சினிமா! சினிமா!! சினிமா!!!

வடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.

***********************************************************

அந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு "இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா?" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. "படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா" எனக் கேட்டார்.

அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.

***********************************************************

சமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு "இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்" என்றார்.

இன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

***********************************************************

என் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. "இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.

***********************************************************

சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.38 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,
சினி இன்டஸ்ட்ரியில ஜெயிச்சவங்கள விட தோத்தவங்கதான் ரொம்ப அதிகம்.
ஒரு வீடு இரு வாசல்ல பாலச்சந்தர் சார் இதை அருமையா காண்பித்திருப்பார்.

சொன்னது...

//அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.//

இருண்ட முகமில்லை. சினிமா உலகத்தின் இயங்கு தன்மை இவ்வாறுதான். 500 படங்கள் எடுக்குமிடத்தில் 5000 நபர்கள் கதாநாயகனாக நடிக்க முடியாது. அது போல் நடிக்க ஆசைப்படும் அனைவருக்கும் அவரவர் எதிர்பார்ப்புக்கேற்ப்ப வாய்ப்பு வருவதும் நடைமுறை சாத்தியமில்லை. இது சினிமா தொழில் மட்டுமல்ல எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

சொன்னது...

கப்பி பாய்...!
சினிமா பற்றிய நிழல் செய்திகள் படித்தவுடன் கொஞ்சம் சோகமாக இருந்தது !

சொன்னது...

//சினி இன்டஸ்ட்ரியில ஜெயிச்சவங்கள விட தோத்தவங்கதான் ரொம்ப அதிகம்.
//

உண்மை வெட்டி..

//ஒரு வீடு இரு வாசல்ல பாலச்சந்தர் சார் இதை அருமையா காண்பித்திருப்பார்.
//

ஆமா வெட்டி..மேலும் சில படங்களும் இருக்கின்றன

சொன்னது...

//இருண்ட முகமில்லை. சினிமா உலகத்தின் இயங்கு தன்மை இவ்வாறுதான். 500 படங்கள் எடுக்குமிடத்தில் 5000 நபர்கள் கதாநாயகனாக நடிக்க முடியாது. அது போல் நடிக்க ஆசைப்படும் அனைவருக்கும் அவரவர் எதிர்பார்ப்புக்கேற்ப்ப வாய்ப்பு வருவதும் நடைமுறை சாத்தியமில்லை. இது சினிமா தொழில் மட்டுமல்ல எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.
//

மிகச் சரியாக சொன்னீர்கள் நிர்மல்...அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும் விதிகள் தான் என்றாலும் மற்றவர்களைப் போல் இந்த வலையில் இருந்து மக்கள் எளிதில் வெளியே வருவதில்லை..வர எத்தனிப்பதில்லை...

சொன்னது...

//சினிமா பற்றிய நிழல் செய்திகள் படித்தவுடன் கொஞ்சம் சோகமாக இருந்தது !
//

ஆம் ஜிகே..பல சோகங்கள்..பல கதைகள்..

சொன்னது...

நிஜம் சுடும். படிக்கும் பொழுது சுட்டுக் கொண்டே, உண்மை நிலவரத்தை நன்றாக முன்வைத்திருக்கிறது இந்த கட்டுரை.

சினிமா இன்டஸ்ட்ரீ ஒரு மாய மான்... அப்படிதானுங்களே, கப்பி!!

ஒரு முறை என் நண்பர்களுடன் டாப்சிலிப்பில் ஆராய்ச்சிக்கென தங்கியிருந்த நாட்களில், அங்கு சரத்குமாரின் "சூரியன்" படம், இயக்குனர் பவித்ரன் மூலமாக எடுத்துக் கொண்டு இருந்தார்கள். பவித்ரனுக்கு கீழ் உதவி-இயக்குனர்களாக பல இள-வயது அன்பர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அதில் ஒருவர் தான், இந் நாளைய 'சங்கர்' அவருடன் எங்களுக்கு தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு கிட்டியது. பேசினோம். அவர் அந்த நாளில் நொந்துக் கொண்டர், ஒழுங்க உங்கள மாதிரி படித்திருந்தால் இதெல்லாம் தேவையா, எப்படி அவருடைய சம்பளம் வழங்கப்படுகிறது, பத்துதா, பத்தலையா... என்பதனைப் பற்றியெல்லாம் ரொம்ப்ப்ப்ப நொந்து நூலகாகிப் போயி சொல்லிக் கொண்டு இருந்தார்... இன்னிக்கு...

நூத்தில் இல்ல இல்ல ஆயிரத்தில் ஒருத்தர் இப்படி exceptionalஆ luckம் தனது கண்பார்வையை திருப்பி அங்கே எடுத்துக் கொண்டு வைத்து விடுகிறது.

சொன்னது...

//நிஜம் சுடும். படிக்கும் பொழுது சுட்டுக் கொண்டே, உண்மை நிலவரத்தை நன்றாக முன்வைத்திருக்கிறது இந்த கட்டுரை.
//

நன்றி தெகா!!

//சினிமா இன்டஸ்ட்ரீ ஒரு மாய மான்... //

நேசி பஞ்ச்! ;)

அட ஷங்கரை சந்திச்சிருக்கீங்களா?

//நூத்தில் இல்ல இல்ல ஆயிரத்தில் ஒருத்தர் இப்படி exceptionalஆ luckம் தனது கண்பார்வையை திருப்பி அங்கே எடுத்துக் கொண்டு வைத்து விடுகிறது.
//

100% உண்மை தெகா...உங்க பாணியில சொல்லனும்னா 'இந்த வலைல சிக்கின சில மீன்கள் மட்டுமே தங்கத் தொட்டியைச் சென்றடைகின்றன' ;)

சொன்னது...

கப்பி,

ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த பதிவு.

சமீபத்தில கோடம்பாக்கம்னு ஒரு சினிமா பாத்தேன். அதிலயும் ஒரு வெற்றிக்காகவும் காதலுக்காகவும் போராடும் கதை. ரொம்ப இயல்பா இருந்தது. குறிப்பா கொஞ்ச நாள் முன்னாடி (அழகிய தீயே) வந்த படம் சினிமாவின் வலிகளையும் கஷ்டங்களையும் மிக அழகாக சொன்னார்கள்.

மேலும் இது சம்பந்தமா நீங்க எழுதணும்.

சொன்னது...

இனிய கப்பிப்பய,

உங்கள் பதிவிற்கு பலம் சேர்க்கும் சில விஷயங்கள்.

அந்தத் தெருவின் பெயர்:
செந்தில் ஆண்டவர் கோயில் தெரு.

பணிமனையின் சுற்றுச்சுவர் முடிந்ததும் உடனே இருப்பது துணை நடிகர் சங்கம்.

இன்னும் முன்னேறினால் இடப்புறம் வருவது, திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

அடுத்ததாக வருவது திரைப்படத் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்.

இன்னும் முன்னேறினால் இடப்புறமாக மாடியில் அண்ணா திரைப்படக் கல்லூரி என ஒன்று இயங்கியது. வருமானம் சரியில்லாமல் மூடிவிட்டார்கள்.

சண்டைப் பயிற்சியாளர்களின் சங்கம் இருப்பது வடபழனி கோயிலுக்கு எதிரில் உள்ள தெருவில் கனரா வங்கியை ஒட்டிச் செல்லும் சந்தில்.

இயக்குனர் சங்கம் நூறு அடி சாலையிலேயே சிவசிவ ஆலயத்திற்கு அருகில் வந்துவிடும்.

எனது ஜாகை சிலநாள்கள் செந்தில் ஆண்டவர் தெருவில்தான் இருந்தது.

அன்புடன்
ஆசாத்

சொன்னது...

வாங்க தம்பி..

போட்டோவில் ஜம்முன்னு இருக்கீங்க ;)

//ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த பதிவு.
//

நன்றி தம்பி!

//சமீபத்தில கோடம்பாக்கம்னு ஒரு சினிமா பாத்தேன். அதிலயும் ஒரு வெற்றிக்காகவும் காதலுக்காகவும் போராடும் கதை. ரொம்ப இயல்பா இருந்தது. குறிப்பா கொஞ்ச நாள் முன்னாடி (அழகிய தீயே) வந்த படம் சினிமாவின் வலிகளையும் கஷ்டங்களையும் மிக அழகாக சொன்னார்கள்.
//

ஆமாங்க...இன்னும் சில படங்களும் இருக்கு...

//மேலும் இது சம்பந்தமா நீங்க எழுதணும்//
சினிமா துறையில் இருக்கும் என் நண்பர்களைக் குறித்து எழுதலாம் என்று தான் இருக்கிறேன்.
ஊக்கத்திற்கு நன்றி தம்பி...

சொன்னது...

ஆசாத் பாய்..
கையைக் குடுங்க...
நானும் அதே செந்தில் ஆண்டவர் கோயில் தெருவில தான் தங்கியிருந்தேன் :)..அடுத்த சினிமா பதிவுல அந்த வீட்டைப் பற்றியும் எழுதலாம்னு இருக்கேன் ;)

உங்களுக்கு அநியாய ஞாபக சக்திங்க...எனக்கு எங்கெங்கே சங்கங்கள் இருக்குன்னு ஞாப்கம் இருந்தாலும் அவை என்னென்ன சங்கங்கள் என ஞாபகம் இல்லை..அதனால தான் பொதுவா ஒரு பட்டியல் சொல்லிட்டேன் :)

பகிர்ந்தமைக்கு நன்றி ஆசாத்!

சொன்னது...

//போட்டோவில் ஜம்முன்னு இருக்கீங்க ;)//

"ஆண்டவா என்னை ஏன் இவ்ளோ அழகா படைச்சே"

:-))

சொன்னது...

//"ஆண்டவா என்னை ஏன் இவ்ளோ அழகா படைச்சே"

:-))
//

இது கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன்..கண்ட்ரோல்..கண்ட்ரோல் :))

சொன்னது...

//இது கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன்..கண்ட்ரோல்..கண்ட்ரோல் :)) //

பொறாமை!!

சொன்னது...

//பொறாமை!!
//

அதுசரி :)

யாருப்பா அங்க நினைப்பு, பொழைப்புன்னு ஏதோ முனுமுனுக்கறது ;)

சொன்னது...

//அதுசரி :)

யாருப்பா அங்க நினைப்பு, பொழைப்புன்னு ஏதோ முனுமுனுக்கறது ;)//


பாபாஜி,
வொய் டென்சன்?.

சொன்னது...

//பாபாஜி,
வொய் டென்சன்?.
//

பாபாஜி??
அவர்தான் முனுமுனுக்கறாருன்னு நினைச்சுட்டீங்களோ? :)

சொன்னது...

//சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும். //

தொடர்ந்து எழுதுங்க கப்பி. வென்றவர்களைவிட மற்றவர்களைப்பற்றித்தான் அதிக்ச்ம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

நீங்க சொன்ன இடமெல்லாம் ஆசாத் பாய்க்கு அத்துப்படி, அவர் வந்து பின்னூட்டம் குடுத்தா இன்னும் நிறைய சொல்லுவார்னு நினைச்சுட்டே வந்தா - பாய் நிக்கிறார். :)

-மதி

சொன்னது...

//தொடர்ந்து எழுதுங்க கப்பி. வென்றவர்களைவிட மற்றவர்களைப்பற்றித்தான் அதிக்ச்ம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
//

சரியாகச் சொன்னீர்கள் மதி...
இன்னும் மூன்று நண்பர்களைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன்.

//நீங்க சொன்ன இடமெல்லாம் ஆசாத் பாய்க்கு அத்துப்படி, அவர் வந்து பின்னூட்டம் குடுத்தா இன்னும் நிறைய சொல்லுவார்னு நினைச்சுட்டே வந்தா - பாய் நிக்கிறார். :)
//

ஆமாங்க..வந்து அசத்திட்டார் :)

சொன்னது...

//பாபாஜி,
வொய் டென்சன்?.
//

கொலாப்புரேசன் ஆகிப்போச்சி, "பாபாஜிய" "கப்பிஜி" ன்னு மாத்திக்குங்க கப்பிஜி!!!

சொன்னது...

இதே போல ஒரு கட்டுரை ஆனந்தவிகடனில் (கதாவிலாசம்)வந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் மிக அழகாக எழுதியிருப்பார்.

மரக்கடையில் வேலை செய்யும் வயதான பெரியவர் ஒருவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு வார்த்தை பேசினாளே அபூர்வம். கடைமுதலாளி ராமகிருஷ்ணனின் நண்பர். ஒரு முறை கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அந்த பெரியவரை எதோ சொல்லால் அடித்து விட்டார் போல. பெரியவர் அழுது கொண்டே நகர்ந்து விட்டார். பின் சமாதானப்படுத்த ராமகிருஷ்ணன் அவரை தனிமையில் சந்தித்து பேசியபோது பெரியவர் சொன்னது.
வாலிபத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரை விட்டு ஓடி வந்தவராம். எவ்வளவோ போராடியும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். ஓரிரு படங்களில் தலை காட்டியிருக்கிறாராம். தம்பி அலிபாபாவும் நாப்பது திருடர்களும் பாத்தீங்களா?, அந்த நாப்பது திருடர்கள்ல நானும் ஒருத்தன். அவர் சொல்லும்போது அந்த கண்களில் ஒரு சந்தோஷம் தெரிந்ததாம். நமக்கு கிடைச்ச வேஷமெல்லாம் இப்படியே அமைஞ்சதினால மேல வரமுடியாம போச்சு. கடைசில வெறுத்து போய் கிடைக்கிற வேலையை செஞ்சிகிட்டு இருக்கேன் என்றாராம் முடிக்கையில் அவரின் கண்கள் மறுபடியும் கலங்கியிருந்தன.

சினிமாவில திறமைகள் இருந்தும் ஜொலிக்க முடியாத நபர்கள் ஏராளம். இது மாதிரி கட்டுரைகள் படிக்கும்போது தோல்விகள் எப்படிட்டது என்பது அறியலாம். மேலும் பலரின் அனுபவங்களை பதியுங்கள்.

அன்புடன்
தம்பி

சொன்னது...

//கொலாப்புரேசன் ஆகிப்போச்சி, "பாபாஜிய" "கப்பிஜி" ன்னு மாத்திக்குங்க கப்பிஜி!!!
//
இது கொஞ்சம் ஓவர் கொலப்புரேசன் :))

நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையை படித்த நினைவிருக்கிறது தம்பி. இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

//சினிமாவில திறமைகள் இருந்தும் ஜொலிக்க முடியாத நபர்கள் ஏராளம்//

ஆம் தம்பி...நானறிந்த ஓரிருவர் பற்றி எழுதலாம் என எண்ணம்!

சொன்னது...

கப்பிஜி!

லிஃப்டு வோணுமா?

நம்ம வூட்டாண்ட வாங்க! பெரிய்ய்ய்ய லிஃப்டு ஒண்ணு இருக்கு.

சொன்னது...

//இதே போல ஒரு கட்டுரை ஆனந்தவிகடனில் (கதாவிலாசம்)வந்திருக்கிறது. ராமகிருஷ்ணன் மிக அழகாக எழுதியிருப்பார்.//

அதைப்போலவே பாலாவின் ஆ.வி. தொடரில் 'வீடு' சொக்கலிங்க பாகவதரைப்பற்றியும் எழுதியிருப்பார். இன்னும் நினைவில் நிற்கிறது.

சொன்னது...

//நம்ம வூட்டாண்ட வாங்க! பெரிய்ய்ய்ய லிஃப்டு ஒண்ணு இருக்கு.
//
அட...இதோ வர்றேன்!!

சொன்னது...

//அதைப்போலவே பாலாவின் ஆ.வி. தொடரில் 'வீடு' சொக்கலிங்க பாகவதரைப்பற்றியும் எழுதியிருப்பார். //

ஆம் மதி..அது மறக்க முடியாத அருமையான தொடர்..

என் கல்லூரி நண்பனின் சகா ஒருவர் பாலாவிடம் இணை இயக்குனராக இருக்கிறார்..தொடர்பு கொள்ள முடிந்தால் சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துகொள்ள முடியும்..பார்ப்போம்..

சொன்னது...

கணேஷ் குமரேஷ் நடிச்ச ஒரு படத்தில கூட ஒரு கதாநாயகி துணை நடிகையா வருவாங்க.. படம் பேரு உங்களுக்கு நினைவிருக்கா?!

சொன்னது...

nalla pdhivu..nalla vandhiruku..cinema oru vidhamana kavarcciyana ulagam...cheran during talkies la idha pathi nnala eludhirupar..

thambi sonna andha ramakrishna siroda katturaiyum cinema valkaiyai nalla pirdhpalikku..innum niraya idhai pola eludhunga

indha pamdhiri oru sila padhivugalal than konjam suvarasiyam varudhu thamil padhivugalai padikka

சொன்னது...

//அதைப்போலவே பாலாவின் ஆ.வி. தொடரில் 'வீடு' சொக்கலிங்க பாகவதரைப்பற்றியும் எழுதியிருப்பார். இன்னும் நினைவில் நிற்கிறது.//

"இவண்தான் பாலா"

நாங்கூட சொக்கலிங்க பாகவதரை பற்றி படிச்சிருக்கேன் மதி. படிச்சி பிரமிப்பு விலகாம பல மணி நேரம் உக்காந்து யோசிச்சு இருக்கேன். நினைவு படத்தியமைக்கு நன்றி. திரும்பவம் அதை படிக்கணும்.

சொன்னது...

//கணேஷ் குமரேஷ் நடிச்ச ஒரு படத்தில கூட ஒரு கதாநாயகி துணை நடிகையா வருவாங்க.. படம் பேரு உங்களுக்கு நினைவிருக்கா?! //

நினைவில்லையே பொற்கொடி..யாருனா சொல்லுங்க :)

சொன்னது...

//nalla pdhivu..nalla vandhiruku..cinema oru vidhamana kavarcciyana ulagam...//

நன்றி கார்த்திக்..சரியாக சொன்னீர்கள்..

//thambi sonna andha ramakrishna siroda katturaiyum cinema valkaiyai nalla pirdhpalikku..innum niraya idhai pola eludhunga
//

இது போல் சினிமா வாழ்க்கையின் சோகங்களை சில திரைப்படங்களும் பல கட்டுரைகளும் சிறப்பாக எடுத்துரைத்திருக்கின்றன. நானும் இன்னும் ஓரிரு பதிவுகள் எழுதலாம் என நினைத்திருக்கிறேன்.

//indha pamdhiri oru sila padhivugalal than konjam suvarasiyam varudhu thamil padhivugalai padikka //
நன்றி கார்த்திக்!

கதாவிலாசம் தொகுப்பு:
http://etamil.blogspot.com/2006/08/katha-vilasam-ess-ramakrishnan-in.html

http://e-arc.blogspot.com

சொன்னது...

கப்பி ,

நல்லா இருக்குப்பா...

சொன்னது...

நன்றி ராம்!

சொன்னது...

வெட்டி ஐயா சொல்லில்ல் இருக்கற படம் தான் போலிருக்கு :-/

சொன்னது...

//வெட்டி ஐயா சொல்லில்ல் இருக்கற படம் தான் போலிருக்கு :-///

ஓ!

சொன்னது...

//என் கல்லூரி நண்பனின் சகா ஒருவர் பாலாவிடம் இணை இயக்குனராக இருக்கிறார்..தொடர்பு கொள்ள முடிந்தால் சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துகொள்ள முடியும்..பார்ப்போம்..//

அப்படியே அஜித் மேட்டர்ல பாலாவின் பங்கு என்னன்னு கேட்டு சொல்லுங்க கப்பி. பாலாவ என்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தேன். அந்த மேட்டருக்கு அப்புறம் ஒரு மாதிரி ஆகிடுச்சி!

சொன்னது...

//அப்படியே அஜித் மேட்டர்ல பாலாவின் பங்கு என்னன்னு கேட்டு சொல்லுங்க கப்பி.//

புரளி கேட்டு சொல்றேன் ;)

// பாலாவ என்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தேன். அந்த மேட்டருக்கு அப்புறம் ஒரு மாதிரி ஆகிடுச்சி!
//
ஆமா தம்பி..எனக்கும் சின்ன வருத்தம் தான்...