இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது 'ஹார்ட் அட்டாக்'கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க "என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்" என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?54 பின்னூட்டங்கள்:

சொன்னது...

சாரி கப்பி,
உனக்குள்ள இப்படி ஒரு சோகமா
இது தெரியாம உன்கிட்ட நான் அடிக்கடி விளையாடி விட்டேனே.
:(((((((

அந்த மேனஜர் மேட்டர விட நான் பாத்துக்குறேன் அவன...

சொன்னது...

//உனக்குள்ள இப்படி ஒரு சோகமா
//

அட அநியாய ஆபிசர்களா..கதைன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா..
எல்லாத்தையும் என் கணக்குலயே எழுதனுமா?? :))))

சொன்னது...

ஒரு தலை ராகம்? சாரி மை பாய். சீக்கிரம் உன் வாழ்வில் புது வசந்தம் வரும். கலங்காதே கப்பி!

சொன்னது...

சரி ரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கே? எது எழுதுனாலும் இந்த புலி பயலும் கைப்புவும் வந்து காமெடி பண்ணிட்டு போயிடுறானுவன்னு தானே நெனக்கிறே? பொறுமையா படிச்சிட்டு ஒரு பின்னூட்டம் போடுறேன். இப்ப மணி 8.45 ஆவுது. வயிறு கவான் கவாங்குது. நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.
:)

சொன்னது...

//ஒரு தலை ராகம்? சாரி மை பாய்.//

கைப்ஸ்..இது உனக்கே ஓவரா தெரியல?? என்னைப் பாத்தா ஒரு தலை ராகம் பாடறவன் மாதிரியா இருக்கு??

//உன் வாழ்வில் புது வசந்தம் வரும். கலங்காதே கப்பி!//

எல்லாம் பேசி வச்சிகிட்டு வந்தா நான் என்ன சொல்றது??

ஆணியே இல்ல..விடுங்கப்பா...:))

சொன்னது...

//சரி ரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கே?//

கஷ்டப்பட்டு எழுதலை..இஷ்டப்பட்டு எழுதியிருக்கேன்..ச்சே..கண்ட நேரத்துல பஞ்ச் டயலாக்லாம் ஞாபகம் வருது...

//இந்த புலி பயலும் கைப்புவும் வந்து காமெடி பண்ணிட்டு போயிடுறானுவன்னு தானே நெனக்கிறே? //

ச்சே..நான் போய் அப்படி நினைப்பேனா?? (Grrrrr) :D

//பொறுமையா படிச்சிட்டு ஒரு பின்னூட்டம் போடுறேன். இப்ப மணி 8.45 ஆவுது. வயிறு கவான் கவாங்குது. நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.
//

ஐ யாம் தி வெயிட்டிங் :)

சொன்னது...

கப்பி உன்னோட சோக கதைய நினைக்கிறப்போ ஒரே பீலிங்கா இருக்குப்பா... :-)))

சொன்னது...

//கப்பி உன்னோட சோக கதைய நினைக்கிறப்போ ஒரே பீலிங்கா இருக்குப்பா... :-)))
//

ராம் கண்ணா,

கண்ட்ரோல்..கண்ட்ரோல் :))

அதுசரி..கைப்புக்கு அடுத்த ஆப்பு ரெடியா??

சொன்னது...

போப்பா கப்பி
ரெம்ப ஃபீல் பண்ண வச்சிட்ட...

//யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது//

மக்கா நாங்க இருக்கோம்:((((

//என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.//

//என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை. //

//அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன். //


கதை கதைனு, கத விடாத கப்பி,:)))

அனுபவிச்சி எழுதியிக்க,உன் படைப்ப படிச்சதும் மனசுக்கு பாரமாச்சு கப்பி,
இன்னைக்கு தண்ணி அடிக்க வேண்டாம்னு இருந்தேன்,ச்ச்.. இருக்க விடமாட்டேங்கிறீங்களேப்பா..
இந்தக் கப்பி பயலுக்கா இப்படி ஆகனும்.நான் அழுகிறது உங்களுக்கு கேட்குதா..? இல்லைனா வாங்க ஒரு லார்ஜ் போடலாம் அப்புறம் உங்களுக்கும் கேட்கும்,


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//அதுசரி..கைப்புக்கு அடுத்த ஆப்பு ரெடியா?? //

வச்சிருவோம் கூடிய சீக்கிரத்திலே...
:-))))

சொன்னது...

//ரெம்ப ஃபீல் பண்ண வச்சிட்ட...//
ஹி ஹி...பாராட்டு தானே???

//மக்கா நாங்க இருக்கோம்:((((
//

மக்கா..பாசக்கார பயடா நீ...
அவ்வ்வ்வ்...

//கதை கதைனு, கத விடாத கப்பி,:)))
//
நம்பித்தான் ஆகனும் நண்பா..வேற வழி இல்ல :)))

//இல்லைனா வாங்க ஒரு லார்ஜ் போடலாம் அப்புறம் உங்களுக்கும் கேட்கும்,
//
அடப்பாவி...நீ பாட்டில் ஓப்பன் பண்றதுக்கு என் பேரை எதுக்குப்பா இழுக்கற??

சொன்னது...

கப்பீஸ்

இதத்தான் நான் அப்பவே சொன்னேன்.

உருகுவே மாதிரி ஊர்ல தனியா வந்து
மாட்டிகிட்டா, சிறு வயசு நினைவு மட்டுமில்ல,

முன் ஜென்மத்து நினைவுகூட வரும்.
அதையும் சேத்து எழுதுங்க

சொன்னது...

//எல்லாம் பேசி வச்சிகிட்டு வந்தா நான் என்ன சொல்றது??

ஆணியே இல்ல..விடுங்கப்பா...:))//
ஆமாம் பேசி வச்சுகிட்டு வராங்க, நல்ல ஆளுய்யா நீ. அந்த கதையில் பெயர் போட்டு எழுதி இருந்தா. இந்த பிரச்சனை எல்லாம் வருமா நீயே சொல்லு.....

சொன்னது...

// சீக்கிரம் உன் வாழ்வில் புது வசந்தம் வரும். கலங்காதே கப்பி! //
புது வசந்தத்தை வீச வச்சுட்டா போச்சு.
தல சொன்னா மறுக்க முடியுமா.
கப்பி... கெட் ரெடி....

சொன்னது...

////கதை கதைனு, கத விடாத கப்பி,:)))
//
நம்பித்தான் ஆகனும் நண்பா..வேற வழி இல்ல :)))//
அத எல்லாம் நீ சொல்ல கூடாது
நீ சொல்ல கூடாது
நாங்க தான் சொல்லனும்

சொன்னது...

//முன் ஜென்மத்து நினைவுகூட வரும்.
அதையும் சேத்து எழுதுங்க
//

வாங்க குரு....யூ டூ??? :))

சொன்னது...

//அந்த கதையில் பெயர் போட்டு எழுதி இருந்தா. இந்த பிரச்சனை எல்லாம் வருமா நீயே சொல்லு..... //

இப்படி எழுதினா ஒரு எஃபெக்ட் வரும்னு தான் :D

நாம விட்ட ராக்கெட் நம்ம வீட்டு கூரையில் விழுந்த மாதிரி backfire ஆயிடுச்சு :))

சொன்னது...

//கப்பி... கெட் ரெடி.... //

ஆல்வேஸ் ரெடி ;)

சொன்னது...

//நீ சொல்ல கூடாது
நாங்க தான் சொல்லனும் //

சொல்ல மாட்டேங்கீறியளே...

சரி எதுவா இருந்தாலும் தனியா பேசி தீர்த்துக்கலாம்..வந்து இது கதைன்னு சொல்லிட்டு போ :))

சொன்னது...

nalla irukku kappi guy.

You could have send this to thenkoodu too.Its very good

சொன்னது...

மிக்க நன்றி செல்வன்..

//You could have send this to thenkoodu too//

தனிமையை 'உறவுகள்'ல சேத்துப்பாங்களா? :))

உங்க வோட்டு நிச்சயம் தானே?? :D

சொன்னது...

கப்பி,
கதையோ நிஜமோ தெரியல...
ஆனால் நல்லா இருக்கு.

சொன்னது...

நன்றி வெட்டி...

//கதையோ நிஜமோ தெரியல...//

என்னத்த சொல்ல...என்ன சொன்னாலும் நம்ப மாட்டேங்கறீங்க :)

சொன்னது...

//தனிமையை 'உறவுகள்'ல சேத்துப்பாங்களா? :))//

Sure,why not?


உங்க வோட்டு நிச்சயம் தானே?? :D//

Color TV நிச்சயம் தானே? :)))))))

சொன்னது...

//Color TV நிச்சயம் தானே? :)))))))
//

அதிலென்ன சந்தேகம்...
14',21',27'-ன்னு உங்கள் விருப்பம் தான் ;))))

சொன்னது...

//என்னத்த சொல்ல...என்ன சொன்னாலும் நம்ப மாட்டேங்கறீங்க :) //

கப்பி,
என்ன செய்ய??? ஒரு சில சம்பவங்களை நீங்கள் விளக்கியுள்ள விதம் உண்மை என்றே நினைக்க வைக்கிறது :-)

சொன்னது...

//ஒரு சில சம்பவங்களை நீங்கள் விளக்கியுள்ள விதம் உண்மை என்றே நினைக்க வைக்கிறது :-)//

நண்பர்களின் அனுபவங்களை வைத்து சில பத்திகளைப் புனைந்திருக்கிறேன் வெட்டி ;)

சொன்னது...

//என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.
//
எத்தன பேரு கிளம்பிருக்கீங்க? ஜனனி இந்த பெயருக்கு ஒரு மயக்கம் இருக்கதான் செய்யுது.
//நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். //
ரைடு.. Violin கதையுல Guitar agiducha??
//அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல. //
ரசித்தேன்... Bravo!!!

சொன்னது...

ஐயோ..அது சும்மா பேருக்கு வச்சதுப்பா..மயக்கம்லாம் இல்ல :D..

//Violin கதையுல Guitar agiducha??
//
அது வேறு..இது வேறு..ரெண்டையும் போட்டு கண்ப்யூஸ் பண்ணிக்கிட்ட பாரு...

//ரசித்தேன்...//

நன்றி subbu..

சொன்னது...

அன்புள்ள கப்பி பய அவர்களுக்கு,

அப்போதும் உருகுவே
இப்போதும் உருகுவே
எப்போதும் உருகுவே ?
:-)))

சொன்னது...

வாங்க ஊர்ஸ்..

நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கீங்க..:)

//எப்போதும் உருகுவே ?
//
இன்னும் நாலு மாசம் தான்...கவுண்ட்டவுன் ஆரம்பிச்சாச்சுங்க ;)

சொன்னது...

Thooka maathirai enge vaithaen.. sooper punch line maamu... ;-))

சொன்னது...

நன்றி Aim..

சொன்னது...

அய்யோ கப்பி இத்தனை நாளா ஓங் கஷ்டம் தெரியாம உன்னோட இஷ்பானிஸ்ல பேசி கொன்னேனே நான் எங்க போயி இதச் சொல்ல,,,,,,,,, குவாட்டர் போட்ட என்க்கே ஒங் கதை (?) மப்ப குறைக்குதே நீ இதுக்காக எத்தனை குவாட்டர் குடிச்சியோ,,,,,, உருகுவே போயும் உருகுதே ! மக்கா கவலைப்படாத லத்தீன் அமெரிக்க பெண்கள் தான் என்னப் பொறுத்தவரிக்கும் உலகத்துலயே அழகு உட்றாத கப்பி அம்ம்புட்டுதான் இப்போதைக்கு

சொன்னது...

// குவாட்டர் போட்ட என்க்கே ஒங் கதை (?) மப்ப குறைக்குதே //

எதுக்கு இவ்ளோ டென்சன்..கூல் டவுண் குவாட்டரு...


//மக்கா கவலைப்படாத லத்தீன் அமெரிக்க பெண்கள் தான் என்னப் பொறுத்தவரிக்கும் உலகத்துலயே அழகு //

ஹி ஹி..எனக்கும் தான் மகி..

சொன்னது...

Es todo lo que tengo que traer hoy, éste, y mi corazón por otra parte, éste, y mi corazón, y todos los campos, y todos los prados de par en par. Sea seguro usted cuenta, si me olvido, -- alguien que la suma podría decir, -- esto, y mi corazón, y todas las abejas cuál en la detención del trébol.

சொன்னது...

Bravo gappi

கவுஜ எதாவது வுடுங்க.

முழி பெயர்க்கலாம்.

சொன்னது...

மகி,

என்னப்பா சொல்ல வர்ற??

நான் வரல இந்த விளையாட்டுக்கு :))))

குரு..


/கவுஜ எதாவது வுடுங்க//
இப்படி அசால்டா கேட்டுட்டீங்க?? என்னப் பாத்தா பாவமா இல்ல?
:)))

சொன்னது...

கப்பி கதைன்னு நம்ப முடியுமா... இப்படி ஒரு சோகமா உள்ளத்தில்??

//சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல. //

சொன்னது...

வூடு மாப்பி.. நான் சொல்லுறதைக் கேளு மறுபடியும் கிதாரைக் கையிலேடு.. ஒரு நல்ல பாட்டா வாசி... இசையின் இதம் இனிமை தரும்...

சொன்னது...

வாங்க ராசுக்குட்டி,
//கப்பி கதைன்னு நம்ப முடியுமா... //
எல்லாரும் இதையே கேட்டா என்னப்பா சொல்றது?? கல்கத்தாவை நான் மேப்ல தான் பார்த்திருக்கேன் :))


தேவு,
//கிதாரைக் கையிலேடு.. ஒரு நல்ல பாட்டா வாசி... //

கிதாரை கையில எடுக்கலாம்..ஆனா வாசிக்கத் தெரியாதே :D

சொன்னது...

//கிதாரை கையில எடுக்கலாம்..ஆனாவாசிக்கத் தெரியாதே //
hola la toma kappy la guitarra en manos del ur que será hace una canción no fríe automáticamente a hombre justo goza.....

சொன்னது...

அப்படியா சொல்றீங்க..இல்ல மகி..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் :))

சொன்னது...

என்னா கப்பி ஒம்மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன் சரி பரவாயில்ல, விடு...... ஆமா ஹவானா பக்கமா?
http://kilumathur.blogspot.com/2006/08/blog-post_10.html

சொன்னது...

http://inthavaaram.blogspot.com/2006/08/blog-post_09.html

http://paarima.blogspot.com/2006/08/blog-post_09.html

he he not he i just smile buddy ADVT

சொன்னது...

கதை நல்லாருக்கு கப்பி.

//இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.//
இந்த எடத்துல ஒங்களோட தனித்தன்மை தெரியுது. அதை நல்லாவும் வெளக்கியிருக்கீங்க. கதை நாயகன் இருக்கும் அவநம்பிக்கைகள், அவன் சந்தித்த தோல்விகள், "என்னத்தே செஞ்சி என்னத்தே பண்ணி..." என்கிற அவனோட மனநிலை ஆகியவற்றையும் நல்லா வெளக்கியிருக்கீங்க.

//நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.//
ஆனா இந்த வரிகளை கதையை முடிக்கறதுக்காகச் சொருகுனா மாதிரி தோணுது. மேனேஜர் மேல வெறுப்பு இருக்குற மாதிரி ஆரம்பத்துல சொல்லிட்டு இப்படி முடிச்சிருக்கறது எங்கேயோ இடிக்கிற மாதிரி எனக்கு படுது. காதல் தோல்வியெல்லாம் இருந்தாலும் நம்ம பொழப்பை நாம தான் பாக்கணும்ங்கிற கருத்தைச் சொல்ல வரீங்கன்னு நெனக்கிறேன். கரெக்டா? மேலே உள்ள வரிகளால் அதை ஊகிக்க முடிஞ்சாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருந்தீங்கன்னா இன்னும் நல்லா முடிச்சிருக்கலாம்னு தோணுது.

சொன்னது...

நன்றி கைப்ஸ்..

டிபன் சாப்பிட போறேன்னு சொல்லிட்டு போன கைப்ஸ் இன்னும் வரலயேனு ரோட்டு மேல ஐ வச்சு காத்திருந்தேன் :)

//காதல் தோல்வியெல்லாம் இருந்தாலும் நம்ம பொழப்பை நாம தான் பாக்கணும்ங்கிற கருத்தைச் சொல்ல வரீங்கன்னு நெனக்கிறேன். கரெக்டா? //

அதே தான் ட்ரை பண்ணியிருக்கேன் கைப்ஸ்..எவ்வளவு வருத்தம்,தோல்வி இருந்தாலும் அவன் பொழப்பையும் பாக்கனும்னு தான் சொல்லா வந்தேன்..ஒழுங்கா வரலையோ?

//மேலே உள்ள வரிகளால் அதை ஊகிக்க முடிஞ்சாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சிருந்தீங்கன்னா இன்னும் நல்லா முடிச்சிருக்கலாம்னு தோணுது.
//

நன்றி கைப்ஸ்...
கதையோட பலம்,பலவீனங்களை பார்ட் பார்ட்டா திறனாய்வு செஞ்சு சொல்லிட்டீங்க ;)

நன்றிகள் பல !!

சொன்னது...

சாரி கப்பி அந்த ஓட்டு தமிழ்மணத்துக்காம்..... தேன்கூட்டில தேர்தல் நடக்கும் போது கண்டிப்பா குத்துறேன்பா கோச்சுக்காதே

சொன்னது...

//சாரி கப்பி அந்த ஓட்டு தமிழ்மணத்துக்காம்..... தேன்கூட்டில தேர்தல் நடக்கும் போது கண்டிப்பா குத்துறேன்பா கோச்சுக்காதே //

டாங்க்ஸ்ப்பா மகி :)

சொன்னது...

Nice Story my dear Junior

சொன்னது...

நன்றிங்ண்ணா!! ;)

சொன்னது...

Nice story.

lollu-sabha.blogspot.com

சொன்னது...

Romba arputhama irukku intha kathai.
Ungaloda speciality ennanna, neenga romba casual a, simple a eluthurathu thaan innu ninaikiren.....
Thalaippai vera mathiri vithyasama vechirukkalaam :)

சொன்னது...

thanks Poornima