பாம்ம்ம்ம்....பீம்ம்ம்....

'நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று...மதுரை வந்து சேந்துப்புட்டேன் இன்று' - என background intro song மனதுக்குள் ஓட கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடுதியில் கழித்த முதல் இரவு.....

தியாகராசர் பொறியியற் கல்லூரி....திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துல இருக்க Govt. Aided College.....

மிதமான ragging கலாசாரம் உள்ள கல்லூரி ( 1980s-ல rag பண்ணதுக்காக final year பையனை first year பையன் வெட்டி கொன்னது தவிர குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லை!!! )...

hostel வாழ்க்கை பத்தி கேக்கவே வேண்டாம்..... என்னைப் பொறுத்தவரை day scholars-ஆக கல்லூரியில் படிக்க நேர்ந்தவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள்.....

எல்லா கல்லூரிகளையும் போல் even semester வந்தா ஒரே ஆட்டம் தான்....college day, sports day, culturals day, hostel day,block day...அப்புறம் final year-னா extra-வா 3 மாடிக்கும் ஒவ்வொரு wing day....

இந்த எல்லா days-க்கும், மத்த விழாக்களுக்கும், tour-களுக்கும் பொதுவானது தான் இந்த 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...

பெரும்பாலும் எல்லா கல்லூரிகளிலும் 'சல புல' இருக்கும்...அந்த கல்லூரிக்கென்று தனியாக ஒரு பாட்டும் இருக்கும்.....அப்படி TCE-க்கு கிடைத்த அமர பாடல் தான் 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...

'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்' போடுவதற்கு சத்தமாக கத்தினால் மட்டும் போதாது..... எல்லோரும் rhythmic-காக கத்த வேண்டும்....

அனைவரும் வட்டமாக நின்று கொள்ள நடுவில் உள்ளவன் பெருங்குரலெடுத்து ஆரம்பிக்க வேண்டும்...

ந.உ: ஏஏஏ...பாம்ம்ம்ம் பீம்ம்ம் டய்யாங் டக்கர.... கொய்யா மாரி...
குழு:பம்..பம்..பம்..
ந.உ:அப்துல் ரஹீம்...
குழு:பம்..பம்..பம்..
ந.உ.: ரங்காச்சாரி....
குழு:பம்..பம்..பம்.. (அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி...ஒரு 3 4 தடவை repeat பண்ணனும்...)

இதற்குப்பின் 'சல புல' போட வேண்டும்....

'சல புல' பற்றி தெரியாதவர்களுக்காக...

ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...

இதையே ராகம், தாளம் எல்லாம் மாற்றி பாட வேண்டும்....

புதுப்பேட்டை 'ஒரு நாளில்' melody, remix(composer dream!!) போல் வேகத்தை ஏற்றி இறக்கி கத்த வேண்டும்...இதற்கான முழு பொறுப்பும் நடுவில் உள்ளவனிடமே இருக்கும்...அவன் வேகத்திற்கு ஏற்றவாறு மற்ற்வர்களும் 'ஊ ஆ' வை மாற்றி பாட வேண்டும்....

இந்த அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி யாரென்று எவனுக்கும் தெரியாது.....பல ஆய்வுகளுக்கு பிறகு அவர்கள் hostel-இன் முதல் வார்டன்களாகத்தான் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தோம்...

இந்த 'பாம் பீம்' மொழி, இனம், டிபார்ட்மெண்ட் அனைத்தையும் கடந்தது....யார் 'பாம் பீம்' போட்டாலும் அதில் பங்கேற்பது பெருமையாக நினைக்கப்பட்டது....

'கண்ட நாள் முதல்' படத்துல லைலா சொல்வாளே அது போல "சந்தோஷம், துக்கம், சேர்வு, பிரிவு, சோர்வு, புத்துணர்ச்சி"-னு எல்லாத்துக்கும் இந்த 'பாம்..பீம்' தான்....

last working day அன்று....
எல்லா department பசங்களும் ஒன்னா சேந்து main block-ல கல்லூரியே அதிர போட்ட அந்த 'பாம்..பீம்'....
ப்ரின்சிபால் வந்து 'போதும் கிளம்புங்க'-னு கிளப்பி விடும் வரையில் போட்ட அந்த 'பாம்..பீம்'....
இதுக்குப் பின் எப்போது 'பாம்..பீம்' போட முடியுமோ என தொண்டை கிழிய அன்று போட்ட 'பாம்..பீம்'....

கடைசி 'பாம்..பீம்' முடிந்ததும் அனைவரையும் சூழ்ந்த அந்த பேரமைதி.......

'பாம் பீம்' பல நினைவுகளை முடிச்சிடும் கயிறாக இருக்கிறது......



16 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நன்றி sadhayam

நான் எலக்ட்ரானிக்ஸ்....

15 வருடம் ஆனாலும் 'பாம் பீம்' மறக்காம இருக்கீங்களே...great...

ரங்காச்சாரி ப்ரொபசரா...வார்டன் இல்லையா??? தகவலுக்கு நன்றி...மத்த பசங்களுக்கு இத சொல்லி பெரிய ஆள் ஆயிடறேன்...

அப்துல் ரஹீம் இன்னும் அனானியாவே இருக்காரே...

சொன்னது...

//day scholars-ஆக கல்லூரியில் படிக்க நேர்ந்தவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள்......//
தவறு! நான் தான். இந்த கொண்ட்டாமும் தனி தான்.

என் கல்லூரி வாழ்விலும் தல புல சல புலவும் உண்டு. அதனுடன்
பண மரத்துல வவ்வாள ...GSP கே சவாலா
(இடத்தை பொருத்து GSP என்பது மாறும்)
கல்லூரி சுற்றுலாவில் மைசூர் பிருந்தாவன் மற்றும் ஊட்டியில் கலக்கியதை மறக்க முடியவில்லை.


இருங்க ஒரு முறை சொல்லிப்பார்கிறேன்

சல புல சல புல கும்த்தலக்கா....
ஊ...ஆ...ஊ..ஆ...

சல புல சல புல கும்த்தலக்கா....
ஊ...ஆ...ஊ..ஆ...

பசுமையான நினைவுகள்..................

அன்புடன்
நாகை சிவா

சொன்னது...

//தவறு! நான் தான். இந்த கொண்ட்டாமும் தனி தான்.
//
புரியவில்லை..நான் சொன்னது தவறு என்கிறீர்களா??

அது என் தனிப்பட்ட கருத்து தான்....நான் hostel-ல் படித்ததால் அப்படி ஒரு கருத்து கொண்டிருப்பது இயற்கை தானே....

பனை மரத்துல வவ்வால், lic heightu, இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் உண்டு..அத்னாலேயே அவற்றை இந்த பதிவில் குறிப்பிடவில்லை....

சொன்னது...

நன்றி நர்மதா...இது மாதிரி 'ஆட்டோக்ராஃப்' நிறைய ஓட்டலாம்னு இருக்கேன்...

சொன்னது...

Thanks for refreshing my pleasant thoughts kappi guy...

and also sadhyam for your info

A 2003 passout from the same college.

சொன்னது...

பாம் பீம் TCE-க்கே உரித்தான மந்திர சொல்,அதை என் எழுத்துக்களால் சொல்வதை விட வாயால் சொல்வதே சால சிறந்தது..........

பாம் பீம் சொல்லாத மாணவர் உண்டெனில் அவன் TCE-ல படிச்சதுக்கே அர்த்தம் இல்ல.......
நான் இது வரையில் என் வாழ்கையில் படித்த வார்தைகளில் என்னை காந்தம் போல் கவர்ந்திழுத்த "மந்திர சொல்"--- என் TCE பாம் பீம்.........

தேவை இல்லாம பாம் பீம் பற்றி COMMENT எழுதி என் TCE வாழ்க்கை பற்றி ஞாபகமாகிருச்சு...

சொன்னது...

நன்றி அலெக்ஸ்,

//பாம் பீம் சொல்லாத மாணவர் உண்டெனில் அவன் TCE-ல படிச்சதுக்கே அர்த்தம் இல்ல.......//

இதை நான் வழிமொழிகிறேன்...

இவ்ளோ ஃபீபீபீல்ல்ல் பண்ணிட்டீங்களே...எனக்கு அழுகையா வருது..ஹி ஹி ஹி...

சொன்னது...

1979-ல் அஞ்சல் வழி கணித்துறையில் தேர்ச்சி பெற்ற என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக்கொள்வீர்களா ? அதில் தேர்ச்சிபெற்றதால்தான் இன்று அயல்நாட்டில் பொட்டி - அதாம்பா கம்ப்யூட்டர் - (தேர்தல் நேரத்தில் வேறெந்தப் பொட்டியையும் நினைக்க வேண்டாம்) தட்டிக்கொண்டிருக்கிறோம்.
:-)

சொன்னது...

அனானி,
கூட்டத்துல ஐக்கியம் ஆகனும்-னு முடிவு பண்ணிட்டீங்கள்ல...வாங்க வாங்க...
நம்ம மக்கள் பல இடத்துல பொட்டி தட்டிட்டு இருக்காங்க..

சொன்னது...

காப்பி கை, நம்மாளா நீங்க? அங்கே நானும் பாம் பாம் ஒட்டியிருக்கேன் அது ஆச்சி கால் நூற்றாண்டு

சொன்னது...

கால்கரி சிவா
அது கப்பி கய்-ங்க...காப்பி-லாம் படிக்கற காலத்தோட போச்சு...

சொன்னது...

கப்பி guy,

நான் TCE இல்ல. ஆனாலும் எங்க காலேஜ்லயும் இந்த மாதிரி ஒரு பாட்டு இருக்கு.. அதில சொல்ல முடித்த வரிகளை ஒரு முறை சொல்லி பாத்துகிறேன்

சல புல சல புல கும்த்தலக்கா....
ஊ...ஆ...ஊ..ஆ...

சல புல சல புல கும்த்தலக்கா....
ஊ...ஆ...ஊ..ஆ...

***

பன மரத்துல வவ்வாலு
ப்ரின்ஸிபாலுக்கு சவாலு...

***

எங்க காலேஜ்க்கே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு

சொன்னது...

அட.. நம்மாளு இன்னொருத்தர்... பாம்பீம்னு தலைப்பு படிச்சதும் நம்ம பாட்டுதேன் அப்படீனு யோசனையோட வந்தேன்.. படிச்சதும் சரி குஷியாகிடிச்சு.. எங்க வகுப்புல இந்த காட்டுக்கத்தலுக்கு முதல் ஆளா நிக்குறதுல நானும் ஒருத்தன்.. :-D

சைபர் பங்சனப்போ எல்லோரும் போட்ட பாம்பீம்மும், அதுக்கப்புறம் HஓD துரத்த துரத்த ஓட்டுன இரயிலும்.. மறக்கவே முடியாது..

சொன்னது...

kappi guy,
நிறைய பேரோட கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறது உங்களின் இப்பதிவு.

சொன்னது...

யாத்திரீகன்
CS-ஆ??
வாங்க..வாங்க...4 வருஷத்துல எத்தனை ரயிலு...

//நிறைய பேரோட கல்லூரி நினைவுகளைக் கிளப்பிவிடுகிறது உங்களின் இப்பதிவு//

நன்றி முத்து..

சொன்னது...

http://densrecan.la2host.ru/banki-predostavlyayushie-krediti.htm self bankruptcy http://bezzcentlin.la2host.ru/pagesto_50.htm filing bankruptcy in georgia http://opcosless.la2host.ru/03-2009.html bankruptcy of iceland http://opcosless.la2host.ru/samosval-volvo-fm.htm bankruptcy alternative http://netpnichen.la2host.ru/forum-betonomeshalka.htm california bankruptcy court sacramento http://infritac.la2host.ru/lindi_09-04-2009.htm bankruptcy prices http://infritac.la2host.ru/16-gerosio.htm bankruptcy lawyers west seattle http://prerertic.la2host.ru/pagesto_201.htm mortgage bankruptcy http://densrecan.la2host.ru/10-2008.htm companies filing for bankruptcy
http://infritac.la2host.ru/pagesto_266.htm types of bankruptcy http://crysredto.la2host.ru/84-gerosio.html conn bankruptcy attorney http://prerertic.la2host.ru/pagesto_182.htm california bankruptcy law