புரளி!!! ('சினிக்கூத்து' பதிவு)

புரோட்டா வாங்கிக் கொடுத்து புரளி கேக்கற இந்த காலத்துல தானா வந்து காதுல விழுந்த மேட்டரு...

உங்க கிட்ட சொல்லாம இரண்டு நாளா ஒழுங்கான தூக்கம் இல்ல...

கர்நாடகாவுல பெங்களூரிலிருந்து 150 கி.மீ-ல காற்றாலை ஒன்னு இருக்கு. அதுல நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான ராட்சத காற்றாலை விசிறி ஒன்னு இருக்கு (ஒரு விசிறிக்கே ஒரு கோடி ஆகுமாம்...விசிறிகள் கவனிக்க.)

அந்த விசிறில 'R.S.Surya' என்று எழுதி இருந்ததை 'Surya Jothika' என்று மாத்திட்டாங்களாம். இது அந்த ஏரியால வேலை பார்க்கிற நம்பத்தகுந்த வ்ட்டாரம் சொன்ன த்கவல்.

இந்த பதிவினால் ஏற்படப் போகும் நன்மைகள் பற்றி தெரியாமல் "யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..இதையெல்லாம் ஒரு பதிவா போடனுமா" என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவினால் ஆன பயன்...

1.சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம். வெடி வெச்சு கொண்டாடலாம்.

2.சூர்யாவையோ ஜோதிகாவையோ ஒரு தலையா காதலிச்ச யாராவது தூக்க மருந்தாலோ தூக்கு கயிராலோ தங்கள் காதலை அமரக் காதல் ஆக்கலாம்.. கடைக் காரர்களுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் மக்கள் தொகையும் குறையும்.

3. மேற்சொன்னவர்கள் மற்றும் ரசிகர்கள் என திரிபவர்கள் மனம் மாறி தங்கள் பொழப்பைப் பார்க்கப் போகலாம்.

4. ஏதாவது பத்திரிகை நிருபர் இதைப் படித்துவிட்டு தானே கண்டுபிடித்த செய்தியாக தன் பத்திரிகையில் வெளியிடலாம். இதனால் பல லட்சம் வாசகர்கள் பயனடையலாம்.

5. இந்த பதிவிற்கு அடிக் கணக்கு (ஹிட் கவுண்ட்!!!) அதிகமாகலாம்.

6. இதைப் படித்து இம்ப்ரெஸ் ஆகிய ஆண்கள் சூர்யா அளவிற்கு காற்றாலை விசிறி இல்லாவிட்டாலும் தங்கள் வீட்டு டேபிள் ஃபேனுக்கு தங்கள் காதலி (அ) மணைவியின் பெயரை வைக்கலாம்.

இப்படியெல்லாம் காரணம் சொன்னாலும் மனசாட்சி உள்ள இருந்து கத்துவது நிற்க மாட்டேங்குது..."போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைச்சு உருப்படற வழியப் பாருங்கப்பு...பொழப்பப் பாக்காம புரளி பேசிட்டு திரியறானுவ"6 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி பயரே (மரியாதை),

ஆர்ட்டீன் கீசெயின், பைக் நம்பர் பிளேட்டு, கர்ச்சீப், இன்டஸ்டிரியல் டூர் போனப்ப பார்த்த மரத்துல எல்லாம் எழுத ஜோடி பேரு, உனக்கு நான் எனக்கு நீ ந்னு இருந்த காவிய காதலே, அடிக்குற அமெரிக்கா மாப்பிள்ளை கல்யாண காத்துல Let's forget every thing.. ந்னு காணாம போகுது..

நிங்க வேற மறுபடியும் டேபிள் பேன்ல எழுதுன்னு ஆரம்பிக்கிறீங்க ? .இப்படி உசுப்பேத்தி தான் இங்க எல்லாமே ரணகளமா இருக்கு... சும்மா இருங்க கப்பி பயரே கொஞ்ச காலம்..

சொன்னது...

..."போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைச்சு உருப்படற வழியப் பாருங்கப்பு...பொழப்பப் பாக்காம புரளி பேசிட்டு திரியறானுவ"

?????????

சொன்னது...

முதலாம் வாய்ப்பை எடுத்து கொண்டேன் :-)

சொன்னது...

என்ன வெடி வெடிச்சு கொண்டாட்டமா??? உங்களையெல்லாம் 1000 பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாது...ஹி ஹி ஹி...

(ஆஹா...தெரியாத்தனமா பெரியார் பேரை இழுத்துட்டேனே....)

சொன்னது...

மனசு,

இப்படி கேள்விக்குறியா போட்டா என்ன பதில் சொல்றது??? விவரமா கேளுங்க...

சொன்னது...

கார்த்திக் ஜெயந்த்,

அதெல்லாம் காவிய காதல் இல்ல...பசங்கள அவிக்கிற காதல்..

அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரி ஒரு ஏமாந்த கூட்டம் எங்க தேடினாலும் கிடைக்காது...அவங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு(இதுக்கு எல்லாரையும் சொல்லல-ன்னு disclaimer போடனுமா?)