உறக்கம் தொலைக்காத காலையில்

உறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.

போன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா? சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.

அப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.

பூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.

தூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.

திடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.

பக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.

தூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.



'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.

காலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். "நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.

அந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய?

போன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.

ஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட "செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே"ன்னு கேட்டா "அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.

என்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப?'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்? அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.



45 பின்னூட்டங்கள்:

சொன்னது...

அட ராமச்சந்திரா.. கலிகாலம்னு சும்மாவா சொல்றாங்க.. அந்த பேப்பர் படிச்ச தடியர என்ன செஞ்சீங்க? :)

சொன்னது...

Intha mathiri what if questions ennaikkume answer panrathu kastam. Yaen intha momentla what if naaley kastam. rendu varusham munnadinnaa :-( no chance.

சொன்னது...

//'நல்ல' அனுபவம் போங்க//

'நல்ல' அனுபவமா?? அது சரி.. ;)

//படமெல்லாம் போட்டு தள்ளியிருக்கிங்க. //

திருடனோட திறமையை நல்லா எடுத்து காட்டத்தான் :)))

சொன்னது...

//அட ராமச்சந்திரா.. //

எந்த ராமச்சந்திரனை கூப்பிடறீங்க???

//அந்த பேப்பர் படிச்ச தடியர என்ன செஞ்சீங்க? :)
//

செல்போன் ஞாபகம் வரும்போதெல்லாம் பொது மாத்து தான்..இதிலென்ன சந்தேகம் :))

சொன்னது...

//Intha mathiri what if questions ennaikkume answer panrathu kastam. Yaen intha momentla what if naaley kastam. rendu varusham munnadinnaa :-( no chance.
//

அதே அதே..

சொன்னது...

nalla iruku

சொன்னது...

நன்றி கார்த்திக்

உங்க தலைப்பை உல்டா பண்ணதுல ப்ராப்ளம் இல்லயே?? ;)

சொன்னது...

கப்பி,
நீ முந்திக்கிட்ட...

1 மாசத்துக்கு முன்னாடி பெங்களூர்ல நான் தங்கியிருந்த ரூம்ல இப்படிதான் ஆயிடுச்சு.

உங்க ரூம்ல திருடனவன் ரொம்ப நல்லவனா இருக்கான். உன்னோட செல் போன் மட்டும் அடிச்சிட்டு போயிருக்கான். எங்க ரூம்ல... எல்லாரோடைய செல்போனையும் அடிச்சிட்டான்.

அது மட்டுமில்ல பர்ஸ், ஷர்ட்-10 (எல்லாமே காஸ்ட்லி - ஒவ்வொன்னும் 1000 ரூபாய்க்கு மேல)
எல்லாமே அடிச்சிட்டு போயிட்டானுங்க...

அடுத்த நாள் எப்படியும் பக்கத்து ரூம்க்கு வருவாங்க.. அவனை புடிச்சிடலாம்னு கோழியும் மத்த பசங்களும் சேர்ந்து பிளான் போட்டாங்க.. அது என்னாச்சினா...

(அஸ்க்கு புஸ்க்கு... எல்லாத்தையும் இங்க போட்ட அப்பறம் நாங்க எல்லாம் பதிவு எப்படி போடறது ;))

சொன்னது...

வெட்டி,

//உங்க ரூம்ல திருடனவன் ரொம்ப நல்லவனா இருக்கான். உன்னோட செல் போன் மட்டும் அடிச்சிட்டு போயிருக்கான். //

அதைத்தான் நானும் சொல்றேன்...அதே ரூம்ல ஜன்னலுக்கு பக்கத்து அலமாரியில இன்னும் இரண்டு செல்போன் இருந்துச்சு..அதை விட்டுட்டு என் போனை மட்டும் லவட்டிட்டான்..என்னத்த சொல்ல :(

//அடுத்த நாள் எப்படியும் பக்கத்து ரூம்க்கு வருவாங்க.. அவனை புடிச்சிடலாம்னு கோழியும் மத்த பசங்களும் சேர்ந்து பிளான் போட்டாங்க.. அது என்னாச்சினா...

(அஸ்க்கு புஸ்க்கு... எல்லாத்தையும் இங்க போட்ட அப்பறம் நாங்க எல்லாம் பதிவு எப்படி போடறது ;))
//
மறுபடியும் கோழி தான் ஊறுகாயா??

நடத்துங்க :))

சொன்னது...

// இன்னும் இரண்டு செல்போன் இருந்துச்சு..அதை விட்டுட்டு என் போனை மட்டும் லவட்டிட்டான்..என்னத்த சொல்ல :(//
உன் செல்ல மட்டும் அடிச்சிட்டு போயிட்டாங்கனு வருத்தமா... இல்ல மத்தவங்க செல்ல அடிக்காம போயிட்டானேனு வருத்தமா??? :-)

//
மறுபடியும் கோழி தான் ஊறுகாயா??
//
கப்பி இது நிஜமாலுமே நடந்த விஷயம்...

கோழி எப்படிப்பா ஊறுகாய் ஆகும்... நமக்கு மெயின் டிஷ்ஷே அது தான் ;)

சொன்னது...

//எந்த ராமச்சந்திரனை கூப்பிடறீங்க???//

உள்ளேன் அய்யா..... ஓ சாரி உள்ளேன் ஐயா.....

சொன்னது...

//உன் செல்ல மட்டும் அடிச்சிட்டு போயிட்டாங்கனு வருத்தமா... இல்ல மத்தவங்க செல்ல அடிக்காம போயிட்டானேனு வருத்தமா??? :-)
//

இதற்கு நான் பதில் சொல்லவும் வேண்டுமோ?? :)))


//கோழி எப்படிப்பா ஊறுகாய் ஆகும்... நமக்கு மெயின் டிஷ்ஷே அது தான் ;)
//

அது சரி..ஸ்டார்ட் ம்யூசிக்..சாரி..கண்டினியூ ம்யூசிக் ;)

சொன்னது...

//உள்ளேன் அய்யா..... ஓ சாரி உள்ளேன் ஐயா.....
//
அட உன்னையத்தான் கூப்பிட்டாங்களா??

சொன்னது...

//அட உன்னையத்தான் கூப்பிட்டாங்களா?? //

கப்பி அந்த அக்கா யாரா கூப்பிடாங்கன்னு தெரியல்லை.... ஆனா நான்தான் ராமச்சந்திரன் இங்கே.....


ஹீ ஹீ

சொன்னது...

//கப்பி அந்த அக்கா யாரா கூப்பிடாங்கன்னு தெரியல்லை.... ஆனா நான்தான் ராமச்சந்திரன் இங்கே.....
//

அவங்களே வந்து சொல்லட்டும்..லெட் அஸ் வெயிட்டு ;)

சொன்னது...

இந்தப் பதிவை ஸ்பெசல் ஆக்குறது நீ போட்டுருக்கியே அந்த் அல்காரிதம் தான்யா கப்பி. எப்படிப்பா? சின்ன வயசுலேருந்தே இப்படி மத்தவங்களுக்குப் புரிய வைக்க படம் போட்டு வெளக்கி பழக்கமோ?

சரி! "தடியன்0"வை "நான்"னு போட்டுக்கற சுதந்திரம் நமக்கு நாமே பதிவு போடும் போது மட்டும் தான் கெடக்கும்ல? ஆமா நீ தூங்கி வழிஞ்சு அந்த கண்ணாடி ஒடஞ்சிருந்துதுன்னா என்னா ஆயிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சிப் பாரு?
:)

சொன்னது...

//ஆனா நான்தான் ராமச்சந்திரன் இங்கே.....//

அப்பிடியா? நான் "ராயல் ராம்சாமி"ன்னு இல்ல நெனச்சேன்?

சொன்னது...

//அவங்களே வந்து சொல்லட்டும்..லெட் அஸ் வெயிட்டு ;) //

அட துரை என்னாமா இங்கிலிபிஸ் பேசுது..... :-))))))

சொன்னது...

//இந்தப் பதிவை ஸ்பெசல் ஆக்குறது நீ போட்டுருக்கியே அந்த் அல்காரிதம் தான்யா கப்பி. எப்படிப்பா? சின்ன வயசுலேருந்தே இப்படி மத்தவங்களுக்குப் புரிய வைக்க படம் போட்டு வெளக்கி பழக்கமோ?
//

ஹி ஹி..பரிட்சையில இந்த மாதிரி படம் போட்டா போனாப்போகுதுன்னு 2 மார்க் போட்டு பாஸ் பண்ணி விடுவாங்கல்ல...அந்த எஃபெக்ட் :)))


//சரி! "தடியன்0"வை "நான்"னு போட்டுக்கற சுதந்திரம் நமக்கு நாமே பதிவு போடும் போது மட்டும் தான் கெடக்கும்ல? //

முருகேஷா..நான் கேட்டேனா?? ;)


//? ஆமா நீ தூங்கி வழிஞ்சு அந்த கண்ணாடி ஒடஞ்சிருந்துதுன்னா என்னா ஆயிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சிப் பாரு?
//
என்ன் ஆகி இருக்கும்..என் பர்ஸ் இளைச்சு போய் இருக்கும்..புண்ணியவான் அதுக்குள்ள அவரே வாங்கி வச்சுக்கிட்டாரு :)

சொன்னது...

//அப்பிடியா? நான் "ராயல் ராம்சாமி"ன்னு இல்ல நெனச்சேன்?
//

சேம் கன்பூசன் :))

//அட துரை என்னாமா இங்கிலிபிஸ் பேசுது..... :-))))))
//

ராயல் ராம்சாம்..கைப்புக்கும் டவுட் வந்துருச்சு..சீக்கிரம் விளக்கி கூட்டி மெழுகுங்க :))

சொன்னது...

கப்பி, செல்போன் போனா போயிட்டு போவுது.
ஆனா தூக்கம் மட்டும் கெடவே கூடாது. படுத்தா தூக்கம் வர மாட்டேன்னுது புலம்பறவங்க மத்தில நல்லா தூக்கம் வருதுன்னு சந்தோஷப்படுங்க!!

அப்புறம்

அந்த கும்பகர்ணன் உங்க தெருதானா?

சொன்னது...

//ஆனா தூக்கம் மட்டும் கெடவே கூடாது. படுத்தா தூக்கம் வர மாட்டேன்னுது புலம்பறவங்க மத்தில நல்லா தூக்கம் வருதுன்னு சந்தோஷப்படுங்க!!
//

பின்ன..அதான் சொன்னேனே..அது ஒரு வரம்னு...

அது சரி..நடுஜாமத்துல நீங்க தூங்காம இன்னும் தப்பா சரியான்னு தீர்ப்பு சொல்லிட்டு இருக்கீங்களா??? :)

//அந்த கும்பகர்ணன் உங்க தெருதானா?
//

இல்ல தம்பி..அவர் கஸின் ப்ரதர் வம்புகர்ணன் தான் எங்க தெரு ;))

சொன்னது...

//அது சரி..நடுஜாமத்துல நீங்க தூங்காம இன்னும் தப்பா சரியான்னு தீர்ப்பு சொல்லிட்டு இருக்கீங்களா??? :)//

தூங்கினா வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.

நமக்கு துபாய்ல மூணு மணிவரைக்கும் தூங்க கூடாதுன்னு எழுதி வச்சிருக்கு.

என்னத்த செய்ய :-(

விளையாடலாமா?

சொன்னது...

//நமக்கு துபாய்ல மூணு மணிவரைக்கும் தூங்க கூடாதுன்னு எழுதி வச்சிருக்கு.
//

அது சரி :(

//விளையாடலாமா?
//

அங்க 100 போடலாம்..வர்றேன் :))

சொன்னது...

ம்ம்..

வந்துட்டேன் !

சொன்னது...

கப்பி,
ஒரு சந்தேகம்...

இந்த மேப் திருட்டு நடக்கறதுக்கு முன்னாடி போட்டயா??? இல்ல திருட்டு நடந்ததுக்கு அப்பறம் போட்டயா?

சொன்னது...

//இந்த மேப் திருட்டு நடக்கறதுக்கு முன்னாடி போட்டயா??? இல்ல திருட்டு நடந்ததுக்கு அப்பறம் போட்டயா?
//

யப்பா..இந்த கன்னம் வைக்கிற வேலையெல்லாம் நமக்கு தெரியாது..

விட்டா நான் தான் அவனை காசு கொடுத்து கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுவ..ஆள விடு சாமி :)

சொன்னது...

//யப்பா..இந்த கன்னம் வைக்கிற வேலையெல்லாம் நமக்கு தெரியாது..//

கப்பி ஒய் டென்ஷன்!!! நோ டென்ஷன்

கஜினி சூர்யா மாதிரி மறக்க கூடாதுனு மேப் ஏதாவது போட்டு வெச்சிருந்தியானு கேட்டேன் ;)

சொன்னது...

//கஜினி சூர்யா மாதிரி மறக்க கூடாதுனு மேப் ஏதாவது போட்டு வெச்சிருந்தியானு கேட்டேன் ;)
//

அது சரி..செல்போன் தொலைஞ்ச சோகக் கதையை சொல்லிட்டு இருந்தா நல்லா கேக்கறீங்கய்யா டீட்டெயிலு :))

சொன்னது...

கப்பி,

பை-ரன்னர் வேணுமா?

சொன்னது...

//கப்பி,

பை-ரன்னர் வேணுமா?//

ஆபிஸ்ல இருந்து கிளம்பினப்புறம் கூப்பிட்டிருக்கீங்களே?? சரி விடுங்க..அதான் அங்க அடிச்சாச்சுல்ல..இன்னைக்கு அது போதும் :))

சொன்னது...

@ராம்:
நான் உங்களுக்கு அக்காவா!!!!!!!!!!!!!!!!!!
X-( வயசுல சின்னவங்க தான் உங்க ஊர்ல அக்காவா?! உங்கள தாங்க கூப்பிட்டேன்.. கப்பி பாவம் பின்னூட்டத்துக்கு வெய்ட் பண்ணாரேனு..

சொன்னது...

//நான் உங்களுக்கு அக்காவா!!!!!!!!!!!!!!!!!!
X-( வயசுல சின்னவங்க தான் உங்க ஊர்ல அக்காவா?! //

பரவாயில்ல..மன்னிச்சு விட்டுடுங்க :)

//உங்கள தாங்க கூப்பிட்டேன்..//

யப்பா ராம்..உன்னைத் தானாம்...

//கப்பி பாவம் பின்னூட்டத்துக்கு வெய்ட் பண்ணாரேனு..
//
அது சரி..இது கப்பிக்கு தெரியுமா?? ;)

சொன்னது...

//@ராம்:
நான் உங்களுக்கு அக்காவா!!!!!!!!!!!!!!!!!!
X-( வயசுல சின்னவங்க தான் உங்க ஊர்ல அக்காவா?!//

உங்க எழுத்து,கமண்ட்ஸ்ல்லாம் பார்த்தா எங்க பாட்டி மாதிரி இருப்பீங்கன்னு தெரியுது....
:-)))

//உங்கள தாங்க கூப்பிட்டேன்.. கப்பி பாவம் பின்னூட்டத்துக்கு வெய்ட் பண்ணாரேனு.. //

அட கப்பி இந்தா பிடிச்சிக்கோ இன்னொன்னு.....!

சொன்னது...

@ராம்:
தப்பு தப்பு தப்பு நா இல்ல..வலை உலகத்துக்கே ஒருத்தர் தான் பாட்டி.. அவங்க யாருனா ..

சொன்னது...

என்னங்க பொற்கொடி இப்படி சொல்லாம விட்டுட்டா நாங்க எல்லாம் யாரனு நினைப்போம்???

சொன்னது...

//என்னங்க பொற்கொடி இப்படி சொல்லாம விட்டுட்டா நாங்க எல்லாம் யாரனு நினைப்போம்???
//

வெட்டி..
பொற்கொடி சொல்றது சங்கத்தோட நிரந்தர் தலைவியைன்னு நினைக்கறேன்..அவங்க வந்துதான் தெளிவுபடுத்தனும் :)

சொன்னது...

//தப்பு தப்பு தப்பு நா இல்ல..//


இதை நாங்க நம்ப முடியாது.... என்னா கப்பி சொல்லுறே நீ.. :-)))


//வலை உலகத்துக்கே ஒருத்தர் தான் பாட்டி.. அவங்க யாருனா .. //


சொல்லு பாட்டி சீக்கிரம்.....

சொன்னது...

//என்னங்க பொற்கொடி இப்படி சொல்லாம விட்டுட்டா நாங்க எல்லாம் யாரனு நினைப்போம்??? //


பாலாஜி,

அதுதானே நாமே என்னல்லாம் நினைக்க தோணுது... ஒரு வேளை அவங்களோன்னு நினைக்கிறேன்.... :-)

சொன்னது...

கப்பி இதுக்கு பதில் தெரியனுமின்னா "பாட்டி பொற்கொடி கவனத்திற்கு"னு ஒரு பதிவு போடுப்பா....

சொன்னது...

//"பாட்டி பொற்கொடி கவனத்திற்கு//

என்னை சிக்கல் சிங்காரம் ஆக்கறதுல உனக்கு என்னய்யா அவ்ளோ சந்தோஷம்??

வெயிட்டீஸ்..அவங்களே வந்து பதில் சொல்வாங்க :D

சொன்னது...

//அதுதானே நாமே என்னல்லாம் நினைக்க தோணுது... ஒரு வேளை அவங்களோன்னு நினைக்கிறேன்.... :-)
//

ராம்,
அப்ப போட்டோல இருக்கறது அவுங்க பேத்தியா??? ;)

சொன்னது...

The illustration is classic.. Must be an excellent graphic art guy!!!

சொன்னது...

ppattiaan

//The illustration is classic.. //

டாங்க்யூ டாங்க்யூ டாங்க்யூ :)))

//
Must be an excellent graphic art guy!!! //

என்ன வச்சு காமெடி பண்ணலியே :))

சொன்னது...

கதையிலுள்ள நக்கல் படத்திலும் இருக்கு. மொத்ததில் Total காமெடி... இடுக்கண் வருங்கால் நகுக Typeல் ரொம்ப நல்லா இருக்கு