"அதான் நீ வரவேயில்லையே அப்புறம் என்னடா?"ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது. எந்த சந்திப்பா இருந்தாலும் போகனும்னு திட்டம் போட்டு கடைசி நேரத்துல அது காலாவதியாச்சுன்னா அதுக்கு ஒரு மொக்கை போடறது எங்க பயக்க வயக்கம்..சாரி..பழக்க வழக்கம்.
போன வாரம் ஒரு நாள் ஆப்பீஸ்ல படுபயங்கரமா ஆணிபுடுங்கிட்டிருக்கும்போது சின்ன தல போன் போட்டு சந்திப்பைப் பத்தி சொன்னதும் "அவர் சென்னைக்கு வந்து ரெண்டு நாள் போட்ட மொக்கைக்கெல்லாம் பழிவாங்க நேரம் கிடைச்சுடுச்சுடா கப்பி"ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே "கண்டிப்பா வரேண்ணே..எனக்கு பெங்களூரு 'ஃபுல்'லா சுத்தி காட்டனும்"னு வாக்குறுதி கொடுத்தேன். வாங்கினேன்.
ஆனா கடைசி நேரத்துல "மகனே ஒரு கோடி ரூபா கொடுத்தாக்கூட ஆறு மணி அஞ்சு நிமிஷத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது... ஆறேகாலுக்கெல்லாம் வூட்டுக்குள்ள போய் பூந்துக்கோ"ன்னு கவுண்டர் டோன்ல எங்கப்பாரு ஆர்டர் போட்டுட்டதால பெங்களூரு ப்ளான் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போட்டாச்சு.
ஊருக்கு போய் ரெண்டு நாளா பாத்தி கட்டி சாப்பிட்டதுல டயர்டாகி இன்னைக்கு ஆபிசுக்கும் அப்பீட் விட்டாச்சு. மதியம் ரூமுக்கு வந்து பதிவுகளையெல்லாம் பார்த்தாதான் தெரியுது பல நல்ல விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறேன். சமோசா, வெள்ளரியிலிருந்து புகைப்படக்கலை குறித்த பகிர்வுகள், குழந்தைகளுடன் சந்திப்பு, கல்வெட்டின் பலூன் விளையாட்டு என அசத்தியிருக்காங்க.
"ச்சே நாமளும் பெரிய போட்டோகிராபர் ஆகியிருக்கலாமே"ன்னு மோட்டுவாயைத் தடவிக்கிட்டே விட்டத்தை வெறிச்சுட்டிருந்தேன். கைல மொபைலு. சோனி எரிக்ஸன் கம்பெனியே சங்கத்து சார்பா எனக்கும் தேவுக்கும் ஸ்பான்சர் பண்ணது. கை தானா கவரை ஓப்பன் பண்ண "கச்சக்..கச்சக்..கச்சக்" (எத்தன நாளுக்குத்தான் 'க்ளிக்'க்குன்னே படமெடுக்கறது...பிறவிக்கலைஞன்லாம் இப்படி வித்தியாசமாத்தான் படமெடுக்கனும் :D) அந்த போட்டோ தான் கீழே இருக்கறது.
இந்த போட்டோவையெல்லாம் பார்த்து என் நண்பனுக்கு ரத்தக்கண்ணீரே வந்துடுச்சு. "எங்ககூடவே தானேடா இருந்த...ஏன்டா நீ மட்டும் இப்படி ஆயிட்டே?"ன்னு ஒரே பாராட்டு மழை தான். நீங்களும் பாராட்டலாம்..ஹி ஹி..
அடுத்த வாரம் கண்டிப்பா பெங்களூரு வருவேன். ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொடுக்க ஆவலாய் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் ;)
போகாத ஊருக்கு! - பெங்களூரு சந்திப்பு
கப்பி | Kappi
வகை மொக்கையே தான்
Subscribe to:
Post Comments (Atom)
12 பின்னூட்டங்கள்:
அடபாவி....
மொக்கை இளவரசன்'ன்னு நீ பட்டப்பேரு வாங்கிறதுக்காகவே உழைக்கிறமாதிரியே இருக்கே?? :)
கப்பி மொக்கை ச்சும்மா அதிருது!
ரிட்டர்ன் டிக்கெட் ரெடி, ஆனா மேல் உலகத்துக்காம், ராம் சொல்ல சொன்னாரு.
நல்லாதான்யா இருந்தீரு???
http://amkworld.blogspot.com/2007/07/blog-post_4216.html
//
வாங்க வாங்க ஐய்கியமாகுங்க தல
அப்ப அடுத்த வாரமும் ஒரு மீட் ஏற்பாடு பண்ணுங்கப்பா...
கப்பி,
போட்டோவெல்லாம் சூப்பர்... அதுவும் அந்த தண்ணி பாட்டில் போட்டோ ரொம்ப அருமை...
CVRக்கு சரியான போட்டி...
வாங்க கப்பி. காத்திருக்கோம்..
\\கைல மொபைலு.\\
இதுல எந்த உள்குத்தும் இல்லை ;)))))
ஆகா கப்பி மொக்கை ISO 1999-2000 சர்டிபிகேட் வாங்கிடுவே போல இருக்கே...
ISO சர்டிபிகேட் அப்ளை பண்ணீரா இல்லையா?...
ஆமா! ஏன் அன்னிக்கு சரியா போன்ல பேசல??????
http://saralil.blogspot.com/2007/07/blog-post.html
\\எனக்கு பெங்களூரு 'ஃபுல்'லா சுத்தி காட்டனும்\\
ada:))
water bottle photo is nice....ivlo clean&neat aa irukku unga veetu floor!!
...please where can I buy a unicorn?
உங்க கருத்து? Post a Comment