உருகுவே - வேட்டிய உருவுமா??

என் இனியத் தமிழ் மக்களே

உங்கள் பாசத்துக்குரிய கப்பி பய இன்று முதல் உருகுவேயிலிருந்து...

வரும்போது சொல்லாம வந்துட்டேன்...கோவிச்சுக்காதீங்க..

கிட்டத்தட்ட 45 மணி நேரமா உட்கார்ந்தே இருப்பதால் பயங்கர களைப்பு...என் பயணக் கட்டுரையை பார்ட் பார்ட்டா பொறுமையா அப்புறமா எழுதறேன்...கவலைப்படாதீங்க...

இங்க வேற ஸ்பானிஷ் கீ போர்ட் கொடுத்துட்டாங்க...தடவி தடவி அடிக்க வேண்டியிருக்கு...இங்க செட்டில் ஆனதுக்கப்புறம் என் சோகக் கதைய ஆரம்பிக்கறேன்..6 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பியாரே,

அங்க ஒன்னும் இந்தி தொல்லை இல்லையே??

சொன்னது...

இது வரை இந்தி தொல்லையும் இல்ல..ஸ்பானிஷ் தொல்லையும் இல்ல...தொல்லை வருகிற அளவுக்கு இன்னும் ஊர் சுத்த ஆரம்பிக்கல..இனிமேல் தான்..:))

சொன்னது...

இது தான் முதல் வெளிநாட்டு பயணமா? அப்பு பாத்து அப்பு. நம் மண்ணின் பெருமையை நிலைநிறுத்த வாழ்த்துக்கள்.
ஹோலா........ என்ன புரியுதா????

சொன்னது...

ஹோலா சிவா...
வாழ்த்துக்களுக்கு நன்றி..

சொன்னது...

கப்பியாரே, நான் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மாண்டிவிடியோவில்தான் இருக்கிறது. சென்ற டிசம்பரில் அங்கு வந்திருந்தேன். அழகான ஊர். அன்பான மனிதர்கள். ஸ்பானிஷ் கொஞ்சமாவது கற்றுக் கொள்வது பயன்தரும்.

நல்லா என்ஜாய் பண்ணுங்க!

சொன்னது...

உண்மைதான் சலாஹூத்தீன்..
மிகவும் நட்புடன் பழகுகிறார்கள்...ரோட்டில் நடந்து போகிறவர்கள் கூட 'ஹோலா' சொல்கிறார்கள்..

ஸ்பானிஷ் கத்துக்க ஆரம்பிச்சாச்சு...யுனொ,தெஸ்,த்ரெஸ்,வோத்ர...ஐயோ..அதுக்கப்புறம் மறந்துபோச்சே!!!