நிரடும் நிரலிகள்

"ஹாய் ஐயாம் ஷெரில்"

"ஹாய் ஜெயக்குமார் கந்தசாமி. ஜெய்"

"நைஸ் டு மீட் யூ ஜெய்"

இங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஷெரில். எல்லா அமெரிக்க பெண்களைப் போன்றே சராசரிக்கு சற்றே அதிகமான உயரம். ஒல்லியான தேகம். கரிய தலைமுடி. புன்னகை தவழும் உதடுகள். துள்ளலான கண்கள். மொத்தத்தில் அழகி. என்னுடைய பிராஜெக்ட்டில் இருப்பாளோ என்ற ஆர்வத்தில் கேட்டதில் காண்டிராக்டராக ஏதோ ஒரு ஆதிகால அப்பிளிகேஷனைக் கட்டிமேய்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். "இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.


கிளையண்ட் அலுவலகத்தில் நிறைய இந்தியர்களே வேலைப் பார்த்தாலும் யாரும் அவ்வளவு நட்புடன் பழகவில்லை. எங்கள் கம்பெனி உள்ளே புகுந்ததில் காண்டிராக்டர்களாக வேலை செய்யும் பலருக்கு வேலை பறிக்கப்படும் அபாயம். முகம் கொடுத்தும் பேசாத நிலை. இந்த அழகில் நான் இவர்களிடம் கற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் டீமிற்கும் சொல்லிக் கொடுத்து, அதன்பின் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்ய வேண்டும்.

முதல்நாள் எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த எனக்கு ஷெரில் தானே முன்வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினாள். அன்று மதியம் கேண்டினில் இருவரும் உணவு உண்டபோது எங்கள் கம்பெனி பற்றியும் என் பிராஜெக்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களுக்கும் அறிமுகம் கொடுத்தாள். அவளுடைய அப்ளிகேஷன் பற்றியும் விவரித்தாள்.

ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் எல்லா ஊரிலும் எல்லாம் எளிதாக கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொன்னவனைத் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த சிறிய நகரில் எங்கள் கிளையண்ட் அலுவலகம் ஒன்றுதான் பெரியது. மற்றபடி பெரிய அலுவலகங்களோ வணிக நிறுவனங்களோ கிடையாது. நான் ஆன்லைனில் பதிவு செய்திருந்த அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தாலும் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரப் பயணம். ஓரிரு முறை டாக்ஸியில் சென்றுவந்ததைத் தெரிந்துகொண்ட ஷெரில் அவளே கடைகளுக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவளே உதவிகள் செய்தாள். ஷெரில் வேலையிலும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். இந்த ஊரில் இப்படி ஒரு நல்லவளா என்ற ஆச்சரியம் உண்டானது.


"ஜெய், உங்க ஊரைப் பத்தி சொல்லேன்"

"சொர்க்கம்"

"உங்க ஊர்க்காரங்க எல்லாரும் கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்றீங்க"

"அதான் உண்மை..அதனால தான்"

"இண்டியா பத்தி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். நிறைய வீடியோஸ் பார்த்திருக்கேன். நல்ல அழகான பெண்கள். ஒரு முறை உங்க ஊருக்கு கூட்டிட்டு போவியா?"

"கண்டிப்பா. ஒரு முறையாவது நீ நேரில் பார்க்கனும். உனக்கு ரொம்ப பிடிச்சுப் போகும்"

"நீ பேசற மொழி பேர் என்ன சொன்ன?"

"தமிழ்"

"டாமிள்.யெஸ்.அதுவும் கத்துக்கொடு" என்று சிரித்தாள்.

வேலையினிடையிலும் அரட்டை நேரங்களிலும் இந்தியா பற்றி, மொழிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வாள். அமெரிக்க அரசியல், விளையாட்டு என அரட்டை தொடரும். எங்கள் நட்பும் வளர்ந்தது.

"ஷெரில், எனக்கு கார் ஒன்னு வாங்கனும். ஆன்லைன்ல பார்த்துட்டிருக்கேன். இந்த ஊரில நல்ல டீலர் சொல்லேன்"

"என் பாய் பிரெண்ட் டாம் ஒரு கார் விக்கப் போறான். நிஸ்ஸான் அல்டிமா. நீ என்ன கார் பார்க்கற? ஸ்போர்ட்ஸ் கார் வாங்கப் போறயா?"

"அதெல்லாம் வேண்டாம். செடான் தான் பார்க்கறேன். உன் பாய் பிரண்ட் காரே வாங்கிடலாம்"

அதிக அலைச்சலில்லாமல் குறைந்த விலையிலேயே கார் அமைந்தது. அதற்கு டிரீட் கொடுக்க அவளையும் அவள் பாய் ஃபிரெண்டையும் டின்னருக்கு இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். காரத்தில் கண்கள் கலங்கினாலும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.

"ஜெய் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல நானும் டாமும் பைக்கிங் போவோம்ன்னு.வார இறுதியில் பக்கத்துல இருக்க மலைல சைக்கிள் ஓட்டுவோம். நீயும் வருவியா?"

"கண்டிப்பா ஷெரில். அடுத்த வாரமே சைக்கிள் வாங்கிடறேன். மலைல ஓட்ட நீங்க தான் கத்துத் தரணும்"

"ஷ்யூர். உனக்கும் ரொம்ப பிடிச்சுப் போகும் பாரு. அடுத்த வாரமே ஆரம்பிப்போம். இங்க இருக்க டிராக் எனக்கு ரொம்ப பிடிச்சது. சமயத்துல டாம் வரலைனாலும் தனியா நானே கிளம்பிடுவேன். நீயும் வந்தா எனக்கு கம்பெனி கிடைக்கும்" என்று சிரித்தாள்.


ப்ராஜெக்ட் வேலையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் கடின உழைப்புக்குப் பலனாக புதிதாக ப்ராஜெக்ட்களும் கிடைத்தன. கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து அதில் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி கிளையண்டுக்கு சில ஆலோசனைகள் கொடுத்தோம். அதிலும் சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எங்களுடைய அணி வளர ஆரம்பித்தது. கிளையண்டிடம் இருந்து சிறிது சிறிதாக வேலைகள் வாங்கி ஆஃப்ஷோரை வளர்த்தோம்.


"ஹேய் ஷெரில். உன்னோட பவர்பில்டர் அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த நான் கொடுத்த ப்ரோபசலை ஜோ அப்ரூவ் பண்ணிட்டார். ஆஃப்ஷோர் டீம்ல புதுசா 4 பேர் சேர்த்து இந்த வீக்கே மைக்ரேஷன் வேலை ஆரம்பிக்கறோம்"

"தெரியும் ஜெய். ஜோ கூட இப்ப தான் பேசிட்டு வரேன்"

"எனக்கு இது பெரிய அச்சீவ்மெண்ட். என் ஹெட் இப்பத்தான் போன்ல பாராட்டினார். சந்தோஷமா இருக்கேன். நைட் டின்னர் என் டிரீட். நீ ஃப்ரீ தானே?"

"இல்ல ஜெய். நீ என்னோட அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த ஆரம்பிச்ச பிறகு எனக்கு என்ன வேலை. எனக்கு தெரிஞ்சது பவர்பில்டர் தானே. இன்னைக்கு எனக்கு இங்க கடைசி நாள். அதுக்குத்தான் ஜோ கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன். இந்த ஊர்ல என் ப்ரொபைலுக்கு வேலை கிடைக்காது. அதனால ஊருக்கு போய் அப்பா அம்மாவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நியூ ஜெர்சில ஏதாவது வேலை பிடிக்கனும். இடையில் நானும் ஒரு புது டெக்னாலஜி ஏதாவது கத்துக்கனும். ஈவ்னிங் டாம் என்னை பிக்கப் பண்ண வருவான். என்ன நாம ப்ளான் பண்ண சைக்கிள் ட்ரிப் தான் போக முடியாது. அடுத்த முறை மீட் பண்ணும்போது கண்டிப்பா போவோம். கீப் இன் டச் ஜெய். வில் மிஸ் திஸ் நைஸ் லிட்டில் டவுன் அண்ட் வில் மிஸ் யூ." என்று கூறியபடி கைகொடுத்து கிளம்பிச் சென்றாள்.

நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.31 பின்னூட்டங்கள்:

சொன்னது...

டச்சிங்!!

கதையோடு ஒன்றிப்போக வைத்தது உங்கள் எழுத்து!!

சொன்னது...

'ரயில் சிநேகம்' போல் சில நட்புகளை வாழ்வில் சந்திக்கும் யதார்த்ததை, மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!

சொன்னது...

கப்பி வர வர உங்க கதைகள் மேருகேறிக்கொண்டே இருக்கிறது...
எளிமையான சுவாரஸ்யமான நடை கொள்ளைகொள்கிறது....
வாழ்த்துக்கள்.... :)))

சொன்னது...

நல்ல கதை,

One Man's food is another man's poison என்பதை நிரூபிக்கிறது.

சொன்னது...

கப்பி அண்ணே, கதை கலக்கல்!

சொன்னது...

ennedaa onsite experiences-e pottu arukkuraan-nu nenechen.

But the story picked up speed and the end was really touching!

God bless that girl with a better job (if this was a real incident)

சொன்னது...

ஆள் ஆளுக்கு கிளப்பறீங்க சூப்பர், இது கதையா இருந்தாலும் நிறைய அமெரிக்க கம்பெனிகளில் நடக்கும் நிஜம், நம்ம ஆளுங்க கத்துகிற மாதிரி அவளோ சீக்கிரம் அமெரிகர்கள் புது டெக்னாலஜி கத்துக்க விருப்பம் காட்ட மாட்டாங்க...

சொன்னது...

Good... :)

சொன்னது...

class

சொன்னது...

நல்லா சுவரஸ்யமா எழுதி இருக்கீங்க கப்பி!

//இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.//
எல்லாருக்கும் இதே பிரச்சனை தான் போல! இதுகெல்லாம் எங்கயோ மச்சம் இருக்கணும்னு சொல்லுவாங்க;)

//நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.//
இருக்காதா பின்ன? இருந்த ஒரே நல்ல ஃபிகருக்கும் இப்படி ஆப்பு வச்சு அனுப்பிட்டீங்களே;) இதெல்லாம் நமக்கு பழகி போச்சு!

சொன்னது...

திவ்யா

நன்றிங் :)நவீன் ப்ரகாஷ்

வாங்க அண்ணாச்சி..எம்புட்டு நாளாச்சு :))

நன்றி! :)

சொன்னது...

வடகரை வேலன்

நன்றி!மதிகெட்டான்

நன்றி!


அனானி அன்பரே


//God bless that girl with a better job (if this was a real incident). //

கதை கற்பனைதாங்க..

ஆனா இது மாதிரி நிறைய நடந்துட்டுதான் இருக்கு!

நன்றி!

சொன்னது...

ஸ்யாம்

// அமெரிகர்கள் புது டெக்னாலஜி கத்துக்க விருப்பம் காட்ட மாட்டாங்க.../

உண்மைதான் அண்ணாச்சி..இங்க வந்து ரொம்ப வருசமா பொட்டி தட்டற நம்மாட்கள் சிலரும் அப்படித்தான் இருக்காங்க

நன்றி :)


இராம்

நன்னிண்ணே :))

சொன்னது...

ஜோவின்

கிளாஸ்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொன்ன? :))

டாங்கிஸ் மாப்பி!


சத்யா//எல்லாருக்கும் இதே பிரச்சனை தான் போல! //


சொக்கா..நமக்கு இல்ல நமக்கு இல்ல :)))


நன்றி அண்ணாத்த! :)

சொன்னது...

:)))

vazakkampola kalakkitta maappi...

சொன்னது...

கதை சூப்பர் :-)

சொன்னது...

As usual Kappi rocks :-)

சொன்னது...

நிசமாவே நல்லா எழுதியிருக்கீங்க. ஷெரில் மாதிரி எத்தனையோ பேர் இங்கே:-‍( அவுட்சோர்சிங்கின் அந்தப்பக்கம்.

சொன்னது...

எப்படி இப்படி எல்லாம்..நல்லா சொன்னீங்க..கதையாவே உணர பண்ணமுடியல..நாம் சில நேரத்துல பார்க்கும் எதார்த்தம்

சொன்னது...

ஜி

டாங்க்ஸ் மக்கா :))

வெட்டி

//As usual Kappi rocks :-)//

என்னது என் தலைல கல்லைத் தூக்கி போடனுமா :))

சொன்னது...

கெக்கேபிக்குணி

நன்றிங்க!


ரம்யா ரமணி

வாங்க! நன்றி!

சொன்னது...

அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்!

சொன்னது...

சமயத்துல நம்ம நல்லா perform பண்ற மாதிரி நெனைச்சுட்டு ஏதாவது செய்ய போக,அதுவே அதிக பிரசங்கி தனமா மாறிடும்.....இந்த நாயகனுக்கும் அதே நிலைமை தான்னு நெனைக்குறேன்...

நல்லா கதை...பலருடைய வாழ்கையில் உண்மையில் நடந்திருக்கும் இது....

வாழ்த்துக்கள்!!

சொன்னது...

லதானந்த்

நன்றி!


தமிழினி

நன்றி!

சொன்னது...

//Divya said...
'ரயில் சிநேகம்' போல் சில நட்புகளை வாழ்வில் சந்திக்கும் யதார்த்ததை, மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!
/

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))

நல்லா இருக்குங்க :)

சொன்னது...

சொந்த செலவுல சூனியமா ?! ;-) என்ன காப்பி நீங்க கூட ஒரு புது மைக்ரேய்சன் ப்ரஜெக்ட் பிடிச்சத உங்க மேனேஜெர் சொன்னாரே ..

சொன்னது...

ஆயில்யன்

நன்றிண்ணா :))


யாத்ரீகன்

அப்படியா..இதை அவர் இன்னும் என்கிட்டயே சொல்லலயே அண்ணாச்சி :))

சொன்னது...

சூப்பர் :):):)

சொன்னது...

rapp

நன்றி!

சொன்னது...

கதை சூப்பருங்க
என்ன டச்சிங்...
கலக்கீட்டீங்க தல

சொன்னது...

அதிஷா

நன்றி தல!!