"நான் போன வருடம் தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன். படித்து முடித்ததும் ஒரு இசைக்குழுவில் கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் அமெரிக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு உருகுவே எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த ஊர் எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இத்தாலியன். ஆனால் இங்கு தான் வளர்ந்தேன். இந்த ஊர், இந்த ஆறு, இந்த கடற்கரை, என் பெற்றோர் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இங்கு உருகுவேயில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. தொழில்நுட்பக் கல்வி பெரிய அளவில் கிடையாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ 25 Watts படம் பார்த்திருக்கிறாயா? உருகுவேயில் எடுக்கப்பட்ட படம்"
"Whisky பார்த்திருக்கிறேன்"
"ம்ம்..அதுவும் உருகுவேயில் எடுக்கப்பட்ட படம் தான். அருமையான படம். ஆனால் நீ கண்டிப்பாக 25 Watts பார்க்கவேண்டும். உருகுவேயில் பள்ளிப் படிப்பு முடித்ததும் 18 வயதிலிருந்து 23, 24 வயது வரை இளைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சீரழிகிறார்கள் எனக் காட்டும் படம். அதுதான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை. பெரிய குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமான வாழ்க்கை. அந்த படத்தைப் பார்த்தாயானால் உருகுவே மேல் உனக்கு தப்பான அபிப்ராயம் தோன்றும். அது உருகுவேயின் மற்றொரு முகம். அந்த படத்தை நீ கண்டிப்பாக பார்த்து உன் கருத்தை சொல்ல வேண்டும்".
என் அலுவலகத்தில் வேறொரு துறையில் வேலை செய்யும் மார்ட்டின் பரிந்துரைத்த படம் தான் 25 Watts.
லீச்சே(Leche), ஹேவி(Javi), சேபே (Sabe) என்ற மூன்று இளைஞர்களின் 24 மணி நேர வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார்கள். லீச்சே ஐந்து வருடங்களாக இத்தாலிய மொழி கற்றுக்கொண்டிருக்கிறான். ஆசிரியை மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறான். ஹேவி காரில் 'குழாய்' கட்டி விளம்பரம் செய்பவரிடம் வேலை செய்கிறான். சேபே படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
விடியோ கடைக்காரர், மனநலம் குன்றிய இளைஞன், பிட்ஸா டெலிவரி செய்யும் இளைஞன், கால்பந்தாட்ட வீரன், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் முன்னாள் கைதி, லீச்சேயின் பாட்டி என அவர்களைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுடன் நடக்கும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.
எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் சீரான திரைக்கதை. ஆனால் சில் காட்சிகள் மிகவும் நீண்டு நம்மையும் சலிப்படையச் செய்கின்றன. மெல்லிய நகைச்சுவையுடன் வசனம் படத்திற்குப் பக்கபலம். 2001-ல் வெளிவந்த இந்த திரைப்படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.
உருகுவே நாட்டவர் ஒருவர் தொடர்ந்து ஐந்து நாட்கள் கை தட்டிக்கொண்டு இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறாராம். அவர் எதற்காக கை தட்டினார் என்று கேள்வி எழுப்பியபடி படம் முடிகிறது.
பார்த்த இரண்டு திரைப்படங்களும் உருகுவேயை, மக்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள். அடுத்தது பொழுதுபோக்கு திரைப்படம் ஒன்று பார்க்க வேண்டும்.
25 Watts
கப்பி | Kappi
வகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா
Subscribe to:
Post Comments (Atom)
43 பின்னூட்டங்கள்:
கப்பி,
நீ உருகுவே'லே உட்கார்த்துக்கிட்டு அந்த படத்தே பார்த்தேன்,இந்த படத்தே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு இருக்கீயே.... அதுவும் ஸ்பானிஷ் வேறே....
தமிழில் எடுக்கப்பட்ட முழுமுதல் ஆங்கிலத் திரைப்படமான வேட்டையாடு விளையாடு பார்த்தியா மொதல்ல.... :-)
yaen kappi nee ethukku antha padam paarthaennu solreay athu mattum ethukkaam?? Kurikoal illama paarthathu thane??? prachanai kurikoal illaama irukkarathu illa, not having anything that you love. Cross ref Ananth srinivaas' blog.(http://thermalnoise.wordpress.com/)
:-)
கப்பி,
பாய்ஸ் பட வாட அடிக்குதே இந்த 25 வாட்ஸ்ல. தமிழ் படத்துக்கே வக்கில்ல இதுல நமக்கு ஸ்பானிஷ் படம் வேறயா! நம்க்கு கொடுப்பினை இல்ல கப்பி!!
//ஏதோ குறையுதே கப்பி //
படத்துலயா பதிவுலயா??
புரியலயே நிர்மல் :)
//நீ உருகுவே'லே உட்கார்த்துக்கிட்டு அந்த படத்தே பார்த்தேன்,இந்த படத்தே பார்த்தேன்னு சொல்லிக்கிட்டு இருக்கீயே.... அதுவும் ஸ்பானிஷ் வேறே....
//
வேற என்ன பண்ண..
//தமிழில் எடுக்கப்பட்ட முழுமுதல் ஆங்கிலத் திரைப்படமான வேட்டையாடு விளையாடு //
:))
//பார்த்தியா மொதல்ல.... :-)
//
பார்த்தாச்சு பார்த்தாச்சு..தியேட்டர் ப்ரிண்ட் தான் ;)
என்ன கப்பி, ஒரே கலைப்படங்களா பாத்து தள்ளற (ஐ மீன் ஆர்ட் பிலிம்)
ஆமா ஸ்பானிஷ் படத்துல குத்துப்பாட்டு எல்லாம் வருமா ;)
//பார்த்தாச்சு பார்த்தாச்சு..தியேட்டர் ப்ரிண்ட் தான் ;) //
அடபாவி திருட்டு விசீடியா....
:-))))
//எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் //
என்னமோ போ! ஹரிதாஸ், பக்த பிரகலாதா, சம்பூர்ண ராமாயணம் படத்தை எல்லாம் காட்டி உங்க அப்பா-அம்மா ஊரே பேசற "காஞ்சித் தலைவனா" உன்னைய வளத்துருக்காங்க. அந்த பேருக்கு பங்கம் வராத படி பாத்துக்க. கண்ட உருகுவே படத்தையும் பாத்து கெட்டுப் போவாதே. அம்புட்டுத் தான் சொல்லுவேன்.
:)
//yaen kappi nee ethukku antha padam paarthaennu solreay athu mattum ethukkaam?? Kurikoal illama paarthathu thane??? prachanai kurikoal illaama irukkarathu illa, not having anything that you love. //
வா Aim,
நீ சொன்னதும் சரி தான்...மறுக்க எதுவும் இல்லை...
அதே மாதிரி படம் பார்த்த மூனு பேரும் இப்போ இந்த படத்தை வச்சு தான் மாத்தி மாத்தி கலாய்ச்சிகிட்டு இருக்கோம் :))
//பாய்ஸ் பட வாட அடிக்குதே இந்த 25 வாட்ஸ்ல. //
பாய்ஸ்ல அவங்க ஒரு பாட்டுல ஓவர் நைட் ஸ்டார் ஆயிடுவாங்க...ஆனா இங்க அப்படி இல்ல..
//தமிழ் படத்துக்கே வக்கில்ல இதுல நமக்கு ஸ்பானிஷ் படம் வேறயா! நம்க்கு கொடுப்பினை இல்ல கப்பி!!
//
எனக்கு மட்டும் என்ன கொடுப்பினை இருக்கு..தமிழ் படத்துக்கு வக்கில்லாததால தானே இது.. :))
//என்ன கப்பி, ஒரே கலைப்படங்களா பாத்து தள்ளற (ஐ மீன் ஆர்ட் பிலிம்)
//
தலை படங்களைதான் பாக்க முடியல..அதான் கலைப்படங்கள் :))
//ஆமா ஸ்பானிஷ் படத்துல குத்துப்பாட்டு எல்லாம் வருமா ;) //
ஸ்பானிஷ்ல குத்து பாட்டுக்கா பஞ்சம்..ஆனா படத்துல வராது :)
//அடபாவி திருட்டு விசீடியா....//
இந்தப் பழக்கம் வேறயா?
/அடபாவி திருட்டு விசீடியா....
:-))))
//
யேய் ராம் உனக்கு என்னா சேட்டையா இங்கே தமிழ்படமெல்லாம் ரிலிஸ் பண்ணமாட்டாங்க
//என்னமோ போ! ஹரிதாஸ், பக்த பிரகலாதா, சம்பூர்ண ராமாயணம் படத்தை எல்லாம் காட்டி உங்க அப்பா-அம்மா ஊரே பேசற "காஞ்சித் தலைவனா" உன்னைய வளத்துருக்காங்க. //
ஆமா ஆமா :))
//அந்த பேருக்கு பங்கம் வராத படி பாத்துக்க. கண்ட உருகுவே படத்தையும் பாத்து கெட்டுப் போவாதே. அம்புட்டுத் தான் சொல்லுவேன்.
//
தல
உன் பேருக்கும் சேர்த்து பங்கம் வராதபடி பாத்துக்கறேன்..நீ பீல் பண்ணாத :)
//பதிவுல கப்பி.
கொஞ்சம் ஷார்ட்டா முடிச்ச மாதிரி இருந்துச்சு.
//
மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த படம்...அதில் எதைச் சொல்ல..எதை விட எனக் குழப்பம :)
குறிப்பாக சில வசனங்களும் காட்சிகளும் கவர்ந்தன..இன்று மாலை முடிந்தால் அப்டேட் செய்கிறேன் :)
//யேய் ராம் உனக்கு என்னா சேட்டையா இங்கே தமிழ்படமெல்லாம் ரிலிஸ் பண்ணமாட்டாங்க //
சரி விடு கப்பி கொஞ்சம் ஆர்வக்கோளாறு'ல கேட்டுட்டேன்.
யாரும் பார்க்கலே அப்பிடியே மெயிண்டென் பண்ணிட்டுப் போ..... :-)
//இந்தப் பழக்கம் வேறயா? //
வேற என்ன தான் பண்றது கைப்ஸ்...எல்லாம் தமிழனுக்கே உரிய தலையாய குணம் இல்லயா?? :))
enaku oru peria doubt adhu enanu guess panunga paakalam?
கடேசியா பாத்த தமிழ் படம் திமிரு.
படம் ரொம்ப அருமை. இதே லெவலுக்கு நாலு படம் வந்தா போதும்
சினிமா வெளங்கிரும்!
பணத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறாங்க. எப்பவுமே சினிமாவின் எதிர்காலத்தை பத்தி கவலைப்படாத நானே கவலைப்பட்டேன்னா பாத்துக்கோ கப்பி!
//சரி விடு கப்பி கொஞ்சம் ஆர்வக்கோளாறு'ல கேட்டுட்டேன்.
யாரும் பார்க்கலே அப்பிடியே மெயிண்டென் பண்ணிட்டுப் போ..... :-)
//
விடுங்க விடுங்க...கைப்பு தவிர வேற யாரும் பாக்கல :)
//enaku oru peria doubt adhu enanu guess panunga paakalam?
//
கண்டிப்பா எதுனா குண்டக்க மண்டக்க டவுட்டா தான் இருக்கும்...நீங்களே சொல்லிடுங்க :D
//கடேசியா பாத்த தமிழ் படம் திமிரு.
படம் ரொம்ப அருமை. இதே லெவலுக்கு நாலு படம் வந்தா போதும்
சினிமா வெளங்கிரும்!
//
ஹி ஹி..அந்த படம் டவுன்லோட் பண்ணி நாலு வாரமா அப்படியே கிடக்கு..இன்னும் பார்க்க தைரியம் வரல :))
//
பணத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறாங்க. எப்பவுமே சினிமாவின் எதிர்காலத்தை பத்தி கவலைப்படாத நானே கவலைப்பட்டேன்னா பாத்துக்கோ கப்பி!
//
நோ..நோ பீலிங்ஸ் :)
//enaku oru peria doubt adhu enanu guess panunga paakalam? //
கப்பி அப்பிடியே அது என்னா ஆச்சுன்னு கேட்டுருப்பா கையோட...!
// enaku oru peria doubt adhu enanu guess panunga paakalam? //
தியேட்டர் ப்ரிண்ட் எப்படி மாண்டிவீடியோவில் கிடைக்கிறது ?
;-)
//கப்பி அப்பிடியே அது என்னா ஆச்சுன்னு கேட்டுருப்பா கையோட...!
//
வந்து சொல்லுவாங்க...அவசரப் படக்கூடாது ராம் :)
//தியேட்டர் ப்ரிண்ட் எப்படி மாண்டிவீடியோவில் கிடைக்கிறது ?
;-)
//
வாங்க ஊர்ஸ்..
எனக்கென்னவோ இவ்வளவு சிம்பிளா எந்த உ.கு.வும் இல்லாத டவுட்டா இருக்கும்னு தோணல :)
மாண்டிவிடியோல தியேட்டர் ப்ரிண்ட் நெட்ல சுட்டதுதான் :)
(பப்ளிஷ் பண்றதுனா பண்ணுங்க)தப்பா நெனைக்காதீங்க.. அது என்ன உங்க ப்லாக்ல ஒரு பொண்ண கூட காணல என்னைத் தவிர?! இதுல உங்க விளையாட்டு ஏதும் இருக்கா? :)
//(பப்ளிஷ் பண்றதுனா பண்ணுங்க)தப்பா நெனைக்காதீங்க.. //
டப்பா நெனைச்சா காய்ஞ்சிடும்..ஆனா தப்பா நெனைச்சா என்னைக்கும் காயாது..அதனால நான் எப்பவும் யாரையும் தப்பா நினைக்கறதில்ல :))
//அது என்ன உங்க ப்லாக்ல ஒரு பொண்ண கூட காணல என்னைத் தவிர?! //
ஏனுங்க..குண்டக்க மண்டக்க டவுட்டா இருக்கும்னு தெரியும்..ஆனா இப்படி குண்டைத் தூக்கிப் போடற டவுட்டா கேட்டுட்டீங்களே..இதை கெஸ் பண்ண வேற சொன்னீங்க :)
நீங்க தப்பான விவரங்கள் தந்து மக்களை திசை திருப்ப பார்க்கறீங்க..
(பில்டப்...)
கொஞ்சம் பழைய பக்கங்களை புரட்டிப் பார்த்தாலே நீங்க சொன்னது தப்பு-ன்னு தெரிஞ்சுடும்..(பார்த்திருப்பீங்க-ன்னு நினைச்சேனே)
சில சமயம் பதிவுக்கு சம்பந்தமே இல்லாம கப்பித்தனமா எதுனா டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கும்..அதனால அந்த பதிவுகளுக்கு மற்ற பதிவாளர்கள் பின்னூட்டங்கள் இடாமல் விட்டிருக்கலாம்...ஆனா மொத்தமா இப்படி சொல்லக்கூடாது..
இன்னொரு முறை பழைய பதிவெல்லாம் படிச்சுட்டு வந்து அங்க பெண் பதிவாளர்கள் இட்ட பின்னூட்டங்களை மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சுட்டு பிராது கொடுத்ததை வாபஸ் வாங்கிக்கோங்க :)
//இதுல உங்க விளையாட்டு ஏதும் இருக்கா? :)
//
எனக்கு தெரிஞ்சு எதுவும் இல்லைங்க..உங்களுக்கு அப்படி எதுனா தோனுச்சுனா சொல்லுங்க...நானும் தெரிஞ்சுக்கறேன் :)
'தாய்க்குலமே வருக! பேராதரவு தருக!!' ன்னு தனி பதிவு போட்டுடுவோமா?? :))
//தப்பா நெனைக்காதீங்க.. அது என்ன உங்க ப்லாக்ல ஒரு பொண்ண கூட காணல என்னைத் தவிர?!
//
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க :(
கப்பிக்கு மகளீர் அணி எல்லாம் சேர்ந்து ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கப்போறாங்களாம் ;) (உருகுவேல)...
அவரோட ஸ்பானிஷ் ப்ளாக் பார்த்துருக்கீங்களா??? (வேணாம் உங்களுக்கு புரியாது ;)) அதுல பின்னூட்டம் போடறது எல்லாம் பொண்ணுங்கதான் ;)
//இதுல உங்க விளையாட்டு ஏதும் இருக்கா? :) //
இதுக்கு என்னங்க அர்த்தம்???
//அதுல பின்னூட்டம் போடறது எல்லாம் பொண்ணுங்கதான் ;)//
அடப்பாவி! இது வேறயா? பெரியாளா இருப்பே போலிருக்கே? நான் எதோ நீ சின்னப் பையன் அப்பாவின்னு இல்ல நெனச்சேன்?
//என்னங்க இப்படி கேட்டுட்டீங்க :(
//கப்பிக்கு மகளீர் அணி எல்லாம் சேர்ந்து ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பிக்கப்போறாங்களாம் ;) (உருகுவேல)...
//
இது எனக்கே தெரியாதே!! :))
//
அவரோட ஸ்பானிஷ் ப்ளாக் பார்த்துருக்கீங்களா??? (வேணாம் உங்களுக்கு புரியாது ;)) அதுல பின்னூட்டம் போடறது எல்லாம் பொண்ணுங்கதான் ;)
//
வெட்டி என்ன இது...
இதை படிச்சுட்டு நாலு பேர் நாக்குல பல்லை போட்டு பேச போறாங்க...எதுக்கு இந்த விளம்பரம் :)))
//இதுல உங்க விளையாட்டு ஏதும் இருக்கா? :) //
இதுக்கு என்னங்க அர்த்தம்???
//
எனக்கும் புரியலப்பா :(
//அடப்பாவி! இது வேறயா? பெரியாளா இருப்பே போலிருக்கே? நான் எதோ நீ சின்னப் பையன் அப்பாவின்னு இல்ல நெனச்சேன்?
//
தல ..
நான் அப்பாவி தான் தல...
வெட்டிகிட்ட இப்போ தான் சொன்னேன்..நாலு பேர் நாக்குல பல்லை போட்டு பேசுவாங்கன்னு...நீயே இப்படி சொல்லிட்டீயே தல...
//வெட்டி என்ன இது...
இதை படிச்சுட்டு நாலு பேர் நாக்குல பல்லை போட்டு பேச போறாங்க...எதுக்கு இந்த விளம்பரம் :)))//
கப்பி,
நாலு பேர் பேசறாங்கனு கவலப்பட்டா முடியுமா??? இதெல்லாம் நமக்கு நாமே திட்டம்பா... நீ ஃபீல் பண்ணாத நாங்க பாத்துக்குறோம்...
ராம் இருக்கியா??? இங்க கொஞ்சம் பாரு;)
//கப்பி,
நாலு பேர் பேசறாங்கனு கவலப்பட்டா முடியுமா??? இதெல்லாம் நமக்கு நாமே திட்டம்பா... நீ ஃபீல் பண்ணாத நாங்க பாத்துக்குறோம்...
//
அது சரி..மொத்தமா ஆப்படிக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சா?? ;)
//
ராம் இருக்கியா??? இங்க கொஞ்சம் பாரு;)
//
இதுல பார்ட்னர்ஷிப் வேற :))
//அடப்பாவி! இது வேறயா? பெரியாளா இருப்பே போலிருக்கே? நான் எதோ நீ சின்னப் பையன் அப்பாவின்னு இல்ல நெனச்சேன்?//
கைப்பு,
என்னாதிது... ஒரு இளைஞன் ப்ளாக்காக்கு பல இளைஞிகள் பின்னூட்டமிடத்தான் செய்வார்கள்... இதெல்லாம் கண்டுக்கப்பிடாது...
கப்பி,
நீ ஃபீல் பண்ணாதப்பா ;)
//அது சரி..மொத்தமா ஆப்படிக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சா?? ;)
//
இல்ல கொஞ்ச கொஞ்சமாத்தான் ;)
//அதுல பின்னூட்டம் போடறது எல்லாம் பொண்ணுங்கதான் ;)//
கப்பி இப்பிடி பட்டவனா நீயீ....
//தல ..
நான் அப்பாவி தான் தல...//
அதே நீ சொல்லபிடாது ஆமாம்....
//ராம் இருக்கியா??? இங்க கொஞ்சம் பாரு;) //
ஐ யம் தி பிரசண்ட்
//கைப்பு,
என்னாதிது... ஒரு இளைஞன் ப்ளாக்காக்கு பல இளைஞிகள் பின்னூட்டமிடத்தான் செய்வார்கள்... இதெல்லாம் கண்டுக்கப்பிடாது...
//
முருகேஷா...நான் கேட்டேனா?? :)
//இல்ல கொஞ்ச கொஞ்சமாத்தான் ;)
//
அது சரி!!
//கப்பி இப்பிடி பட்டவனா நீயீ.... //
எப்படி பட்டவன்?? ஏன் இந்த கொலை வெறி?? ;)
//அதே நீ சொல்லபிடாது ஆமாம்.... //
ஏன் ஏன் ஏன்???
//கைப்பு,
என்னாதிது... ஒரு இளைஞன் ப்ளாக்காக்கு பல இளைஞிகள் பின்னூட்டமிடத்தான் செய்வார்கள்... இதெல்லாம் கண்டுக்கப்பிடாது...//
:))))))
ரைட்டேய்...
என்னங்க இது.. :( நா கேட்டது சின்ன்ன்ன சந்தேகம்.. அதுக்கு போய் ஆளாளுக்கு ?!! முந்தைய பதிவுல வந்தாங்க அதெல்லாம் ஓகே.. இருந்தாலும் விளையாட்டா ஏதும் செஞ்சீங்களோனு தான் கேட்டேன்.. :))
//என்னங்க இது.. :( நா கேட்டது சின்ன்ன்ன சந்தேகம்.. அதுக்கு போய் ஆளாளுக்கு ?!! //
இது ரத்த பூமி...அப்படி தான் இருக்கும் :))
சின்ன்ன்ன சந்தேகமா இது...அது சரி!
அட அதுக்கு ஏன் :(-லாம் போட்டு பீல் பண்றீங்க???
:)
//முந்தைய பதிவுல வந்தாங்க அதெல்லாம் ஓகே.. இருந்தாலும் விளையாட்டா ஏதும் செஞ்சீங்களோனு தான் கேட்டேன்.. :)) //
ஆகா...மறுபடியும் ஆரம்பிக்கறீங்களே :))
எனக்கு தெரிஞ்சு எதுவும் இல்லீங்...
:)
உங்க கருத்து? Post a Comment