?! - திண்ணை, குசேலன் & இன்ன பிற

நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ. தலைவர்,நயன்தாரா, பி.வாசு,வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ஒரு காட்சி. காட்சியோ வசனங்களோ நினைவில் இல்லை. அந்த காட்சியில் பசுபதி இல்லை. பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.

குசேலன் பாட்டு கேட்டாச்சா? ஜீ.வி. பிரகாஷிடம் எதிர்பார்த்ததை விடவே பாடல்கள் நன்றாக இருக்கின்றன. சில பாடல்கள் ஏற்கனவே கேட்டதுபோல் இருந்தாலும் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன. 4/5.

பாடல்கள் ராகா-வில் இங்க இருக்கு

***

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் எங்கப்பா திண்ணைல உட்கார்ந்துகிட்டு தாத்தா பாட்டியோட சண்டை போடாம வந்தது கிடையாது.'என்னை மறந்துட்டல்ல'ன்னு கையைப் புடிச்சபடி தாத்தா கேட்டது, எங்க வீட்டு திண்ணைல நாப்பது வருஷமா இருந்த போஸ்ட் ஆபிஸு, அதுல கொஞ்சம் கையாடல் பண்ண சித்தப்பு, கடைசி அஞ்சு வருஷம் திண்ணைலயே கழிச்ச கொள்ளுப் பாட்டி, திண்ணைல தூங்கும்போது என் கால் மேல ஏறிப்போன கட்டுவிரியன், கடிச்ச தேளு, ஊருல அரசமரத்துல இறங்கி வீட்டுக்கு போறதுக்குள்ள ஊர்ல இருக்க எல்லாரையும் அவங்கவங்க வீட்டு திண்ணைலயே பார்த்து விசாரிச்சுடறது..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...

இப்ப ஒரு மொக்கை..

அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை. அப்ப திண்ணைல வச்சு நான் செய்த பிசினஸ் டீல் பற்றி பின்னாளில் எனக்கு சொல்லப்பட்ட வெர்ஷன் இது. ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. குழந்தை அழுததால(அட இதுவும் நான் தான்) அம்மாவோட ஒரு செயினை மாட்டி விட்டிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு வந்ததும் எங்கப்பாரு அவர் நண்பரோட எங்க தெருக்கோடியில இருந்த ஓட்டலுக்கு காபி குடிக்க கிளம்பினாராம். நான் அழுதுட்டே அவர் பின்னாடி வந்ததால திண்ணைல உக்கார விட்டுட்டு எங்கம்மாவுக்கு குரல் விட்டுட்டு போயிட்டாராம். எங்கம்மா திண்ணைய விட்டு எங்கே போகப்போறான்னு விட்டுட்டாங்களாம்.

அப்ப 'சொப்பு அண்ணா' கேரக்டர் எண்ட்ரி. அவரு என்கிட்ட நாற்காலி கால் தேயாம இருக்க போடற ப்ளாஸ்டிக் குப்பியைக் கொடுத்துட்டு செயினைக் கேட்டிருக்கார். அப்ப எங்க வீட்டுல ஒரு இரும்பு நாற்காலி இருந்தது. அதுல குப்பி இருந்ததா இல்லையா எனத் தெரியாது. இருந்தாலும் வீட்டுக்குத் தேவைப்படற பொருளா இருக்கேன்னு நானும் செயினைக் கிழட்டிக் கொடுத்துட்டு பண்டமாற்று முறையில் குப்பியை வாங்கிட்டேன். அவரும் கிளம்பி போயிட்டார்.

நான் உள்ள போய் எங்கம்மாகிட்ட "சொப்பு அண்ணா கொடுத்தாரு"ன்னு சொல்லி அந்த குப்பியைக் கொடுத்திருக்கேன். அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன். என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.


***

திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!

***

ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது



***

த*****ம் படம் பற்றி எழுத மாட்டேன்னு அசின், மல்லிகா ஷெராவத் மேல சத்தியம் பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் சத்தியத்தைக் காப்பாத்திட்டிருக்கேன்.

***

இந்த பாட்டு பாருங்க. 'மலையாளி' என்ற இசைக்குழு. தமிழ் பாட்டு மாதிரியே இருக்கு. செம கலக்கல்.



***


இந்த மாத ?! தத்துவம்

"We don’t see things as they are, we see them as we are"



24 பின்னூட்டங்கள்:

சொன்னது...

\\என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.\\

நம்பிட்டோம்;))

சொன்னது...

"?!"

:))

சொன்னது...

ஸ்டார் போட்டு எழுதினாலும்.. தசாவதாரத்துக்கு தனியா பாராக்ராபும் கட்டம் பிரிச்சுப்போட்டதால அந்த படத்தைப்பத்தி எழுதிட்டதா கணக்கில் எடுத்துக்கிட்டாச்சு.. :))
அப்பாடா கடைசியில் நான் மட்டும் தான் பதிவே போடல்ன்னு ஆகப்போது

சொன்னது...

//திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!
//
சூப்பரப்பு :-)

மின்னல் அழகே மின்னும் அழகே... நான் சொக்கி போயி ஒரு பதிவா போட்டு ஒரு மாசம் ஆயிடுத்து.

சொன்னது...

:))

சொன்னது...

//திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!//

எப்படி? விளக்கம் தேவை?

சொன்னது...

\\Divya said...
\\என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.\\

நம்பிட்டோம்;))
\\

ரிப்பீட்டு :)

\\அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன்.\\

அட பாவமே இப்படி ஒரு சின்ன கொழந்தைய (????) ஏமாத்திடாங்களே !!

சொன்னது...

//நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ//
நயன்தாராவையே நெனச்சிட்டு படுத்தா இப்படி தான்;)

//அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன்//
கப்பி என் கிட்டயும் ரெண்டு குப்பி இருக்கு. உங்க கிட்ட இப்போ ஏதாச்சும் செயின் இருக்கா? இருந்தா ரெண்டு பக்கா பிசினஸ் டீல் முடிச்சிடுவோம்.

//திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?//
இல்லையே. அது வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்க தானே அந்த காலத்தில் கண்டு பிடித்தது?

சொன்னது...

;-))

சொன்னது...

திவ்யா

வாங்க :))


முத்துலெட்சுமி

நான் இப்ப வரைக்கும் படத்தோட பெயரை எந்த பதிவிலோ பின்னூட்டத்திலோ கூட எழுதியதில்லை...அதனால இதெல்ல்லாம் செல்லாது..நானும் ஆட்டையில இருக்கேன் :)))

சொன்னது...

உதய்

ஒரு மாசம் முன்னமே போட்டாச்சா?? நானும் இதை ரொம்ப நாள் முன்ன கேட்டிருக்கேன்..ரெண்டு நாள் முன்ன திடீர்னு ஞாபகம் வந்து மனசுல ஓடிட்டிருக்கு :))

நன்றி!


இராமண்ணே

:))

சொன்னது...

கைப்புள்ள

சொன்னதுதான்..ஊருக்கு வந்ததும் கூட்டிட்டுப் போறேன்...நீங்க பார்த்து சொல்லுங்க :)

அப்படியே ஏற்கனவே கேட்ட சில கொசுறு கேள்விகள்:

1. திண்ணையில் உட்கார்பவர்கள் யார்? திண்ணைக்கு கீழே தெருவில் நிற்பவர்கள் யார்?

2. அவர்கள் திண்ணையைத் தாண்டி வீட்டிற்குள் வர முடியுமா? திண்ணை தடுப்புச் சுவரா?

3. நெல்/உர மூட்டை ஏற்றும் நேரத்தைத் தவிர இவர்களால் திண்ணையில் ஏறி நிற்கவாவது முடியுமா?

4. வயதில் குறைந்த ஆண் வந்தாலும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெண் எழுந்து நிற்பதற்கான காரணம்?

சொன்னது...

ரம்யா ரமணி

//
அட பாவமே இப்படி ஒரு சின்ன கொழந்தைய (????) ஏமாத்திடாங்களே !!//

படுபாதக உலகமுங்க இது :))

Sathiya

//
நயன்தாராவையே நெனச்சிட்டு படுத்தா இப்படி தான்;)
//

அட தலைவரை நெனச்சிட்டு படுத்தேன்..நம்புங்க பாஸ் :)))


//கப்பி என் கிட்டயும் ரெண்டு குப்பி இருக்கு. உங்க கிட்ட இப்போ ஏதாச்சும் செயின் இருக்கா? இருந்தா ரெண்டு பக்கா பிசினஸ் டீல் முடிச்சிடுவோம்.//

அவ்வ்வ்...இப்படி ஒரு சோக்கதையைக் கேட்டபிறகும் ஆப்பா :)))


//
இல்லையே. அது வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்க தானே அந்த காலத்தில் கண்டு பிடித்தது?//

நம்ம ஊர்ல ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்...ஃபினிஷிங் சரியில்லையே!


நன்றி!

சொன்னது...

அந்த சொப்பு அண்ணா அப்புறம் என்ன ஆனாருன்னு சொல்லலையே பா!! :P

சொன்னது...

//பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.//

ஒரு வேளை இது அடுத்த படமா இருக்குமோ ;)

//பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.//
சின்ன வயசுலேவா? ;)

சொன்னது...

//அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை.//

இப்ப நாயகனு வர படத்துல நாயகன் யாருனு தெரியுமில்ல கப்பி ;)

சொன்னது...

//வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்/

அச்சச்சோ!

இவ்ளோ அப்பாவியாவா வளர்ந்துக்கிட்டே வாழ்ந்திருந்திருக்கீங்க!

அய்யோ பாவம்!

:)))))))))

சொன்னது...

/ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது//

செல்லாது செல்லாது (சிட்னி சங்கத்து தலயின் குரலில்...!)

இந்த மாதிரி நிறைய இனிப்பையே இனிப்புக்கு பதிலா கொடுக்ககூடாது பதிவு போட்டோ தீரணும்!

சொன்னது...

சிவிஆர்

அவருக்கென்ன நம்ம கைராசில இப்ப கோடீஸ்வரர் ஆகியிருப்பாரு :))

வெட்டி

//
ஒரு வேளை இது அடுத்த படமா இருக்குமோ ;)//

அப்படிங்கறீங்க?: ))


//சின்ன வயசுலேவா? ;)//

ஆமா சின்ன வயசுலயே அப்படி ஏமாளியா இருந்திருக்கேன் :))


//
இப்ப நாயகனு வர படத்துல நாயகன் யாருனு தெரியுமில்ல கப்பி ;)//

அவருக்கு டல்லாசுப்பட்டில ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாச்சு அண்ணாச்சி :))


ஆயில்யன்

//செல்லாது செல்லாது (சிட்னி சங்கத்து தலயின் குரலில்...!)

இந்த மாதிரி நிறைய இனிப்பையே இனிப்புக்கு பதிலா கொடுக்ககூடாது பதிவு போட்டோ தீரணும்!//

நாட்டாம...தீர்ப்ப மாத்தி சொல்லுங்க :))

சொன்னது...

குப்பிக்கு பண்டமாற்றாய்...மலர்ந்த நினைவுகள் அருமை:).

//..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...//

அதைத்தான் செய்திருக்கிறேன். நேரம் கிட்டுகையில் வந்து பாருங்கள்!

http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html

சொன்னது...

//அட தலைவரை நெனச்சிட்டு படுத்தேன்..நம்புங்க பாஸ் :)))//
நம்பிட்டேன் கப்பி;) நான் கூட பில்லா பார்த்துட்டு ஒரு வாரமா அஜித்த மட்டுமே நெனச்சிட்டு இருந்தேன்:))

சொன்னது...

:))))

நயனும் வாந்தாங்களா?? அப்படியே என்னுடைய கனவுக்கும் கொஞ்சம் வர சொல்லிருக்கலாம்ல... ;))

சொன்னது...

ராமலஷ்மி

நன்றி!

உங்க திண்ணை பதிவு அருமை!

சத்யா

//நம்பிட்டேன் கப்பி;) நான் கூட பில்லா பார்த்துட்டு ஒரு வாரமா அஜித்த மட்டுமே நெனச்சிட்டு இருந்தேன்:))//

நீங்களுமா :))


ஜி

அடுத்தவாட்டி கண்டிப்பா சொல்றேன் மாப்பி :))

சொன்னது...

ராசா அடுத்து நீ தான்

http://gopinath-walker.blogspot.com/2008/07/9.html

காத்திருந்த காதலி: பாகம் 9