ஊரு பேரே பயமுறுத்துது...
அடுத்த வாரம் உருகுவே போறேன்..ஒரு ஆறு மாசத்துக்கு மாண்டிவிடியோல இருந்து தான் தமிழ்ச் சேவை...
உருகுவேயில் தமிழ்ப் பதிவர்கள் யாராவது உள்ளனரா?? தெரிந்தால் சொல்லுங்கள்..
இந்தப் பதிவை அர்ஜெண்டினாவிலிருந்து பார்த்திருக்கிறார்கள்...உருகுவேயில் இருந்து ஹிட் இல்லை...
அப்புறம் எந்த கட்சிக்காவது தென் அமெரிக்கப் பிரதிநிதி தேவைனா சொல்லுங்க.... ஆஃபரைப் பொறுத்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து வாங்கிய பணம் தீரும்வரை கட்சியின் கொள்கைக்காகப் போராடுவேன்....
அங்க போனதும் எவனாவது ஒரு டாக்ஸிகாரன் "ஸ்பானிஷ் தெரியாத நீயெல்லாம் எதுக்கு இங்க வந்த?"-னு கேக்காம இருக்கனும். அது தான் இப்போதைக்கு ஒரே கவலை!!
உருகுவே - வேட்டிய உருவுவேன்
கப்பி | Kappi
வகை உருகுவே, சொந்தக் கதை
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
கப்பி பயரே (மரியாத)
தென் அமெரிக்காவுக்காவுக்கு வருகை தரும் த்மிழ் மானச் சிங்கமே வாங்க! வாங்க!
தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு குடுக்க முடியலெனாலும்
"MARIACHI" அனுப்பி வெக்கிறேன்.
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க , அப்படியே பெரு வ்ந்து போங்க.
"பெரு" ல எந்த தெருன்னு கேக்காதீங்க.கிட்டத்தான்,அப்படியே
தென் அமேரிக்கா மேப்பில பாத்தீங்கன்னா,
சிலிக்கும் பெருவுக்கும் ந்டுவுலே ஓரமா, தாக்னா அப்படிங்கறது
நம்ம ஊரு.
ஏதாவது மொழிப் பிரச்சினைன்னா சொல்லுங்க.உதவலாம்.
மறக்காம குளிருக்கு தயாரா வாங்க. பின்னி பெடல் எடுக்குது
//உருகுவேயில் தமிழ்ப் பதிவர்கள் யாராவது உள்ளனரா?? தெரிந்தால் சொல்லுங்கள்..//
'போலி'யனை மூட்டை கட்டி அனுப்பி வைக்கலாமா?!
நீங்க TCS ல இருக்கீங்களா,நானும் அங்க போக வேண்டியிருந்தது,கடைசியில தப்பிச்சுட்டேன்.கவலைபடாதீங்க.. அந்த மக்கள் ரொம்ப நல்ல மக்கள்...
Montivedio is the beautifull city... enjoy and keep writing about uruguay
http://www.countryreports.org/country.aspx?countryid=253&countryName=Uruguay
உபயோகமான சுட்டி தந்ததுக்கு நன்றி ஊர்ஸ்....
இப்போ உருகுவே பத்தி வலையில தேடித் தேடி படிக்கறது தான் நம்ம முழு நேர வேலை....
http://fromuruguay.blogspot.com -ல ஒருத்தர் உருகுவே பத்தி விவரமா எழுதுகிறார்...
மாயவரத்தாரே,
எதுனா பிரச்சனைனா பேசித் தீர்த்துக்கலாம் :)
sami,
உருகுவே-ன்னு சொன்னதும் TCS-னு சொல்ற அளவு கம்பெனி மேல உங்களுக்கு இருக்கிற பற்று மெய் சிலிர்க்க வைக்குது....
நானும் TCS தான்....நீங்க தப்பிச்சிட்டீங்க...ஆனா நான் சிக்கிட்டேனே..
//அந்த மக்கள் ரொம்ப நல்ல மக்கள்...
//
நீங்க சொல்றா மாதிரிதான் நிறைய பேர் சொல்றாங்க...
உலகில் பாதுகாப்பான 30 இடங்களில் மாண்டிவிடியோவும் ஒன்றாம்...
பெரு(சு)
கொஞ்ச நாள் முன்னாடி உங்க பதிவை படிக்கும் போது 'சு'-விற்கு எதற்கு அடைப்புக்குறி என யோசித்தேன்...
பட்டப்படிப்புக்கு மேல கோடு போடுவது போல நீங்களும் வளர்ச்சி அடைஞ்சுட்டே இருக்கறதால இது மாதிரி வச்சிக்கிட்டீங்க-னு நினைச்சா இப்போ தான் தெரியுது...பெரு-ல இருக்கறதால பெரு(சு)...
வரவேற்புக்கு மிக்க நன்றி...
"MARIACHI"-லாம் (முதல்ல என்னைத் திட்டறீங்களோ-னு நினைச்சிட்டேன்)நம்ம தாரை தப்பட்டை ரேஞ்சுக்கு வருமா??
பெரு-ல பெரு குறுக்கு தெரு,பெரு மெயின் ரோடு, பெரு-தானே உங்க முகவரி...ஏதாவது மொபஸில் பஸ்ஸ புடிச்சு வந்துடறேன்...
//ஏதாவது மொழிப் பிரச்சினைன்னா சொல்லுங்க.உதவலாம்.//
கண்டிப்பா உதவி தேவை...இப்போ தான் ஸ்பானிஷ் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்...hola!!!
/மறக்காம குளிருக்கு தயாரா வாங்க. பின்னி பெடல் எடுக்குது //
இப்போவே கண்ணக் கட்டுதே....
All the best kaapi avarkale, spanish katayam kathukitu ponga.
Ingayee hispanics irukka areala spanish theriyathala naan nerya patu iruken.
Laundromatkaran "US vantha rendu language therunchuganum onnu english innonnu spanishunu" advice kodukuran ....
Ithu paravala annaikku barber shopla mudivetra lady, veta arambikrathuku munadi "uno" solla , naan "u know" nenanchu thalaya atta... mandayula iruntha konja mudiyayum kothari eduthuta. Actually avaketathu machine haircut number-"one" (uno-one). Haircut no.1 - krathu mottakku munthuna stage!!!.
Atleast broken spanish avathu kathukitu ponga.......waiting for uruguay stories
Brazil trip plan paningana sollunga vanthu join panikiren.
P.S; First tamil converter vachu try pannen poratama irunthathala namakku roman tamile pothumnu freea vituten
உங்க கருத்து? Post a Comment