கயல்விழி

சுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.

சுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.

சுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.

அவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.

அன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.

"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்"

"ஓ..போட்டோ குடுத்திருக்காங்களா?"

"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொண்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்"

"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்".

போனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.

"எந்த ப்ராஞ்சுன்னு தெரியலயாடா?"

"தெரியல மச்சி"

"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.

"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்"

"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?'" - இந்த பக்கத்திலிருந்து லதா.

"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது?"

"கயல்விழி மகாதேவனா?"

"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க"

"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்"

"லதா, பாக்க எப்படி இருப்பாங்க?" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.

"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.

அதற்குள் சுந்தர் "இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா? போன்லயே பேசிடலாம்"

"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்".

சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.

"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்"

"ம்ம்..சொல்லுங்க"

"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு"

"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்"

"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா?"

"ஆமாங்க. கொஞ்சம் வேலை..லேட்டாயிடுச்சு.."

"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?"

"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா? தப்பா நினைச்சுக்காதீங்க"

"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்"

"குட்நைட்"

'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.

வழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.

"சுந்தர் பேசறேங்க"

"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க?"

"நலம். எங்க இருக்கீங்க?"

"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா?"

"கண்டிப்பாங்க..நாலு மணிக்கு பண்ணவா?". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

மதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.

"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?"

"ஆமாங்க..இன்னும் வேலை முடியல"

"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்"

"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்"

"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா?? உங்களைப் பார்க்க முடியுமா?"

"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்"

"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்"

"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு"

"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா? அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க"

"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்"

"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க"

"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு"

"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது"

"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் பேசிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்."

சுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.



55 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//என்ன பண்றது தலை வேர்க்குதே//

உண்மைதான் :))

பாராட்டுக்களுக்கு நன்றி எண்ணம்!!

சொன்னது...

//இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.//
Projectல வேலை இல்லாம வெட்டியா இருந்தா இப்படி தான் குழப்பம்லாம் வரும்.

சொன்னது...

உருகுவே கப்பி என்னாச்சு? தொடர்ந்து ஒரே டகால்டி கதை எழுதுறே? சொந்தக் கதையா இருந்தா சொல்லு கண்ணு எல்லாம் பேசி முடிச்சுடலாம் சுமுகமா
கயல் விழி நல்ல பேர் ஆனா எனக்கு கொஞ்சம் பழைய நெனப்பெல்லாம் தூண்டி விடுதுபா

சொன்னது...

//Projectல வேலை இல்லாம வெட்டியா இருந்தா இப்படி தான் குழப்பம்லாம் வரும்.
//

:)))

சொன்னது...

//70f94cbb3b6e89be003

சொன்னது...

//தொடர்ந்து ஒரே டகால்டி கதை எழுதுறே? //

அதுவா வருதே..:)))

//சொந்தக் கதையா இருந்தா சொல்லு கண்ணு எல்லாம் பேசி முடிச்சுடலாம் சுமுகமா
//

சொந்த கதைலாம் இல்ல மகி..சும்மா கதை தான்..

சொந்த கதையா இருந்தா நீங்க வந்து பேசினா முடிஞ்சிடும் ;)))


//கயல் விழி நல்ல பேர் ஆனா எனக்கு கொஞ்சம் பழைய நெனப்பெல்லாம் தூண்டி விடுதுபா ///

ஆஹா..இது மேட்டரு...மகி..
கமான்...என்ன இது???

சொன்னது...

////70f94cbb3b6e89be003
//

யப்பா..அனானி..
என்னப்பா இது...எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ;)

சொன்னது...

//ஆஹா..இது மேட்டரு...மகி..
கமான்...என்ன இது??? //

அப்டீன்னா வந்து என்னோட எல்லா பதிவுக்கும் 5 பின்னூட்ட லஞ்சம் குடுக்கனும் சரியா?:))

சொன்னது...

//அப்டீன்னா வந்து என்னோட எல்லா பதிவுக்கும் 5 பின்னூட்ட லஞ்சம் குடுக்கனும் சரியா?:))
//

அது கூட செய்ய் மாட்டேனா?? லஞ்சம்னு சொல்லக்கூடாது...
அன்பளிப்பு...அன்பை காட்டறதுக்கு 5 என்ன 50 பின்னூட்டம் போடலாம் ;)
நீங்க விலாவரியா சொல்லுங்க..

(மேட்டரைக் கறக்க எப்படியெல்லாம் பேச வேண்டி இருக்கு)

சொன்னது...

//"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" //

எனக்கு என்னுமோ கதை மாதிரியே தெரியலையே ;)


////அப்டீன்னா வந்து என்னோட எல்லா பதிவுக்கும் 5 பின்னூட்ட லஞ்சம் குடுக்கனும் சரியா?:))
//

அது கூட செய்ய் மாட்டேனா?? லஞ்சம்னு சொல்லக்கூடாது...
அன்பளிப்பு...அன்பை காட்டறதுக்கு 5 என்ன 50 பின்னூட்டம் போடலாம் ;)
நீங்க விலாவரியா சொல்லுங்க..
//

ஓ!!! இப்படியெல்லாம் கூட டெக்னிக் இருக்கா???

சொன்னது...

சரி எல்லாருக்கும் தெரியாம இருக்க நான் ஷ்பானிஷ்ல சொல்லவா? நீ தமிழ்ல பதில் சொல்லு?சரியா?

சொன்னது...

////"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" //

எனக்கு என்னுமோ கதை மாதிரியே தெரியலையே ;)
//

ஆமா வெட்டி, எங்க கம்பெனில உண்மையாவே கிப்ட் பாக்கேஜ் உண்டு..அது கதை இல்ல ;)

சொன்னது...

//சரி எல்லாருக்கும் தெரியாம இருக்க நான் ஷ்பானிஷ்ல சொல்லவா? நீ தமிழ்ல பதில் சொல்லு?சரியா?
//

இந்த விளையாட்டெல்லாம் வேணாம்..புரியற மாதிரி தமிழ்லயே சொல்லுங்க..

நீங்க ஸ்பானிஷ்ல சொன்னாலும் நான் தமிழ்ல முழி பெயர்த்து போட்டா எல்லாருக்கும் தெரியத் தான் போகுது..

தமிழ்லயே ஷமார் மகி..

கோவிந்தன் கதையோட சேர்த்து இந்த கதையையும் போட்டுடுங்க ;)

சொன்னது...

//கோவிந்தன் கதையோட சேர்த்து இந்த கதையையும் //

:)))
:)))
:)))
:)))

சொன்னது...

2006-லும் நிகழு பெண்களின் அவல நிலையை ஒரு ஆணாதிக்கக் கண்ணோடு,.........

//இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.//

......திறம்பட எழுதியிருக்கிறீர்கள்!
நீங்கள் அப்படியில்லை என நம்புகிறேன்!

வீட்டுப் பேச்சைக் கேட்கும் பெண்களும் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்!
மகிழ்ச்சி!

சொன்னது...

//இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.//


2006-லும் நிகழு பெண்களின் அவல நிலையை ஒரு ஆணாதிக்கக் கண்ணோடு திறம்பட எழுதியிருக்கிறீர்கள்!
நீங்கள் அப்படியில்லை என நம்புகிறேன்!

வீட்டுப் பேச்சைக் கேட்கும் பையன்களும்,பெண்களும் இப்பவும் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்!
மகிழ்ச்சி!

சொன்னது...

En Uruguay no necesita tantas cosas, cierto??

no parece como un cuento,es tu
hisoria!!!!

சொன்னது...

//:)))
:)))
:)))
:)))
//

இதுக்கென்ன அர்த்தம்?
என் கதை தானே அதுன்னு சொல்றீங்களா? :))

சொன்னது...

//2006-லும் நிகழு பெண்களின் அவல நிலையை ஒரு ஆணாதிக்கக் கண்ணோடு திறம்பட எழுதியிருக்கிறீர்கள்!
//

வாழ்த்துக்களுக்கு நன்றி எஸ்கே...

உண்மை தான் எஸ்கே ஐயா..கண்ணுக்குத் தெரியாத வகைகளில் சமூகத்தில் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.


//நீங்கள் அப்படியில்லை என நம்புகிறேன்!
//
நம்பியது உண்மையே :)


//வீட்டுப் பேச்சைக் கேட்கும் பையன்களும்,பெண்களும் இப்பவும் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள்!
மகிழ்ச்சி!
//
:)

சொன்னது...

//En Uruguay no necesita tantas cosas, cierto??//

ஆமா குரு..இங்க இதுக்கெல்லாம் தேவையே இல்லையே :))

//no parece como un cuento,es tu
hisoria!!!! //

சென்னையில் இருந்தபோது என் அலுவலகத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களை வைத்து புனைந்தது இது... என் historia கிடையாது :)

சொன்னது...

ச்ச்ச்ச்சும்மா

போட்டு வாங்கலாமுன்னா சிக்க மாட்டேங்ககிறீயேப்பா

சொன்னது...

கப்பி அட்ரஸ் வேனுமா?

சொன்னது...

//ச்ச்ச்ச்சும்மா

போட்டு வாங்கலாமுன்னா சிக்க மாட்டேங்ககிறீயேப்பா //

ஆகா..ஐ யாம் தி எஸ்கேப்பா??

குரு..சிஷ்யனை இப்படி பழி வாங்கலாமா??

சொன்னது...

//கப்பி அட்ரஸ் வேனுமா?
//

பிரியலயே மகி!

சொன்னது...

//பிரியலயே மகி!// :(
i asked 5
u said 50
but not yet ?:))

சொன்னது...

இது நான் சென்னைல படிக்கும் போது நடந்தது நான் டி.எம்.இ முதல் வருஷம் அவங்க (?) MBBஎஸ் இரண்டாம் வருசம் கவனமா கேக்கனும் அப்புறமா சொல்ல மாட்டேன் நீ கவனமா கேக்கறதை போயி கரக்டா பின்னூட்டத்துல காட்டனும்

சொன்னது...

ஆமா கவித பக்கமே போரதில்லயா? கப்பி?

சொன்னது...

அவங்க நான் தங்கியிருந்த வடபழனி கவுரி சித்ரா கார்டன்ல தங்கியிருந்தாங்க... நான் எங்க மாமாவோட ஹோன்டா CD100 எடுத்துகிட்டு சனி ஞாயிறு வெளில போவேன்... அன்னைக்கு ஒருனா அவங்க கைனடிக் ஹோன்டா ரிப்பேரு அம்மனி வந்து நீங்க தான் மெக்கானிக்காச்சே கொஞ்சம் பாருங்க ந்னு சொன்னாங்க......

சொன்னது...

யப்பா கப்பி நாம எதாவது ஒரு இடத்துல பேசிக்கலாம் என்னா நான் ஒவ்வொரு பதிவா தொறந்து ஒங் கமெண்ட தேடரதுக்குள்ள நொறை தள்ளூது

சொன்னது...

நானும் காதல் கவிதை ரசினிகாந்து கணக்கா போயி அந்த வண்டில இருக்க கிக்கரை திருப்பி(அதுல அப்ப செல்ப் ஸ்டார்ட் வேலை செய்யலை) பஜாஜ் ஸ்டார்ட் பன்னுர வாக்குல திரும்பி நின்னு விட்டேன் ஒரு உதை மெதுவாத்தான் என் நல்ல நேரமாட்டுக்கு அது காலோட வந்திருச்சி

சொன்னது...

என்னடா இது ஆளையே கானோம்? கப்பி ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ கப்பி எங்கயாவது லத்தீன் பிகர பாத்துட்டயா?

சொன்னது...

அப்ப அது திரும்ம்பி ஒரு பார்வை பாத்துதுபா அப்பிடி ஒரு பார்வை எனக்கு எம் பொண்டாட்டி கண்ணுக்குள்ள வந்து வந்து போறா( அப்பவே நான் கிழுமத்தூரில அஸ்திவாரம் போட்டாச்சு) ஆனாலும் இந்த குரங்கு மனசிருக்கே ரொம்ப பொல்லாதுப்பா

சொன்னது...

அப்படீன்னா நீங்களும் அங்க இருந்தீங்களா?

சொன்னது...

சரி கப்பி இங்கயும் மணி 11.30 ஆச்சு இனிமே தான் போய் சாப்பிடனும் ஆமா அங்க மணி என்னா?

துபாய்ல இப்ப 11.30

சொன்னது...

நாளைக்கு இதையே ஒரு தனிப்பதிவா போடலாம் ஏன்னா அவங்க இதை படிச்சா ரொம்ப ரசிப்பாங்க நான் இன்ன்மும் அவங்க ப்ரண்டு

சொன்னது...

என்ன விளையாட்டு இது???
ஒரே பதிவுல போடுங்கப்பா!!! படிக்க கஷ்டமா இருக்குள்ள..

சொன்னது...

//என்ன விளையாட்டு இது???
ஒரே பதிவுல போடுங்கப்பா!!! படிக்க கஷ்டமா இருக்குள்ள..
//

விளையாட்டை நிறுத்தியாச்சு வெட்டி..
நாளைக்கு அவர் தனிப்பதிவு போடறாரு :))..

சொன்னது...

Kappi poruthathu pothum pongi ezhulu aaru porutham thaan irunthalum parava illa, mana porutham thaan mukkiyam. Paesi paathuru......

சொன்னது...

கப்பி கயல் விழி கதை முக்கால் வாசி முடிஞ்சது

சொன்னது...

கப்பி ரிலீசாயிடுச்சி

சொன்னது...

ஐ யாம் தி வெயிட்டிங் ;)

சொன்னது...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (சிறப்பு வார்ப்புருவா... கலக்குங்க)

சொன்னது...

//சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (சிறப்பு வார்ப்புருவா... கலக்குங்க)
//

நன்றி பாலா..

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

கதை எப்படி இருக்குன்னு சொல்லலையே :(

(x/4)??? :))

சொன்னது...

கப்பி,
Some thing wrong, some where!

என்னமா ஆச்சு உனக்கு. நல்லா தானே இருந்த. எதா இருந்தாலும் சொல்லு முடிச்சிடலாம்.

உனக்கு மட்டும் ஒரு மேட்டரு சொல்லுறேன். இந்த பெயர கேட்டவுடன் சில ஞாபகங்களை கிளப்பி விட்டது கப்பி. ரொம்ப நல்ல பெயர் இல்ல. கயல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

சொன்னது...

//Some thing wrong, some where!

என்னமா ஆச்சு உனக்கு. நல்லா தானே இருந்த. எதா இருந்தாலும் சொல்லு முடிச்சிடலாம்.
//

தெய்வமே..நல்லா தான் இருக்கேன்.. நோ பீலிங்ஸ் ஆப் இண்டியா :))

//இந்த பெயர கேட்டவுடன் சில ஞாபகங்களை கிளப்பி விட்டது கப்பி. //

ஆகா...நீயுமா???
நேத்து மகேந்திரன்..இன்னிக்கு நீ...

கமான் சிவா..
கதையை இங்க சொல்றயா? இல்ல தனிப் பதிவா?? எதுனாலும் எனக்கு ஓகே ;)


//ரொம்ப நல்ல பெயர் இல்ல. கயல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//
//
ஆமா ஆமா...நல்ல ரொம்ம்ம்ம்ப நல்ல பெயர்...உன் கதையை எடுத்து விடும்மா ;)

சொன்னது...

//ரொம்ப நல்ல பெயர் இல்ல. கயல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் //


கப்பி விடாதே புடி புடி இன்னொரு ஆள் மட்டிகிட்டாரு எஸ்பனால்ல போட்டாலும் நான் ஒனக்கு மொழிபெயர்த்து சொல்லுறேன் ஆனா ஆளை விடாதே கப்பி கழகக் கண்மனீ

சொன்னது...

//கப்பி விடாதே புடி புடி இன்னொரு ஆள் மட்டிகிட்டாரு
எஸ்பனால்ல போட்டாலும் நான் ஒனக்கு மொழிபெயர்த்து சொல்லுறேன் //

எந்த மொழில வந்தாலும் எனக்கு ஓகே தான்..

//ஆனா ஆளை விடாதே கப்பி கழகக் கண்மனீ //

நான் விட மாட்டேன்..ஆனா நீங்க ஓவரா ரியாக்ட் பண்ணி சொதப்பிடாதீங்க...

சிவா வந்து சொல்வாரு...

சொன்னது...

கப்பி இது கதை இல்லமா நிஜம். சொல்லுறேன் உன்கிட்ட சொல்லாமலா.
காலம் தான் நிறையவே உள்ளதே.

சொன்னது...

கப்பி இது கதை இல்லமா நிஜம். சொல்லுறேன் உன்கிட்ட சொல்லாமலா.
காலம் தான் நிறையவே உள்ளதே.

சொன்னது...

கப்பி இது கதை இல்லமா நிஜம். சொல்லுறேன் உன்கிட்ட சொல்லாமலா.
காலம் தான் நிறையவே உள்ளதே.

சொன்னது...

//கப்பி இது கதை இல்லமா நிஜம். சொல்லுறேன் உன்கிட்ட சொல்லாமலா.
காலம் தான் நிறையவே உள்ளதே//

சிவா..கதை இல்ல..நிஜம் தான்..அதுக்காக மூனு தடவை சொன்னாதான் நம்புவோமா?? :)))

ஐ யாம் தி வெயிட்டிங்..
எப்ப சொல்ற??

சொன்னது...

Romba nalla kathai. Enjoyed reading it. Nijamaana kathai mathiri irukku. I mean, natural a irukku.
Kalakiteenga!

சொன்னது...

thanks Poornima

சொன்னது...

அழகான கதை!!

பலமுக மன்னன் ஜோ மாதிரி கலக்கறப்பா கப்பி!

இப்பதான் படிச்சேன் இதை. வெட்டிக்கு பல நன்றிகள்.

சொன்னது...

//அழகான கதை!!


பலமுக மன்னன் ஜோ மாதிரி கலக்கறப்பா கப்பி!
//

மிக்க நன்றி தம்பி!

விளம்பரத்துக்கு நன்றி வெட்டி :)