இந்த படங்கள் எப்போ ரிலீஸ்??

"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்"

இது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.

'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.

இவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :

துள்ளல்:ரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்(?!) தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.

வீராச்சாமி:சிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)38 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். //

கப்பி பாய்,

வீராச் சாமி ...ஒரு வீராப்பு சாமி !

தம்பி நான் பாக்குறத்துக்குதான் தாடி !
இறங்கினால் சென்னைக்கே கேடி !
விராச்சாமி கொட்டிடும் கோடி !, ஏன்னா
நான் தான் சிம்புவோட டாடி !

:)

சொன்னது...

கப்பி பய,

சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் மிக மிக விரைவில் 25 ஆண்டுகளுக்குள் வந்திவிடும் என்று "விளக்கு ஏற்று" சுனில் சொல்ல கேள்வி...

சொன்னது...

ஏலேய் ரொம்ப தேவை இப்ப....

ஆனாலும் நம்ம டி.ஆர். இந்த ஸ்டில் இணையத்தில் போட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க நம் மக்கள்.
நானும் எல்லாம் டி.ஆர் படத்தையும் பார்த்து விடுவேன். அதிலும் அண்ணாத்த பீல் பண்ணுவார் பாரு. அதை மிஞ்சும் காமெடி கிடையவே கிடையாது

சொன்னது...

கப்பி ஒனக்கு வேர ஸ்டில்லே கிடைக்கலியா ? நம்ம பக்கம் வர ஆளுங்க அப்படியே ஓடிக்கிட்டிரூக்காங்க நானே கண்ண மூடிக்கிட்டுதான் இப்ப கமெண்ட் போடுறேன் டி.ரா லாம் ஒரு டைரக்டரா (பாக்கலாம் எந்த எலியாவது வந்து மட்டுதான்னு வந்தா கப்பிய மாட்டிவிடிட்டு ஓடிற வேண்டீதுதான்)

சொன்னது...

கப்பி உனக்கு தலைப்பே வைக்க தெரியலை
என்னோட ஆலோசனை: சிம்புவுக்கு கல்யாணமான்னு தலிப்பு வச்சி டிரா நியூஸ்போடு அதுல "இதனால்தான் டிராவின் படம் தாமதம்னு சிம்பு சேதி போடு முடிஞ்ச்சா நயன் தாரா போட்டோ இல்லையா வீராசாமி ஹீரோயின் மக்னா நாயுடு போட்டோ போடு

சொன்னது...

//தம்பி நான் பாக்குறத்துக்குதான் தாடி !
இறங்கினால் சென்னைக்கே கேடி !
விராச்சாமி கொட்டிடும் கோடி !, ஏன்னா
நான் தான் சிம்புவோட டாடி !
///

GK..
டண்டணக்கா ஏ டணக்குணக்கா-வை விட்டுட்டீங்க :)))

சொன்னது...

//சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் மிக மிக விரைவில் 25 ஆண்டுகளுக்குள் வந்திவிடும் என்று "விளக்கு ஏற்று" சுனில் சொல்ல கேள்வி...
//
:))

சிவபாலன்,
சிம்பு படத்தை விட வீராச்சாமிக்கு தான் நான் காத்துக்கிட்டு இருக்கேன் :)))

சிம்பு இன்னும் பல வருடங்கள் நடிப்பார்..பல படங்கள் வரும்...
ஆனா விஜய டி.ஆர் அப்படியா? ;)

சொன்னது...

//ஏலேய் ரொம்ப தேவை இப்ப....
//

டவுட் வந்துச்சு..அதான் தெரிஞ்சுக்கலாம்னு.......

// நம் மக்கள்.
நானும் எல்லாம் டி.ஆர் படத்தையும் பார்த்து விடுவேன். அதிலும் அண்ணாத்த பீல் பண்ணுவார் பாரு. அதை மிஞ்சும் காமெடி கிடையவே கிடையாது
//

அப்புறம் எதுக்கு மேல இருக்க கேள்வி?? :P

சொன்னது...

//கப்பி ஒனக்கு வேர ஸ்டில்லே கிடைக்கலியா ?//
IndiaGlitz-ல நிறைய இருக்கு போய் பாத்துக்கிடுங்க :)

// டி.ரா லாம் ஒரு டைரக்டரா (பாக்கலாம் எந்த எலியாவது வந்து மட்டுதான்னு வந்தா கப்பிய மாட்டிவிடிட்டு ஓடிற வேண்டீதுதான்)
//

அடப்பாவி மக்கா :)))

//சிம்புவுக்கு கல்யாணமான்னு தலிப்பு வச்சி டிரா நியூஸ்போடு அதுல "இதனால்தான் டிராவின் படம் தாமதம்னு சிம்பு சேதி போடு முடிஞ்ச்சா நயன் தாரா போட்டோ இல்லையா //
யோவ் மகி..

'சினிக்கூத்து' படிச்சு ரொம்பத்தான் கெட்டு போயிட்ட..

என் அறிவை வளர்த்துக்க போட்ட பதிவுன்றதால தலைப்பு பத்தி ரொம்ப யோசிக்கல விடுங்க :D

//வீராசாமி ஹீரோயின் மக்னா நாயுடு போட்டோ போடு
//
தேடிப் பார்த்தேன்..எதுவும் சரியா சிக்கல..அதான் தலைவர் ஸ்டில்லே போட்டாச்சு :D

சொன்னது...

you too கப்பி

சொன்னது...

தாடி வச்ச நான்
சிம்புவோட டாடி
நான் தொட்டதில்ல
ஹீரோயினோட பாடி
ஆனா எம் பையன்
9தாரா வாயக் கடிப்பான்
ஏன்னா அவன் வசுப்புள்ள

( அப்படியே ஒருதாயின் சபதம் நீதிமன்ற கட்சியை ஒப்பிட்டு படிக்கவும்......... இன்னும் வரும்)

சொன்னது...

//you too கப்பி /

ஆமா ராம்..

ஐ யாம் ஆல்சோ தி வெயிட்டிங் ஃபார் லாங் டைம் ;)

உனக்கும் தெரியலயா??

//( அப்படியே ஒருதாயின் சபதம் நீதிமன்ற கட்சியை ஒப்பிட்டு படிக்கவும்......... இன்னும் வரும்)
//
வரட்டும் வரட்டும்...

சொன்னது...

எங்கம்மா என்ன தாலாட்டுனாங்க
நான் உன்ன சீராட்டுனேன் , இன்னொரு அம்மா என்ன உள்ள கூப்டாங்க ஒன்னுதான் தற்றேன்னு சொன்னாங்க இதுக்கெல்லாம் தயங்க மாட்டான் டிஆரு நான் நிப்பேன் தனியாத்தான் நிப்பேன்

சொன்னது...

//டிஆரு நான் நிப்பேன் தனியாத்தான் நிப்பேன் //

ம்ம்ம்ம்..

சொன்னது...

//நானும் எல்லாம் டி.ஆர் படத்தையும் பார்த்து விடுவேன். அதிலும் அண்ணாத்த பீல் பண்ணுவார் பாரு. அதை மிஞ்சும் காமெடி கிடையவே கிடையாது//

:))))))))))))))))))))))))))))))))))அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

என்னாச்சு யாரையும் காணோம்?

சொன்னது...

சிம்பு படம் எப்ப ரிலீஸ்னு சொல்லுங்கப்பா அவங்க அப்பா படம் யாருக்கு வேனும் தேனப்பனுக்கு இப்பவே கண்ணகட்டுறதா கேள்வி

சொன்னது...

//
:))))))))))))))))))))))))))))))))))
//

சரவணா,
இப்படி சிரிச்சுட்டு போனா என்ன அர்த்தம்?? படம் எப்போ ரிலீஸ்னு தெரிஞ்சா சொல்லிட்டு போப்பா

சொன்னது...

//சரவணா,
இப்படி சிரிச்சுட்டு போனா என்ன அர்த்தம்?? படம் எப்போ ரிலீஸ்னு தெரிஞ்சா சொல்லிட்டு போப்பா //


தெரியலை கப்பி!
ஆனா இன்னைக்கி காலைல இருந்து ஒரே தமாசு தான், ரெம்ப நாள் கழிச்சு சந்தோசமா போச்சு!

man of the match:அனானி -தான்.


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//சிம்பு படம் எப்ப ரிலீஸ்னு சொல்லுங்கப்பா அவங்க அப்பா படம் யாருக்கு வேனும் தேனப்பனுக்கு இப்பவே கண்ணகட்டுறதா கேள்வி
//

யாமறியோம் மகி :))

சொன்னது...

நான் தான் அந்த மேன் ஆப் தி மேட்ச்

சொன்னது...

//ஆனா இன்னைக்கி காலைல இருந்து ஒரே தமாசு தான், ரெம்ப நாள் கழிச்சு சந்தோசமா போச்சு!

man of the match:அனானி -தான்.
//

நான் இன்னும் முழுசா படிக்கல...அப்புறம் பொறுமையா ரசிச்சு படிக்கனும் :))))

சொன்னது...

போர்டை கூபிடாமல் முடிவடுத்ததை கண்டிக்கிறேன்

சொன்னது...

கங்குலிக்கு உடல் தகுதி இல்லை

சொன்னது...

கிரிக்கெட் விதிகளை மாற்றுவோம்

சொன்னது...

//நான் தான் அந்த மேன் ஆப் தி மேட்ச்

//

ஆகா..
வந்துட்டீங்களா ஆபிஸர் :))

அனானிண்ணா..வேணாம்ங்ண்ணா..
நான் சின்னப் பையனுங்ண்ணா..
இந்த விளையாட்டு இங்க வேணாம்ங்ண்ணா..:)))

சொன்னது...

கப்பி!!!
போதுமா நண்பா!!!


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//கப்பி!!!
போதுமா நண்பா!!!
///

நண்பனா நீயி? :)))))

போட்டாச்சு போட்டாச்சு...எத்தன...

சொன்னது...

எங்கப்பா ராமதாஸ் ஜெயலலிதா கருணா நிதி யரையும் காணோம் ரிஜக்டடா?

சொன்னது...

ஆமாங்ண்ணா :)

சொன்னது...

கப்பி, உசாரா இருந்துக்கோ அப்புறம் நிஜார் தங்காது சொல்லிட்டேன்.

தலைப்பை எல்லாம் மகி சொல்லுற மாதிரி வைக்காது. வகுந்துட்டுவாங்க வகுந்து.......

சொன்னது...

//தலைப்பை எல்லாம் மகி சொல்லுற மாதிரி வைக்காது. வகுந்துட்டுவாங்க வகுந்து.......
//

ஹி ஹி..நாங்கள்லாம் தெளிவுல்ல :))

சொன்னது...

உனக்கு எத்தனைப்பா ஆச்சி?

சொன்னது...

//உனக்கு எத்தனைப்பா ஆச்சி?//

இன்னைக்கு விளையாட்டை கண்டினியூ பண்ண முடியாதுன்னு நினைக்கறேன்..பார்ப்போம் :(

சொன்னது...

யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்

சொன்னது...

//யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா //

எங்கே? எங்கே? எங்கே??

சொன்னது...

//இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)//

ரொம்ப முக்கியம் இப்போ!
:)

சொன்னது...

//ரொம்ப முக்கியம் இப்போ!
//
ஒரு ரசிகனோட கலை ஆர்வத்தை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கப்பா