தோப்பில் ஒரு நாடகம்

'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.

ஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.

முதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனமா இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.

இந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.

இப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க(!!) ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.

இப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.

இப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.

கதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.

அந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பசங்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்(?!) போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க!). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.

இப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா(?!) நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால "டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.

கதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.

இதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.

இதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.

இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )

ஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையா?நாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).

அதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.

பாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.

இதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.

அப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).



30 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி... காலேஜ் கல்சுரல் பார்த்த எபக்ட் வருதேபா..........!! :-)

சொன்னது...

வாங்க யாத்திரீகன்..

//காலேஜ் கல்சுரல் பார்த்த எபக்ட் வருதேபா//

இதை இதைத் தான் எதிர்பார்த்தேன் :))

இரண்டு நாட்களுக்கு முன் நண்பனுடன் பழைய கதைகளை பட்டறை போட்ட எபெக்ட் இது ;))

சொன்னது...

கப்பி துபாய் மாதிரியே உருகுவேலயும் வெயில் அதிகமா?

சொன்னது...

//துபாய் மாதிரியே உருகுவேலயும் வெயில் அதிகமா?//

துபாய் மாதிரியா?? துபாய்ல எவ்ளோ வெயில்ன்னு எனக்கு எப்படி தெரியும் ;))

இங்க குளிரு தான் கொன்னுட்டு இருக்கு ;)

சொன்னது...

லத்தின் அமெரிக்க நாடு, குளிரு, கப்பி எஞ்ஜாய் எஞ்சாய்:))
ஹிம் இங்க காதுல புகை :((

சொன்னது...

//விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் //

நான் பண்ணுவேண்டா பெருசா
படிக்கலைனா நீ ஆய்டுவே தருசா
ஹீரோயின் பேரு சரசா
எனக்கு புடிக்கது இந்த சல்சா

ஏ...டண்டனக்கு ஏ.. டனக்குனக்கு(TR)

எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் நம்ம கைப்பூ.. மாதிரி வருமா? அவரை நீ சேர்க்காததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.போராட்டம் போராட்டம்

//முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும்//

இப்போ நீ பின்னூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறியே அதே மாதிரினு சொல்லு,


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//ஹிம் இங்க காதுல புகை :((
//

அப்பாடா..ஒருத்தர் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிட்டாச்சு..இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் ;))

சொன்னது...

//ஏ...டண்டனக்கு ஏ.. டனக்குனக்கு
//

இதை உகரத்துல முடிக்கக் கூடாது..

ஏ டண்டணக்கா..ஏ டணக்குனக்கா...-ன்னு நீட்டி முழக்கினாதான் எபெக்ட் இன்னும் கூடும்..

//கைப்பூ.. மாதிரி வருமா? அவரை நீ சேர்க்காததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

கைப்புக்கு தான் தினம் தினம் ஆப்படிக்கறோமே..அதை மேடைல ஏத்தி வேற அசிங்கப்படுத்தனுமா..

என்னமோ..நண்பன் ஆசைப்பட்டுட்ட அடுத்த தபா கைப்புவை ஏத்திடலாம்...

//இப்போ நீ பின்னூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறியே அதே மாதிரினு சொல்லு//

கக்கப்போ...நீ தான்பா உயிர் நண்பன் ;)))

சொன்னது...

கப்பி! அப்பப்போ இந்த மாதிரி பயங்கரமா என்னைய ஃபீல் பண்ண வக்கிறியேப்பா. யாத்ரீகன் சொன்ன மாதிரி எனக்கும் எங்க காலேஜ் கல்சுரல் பாத்த ஞாபகம் வருதப்பா. நல்லாரு. காலேஜ் ஸ்கிட் போடுவது எப்படின்னு நீ ஒரு ப்ளாக் (இல்ல இல்ல) புக்கே எழுதலாம். இதப் படிச்சதும் எங்க காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல நாங்க பண்ண "இண்டர் டிபார்ட்மெண்டல் வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட்" ஞாபகத்துக்கு வருது. அப்ப புள்ளையார் பால் குடிக்கிறத பத்தி எல்லாரும் பேசிக்கிட்டிருந்ததுனால, ஒரு சினிமா ட்ரெயிலர் பண்ணும் போது "புள்ளையார் பால் குடிக்கிறார்"ங்கிறதையே சினிமா பேரா வச்சிட்டோம். அதுக்கு எங்களுக்கு முதல் பரிசு கெடச்சது(கோல்ட் மெடல்)...அந்த மெதப்புலேயே கொஞ்ச நாள் திரிஞ்சிட்டு இருந்தோம்(தேன்). அதோட இந்த மாதிரி ஸ்கிட், கல்சுரல்ஸ் விசயத்துல எப்பவுமே டாப்ல இருக்குற ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க பண்ற சமாசாரங்களை அப்பிடி இப்பிடி உல்டா பண்ணி இஞ்சினியரிங் காலேஜ்ல போடறதைச் சொல்லாம வுட்டுட்டியே? அப்பிடி ஐடியாவைச் சுட்டு ஸ்கிட் போடறதுன்னா நம்ம காலேஜுக்குள்ளயே வேணா போட்டுக்கலாம். நாலு காலேஜ் கூடுற எடத்துல போட்டா 'டின்னு' தான். அதோட பழைய மயில்சாமி, லட்சுமணன் சிரிப்போ சிரிப்பு, சிரிப்போ சூப்பர் சிரிப்பு மாதிரியான கேசட்களைக் கேட்டா இன்னும் நெறைய ஐடியா(வேற என்னா காப்பியடிக்கத் தான்!) கெடைக்கும்.

//அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.//
இது கரீட்டு. சிம்பு அவுங்க நைனா, ஆ...ஆ...ன்னு அழுவுற கமலஹாசன், கொஞ்சி கொஞ்சி பேசற கார்த்திக் இவுங்களை மாதிரி ஆக்ட் குடுத்தா ஒடனே க்ளிக் ஆகிடும்.

//இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) ) //
எப்பிடிப்பா இப்பிடியெல்லாம்? யூ டூ சேம் ப்ளட்? மேலே சொன்ன ப்ரைஸ் வாங்குன 'வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட்'டை எங்க டிபார்ட்மெண்ட்ல ஸ்டேஜ்ல போட்டுக்கிட்டு இருக்கும் போது ஒரு சீனியர் அக்கா அவுங்க பக்கத்துல இருக்குற ஒரு அண்ணன் கிட்டேருந்து பெல்ட்டை வாங்கி கழுத்துல சுத்திக்கிட்டு தூக்கு போட்டு தொங்கற மாதிரி ஒரு தனி ஸ்கிட் போட்டுட்டாங்க. யுனிவர்சிடி லெவல்ல பரிசு வாங்குன அந்த நிகழ்ச்சிக்கு இப்பிடி ஒரு வரவேறபான்னு எங்களுக்கு எல்லாம் பயங்கர ஆச்சரியம்.

எல்லாம் பழைய நெனப்புத் தான் பேராண்டி...பழைய நெனப்புத் தான்.

சொன்னது...

கைப்ஸ்..
உங்க கிட்ட புடிச்சதே என்ன தெரியுமா?? நான் பதிவுல சொல்லாம விட்டதெல்லாம் கரெக்டா பின்னூட்டத்துல சொல்லிடுவீங்க :)

//அதுக்கு எங்களுக்கு முதல் பரிசு கெடச்சது(கோல்ட் மெடல்)...//

சந்தடி சாக்குல பிட்டைப் போட்டுட்ட பாத்தியா??

// யூ டூ சேம் ப்ளட்?//
பின்ன எத்தனை நாள் ஆனாலும் அப்ப வாங்கின ஆப்புகள் மறக்குமா?? குமா? மா?

//ஒரு சீனியர் அக்கா அவுங்க பக்கத்துல இருக்குற ஒரு அண்ணன் கிட்டேருந்து பெல்ட்டை வாங்கி கழுத்துல சுத்திக்கிட்டு தூக்கு போட்டு தொங்கற மாதிரி //

ஹி ஹி ..நல்ல வேளை..எங்க சீனியர் அக்காவெல்லாம் தலைல அடிச்சக்கறதோட நிறுத்திடுவாங்க...

ப்சங்க தான் தூக்கு போடறதெல்லாம் ;)

//எல்லாம் பழைய நெனப்புத் தான் பேராண்டி...பழைய நெனப்புத் தான்.
//
உனக்கு எத்தன தடவை தான் சொல்றது?? சின்ன வயசுலயே எதுக்கு இவ்ளோ பெருமூச்சு?? :))

சொன்னது...

//"புள்ளையார் பால் குடிக்கிறார்"//

இதுல நீ தான் புள்ளையாரா ஆக்டா?

சொன்னது...

ஹோலா கப்பி தோப்பில நாடகம் போடது போதும்யா வேற பதிவு போடு சொல்லிட்டேன் ஆமா.
தேன்கூடு போட்டீல ஒனக்கும் ஒரு குத்து போட்டிருக்கேன் கதம்பம் பக்கம் எட்டிப் பாரு

சொன்னது...

மகி...
உங்களை மாதிரி நாளைக்கு மூனு பதிவெல்லாம் போட முடியாதுங்ண்ணா..வெயிட்டுங்கண்ணா..

//தேன்கூடு போட்டீல ஒனக்கும் ஒரு குத்து போட்டிருக்கேன் //
இப்ப எங்க போய் குத்து போட்டீங்க...குவாட்டர் கோவிந்துக்கு இன்னும் இறங்கலியா??

சொன்னது...

கப்பி!
நம்ம ஏதும் நிகழ்ச்சி பண்ணும் போது எவனும் வாய திறக்க கூடாது. அப்படி பசங்கள ஒரு கட்டுக்குள வச்சி இருக்கனும். கூட இருக்க பசங்க தான் ஏதாவது சேட்ட பண்ணுவானுங்க. அவனுங்கள சமாளிப்பது ஒன்னும் பெரிய விசயம் இல்ல. ஆங் அது எல்லாம் ஒரு காலம்.

சொன்னது...

என்ன சிவா..ரெண்டு நாளா ரொம்ப வேலையோ??

//நம்ம ஏதும் நிகழ்ச்சி பண்ணும் போது எவனும் வாய திறக்க கூடாது. அப்படி பசங்கள ஒரு கட்டுக்குள வச்சி இருக்கனும். //

ஆமா..ஆமா ;)

//அது எல்லாம் ஒரு காலம். //
அடிக்கடி இப்படி அசை போட்டுப்போம் ;))

சொன்னது...

//என்ன சிவா..ரெண்டு நாளா ரொம்ப வேலையோ?? //
ஆமாம்ப்பா
:(((((((

சொன்னது...

//ஆமாம்ப்பா
:(((((((
//
இன்னைக்கு நான் :((((

சொன்னது...

நல்லா இருக்கு...

சொன்னது...

வளரெ நன்னி வினையூக்கி!!

சொன்னது...

கப்பி,

எங்கப்பா நீ போயிட்டே....:-)))

சொன்னது...

ராமு

//எங்கப்பா நீ போயிட்டே....:-)))/

பிரியலயே...
'எங்கயோ போயிட்டே'னு புகழறியா?

டேங்க்ஸு :))

சொன்னது...

hola kappi

சொன்னது...

//பிரியலயே...
'எங்கயோ போயிட்டே'னு புகழறியா?

டேங்க்ஸு :)) //

உனக்கு இந்த ஆசையெல்லாம் இருக்கா...

எங்கே ரெண்டு நாளா ஆளா காணோமின்னு கேட்டா....?

சொன்னது...

//உனக்கு இந்த ஆசையெல்லாம் இருக்கா...

எங்கே ரெண்டு நாளா ஆளா காணோமின்னு கேட்டா....?//

நீ அப்படி சொல்ல மாட்டேன்னு தெரியும்...நமக்கு நாமே சொல்லிக்கிட்டா தானே உண்டு :))

கொஞ்ச நேரம் மனுசன சந்தோசமா இருக்க விட மாட்டீங்களே :))


//hola kappi //
ஐயோ மறுபடியும் ஸ்பேனிஷா...வேணாம் மகி :D

சொன்னது...

கப்பி!
நல்லா இருக்குங்கோ !! :))

சொன்னது...

ஜொள்ஸ்

டாங்ஸுங்கோ :)

சொன்னது...

கப்பி,
சூப்பர்...படம் கிளப்பது..

சொன்னது...

pazhasa ellam kelarittu irukeenga pola (double meaning!!) :)))

சொன்னது...

//(double meaning!!) :)))//

கப்பிநிலவா,
டபுள் மீனிங்ல வேற பேசுவியாயா நீயு? உன்னைய நல்லவன் நல்லவன்னு திரும்ப திரும்ப நம்பறேன்...நீ அதுல திரும்ப திரும்ப மண்ணள்ளி போடறே! எதோ பாத்து பண்ணு ராசா!
:)

சொன்னது...

//கப்பிநிலவா,
டபுள் மீனிங்ல வேற பேசுவியாயா நீயு? உன்னைய நல்லவன் நல்லவன்னு திரும்ப திரும்ப நம்பறேன்...நீ அதுல திரும்ப திரும்ப மண்ணள்ளி போடறே! எதோ பாத்து பண்ணு ராசா!
:)
//

தல
என்ன இது டபுள் மீனிங்னா அதுல ரெண்டுமே நல்ல மீனிங்கா இருக்க கூடாதா?? நீயா எதுனா நினைச்சுட்டு என் மேல தப்பு சொல்லலாமா?? ;))

அகமதாபாத்ல ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா?? ;)