Whisky

இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.

இந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.

ஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.

தினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.

இதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.

ஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.

தன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

ஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.

எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.

மிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.

மூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.

படத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'



38 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஆக மொத்தில் படத்தின் பெயரை தவிர படத்தில் ஒன்னும் மேட்டரு இல்ல.
அப்படி தானே

//இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன்.//
நீ என் இனம்டா கப்பி

சொன்னது...

//தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்//

ஏய் கப்பி,

உன்னை தங்கரீகல்'ல பார்த்தேன். அப்ப அது நீ இல்லையா....?

சொன்னது...

//ஆக மொத்தில் படத்தின் பெயரை தவிர படத்தில் ஒன்னும் மேட்டரு இல்ல.
அப்படி தானே//

அதே..அதே..
ரொம்ப நொந்து போயிட்டேன் :D


//நீ என் இனம்டா கப்பி //
அவ்வ்வ்வ்வ்...
இங்கிலீசு படம் பார்த்து நாம் படற கஷ்டம் நம்க்கு தான் தெரியும் :))))

சொன்னது...

//உன்னை தங்கரீகல்'ல பார்த்தேன். அப்ப அது நீ இல்லையா....?
//

தம்பி ராம்,

அது வேறு..இது வேறு..
ரெண்டையும் போட்டு குழம்பப்படாது...

அண்டரஸ்டாண்டு?

சொன்னது...

//தம்பி ராம்,

அது வேறு..இது வேறு..
ரெண்டையும் போட்டு குழம்பப்படாது...

அண்டரஸ்டாண்டு? //

அடபாவி கப்பி,

சரி போ மன்னிச்சிட்டேன் உன்ன...
எதுக்குன்னா புலி சொன்னமாதிரி நீ நானல்லாம் ஒரே இனம்டா கப்பி....!

சொன்னது...

//எதுக்குன்னா புலி சொன்னமாதிரி நீ நானல்லாம் ஒரே இனம்டா கப்பி....!
//

மீண்டும் மீண்டும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து மூச்சு திணற வைக்கிறாயடா நண்பா :))

சொன்னது...

//நல்ல கதை. கொஞ்சம் மசாலா தெளிச்சு நம்ம ஊருக்கு ஆல்டர் பண்ணி கூட எடுக்கலாம்.
//

ஆமாங்க எண்ணம்..ஆனா நம்ம ஊருக்கேத்தா மாதிரி மசாலா கலந்தா கதை எடுபடுமா தெரியல...

//நம்மூர்ல குருசேத்திரமுனு ஜெயபாரதி எடுத்திருக்க படமும் இது மாதிரி ஒரு குறியீட்டு படமாம். இந்தியா,பாக்கிஸ்தான்,அமெரிக்கா,
காஷ்மீர் வைச்சி கேரக்டர்ஸ் இருக்காம்.

டிவிடி வந்ததும் பாக்கலாம்.
//

அப்படியா???
பார்க்கனும்..நம்ம ஊர்ல இந்த மாதிரி முயற்சிகள் ரொம்ப கம்மி :(

சொன்னது...

//தம்பி ராம்,//

//மீண்டும் மீண்டும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து மூச்சு திணற வைக்கிறாயடா நண்பா :)) //

கப்பி, ராம் நம்ம எல்லாரையும் வயதில் மூத்தவர். நீ ஏதோ உணர்ச்சு வேகத்தில் விகுதி குறைவாக அழைத்து விட்டாய். இனிமே அந்த தப்ப பண்ணாத என்ன?

சொன்னது...

அப்படிங்களாண்ணா?

ராமுங்கண்ணா..மன்னிச்சிடுங்கங்கங்கங்கண்ணா ;)

சொன்னது...

//கப்பி, ராம் நம்ம எல்லாரையும் வயதில் மூத்தவர். நீ ஏதோ உணர்ச்சு வேகத்தில் விகுதி குறைவாக அழைத்து விட்டாய். இனிமே அந்த தப்ப பண்ணாத என்ன? //

ஏய் புலி,

எங்க கூவச்சொன்னா அங்க கூவாதே... இங்க வந்து யாருக்கும் தெரியாமா ஆப்பு வச்சிட்டு போயிட்டியா.....:-))))

சரி போ இதுக்கும் ஒரு அமவுண்ட் போடுறேன் உனக்கு....

சொன்னது...

//அப்படிங்களாண்ணா?

ராமுங்கண்ணா..மன்னிச்சிடுங்கங்கங்கங்கண்ணா //

அவரு ரொம்ப பெரிய மனுசன். உன்னை மன்னிக்கும் பெருதன்மை கண்டிப்பாக அவருக்கு உண்டு

சொன்னது...

//சரி போ இதுக்கும் ஒரு அமவுண்ட் போடுறேன் உனக்கு....
//

அப்படியே எனக்கும் பார்த்து செட்டில் பண்ணுங்க.. ;)

சொன்னது...

//அவரு ரொம்ப பெரிய மனுசன். உன்னை மன்னிக்கும் பெருதன்மை கண்டிப்பாக அவருக்கு உண்டு
//

அவரோட பெருந்தன்மையை எண்ணி எண்ணி...ராம் சிஎம்-மோட பெருந்தனமையை எண்ணி எண்ணி :D

சொன்னது...

//அவரோட பெருந்தன்மையை எண்ணி எண்ணி...ராம் சிஎம்-மோட பெருந்தனமையை எண்ணி எண்ணி //

எண்ணி முடிச்சியா இல்லையா?

சொன்னது...

//எங்க கூவச்சொன்னா அங்க கூவாதே... இங்க வந்து யாருக்கும் தெரியாமா ஆப்பு வச்சிட்டு போயிட்டியா.....:-))))//

உண்மையா சொன்னா உனக்கு உடனே கோவம் வந்து விடுமே. அதுவும் இல்லாம கப்பி யாரு? எப்படி பாத்தாலும் நம்ம பய. இங்க வந்து சொன்னதில் உனக்கு என்ன வந்துச்சு?

சொன்னது...

+

சொன்னது...

//எண்ணி முடிச்சியா இல்லையா?
//

இன்னும் லேது ;)

//உண்மையா சொன்னா உனக்கு உடனே கோவம் வந்து விடுமே.//

நல்லா கேளு புலி :D

சொன்னது...

//+

//

டாங்க்ஸு தள ;)

சொன்னது...

//இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.
//
நம்மல மாதிரியே நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...

சப் டைட்டிலோட பாத்தும் Matrix - சீன் பை சீன் புரியல :-(

சொன்னது...

//நம்மல மாதிரியே நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...//

ஹி ஹி ஹி..
வாங்க வெட்டி..எல்லாம் ஒரே இனம் தான் :)))

//சப் டைட்டிலோட பாத்தும் Matrix - சீன் பை சீன் புரியல :-( //

'தமிழில்' பாக்கலியா நீங்க?? :))

சொன்னது...

என்ன சொல்ல கப்ஸ்

படிச்சிட்டு whisky whisky அழுதேன்.

பின்ன ,வேல நேரத்துல மணிகண்டன் படங்காட்ராரு.

நீங்க விஸ்கி யப்பத்தி எழுதறீங்க.
இதெல்லாம் கொஞ்சங்க்கூட நல்லாயில்ல.

ஆமா , சொல்லீட்டேன்.

சொன்னது...

//'தமிழில்' பாக்கலியா நீங்க?? :)) //
தமிழ்ல பாத்த பசங்க இதுக்கு இங்கிலீசே பரவால்லன்னு சொல்லிட்டாங்க...

பாதி புரியறத்துக்கு எதுவுமே புரியாம இருக்கலாமில்ல ;)

சொன்னது...

//படிச்சிட்டு whisky whisky அழுதேன்.

பின்ன ,வேல நேரத்துல மணிகண்டன் படங்காட்ராரு.

நீங்க விஸ்கி யப்பத்தி எழுதறீங்க.
இதெல்லாம் கொஞ்சங்க்கூட நல்லாயில்ல.

ஆமா , சொல்லீட்டேன்.
//

குரு..எதுக்கு டென்ஷன் ??

பேசாம வீட்டுக்கு கிளம்புங்க :)))

சொன்னது...

விமர்சனத்திற்கும் சிறப்பான அறிமுகத்திற்கும் நன்றி.

சொன்னது...

//கதை நல்லா இருக்கே! வாங்கிப் பாக்குறேன், சான்ஸ் கிடைக்கும்போது. //

ஆமாங்க மதுரா..நல்ல படம்..ஆனா ஆரம்பத்துல ரொம்ப மெதுவா போகும்

//உங்க ஊரெல்லாம் காட்டுவாங்களா நிறையா? பிரியாபோலிஸ் பாக்கலாம் இல்லையா? //

நிறைய இடம் காட்ட மாட்டாங்க..கொஞ்சமா பாத்துக்கலாம்..படம் நிறைய காட்சிகள் இண்டோர்ல தான்..


// "மோட்டார்சைக்கிள் டையரீஸ்" பாத்தீங்களா? நல்லாருக்கும்.
//
டிவிடி கிடைக்கவே மாட்டேங்குதுங்க..
கடைகாரன் நான் போகும்போதெல்லாம் 'டிவிடி வாடகைக்கு வெளிய போய் இருக்கு'ன்னு சொல்றான் :(

சொன்னது...

வருகைக்கு நன்றி பாலா!

சொன்னது...

உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப்போ தான் தேடிப் புடிச்சேன் ;)

//தமிழ்ல பாத்த பசங்க இதுக்கு இங்கிலீசே பரவால்லன்னு சொல்லிட்டாங்க...

பாதி புரியறத்துக்கு எதுவுமே புரியாம இருக்கலாமில்ல ;)//

அதுவும் சரி தான் ;))

சொன்னது...

//உங்க பின்னூட்டம் போய் ஒளிஞ்சுக்கிட்டு வெட்டி..இப்போ தான் தேடிப் புடிச்சேன் ;)//

எங்கடா இவ்வளவு நேரமாகியும் நம்ம போட்ட பின்னூட்டம் மட்டும் கானோமேனு பாத்தேன்...

(அப்பறம் பாபா அவர்களுடைய பதிவுல உங்களுக்கு ஒரு டாஸ்க் அசைன் ஆகியிருக்கு போய் பாருங்க ;))

சொன்னது...

கப்பி,
சொல்றதுக்கு முன்னாடியே செஞ்சிட்டீங்க...

எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)

சொன்னது...

//அப்பறம் பாபா அவர்களுடைய பதிவுல உங்களுக்கு ஒரு டாஸ்க் அசைன் ஆகியிருக்கு போய் பாருங்க ;)//

டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சு..ரெஸ்பான்சுக்கு வெயிட்டிங் ;)

//எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)
//

சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் :))))

சொன்னது...

அறிமுகத்துக்கு நன்றி. உருகுவே நாட்டுப் படங்களில் வேறென்ன குறிப்பிடத்தகுந்த படங்கள்னு கேட்டு, வாங்கிப் பார்த்து இடுகைகள் எழுதுங்கள்.

அப்படியே கொஞ்சம் உருகுவே நாடு + உங்க ஊர் பத்தியும் எழுதலாம். :)

சொன்னது...

//டாஸ்க் எல்லாம் முடிச்சாச்சு..ரெஸ்பான்சுக்கு வெயிட்டிங் ;)//

ரெஸ்பான்ஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சி...

////எள்ளுன்னா எண்ணெயா இருக்கீரு ;)
//

சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் :)))) //

அப்ப எண்ணனா என்னாவா வந்து நிப்பீங்க??? ;)

சொன்னது...

வருகைக்கு நன்றி மதி,

// உருகுவே நாட்டுப் படங்களில் வேறென்ன குறிப்பிடத்தகுந்த படங்கள்னு கேட்டு, வாங்கிப் பார்த்து இடுகைகள் எழுதுங்கள்.//

திரைப்படங்களின் பட்டியல் தயார் செய்து கொண்டிருக்கிறேன்...
வாரம் ஒன்றாவது பார்க்க வேண்டும்....

//அப்படியே கொஞ்சம் உருகுவே நாடு + உங்க ஊர் பத்தியும் எழுதலாம். :) //

இப்போது இங்கு குளிர் காலம் என்பதால் இங்குள்ள சில சுற்றுலா தலங்களுக்கும் மற்ற ஊர்களுக்கும் செல்ல முடியவில்லை..

ஊர் சுற்ற ஆரம்பித்த பின் ஒவ்வொரு இடம் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் :)


ஊக்கத்திற்கு நன்றி மதி..

சொன்னது...

//ரெஸ்பான்ஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சி...
//

ஓ..இதோ பாக்கறேன்..

//அப்ப எண்ணனா என்னாவா வந்து நிப்பீங்க??? ;)
//
அது தொழில் ரகசியம் வெளிய சொல்லக் கூடாது :))))

சொன்னது...

பொறுமையின் திலகம், உருகுவே படம் பார்த்த ஒரே தமிழன், தமிழில் வெளியான முதல் உருகுவே படத்துக்கான விமர்சனம் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான கப்பி நீ வாழ்க உன் பொருமை வாழ்க.... இன்னொரு உருகுவே படம் இருக்கு அதை அப்புறமா சொல்றேன் 'பாத்துட்டு' விமர்சனம் பன்னு என்னா?

சொன்னது...

வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன் மகி..

அந்த இன்னொரு படத்தையும் சொல்லுங்க..பார்த்துடுவோம் ;)

சொன்னது...

Whiskyக்கும் கயல்விழிக்கும் சேர்த்து ஒரே கமெண்ட் தான் -
என்னமோ போப்பா. எனக்கு சில சமயம் டவுட்டாவே இருக்கு. இப்போதைக்கு தமிழ் சினிமாவுல சொல்ற ஒரு டயலாக்"நேரம் வரும் போது நானே சொல்றேன்".
:)

சொன்னது...

//என்னமோ போப்பா. எனக்கு சில சமயம் டவுட்டாவே இருக்கு. இப்போதைக்கு தமிழ் சினிமாவுல சொல்ற ஒரு டயலாக்"நேரம் வரும் போது நானே சொல்றேன்".
//

கைப்ஸ்
வொய் டென்சன்???

நேரம் எப்போ வரும்?? ;)