அந்த இரவு

நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்த நாட்கள். டீயும் சிகரெட்டுமே வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பகல் பொழுதுகளில் நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதும் ஏற்படும் அமைதி சுயவிரக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கும். தனிமை மனதைக் கவ்வும். மதிய நேரங்களில் பசி மயக்கமும் அரைத் தூக்கமும் என் பொழுதைக் கழிக்க உதவிய காலம் அது.

ஒரு நாள் இரவு 11 மணிக்கு பி.எஸ்.என்.எல்-இல் வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சைட்டுக்கு கிளம்பினான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த என்னைப் பார்த்து "இங்க அசோக் நகர் சைட் தான்....கூட வர்றியா மக்கா....அரை மணி நேரத்துல வந்துறலாம்" என்றான். எவ்வளவு நேரம் தான் இருட்டை வெறித்துப் பார்த்து படுத்திருப்பது என நானும் கிளம்பினேன்.

உதயம் அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு சைட்டுக்குச் சென்றோம். அங்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுடைய சைட் மேனேஜரும் வரவில்லை. அவர்களை நொந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போது போலிஸ் பேட்ரோல் ஜீப் வந்து எங்கள் அருகில் நின்றது.

"இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க"

- முன்னால் அமர்ந்திருந்த எஸ்.ஐ கேட்டார்.

"பி.எஸ்.என். எல் ஸ்விட்ச் சைட் சார்..ஆளுங்க இன்னும் வரல..வெயிட் பண்ணிட்டு இருக்கோம்"

"ஐடி கார்டை காட்டு"

என் நண்பன் தன் கார்டை எடுத்துக் காட்டினான்,. நான் கல்லூரி ஐடி கார்டாவது காட்டலாம் என பேண்டைத் துழாவினால் அதுவும் இல்லை. கார்ட் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ் வேறு பேண்டில் இருக்கிறது.

"காலேஜ் ஐடி கார்ட் வீட்டுல இருக்கு சார். நான் இப்பதான் வேலை தேடிட்டு இருக்கேன்"

"லைசென்ஸ் வச்சுருக்கியா"

"என் ஃப்ரண்டு தான் சார்..ஒன்னா தான் தங்கி இருக்கோம்..துணைக்கு கூட்டிட்டு வந்தேன் சார்" - இது என் நண்பன்.

"இருப்பா..எதுனா ஐடெண்டிபிகேஷனுக்கு வேணும்ல"

"இல்ல சார்..எல்லாமே வேற ஒரு பேண்டல இருக்கு"

"சரி ஜீப்ல ஏறு"

"சார் இல்ல சார்...இப்ப நான் போய் வேணா எடுத்துட்டு வந்துடறேன் சார்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ஜீப்ல ஏறு. முத்து இவரை ஜீப்ல ஏத்து. நீ ஐடிகார்டை எடுத்துட்டு வந்து ஸ்டேஷன்ல காட்டிட்டு வந்து கூட்டிட்டு போ"

'பணம் வேணும்னா கேட்டு வாங்கிட்டுப் போகாம எதுக்கு இப்படி உயிர வாங்கறாங்க' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டபிள் என்னை தள்ளிக்கொண்டே ஜீப்பில் ஏற்றிவிட்டார்.

ஜீப்பில் இந்தப் பக்கம் கஞ்சா குடிக்கி, இந்த பக்கம் பிக் பாக்கெட். என் நண்பன் எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பைக் கிளப்பிவிட்டார்கள்.

அந்த ஏரியா மொத்தமும் சுற்றிவிட்டு எஸ்.ஐ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டார். அவர் வீடாக இருக்கவேண்டும்.

ஸ்டேஷனுக்குச் சென்றதும் மற்ற இருவரிடமும் ஒரு கையெழுத்தையும் கைநாட்டையும் வாங்கிக்கொண்டு செல்லில் அடைத்துவிட்டார்கள். நான் வாசல் அருகிலேயே சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தேன்.

ஏட்டிடம் "சார், இப்போதான் சார் வேலை தேடிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஐடி கார்டை இப்போ கொண்டுவந்துடுவான் சார்" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஏட்டும் பாவப்பட்டு மூலையில் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் என் நண்பன் வீட்டிற்குச் சென்று என் கல்லூரி ஐடி கார்டை எடுத்து வந்துவிட்டான். அதை வாங்கிப் பார்த்த ஏட்டு திரும்பி என்னைப் பார்த்துவிட்டு விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

"எதுக்கும் எஸ். ஐ ஐயா வந்துடட்டும். ஏன்னா அவரைக் கேக்காம உன்னை அனுப்பிட்டா என் பேரு ரிப்பேராயிடும்..புதுசா வந்த் ஆளு வேற"

"காலைல இண்டர்வ்யூ வேற இருக்கு சார்"

"அதெல்லாம் கரெக்டுப்பா..ஆனா அவரு மூனு பேர் ஏத்தியாந்ததுல ஒருத்தன் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? இப்ப வந்துடுவாரு வெயிட் பண்ணு" என்றபடியே அவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.நண்பனை வெளியே காக்க வைத்துவிட்டார்கள்.

மணி இரண்டு. எஸ்.ஐ இன்னும் வந்த பாடில்லை. இப்படி வந்து உட்கார்ந்திருப்பதற்கு தெரிந்தால் வீட்டில் என்ன நடக்கும் என நினைக்கும்போதே தலை சுற்றியது. நண்பர்கள் ஓட்டுவதற்கு இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதோ. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. ஒரு வேளை என் மேல் தான் தப்போ என முதல்முறையாக எனக்கு என் மேலிருந்த நம்பிக்கை தளர்ச்சியடைந்தது.

சிறிது நேரம் கழித்து என்னுடன் ஏற்றிவரப்பட்ட தாடி ஒருவன் ஏட்டைக் கூப்பிட்டான். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டார்கள். "இந்த அறிவு அங்கேயே வந்துருக்கனும்..சரி கிளம்பு" என செல்லைத் திறந்து அவனை அனுப்பிவிட்டார். சீட்டிற்கு வந்ததும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அவன் வெளியே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் உள்ளே வரும்போதே பர்ஸைக் கையில் கொண்டுவந்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாதவர் போல ஏட்டு அவனை வெளியே காத்திருக்குமாறு அனுப்பிவிட்டார். அன்றைய தேவை பூர்த்தியாகிவிட்டது போலும். ஏதோ அழுக்கேறிய கோப்பை எடுத்து புரட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆளாளுக்கு சேர் டேபிள்களை இழுத்துப் போட்டு உறங்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மணி நேரம் ஸ்டேஷன் சுவற்றையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.

சரியாக ஐந்தரை மணிக்கு எஸ்.ஐ வந்து சேர்ந்தார். அலாரம் வைத்து பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது அவர் கண்களில் தெரிந்தது,

உள்ளே வரும்போதே பெஞ்சில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டவர் "இன்னும் ஏன்யா இவனை உட்கார வச்சிருங்கீங்க" என என்னை அப்போதே அவர் போகச் சொல்லி நானாக இங்கு இருக்கும் தோரணையில் கேட்டார்.

"இல்ல சார்..நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணோம்...சரி நீ கிளம்புப்பா..சார் ஐடி கார்ட் பாக்கறீங்களா சார்" - ஏட்டு அவர் டேபிளில் இருந்த என் கார்டை எடுத்து வந்து காட்டினார்.

அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏட்டும் என்னிடம் கார்டை கொடுத்துவிட்டு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார்.

ஒருவ்ழியாக வெளியே விட்டார்களே என நானும் என் நண்பனுமாக வீடு திரும்பினோம். ஒரு பெட்டி கேஸோ எய்ட்டியோ போடாமல் விட்டது என் நல்ல நேரம்.

அன்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் சினிமாவில் வருவது போல் வாழ்க்கையில் பெரிய மாற்றமோ பாதிப்போ ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு மன வேதனை இருந்து கொண்டு தானிருக்கிறது.

ஜீப்பில் ஏற்றும்போதோ இல்லை ஸ்டேஷனுக்கு சென்ற பிறகோ திருவல்லிகேணியில் எஸ்.ஐயாக இருந்த என் மாமாவின் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கலாம். அதுவும் கூட தோன்றவில்லை. ஒருவேளை ஒரு வேலையில் இருந்திருந்தால் தைரியமாக் சொல்லி இருந்திருப்பேன். அப்போதும் இதை முதலிலே சொல்லியிருக்கலாமே என ஒப்புக்குச் சொல்லிவிட்டு அனுப்பியிருப்பார்கள்.

இந்த விஷயமும் என் நண்பர்கள் நான்கைந்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன இருந்தாலும் ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். இல்லாவிட்டாலும் எனக்கு அப்படித் தோன்றும். தோன்றி இருக்கிறது.

இத்தனை நாட்கள் கழித்து உங்களிடம் கொட்டிவிட்டேன். நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.32 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். //
நாங்க உன்ன் கேவலமாக பாக்க மாட்டோம்.

//நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். //
சரி சொல்ல மாட்டோம்.

அடுத்த தபா உன்ன யாரும் ஸ்டேசனுக்கு கூப்பிட்டாங்க வை, அண்ணன் பெயர சொல்லு, இல்ல எனக்கு ஒரு போன போடு, நான் பாத்துக்குறேன்.

சொன்னது...

அய்ய..இது சொந்த கத இல்ல நைனா..நம்ம இமாஜினேசன்ல எய்தனுது..

ஆனா //நாங்க உன்ன் கேவலமாக பாக்க மாட்டோம்//
//சரி சொல்ல மாட்டோம்.//
இதுக்கு ரொம்ப டேங்க்ஸ்...


//அடுத்த தபா உன்ன யாரும் ஸ்டேசனுக்கு கூப்பிட்டாங்க வை, அண்ணன் பெயர சொல்லு, இல்ல எனக்கு ஒரு போன போடு, நான் பாத்துக்குறேன். //

பாத்துக்கிட்டே இருப்ப..வேற என்ன பண்ணுவ..

அவனுங்களா பாவம் பாத்து விட்டாலும் விடுவாங்க..நீ வந்து அதுக்கும் ஆப்பு வைக்கறதுக்கா??

ஆமா..அன்னிக்கு வாங்கின அவிப்புக்கு நீங்களே பப்ளிசிட்டி கொடுத்துட்டு இருக்கீங்க போல??

சொன்னது...

//அன்னிக்கு வாங்கின அவிப்புக்கு நீங்களே பப்ளிசிட்டி கொடுத்துட்டு இருக்கீங்க போல?? //
அத அவிப்பு நீ எடுத்துக்கிட்டா அது உன் தப்பு, நாங்க எல்லாம் பொது வாழ்க்கைக்கு(10வது படிக்கும் போது) வரும் போதே எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு தான் வந்து இருக்கோம். கிழே விழுந்தாலும் காசு கிழ விழுந்துட்டுச்சு, அத எடுக்கதான் விழுந்தேன் சொல்லுர ஆளு. இது எல்லாம் ஜுஜிப்பி மேட்டர்.
உனக்கு ஒரு ப்ளிசிட்டி கிடைக்க தான் அது......

சொன்னது...

//பொது வாழ்க்கைக்கு(10வது படிக்கும் போது) வரும் போதே எல்லாத்தையும் கழட்டி வச்சுட்டு தான் வந்து இருக்கோம். கிழே விழுந்தாலும் காசு கிழ விழுந்துட்டுச்சு, அத எடுக்கதான் விழுந்தேன் சொல்லுர ஆளு. இது எல்லாம் ஜுஜிப்பி மேட்டர்.
//

அவ்வ்...நம்ம சாதிக்காரன்னு இன்னொரு முறை புரூவு
பண்ணிட்டீங்க புலி....

//உனக்கு ஒரு ப்ளிசிட்டி கிடைக்க தான் அது......
//
அங்க பாக்கும்போதே புரிஞ்சுதுங்கண்ணா...

இன்னைக்கும் எதுனா போட்டு வாங்கலாம்னு பாத்தா ஜஸ்டு மிஸ்ஸு!!!

சொன்னது...

கப்பி,

நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா??

ஒண்ணு இல்லிங்க ரெண்டு முறை ரெண்டு இரவை காவல் நிலையத்தில கழிச்சுருக்கேன். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படி கப்பி, நம்மாளுங்க திருடனை விட்டுட்டு மீதி எல்லாரையும் பிடிப்பாங்க. என்னோட ரெண்டு காவல் நிலைய இரவுகளையும்
வெளியிடணும்.

அன்புடன்
தம்பி

சொன்னது...

//அய்ய..இது சொந்த கத இல்ல நைனா..நம்ம இமாஜினேசன்ல எய்தனுது..//
இமாஜினேஷனுக்கே இவ்வளவு பீலிங்கா நம்பிடோம் எல்லாரும் நம்பிவிட்டோம்..

சொன்னது...

//நம்மாளுங்க திருடனை விட்டுட்டு மீதி எல்லாரையும் பிடிப்பாங்க//

100% உண்மை தம்பி..

உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்..

சொன்னது...

//இமாஜினேஷனுக்கே இவ்வளவு பீலிங்கா நம்பிடோம் எல்லாரும் நம்பிவிட்டோம்..
//

அப்பாடா..நீங்களாவது நம்பினீர்களே..

நம்பியதற்கு நன்றி சந்தோஷ் :D

சொன்னது...

பொறுப்பில்லாம இருக்குறதாலதான அவங்க போலீசு. உங்க நிலைமை மோசந்தான். திருந்த மாட்டாங்க சார்.

சொன்னது...

ஜிரா சார்..

//பொறுப்பில்லாம இருக்குறதாலதான அவங்க போலீசு//
//திருந்த மாட்டாங்க சார்//

இதை ஒத்துக்கறேன்...

//உங்க நிலைமை மோசந்தான்//

இதை ஏத்துக்க முடியாது.. :))

அடடா..யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே...யப்பா..இது சும்மா கதை விட்டதுப்பா..

சொன்னது...

Too close to be true :-)

சொன்னது...

//உங்க நிலைமை மோசந்தான்//

ரொம்ப மோசம் தான்...யாருமே இதை கதை-னு நம்ப மாட்டேங்கறாங்க...

இதையும் ஒத்துக்கறேன் ஜிரா...

சொன்னது...

//Too close to be true :-) //

ஆகா..பாலா இங்க்லீஷ்ல அடிச்சுட்டாரு..ஒன்னும் வெளங்கலையே...

கதைன்னு நம்புறாருன்னே நம்புவோம்..

நன்றி பாலா :))

சொன்னது...

கற்பனைக் கதை நல்லா இருந்தது. ஆமா அதுக்கப்புறம் அந்த டேசன எப்பவாவது க்ராஸ் செய்திருக்கிறீர்களா?

சொன்னது...

வாங்க டுபுக்ஸ்..

//ஆமா அதுக்கப்புறம் அந்த டேசன எப்பவாவது க்ராஸ் செய்திருக்கிறீர்களா?
//

நீங்க வேற..உதயம் பக்கத்துலன்னு எழுதிட்டு எந்த டேசன்னு யோசிச்சா..இந்த பக்கம் வடபழனியா, லெப்ட் எடுத்து கே.கே.நகர் டேசனா,
பின்னாடி கீற அசோக் நகர் டேசனா, இல்ல விருகம்பாக்கம் டேசனா-னு ரொம்ப கன்ப்யூஸ் ஆயிடுச்சு..

இந்த டேசனுங்க ஜூரிஸ்டிக்சன்,ரோட்டுக்கு இந்தாண்டியா அந்தாண்டியா ஒன்னும் புரியல...

அதான் எந்த டேசன்னே சொல்லல...

ஆனா இந்த எல்லா டேசன் வழியாவும் தெனம் போயிக்கினு இருந்தவன்தான் :))

சொன்னது...

romba yadarthamana kathai. oru practical story without any twists, but not my type(fantasy and fiction)aana more like PGW (subtle comedy in normal life.

சொன்னது...

நன்றி Aim!!

சொன்னது...

நல்லாவே கதை விடறிங்க :)

சொன்னது...

வாங்க vaik..

//நல்லாவே கதை விடறிங்க :)
//

எல்லாரும் பாருங்க...vaik
'தடைசெய்யப்பட்ட' உ...தோட பின்னூட்டம் போட்டிருக்காரு :))

சொன்னது...

sookka ezuthuriyee thaliivaa!!! :)
(shall I use this smiley?)

சொன்னது...

vaaங்க manikandan...

டேங்கஸ்...

//(shall I use this smiley?) //

கண்டிப்பா..நீங்க யூஸ் பண்ணாமலா??? :)))

சொன்னது...

//எல்லாரும் பாருங்க...vaik
'தடைசெய்யப்பட்ட' உ...தோட பின்னூட்டம் போட்டிருக்காரு //

அய்யா இப்படி மாட்டி விட்டுடீங்களே :)) "உ... for Dummies" புத்தகம் எங்க கிடைக்கும், சும்மா தெரிஞ்சுக்கதான் :)

சொன்னது...

அட என்னங்க vaik,
விவரம் புரியாம இருக்கீங்ககளே.. இதுக்கெல்லாம் புத்தகத்தைத் தேடிட்டு இருந்தா முடியுமா..
சட்டுபுட்டுன்னு தமிழ்மணத்துல ஒரு பதிவைத் திறந்து பின்னூட்டங்களை மட்டும் படிங்க...

பத்தாவது பின்னூட்டம் படிச்சு முடிக்கும்போது நீங்க உகு,வெகு எல்லாத்துலயும் புலி ஆயிடுவீங்க..

பிகு:புலி-னு சொன்னது ப்ரொஃபைல்ல புலி படம் போட்டவர் இல்லை :D

பிகு-க்கு பிகு: பிகு - பின்குறிப்பி..பின்கு__ இல்லை :))

சொன்னது...

அட என்னங்க கப்பி...

இதுக்கு போயி கத்தி கதறி ஊரைக்கூட்டிட்டீங்க...

ஸ்டேஷனில் ரைட்டராக இருக்கும் எங்க மாமாவோட நைட்டு பாராவுக்கு எத்தனை முறை போய் - படுத்து தூங்கிக்கிட்டு இருந்திருக்கேன்...

என்ன கொஞ்சம் கொசுவா இருக்கும் லாக்கப்புல...அதனால் மார்ட்டீன் - ஆல் அவுட் இந்தமாதிரி கொசுவத்தி சுருளோட போறது நல்லது...

சொன்னது...

ரவி..

//இதுக்கு போயி கத்தி கதறி ஊரைக்கூட்டிட்டீங்க...
//

கத்தி ஊரைக் கூட்டலைங்க..கதை விட்டு கூட்டிட்டேன்..இது சும்மா கில்பான்சி... :))

அப்ப கூட சொந்த மாமா கூட ஸ்டேஷன் போறதுக்கும் 'மாமா' கூட ஸ்டேஷன் போறதுக்கும் வித்தியாசம் இல்லையா?? :)))

//என்ன கொஞ்சம் கொசுவா இருக்கும் லாக்கப்புல...அதனால் மார்ட்டீன் - ஆல் அவுட் இந்தமாதிரி கொசுவத்தி சுருளோட போறது நல்லது... //

என் போலீஸ்கார சித்தப்புவும் இத சொல்லி இருக்காரு :))

சொன்னது...

கப்பி...நல்லா எழுதறீங்க. சூப்பர்.

என்னா ஒன்னு...நமக்குத் தான் மலரும் நினைவுகள் வந்து பாடாப் படுத்துது.
:(((

சொன்னது...

நன்றி கைப்புள்ள...

//நமக்குத் தான் மலரும் நினைவுகள் வந்து பாடாப் படுத்துது.
//

யாரங்கே...சீக்கிரம் வந்து ஒரு கொசுவத்தியைக் கொளுத்துங்கப்பா..

கைப்பு ஸ்டார்ட்...

சொன்னது...

எனக்கு காலேஜ் படிக்கும் போதே ID கார்டு கிடையாது, இந்த லச்சனத்துல வேலை தேடும் போது சிக்கியிருந்தேன்... அவ்வளவுதான்! என் மொகறய பாத்த உடனே ஆயுள் தண்டனை குடுத்திருப்பாய்ங்க... நல்ல வேளை எஸ்கேப் ஆகிட்டேன்!!

சொன்னது...

,,,//அய்ய...இது சொந்தகத இல்ல நைனா...நம்ம இமாஜினேசன்ல
எய்தனுது//....

அய்ங் இந்தக் கததானே வேணான்றது:
நாந்தேன் உன்ன உட்காரச்சொன்ன ஏட்டு!

சொன்னது...

//நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது//

தலைவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா!!!!!!!!
அன்புடன் அருணா

சொன்னது...

கருப்பன்

வாங்க கருப்பன் :)


சிவஞானம்ஜி

//
அய்ங் இந்தக் கததானே வேணான்றது:
நாந்தேன் உன்ன உட்காரச்சொன்ன ஏட்டு!
//

நம்மாண்டயே டபாய்க்கறீங்களே நைனா :))

aruna

//தலைவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா!!!!!!!!
//

அதே அதே :)))

சொன்னது...

என்னாது. கதையா.. அடங்கொய்யால