உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி!!படத்துல இருக்கறது தான் உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. சிறுத்தை வாயில் இருந்து நீர் விழுவது தெரிகிறதா??

இதுக்குப் பேரு 'Leyenda del Puma'. Legend of Puma. இந்த சிறுத்தை சிலைக்கு பின்புறம் பாறைகளுக்கு நடுவில் ஒரு நீருற்று இருக்கிறது. அதை சிறுத்தை வாய் வழியாக பைபாஸ் போட்டு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

மாண்டிவிடியோவில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் 'மினாஸ்' என்ற நகரம். இந்த இடத்தில் தான் இந்த நீரூற்று இருக்கிறது. இங்கு தான் சிறு குன்றுகளையாவது பார்க்கமுடிகிறது. மற்றபடி உருகுவே முழுதும் சம்வெளிப் பிரதேசம் தான்.

இது சிறுத்தைகள் நடமாடும் பகுதி. நம்ம கண்ணுல தான் ஒன்னு கூட படல.

இந்த ஊற்று ஆறாகப் பாய்வதற்கு முன் அங்கேயே 'Salus' என்ற ப்ராண்டில் பாட்டிலில் அடைத்துவிடுகிறார்கள். அருகிலேயே 'Patricia' பீர் ஃபாக்டரியும் உள்ளது.

**************************************************

இன்னொரு காமெடி...

நம்ம ரூம்மேட் கலக்கறாரு. வங்கிக் கணக்கு தொடங்க ஒரு படிவம் கொடுத்தாங்க. ஸ்பானிஷ்ல தான். ஒரு டெம்ப்ளேட்டைப் பார்த்து கட்டங்களை நிரப்பிட்டு வந்தவர் 'Marital status' -ல Single தானே போடனும்னு கேட்டாரு.

"யோவ்..உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதேய்யா" என்று கேட்டதற்கு பதில்...

"என் வொய்ஃப் விஜயவாடா-ல தானே இருக்கா...இங்க நான் தனியா தானே வந்திருக்கேன்"

இது எப்படி இருக்கு!!!12 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஏங்க கப்பி சார், ரொப்பத்தான் தமாஸ் போங்க.
ஆனா, நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

சொன்னது...

அநியாயத்துக்கு ரொம்ப பெரிய நீர்வீழ்ச்சியா தான் இருக்கு.

நீ மட்டும் தான் ஒரு மாதிரினு நினைத்தேன். உன் கூட இருக்கும் கூட்டமும் அப்படி தான்.....

சொன்னது...

//ரொப்பத்தான் தமாஸ் போங்க.
ஆனா, நல்ல தகவல்//

இப்போ என்ன சொல்றீங்க? தமாஸா தகவலா?? தீர்ப்பை சொல்லிட்டு போங்க...

//வாழ்த்துக்கள்//ளுக்கு நன்றி :))

சொன்னது...

//நீ மட்டும் தான் ஒரு மாதிரினு நினைத்தேன். உன் கூட இருக்கும் கூட்டமும் அப்படி தான்.....
//

உன் கூட சேர்ந்ததுல இருந்து தான் இப்படி இருக்கேனோ??

சொன்னது...

தகவல்தான் தலைவா, ஏத்துக்கிறேன்.

சொன்னது...

கலை அரசன்...

இவ்வளவு சுலபமா தீர்ப்பை சாதகமா சொல்லிட்டீங்களே..

நீங்க ரொம்ப நல்லவர்ங்க :D

சொன்னது...

சிறுத்தை(கூட) ஜொள்ளு விடுகிறதா ? :-)))

சொன்னது...

//சிறுத்தை(கூட) ஜொள்ளு விடுகிறதா ? :-)))
//

அது சரி!! :)

சொன்னது...

தலைவா அந்த நீர்வீழ்ச்சி மேல இருந்து கீழ குதித்து தற்கொலை பண்ணிக்க முடியுமா?....

சொன்னது...

//தலைவா அந்த நீர்வீழ்ச்சி மேல இருந்து கீழ குதித்து தற்கொலை பண்ணிக்க முடியுமா?//

:))
அனானி..உங்க கேள்வியால என்னைக் கண்கலங்க வச்சுட்டீங்க..

இந்த தற்கொலை விளையாட்டை நாம திருப்பரங்குன்றம் மலைல மட்டும் வச்சுக்கலாம்..ஊரு விட்டு ஊரு வந்து இங்க வேணாம் ;)

சொன்னது...

யோவ் கப்பி,

குட்டிப்பையன் 1 போறா மாதிரி இருக்கு இது பெரிய நீர்வீழ்ச்சியா!

குசும்பு ஜாஸ்தியா உமக்கு!

சொன்னது...

//குட்டிப்பையன் 1 போறா மாதிரி இருக்கு இது பெரிய நீர்வீழ்ச்சியா!

குசும்பு ஜாஸ்தியா உமக்கு!
//

அட நீங்க வேற...இதையும் புரொபைல் போட்டோல இருக்கும் ஆர்த்திகாஸ் சிலையையும் பார்க்கறதுக்கு 300 கி.மீ இழுத்துட்டு போனாங்க..அந்த சோகத்தை நான் என்னன்னு சொல்ல..