காத்திருந்த காதலி - 10

காத்திருந்த காதலி - 1: வடகரை வேலன்
காத்திருந்த காதலி - 2: பரிசல்காரன்
காத்திருந்த காதலி - 3: வெயிலான்
காத்திருந்த காதலி - 4: கிரி
காத்திருந்த காதலி - 5: ஜெகதீசன்
காத்திருந்த காதலி - 6: டிபிசிடி
காத்திருந்த காதலி - 7: கயல்விழி முத்துலெட்சுமி
காத்திருந்த காதலி - 8: மை ஃபிரண்ட்
காத்திருந்த காதலி - 9: கோபிநாத்

சங்கர் சொன்னதன்படி அவன் அறைக்கு வந்த ராமச்சந்திரன் அங்கு அவர் மகளைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்தார். நாயைக் கண்டு பயந்து நின்றுகொண்டிருந்த தன் மகளை அரவணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"கையில என்னம்மா டைரி? யாரோட டைரி?"

"கார்த்திக்கோட டைரிப்பா. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. கார்த்திக் என்னை லவ் பண்ணியிருக்கான்பா"

ராமச்சந்திரனின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அவர் நினைத்தது போலவே அத்தனையும் நடந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்தே சங்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும், கார்த்திக் இவ்வாறு செய்ய என்ன காரணம் இருக்க முடியுமென்ற குழப்பத்திலே தான் வந்தார். தொழிலில் இருவருக்கும் பொறாமை வருவதற்கான வாய்ப்பேயில்லை. சில நாட்களாக கார்த்திக் தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்று சங்கர் ஓரிரு சமயங்களில் சொல்லியிருந்தாலும் அதற்கான வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்றே எண்ணியிருந்தார். ஆனாலும் அந்த காரணம் தெரியாமல் ஷூவுக்குள் சிறிய கல் ஒன்று சிக்கியது போல அவர் மனம் உறுத்திக்கொண்டிருந்தது. இப்போது கார்த்திக் தன்னைக் காதலித்ததாக கெளரி சொன்னதும் அவருக்கு எல்லாம் புரிந்தது.

"தண்ணி கொண்டு வாம்மா. உக்காந்து பேசலாம்" என்றபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார். கெளரி அந்த டைரியை டேபிளில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். ராமச்சந்திரன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தார்.

***

கார்த்திக் கெளரிக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். மூன்று வருடக் காதலை இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். சங்கரிடம் கூட கெளரியைப் பற்றிப் பேசியதில்லை. தன் காதலை கெளரியிடம் சொல்லி அவள் சம்மதித்ததும் இருவரும் சேர்ந்து சங்கரிடம் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கல்லூரிக்குப் பிறகும் தொடர்ந்த கெளரியுடனான நட்பு காதலாக மாறிய தருணம் எப்போதென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தான். தன் காதலைச் சொன்னதும் கெளரி என்ன சொல்வாளோ நட்பை முறித்துச் சென்றுவிடுவாளோ என்ற அச்சமும் அவனை அவ்வப்போது கலங்கச் செய்தது. என்ன ஆனாலும் சரியென்று வாழ்த்து அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தான் எழுதிய கவிதையைச் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தபோது சங்கரும் கெளரியும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர்.

"கார்த்திக், சங்கர் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?"

"ஐ லவ் யூ சொல்லிட்டான் டா..அதுவும் ஒரு பயம் இல்லாம மட்டு மரியாதையில்லாம" வெட்கப்புன்னகையுடன் சங்கரின் தோளில் சாய்ந்தாள் கெளரி.

"மச்சான் நான் மொதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் இவ ஒத்துக்கிட்டதும் ரெண்டும் பேரும் சேர்ந்து வந்து சொன்னா உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலடா" என்றான் சங்கர்.

இதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை. இதயத்தில் இமயமலையையே ஏற்றிவைத்தது போல் பாரமாக இருந்தது. "இவளிடம் இத்தனை வருடங்களாக இருவரும் ஒரே மாதிரிதானே பழகினோம். சங்கரை விட எனக்கு என்ன குறைச்சல். அவனிடம் எப்படி அவளால் காதலில் விழ முடிந்தது. இத்தனைக்கும் அவனைவிட அவளுக்காக நான் தானே எத்தனையோ செய்திருக்கிறேன். கல்லூரி முடிந்த அன்று ஃபேர்வெல் பார்ட்டியில் கூட 'நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டா" என்றாளே. பாதகி" என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.

"என்னடா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா" சங்கர் தோளில் தட்டினான்.

"இல்லடா. அதெல்லாம் ஒன்னுமில்ல. கேட்டதும் சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல. கங்கிராட்ஸ்டா. ஹேய் கெளரி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா"

"இன்னும் இல்லடா. இனிதான் அதைப்பத்தியெல்லாம் யோசிக்கனும்"

"எப்ப கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேர் வீட்டுலயும் வீட்டுல பேசிப்பார்ப்போம்.ஒத்துக்கலைனா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" உள்ளுக்குள் இடி விழுந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாய் பேச முயன்றுகொண்டிருந்தான் கார்த்திக்.

"மொதல்ல நம்ம கம்பெனி நல்ல நிலைமைக்கு வரட்டும்டா.அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்" என்ற சங்கரை இடைமறித்தாள் கெளரி

"கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?"

"கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல"

"ஏன்? காதல் மேலே வெறுப்பா?"

"இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்"

"அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?"

"இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்.."


செத்துப்போன தன் காதலை மீண்டும் உயிர்விப்பது எப்படி என்று அன்றைக்கே திட்டம் தீட்ட ஆரம்பித்தான் கார்த்திக்.

***

கார்த்திக் அப்பாவையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சங்கர் மயக்கம் தெளிந்தவுடன் அவனிடம் பேசவேண்டும். இத்தனை நாட்களாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும். இத்தனை வருடங்கள் தொடர்ந்த நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி சிகரெட் புகையை ஆழமாக உள்ளே இழுத்தான். அப்போது அவனை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.

***


இக்கதையின் அடுத்த பாகத்தை தொடர 'சிக்மா(Sigma) சித்தர்' கேஆரெஸ் அண்ணாச்சி அழைக்கிறேன்.



11 பின்னூட்டங்கள்:

சொன்னது...

:))
கதை நல்லாப் போகுது....

சங்கர் சில இடங்களில் சம்பத் ஆகிவிட்டார்... :P

சொன்னது...

ஷூக்குள் விழுந்த கல்மாதிரியா.. சே எப்படி இப்படி எல்லாம்.. வித்தியாச்மா இருக்கு.
கதை நல்லா இருக்கு..

சொன்னது...

ஜெகதீசன்

ஒரு படப்பிடிப்புல..ச்சே படபடப்புல மாத்தி எழுதிட்டேன்..இப்ப சரி பண்ணிட்டேன் ஹி ஹி :))

நன்றி தல!!


முத்துலெட்சுமி

எல்லாம் சுட்டதுதான் :))

நன்னி!! :))

சொன்னது...

கடமையை நிறைவாக செய்திருக்கிறாய் கப்பி ;)

சொன்னது...

எப்படி கவணிக்காம விட்டேன்னு தெரியிலயே.

நல்ல உரைநடையில் கதை சொல்லும் பாங்கு.

/ஷூக்குள் விழுந்த கல்மாதிரியா/

ரசிச்சேன், சுப்ரமண்ய ராஜூ இதுபோல தினவாழ்வின் நடைமுறை உவமை சொல்லுவாரு.

சொன்னது...

இந்த கதைய நான் தொடர்ந்து படிச்சிட்டு வரேன்..நல்ல எதார்த்தமான உவமை எல்லாம் தரீங்க..வாழ்த்துக்கள் :))

சொன்னது...

adappaavi makka.. epdi da ellaa partaiyum padichu thodara vera pottirukka... periya aal thaanda neeye... :)))

Innum ithu maathiri etthana thodar vara pogutho.. theriyalaiye :(((

சொன்னது...

Naan innum vaasikala... ellaarum ezuthi mudichathukkappuramthaan moththamaa vaasikanum :))

சொன்னது...

கோபி அண்ணாச்சி

//கடமையை நிறைவாக செய்திருக்கிறாய் கப்பி ;)//

பண்றதெல்லாம் பண்ணிட்டு :))



வடகரை வேலன்

_/\_

சொன்னது...

ரம்யா ரமணி

நன்றிங்க!! :))


ஜி

// epdi da ellaa partaiyum padichu thodara vera pottirukka... //

சபையில வச்சு இதெல்லாம் கேட்காத...எதுனாலும் தனியா பேசி தீர்த்துக்கலாம் :))

சொன்னது...

நல்லா போகுது...:))))