இன்னும் இருக்கிறது ஆகாயம்

கைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்
குப்பைமேட்டில் களஞ்சியம் தேடுபவனுக்கும்
இரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்
சொத்திழந்தவனுக்கும் சுயபுத்தி பிறழ்ந்தவனுக்கும்
வீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
அவர்தம் வீட்டுக் கூரையாக!இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற தலைப்பைப் பார்த்ததும் தோன்றிய சிந்தனை. வீடின்றி வாழும் வறியவர்க்கு இந்த வானமே கூரையாகிப் போன அவலத்தை சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறேன். சரியான வார்த்தைப் பிரயோகமும் சொல் சிக்கனமும் கைகூடவில்லை. வார்த்தைகளை மாற்றியமைத்து மெருகேற்றியிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இதன் நிறைகுறைகளை பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கவிதை போட்டியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் சங்கத்திற்கும், விமர்சனங்கள் வழங்கிய இன்ஜினியர்[;)] பாலபாரதி அவர்களுக்கும், நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் அவர்களுக்கும் போட்டியில் பங்குபெற எனக்கு ஊக்கமளித்த நாகை சிவா அவர்களுக்கும் நன்றிகள்.

விமர்சனங்கள்:

பாலபாரதி:

// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //

நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்


நிலவு நண்பன்:

இதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.15 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,

நல்லா இருக்குப்பா கவிதை. பரிசுப் பெற வாழ்த்துக்கள்

சொன்னது...

கப்பி,
நீ தான் இதை எழுதியதா???

கலக்கிட்டப் போ!!!

சொன்னது...

//கப்பி,

நல்லா இருக்குப்பா கவிதை. பரிசுப் பெற வாழ்த்துக்கள் //

வாழ்த்துக்களுக்கு நன்றி ராம்!

சொன்னது...

//கப்பி,
நீ தான் இதை எழுதியதா???
//

ஏன் இந்த குசும்பு? ;)

//
கலக்கிட்டப் போ!!!
//

நன்றி வெட்டி!

சொன்னது...

/இன்னும் இருக்கிறது ஆகாயம்
அவர்தம் வீட்டுக் கூரையாக!
/

என்பது

அவர்தம் வீட்டுக் கூரையாக
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

அல்லது

வீட்டுக் கூரையாக
இன்னும் இருக்கிறது ஆகாயம்!


என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?

சொன்னது...

கடைசி வரியில் 'அவர்தம் வீட்டுக் கூரையாக' என்று முடித்தால் சொல்ல வந்த கருத்துக்கு அழுத்தம் கிடைக்கும் என எண்ணினேன் :)

மிக்க நன்றி குறும்பன்.

சொன்னது...

//இன்னும் இருக்கிறது ஆகாயம்
அவர்தம் வீட்டுக் கூரையாக!
//
இதை கொஞ்சம் தட்டி போட்டிருக்கலாம்

my take
------

வளர்பிறை தேய்பிறை
வந்துபோகையில்
வேர்வைக்கும் குளிருக்கும்
என்னைக்கும் கூரையாய்
இன்னும் இருக்குது ஆகாயம்

சொன்னது...

கப்பி,

இயல்பா இருக்குப்பா கவிதை.
வாழ்த்துக்கள்.

சொன்னது...

//வளர்பிறை தேய்பிறை
வந்துபோகையில்
வேர்வைக்கும் குளிருக்கும்
என்னைக்கும் கூரையாய்
இன்னும் இருக்குது ஆகாயம்

//

அருமை நிர்மல்...

என்றைக்கும்/என்னைக்கும்?

சொன்னது...

//இயல்பா இருக்குப்பா கவிதை.
வாழ்த்துக்கள்.
//

நன்றி தம்பி!

சொன்னது...

படித்து நாங்கள் அடைந்தோம் ஆதாயம் :)

சொன்னது...

//படித்து நாங்கள் அடைந்தோம் ஆதாயம் :)
//

வாங்க பொற்கொடி..
மிக்க நன்றி! :)

சொன்னது...

just a good life

சொன்னது...

http://reallogic.org/thenthuli/?p=193

Please read this and contribute something...

சொன்னது...

ஆகாயத்தை வீட்டுக் கூரையாக்கியவர்கள் தான் எத்தனை பேர்!!

மிக அழகான சிந்தனையுடன் எழுதபட்ட கவிதை,அருமை!!

வார்த்தைகளை கோர்த்த விதம், உங்கள் கவிதை முயற்ச்சியையும், ஆர்வத்தையும் உணர்த்துகிறது!!