'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்

கிரீடம் படம் பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று. ஆனால் இப்போது இந்த படம் குறித்து எழுதக் காரணம் காயத்ரியின் இந்த பதிவு மற்றும் அலுவலகத்தில் எனக்கும் நண்பருக்கும் தொடர்ந்து நடக்கும் வாக்குவாதங்கள். காயத்ரியின் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என ஆரம்பித்து கொஞ்சம் நீண்டுவிட்டதால் இன்னும் கொஞ்சம் சேர்த்து பதிவாக்கிவிட்டேன்.

நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாததற்குக் காரணம் படம் எனக்கு ரொம்பவே படம் பிடித்திருந்தது. விமர்சனம் ஒரு'தல'பட்சமாகிவிடும் என்பதால் தான்.(இங்க ஒன்னு சொல்லிக்கறேன்..நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார் :)) சில காட்சிகள் சொதப்பலாக இருந்தது உண்மைதான். இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியும் இழுவை தான். ஆனால் படம் அவ்வளவு மொக்கையா என்ன?? ஒரு வேளை நிறைய தமிழ் படங்கள் பார்த்து எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதா அல்லது இந்த படம் மொக்கை என்பவர்கள் சிலப்பல வருடங்களாக தமிழ் படங்களே பார்ப்பதில்லையா என சந்தேகம் வருகிறது.

சிட்டிசனுக்கு பிறகு அஜீத் படம் என்றாலே மொக்கையாக இருக்குமென ஒரு பொதுக்கருத்து உண்டாகிவிட்டது. அவரும் அதை ஓரளவு காப்பாற்றி வருகிறார் :). ஆனால் கிரீடம் படத்தை ஒரு முறை கூட முழுதாக பார்க்கவே முடியாது என்பதுபோல் சொல்வதுதான் வருத்தமாக இருக்கிறது. கிரீடம் படம் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துப் போகும் படமெல்லாம் கிடையாது. அது ஒரு சாதாரண தமிழ் படம் தான். அதில் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்த படம்னு மட்டுமில்ல உலகத்துல எந்த படமாயிருந்தாலும் 'கேவலமாயிருக்கும், நமக்கு பிடிக்கவே பிடிக்காது' ன்னு முன்முடிவோட பார்த்தா எந்த படமுமே பிடிக்காது. சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)

ஒருவேளை அஜீத் என்பதால் மட்டும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா? நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது "வரலாறுக்கு அப்புறம் ஆழ்வார் இல்லாம இந்த படம் வந்திருந்தா இன்னும் நல்லா ஓடியிருக்கும்" என்று என் நண்பன் சொன்னான். அது ஒருவகையில் உண்மைதான். ஆழ்வார், பரமசிவன், திருப்பதி போன்ற படங்கள் அஜீத்தை காமெடியனாக்கிவிட்டன.

காயத்ரி படத்தின் ஆரம்பத்தில் ராஜ்கிரணின் கனவே காமெடியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏன் இது போல் கனவு காணும் பெற்றோர்கள் இல்லையா? உன் கையால ஊசி போட்டுக்கனும்டான்னு சொல்லி டாக்டருக்கு படிக்க வைக்கிற பெற்றோர்கள் இல்லையா? அதற்காக ராஜ்கிரணின் கதாபாத்திரம் யதார்த்தமானது, முழுமையா வடிவமைக்கப்பட்டிருக்கிறதுன்னு நான் சொல்ல வரல. ஏன்னா இப்ப எந்த ஹெட் கான்ஸ்டபிளும் இந்த மாதிரி இனாவானா(ஆமா இப்ப இப்படி இருந்தா இதான் சொல்வாங்க) கிடையாது. ஆனால் அந்த காட்சி காமெடியானது வருத்தம் தருகிறது.

ஹீரோவுக்கு அறிமுகப்பாடல் என்பது இப்ப எல்லா படத்துலயும் தான் வருது. பி.வாசு பையன் கூட டிரெயிலர்லயே பாட்டு பாடிட்டுதான் அறிமுகமாவறான். நடிக்கத் தெரிந்த, திறமையுள்ள அஜீத்தாவது இதை மாத்தக்கூடாதான்னு கேட்டீங்கன்னா அதுக்கு பதிலை கடைசில சொல்றேன்.

என் நண்பர் அஜீத் படத்துல "எப்பவும் சொங்கி மாதிரியே இருக்கான். சோகமாவே இருக்கான்.."ன்னு சொன்னார். ஊருக்குள்ள வேலை தேடிட்டிருக்க மூத்த பசங்க எல்லாமே எப்பவுமே அப்படித்தான் இருப்பாங்க. இதை அஜீத் தெரிஞ்சுதான் நடிச்சாருன்னு வக்காலத்து வாங்க வரல. ஆனா படத்தோட கேரக்டருக்கு ஒன்றி போகலையா என்ன?? தெரிஞ்சோ தெரியாமலோ அஜீத் நடிப்பு அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி தானே இருந்தது?

த்ரிஷா புள்ளையார் இல்லனா பெயிலாகறது எந்தளவு லாஜிக் இல்லையோ அதே மாதிரி தான் அஜீத் திருநள்ளாறு போனா நல்ல படம் வரும்னு நம்பறதும் :)).

வேலையில்லாம நாலு நண்பர்களோட சுத்திட்டிருந்தாலும் சரி, ரவுடியாயிருந்தாலும் சரி, ஏழை பணக்காரனாயிருந்தாலும் சரி ஹீரோ-ஹீரோயினி கடைசில சேருவாங்க. இதுதானே எல்லா தமிழ் படத்துலயும் நடக்குது. இந்த படத்துல கடைசில ஊர்ல ரவுடின்னு பேரு வாங்கனவனுக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொன்னது யதார்த்தமா தெரியலையா?

படத்துல நூறு இருநூறு ரவுடிகளை ஒத்தை ஆளா ஒரே அருவாளால வெட்டி சாய்க்காமல் ஒரே ஒரு ரவுடி கூட மட்டும் மோதறதே பாதி பேருக்கு பிடிக்கல போலிருக்கு :)).

படத்துல காமெடிக்கு தனி டிராக் இல்லாம திரைக்கதையோட ஒன்றி நல்லாத்தானே இருக்கு? இல்ல இப்பல்லாம் நான் தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேனா?? சந்தானம், விவேக் இரண்டு பேருமே தனியாக டிராக் இல்லாமல், டிரேட் மார்க் பஞ்ச் டயலாக்குகளுடன் நல்லாத்தானே செஞ்சிருந்தாங்க?

சரண்யாவைத் தவிர யாருமே நன்றாகவே நடித்திருந்தார்கள். சரண்யா தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். 'கனவெல்லாம்' பாட்டிலும் அஜீத்தை பரீட்சைக்கு பஸ் ஏற்றிவிடும்போதும், அஜீத்தை ஜெயிலில் அடிக்க வரும்போதும் ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருபபாரே. அந்த பாட்டே காமெடியானபிறகு வேறென்ன சொல்வது.

அஜீத் ரெட்டாகவோ பரமசிவனாகவோ வராததுதான் ஆறுதல் அளிக்கிறதா? அவர் நடிப்பு? பல இடங்களில் அசத்தியிருந்தாரே? ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)

கடைசியில் குற்றவாளிகள் லிஸ்டில் அஜீத் போட்டோவை ஒட்டுவதுதான் படத்தின் சிறந்த காமெடி காட்சியாக என் நண்பர் சொன்னார். இறுதியில் ஹீரோ ஜெயிக்காவிட்டால் மக்களுக்கு அது காமெடியாகிவிடுகிறது. "இதே மாதிரி தானே வரதன் ரவுடியாயிருப்பான்"ன்னு நம்மாளு யாரோ தான் விமர்சனப் பதிவுல எழுதி இருந்தாரு. இது ஏன் சிலருக்கு மட்டும் காமெடியாகிறது?

இப்போது படத்தில் கிளைமாக்ஸ் மாற்றியிருக்கிறார்களாம். கடைசியில் மீண்டும் கனவெல்லாம் பாடலை போட்டு அஜீத் எஸ்.ஐ ஆக, ராஜ்கிரன் சல்யூட் அடிப்பாராம். இப்போது யார் மேல் தவறு? முதலில் அஜீத் தோற்றதுபோல் காண்பித்த இயக்குனர் மீதா? தல தோற்க்ககூடாது என்று சவுண்ட் விட்ட ரசிகர்கள் மீதா? அல்லது "என்னய்யா ஹீரோ ஜெயிக்கல..என்ன படம் இது" என்று குறைபட்டுக்கொள்ளும் பொதுஜனம் மீதா??

என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்.

இது இயல்பான படமா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு வட்டத்துக்கு கொண்டுபோகுதா என்பதையெல்லாம் விட்டுவிடலாம்....ஆனால் இது மொக்கை படமே கிடையாது. கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் ஒருமுறையாவது பார்க்கலாம். இந்த படம் பிடிக்காதவர்கள் என்னிடம் சொல்லுங்கள். ஒரு லிஸ்ட் தருகிறேன். எல்லாமே தமிழ் படங்கள்தான். அந்த படங்களையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் இந்த படம் பாருங்கள். ஒருவேளை பிடிக்கலாம்.29 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி! என்ன பதிவு இது? இருக்கு ஆனா இல்லன்ற மாதிரி. :)))

நானாச்சும் நல்லா இல்லைன்னு சொன்னேன்.. நீங்க என்ன சொல்லவரீங்கன்னே புரியல! மக்களே! ஒரு படம் மொக்கைன்னா அதை பாக்காம இருக்கறது நல்லதா? இல்ல அதை விட மொக்கை படங்களை பாத்து ட்ரைனிங் எடுத்துகிட்டு வந்து இதை பாக்கறது நல்லதா? அஜித் நடிப்பு நல்லா இருக்குன்றதால தான் ''நல்ல நடிப்புத்திறமைய வெச்சிட்டு இவர் கஷ்டப்படறத பாத்தா பாவமா இருக்குன்னு'' சொன்னேன். மத்தபடி அஜித் இப்ப இருக்கற நிலைமைல தன்னை நிலைநிறுத்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கு அவருக்கு. அதுக்கேத்த மாதிரியான கதைய தேர்ந்தெடுக்கனும் இல்லியா? இதுவும் அவருக்கு தோல்வியா முடிஞ்சுடுச்சேன்ற வருத்தம் தான் எனக்கு. நாயகன் தோல்வி அடையற, சோகமான முடிவுள்ள படம் ஜெயிக்காதுன்னா, புன்னகை மன்னன், மகாநதி.. ஏன் 'முகவரி' எல்லாம் கூட ஓடியிருக்காதில்ல? லூசுத்தனமா ஒரு க்ளைமேக்ஸ் வெச்சு மறுபடி அதை மாத்தி.. ஒரு மொக்க படத்தை எத்தனை தடவைங்க பாக்கறது? யதார்த்தம்னா முழுமையா இருக்கணும் காதல், பட்டியல் போல.. எப்ப ஹீரோ இன்ட்ரோ சாங்கெல்லாம் வெக்கறாங்களோ அப்ப லாஜிக்க தூக்கிப்போட்டுட்டு படம் முழுக்க ஹீரோயிசம் இருக்கற மாதிரி எடுக்கனும். (உங்க சிவாஜி மாதிரி) ரெண்டும் இல்லாம நடுவால படம் எடுத்தா எப்பிடிங்க பாக்கறது? திருநள்ளாறு போங்கன்னு சொன்னது சும்மா நக்கல்! சனீஸ்வரனா அடுத்த படத்துக்கு ப்ரொட்யூஸ் பண்ண போறார்?

(என்னங்க நீங்க? யாருகிட்டயும் வம்பு தும்புக்கு போகாத பொண்ணு நானு.. என்னைபோய் சீரியசா பதில் சொல்ல வெச்சிட்டீங்களே.) :(

சொன்னது...

thala,
sariyana post
with valid arguements..
seems the movie is good.

சொன்னது...

//இங்க ஒன்னு சொல்லிக்கறேன்.. நான் அஜீத் ரசிகன் இல்ல..//

ஆமா தல, நானும் இத சொல்லிக்க ஆசைப்படறேன்...

நிறைய பேர், நல்ல கத விட்டா, ஓவர் ஏக்ட் பண்ணினா ஏத்துக்கிறாங்க.

ஆனா யதார்த்தமா இருந்தா காமடிங்கறாங்க.

சொன்னது...

கப்பி நான் இதப்ப்பத்தி சொல்ல வரல
தமிழ் மக்கலுக்கு ஒரு அரிய இனய தலம் தமிழ் ஹாப்லாக் பிரியிதா?!!!!!!

சொன்னது...

காயத்ரி

////நானாச்சும் நல்லா இல்லைன்னு சொன்னேன்.. நீங்க என்ன சொல்லவரீங்கன்னே புரியல! //


நான் தான் சொல்லியிருக்கேனே..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..என்னைப் பொறுத்தவரை நல்ல படம் தான்..

//
மக்களே! ஒரு படம் மொக்கைன்னா அதை பாக்காம இருக்கறது நல்லதா? இல்ல அதை விட மொக்கை படங்களை பாத்து ட்ரைனிங் எடுத்துகிட்டு வந்து இதை பாக்கறது நல்லதா? //

இது மொக்கைப் படமே இல்ல...மொக்கை படம்னா எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்கத்தான் அதை சொன்னேன்..எனக்கு கோர்வையா சொல்ல வராது..அதனால இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க போல!!

//தன்னை நிலைநிறுத்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கு அவருக்கு. அதுக்கேத்த மாதிரியான கதைய தேர்ந்தெடுக்கனும் இல்லியா? //

கண்டிப்பா! ஆனா இந்த கதைக்கு என்ன குறைன்னுதான் எனக்கு சந்தேகமே!!!! விக்ரம் சூர்யாவும் வித்தியாசமான கதைகள் செய்யறாங்க. ஆனா அஜீத்துக்கு இருக்கும் 'ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம்' அவர்களுக்கு இல்லை. இருந்தாலும் அஜீத் இது போல் ஹீரோயிசம் இல்லாத கதையை தேர்ந்தெடுத்திருக்கிறாரே!!!

//நாயகன் தோல்வி அடையற, சோகமான முடிவுள்ள படம் ஜெயிக்காதுன்னா, புன்னகை மன்னன், மகாநதி.. ஏன் 'முகவரி' எல்லாம் கூட ஓடியிருக்காதில்ல? நாயகன் தோல்வி அடையற, சோகமான முடிவுள்ள படம் ஜெயிக்காதுன்னா, புன்னகை மன்னன், மகாநதி.. ஏன் 'முகவரி' எல்லாம் கூட ஓடியிருக்காதில்ல? //

முகவரிலயும் கிளைமாக்ஸ் மாத்தின காமெடி நடந்துச்சு...கிளைமாக்ஸ் மாத்தினதில் எனக்கும்தான் உடன்பாடில்லை....கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான். ன்னு தானே சொல்லியிருக்கேன்..


//எப்ப ஹீரோ இன்ட்ரோ சாங்கெல்லாம் வெக்கறாங்களோ அப்ப லாஜிக்க தூக்கிப்போட்டுட்டு படம் முழுக்க ஹீரோயிசம் இருக்கற மாதிரி எடுக்கனும். (உங்க சிவாஜி மாதிரி) ரெண்டும் இல்லாம நடுவால படம் எடுத்தா எப்பிடிங்க பாக்கறது? //


ரெண்டும் இல்லாம நடுவால படம் எடுத்ததாலேயே அது மொக்கை ஆயிடுமா?? நான் ஏற்கனவே சொன்னது போலத்தான்..

வெயில், மொழியெல்லாம் நல்ல படம்னு சொல்வீங்களா? ஏன்னா வெயில்லயும் பரத் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவாரு...பாவனா கூட டூயட் பாடுவாரு...மொழில மன்னிப்பு கேட்கறதுக்கு வெளிநாட்டுக்கு போய் பாட்டு பாடுவாங்க...

இங்க என்ன பிரச்சனைனா எல்லா படத்துலயும் இந்த இண்ட்ரோ பாட்டு, டூயட் இருக்கும்...சில படங்களில அதை மறந்துட்டு நல்ல படம்னு ஒத்துப்போம்..சிலதுக்கு மொக்கைன்னு பிராண்ட் பண்ணிடுவோம்...

இந்த படத்துல பாடல்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கா என்ன??திரைக்கதையை ஒட்டி தானே இருக்கு?

//திருநள்ளாறு போங்கன்னு சொன்னது சும்மா நக்கல்! சனீஸ்வரனா அடுத்த படத்துக்கு ப்ரொட்யூஸ் பண்ண போறார்?
//

நானும் ச்சும்மா ஜோக்காத்தான் சொன்னேன்...நீங்களே ஒத்துக்கிட்டீங்க..கலெக்ஷனுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் ஹீரோயிசமும், காதலும் டூயட்டும் திணிக்கப்பட வேண்டியிருக்கிறதே!!


//(என்னங்க நீங்க? யாருகிட்டயும் வம்பு தும்புக்கு போகாத பொண்ணு நானு.. என்னைபோய் சீரியசா பதில் சொல்ல வெச்சிட்டீங்களே.) :( //

அப்ப நான் மட்டும் எத்தனை சீரியஸ் பதிவு போட்டிருக்கேன்னு நினைக்கறீங்க :)))..ஒரு நல்ல படம் மொக்கைன்னு முத்திரை குத்தப்படுதேன்ற ஆதங்கம் தான் :))

சொன்னது...

நன்றி சென்!

வாங்க jk

//
நிறைய பேர், நல்ல கத விட்டா, ஓவர் ஏக்ட் பண்ணினா ஏத்துக்கிறாங்க.

ஆனா யதார்த்தமா இருந்தா காமடிங்கறாங்க.
//

அதே தான்...தவமாய் தவமிருந்துல ராஜ்கிரண் நல்லா நடிச்சிருந்தாராம்..இதுல அவரு சொதப்பிட்டாராம்...என்ன கொடுமை சார் இது :)))

யதார்த்தமா இல்லைன்றதுக்கு ஹீரோயினி லவ்வு, டூயட்டு, இண்ட்ரோ சாங்கு இதைத் தவிர வேற ஏதாவது காரணம் இருக்கான்னு தெரியல! யதார்த்தமா இருக்கனும்னு கூட என்ன அவசியம்னு தெரியல!!

சொன்னது...

கப்பி,
அருமையா எழுதியிருக்க.

நீ எழுதிருக்கறதை பார்க்கும் போது நல்லா இருக்கும் போல தான் தோனுது. இன்னைக்கு முடிஞ்சா பார்த்துட்டு கருத்து சொல்றேன்.

மொகன் தாஸ் ரிவியூ, லக்கி ரிவியூ ரெண்டும் இதே மாதிரி தான் இருந்துச்சி.

சொன்னது...

படம் நல்ல படமா, இல்ல நொள்ள படமா அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான் டவுன்லோட் பண்ண சைட்டுக்காரன் மொக்கையான, அழுக்கு திரை உள்ள தியேட்டர்ல திருட்டு கேமரால பதிவு பண்ணினதால ப்ரிண்டு நல்லாவே இல்ல.

பி.கு: அந்த அழுக்கு ப்ரிண்டுலயும் அம்சமா இருக்காய்யா திரிசா அதான் எனக்கு அதிசயமா இருக்கு.

மொட்டமாடி தண்ணி டேங்க் சீன் ரொம்ப சூப்பர்.

அந்த சீன்லதான் உலக தத்துவமே அடங்கி இருக்கு.

பொண்ணுங்கதான் ரொம்ப பேசுவாங்க.
பசங்க அதிகம் பேசமாட்டாங்க.

இந்த பெரிய தத்துவத்த எம்புட்டு அழகா சொல்லியிருக்கான்யா டைரக்டரு...

அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா.... நான் கடைசியா பாத்த
கானல் நீர், காசு இருக்கணும், க.சா.கு.கா, நினைத்து நினைத்து பார்த்தேன் இந்த மாதிரி படங்களுக்கு கிரிடம் ஆயிரம் மடங்கு தேவலாம். :)

காயத்ரியக்காவ்
எனக்கென்னவோ நீங்க ஓவரா ஃபீல் பண்றிங்களோன்னு தோணுது. :)

சொன்னது...

இந்த மாதிரி படம் வந்தாதான் என் பெயர் பட்டி தொட்டியெல்லாம் பரவுது.....(என்ன ஒரு சந்தோஷம்)

சொன்னது...

என்னைப் பொருத்த வரை படம் அவ்வளவு மொக்கை இல்லை. முக்கியமா மத்த யாரும் தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணிடாதீங்கன்னு சொல்ற அளவுக்கு இந்த படம் மொக்கை இல்லை.

ஒரு சில காட்சிகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது.

ஒரு உதாரணம்: அஜீத் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி. ஹீரோயிஷ படமாயிருந்தால் சொந்த அப்பாவிடம் கூட தோற்றுப் போவதாய் கதை எடுத்திருக்க முடியாது.

அவர் அப்படியே நண்பர் வீட்டிலிருந்த படியே முன்னேறியிருப்பார். கடைசி காட்சியில் ராஜ் கிரண் உன்னை என் மகன்னே சொல்லிக்கறதுக்கே பெருமையா இருக்குப்பா என்று சொல்லியிருப்பார்.

ஆனால் படத்தில்.. நண்பனிடம் அஜீத் சொல்வது: இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம் எங்க அப்பா தேட ஆரம்பிச்சுடுவாருடா. வீட்ல எலாம் சாப்பிடாம இருப்பாங்க... அவரு யாருடா என் அப்பாதானே.. வீட்டை விட்டு வெளில வர்றதா. அடப் போடா....

இந்த சீனுக்கு வெக்கலாம்யா ஒரு சல்யூட். அடுத்து வருபவர்கள் எவரேனும் இது ஒரு மொக்கை சீனுன்னு சொல்லலாம். கவலையே இல்லை.

சொன்னது...

\\என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்\\

அது ;-))

சொன்னது...

Very Nice Movie

சொன்னது...

இந்த படம் இன்னும் பார்க்கல.. ஆனால் மோகன்லாலுடைய மலையாள ஒரிஜினல் பாத்திருக்கேன். அது ரொம்ப எதார்த்தமா இருந்தாலும் அங்கங்க ஒரு சில நெருடலான காட்சிகள் இருக்கும். ஆனா அதுக்காக படம் தரம் தாழ்ந்து போகவே இல்ல. இதுலயும் அப்படி நெருடலான காட்சிகள் இருக்குதோ?

ஒரு சிலருக்கு சின்ன நெருடல் கூட ரொம்ப உறுத்தும். உதாரணமா அன்பே சிவம் படத்தின் குடை சண்டை என்னால ஏத்துக்கவே முடியல. அவ்வளவு எதார்த்தத்துக்கு மத்தியில குடை சண்டை ஒரு கரும்புள்ளி

ஆனால், இந்த கதையை தேர்ந்தெடுத்ததுக்கே அஜீத்துக்கு சலாம்...

சொன்னது...

நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார்

சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)

ha ha ha ha ha

கப்பி

ரஜினி வச்சி காமடி பன்னலையே

சொன்னது...

கப்பி உன்னைய நம்பி படத்தை பாக்குறேன் படம் அப்படி இப்படி இருந்துச்சின்னு வையிடி.. உனக்கு சங்குதான்... முடியலை எம்முட்டு தடவை தான் மொக்கை படங்களை பாத்து ஆப்பு வாங்குறது சொல்லு..
//சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)//
சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுற பாத்தியா? அப்ப உனக்கு சிவாஜி படம் Interestingஆ போச்சா?

சொன்னது...

என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்...

Repeat.... Its really a good movie... Ajit and Rajkiran are too good in this movie..

சொன்னது...

காயத்ரி மேடத்தின் விமர்சனத்தை படித்தேன்...மறுமொழியும் அளித்துள்ளேன்...அனேகமாக அதற்கு அப்ரூவல் கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறேன்.

அவங்களுக்கு பேரரசு இயக்கிய படங்களை போட்டு காண்பித்து அப்புறம் கிரீடம் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னா...படம் நல்லா இருக்குனு சொல்வாங்கனு நினைக்கிறேன்.

சொன்னது...

கப்பி, நான் போடணும்ன்னு நெனச்சேன்.. நீங்க போட்டுட்டீங்க.. :-)

சொன்னது...

நான் இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகிடுச்சு. படம் பார்க்கும்போது கடைசி வரை அஜித் எஸ்-ஐ ஆவாரா இல்லையா என்கிற கேள்வியில் சீட் நுனியில் உட்கார்ந்து பார்த்துட்டே இருந்தேன்..

கடைசியா அந்த கிளைமேக்ஸ் என்னை பொருத்த வரை.. ஒரு நல்ல கிளைமேக்ஸ்தான்.. வாச்க்கையில் வெற்றியும் இருக்கு தோல்வியும் இருக்குன்னு நாம் உணரணும்.. எப்போதும் வெற்றியையே காட்டிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கையில் ஒரு தோல்வி வந்தாலும் சிலறால நாங்கிக்க முடியாது..

சொன்னது...

காயத்ரி சொன்னதுபோல "வழக்கமான" விஷயங்கள் என்னமோ நடந்தது உண்மைதான்.. ஆனால் அதுவும் ரசிக்கும் படியா சொல்லியிருப்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.. பலசொத்தை படங்களுக்கு நடுவே இந்த மாதிரி ஒரு சாதாரண படம் ஒரு பெரிய ஆறுதல்தான் நமக்கு. :-)

சொன்னது...

அஜித் இந்த பட்த்தில் புது பொலிவிடனும், திரும்ப அவரோட நடிப்பு திறனை வெளிக்காட்டி நடித்திருக்கிறாரே! இவர் விஜய் மற்றும் சிலரை விட எவ்வளோ நன்றாக நடிக்கிறாரே! :-)

சொன்னது...

நன்றி வெட்டி

பார்த்துட்டீங்களா? :)

தம்பி

சேச்சிகளை விட்டுட்டு திரிசா பக்கம் வந்துராதீங்க :))

படத்துல தத்துவம்லாம் வேற சொல்லியிருக்கானா...இத நான் கவனிக்காம போயிட்டனே :))

மொக்க மோகன்

கவலையேபடாதீங்க...உங்களுக்கு பேர் வாங்கிக் கொடுக்க நிறையவே போட்டியிருக்கு :))

சொன்னது...

நந்தா

சரியா சொன்னீங்க..படத்துல அந்த மாதிரி நம்மள நிமிர்ந்து உக்கார வைக்கிற காட்சிகள் நிறைய...ராஜ்கிரண் அஜீத்தை பஸ் ஏத்திவிடறது, நீங்க சொன்ன சீன், ஸ்டேஷன்ல அஜீத்துக்கு சாப்பாடு கொடுத்துட்டு திரிஷா பத்தி சொல்ற சீன்..இது மாதிரி..

நன்றி!

நன்றி அனானி!

ppattian

//ஒரு சிலருக்கு சின்ன நெருடல் கூட ரொம்ப உறுத்தும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க! இந்த படத்துல குறையே இல்லன்னு சொல்ல வரல..ஒரு முறையாவது பார்க்கக்கூடிய நல்ல படம் தானே :))

கோபி

எது?? :)))

சொன்னது...

எ.ஜ.வா

முழுசா படிச்சிப்பாருங்க...படம் பிடிக்காதுன்னு முன்முடிவோட பார்த்தா சிவாஜி கூட போர் அடிச்சிரும்னு சொல்லியிருக்கேன்...சிவாஜி 200% எண்டர்டெயினர்!!

சந்தோஷ்

தைரியமா பாருங்க தல..நான் ஒரு மொக்கை படத்துக்கு வக்காலத்து வாங்குவேனா :)))

//சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுற பாத்தியா? அப்ப உனக்கு சிவாஜி படம் Interestingஆ போச்சா? //

இல்லையா பின்ன ;)

சொன்னது...

நன்றி நக்கீரன்!

பிரதாப்,

பேரரசைப் பத்தி தப்பா பேசினா வெட்டிகாரு கோவிச்சுப்பாரு :))

மை பிரண்ட்

உஙக்ளுக்கும் 'சேம் ப்ளட்' தானா :))

நான் சொல்லத் தவறிய சிலவற்றை சொல்லியிருக்கீங்க..டாங்கஸ் :)

சொன்னது...

//கப்பி பய said...

நன்றி வெட்டி

பார்த்துட்டீங்களா? :)//

இதோ

சொன்னது...

//ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)//

நீங்க சொன்னாப்பிறகுதான் நானும் அந்த காட்சியை கூர்ந்து பார்த்தேன்.... மிகவும் நல்ல இருந்தது அஜித்தின் நடிப்பு.... என்னைக்கேட்டால் "சிடிசன்,ரெட்,திருப்பதி,ஆழ்வார்" போன்ற படங்களில் நடிப்பதையும் பார்க்க அஜித் இது போன்ற படங்களில் நடித்தால் எல்லோருக்க்கும் "தல"யாக இருப்பார்.... இதில அஜித் நடிப்பு பிடிக்கதவங்க மற்றும் படம் பிடிக்காதவங்க விஜய் நடிச்ச "போக்கிரி" படத்தில அவர் எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி(அப்பா செத்தது,காதல், காமடி ect, ect) ரியக்சன் கொடுப்பாரே அதப்பார்த்து இல்லாட்டி பேரரசு, விஜயகாந், நடிப்பு புயல் ரித்தீஸ் நடித்த "கானல் நீர் போன்ற படங்களை பார்த்து திருப்தி பட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருங்க.... கிரீடம் படம் தரமாய் இருக்கிறது.... இருக்கும் கிளைமக்ஸ் மாற்றப்படாதவரை.....

சொன்னது...

வெட்டிகாரு..ஐ யாம் தி எஸ்கேப்பு :))

ஆதவன்

//கிரீடம் படம் தரமாய் இருக்கிறது.... இருக்கும் கிளைமக்ஸ் மாற்றப்படாதவரை.....//

அதே! :)

சொன்னது...

கப்பி! மொக்கை படங்கள் விள்ம்பரம் தேவையா