நரகாசுரன்

கிருஷ்ணகுமார் தன் பெயரை மாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் மாற்ற விரும்பும் காரணம் நியூமராலஜியோ, ஜோதிடமோ இல்லை. அவன் அப்பா ராஜேந்திரன் தான். படித்து முடித்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கும் அவனை சதா சர்வகாலமும் அவனை திட்டிக் கொண்டிருந்த அப்பாவின் மீது அவனுக்கு வெறுப்பு வந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான். காலை எழுந்ததில் இரவு வரை இவனை பார்க்கும்போதெல்லாம் திட்டாவிட்டால் அவன் அப்பாவிற்கும் உறக்கம் வராது. இவனும் அவரை எப்படியெல்லாம் கோபம் கொள்ள வைக்கமுடியுமோ அப்படியெல்லாம் செய்துவந்தான். அதில் ஒன்று தான் பெயர் மாற்றும் படலம்.

பெயரை மாற்றுவது என்று முடிவு செய்ததும் கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்துக்கொண்டு தான் பட்ட பாட்டையெல்லாம் நினைவில் கொண்டுவந்தான். வீட்டில் குமார் என்று கூப்பிட்டாலும் தெருவில் மற்ற சிறுவர்களும் பள்ளியிலும் அவன் கீயான். இந்த பெயரை அவனுக்கு வைத்தது அவனது நிரந்தர எதிரி முத்து. பள்ளிக் காலத்தில் இருந்தே முத்து இவனுக்கு நேரெதிர் தான். ஐந்தாம் வகுப்பில் ஒரு சண்டையின் போது இவன் கையை உடைத்தது, இவனைப் பற்றி வீட்டில் போட்டுக் கொடுப்பது, முதல் ரேங்க் வாங்குவது, இதோ இப்போது படித்து முடித்த உடனே நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிப்பது என எப்போதுமே முத்து கிருஷ்ணகுமாருக்கு எதிரியாகவே இருந்தான். இந்த பெயரை மாற்றினால் கீயான் என்ற பட்டப்பெயரும் தன்னைவிட்டு போகும் என்பதில் கிருஷ்ணகுமாருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

கல்லூரியில் இவன் எல்லாருக்கும் கிறுக்குகுமார் தான். தெரியாத்தனமாக இவன் தன் பெயரை ஸ்டைலாக எழுதுவதாக நினைத்து Krk Kumar என்று எங்கோ எழுதிவைக்க அதை ஒருவன் கிறுக்குகுமார் என்று படித்துவைக்க, அன்றிலிருந்து இன்று வரை கல்லூரி நண்பர்களுக்கு கிறுக்குகுமார் தான்.

பெயரை முறைப்படி மாற்றுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் விசாரித்து தெரிந்துகொண்டான். ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அஃபிதாவித் வாங்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அதற்கு முன் ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அந்த விளம்பரத்தின் பிரதியையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமாம். இதற்கு ஒரு வக்கீலைப் பிடித்தால் வேலை எளிதாகிவிடும். எப்படியும் குறைந்தது ஐயாயிரம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கு போட்டு தன் தந்தையிடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை அடிப்பது என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.

பெயரை மாற்றுவதாக முடிவெடுத்த பின்னும் அவனுக்கு சரியான பெயர் சிக்கவில்லை. முக்கியமாக அவன் தந்தையை எரிச்சலூட்டும் வகையில் பெயர் சிக்கவில்லை. நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் குழந்தை பெற்று அதற்கு பெயர் வைக்கும் வயதில் எதற்கு பெயர் மாற்றுகிறான் என அவனைத் திட்டுவார்கள்.

பெயர்களைப் பட்டியல் போட்டால் எளிதாக தேர்ந்தெடுக்கலாம் என பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் கிருஷ்ணகுமார் என்ற பெயருக்கு எதிர்மறையான பெயராக வைக்கவேண்டும். கிருஷ்ணனுக்கு எதிரிகள் என்று இதிகாசங்கள் கூறும் கம்சன், நரகாசுரன், துரியோதனன் போன்ற பெயர்களில் ஏதாவது ஒன்று வைத்துக்கொள்ளலாம என யோசித்தபோது நரகாசுரன் அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. ராஜேந்திரன் என்ற தன் தந்தையின் பெயருக்கு நரகாசுரன் சரியாக இருக்கும் என முடிவு செய்துகொண்டான். இந்த இந்திரனை நரகாசுரனை வைத்து அடக்கப் போவதாக சபதம் செய்துகொண்டான்.

இந்த பெயரை வைத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்றும் யோசிக்கத் தொடங்கினான். இத்தனை நாட்களாக கிறுக்கு என்று கூப்பிட்டவர்கள் நரகாசுரனை நருக்கு என்று கூப்பிட்டால் கோபமாக நறுக்கென பதில் சொல்லி அவர்கள் மூக்கறுக்க வேண்டுமென முடிவுசெய்தான்.

பெயர் மாற்ற குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாயாவது தேவைப்படும். இதற்கும் ராஜேந்திரன் மடியில் தான் கை வைக்கவேண்டும். என்ன காரணம் சொல்லி வாங்குவது என குழம்பினான். பேசாமல் பெயர் மாற்றப்போகும் விஷயத்தை சொல்லிவிட வேண்டியது தான். ஆனால் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நண்பன் எவனிடமாவது கடன் வாங்கலாம் என்றால் ஐயாயிரம் ரூபாய் என்றாலே அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது என கை விரித்துவிடுவார்கள்.

அன்று அவன் தாத்தாவின் திதி. தாத்தாவின் படத்திற்கு படையல் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். அவரின் தாத்தாவைப் பற்றிய பேச்சு வந்தது. தொன்னூறு வயது வரை திடகாத்திரமாக வாழ்ந்தவர். ராஜேந்திரனுக்கு அவர் தந்தை மீது பெரிதாக பாசம் கிடையாது. அவர் இறந்தபோது கூட பெரிதாக வருத்தம் கொள்ளவில்லை. அவர் அம்மா இறந்தபோது இவர் கதறியதைக் கண்டவர்கள் அப்போது பெரிதாக ஆச்சரியம் அடைந்தனர்.

"என் அப்பா மேல எனக்கு பெருசா பாசமெல்லாம் இருந்ததில்லை. சின்ன வயசுல இருந்தே என்னை அடிச்சுத்தான் வளர்த்தார். இந்த வேலையில்யும் நானாத்தான் சேர்ந்து கஷ்டப்பட்டு இந்தளவு வந்திருக்கேன். டிபார்ட்மெண்ட் எக்ஸாம்லாம் எழுதி ப்ரோமஷன் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். அவர்கிட்ட இருந்து ஒரு காசு வாங்கல. படிச்சு முடிச்சு வேலை தேடிட்டு இருந்தப்ப கூட அவர் பெருசா சப்போர்ட் பண்ணல. எப்பவும் திட்டு தான். சமயத்துல அவர் மேல பயங்கர வெறுப்பு வரும். என்னடா வாழ்க்கைன்னு இருக்கும். ஆனா நானும் அவரை எப்படியெல்லாம் வெறுப்பேத்த முடியுமோ அப்படியெல்லாம் நடந்துப்பேன். அவரைக் கோப்பட வைக்கிற விஷயமா தேடித் தேடி செய்வேன். அவர் என்னை ராஜேந்திரான்னு கூப்பிடும்போதெல்லாம் ஒரு ரெள்த்திரம் வரும். சில சமயம் அவர் வச்ச பேரையே மாத்தி வச்சுக்க்லாமான்னு யோசிச்சிருக்கேன். இந்திரன்ன்னு பேரு வச்சவரை கடுப்பாக்க இரண்யகசிபு,இர ாவணன், நரகாசுரன் இது மாதிரி அசுரன் பேரா வச்சுக்கலாம்னு.ஒரு நாள் நரகாசுரன்னு பேரை மாத்த முடிவு செஞ்சு விண்ணப்பம் எல்லாம் எழுதிட்டேன். வக்கீலை பார்க்க போகலாம்னு இருந்த அன்னைக்கு இந்த வேலைக்கான இண்டர்வியூ வந்தது. அப்படியே விட்டாச்சு. இப்ப நினைச்சு பார்த்தா சிரிப்பாத்தான் இருக்கு. நான் எங்கப்பா மாதிரி இல்ல. உன்னை ஆசையாத்தான் வளர்த்தேன். என்ன இப்ப படிச்சு முடிச்சு வேலை இல்லாம இருக்கறதைப் பாக்கறப்போ பெத்த மனசுல வருத்தம்.அது கோவமா வருது. உன் மேல நம்பிக்கை இருக்குப்பா. காலம் கடந்துபோகறதுக்கு முன்னாடி ஒரு வேளையை வாங்கி செட்டில் ஆகப் பாரு. நீ எங்களுக்கு சம்பாதிச்சு போடனும்னு நாங்க எதிர்பார்க்கல. உன் எதிர்காலத்துக்குத்தான் எல்லாம்". மூச்சுவிடாமல் பேசிய ராஜேந்திரன் கைகழுவிவிட்டு அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.

பெயர் மாற்றும் படலத்தை கைவிட்ட கிருஷ்ணகுமார் அடுத்த கம்பெனியின் பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தான்.



40 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,

சொந்தக்கதையா?

போட்டின்னு வந்துட்டா எல்லாரும் சிங்கம் மாதிரி கிளம்பறீங்களே! நமக்கு அந்த எண்ணமே சீக்கிரம் வர மாட்டேங்குது!

சொன்னது...

கதை அருமை கப்பி...

Like Father, like son :-)

சொன்னது...

//சொந்தக்கதையா?
//

சொந்தக்கதையெல்லாம் இல்ல தம்பி...நம்ம பேரு கொஞ்சம் அரிதான பெயர் தான்..ஆனா அந்த பேரால அடைந்த பலன்கள் பல..மாத்தற ஐடியாவெல்லாம் இல்ல ;)

சொன்னது...

//கதை அருமை கப்பி...

Like Father, like son :-)

//

அதே அதே ;)

நன்றி வெட்டி!

சொன்னது...

//கப்பி

சிறில் அடுத்த தலைப்புக்கு போய்ட்டாரு. பாக்கலியா?
//

வாங்க நிர்மல்...அவர் வேகமா அடுத்த தலைப்புக்கு போயிட்டாரு..அதுக்காக நாம எழுதினதைப் போடாம இருக்க முடியுமா..உங்க ரேஞ்சுக்கு தினம் ஒரு கதை போட முடியுமா?? மெதுவாத் தான் வரும் :))

'மரபெனும் பார்த்தனீயம்' அப்புறம் இன்னும் எதுவும் படிக்கல..வர்றேன் ;)

சொன்னது...

///Krk Kumar என்று எங்கோ எழுதிவைக்க அதை ஒருவன் கிறுக்குகுமார் என்று படித்துவைக்க, அன்றிலிருந்து இன்று வரை கல்லூரி நண்பர்களுக்கு கிறுக்குகுமார் தான்.

///
sema comedy sense ya unakku

சொன்னது...

படைப்ப லிஸ்ட்ல சேத்துட்டேன். முதல் இரண்டு தலைப்புக்கள் கொஞ்ச இடைவெளியிலேயே தந்தாச்சு. எல்ல தலைப்ப்புக்களிலேயும் எழுதணும்னில்லையே. முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யவும்.

லிஸ்ட் பெருசாகிற வரைக்கும் தொகுக்க்லாம்னு இருக்கிறேன். கொஞ்சபேர் சேந்தா ஒரு கூட்டுப் பதிவா இதச் செய்யலாம். சொல்லுங்க.

கதை நல்லா இருக்கு. கடைசியில அருமையா முடிச்சிருக்கீங்க.

சொன்னது...

//sema comedy sense ya unakku
//

வளரெ நன்னி தல ;)

சொன்னது...

//படைப்ப லிஸ்ட்ல சேத்துட்டேன். முதல் இரண்டு தலைப்புக்கள் கொஞ்ச இடைவெளியிலேயே தந்தாச்சு. எல்ல தலைப்ப்புக்களிலேயும் எழுதணும்னில்லையே. முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யவும்.
//

நான் கதையை ஆரம்பிச்சு ரெண்டு நாளா பாதில நின்னுடுச்சு...இன்னைக்கு அடுத்த தலைப்பு வந்ததும் உக்கார்ந்து முடிச்சேன் ;)


//
லிஸ்ட் பெருசாகிற வரைக்கும் தொகுக்க்லாம்னு இருக்கிறேன். கொஞ்சபேர் சேந்தா ஒரு கூட்டுப் பதிவா இதச் செய்யலாம். சொல்லுங்க.
//

அருமையான யோசனை...செய்யலாமே...

//
கதை நல்லா இருக்கு. கடைசியில அருமையா முடிச்சிருக்கீங்க//

மிக்க நன்றி சிறில்!

சொன்னது...

//நக்கல் நல்லா வருதுங்க உங்களுக்கு...
//

அடடா..நான் சீரியசா சொன்னது கூட நக்கல் ஆயிடுச்சா :(

சொன்னது...

Great story kappi guy.

Hope this wins

சொன்னது...

//Great story kappi guy.

Hope this wins
//

மிக்க நன்றி செல்வன்!

இது போட்டிக்கு எழுதினது இல்லைங்க :)

சொன்னது...

// கப்பி பய said...
//Great story kappi guy.

Hope this wins
//

மிக்க நன்றி செல்வன்!

இது போட்டிக்கு எழுதினது இல்லைங்க :)
//
என்னது இது கப்பி...
எங்க இருந்து வந்துச்சு இந்த துடுக்கு தனம்...

எங்க அண்ணன் சொன்னதுக்கப்பறம் எதிர்த்து பேசற...

அப்படியே தந்தை மேல் வைத்திருந்த வருத்ததிற்கு விடுதலைனு போட்டு போட்டிக்கு அனுப்பு... நம்ம பாத்துக்கலாம் ;)

சொன்னது...

//தெரியாத்தனமாக இவன் தன் பெயரை ஸ்டைலாக எழுதுவதாக நினைத்து Krk Kumar என்று எங்கோ எழுதிவைக்க //

முதலில் வரும் K காஞ்சிபுரம்தானே ?
:-)
(ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மாஆஆஆஆஅ டமாசுக்கு)

சொன்னது...

//என்னது இது கப்பி...
எங்க இருந்து வந்துச்சு இந்த துடுக்கு தனம்...
//

விசாரிச்சு சொல்றேன் வெட்டி ;))

//
எங்க அண்ணன் சொன்னதுக்கப்பறம் எதிர்த்து பேசற...
//

மன்னிச்சுருங்கண்ணா ;)

//
அப்படியே தந்தை மேல் வைத்திருந்த வருத்ததிற்கு விடுதலைனு போட்டு போட்டிக்கு அனுப்பு... நம்ம பாத்துக்கலாம் ;)
//

விடுதலைக்கு இன்னொன்னு எழுதுவோம்..அதுக்கென்ன வெட்டி ;)

சொன்னது...

//முதலில் வரும் K காஞ்சிபுரம்தானே ?
:-)
(ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மாஆஆஆஆஅ டமாசுக்கு)
//

:))

K காஞ்சிபுரத்துக்கு இல்லைன்னு தான் உங்களுக்கே தெரியுமே ;)

சொன்னது...

கொய்யா சுப்பர்டா அம்பி...

வேலையத்தவன்

சொன்னது...

//கொய்யா சுப்பர்டா அம்பி...

வேலையத்தவன் //

அடங்கொக்கமக்கா தாங்க்ஸ்ப்பா வேலையத்தவா!! ;)

சொன்னது...

கப்பி,

உன்னோட சோகக்கதையே படிக்க நல்லவே இருக்குப்பா....

சொன்னது...

//உன்னோட சோகக்கதையே படிக்க நல்லவே இருக்குப்பா....
//

ராயல்..உகுவோட நல்லாயிருக்குன்னு சொல்ற...என்ன விவகாரமோ...எதுக்கும் ஒரு டேங்க்ஸ் போட்டுக்கறேன் ;)

சொன்னது...

//விடுதலைக்கு இன்னொன்னு எழுதுவோம்..அதுக்கென்ன வெட்டி ;)
//
சீக்கிரம் போடுங்கப்பா!!! போட்டி ஒரு விறுவிறுப்பே இல்லாம போயிட்டு இருக்கு ;)

சொன்னது...

//ராயல்..உகுவோட நல்லாயிருக்குன்னு சொல்ற...என்ன விவகாரமோ...எதுக்கும் ஒரு டேங்க்ஸ் போட்டுக்கறேன் ;) //


கப்பி,

உன்னோட உண்மையான பேரை மாத்த இம்பூட்டு கஷ்டப்பட்டதே அழகா கதையா வடிச்சிருக்கேல்லே....

இதிலே எங்கேயும் உ.கு இல்லேப்பா

சொன்னது...

//சீக்கிரம் போடுங்கப்பா!!! போட்டி ஒரு விறுவிறுப்பே இல்லாம போயிட்டு இருக்கு ;)
//

ஏற்கனவே 17 வந்தாச்சு....மக்கள் இன்னும் அடிச்சு ஆட ஆரம்பிக்கல ;)

சொன்னது...

//கப்பி,

உன்னோட உண்மையான பேரை மாத்த இம்பூட்டு கஷ்டப்பட்டதே அழகா கதையா வடிச்சிருக்கேல்லே....
//

பேரை மாத்த கஷ்டப்பட்டேனா...இது எனக்கே தெரியாதே :)))

//
இதிலே எங்கேயும் உ.கு இல்லேப்பா
//
அதான் நேராவே வச்சாச்சே...இதுக்கு என்னை ரெண்டு அடி அடிச்சுட்டு போயிருக்கலாம்...

சொன்னது...

கப்பி,
கிறுக்கு குமார், நறுக்கு பதில் எல்லாம் அருமையான கற்பனை. எழுதுன நடையும் நல்லாருக்கு. கதையில லாஸ்ட்ல ஒரு மெசேஜஸ் ஆஃப் மாண்டிவீடியோவும் இருக்கு.

இம்புட்டு நல்லா எழுதுறியே...நீ ஏன் உன் கதை(சொந்த கதை, சோகக் கதை, சினிமா கதை) எல்லாம் தொகுத்து ஒரு புக் போடக் கூடாது? புனைப்பெயர் நான் தான் முடிவு பண்ணுவேன். கவிஞர் கப்பிநிலவன்.

நல்லாருக்கா?

சொன்னது...

//கப்பி,
கிறுக்கு குமார், நறுக்கு பதில் எல்லாம் அருமையான கற்பனை. எழுதுன நடையும் நல்லாருக்கு. கதையில லாஸ்ட்ல ஒரு மெசேஜஸ் ஆஃப் மாண்டிவீடியோவும் இருக்கு.
//

நன்றி கைப்ஸ்!

//
இம்புட்டு நல்லா எழுதுறியே...நீ ஏன் உன் கதை(சொந்த கதை, சோகக் கதை, சினிமா கதை) எல்லாம் தொகுத்து ஒரு புக் போடக் கூடாது? புனைப்பெயர் நான் தான் முடிவு பண்ணுவேன். கவிஞர் கப்பிநிலவன்.
//

ஏன்யா இந்த கொலைவெறி? அடுத்தவனுக்கு சமாதி கட்டறதுல உங்களூக்கெல்லாம் அம்புட்டு சொகம் :))

சொன்னது...

//நீ ஏன் உன் கதை(சொந்த கதை, சோகக் கதை, சினிமா கதை) எல்லாம் தொகுத்து ஒரு புக் போடக் கூடாது?//
ஓ அப்ப இதெல்லாம் கப்பியோட "சொந்த" கதையா??? முன்னாடி வந்த "இன்றும்" கதை கூட கப்பியோட "சொந்த - சோக" கதையா???

ஏம்பா கப்பி, பேர மாத்த போறீயா???
Procedure, 5000 ஆகும்னு எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கியே அதனால கேட்டேன் ;)

சொன்னது...

//ஓ அப்ப இதெல்லாம் கப்பியோட "சொந்த" கதையா??? முன்னாடி வந்த "இன்றும்" கதை கூட கப்பியோட "சொந்த - சோக" கதையா???
//

வெட்டி..வேணாம்...ஐயாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்...கைப்பு, ராயல் கூட சேர்ந்து நீயும் என் காலை வாராதே

//
ஏம்பா கப்பி, பேர மாத்த போறீயா???
Procedure, 5000 ஆகும்னு எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கியே அதனால கேட்டேன் ;)
//

அது ச்சும்மா கதைக்கு ;)

சொன்னது...

மேலை நாட்டுல கதை எழுதரதுக்கு முன்னாடி ஒரு 5௬ வருஷம் அதைப் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு அப்புறம் தான் கதை எழுதவெ போவாங்களாம்.

நம்ம ஊர்ல என்னடான்னா படிச்சவங்க கூட, ஒரு அறிவாளி [நம்ம கப்பிப்பய தான்!!] இந்த பேர் மாத்தறதை பத்தி விலாவாரியா எழுதினா, உடனே சொந்த அனிபவமான்னு கேட்டு நொந்து நூலாக்கிடறாங்க!

பீப்பிள்ஸ் ஆஃப் த வேஸ்ட் ஆஃப் த இன்டெல்லிஜென்ட்ஸ்![vadivElu style]

நீங்க தளராம எழுதுங்க, கப்பி!

சொன்னது...

//மேலை நாட்டுல கதை எழுதரதுக்கு முன்னாடி ஒரு 5௬ வருஷம் அதைப் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு அப்புறம் தான் கதை எழுதவெ போவாங்களாம்.

நம்ம ஊர்ல என்னடான்னா படிச்சவங்க கூட, ஒரு அறிவாளி [நம்ம கப்பிப்பய தான்!!] இந்த பேர் மாத்தறதை பத்தி விலாவாரியா எழுதினா, உடனே சொந்த அனிபவமான்னு கேட்டு நொந்து நூலாக்கிடறாங்க!

பீப்பிள்ஸ் ஆஃப் த வேஸ்ட் ஆஃப் த இன்டெல்லிஜென்ட்ஸ்![vadivElu style]
//

ஆகா...360 டிகிரிலயும் உகு இருக்கே SK ஐயா கிட்டயிருந்து ஒரு SK (Special Kuthu) :))

//
நீங்க தளராம எழுதுங்க, கப்பி!
//

இது போல் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதை மட்டும் விடறதா இல்ல :)

வருகைக்கு நன்றி எஸ்.கே!

சொன்னது...

//இம்புட்டு நல்லா எழுதுறியே...நீ ஏன் உன் கதை(சொந்த கதை, சோகக் கதை, சினிமா கதை) எல்லாம் தொகுத்து ஒரு புக் போடக் கூடாது?//

அதானே,கவலபடாத கப்பி நான் வெளிலருந்து, உள்ளருந்து, கீழ இருந்து, மேலருந்து, நடுவிலருந்து, எங்க இருந்து வேணாலும் ஆதரவு தரேன்.

/கப்பிநிலவன்/

இதுகூட நல்லாத்தான் இருக்கு.

சொன்னது...

//அதானே,கவலபடாத கப்பி நான் வெளிலருந்து, உள்ளருந்து, கீழ இருந்து, மேலருந்து, நடுவிலருந்து, எங்க இருந்து வேணாலும் ஆதரவு தரேன்.
//

நீ மட்டும்தான் என் காலை வாராம இருக்கன்னு பார்த்தா நீயும் சேர்ந்துட்ட பார்த்தீயா??

//இதுகூட நல்லாத்தான் இருக்கு.
//

கதாநாயகன் தம்பி சொல்லலாம் ;)

சொன்னது...

இப்படியாக அந்த நரகாசுரனுக்கு அப்புறம் இந்த ரெண்டு நரகாசுரனையும் இந்திரனும் கிருஷ்ணனுமா கொன்னுட்டீங்க.. கலியுலக அவதாரமா? :))

சொன்னது...

//இப்படியாக அந்த நரகாசுரனுக்கு அப்புறம் இந்த ரெண்டு நரகாசுரனையும் இந்திரனும் கிருஷ்ணனுமா கொன்னுட்டீங்க.. கலியுலக அவதாரமா? :))
//

வாங்க பொற்கொடி..கலியுகம் அவதாரம்னு ஏதோ சொல்றீங்க..ஒன்னும் புரியல :))

சொன்னது...

kappi guy: kadhai romba nalla ezhudiyirukeenga

சொன்னது...

thanks indianangel.

சொன்னது...

"இத்தனை நாட்களாக கிறுக்கு என்று கூப்பிட்டவர்கள் நரகாசுரனை நருக்கு என்று கூப்பிட்டால்"
when I read these lines, I almost laughed out loud :D
Kathai romba nalla irukku.
vazhthukkal!
Ennakku therinja Krishnakumar i naanga ellam 'Kicha' innu thaan koopiduvom!

Aana intha kathaya paththi onnu sollanum. Did you have any word limit? because, araambicha udaney mudinjittamathiri irukkuthu. Innum viriva ezhuthi irukkalaam :)

சொன்னது...

//Kathai romba nalla irukku.
vazhthukkal!
//

மிக்க நன்றி poornima!

//
Ennakku therinja Krishnakumar i naanga ellam 'Kicha' innu thaan koopiduvom!
//
எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான் ;)

//
Aana intha kathaya paththi onnu sollanum. Did you have any word limit? because, araambicha udaney mudinjittamathiri irukkuthu. Innum viriva ezhuthi irukkalaam :)
//

ஓ! :)

சொன்னது...

கதை ரொம்ப அருமை கப்பி.. ஒரு சின்ன விஷயத்தை..அந்த உணர்வு கலையாமல் சொல்லி இருக்கீங்க.. நல்ல இருக்கு கப்பி

சொன்னது...

//கதை ரொம்ப அருமை கப்பி.. ஒரு சின்ன விஷயத்தை..அந்த உணர்வு கலையாமல் சொல்லி இருக்கீங்க.. நல்ல இருக்கு கப்பி //

Thanks Karthikeyan!