யாருடா நீங்க?!

இந்த ஊர்க்காரங்க எங்களைப் பார்த்து இன்னும் இது ஒன்னு தான் கேட்கல.சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி நேரத்துக்கு ராக்கெட், புஸ்வானம்னு மாத்தி மாத்தி விட்டு தீபாவளி கொண்டாட்டத்துல மாண்டிவிடியோவை கலக்கிப்புட்டோம்ல. இங்க கூட வேலை பார்க்கறவனுங்க தயவுல வெடி விக்கற இடம் தெரிஞ்சு மொத்தமா வாங்கியாச்சு. சனிக்கிழமை பீச் ஓரமா எல்லாரும் ஒன்னுகூடி எல்லாத்தையும் கொளுத்தி கரியாக்கிட்டு வந்தாச்சு. போலிஸ்,ஃப்யர் என்ஜின்னு எவனாவது கூப்பிட்டுட போறாங்கன்னு பயந்துகிட்டே வெடிக்க ஆரம்பிச்சோம்...எவனும் கூப்பிடல..எல்லாம் நல்லவனுங்களா இருக்கானுங்க.நம்ம ஊர்லயே ராத்திரி 10 மணிக்கு மேல வெடிக்கக்கூடாதே, இங்க வெடிக்கலாமான்னு யோசிக்கவே தேவையில்ல..ஏன்னா இந்த ஊர்ல இருக்க புண்ணியவானுங்க சனிக்கிழமையானா தூங்கவே மாட்டானுங்க...

அப்புறம் இரண்டு வாரத்துக்கு முன்ன உருகுவே கல்ச்சுரல் கவுண்டின்னு ஒரு அமைப்பு இசை நிகழ்ச்சி ஒன்னு நடத்தினாங்க. செல்டிக் நடனம், பேக் பைப்பர்ன்னு வாசிச்சு கலக்கிட்டாங்க. அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அதுவும் எங்க நாலு பேருக்காக ஸ்பானிஷ் மட்டுமில்லாம ஆங்கிலத்துல தனி அறிவிப்பெல்லாம் செஞ்சாங்க.இந்த குழுவில இருக்க நாலு பேரும் ஒரே குடும்பத்தினராம். கடைசியா எல்லாரும் சேர்ந்து ட்ரம்ஸ் வாசிச்சாங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு.இந்த வெள்ளைக்கார அம்மா இங்கிலாந்துகாரங்களாம். ஒரே பீட்டர் பாட்டு. ஒரு வார்த்தையும் புரியல. ஆனா இனிமையான குரல். உச்சஸ்தாயில சூப்பரா பாடினாங்க

.

இந்த குழு தான் இங்க ரொம்ப புகழ்பெற்ற குழுவாம். 16 பேர் பேக்பைப்பர், வயலின், செல்டிக் நடனம்ன்னு கலக்கிட்டாங்க.

அடுத்து இங்க இருக்க ப்ரிட்டிஷ் காலேஜ்காரங்க கிரிக்கெட் மேட்ச் விளையாட கூப்பிட்டிருக்காங்க. அங்கயும் போய் நம்ம கொடியை நாட்டிட வேண்டியது தான்.54 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,
தீபாவளி கலக்கலா கொண்டாடியிருக்க...

அப்பறம் நீ பட்டாசு வெடிக்கிற மாதிரி போட்டோவே இல்லை... எதாவது வெடிச்சயா இல்ல நம்ம தல மாதிரி டயலாக் பேசிட்டு சும்மா வேடிக்க பாத்தியா? ;)

//அடுத்து இங்க இருக்க ப்ரிட்டிஷ் காலேஜ்காரங்க கிரிக்கெட் மேட்ச் விளையாட கூப்பிட்டிருக்காங்க. அங்கயும் போய் நம்ம கொடியை நாட்டிட வேண்டியது தான். //
வழக்கம் போல் வெற்றி கொடி நட்டுவிட்டு வா!!!

சொன்னது...

கொடுத்த வச்ச பயலுக... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இங்க ஒன்லி பெருமூச்சு தான்

சொன்னது...

வெயிட்டாதான் கொண்டாடி இருக்கே தீவாளிய!

மாண்டிவிடியோவின் சிங்கமே!
நம் பெருமையை அங்கு நிலை நாட்டிய தங்கமே!!
ஆங்கிலப்பாடலுக்கு அர்த்தம் கேட்டால் பங்கமே!!!


//இந்த வெள்ளைக்கார அம்மா இங்கிலாந்துகாரங்களாம். ஒரே பீட்டர் பாட்டு. ஒரு வார்த்தையும் புரியல. ஆனா இனிமையான குரல். உச்சஸ்தாயில சூப்பரா பாடினாங்க//

இப்படிதான் சமாளிப்புகேசன் போடணும்!

சொன்னது...

கப்பி!
உருகுவேலயும் பட்டாசு போட்டு பட்டையைக் கெளப்பிட்டேன்னு சொல்லு. ஆமா! அந்த மொதப் படத்துல செவப்பு பனியன் போட்டுக்கிட்டு செவப்பா நார்த் இண்டியன் பையன் மாதிரி நிக்கிறது தானே நீயு?

சொன்னது...

கப்பி, அந்த போட்டோல இருக்கிற பொண்ணோட இ-மயில் ஐ-டி இருக்கா

சொன்னது...

---எங்க நாலு பேருக்காக ஸ்பெனிஷ் ---

; ) அட... உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா ; )
- தமிழே தகராறு செய்யும் 'நான்' : )

சொன்னது...

//அப்பறம் நீ பட்டாசு வெடிக்கிற மாதிரி போட்டோவே இல்லை... எதாவது வெடிச்சயா இல்ல நம்ம தல மாதிரி டயலாக் பேசிட்டு சும்மா வேடிக்க பாத்தியா? ;)
//

சொன்னா நம்பனும்..இப்படி க்ராஸ் கொஸ்டின் கேட்டு டென்ஷன் பண்ணக் கூடாது :)


//வழக்கம் போல் வெற்றி கொடி நட்டுவிட்டு வா!!!//

வெற்றி வெட்டி!! வீர வெட்டி!! :))

சொன்னது...

//கொடுத்த வச்ச பயலுக... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இங்க ஒன்லி பெருமூச்சு தான்
//

வாங்க நக்கீரன்...இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா?? நம்ம மாதிரி ஆட்களுக்கு தினம் தினம் தீபாவளி தானே ;)

சொன்னது...

//வெயிட்டாதான் கொண்டாடி இருக்கே தீவாளிய!
//

உங்களை மாதிரி கிராபிக்ஸ் மிரட்டல் பண்ண முடியாது..அதான் வெடி வச்சாச்சு :)

//
மாண்டிவிடியோவின் சிங்கமே!
நம் பெருமையை அங்கு நிலை நாட்டிய தங்கமே!!
ஆங்கிலப்பாடலுக்கு அர்த்தம் கேட்டால் பங்கமே!!!
//

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

//
இப்படிதான் சமாளிப்புகேசன் போடணும்!

//

அப்படி சமாளிப்புகேசன் பண்ணிதான் அங்கயிருந்து எஸ்கேப் ஆனோம் ;)

சொன்னது...

தல,
நல்லா கவனிச்சு இருக்க...

கருப்ப சட்டை போட்டதுதான் கப்பி...

சொன்னது...

கப்பி, வெளிநாட்டு தீபாவளியில உன்னுதுதான் சூப்பர். சாப்பாடு பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லையே?

சொன்னது...

//கப்பி!
உருகுவேலயும் பட்டாசு போட்டு பட்டையைக் கெளப்பிட்டேன்னு சொல்லு. //

ஆமா தல...நீங்க சொன்ன மாதிரி ஜெகஜோதியா கொண்டாடியாச்சு ;)

//
ஆமா! அந்த மொதப் படத்துல செவப்பு பனியன் போட்டுக்கிட்டு செவப்பா நார்த் இண்டியன் பையன் மாதிரி நிக்கிறது தானே நீயு? //


தல..ஒருத்தன் நிக்கறதைப் பார்த்து எப்படி அவன் நார்த் இண்டியன் பையன்னு சொல்லுவ?? அவன் ஈஸ்ட் இண்டியன்..பெங்காலி அவன்...நான் அவனில்லை ;)

சொன்னது...

//கப்பி, அந்த போட்டோல இருக்கிற பொண்ணோட இ-மயில் ஐ-டி இருக்கா

//

தொடரும் வினையூக்கியின் அக்கிரமங்கள்!! சீனியர் இன்னும் பழக்கத்தை மாத்தலியா?? ;))

சொன்னது...

//தொடரும் வினையூக்கியின் அக்கிரமங்கள்!! சீனியர் இன்னும் பழக்கத்தை மாத்தலியா?? ;))
//
தோல்விகள் துரத்தி துரத்தி அடித்தாலும் மாறாது ஹா ஹா ஹா

சொன்னது...

//உங்களை மாதிரி கிராபிக்ஸ் மிரட்டல் பண்ண முடியாது//

கப்பி வொய் ரிவைஞ்சிங்?

சொன்னது...

//கப்பி, வெளிநாட்டு தீபாவளியில உன்னுதுதான் சூப்பர். சாப்பாடு பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லையே? //

கொத்ஸ் நீங்களா இப்படி?

அப்போ மத்தவங்க பதிவெல்லாம் என்ன சொல்லுறது?

ஓஹோ...

என்னது?

சூப்பரோ சூப்பரா!

அதான பாத்தேன்!

சொன்னது...

கப்பி, நாலாவது ஃபோட்டோ சூப்பரப்பு... எல்லா வெடியும் ஒண்ண கொளுத்துன மாதிரி இருக்கு... ;-))

கொஞ்சம் பீச் ஃபோட்டோக்கள் எல்லாம் போடுறது, அப்பப்பா கண்ணுக்கு குளிர்ச்சியா... ஹி...ஹி...ஹி அசடு வழிந்து கொண்டே ;-))

சொன்னது...

//; ) அட... உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா ; )
//

யாராவது ஸ்பானிஷ்ல பேசினா அவங்க பேசறது ஸ்பானிஷ்தான்னு கண்டுபிடிக்கற அளவு தெரியும் பாபா :)


//
- தமிழே தகராறு செய்யும் 'நான்' : ) //

நீங்களுக்குமா?? ;)

சொன்னது...

//தல,
நல்லா கவனிச்சு இருக்க...

கருப்ப சட்டை போட்டதுதான் கப்பி...

//

அடப்பாவிகளா போட்டோல இவன் போட்டிருக்கறது பச்சை கலர் சட்டைய்யா :))

அவன் தான் பொடியன்...அன்னைக்கு ஆசைஆசையாய் வெடிச்சிட்டிருந்தான் ;)


அதுசரி, நான் அன்னைக்கு கருப்பு சட்டை போட்டது உங்களுக்கு எப்படி தெரியும்? ;)

சொன்னது...

//கப்பி, வெளிநாட்டு தீபாவளியில உன்னுதுதான் சூப்பர். //

அப்படியா சொல்றீங்க..அட :)

ஆனா இவனுங்களை விட்டா இங்கயே பொங்கல் பானை வெக்க விட்றுவானுங்க...சீக்கிரம் எஸ்கேப் ஆகனும் :)))


//
சாப்பாடு பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லையே?//

குடும்பத்தோட இருக்கவங்க புண்ணியத்துல எல்லாரும் நல்ல வீட்டு சாப்பாடா சாப்பிடலாம்னு ஒரு கெட்டுகெதர் வைக்க முயற்சி செய்தோம்...ப்ளாப் ஆயிடுச்சு :(

அடுத்த நாள் ஒருத்தர் வீட்டுக்கு போய் சேர்த்துவச்சு கட்டியாச்சு ;)

சொன்னது...

//தோல்விகள் துரத்தி துரத்தி அடித்தாலும் மாறாது ஹா ஹா ஹா //

ம்ம்..நடத்துங்க ;)

சொன்னது...

//கப்பி வொய் ரிவைஞ்சிங்? //

ரிவைஞ்சா?? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருய்யா..போன வாரம் உனக்கு சப்போர்ட் பண்ணி வந்தா என்னையே பஞ்சர் ஆக்கினயே மறந்துடுச்சா?? ;))

சொன்னது...

//கப்பி, நாலாவது ஃபோட்டோ சூப்பரப்பு... எல்லா வெடியும் ஒண்ண கொளுத்துன மாதிரி இருக்கு... ;-))
//

இந்தம்மா எண்ட்ரி கொடுக்க என்ன பில்டப்புங்கறீங்க...எல்லா லைட்டையும் அணைச்சுட்டு திடீர்னு ஒரு வெள்ளை ஃபோகஸ் லைட்டைப் போட்டு இவங்களை நடக்க வச்சு..அப்பப்பா :))

//
கொஞ்சம் பீச் ஃபோட்டோக்கள் எல்லாம் போடுறது, அப்பப்பா கண்ணுக்கு குளிர்ச்சியா...
ஹி...ஹி...ஹி அசடு வழிந்து கொண்டே ;-)) //

இப்பதானே இங்க கோடைக்காலம் ஆரம்பிக்குது...கொஞ்சம் பொறுங்க போட்டுடுவோம் ;)

சொன்னது...

//ரிவைஞ்சா?? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருய்யா..போன வாரம் உனக்கு சப்போர்ட் பண்ணி வந்தா என்னையே பஞ்சர் ஆக்கினயே மறந்துடுச்சா?? ;))
//
அது என்ன மறக்க கூடிய விஷயமா???
அந்த கொடுமையான நிகழ்ச்சி இன்னும் என் கண்ணுலயே இருக்கு ;)

சொன்னது...

//கொத்ஸ் நீங்களா இப்படி?
//

நீங்களா எப்படி???

//
அப்போ மத்தவங்க பதிவெல்லாம் என்ன சொல்லுறது?

ஓஹோ...

என்னது?

சூப்பரோ சூப்பரா!

அதான பாத்தேன்!
//

உன் கிராபிக்ஸ் மிரட்டல் பத்தி தானே கேக்கற?? அதான் ஏற்கனவே சொல்லிட்டோமேப்பா..உன் ஃபோட்டோ சூப்பரோ சூப்பரோ சூப்பர்...தல கூட டாம் ஹான்க்ஸுக்கு பதில் உன்னை நடிக்க கூப்பிட்டிருக்காப்ல...இன்னும் என்ன?? ;))

சொன்னது...

//கருப்ப சட்டை போட்டதுதான் கப்பி...//

முகம் தெளிவாத் தெரியலைன்னாலும் அவுட்லைன் வச்சிப் பாக்கும் போது நிற்பதுவே நடப்பதுவே பாடுன ஹரிஷ் ராகவேந்திரா மாதிரியே இருக்கய்யா கப்பி! அதே மாதிரி குரல்வளமும் இருக்கும்னு நெனக்கிறேன்.
:)

சொன்னது...

//அது என்ன மறக்க கூடிய விஷயமா???
அந்த கொடுமையான நிகழ்ச்சி இன்னும் என் கண்ணுலயே இருக்கு ;)//

கூட இருந்தே குழி பறிச்சுட்டு இப்ப வந்து கொடுமைன்னு ஃபீலிங்கா??? ;)

சொன்னது...

//முகம் தெளிவாத் தெரியலைன்னாலும் அவுட்லைன் வச்சிப் பாக்கும் போது நிற்பதுவே நடப்பதுவே பாடுன ஹரிஷ் ராகவேந்திரா மாதிரியே இருக்கய்யா கப்பி! அதே மாதிரி குரல்வளமும் இருக்கும்னு நெனக்கிறேன்.
:) //

தல..எத்தனை தடவ சொல்றது..போட்டோல நான் இல்ல...ஆனா நீ சொன்ன மத்ததெல்லாம் கரெக்டுன்னே வச்சுக்குவோம் :))))

சொன்னது...

படம் சரியா தெரியல்லியே ராசா ?

சொன்னது...

//படம் சரியா தெரியல்லியே ராசா ?
//

எல்லாம் இருட்டுல எடுத்தது..அட்ஜீஸ் பண்ணிக்குங்க தல ;)

சொன்னது...

//கூட இருந்தே குழி பறிச்சுட்டு இப்ப வந்து கொடுமைன்னு ஃபீலிங்கா??? ;) //

கூட இருந்து குழி பறிச்சனா???
நானா?
எப்ப?
தம்பிக்கு சப்போர்ட் பண்றன்னு நீ வந்து பல்பு வாங்கனா... நான் என்ன பண்ண முடியும்? ;)

சொன்னது...

//அது என்ன மறக்க கூடிய விஷயமா???
அந்த கொடுமையான நிகழ்ச்சி இன்னும் என் கண்ணுலயே இருக்கு ;)//

அடப்பாவமே! அப்புறம் ப்ளாகெல்லாம் எப்படி பாக்குற?
பின்னூடமெல்லாம் எப்படி போடற?
கொஞ்சம் இறக்கி வைக்கப்படாதோ, எம்புட்டு நேரந்தான் கண்ணுக்குள்ளவே வச்சிருக்கறது. :)

சொன்னது...

//தம்பிக்கு சப்போர்ட் பண்றன்னு நீ வந்து பல்பு வாங்கனா... நான் என்ன பண்ண முடியும்? ;) //

அது சரி...என்னத்த சொல்ல :(

சொன்னது...

//அடப்பாவமே! அப்புறம் ப்ளாகெல்லாம் எப்படி பாக்குற?
பின்னூடமெல்லாம் எப்படி போடற?
கொஞ்சம் இறக்கி வைக்கப்படாதோ, எம்புட்டு நேரந்தான் கண்ணுக்குள்ளவே வச்சிருக்கறது. :) //

உதவிக்கு வந்தவனுக்கே ஆப்புடிச்சிட்டு இங்க வந்து எகத்தாளம் பேசரத பாரு... :-)

சொன்னது...

//உதவிக்கு வந்தவனுக்கே ஆப்புடிச்சிட்டு இங்க வந்து எகத்தாளம் பேசரத பாரு... :-) //

அன்னைக்கும் இதேதானேப்பா எனக்கு நடந்தது...மாரல் ஆப் தி ஹிஸ்டரி...தம்பிக்கு ஆதரவு தந்தா ஆப்பு நமக்கு தான் ;)

சொன்னது...

கப்பி,

அந்த அக்கா பேரு என்னா...?? சும்மா GKக்காக தான் கேட்கிறேன், தப்பா நினைச்சிக்காதே!!!

சொன்னது...

//அந்த அக்கா பேரு என்னா...?? சும்மா GKக்காக தான் கேட்கிறேன், தப்பா நினைச்சிக்காதே!!!
//

கோவி கண்ணனுக்காக நீங்க ஏன் கேட்கறீங்க ;))

சொன்னது...

//கோவி கண்ணனுக்காக நீங்க ஏன் கேட்கறீங்க ;)) //

ஆகா... கிளம்பிட்டாய்யா.. கிளம்பிட்டான்!!!! :-)))

சொன்னது...

//ஆகா... கிளம்பிட்டாய்யா.. கிளம்பிட்டான்!!!! :-)))
//

ராயல்..இப்பத்தான் ஆபிஸ் வந்திருக்கேன்..அதுக்குள்ள எங்க கிளம்பறது :D

சொன்னது...

//தம்பிக்கு சப்போர்ட் பண்றன்னு நீ வந்து பல்பு வாங்கனா... நான் என்ன பண்ண முடியும்? ;) //

அப்போ ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்க நீயி! இது இம்மி கூட நல்லா இல்ல! ஒண்ணுமே தெரியாத அப்பாவிய இப்டி கட்டம் கட்டி அடிக்கறது பாவம் இல்லயா?!

சொன்னது...

என்ன கப்பி அடிச்சு ரகள விட்டு இருக்க போல.....

//அந்த அக்கா பேரு என்னா...?? சும்மா GKக்காக தான் கேட்கிறேன், தப்பா நினைச்சிக்காதே!!! //

எந்த அக்காவ பாத்தாலும் பெயரு கேட்பதையே ஒரு தொழிலா வச்சுக்கிட்டு அலையுறீயா நீ ?

சொன்னது...

//என்ன கப்பி அடிச்சு ரகள விட்டு இருக்க போல.....

//

ஆமா..ஆமா ;)

//
எந்த அக்காவ பாத்தாலும் பெயரு கேட்பதையே ஒரு தொழிலா வச்சுக்கிட்டு அலையுறீயா நீ ?
//

அவர் கஷ்டம் அவருக்கு...விடு புலி ;)

சொன்னது...

//எந்த அக்காவ பாத்தாலும் பெயரு கேட்பதையே ஒரு தொழிலா வச்சுக்கிட்டு அலையுறீயா நீ ? //

அடபாவி புலி கவுத்திட்டியே... நான் கேட்கமே இருந்தாலும் கட்டாயமே நீ கேட்டு இருப்பே.... :-))

நான் மொதல்லே கேட்டதினலே இப்போ நீ கபட நாடகம் ஆடுறே.... :-)

சொன்னது...

//அடபாவி புலி கவுத்திட்டியே... நான் கேட்கமே இருந்தாலும் கட்டாயமே நீ கேட்டு இருப்பே.... :-))

நான் மொதல்லே கேட்டதினலே இப்போ நீ கபட நாடகம் ஆடுறே.... :-) //


:))

விடுங்க ராயல்..இதுக்கெல்லாம் ஃபீல் பண்ற பேமிலியா நாம??

சொன்னது...

//அப்போ ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்க நீயி! இது இம்மி கூட நல்லா இல்ல! ஒண்ணுமே தெரியாத அப்பாவிய இப்டி கட்டம் கட்டி அடிக்கறது பாவம் இல்லயா?! //
தம்பி,
நான் எதுவும் சொல்றதுக்கில்ல...
நம்ம ஊரா போயிட்ட.. அதனால நான் உன்னைய விட்டுடறேன்...

கப்பிக்கு நீ பண்ணதுக்கு அவர்தான் சொல்லனும் ;)

சொன்னது...

இப்பதான் கப்பி ட்ராவிடுகூட பேசினேன்..
உன்னய ரொம்ப விசாரிச்சாரு.
50 போட முடியாம அவுட் ஆக்குனதுக்கு வெட்டிதான் காரணமாம் சுப்ரமணியசாமி போன் பண்ணி சொல்லிட்டாராம்.

நான் 50 போடலன்னாலும் பரவால்ல் கப்பி 50 போடறத என் கண்ணால பாத்துட்டு இந்த போட்டிய விட்டு நம்ம அணி போகணும்னு விரும்பரேன்னு சொன்னாருபா.

உம்மேல ரொம்ப பாசமாகீறாரு..

சொன்னது...

//நான் 50 போடலன்னாலும் பரவால்ல் கப்பி 50 போடறத என் கண்ணால பாத்துட்டு இந்த போட்டிய விட்டு நம்ம அணி போகணும்னு விரும்பரேன்னு சொன்னாருபா.

உம்மேல ரொம்ப பாசமாகீறாரு..//

அப்ப்பபா...என்ன பாசம்..என்ன பாசம்...

//50 போட முடியாம அவுட் ஆக்குனதுக்கு வெட்டிதான் காரணமாம் சுப்ரமணியசாமி போன் பண்ணி சொல்லிட்டாராம்.//

வெட்டி இதுமாதிரி பல சதிவேலைகளில் இறங்கியிருப்பதாக நம்பத்தகாத சதுராரங்கள் தெரிவிக்குதுப்பா...

சொன்னது...

Kalakiteenga kappi

சொன்னது...

//Kalakiteenga kappi //

வாங்க ராஜ்! ;)

சொன்னது...

கப்பி,

இன்னிக்கு நான்தான் 50 போடணுமின்னு எனக்காவே வச்சிருக்கே பாரு! உன்னையே நினைச்சு எனக்கு கண்கலங்குது கண்மணியே!!!!!

சொன்னது...

டியர் ராம்!

அம்பது போடுவதில் நீங்கள் வல்லவராமே!

எப்போதுமே 49 ரன்னில் அவுட் ஆகும் பழக்கம் கொண்ட திராவிடருக்கு
தாங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பரிசோதனை முறையாக உங்களை பொறுப்பில் அமர்த்தி பார்க்கணும். ஒரு வாரம் லீவு போட முடியுமா?

சொன்னது...

//டியர் ராம்!

அம்பது போடுவதில் நீங்கள் வல்லவராமே!

எப்போதுமே 49 ரன்னில் அவுட் ஆகும் பழக்கம் கொண்ட திராவிடருக்கு
தாங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பரிசோதனை முறையாக உங்களை பொறுப்பில் அமர்த்தி பார்க்கணும். ஒரு வாரம் லீவு போட முடியுமா?

//

ராயல் புகழ் சாப்பல் வரைக்கும் பரவியாச்சா?? ;)

சொன்னது...

//டியர் ராம்!

அம்பது போடுவதில் நீங்கள் வல்லவராமே!//

அடடே சாப்பலா... நீங்களா உங்களை ஆளு வச்சு அடிக்க கங்குலி தேடுறாரு, அதுவுமில்லமே ஒழுங்கா பயற்சி கொடுக்கமே இங்கே வந்து கப்பிதனமா கமெண்ட் போட்டு வச்சிருக்கீங்க...!!!

//எப்போதுமே 49 ரன்னில் அவுட் ஆகும் பழக்கம் கொண்ட திராவிடருக்கு
தாங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பரிசோதனை முறையாக உங்களை பொறுப்பில் அமர்த்தி பார்க்கணும். ஒரு வாரம் லீவு போட முடியுமா? //

விளங்கிறுமய்யா... நீ கொடுத்த பயிற்சிலே யாவது 49 போட்டார். ஆனா கொடுத்தா நான் கணக்கு பாடத்திலே வாங்குன மார்க்தான் எடுப்பாரு!!!!

சொன்னது...

//ராயல் புகழ் சாப்பல் வரைக்கும் பரவியாச்சா?? ;) //

ஏலே கப்பி,

இன்னிக்கு என்னையே வச்சு காமெடி,கீமடி பண்ணலையே... சரி போ என்னவேணுமின்னு பண்ணு, அந்தக்கா பேரை சொல்லீட்டு எதுவும் செய்... ;-)