"நான் ஹீரோ வொர்ஷிப் பற்றியெல்லாம் தீர்ப்பு வழங்கத் தயாராக இல்லை. என் அளவில் நான் பேசுகிறேன். நான் இப்படியெல்லாம் வழிபடுவதற்குத் தகுதி உடையவன் அல்ல."
"என்னை வியக்க வைத்த இசையமைப்பாளர் சந்தேகமில்லாமல் இளையராஜா தான்! அந்த ஒருவரைப் பார்த்துத்தான் தினமும் வியந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் தெரியாத இவனிடமிருந்து எப்படி இவ்வளவு விஷயங்கள் வருகின்றன என்று வியக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் இசை அமைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது."
"இசைவிப்பது இசை. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். வித்வான் மேடை ஏறிப் பாடுகிற தோடியைத்தான் ஒற்றைத் தந்தி தம்புரா சுருதியுடன் பரதேசியும் பாடுகிறான். அவன் வழி வேறு. இவன் வழி வேறு; பாடுவதிலே வித்தியாசம் தெரிகிறது என்பது உண்மை. ஆனால் ஆண்டிப்பண்டாரத்தின் பாட்டிலே அந்தப் பாடகன் இசைந்து போயிருக்கிறான் என்பதும் உண்மையல்லவா? அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே? அவர்கள் 'லெவலில்' அதை அவர்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள்.
இந்தப் பண்டாரம் மேடைப் பாடகனால் துச்சமாகக் கருதப்படுகிறான். ஆனால் பண்டாரமோ மேடைப் பாடகனை வணங்கிக் கும்பிடு போடுகிறான். யார் உயர்ந்தவர்?"
"இசையில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று நினைப்பானேன், பேசுவானேன்? எல்லாமே இசைதான்! டப்பாங்குத்து என்று நீங்கள் கருதலாம்; அதில் ஈடுபட்டிருப்பவன் அடைகிற இன்பத்தை நீங்கள் எப்படி உணர முடியும்?"
"என் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதில் அதிசயமில்லையே? நான் சினிமா மூலம் பிராபல்யமும் புகழும் அடைந்திருக்கிறேன். மக்கள் வருகிறார்கள். வராமல் இருந்தால் தான் அதிசயம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?"
"ஒரு உயர்ந்த படத்தை இசையமைப்பாளரால் கெடுக்க முடியாது. அவனுக்குக் கெட்ட பெயர் வந்து சேருவதோடு சரி. ஆனால் ஒரு சராசரி படத்தை இசையமைப்பாளன் உயர்த்தவும் முடியும்; கெடுக்கவும் முடியும்."
"'துளசிதள முலசே சந்தோஷ முகா பூஜிந்து' - இந்தப் பாடலைப் பாடியபோது தியாகையரின் மனநிலை என்னவாயிருந்தது? அதுபற்றி இன்று நமக்கு என்ன சார் தெரியும்? நீங்கள் என் பாட்டைக் கேட்டீர்கள்; ஆனால் தியாகையரின் அன்றைய மனநிலையை எவ்வாறு உணரப் போகிறீர்கள்? நானோ அல்லது இன்னொரு வித்வானோ மேடை ஏறிப் பாடினால் எனக்கு கணக்கு வழக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள முயல்வேன். தொடையில் ஓங்கி அறைந்து தாளம் போடுவேன்; சுவரப் பிரஸ்தாரங்களைச் செய்து என் வித்வத்தைக் காட்டுவேன்; கமகங்களை உதிர்த்து என் குரல்வளத்தைப் புலப்படுத்துவேன். போதாக்குறைக்கு எனக்கு நானே 'சபாஷ்' போட்டுக்கொள்வேன். எல்லாம் என்..என்..என்..தியாகையர் எங்கிருக்கிறார்? அவர் மனநிலையும் உணர்வுகளையும் எங்கே, எப்படி, யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?"
- இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா, கல்கி 1985.
இசைஞானியின் லேட்டஸ்ட் ஷிவா பாடல்கள் இங்கே
இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா
கப்பி | Kappi
வகை சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
43 பின்னூட்டங்கள்:
இளையராஜா என்றுமே இசையில் ராஜா தான்!!! தன்னடக்கத்திலும் கூட!!!
Ilayaraja oru nijamaagave oru uyarntha jeevan endru niroobikkiraar.
//இளையராஜா என்றுமே இசையில் ராஜா தான்!!! தன்னடக்கத்திலும் கூட!!!
//
மிகச் சரியாக சொன்னீங்க வெட்டி!
aana vetti nejamaalume vettiyaa thaan irukkararnu ippo thaan puriyudhu ivlo fastaa comment panreengale. oru velai puli vettaikku poi irukko??? :-)
//Ilayaraja oru nijamaagave oru uyarntha jeevan endru niroobikkiraar.
//
அந்த கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது:
"'அடக்கமாக இருக்கிறேன் என்ற எண்ணமே ஒரு கர்வமாகிவிடக்கூடும்' என்ற உணர்வுகூட அவருக்கு இருப்பதை நான் அறிய முடிந்தது"
//அடக்கமாக இருக்கிறேன் என்ற எண்ணமே ஒரு கர்வமாகிவிடக்கூடும்' என்ற உணர்வுகூட அவருக்கு இருப்பதை நான் அறிய முடிந்தது"
romba unmai. yaen sontha anubavathil naan unarthirukkiraen.athanaal yaerpadum vilaivugalaium santhithu irukkiraen.
aanaal ithu therivathaal mattume appadi irukka mudivathillai.. appappo garvam vanthuruthu. ippo maathiri. :-)
கப்பி,
இளையராஜா போன்றவர்களே உழைப்பிற்கும். முயற்சிக்கும் உள்ள மகத்துவத்தை இவ் உலகில் வாழும் எவருக்கும் எடுத்துரைக்கும் சான்றுகள்.
இத்தூணுன்டு மண்டைக்குள்ளே இம்புட்டு ப்ரபஞ்ச விசயங்களான்னு மலைக்க வைத்துக் கொண்டிருப்பவர். சில வேளைகளில் அவரது பாடல்களை உணவிற்கு பதிலாக இன்னமும் அருந்துவதுண்டு.
A Legend is not born, but created in his case he had raised himself to that level. He is a Legend in our history.
//Aim said...
aana vetti nejamaalume vettiyaa thaan irukkararnu ippo thaan puriyudhu ivlo fastaa comment panreengale. oru velai puli vettaikku poi irukko??? :-)
//
ஏனுங்க நம்ம தலைவரை பத்தி போடும் போது ஆஜராகம இருக்க முடியுமா??? ;)
//aana vetti nejamaalume vettiyaa thaan irukkararnu ippo thaan puriyudhu ivlo fastaa comment panreengale. oru velai puli vettaikku poi irukko??? :-)
//
Aim...இன்னைக்கு நீ கமெண்ட் போட்ட வேகத்தைப் பார்த்தாலும் அதே டவுட் தான் எனக்கு ;))
//
இளையராஜா போன்றவர்களே உழைப்பிற்கும். முயற்சிக்கும் உள்ள மகத்துவத்தை இவ் உலகில் வாழும் எவருக்கும் எடுத்துரைக்கும் சான்றுகள்.
இத்தூணுன்டு மண்டைக்குள்ளே இம்புட்டு ப்ரபஞ்ச விசயங்களான்னு மலைக்க வைத்துக் கொண்டிருப்பவர்.
//
அருமையாக சொன்னீர்கள் தெகா..
//
சில வேளைகளில் அவரது பாடல்களை உணவிற்கு பதிலாக இன்னமும் அருந்துவதுண்டு. //
அடியேனும்தான் ;)
//A Legend is not born, but created in his case he had raised himself to that level. He is a Legend in our history.
//
HE IS!!
//
//ஏனுங்க நம்ம தலைவரை பத்தி போடும் போது ஆஜராகம இருக்க முடியுமா??? ;)
//
அட அதெல்லாம் கண்டுக்காதீங்க வெட்டி...அவருக்கு குத்தமுல்ல நெஞ்சு :)
//னுங்க நம்ம தலைவரை பத்தி போடும் போது ஆஜராகம இருக்க முடியுமா??? ;)
Hey athu onnum illa vera yaaravathu nammala solla koodaathunnu thaan.
///Aim...இன்னைக்கு நீ கமெண்ட் போட்ட வேகத்தைப் பார்த்தாலும் அதே டவுட் தான் எனக்கு ;))
Innaikku enakku romba velai irunthaalum.... sari sari moraikkatha. velai paarka pidikkala athanala OP so comment
சில பாடல்களை கேட்கும் போது உடம்பு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க!!
கண்ணை மூடிக்கொண்டு "ஜனனி ஜனனி"-ஒரு உதாரணம்.
//சில பாடல்களை கேட்கும் போது உடம்பு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க!!
//
உண்மை குமார்...'தென்றல் வந்து தீண்டும் போது' பாட்டு ஒன்னு போதுமே :)
//உண்மை குமார்...'தென்றல் வந்து தீண்டும் போது' பாட்டு ஒன்னு போதுமே :) //
அந்த பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல் கப்பி,
வரிகளில் வார்த்தைகளையும், உலகத்தையும் அடக்க முடியுமென்றாலும் நல்ல இசை மட்டுமே இனிமையான உணர்வுகளை கொடுக்கும்.
"ஆலோலம் பாடி அசைந்தாடும்
காற்றே" என்ற பாடல் கேட்கும்போதே சிலிர்த்துவிடும்.
//வரிகளில் வார்த்தைகளையும், உலகத்தையும் அடக்க முடியுமென்றாலும் நல்ல இசை மட்டுமே இனிமையான உணர்வுகளை கொடுக்கும். //
ரேடியோ மிர்ச்சில இசைஞானியும் இதே தான் சொல்வாரு :)
//ரேடியோ மிர்ச்சில இசைஞானியும் இதே தான் சொல்வாரு :)//
என்ன ஆச்சரியம் பாருங்க!
எனக்கும் மொட்டைக்கும் ஒரே மாதிரி தோணியிருக்கு!
//என்ன ஆச்சரியம் பாருங்க!
எனக்கும் மொட்டைக்கும் ஒரே மாதிரி தோணியிருக்கு! //
மொட்டை பேசனதை ஏற்கனவே கேட்டுட்டு வந்து இப்படி ஒரு பில்டப்பா?? ;)
//ரேடியோ மிர்ச்சில இசைஞானியும் இதே தான் சொல்வாரு :)//
ரேடியோ மிர்ச்சில்ல சுசித்ரா தான பேசுவாங்க, இளையராஜா கூட பேசறாரா?, அதுவுமில்லாம இளையராஜா பேசி நான் பாத்ததே இல்லீங்க. எனக்கு தெரிஞ்சி ஒண்ணு ரெண்டு மேடைலதான் பேசி இருக்கார். எந்த விழாக்களிலும் கலந்துக்கவே விரும்பமாட்டார்.
//ரேடியோ மிர்ச்சில்ல சுசித்ரா தான பேசுவாங்க, இளையராஜா கூட பேசறாரா?, //
'வணக்கம் சென்னை..நான் இளையராஜா பேசுகிறேன்'ன்னு விளம்பரங்கள் நடுவில பேசுவாரு..
//
அதுவுமில்லாம இளையராஜா பேசி நான் பாத்ததே இல்லீங்க. எனக்கு தெரிஞ்சி ஒண்ணு ரெண்டு மேடைலதான் பேசி இருக்கார். எந்த விழாக்களிலும் கலந்துக்கவே விரும்பமாட்டார். //
ஆமாம் தம்பி..அப்படி இருக்கும்போதே அவர் மேல திமிர், கர்வம்னு பழி போடற கூட்டமும் இருக்கு :(
//மொட்டை பேசனதை ஏற்கனவே கேட்டுட்டு வந்து இப்படி ஒரு பில்டப்பா?? ;)//
பில்டப்பா? அப்படின்னா என்ன? எனக்கு ஸ்பானிஷ் தெரியாது கப்பி. சொல்லப்போனா இங்லிபீசு கூட புரியாது.
அப்பிராணி
தம்பி
கப்பி,
பல இடங்களில் பல நேரங்களில் அவருடைய சிந்தனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். நல்ல ஒரு பேட்டியைப் பதிவிட்டதற்கு நன்றி.
கடைசியா ஒன்னே ஒன்னு "Raja is much more than a Music Director".
//பில்டப்பா? அப்படின்னா என்ன? எனக்கு ஸ்பானிஷ் தெரியாது கப்பி. சொல்லப்போனா இங்லிபீசு கூட புரியாது.
அப்பிராணி
தம்பி
//
இவ்வளவு அப்பிராணியா எப்படி தம்பி பிழைப்பு நடத்தப் போற? :))
//பல இடங்களில் பல நேரங்களில் அவருடைய சிந்தனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். நல்ல ஒரு பேட்டியைப் பதிவிட்டதற்கு நன்றி.
//
வாங்க கைப்ஸ்...தலையைப் பத்தி போட்டு இன்னும் தலயைக் காணோமேன்னு பார்த்தேன் ;)
//
கடைசியா ஒன்னே ஒன்னு "Raja is much more than a Music Director".
//
வழிமொழிகிறேன்!!
ராஜா இசையில் ஒரு ஜீனியஸ்தான், சந்தேகமேயில்லை. ஆனால் பாழாய்ப்போன ஈகோதான் அவரை படுத்துகிறது. ராஜா தமிழ் இசையை இந்தியாவெங்கும் கொண்டு சென்றார், அவரை அடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த இசையை உலகெங்கும் கொண்டு சென்றார். இருவரும் அவரவர் கால கட்டத்தில் கிரேட் தான். ஆனால் மொட்டையால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒன் மேன் ஷோ என்று ஒரு டி.வி.டி பார்த்தேன் - முழுசாக 3 மணிநேரம் ராஜாவே எல்லா பாட்டும் பாடி கொன்னுட்டார். இதுல பவதாரிணி, யுவன் மனைவி என்று இது குடும்ப நிகழ்ச்சியாகிவிட்டது. நடுநடுவில் அவர் அடிவருடிகள் எழுதி கொடுத்ததை படித்து ராஜாவை நக்கினார்கள். மொத்த நிகழ்ச்சியிலும் ராஜா யாராவது ஒரு கலைஞரை கெளரவித்தாரா ? ம்ஹீம்!
//ராஜா இசையில் ஒரு ஜீனியஸ்தான், சந்தேகமேயில்லை. ஆனால் பாழாய்ப்போன ஈகோதான் அவரை படுத்துகிறது. ராஜா தமிழ் இசையை இந்தியாவெங்கும் கொண்டு சென்றார், அவரை அடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த இசையை உலகெங்கும் கொண்டு சென்றார். இருவரும் அவரவர் கால கட்டத்தில் கிரேட் தான். ஆனால் மொட்டையால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. //
ஐயா அனானி,
அவர் எவ்வளவு உருக்கமா ஒரு பேட்டி கொடுத்திருக்காரு..அப்பக்கூட ஈகோ அது இதுன்னு பேசறீங்களே..
என்னைக் கேட்டா இந்த பேட்டியே இந்த மாதிரி அவரைப் பத்தி பேசறவங்களுக்கு பதில் தான்...
பழம் உள்ள மரம் தான் கல்லடி படும்..அவர் எங்க எப்படி ஈகோவைக் காட்டினாருன்னு சொன்னா தெரிஞ்சுக்கலாம்..
கோடி கோடி அடியவரில் நான் தான் கடை கோடி ஐயான்னு பாடுனவரைப் பாத்து இப்படி சொல்லிட்டியேப்பா ;)
//ஒன் மேன் ஷோ என்று ஒரு டி.வி.டி பார்த்தேன் - முழுசாக 3 மணிநேரம் ராஜாவே எல்லா பாட்டும் பாடி கொன்னுட்டார். இதுல பவதாரிணி, யுவன் மனைவி என்று இது குடும்ப நிகழ்ச்சியாகிவிட்டது. நடுநடுவில் அவர் அடிவருடிகள் எழுதி கொடுத்ததை படித்து ராஜாவை நக்கினார்கள். மொத்த நிகழ்ச்சியிலும் ராஜா யாராவது ஒரு கலைஞரை கெளரவித்தாரா ? ம்ஹீம்!//
விழா பேரே ஒன் மேன் ஷோ தானேங்க :)
அது அவருக்கு நடந்த பாராட்டு விழா தானேப்பா ராசா??
இளையராஜா என்றுமே இசையில் ராஜா தான் ஆனல் தான் மட்டும் கொடி கட்டி பறக்கனும் நினைப்பவர் அவர் கொடி கட்டி பறந்த நேரத்தில் அவரால் ஒதுக்கிய தள்ளப்பட்டவர்கள் வரிசை தாங்களும் அறிந்ததே உதாரணத்திற்கு வைரமுத்து,பாரதிராஜா,மணிரத்தினம், பாலசந்தர் என்று இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.அது போகட்டும் அவர் சிறந்த இசையாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அய்யா,
முடிந்தால் அந்த ஒன் மேன் ஷோ டிவிடி யை பாருங்கள். ராஜாவின் ஈகோ வெட்ட வெளிச்சமாக தெரியும்.
ஒரு பாடலை புது ராகத்தில் இசையமைக்கும் முயற்சி என்று ஆரம்பித்து, எம்.எஸ்.வி கூட இந்த மாதிரி பண்ணியிருக்கார், ஆனா என்ன ஒரே ஸ்ருதியில் வரும். வீடுவரை உறவு, மாம்பழத்து வண்டு, பேசியது கிளியா - இதெல்லாமே ஒரே ஸ்ருதிதான். இது யார் வேணும்னாலும் பண்ணலாம். ஆனா நான் பண்ணப்போறது தான் புது முயற்சி.
அடிவருடி (பேப்பரை படிக்கிறார்): ஆமா ஆமா, உலகத்திலேயே இதுதான் முதல் முறை!
இன்னொரு இடத்தில் ராஜா:
நான் முதலில் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது சம்ஸ்கிருதம் தெரிவதால் நான் ஒரு தெலுங்கு பாடலாசிரியருடன் செளந்தர்ய லஹரி பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிட்டேன். சமஸ்கிருதம் தெரிவதால் தானே இந்த தலைகனம் வருகிறது என்று சமஸ்கிருதம் படிப்பதை நிறுத்திவிட்டேன்.
ஏன்யா, புதிதாக ஒன்று கற்றுக்கொண்டு, அதனால் தலைக்கனம் வந்தால் தவறு நம் மீதா அல்லது கற்றுக்கொண்ட கலை மீதா?
வாங்க பொடாக்குடிய(யா)ன்..
//இளையராஜா என்றுமே இசையில் ராஜா தான் ஆனல் தான் மட்டும் கொடி கட்டி பறக்கனும் நினைப்பவர்
//
மன்னிச்சுருங்க...என்னால இதை ஏத்துக்க முடியல ;)
// அவர் கொடி கட்டி பறந்த நேரத்தில் அவரால் ஒதுக்கிய தள்ளப்பட்டவர்கள் வரிசை தாங்களும் அறிந்ததே உதாரணத்திற்கு வைரமுத்து,பாரதிராஜா,மணிரத்தினம், பாலசந்தர் என்று இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.
//
நீங்க இவர்களை இளையராஜா ஒதுக்கித் தள்ளியதா சொல்றீங்க...ஆனா ரெண்டு பக்கமும் தவறு இருந்திருக்கலாம்...
//அது போகட்டும் அவர் சிறந்த இசையாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை.//
அதே..அதே!! :)
அனானி மீண்டும் வருக ;)
//
அய்யா,
முடிந்தால் அந்த ஒன் மேன் ஷோ டிவிடி யை பாருங்கள். ராஜாவின் ஈகோ வெட்ட வெளிச்சமாக தெரியும்.
//
பார்த்திருக்கேன்ங்க...ஆனா எனக்கு ஈகோவா தெரியல...ஒருவேளை நான் மொட்டைக்கு ஈகோ கிடையாதுன்னு முதல்லயே முடிவெடுத்துட்டு பார்க்க ஆரம்பிச்சுருப்பேன்..அதனால எனக்கு தெரியாம போச்சு ;)
//
ஒரு பாடலை புது ராகத்தில் இசையமைக்கும் முயற்சி என்று ஆரம்பித்து, எம்.எஸ்.வி கூட இந்த மாதிரி பண்ணியிருக்கார், ஆனா என்ன ஒரே ஸ்ருதியில் வரும். வீடுவரை உறவு, மாம்பழத்து வண்டு, பேசியது கிளியா - இதெல்லாமே ஒரே ஸ்ருதிதான். இது யார் வேணும்னாலும் பண்ணலாம். ஆனா நான் பண்ணப்போறது தான் புது முயற்சி.
//
ரொம்ப நாள் முன்னாடி பார்த்ததால நீங்க சொல்ற இந்த பாடல் ஞாபகம் இல்லைங்க....அது ஒரு புது முயற்சியாக இருக்கும் பட்சத்தில் அதை சொல்றது கூட தலைக்கனம்னு எடுக்கலாம்ங்களா? ஒரு கலைஞன் தான் புதுசா ஒன்னு முயற்சி செய்திருக்கேன்னு சொல்லி பாராட்டு வாங்கறது ஒன்னும் தப்பில்லையே ;)
//
இன்னொரு இடத்தில் ராஜா:
நான் முதலில் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது சம்ஸ்கிருதம் தெரிவதால் நான் ஒரு தெலுங்கு பாடலாசிரியருடன் செளந்தர்ய லஹரி பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிட்டேன். சமஸ்கிருதம் தெரிவதால் தானே இந்த தலைகனம் வருகிறது என்று சமஸ்கிருதம் படிப்பதை நிறுத்திவிட்டேன்.
ஏன்யா, புதிதாக ஒன்று கற்றுக்கொண்டு, அதனால் தலைக்கனம் வந்தால் தவறு நம் மீதா அல்லது கற்றுக்கொண்ட கலை மீதா?
//
கண்டிப்பாக கலை மீது குற்றம் சொல்லக்கூடாது...
ஆனால் இங்கு அவர் சொல்ல வருவதை வேறுவிதமாகவும் புரிந்துகொள்ளலாம் அல்லவா...எந்த நிலையும் கர்வம் கொண்டுவிடக்கூடாது என்ற உணர்வு அவரிடம் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்...
சில இடங்களில் அவருடைய ஈகோ அவரையும் மீறி வெளிப்பட்டிருக்கலாம்...அது இயற்கையே...
ஆனால் அதற்காக மொத்தமாக 'தலைக்கனம் பிடித்தவர்' என முத்திரை குத்துவதை...சாரிங்க...என்னால ஏத்துக்க முடியல ;)
நான் செய்யப்போவது மிக புதுமையானது என்று தாராளமாக சொல்லுங்கள். ஆனால் "எம்.எஸ்.வி கூட் முயற்சி செய்திருக்கிறார், அதை யார் வேணும்னாலும் செய்யலாம்" என்ற உள்குத்து தான் தலைகனம்!
எப்படியும் வந்திருக்கும் திராவிட மக்களுக்கு அரக்கோணம் தாண்டி பேசும் மொழியே புரியாது, இதில் உலகிலேயே இது தான் முதல் முயற்சி என்றால் கேள்வியா கேட்கப்போகிறார்கள்? இதுதான் ஹங்கேரியில் ரெக்கார்டு செய்வதெல்லாம் சிம்பனின்னு நம்புற கூட்டமாச்சே ;o)
//நான் செய்யப்போவது மிக புதுமையானது என்று தாராளமாக சொல்லுங்கள். ஆனால் "எம்.எஸ்.வி கூட் முயற்சி செய்திருக்கிறார், அதை யார் வேணும்னாலும் செய்யலாம்" என்ற உள்குத்து தான் தலைகனம்!//
வாங்க அனானி,
இப்படி வார்த்தைக்கு வார்த்தை நோண்டி நோண்டி அர்த்தம் கற்பிச்சிக்கிட்டு இவரு இப்படித் தான்னு பேசுனா என்னங்க பண்ண முடியும்? நீங்க எம்.எஸ்.வியைப் பத்தி குறைவா பேசித் தன்னோட தலைக்கணத்தைக் காட்டுனாருன்னு சொன்ன அதே ராஜா எம்.எஸ்.வியைப் பத்தி பல இடங்களில் உயர்வாகப் பேசிருக்காரு...அதெல்லாம் கேட்டிருக்கீங்களோ இல்லியோ தெரியாது. இயக்குனர் ஸ்ரீதர் எம்.எஸ்.வியை விட்டுவிட்டு அவர் படங்களுக்குத் தன்னை இசையமைக்க அழைத்தார் என்று கேள்விப்பட்ட இளையராஜா அந்த வாய்ப்பை மறுத்ததும் பலரும் அறிவர். அப்படியே எம்.எஸ்.வியும் இளையராஜாவைத் தலைக்கணம் பிடித்தவராகக் கருதியிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்க மாட்டார், அவரைத் தனது இளைய சகோதரர் போலவும் பாவித்திருக்க மாட்டார்.
கமல் கூட இளையராஜா ஒரு குழந்தை மாதிரி என்றும் அவரைப் பல பேர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர் என்றும் இதனாலேயே அவர் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு தயங்குகிறார் என்றும் ஒரு பேட்டியில் கூறியதைப் படித்திருக்கிறேன். கமல் இளையராஜா பத்தி இன்னொன்னும் சொல்லியிருக்காரு...'நாளைக்கு இளைராஜாவுக்கு சிலை வைக்கும் கூட்டத்தில் இவர்கள் நசுங்கி சாகக் கடவுது'ன்னு..அதுதான் இப்ப ஞாபகம் வருது ;)
//எப்படியும் வந்திருக்கும் திராவிட மக்களுக்கு அரக்கோணம் தாண்டி பேசும் மொழியே புரியாது, இதில் உலகிலேயே இது தான் முதல் முயற்சி என்றால் கேள்வியா கேட்கப்போகிறார்கள்? இதுதான் ஹங்கேரியில் ரெக்கார்டு செய்வதெல்லாம் சிம்பனின்னு நம்புற கூட்டமாச்சே ;o)//
நீங்க சொல்ற தொனியிலேருந்தே நீங்க ஒரு "முடிவோடத்" தான் வந்திருக்கீங்கன்னு தெரியுதுங்கோ :). ஆனாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல அவர் அந்த கூட்டத்தில் பேசியிருந்தாலும் எம்.எஸ்.வியை மட்டம் தட்டித் தன் புலமையை நிரூபிக்க எண்ணியிருக்க மாட்டார் என்பதே என் எண்ணம். சொற்களின் தேர்வு கேட்பவருக்கு சரியில்லாமல் போயிருக்கலாம். அதை வைத்து அவர் தலைக்கணம் கொண்டவர் என்று நிரூபிக்க முயல்வது தேவையில்லாதது. ஜீனியஸ்களிடமும் சில குறைகள் இருக்கும்...நியூட்டனும் பூனைக்குட்டிகளையும் பற்றிய கதையை அறிந்திருப்பீர்கள். இதற்கு மேலும் விவாதிக்க விரும்பினால் தனிமடல் இடுங்கள். பேசுவோம்.
கப்பி!
இசை ஞானி என்று அவரை சும்மாவா சொன்னாங்க.
அதுவும் இல்லாமல் அடுத்தவர்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அதில் வெற்றி காண்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. (குறைந்தபட்சம் ஒரு ஆரம்பம் ஆச்சும் கிடைக்குது)
திறமைகள் இருந்தும், வாய்ப்புகள் கிடைக்காமல் அந்த வாய்ப்புகளை பெற மிகவும் கடினமாக போராடி ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து அதில் வெற்றி காண்கின்றான் பார், அவர் தான் வல்லவன். அந்த வகையில் ராசாவும் ஒருவர்.
வாங்க புலி சார்.. ;)
//திறமைகள் இருந்தும், வாய்ப்புகள் கிடைக்காமல் அந்த வாய்ப்புகளை பெற மிகவும் கடினமாக போராடி ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து அதில் வெற்றி காண்கின்றான் பார், அவர் தான் வல்லவன். அந்த வகையில் ராசாவும் ஒருவர்.
//
அருமையாக சொன்னீர்கள்!!
கப்பி பய,
எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாள்ர். என் காரில் அதிகாலையில் இவர் இசையுடன் தான் தினமும் Express wayல் பயனம்..
பதிவுக்கு மிக்க நன்றி
வாங்க சிவபாலன்...
//எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாள்ர். என் காரில் அதிகாலையில் இவர் இசையுடன் தான் தினமும் Express wayல் பயனம்..
//
காலையில் இனிய இசையுடன் ஆரம்பித்தால் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாளே! ;))
வருகைக்கு நன்றி சிவபாலன்!
கப்பி,
பொறுமையாக பதிலளித்தற்கு நன்றி. எனக்கு ராஜாவின் இசையும் பிடிக்கும், மற்ற இசையமைப்பாளர்கள் இசையும் பிடிக்கும். பாட்டு நன்றாக் இருந்தால் அது யார் இசையாக இருந்தாலும் ரசிப்பேன்.
//கமல் இளையராஜா பத்தி இன்னொன்னும் சொல்லியிருக்காரு...'நாளைக்கு இளைராஜாவுக்கு சிலை வைக்கும் கூட்டத்தில் இவர்கள் நசுங்கி சாகக் கடவுது'ன்னு..அதுதான் இப்ப ஞாபகம் வருது ;)//
கண்டிப்பாக இந்த சிலை வைக்கும் கூட்டத்துக்கெல்லாம் போய் நசுங்கமாட்டேன்! வீட்ல நல்லா பக்கோடா சாப்பிட்டுகிட்டு சன் டி.வில பாத்துருவேன் ;D
//கப்பி,
பொறுமையாக பதிலளித்தற்கு நன்றி. எனக்கு ராஜாவின் இசையும் பிடிக்கும், மற்ற இசையமைப்பாளர்கள் இசையும் பிடிக்கும். பாட்டு நன்றாக் இருந்தால் அது யார் இசையாக இருந்தாலும் ரசிப்பேன்.
//
நம்ம கதையும் அதே தான் அனானி..என்ன மொட்டைன்னா தனி பாசம் :)
//
கண்டிப்பாக இந்த சிலை வைக்கும் கூட்டத்துக்கெல்லாம் போய் நசுங்கமாட்டேன்! வீட்ல நல்லா பக்கோடா சாப்பிட்டுகிட்டு சன் டி.வில பாத்துருவேன் ;D
//
:)))
தங்களுக்கும் நன்றி!
//நானும் இளையராஜாவின் பரம ரசிகன் தான். ஆனால், http://www.tis-usa.com/blog/index.html தளத்தில் நான் பார்த்த ஒரு விடயம் என்னை சங்கடப் படுத்துகிறது.
வண. ஜெகத் கஸ்பர் ராஜ் அவர்கள் Thiruvasagam in Symphony தொடர்பாக இதில் எழுதியுள்ள கடிதத்திலிருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன்.
முழுக் கடிதத்தையும் அந்தத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.
//
வாங்க வைசா
இந்த விவகாரம் குறித்து முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. இந்த கடிதத்தை வாசித்தேன். ஆனால் அதைக் கொண்டு எந்த முடிவுக்கும் வருவது சரியல்ல.
//இதற்கு இளையராஜா பதிலளித்தாரா தெரியவில்லை. இருந்தால் அதையும் அந்தத் தளத்தில் போட்டிருப்பார்கள் அல்லவா?
இவ்வாறு இளையராஜா நடந்து கொண்டமைக்கு அவர் என்ன காரணங்கள் வைத்திருக்கிறாரோ?
//
இதன் முழு விவரங்களையும், அவரது பதிலை அறியாமல் நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இதற்கு இளையராஜா பதிலளித்துள்ளாரா எனத் தேடிப் பார்க்கிறேன். யாஹூ குழுமத்தில் இந்த கடிதம் இடப்பட்டதாகத் தெரிகிறது. அங்கு தேடினால் கிடைக்கலாம்.
வருகைக்கு நன்றி வைசா ;)
Am a great fan of music. And so a fan of Raja Sir too.
"Thendral Vanthu Theendumbothu" is my most favourite. Right from the day I first heard the (when I was in school) until today, every time I hear the song, I get lost in the song. Lyrics, tune, music ellamey supera irukkum.
Thanks for this post - enjoyed reading the maestro's words.
ஒரு பாடலில் இத்தனை உணர்வுகளைக் கலந்து கொடுக்க முடியுமா என வியக்கவைக்கும் பாடல்...
வருகைக்கு நன்றி poornima!
நிரு வாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை சிந்தை குளிர உணர்த்திய the greatest maestro
கண்மூடி் அவரது இசையில் பாடப்பட்ட திருவாசகத்தை கேட்டால் கல் நெஞ்சமும் உருகும்....
இசை மேதையே தலை வணங்குகிறேன்
உங்க கருத்து? Post a Comment