உருகுவே குடியரசு தினம்!

ஜூலை 18 -

இன்று "Jura de la constitucion" - அதாவது உருகுவேயின் குடியரசு தினம். 1830-ஆம் ஆண்டு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்.


பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் அமெரிக்கா முழுதும் சுதந்திரப் போராட்டங்கள் துவங்கியது. இதன் பின் உருகுவே பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவின் பகுதியாக இருந்தது, பின்னர் 1825-இல் மீண்டும் ஒரு புரட்சி ஆரம்பித்து ஆகஸ்ட் 28,1828-இல் தனி சுதந்திர நாடாக உருவானது.

ஹோசெ கெர்வாசியோ ஆர்த்திகாஸ் (Jose Gervasio Artegas) என்ற இராணுவ அதிகாரி இந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவருடைய மக்களாட்சி குறித்த கொள்கைகள் தென் அமெரிக்கா தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் சீரான வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. நிலையான அரசாலும் முன்னேறிய சமூக அமைப்பாலும் "தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்றும் அழைக்கப்பட்டது.

இதன்பின் 1973-இல் தொடங்கி 11 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன்பின் 1984-இல் மீண்டும் மக்களாட்சி நிறுவப்பட்டது.

பொருளாதாரத்தில் விவசாய ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கிறது. பிரேசிலும் அர்ஜெண்டினாவும் தான் முக்கிய இறக்குமதியாளர்கள்.அண்டை நாடுகளான இவற்றுடன் எந்த சுணக்கமும் இல்லை. மாடு மற்றும் பன்றி மாமிச உணவுத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் தொகை மொத்தமே முப்பத்தி நான்கு லட்சம் தான். கல்வியறிவு 98%.

மக்களிடையே சமுதாய விழிப்புணர்ச்சி இருக்கிறது. நட்புடன் பழகும் மக்கள்.

ஓட்டுப்பதிவு 90% மேல் இருக்குமாம். யாருக்கும் வோட்டளிக்க விரும்பவில்லையெனில் ஓட்டுச் சீட்டில் அதையும் பதிவு செய்யலாம். அரசு சலுகைகள் பெறும்போது வோட்டளித்துள்ளாரா எனப் பார்த்த பின்பே வழங்கப்படும். அப்படி வோட்டளிக்காவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பொது இடங்களில் புகை பிடிப்பதை அரசு தடை செய்திருக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்திய நாடு. இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். இப்போதெல்லாம் தகுதிச் சுற்றிலேயே தேறுவதில்லை.

உருகுவே பற்றிய தகவல்களுக்கு:

விக்கிபீடியா
http://www.uruwashi.org
http://fromuruguay.blogspot.com8 பின்னூட்டங்கள்:

சொன்னது...

appada successfulla first commentae naan than.Namma 49 O optionaiyum ithu mathiri kondu vantha parava illa.

சொன்னது...

//appada successfulla first commentae naan than.//

நல்ல வேளை..one and only comment-னு அடிக்காம் விட்ட...விடுங்க பாஸ் போதை வாழ்க்கையில..ச்சே.பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...

//Namma 49 O optionaiyum ithu mathiri kondu vantha parava illa//

இங்கே உடன் பணியாற்றுபவனிடம் எப்படி இங்கு வோட்டுப்பதிவு இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றூ கேட்டதற்கு "வோட்டு போடத்தானே தேர்தல்...எல்லாருமே வோட்டு போடச் செல்வோம்..தவிர்க்கமுடியாத சந்தர்ப்பமாக இருந்தால் ஒழிய வோட்டு போடாமல் இருக்க மாட்டோம்" என்றான்.. 49ஓ-வை விட இந்த விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதுதான் முக்கியம்..

சொன்னது...

34 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு கட்ண்டிலிடிக்கிறது ஈசி. நம்ம ஊரில் முடியுமா?

ஆனா ஒண்ணு. எல்லாத் தேர்தலிலேயும் என் வோட்டை யாராவது போட்டுடறாங்க. :)

(நகரங்கள், மக்கள், தட்ப வெட்ப நிலை, சுற்றுலா இடங்கள் என நல்ல விரிவா எழுதுங்க. அப்படியே நிறையா படங்களும்.)

சொன்னது...

//34 லட்சம் பேருல யாரு ஓட்டுப் போட்டாங்க இல்லைன்னு கட்ண்டிலிடிக்கிறது ஈசி. நம்ம ஊரில் முடியுமா?//

உண்மைதான்..

//ஆனா ஒண்ணு. எல்லாத் தேர்தலிலேயும் என் வோட்டை யாராவது போட்டுடறாங்க. :)//

அது எப்படியாவது வோட்டு சதவீதத்தை அதிகமாக்கிக் காட்டனும்னு அவங்க செய்யற தியாகம் சார்...

//(நகரங்கள், மக்கள், தட்ப வெட்ப நிலை, சுற்றுலா இடங்கள் என நல்ல விரிவா எழுதுங்க. அப்படியே நிறையா படங்களும்.) //

கொத்தனார் கேட்டு முடியாதுன்னு சொல்ல முடியுமா..கண்டிப்பா...

விக்கிபீடியாவில் தமிழில் மொழிப்பெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்..இன்னும் பாதியிலேயே இருக்கிறது...

சொன்னது...

மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.....

வோட்டு போடத் தான் தேர்தல்...ஹம் கேட்க நல்லா தான் இருக்கு. நம்ம ஊருர்ல பல பேருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு....
என்ன சொல்லுற கப்பி!

சொன்னது...

//மாட்டு கறி, பன்னி கறினு வெளுத்து வாங்குற போல.....
//

அட நீங்க வேற வயித்தெறிச்சலைக் கிளப்பாதீங்க...வெளியே ஓட்டலுக்குப் போனா இதைத் தவிர வேற எதுவும் இல்ல...

வெஜிடேரியன்களை தண்ணி இல்லாத காட்டுக்கு பதில் இங்க அனுப்பிடலாம்...

நான் 'no meat, no pollo' னு இவனுங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்கே பெரும்பாடா இருக்கு...

//நம்ம ஊருர்ல பல பேருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு....
//
என்னத்த சொல்றது.. ஹூம்..பெருமூச்சு தான் விட முடியுது..காலம் மாறும்..மாற்றுவோம்..

சொன்னது...

///"வோட்டு போடத்தானே தேர்தல்...எல்லாருமே வோட்டு போடச் செல்வோம்..தவிர்க்கமுடியாத சந்தர்ப்பமாக இருந்தால் ஒழிய வோட்டு போடாமல் இருக்க மாட்டோம்" என்றான்.. 49ஓ-வை விட இந்த விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதுதான் முக்கியம்..
romba correct. Intha vaati vote panna poraennu officekku leave poattutu veetukku poittu, vottu podaama vantha ennakku nalla savukku adi. En kannai thoranthuteenga kappi


///என்னத்த சொல்றது.. ஹூம்..பெருமூச்சு தான் விட முடியுது..காலம் மாறும்..மாற்றுவோம்..

Kandippa nambikkai irukku

சொன்னது...

// En kannai thoranthuteenga kappi
//

:))