Shahstri gave his famous call for Indians to skip one meal a day. The times were so bad but we still managed to find funds for Hindi.
Hindi Imposition:
In the southern Indian town of Tiruchi last week, a 20-year-old hotel waiter scribbled hasty notes to family and friends, then committed suicide by gulping a bottle of insecticide. He was the third suicide in the area in a week.
http://www.time.com/time/magazine/article/0,9171,839222,00.html
A total of 5 individuals burnt themselves to death and 2 drank pesticide as protest against Hindi imposition. According to government records around 66 people died. The government records were burnt by the officials after Bhaktavatchalam, the then CM of TN ordered it. Ostensibly, to protect the officials from retaliations.
Retreat to English:
Last week 106 Congress Party M.P.s from North India petitioned the government—in English—to uphold Hindi as the only official language. Fanatics of the pro-Hindi Jan Sangh Party prowled the streets of Delhi, blotting out English signs with coal tar.
http://www.time.com/time/magazine/article/0,9171,839301,00.html
Force of Words:
At a Cabinet meeting, non-Hindi ministers backed the demand of Food Minister Chidambaram Subramaniam that English also be given statutory recognition as an official language. When they were voted down, Subramaniam and another minister resigned, shaking confidence in Shastri's leadership.
http://www.time.com/time/magazine/article/0,9171,940936,00.html
Subramaniam and O.V. Alagesan resigned from their ministerial positions.
Subramaniam (Agricultural Minister) along with Dr. Swaminathan (Indian Agricultural Research Insitute) and Sivaraman (Union Secretary of Agriculture) were responsible for the Green Revolution.
According to Borlaug, there was also an active role in this played by Siva Raman, then Union Secretary of Agriculture. "I used to call them 3 Ss Subramaniam, Swaminathan and Sivaraman ," Borlaug said.
http://ia.rediff.com/news/2006/aug/24borlaug.htm?q=np&file=.htm
Hindi Against India:
You can speak Tamil or English and yet be a good Indian, argued Anna. No, answered New Delhi, the only good patriots are those who speak (and write) Hindi. Shastri and his Government stood by the decision to make Hindi official on 26 January. And, in consequence, all hell broke loose.
http://www.hindu.com/mag/2005/01/16/stories/2005011600260300.htm
Hindi Chauvinism:
But from time to time, the chauvinists of Hindi try to press their case. In his previous term as Chief Minister of Uttar Pradesh, Mulayam Singh Yadav wrote a letter in his language to the Chief Minister of Kerala, E.K. Nayanar. Mr. Nayanar replied in his language. It was a brilliant riposte: for while Hindi was not widely spoken in Thiruvanthapuram, in Lucknow, Malayalam was not known at all.
http://www.thehindu.com/thehindu/mag/2004/01/18/stories/2004011800040300.htm
Unravelling the Myths - V
8)One Nation, One Language – National Integration.
This is another one of the major myths that is brought into the picture quite often.
The point put forth is this:
US, UK, France have one language and hence have developed.
Counterpoints:
Switzerland has Four National Languages – Romansh, Italian, French, and English and it is well-developed.
There are quite a few countries even in India's neighborhood that show the negatives of imposing a language on a huge chunk of population.
Pakistan-B'desh:
After a lot of controversy over the language issue, the final demand from East Pakistan was that Bangla must be the official language and the medium of instruction in East Pakistan and for the central government it would be one of the state languages along with Urdu. The first movement on this issue was mobilised by Tamaddun Majlish headed by Professor Abul Kashem. Gradually many other non-communal and progressive organisations joined the movement, which finally turned into a mass movement.
http://en.wikipedia.org/wiki/History_of_Bangladesh#The_Language_Movement
Sri Lanka:
One of the main reasons for the civil war in Sri Lanka is the Sinhala only act 1956 which gives importance to Sinhala at the expense of Tamil.
http://www.hinduonnet.com/fline/fl2304/stories/20060310001305500.htm
http://www.languageinindia.com/jan2002/srilanka1.html
As seen in both the cases, imposition of one language causes trouble and not "integration".
--
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - புறநானூறு, ௨౦౦ கி.மு.
"To us all towns are one, all men our kin" - Purananuru - The four hundred couplets of the Tamil land -
இதே இதே நமது கருத்து.
உங்க கருத்து? Post a Comment