மூன்று

Final Cut:

தற்செயலாகத் தொலைக்காட்சியில் பார்த்த திரைப்படம். சற்றும் எதிர்பாராத கதைக்களம் ஆரம்பத்திலேயே ஆவலை அதிகப்படுத்துகிறது. கதாநாயகன் ஜூட் இறந்துவிட அவரின் இறுதிச்சடங்குகளுக்காக கூடியிருக்கும் நண்பர்களுக்கு ஜூட்டின் மனைவி, ஜூட்டின் கடைசி ஆசை எனக் கூறி, ஒரு விடியோவைத் திரையிடுகிறார். ஜூட் இரண்டு வருடங்களாக தன் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொறுத்தி தன் நண்பர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியாமல் படம்பிடித்து வைத்திருக்கிறார், காண்டிட் கேமரா நிகழ்ச்சி போல். நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அடுத்தவரைப் பற்றி புறம் கூறியவை, கள்ளத் தொடர்புகள், போதை பழக்கங்கள் என அவர்களுடைய ரகசியங்கள் அம்பலமாகின்றன. ஒவ்வொருவரைப் பற்றிய காட்சிகள் வரும்போதும் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் விவாதங்களுமாக படம் நகர்கின்றது.

இறுதியில் ஜூட் இறந்ததற்கான காரணமும் அந்த வீடியோவின் மூலமாக வெளிவர அவரின் மரணத்திற்குக் காரணமானவரை கைது செய்வதோடு படம் முடிகின்றது. அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருப்பதையும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளையும் படம்பிடிக்கும் காமிராவை நோக்கி கதாப்பாத்திரங்கள் கோபத்தில் கத்துவது நல்ல காமெடி.

ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியம் அம்பலமாகும்போதும் மற்றவர்களின் ரியாக்ஷனும் குற்றம் சுமத்துபவர் அதை நியாயப்படுத்துவதும் சுவாரசியம். ஆனால் படம் முழுக்க இதே தான் எனும்போது சிறிது சலிப்பு ஏற்படுகிறது. வித்தியாசமான முயற்சி. ஒருமுறை பார்க்கலாம்.


El viaje hacia el mar(Seawards Journey):

கடலை நோக்கிப் பயணம். உருகுவேயின் லவஷேஹா(Lavalleja) மாவட்டத்திலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கடலைக் காண்பதற்காக கதாபாத்திரங்கள் பயணிப்பதே கதை. இவர்களைக் கூட்டிச் செல்பவரைத் தவிர வேறு யாரும் அதுவரைக் கடலைப் பார்த்தது கிடையாது. ஐந்து பேரின் பயணத்தில் அவர்களுக்கு அறிமுகமில்லாத அன்னியன் ஒருவரும் இனைந்துகொள்கிறார்.



மிகவும் மெதுவாக நகரும் படம். மிகப் பழைய வேன் மணல் சாலைகளில் ஓடும் வேகத்திலேயே படமும் நகர்கிறது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், வாழ்க்கையை வெறுத்து சாவிற்காகக் காத்திருக்கும் முதியவர், நடப்பது நடக்கட்டும் என எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு முதியவர், இவர்களை கடல் பார்க்க அழைத்துச் செல்வதே வீண் என நினைக்கும் ஓட்டுனரின் நண்பர், தற்செயலாக இவர்களுடன் பயணம் செய்யும் இளைஞன் என படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்.

இதற்கு முன் பார்த்த உருகுவே திரைப்படங்களை(Whisky,25 Watts) விட தொழில்நுட்ப ரீதியில் வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. ஆனால் திரைக்கதையின் வேகம் நம்மை சலிப்படையச் செய்கிறது. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனங்கள் அடுத்து ஏதாவது சுவாரஸ்யமாக நடக்குமென எதிர்பார்க்க வைத்தாலும் கடைசிவரை அதே வேகத்தில் படம் நகர்கிறது.

கடலைச் சென்றடைந்ததும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடலை ஒவ்வொரு விதத்தில் உருவகிப்பதோடு படம் முடிகின்றது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரசியமான திரைப்படமாக வந்திருக்கும். உருகுவேயின் நிலப்பரப்பைப் பார்க்க வேண்டுமானால் இந்த படத்தைப் பார்க்கலாம்.

Misdemeanor:

பதினைந்து நிமிடக் குறும்படம். இதுவும் தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்த்தது. பசியில் தவிக்கும் ஒரு ஏழை இளம்பெண் திருட எத்தனிக்கிறாள். ஆனால் ஒவ்வொருமுறை அவள் திருட முயலும்போதும் அவளுடைய உள்ளுணர்வு தடுக்கிறது. சூப்பர் மார்கெட்டில் திருட முயல்கிறாள். அதே கடையின் முதலாளி பூங்காவில் தன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திருட முயல்கிறாள். இறுதியில் திருடக்கூடாது என முடிவெடுத்துத் திருந்துவதாய் பதினைந்து நிமிடத்தில் அழகான சிறுகதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

வசனம் எதுவுமில்லாமல் காட்சியமைப்புக்கு ஏற்றவாறான பின்னணி இசையுடன் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். பதினைந்து நிமிடங்களில் படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களும் மிக்ச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். சமயத்திற்கு ஏற்றவாறு மாறும் மனித இயல்பை அருமையான குறும்படமாக சொல்லியிருக்கிறார்கள்.



28 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி மூன்றும் மூன்று விதம்.. நம்ம ஊர்ல்ல இந்த மாதிரி எல்லாம் எப்போ எடுப்பாங்களோ...

சைட்ல்ல தலைவர் படம் சூப்பர்!!!

சொன்னது...

தமிழ் படங்களை வெறுத்து ஒதுக்கி அந்நிய மொழி படங்களையே பார்க்கும், பார்த்த பின் விமர்சனங்களை எழுதும் கப்பியை இடிதாங்கி, மற்றும் குடிதாங்கிகளின் பிரதிநிதியாக எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.


//சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனங்கள்//

யோவ் இதெல்லாம் ஓவரா தெரியல, இங்கிலிஷ் படத்த பாத்தாவே வசனம் புரியாம இங்கிட்டு திண்டாடிட்டு இருக்கேன். கூச்சப்படாம இப்படி அவுத்து வுடறே? ரியலிஸ்டிக்கா இருக்கலாம் அதுக்காக இம்பூட்டு ரியலிஸ்டிக்காவா இருக்கறது?

என்னவோ போ!

சொன்னது...

//நம்ம ஊர்ல்ல இந்த மாதிரி எல்லாம் எப்போ எடுப்பாங்களோ...//

உங்களுக்கே இது ரொம்ம்பப் பெரிய பேராசையா தெரியல :))


//சைட்ல்ல தலைவர் படம் சூப்பர்!!!
//

இது எனக்கு ரொம்பப் பிடிச்ச தலைவர் ஸ்டில் தேவ்!

சொன்னது...

கப்பி,


விமர்சனங்கள் நல்லா இருக்குப்பா!!!

சொன்னது...

//தமிழ் படங்களை வெறுத்து ஒதுக்கி //

ஐயா சாமி...நீயே கதை கட்டி விடாத...நானும் ஒவ்வொரு புதுப்படத்தையும் தியேட்டர் ப்ரிண்ட்ல பார்த்து 'ஏன்டா டவுண்லோட் பண்ணோம்'னு நொந்துட்டிருக்கேன்...என்னை அழவிடாதே!

//யோவ் இதெல்லாம் ஓவரா தெரியல, இங்கிலிஷ் படத்த பாத்தாவே வசனம் புரியாம இங்கிட்டு திண்டாடிட்டு இருக்கேன். கூச்சப்படாம இப்படி அவுத்து வுடறே? ரியலிஸ்டிக்கா இருக்கலாம் அதுக்காக இம்பூட்டு ரியலிஸ்டிக்காவா இருக்கறது?
//

ஆங்கில சப்-டைட்டிலோட பார்த்தேன்யா!! நீ வேற ரியலிஸ்டிக் டர்ர்ரியலிஸ்டிக்குன்னு!! :))

சொன்னது...

//முதல் படம் ரொம்ப வித்தியாசமான கதை அமைப்போட இருந்துச்சு.//

ஆமாங்க நிர்மல். வித்தியாசமான படம் தான். வாய்ப்பு கிடைத்தால் பாருங்க

சொன்னது...

உன்னோட ப்ளாக்ல இன்னிக்குதான் ஏதோ வசீகரமா இருக்குதேன்னு பாத்தா ஓரத்துல தலைவர் படத்தை போட்டுருக்கே!

வாழ்க வளமுடன்!

அருமையான புகைப்படம்யா அது!

சொன்னது...

//ஆங்கில சப்-டைட்டிலோட பார்த்தேன்யா!! நீ வேற ரியலிஸ்டிக் டர்ர்ரியலிஸ்டிக்குன்னு!! :)) //

அப்ப்டியா சங்கதி!

மிஸ்டேக்கு ஆச்சே!

சொன்னது...

//புதுப்படத்தையும் தியேட்டர் ப்ரிண்ட்ல பார்த்து 'ஏன்டா டவுண்லோட் பண்ணோம்'னு நொந்துட்டிருக்கேன்...என்னை அழவிடாதே!//

என்ன இப்படி சொல்லீட்ட?
இப்போ லேட்டஸ்டா வல்லவன்னு ஒரு படம் வந்ததே,
சிம்பு கூட ந(க)டிச்சிருந்தாரே. அது எவ்ளோ சூப்பரா இருந்துச்சி?

அந்த படத்தைதான் கடேசியா புலி பாத்துச்சாம், இன்னும் பாதிப்புல இருந்து மீளல போலருக்கு!

சொன்னது...

hello from Lisbon/Portugal

சொன்னது...

Final Cut எனக்குப் பிடித்திருந்தது.
நீங்கள் சொல்லியது போல கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், மனித வாழ்வின் அவலங்களை பிளந்து கட்டும் படம்!

சொன்னது...

மிக்க நன்றி ராம்!

சொன்னது...

//அருமையான புகைப்படம்யா அது//
எனக்கு ரொம்ப புடிச்ச ஸ்டில்லுப்பா இது!

//அப்ப்டியா சங்கதி!

மிஸ்டேக்கு ஆச்சே! //

விடுங்க தம்பி..யாரும் பார்க்கல...மெயிண்டெயின் பண்ணிக்கலாம்! ;)

சொன்னது...

//என்ன இப்படி சொல்லீட்ட?
இப்போ லேட்டஸ்டா வல்லவன்னு ஒரு படம் வந்ததே,
சிம்பு கூட ந(க)டிச்சிருந்தாரே. அது எவ்ளோ சூப்பரா இருந்துச்சி?
//

சூப்பரா இருந்துச்சா?? யோவ் நீயெல்லாம் மனுசனா?? ;))

//
அந்த படத்தைதான் கடேசியா புலி பாத்துச்சாம், இன்னும் பாதிப்புல இருந்து மீளல போலருக்கு!
//

அடப்பாவி மக்கா..உன்னை சந்திக்க துபாய் வரைக்கும் வந்த அப்பாவியை படம் போட்டுக்காட்டி பழிவாங்கிட்டியா??

சொன்னது...

எங்கள் நாட்டு படத்தின் சிறப்புகளை தனது வலையில் பதிந்ததற்கு மா.ம.சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

சொன்னது...

இங்க கயமை கியமை எதுவும் நடக்கலியே?

சொன்னது...

//Final Cut எனக்குப் பிடித்திருந்தது.
நீங்கள் சொல்லியது போல கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், மனித வாழ்வின் அவலங்களை பிளந்து கட்டும் படம்!
//

வாங்க எஸ்.கே ஐயா! சரியாகச் சொன்னீர்கள். நண்பர்களுக்குள் எப்படியெல்லாம் கீழ்த்தரமான துரோகங்கள் நடக்கமுடியும் எனத் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம்.

நன்றி எஸ்.கே ஐயா!

சொன்னது...

//அடப்பாவி மக்கா..உன்னை சந்திக்க துபாய் வரைக்கும் வந்த அப்பாவியை படம் போட்டுக்காட்டி பழிவாங்கிட்டியா?? //

நான் எங்க பழிவாங்கினேன்? அவரே சொ.செ.சூ வெச்சிகிட்டாரு, முதல் பாதிதான் பாத்தாராம் அதுக்கே இந்த எபெக்ட், மீதி பாதிய ஒருவேள பாத்துட்டாரோ என்னவோ அதான் ஆளையே காணும்.

சொன்னது...

மாண்டிவிடியோ மங்குனிகளுக்கு நன்றி ;)

கயமைலாம் எதுவும் நடக்கலை போலீஸ்கார்...பார்த்து செய்யுங்க போலீஸ்கார் :))

சொன்னது...

// முதல் பாதிதான் பாத்தாராம் அதுக்கே இந்த எபெக்ட், மீதி பாதிய ஒருவேள பாத்துட்டாரோ என்னவோ அதான் ஆளையே காணும்.
//

அவருக்கு உடம்புல எதிர்ப்பு சக்தி கம்மியாயிடுச்சுன்னு நினைக்கறேன் ;))

சொன்னது...

கப்பி,
நீ சொன்ன முதல் படம் ரொம்ப பிடிச்சிருந்தது...

இந்தி படமா பார்த்து விமர்சனம் எழுதற தம்பி உன்னய இப்படி சொல்றத நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன் ;)

சொன்னது...

//இந்தி படமா பார்த்து விமர்சனம் எழுதற தம்பி உன்னய இப்படி சொல்றத நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன் ;)//

வந்தமா பின்னூட்டம் போட்டமான்னு போகாம என்னய ஏய்யா வம்புக்கு இழுக்கற?

கப்பி நீங்கதான் சொல்லி விட்டிங்களா?

ஒரு "குருப்பாதாய்யா" இருக்கிங்க!

நல்லா இருங்க!

சொன்னது...

//கப்பி,
நீ சொன்ன முதல் படம் ரொம்ப பிடிச்சிருந்தது...
//

முடிஞ்சா பாருங்க வெட்டி!

//இந்தி படமா பார்த்து விமர்சனம் எழுதற தம்பி உன்னய இப்படி சொல்றத நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன் ;) //

அப்படி போடு ஆப்பை! ;))

சொன்னது...

மூனு படமுமே சரியில்ல...

போய் சிவப்பதிகாரம் பாருங்க. அப்புறம் பேசுங்க...

சொன்னது...

//அப்படி போடு ஆப்பை! ;))//

யோவ் என்ன நீ பஞ்சாயத்து பெருசு மாதிரி டயலாக் விடற?

உம்மேலயே பிராது குடுத்துருவேன்!
ஜாக்கிரத!

சொன்னது...

//கப்பி நீங்கதான் சொல்லி விட்டிங்களா?
//
உங்களைப் பத்திதான் ஊருக்கே தெரியுமே..இதுல சொல்லிவிடனுமா? :))

//உம்மேலயே பிராது குடுத்துருவேன்!
ஜாக்கிரத!//

பிராதா?? போதும்..இதோட நிறுத்திக்குவோம் :))

சொன்னது...

வாங்க ஜி!

//போய் சிவப்பதிகாரம் பாருங்க. அப்புறம் பேசுங்க... //

பாத்தாச்சு பாத்தாச்சு!!
இந்த மாதிரி படமெல்லாம் எடுக்காம இருக்க 'ஏதாவது செய்யனும் சார்' :))

சொன்னது...

//வந்தமா பின்னூட்டம் போட்டமான்னு போகாம என்னய ஏய்யா வம்புக்கு இழுக்கற?
//
வந்தமா நாலு வார்த்தை நல்ல படியா பேசினோமானு நீ இருந்திருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன் ;)

//
கப்பி நீங்கதான் சொல்லி விட்டிங்களா?

ஒரு "குருப்பாதாய்யா" இருக்கிங்க!

நல்லா இருங்க!//

கூப்பிட்டாத்தான் கப்பிக்கு உதவறதுக்கு ஆள் வருவாங்கனு நினைச்சியா???