லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு

தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:

கமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.

அசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.

கமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா

ரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்

கமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.

ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.

அசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி

கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு

அசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.

ரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.

கமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா ?? அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.

ரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்

கமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'
அவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா?' எனக் கேட்கிறார்.

கமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்

ரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா

கமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.

அசிஸ் : புரியலையே

கமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்

ரவி: சூப்பர்

கமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.

அசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.

ரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க

கமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.

ரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்

கமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.

*************************************************

கமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது

ஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்

ரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி

சத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்
அப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி

ரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா

சரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா? இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா

ஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்

அவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து

'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.

ரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்

வைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.

ஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா?

இதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.

ரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்

ஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க

ரஜினி: இறைவா

ஷங்கர்: என்ன சார் ஆச்சு

ரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க

ஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது

ரஜினி: எப்படி?

ஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.

ரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.

ஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.

ரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்

ஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.

வைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.

ஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க

ரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே

அப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.

************************************************

'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.

ராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க
என பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.

பேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,

விஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா?

பேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா?

விஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க?

பேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.

எப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.

பேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.

இதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு

பேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது

விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது

பேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க

ராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்

விஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.

பேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க

விஜயகாந்த்(பெருமூச்சுடன்): ம்ம்..சொல்லுங்க

பேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது

ராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.

விஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு

கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.

பேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது

ராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்

பேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்டு அடிச்சுபோட்டுடறீங்க.

லெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.

விஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க

பேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.

விஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே

என்று பீலாகும்போது "வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க "இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே" என மனதுக்குள் எண்ணும் பேரரசு "யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.



53 பின்னூட்டங்கள்:

சொன்னது...

Junior kalakita po

சொன்னது...

nalla irukkuyaa unga koothu

சொன்னது...

//Junior kalakita po //

நன்றி சீனியர்! ;)

//nalla irukkuyaa unga koothu //

வாங்க உ.தொ.இ.நா :)

சொன்னது...

கப்பி,
எப்படி இதெல்லாம்!!! கலக்கிட்ட போ!!!

//நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க.//
மக்கள கரெக்ட்டா புரிஞ்சி வெச்சியிருக்க ;)

// 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' //
//'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' //
//'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' //
கவிஞர் கப்பி எட்டிப்பார்க்கிறார் ;)

சொன்னது...

//லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு//
சூப்பர்

// நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,
//
பேரரசுவப்பத்தி சரியா புரிஞ்சி வெச்சியிருக்க...

கலக்கிட்ட போ :)

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சொன்னது...

கப்பி நல்லாருக்கு.

குறிப்பா இதை ரொம்ப ரசிச்சேன்.

//பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.//
அப்படியே மைக்கேல் மதன காம ராஜன் எஃபெக்ட் இருக்கு.

பதிவோட நீளம் கொஞ்சம் அதிகம். ரெண்டு பதிவா போட்டுருக்கலாமோ?

சொன்னது...

//எப்படி இதெல்லாம்!!! கலக்கிட்ட போ!!!
//

நன்றி வெட்டி!!

//மக்கள கரெக்ட்டா புரிஞ்சி வெச்சியிருக்க ;)
//
எல்லாம் நம்ம ஆட்கள் தானே ;)

//கவிஞர் கப்பி எட்டிப்பார்க்கிறார் ;)
//

இது ஓவர் :)


//பேரரசுவப்பத்தி சரியா புரிஞ்சி வெச்சியிருக்க...
//
இப்பல்லாம் அவரை பார்த்தாலே பயமா இருக்குப்பா :))


//கலக்கிட்ட போ :)

வெற்றி பெற வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி! மீண்டும் வருக :)

சொன்னது...

வாங்க கைப்ஸ்,

மிக்க நன்றி!!

//பதிவோட நீளம் கொஞ்சம் அதிகம். ரெண்டு பதிவா போட்டுருக்கலாமோ?
//
எழுதி முடிச்சப்புறம் நானும் அதான் நினைச்சேன்...ரெண்டு பதிவா போட்டா கண்டினியுடி இருக்காதோன்னு தோனுச்சு...அப்புறம் மக்கள் மேல இருக்க நம்பிக்கைல மொத்தமா போட்டுட்டேன் :)

சொன்னது...

//அப்புறம் மக்கள் மேல இருக்க நம்பிக்கைல மொத்தமா போட்டுட்டேன் :)//

ஆஹா...டைரக்டர் கப்பியும் எட்டிப்பார்க்கிறார்யா ;)

கவிதை, டைரக்ஷன் ரெண்டும் எட்டிப் பாக்குது - அப்போ தமிழ் திரையுலகுக்குக் கெடச்ச இன்னொரு பேரரசு - டைரக்டர் கவிஞர் ஐயா கப்பியரசு அவர்கள்.
:)

சொன்னது...

//ஆஹா...டைரக்டர் கப்பியும் எட்டிப்பார்க்கிறார்யா ;)
//

கைப்ஸ்..யூ டூ?? :))

//அப்போ தமிழ் திரையுலகுக்குக் கெடச்ச இன்னொரு பேரரசு - டைரக்டர் கவிஞர் ஐயா கப்பியரசு அவர்கள்.
//
வேணாம் அழுதுடுவேன்..
ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்..இப்படியெல்லாம் பேசப்படாது :))

சொன்னது...

//ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்//

சூப்பர்..

சொன்னது...

வாங்க சிறில்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

சொன்னது...

//கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா.//

கப்பி மெய்யாவே சூப்பரா கலாசியிருக்கபா!!

அதுவும் பேரரசு கதை சொல்றது ரொம்ப சூப்பரா வந்திருக்கு.!!

வாய்விட்டு சிரிக்க வச்சிட்டிங்க கப்பி.

நன்றி

சொன்னது...

//திரையுலகுக்குக் கெடச்ச இன்னொரு பேரரசு //

பதிவு போடறதுல திருப்பாச்சி, பின்னூட்டம் வாங்கறதுல சிவகாசி, தேன் கூடு போட்டில ஜெயிக்க போறதுல "தர்மபுரி" ;)

சொன்னது...

//'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.//

கலக்கீட்டே கப்பி...... ஆனா தலைவரை வச்சி நீ காமெடி,கீமடி பண்ணலேயே......?

சொன்னது...

//கப்பி மெய்யாவே சூப்பரா கலாசியிருக்கபா!!

அதுவும் பேரரசு கதை சொல்றது ரொம்ப சூப்பரா வந்திருக்கு.!!

வாய்விட்டு சிரிக்க வச்சிட்டிங்க கப்பி.
//

நன்றி தம்பி
பேரரசு சும்மா நடந்து வந்தாலே சூப்பரா தானே இருக்கும் ;))

சொன்னது...

//பேரரசு சும்மா நடந்து வந்தாலே சூப்பரா தானே இருக்கும் ;))//

இப்படி யாரோ ரெண்டு அஸிஸ்டெண்டுங்க பிடில் போட போய்தான் அந்த ஆளு கருப்புக்கண்ணாடிய கழட்டாமலே ரன்னிங்ல வசனம் பேசி எல்லாரையும் கொல்றான்.

சொன்னது...

//பதிவு போடறதுல திருப்பாச்சி, பின்னூட்டம் வாங்கறதுல சிவகாசி, தேன் கூடு போட்டில ஜெயிக்க போறதுல "தர்மபுரி" ;)
//

ஐயா சாமிகளா...சமாதி கட்டாம விட மாட்டீங்க போல :))

சொன்னது...

//கலக்கீட்டே கப்பி...... ஆனா தலைவரை வச்சி நீ காமெடி,கீமடி பண்ணலேயே......?
//
நன்றி ராம்..தலைவரை வச்சு காமெடியா...மூச்...அவரை சுத்தி இருக்கவங்க காமெடி தான்பா போட்டிருக்கேன் :)

சொன்னது...

//இப்படி யாரோ ரெண்டு அஸிஸ்டெண்டுங்க பிடில் போட போய்தான் அந்த ஆளு கருப்புக்கண்ணாடிய கழட்டாமலே ரன்னிங்ல வசனம் பேசி எல்லாரையும் கொல்றான்.//

அட ஊர்ல இருக்க முக்கால்வாசி பேர் இப்படி ஏத்திவிட்டதால தான் மறை கழண்டு திரியறாங்க :))

சொன்னது...

வெகுவாக ரசித்தேன். (நடுவில் விஜய்காந்த்தின் முதல் பாதி மட்டும் கொஞ்சம் தொய்வு) கலக்கிட்டீங்க!

சொன்னது...

//நடுவில் விஜய்காந்த்தின் முதல் பாதி மட்டும் கொஞ்சம் தொய்வு//

ஓ..திருப்பதி கதை? :)


//கலக்கிட்டீங்க!
//

மிக்க நன்றி பாலா!

சொன்னது...

//நிறைய "யோசிச்சி" எழுதியிருக்கிங்க

:))
//

நம்ம 'தலை'ங்களை பத்தி யோசிச்சா அதுவா வருதே :))

சொன்னது...

//பேரரசு: நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது

விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது//

எங்க ஆபீசே படிச்சு குலுங்கி விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருக்கோம். அருமை. கலக்கிட்டீங்க போங்க.

சொன்னது...

//எங்க ஆபீசே படிச்சு குலுங்கி விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருக்கோம். //

ரொம்ப மகிழ்ச்சி சனியர் :)

//
அருமை. கலக்கிட்டீங்க போங்க.
//

மிக்க நன்றி!

சொன்னது...

QUE BUENO,GAPPS
கமலுக்கு உருகுவே நீர் வீழ்ச்சிலேதானே பாட்டு சீன்.

சொன்னது...

எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க இப்படி.

சொன்னது...

அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெச்சிக்குங்க.

சொன்னது...

நீங்க இருக்குற ஊரு பேருலதான் வீடியோ montevideo இருக்குன்னு நினச்சேன்.

இப்படி பெரிய படமா காட்டிட்டீங்களே.

சொன்னது...

//QUE BUENO,GAPPS
கமலுக்கு உருகுவே நீர் வீழ்ச்சிலேதானே பாட்டு சீன்.
//
mucha gracias toro!!

குரு..அதே நீர்வீழ்ச்சிலயே வச்சுக்கலாம்..சிறுத்தை வாயில இருந்து கமல் தண்ணி குடிச்சு அதை ஹீரோயினிக்கு வாயாலயே ஊட்டி விடுற மாதிரி சீன் வச்சுக்கலாமா? ;)

//எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க இப்படி.
//
ஹி ஹி..

//அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெச்சிக்குங்க.
//
உங்க பாசம் புரியுது..ஆனா இது கொஞ்சம் ஓவர்..என்னையே வெட்கப்பட வைக்கறீங்களே :)


//நீங்க இருக்குற ஊரு பேருலதான் வீடியோ montevideo இருக்குன்னு நினச்சேன்.
இப்படி பெரிய படமா காட்டிட்டீங்களே.//

இங்க குளிருல வெளிய போக முடியாம விடியோல படம் பாக்கறது தவிர வேற ஒன்னும் இல்ல குரு :(

பாராட்டுக்களுக்கு நன்றி profesor!!

சொன்னது...

அன்பின் கப்பி,

நல்லா வந்திருக்குங்க. பேரரசு பார்ட் ப்டிக்கும் போது வெடிச்சிரிப்பு என்ன அடக்கியும் முடியல.

அன்புடன்,

ஹரிஹரன்

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஹரிஹரன்!

சொன்னது...

உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு கீழ போயிட்டார் இருங்க தசாவதாரம் வரட்டும் தமிழ்மணம் பூரா தசாவதாரப் பதிவு போடுவீங்கள்ல அப்ப பேசிக்கறேன் :))

சொன்னது...

தசாவதாரம் கலைப்படம் அல்ல அது காமெடியும் அல்ல உள்ளே பாதி வெளியே பாதி டிக்கெட் கிழிக்கும் கவுண்டர் மீதி என கூட்டம் சேர்ந்து கூவப் போகும் படம் எனக்கு ஆஸ்கார் தேவையில்லை.. அது தமிழ் சினிமாவின் அலவுகோளும் இல்லை

சொன்னது...

நான் தமிலன் இல்லே இனிமே திராவிடன், கேப்டன் இல்லே மக்களோட மக்களா இருந்து அவங்க முன்னேற உழைக்கப் போற டாப்டென்

சொன்னது...

//அடுத்த வாரம் estrella நீங்கதான். மேட்டர தயாரா வெச்சிக்குங்க.//

அப்படியா சொல்லவே இல்லை :)

சொன்னது...

//உருகுவே கப்பி, கமல்ஹாசன் நிலைமைய பாருய்யா, நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு கீழ போயிட்டார் //

அட என்னங்க மகி..நாம வச்சி கிண்டல் பன்ற ரேஞ்சுக்கு மேல இருக்கார் :)

//இருங்க தசாவதாரம் வரட்டும் தமிழ்மணம் பூரா தசாவதாரப் பதிவு போடுவீங்கள்ல அப்ப பேசிக்கறேன் :))
//

ஹி ஹி..அதுதான் இப்ப இருந்தே ஆரம்பிச்சாச்சே :)

//அப்படியா சொல்லவே இல்லை :)
//
ஹி ஹி..எனக்கே சொல்லல :))..பெருசு போற போக்குல கொளுத்தி விட்டுட்டு போயிட்டாரு..கண்டுக்காதீங்க :)

சொன்னது...

சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை நல்லா கலாய்த்திருக்கீங்க..

வாழ்த்துக்கள் !!

***

பல இடங்களில், வாய்விட்டு சிரித்தேன்..

"அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்" - சூப்பர்..

***

படைப்பின் நீளம், சிறு பலவீனம். இருந்தாலும், சிரிப்பு கண்ணா சிரிப்பு !!

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்
!!

சொன்னது...

வாங்க சோ.பை..
உங்களுக்கு தான் வெயிட்டிங் :)

//சினிமா உருவாக்குவதாக பிரபலங்களை நல்லா கலாய்த்திருக்கீங்க..

வாழ்த்துக்கள் !!//

நன்றி சோ.பை!


//
போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள் !!
//
தொடர்ந்து படித்து வருகிறேன்..ஆனா Alt+F4 போட்டு வந்துடறேன் :)
நன்றி சோ.பை.

சொன்னது...

நல்ல காமெடி

அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

சொன்னது...

வாங்க உ.தொ.இ.நா..

இதோ வந்துட்டே இருக்கேன் :)

சொன்னது...

//சிரித்து வ‌யிறு புண்ணாகி விட்டது. :)))
மொத்த‌த்தில் அடித்து தூள் ப‌ண்ணி விட்டீர்க‌ள்
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சின்னத்தம்பி!

//( சுருக்கா த‌மில்லோ:அட்ச்சி தூள் ப‌ண்ட்ட மாமு)//
கேக்க சொல்லோ மன்சுக்கு கேப்பியா கீது நைனா :)

சொன்னது...

கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங்க.

இதப் பத்தி ஒரு வரியில சொல்லணும்னா ... இங்கே பாருங்க.

சொன்னது...

//கப்பி, சும்மா சிரி சிரின்னு சிரிக்க வச்சிருக்கீங்க. //

வாங்க முரட்டுக்காளை..

//
"எல்லோரையும் வைத்து கமெடி கீமெடி செய்துவிட்டது இந்தப் பெரிய பட்ஜெட்டு ஸ்கிரிப்டு :-D"
//

போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D

சொன்னது...

// போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D
//

போட்ட பட்ஜெட்டை விட நிறைய அள்ளலாம் கப்பி. டைரக்ஷன் பன்னும்போது நம்ம்மளை கொஞ்சம் அஸிஸ்டெண்டா சேத்துக்கோங்க...
வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடாலாம். சீரியஸா, என்ன சொல்லரீங்க?

சொன்னது...

//போட்ட பட்ஜெட்டை விட நிறைய அள்ளலாம் கப்பி. டைரக்ஷன் பன்னும்போது நம்ம்மளை கொஞ்சம் அஸிஸ்டெண்டா சேத்துக்கோங்க...
வர்ற பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடாலாம். சீரியஸா, என்ன சொல்லரீங்க?
//
அப்ப களத்தில இறங்கிடுவோம்...
முதல்ல பணம் போட ஒரு தயாரிப்பாளரைப் புடிப்போம்..அதுக்கப்புறம் ஷூட்டிங், ரிலீஸ் அதைப் பத்தியெல்லாம் பொறுமையா யோசிச்சுக்கலாம் :))

சொன்னது...

//அப்ப களத்தில இறங்கிடுவோம்...
முதல்ல பணம் போட ஒரு தயாரிப்பாளரைப் புடிப்போம்..அதுக்கப்புறம் ஷூட்டிங், ரிலீஸ் அதைப் பத்தியெல்லாம் பொறுமையா யோசிச்சுக்கலாம் :))//

ஹீரோ புக் பண்ணியாச்சா?

சொன்னது...

//ஹீரோ புக் பண்ணியாச்சா? //

இப்ப சமீபத்துல ஒருத்தர் போட்டோ பார்த்தேன்..இரவு நேரத்துல பின்னாடி மின்விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள் பேக்க்ரவுண்ட்ல, கடற்கரையில் பவ்யமா கை கட்டி நின்னுட்டிருந்தாப்ல...அவரையே புக் பண்ணிடுவோமா? ;)

சொன்னது...

//இப்ப சமீபத்துல ஒருத்தர் போட்டோ பார்த்தேன்..இரவு நேரத்துல பின்னாடி மின்விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள் பேக்க்ரவுண்ட்ல, கடற்கரையில் பவ்யமா கை கட்டி நின்னுட்டிருந்தாப்ல...அவரையே புக் பண்ணிடுவோமா? ;)//

வளரே நன்னி...:-)

அப்போ கீரோயின்!

சொன்னது...

//அப்போ கீரோயின்! //

ஸ்கிரிப்ட் படி ஹீரொக்கு ஹீரோயினெல்லாம் கிடையாது...மத்த ஜோடிங்களையெல்லாம் சேத்து வச்சுட்டு போக வேண்டியது தான் :P

சொன்னது...

//மத்த ஜோடிங்களையெல்லாம் சேத்து வச்சுட்டு போக வேண்டியது தான் :P

:-) அட ஆமாங்க... அந்த ஹீரோ-வுக்கு எந்த ஹீரோயின் போட்டாலும் பாக்கறதுக்கு ஹீரோயினோட தம்பி மாதிரி தாங்க தெரியிறாரு...

சொன்னது...

//அட ஆமாங்க... அந்த ஹீரோ-வுக்கு எந்த ஹீரோயின் போட்டாலும் பாக்கறதுக்கு ஹீரோயினோட தம்பி மாதிரி தாங்க தெரியிறாரு... //

:))
அப்போ அவரை ஹீரோவா போட்டா கே.பி.யை வச்சு தான் படம் எடுக்கனும் :D

சொன்னது...

cudnt stop my laughter still......such a hilarious writing, njyd much kappi!!

ethai kuripittu solrathunu therila, reallyyyyyyyyyyy an enjoyable flow of writing, hats off kappi:))))