நட்பின் வழியது

இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்
அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்
நான் அனுப்பி பதில் இல்லாத,
நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்
தேவையற்றதாகத் தோன்றி
பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்
நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்
நான் வர முடியாமல் போன
உன் விவாகம்
அடைக்க மறந்த கடன்
அதைக் கேட்டுத் தொலைத்த நீ
இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

--------------------------------------------------------------------------------

டயலாக்:

"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"

"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"



44 பின்னூட்டங்கள்:

சொன்னது...

மறுபடியும் சொல்றேன் நல்லாஇருக்கு :)

சொன்னது...

கப்பி,

கலக்கிட்டே போ காப்பி.... :-)))))

சொன்னது...

மறுபடியும் நன்றி மகி ;)

சொன்னது...

//கப்பி,

கலக்கிட்டே போ காப்பி.... :-))))) //

நேத்து அங்க போய் எனக்கு காபி புடிக்காதுன்னு தப்பா சொல்லிட்டு வந்திருக்க??


இதுக்கு நன்றி ராம்..

சொன்னது...

கவிதை நல்லா இருக்கு கப்பி!

எனக்கு கவிதையும் பிடிக்கும்,
காபியும் பிடிக்கும்!
கப்பி...???????


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்//

கப்பி பாய் ...!
அதுக்கு என்ன காராணம்...!

சண்டைக் கோழி மேட்டரா

சொன்னது...

//கவிதை நல்லா இருக்கு கப்பி!//

வளரெ நன்னி!!


//எனக்கு கவிதையும் பிடிக்கும்,
காபியும் பிடிக்கும்!
கப்பி...???????
//
என்ன நண்பா..இப்படி கேள்விக்குறில முடிச்சுட்ட?? :(

சொன்னது...

//கப்பி பாய் ...!
அதுக்கு என்ன காராணம்...!

சண்டைக் கோழி மேட்டரா
//

கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க ஜிகே :))))

சொன்னது...

k. பயலே,

//நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்//

இத இப்படி எடுத்துக்கலாம... படிச்சும் புரிஞ்சுக்க தவறிய அஞ்சல்கள்னு...

//
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்//

ஹூம்... அருமை!!

நல்ல இருக்கீரா... ரொம்ப நாளைக்கு அப்புறமா தெகா வரானேன்னு பாக்குறீங்க அப்படித்தானே. மகி வீட்டுக்கு மீன் சாப்பிடப் போயிட்டேன் ;-))

சொன்னது...

//நேத்து அங்க போய் எனக்கு காபி புடிக்காதுன்னு தப்பா சொல்லிட்டு வந்திருக்க??//

இல்ல கப்பி,

நான் உனக்கு கலக்குமுட்டி'தான் பிடிக்கிமிலன்னு நினைச்சேன்..... :-)))

சொன்னது...

//"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"

"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"//

இந்த கெட்டூகெதடுக்கும் வராமல், மச்சி எனக்கு இன்னைக்கு ப்ரொஜக்ட் டெலிவரினு சொல்றவங்களை நினைத்தால் இன்னும் வருத்தமாக இருக்கு :-(

கப்பி,
கவிதை அருமை

சொன்னது...

//இத இப்படி எடுத்துக்கலாம... படிச்சும் புரிஞ்சுக்க தவறிய அஞ்சல்கள்னு...
//

உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ?? ;)


//நல்ல இருக்கீரா... ரொம்ப நாளைக்கு அப்புறமா தெகா வரானேன்னு பாக்குறீங்க அப்படித்தானே. மகி வீட்டுக்கு மீன் சாப்பிடப் போயிட்டேன் ;-))
//
எத்தனை நாள் வராம போயிடுவீங்கன்னு பாத்துக்கிட்டு இருந்தேன்...சாப்பாடு பலமோ?? :)))

நன்றி தெகா

சொன்னது...

//நான் உனக்கு கலக்குமுட்டி'தான் பிடிக்கிமிலன்னு நினைச்சேன்..... :-)))
//

அதுவும் தான் ;)

ஆனா காபி உயிரை காக்கும் மருந்து ;))

சொன்னது...

//இந்த கெட்டூகெதடுக்கும் வராமல், மச்சி எனக்கு இன்னைக்கு ப்ரொஜக்ட் டெலிவரினு சொல்றவங்களை நினைத்தால் இன்னும் வருத்தமாக இருக்கு :-(//

same blood வெட்டி :))


//
கப்பி,
கவிதை அருமை //

நன்றி வெட்டி..

சொன்னது...

//என்ன நண்பா..இப்படி கேள்விக்குறில முடிச்சுட்ட?? :(
//

நான் முடிச்சது வேணா கேள்விக்குறி!
ஆனால் நம் நட்பு?
அது ஒரு ஆச்சர்யகுறி! இல்லையா?

சும்மா டமாசுக்குத் தான் கப்பி! உண்மை சொன்னால் எனக்கு காஃபி பிடிக்காது,
கப்பி பயல புடிக்கும்!:))))
மகி உனக்கு என்ன சிப்பு வேண்டிக் கெடக்கு?


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

இத்தனை பேர் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கப்புறம் சொல்ல பயம்ம்மா இருந்தாலும்
கப்பி,
1. கொஞ்சம் இந்த கமா, அரைக் கமா என்பதெல்லாம் பயன் படுத்த வேண்டும்.. எந்த வரி எங்க முடியுதுன்னு புரியலையே!! :(
2. நிறைய விஷயங்கள் சொன்னதால், எனக்கென்னவோ கவிதை ஏற்படுத்தும் தாக்கம் சிதறிவிட்டதாக ஒரு ஃபீலிங்..

மத்தபடி.. கப்பி பிரதர், உருகுவேல கூட கெட் டு கெதரா?!! வாழ்க உம் நட்பு..

(ப்ரொபைல் பார்த்தேன்.. குழப்பிட்டியே.. சென்னையா உருகுவேயா? எங்கப்பா இருக்க?!! )

சொன்னது...

/நான் முடிச்சது வேணா கேள்விக்குறி!
ஆனால் நம் நட்பு?
அது ஒரு ஆச்சர்யகுறி! இல்லையா?
///

ஆ...ஆ...ஆ!!!!!!!!!

//சும்மா டமாசுக்குத் தான் கப்பி! உண்மை சொன்னால் எனக்கு காஃபி பிடிக்காது,
கப்பி பயல புடிக்கும்!:))))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வார்த்தையே வரலைப்பா நண்பா!!!

//மகி உனக்கு என்ன சிப்பு வேண்டிக் கெடக்கு?
//
நீ அவரைக் கண்டுக்காத ;)

சொன்னது...

//கொஞ்சம் இந்த கமா, அரைக் கமா என்பதெல்லாம் பயன் படுத்த வேண்டும்.. எந்த வரி எங்க முடியுதுன்னு புரியலையே!! :(
//

ஏனுங்க..அதெல்லாம் இல்லாம இப்படி மாத்தி மாத்தி எழுதினா தான் கவுஜ மாதிரி வரும்னு நினைச்சேனுங்க...

எழுதிட்டு நானே பதம் பிரிக்க முடியலயோன்னு நினைச்சேன்.. அப்புறம் 'பதம் பிரிக்க முடியாத அளவு கவுஜ எழுதிட்டடா கப்பி'ன்னு எனக்கு நானே சர்டிபிகேட் குடுத்திக்கிட்டேன் :)))

//நிறைய விஷயங்கள் சொன்னதால், எனக்கென்னவோ கவிதை ஏற்படுத்தும் தாக்கம் சிதறிவிட்டதாக ஒரு ஃபீலிங்..//

ஓ...நான் இன்னும் நிறைய மிஸ் ஆகுதோன்னு நினைச்சேன் :D

/மத்தபடி.. கப்பி பிரதர், உருகுவேல கூட கெட் டு கெதரா?!! வாழ்க உம் நட்பு..
//
இங்க எங்க கெட் டூ கெதர்..பக்கத்துல எவனும் இல்லாம விட்டத்தை பார்த்து உட்கார்ந்துட்டு இருந்த எஃபெக்ட் இது :)))

//ப்ரொபைல் பார்த்தேன்.. குழப்பிட்டியே.. சென்னையா உருகுவேயா? எங்கப்பா இருக்க?!! //

அத மாத்தலைங்க...கொஞ்ச நாள்ல அங்க தானே வரப் போறோம்னு விட்டுட்டேன்...மாத்திடலாம் ;)

சொன்னது...

நம்ம பேவரைட் காபியை பத்தி பேச்சு அடிபடுது...

எனக்கு காபி ரொம்ப பிடிக்கும்... திக்கா சக்கரை கொஞ்சம் கம்மியா...
கோவை அண்ணபூர்ணா காபி மாதிரி இருக்கணும்...

இங்க Starbucks cappacino தான் இப்ப நம்ம பேவரைட்... ($3 கொஞ்சம் அதிகம் தான்)

வர வர காபியைவிட கப்பியை ரொம்ப பிடிச்சி போச்சி ;)

சொன்னது...

//உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை//

இது மட்டும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டால், பட்டியலிலிட்ட மற்ற அனைத்துமே காணாமல் போகும்!

நட்பும் ஊசலாடாது!

உறுதியாய் நம் காலம் முழுதும் நிற்கும்!

கருத்தான கவிதை!


[பி.கு.: 'நேரமினமை'யை 'நேரமின்மை என மாற்றவும்!

சொன்னது...

கப்பி நல்ல வேல, நம்ம சரா சொல்லாட்டி இந்த கட்டுரை நல்லா இருக்குனு சொல்லி இருப்பேன்.

கவுஜ சூப்பர்.

சொன்னது...

//"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்" //

இது சத்தியமான வார்த்தை

சொன்னது...

//நம்ம பேவரைட் காபியை பத்தி பேச்சு அடிபடுது...

//
ஆகா..இன்னொரு காபி ரசிகர் கிடைச்சாச்சு...

//
எனக்கு காபி ரொம்ப பிடிக்கும்... திக்கா சக்கரை கொஞ்சம் கம்மியா...
கோவை அண்ணபூர்ணா காபி மாதிரி இருக்கணும்...
//
அங்க நான் ஒரே ஒரு முறை தான் காபி குடிச்சிருக்கேன் :(

மெட்ராஸ்ல ஹாட்சிப்ஸ்லயும் சரவண பவன்லயும் ட்ரை பண்ணியிருக்கீங்களா??

//
வர வர காபியைவிட கப்பியை ரொம்ப பிடிச்சி போச்சி ;)
//

தன்யனானேன் வெட்டி :)

சொன்னது...

கவிதையைப்பத்தி எதுவும் சொல்லத் தோணலை. ஆனால், அதற்குப்பிறகு வரும் டயலாக்கை முழுக்க முழுக்க அனுபவித்திருக்கிறேன். :(

அப்புறம் ஒரு சின்ன கருத்து.

உங்களுடைய இடுகைகளைத் தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் 99% ஏன் வெறும் அரட்டைகளாகவே இருக்கு? தனியா அரட்டை அடிக்க ஒரு சின்ன chat-board நிறுவிக்கலாமில்லையா? பல சமயங்களில் இந்தப் பின்னூட்டக் கடலைக் கண்டே பின்னூட்டம் போடுவதில்லை. என்னமோ சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.

-மதி

சொன்னது...

மு.கு: நேரமின்மை திருத்திவிட்டேன் :)

//இது மட்டும் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டால், பட்டியலிலிட்ட மற்ற அனைத்துமே காணாமல் போகும்!
//

சத்தியமான வார்த்தைகள்!!

நன்றி எஸ்கே ஐயா!!

சொன்னது...

the comment for your personal view. you dont have to publish it kappi paya (ennamo maathiri irukku, ippadi address panna).

சொன்னது...

//நம்ம பயலுக சிங்கம்தான்...
எப்பவும்...எங்கயும்...
கலக்குறெ ராசா..

வாழ்த்துக்கள்
//

எல்லாம் உங்க வாழ்த்துக்கள்தான் சீனியர் :)

நன்றி!!

சொன்னது...

//கப்பி நல்ல வேல, நம்ம சரா சொல்லாட்டி இந்த கட்டுரை நல்லா இருக்குனு சொல்லி இருப்பேன்.

கவுஜ சூப்பர். ///

ஏன்..ஏன்..ஏன்..ஏன் இந்த கொலை வெறி :)))

டாங்க்ஸ் சிவா

//இது சத்தியமான வார்த்தை//

அது என் நண்பனின் வார்த்தைகள்!!

சொன்னது...

//கப்பி நல்ல வேல, நம்ம சரா சொல்லாட்டி இந்த கட்டுரை நல்லா இருக்குனு சொல்லி இருப்பேன்.
//

நான் "இத"கவிஜ நல்லா இருக்குனு சொன்னத புலித் தம்பி நம்பீருச்சு போல! ஹய்ய்யோ!.. ஹைய்யோ!..


அன்புடன்...
சரவணன்.

சொன்னது...

//the comment for your personal view. you dont have to publish it kappi paya (ennamo maathiri irukku, ippadi address panna). //

publish பண்ணினாலும் தவறில்லையே? :)

வெறும் கப்பி-ன்னு கூப்பிடுங்க :)

//கவிதையைப்பத்தி எதுவும் சொல்லத் தோணலை. ஆனால், அதற்குப்பிறகு வரும் டயலாக்கை முழுக்க முழுக்க அனுபவித்திருக்கிறேன். :(
//

அது என் நண்பனின் வார்த்தைகள்..என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வார்த்தைகள் :(

//உங்களுடைய இடுகைகளைத் தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் 99% ஏன் வெறும் அரட்டைகளாகவே இருக்கு? தனியா அரட்டை அடிக்க ஒரு சின்ன chat-board நிறுவிக்கலாமில்லையா? பல சமயங்களில் இந்தப் பின்னூட்டக் கடலைக் கண்டே பின்னூட்டம் போடுவதில்லை. என்னமோ சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
//

இனி அரட்டைகளை மட்டுப்படுத்த முயற்சிக்கிறேன் மதி...இதுவரை அது தவறாகப் பட்டதில்லை.. ஆனால் இப்போது தான் பல பயனுள்ள பின்னூட்டங்களை இழந்துவிட்டோமோ என எண்ணுகிறேன்...இந்த அரட்டைகளினால் தங்களின் பின்னூட்டங்கள் வராதது எனக்கு வருத்தமே :)

வருகைக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி மதி!!

சொன்னது...

//இந்த அரட்டைகளினால் தங்களின் பின்னூட்டங்கள் வராதது எனக்கு வருத்தமே :)
//

என்னப்ப வருத்தம்னு சொல்லி சிரிக்கிற???

"இடுக்கண் வருங்கால் நகுக"வா???

சொன்னது...

//நான் "இத"கவிஜ நல்லா இருக்குனு சொன்னத புலித் தம்பி நம்பீருச்சு போல! ஹய்ய்யோ!.. ஹைய்யோ!..
//
ஆகா...நல்லா கிளம்பி வர்றாங்கப்பா :)))

//என்னப்ப வருத்தம்னு சொல்லி சிரிக்கிற???

"இடுக்கண் வருங்கால் நகுக"வா???
//
கை ஸ்லிப் ஆயிடுச்சுங்கண்ணா..

நீங்க சொன்ன மாதிரியும் வச்சுக்கலாம்
:((..பாருங்க மறுபடி ஸ்லிப் ஆயிடுச்சு :))

சொன்னது...

//இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!//

என்ன பண்றது. இயந்திர மயமான வாழ்க்கையில் இப்படி தான் நட்பு இருக்குங்கிறது நிதர்சனமான உண்மை.
:(

நல்லா எழுதியிருக்கீங்க.

சொன்னது...

டாங்கஸ் கைப்ஸ்!

சொன்னது...

ரொம்ப குஷியா வந்தா ஒரே பீலிங்ஸ் ஆக்கிட்டீங்க :( புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)

சொன்னது...

//ரொம்ப குஷியா வந்தா ஒரே பீலிங்ஸ் ஆக்கிட்டீங்க :( //

ரொம்ப நேரம் பீல் பண்ணாதீங்க..உடம்புக்கு நல்லதில்ல :))

இதோ உங்க வீட்டுக்கு வர்றேன்..

சொன்னது...

Raj: machan..
Kappi: solda
Raj: நட்பின் வழியது..
chanceee illa..
un padaipa?
Kappi: pinna :D
Raj: konnute..
Kappi: dankis maapi
;)
Raj: te page is still loading..
dint see the comments yet
but for sure..
simply best
Kappi: hrehee...romba pugazhatha maapla..vekkama irukku ;)
Raj: seriousaa..
padam da..
nan kuda..yedo nee kirukitu irukanu nencha...unmaiyalume...arathamula kirukal than..
Kappi: hehehee..maapla pothumda...romba ottatha

சொன்னது...

கப்பி,
ஆகா! மனதைத் தொட்ட கவிதை. நீங்கள் கவிதையில் சொல்லியுள்ள பல கருத்துக்கள் என் வாழ்வில் நடந்ததாலோ என்னவோ, இக் கவிதையைப் படிக்கும் போது லேசாக மனதில் ஒரு ஏக்கம்.
ம்ம்ம்...இதுதான் வாழ்க்கை, huh?

சொன்னது...

//கப்பி,
ஆகா! மனதைத் தொட்ட கவிதை. நீங்கள் கவிதையில் சொல்லியுள்ள பல கருத்துக்கள் என் வாழ்வில் நடந்ததாலோ என்னவோ, இக் கவிதையைப் படிக்கும் போது லேசாக மனதில் ஒரு ஏக்கம்.
//

சேம் ப்ளட் வெற்றி :)

//
ம்ம்ம்...இதுதான் வாழ்க்கை, huh?
//

ம்ம்ம்... ;)

நன்றி வெற்றி!

சொன்னது...

Romba nalla kavithai. Romba casual a ezhuthi irukeenga.
Ithu natpukku mattumillai, innum pala uravugalukkum porunthum.
Anna-Thangai, Appa-Pillai...ippidi pala relationships um kooda pala velaigalil oosaladathaan seigirathu (or atleast it appears to be so)......
Aaana manamirunthaal markam undu ingaramathiri.... Romba mukyamnu ninaikura uravugalai, we never take for granted.....illaya?

சொன்னது...

//Romba nalla kavithai. Romba casual a ezhuthi irukeenga.
//

மிக்க நன்றி poornima!

//
Ithu natpukku mattumillai, innum pala uravugalukkum porunthum.
Anna-Thangai, Appa-Pillai...ippidi pala relationships um kooda pala velaigalil oosaladathaan seigirathu (or atleast it appears to be so)......
Aaana manamirunthaal markam undu ingaramathiri.... Romba mukyamnu ninaikura uravugalai, we never take for granted.....illaya?
//
உண்மைதான் பூர்ணிமா...சரியாகச் சொன்னீர்கள்!

சொன்னது...

கடைசி டையலாக் நச்...

ஒரு விதத்துல உண்மைதான் :((

சொன்னது...

வாங்க ஜி!!

/ஒரு விதத்துல உண்மைதான் :((//

என்னங்க செய்யறது :(

சொன்னது...

ரொம்ப நல்லாயிருக்கு கப்பி.....கவிதை!!

காலப்போக்கில், நட்புகளும் உறவுகளும்......தொலைந்து போகிறதென்னமோ மறுக்கமுடியாத உண்மைதான்!

அழகாக வரிகள் வெளிப்படுத்துகிறது மனதின் ஏக்கத்தை!!

\\இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்\\

தமிழில் தெரிந்த அத்தனை வார்த்தைகளை கோர்த்திட்டீங்களா???

நல்லதொரு கவிதை முயற்சி, பாராட்டுக்கள்!!