சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)

இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள். சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள். ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.


கீழே அப்படத்தில் வரும் ஒரு பாடல் - Keep Your Mind Wide Open
பாடியவர் இத்திரைப்படத்தில் லெஸ்லியாக நடித்த அன்னா சோஃபியா ராப் (Anna Sophia Robb)




11 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நானும் பார்க்கலாமேன இந்தச் சீடியை வாங்கினேன்.. முதல் டிஸ்க் பார்த்துவிட்டு இரண்டாம் டிஸ்க் பேட்டால் ஏரர் என வந்தது. திருட்டு காப்பி என்பதால் கொடுத்து மாற்ற முடியவில்லை... இந்தப் படம் வந்து ஒரு வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அதே சமயத்தில் தீ கிங் ஃபைடர்ஸ் எனும் தாய்லாந்து படமும் வெளியானது... இரண்டு சீடிகளையும் ஒன்றாக தான் வாங்கினேன். இந்தப் படமும் சூப்பராக இருக்கும்..

சொன்னது...

குறிச்சிக்கிட்டோம் பாத்துடறோம்..

(யூ ட்யூப் ஆங்கிலப்பாட்டா.. சபரி உனக்கு போட்டியா இந்த பைய்யா ஆரம்பிச்சிட்டாங்கடா..)

சொன்னது...

Keep your Mind Open To See All Possibilities - Key to Success இல்லயா?

நல்ல படம் பரிந்துரைத்ததிற்கு நன்றி கப்பி:)

சொன்னது...

அட..... சூப்பர் மக்கா... இந்த படம் நண்பன் ஒருத்தங்கிட்ட இருந்தது... நானும் ஏதோ ஒரு படம்னு ஃப்ரீயா விட்டுட்டேன்.... நாளைக்கு ஒரு காட்சிய போட்டுற வேண்டியதுதான் :)))

சொன்னது...

\அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள். சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள்.\\


படத்தை பார்க்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது உங்கள் பகிர்வு!!!

சொன்னது...

கப்பி அண்ணாச்சி,

எனக்கு ரொம்பவும் பிடித்த படம் இது.

தமிழில் இது போன்ற படமெல்லாம் எடுக்கவேமாட்டார்களா என்று வருத்தப்படவைக்கும் படங்களின் வரிசையில் Bridge to Terabithia படமும் உண்டு.

My take - http://blog.mohandoss.com/2007/02/bridge-to-teribithia.html

சொன்னது...

நோட் பண்ணியாச்சி ;))

சொன்னது...

விக்னேஷ்வரன்

இரண்டாவது டிஸ்க் திருட்டி சிடி வாங்கியாவது பார்த்துடுங்க :))

நன்றி!!

கயல்விழி முத்துலெட்சுமி

கண்டிப்பா பாருங்கக்கா! சபரிக்கு போட்டியா..அவ்வ்.. அவரோட போட்டி போட முடியுமா :))

சொன்னது...

ரம்யா ரமணி

_/\_ :)


ஜி

என்னது ஏதோ படம்னு பார்க்காம விட்டுட்டியா..மகனே அடுத்த வாரத்துக்குள்ள பார்த்து வை :))


திவ்யா

//படத்தை பார்க்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது உங்கள் பகிர்வு!!!//

அப்படிங்கறீங்க? :))
கண்டிப்பா பாருங்க!!

சொன்னது...

மோகன்தாஸ்

வாங்க அண்ணாச்சி!!

//தமிழில் இது போன்ற படமெல்லாம் எடுக்கவேமாட்டார்களா //

ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு பேராசை இருக்கப்படாது :))

விரிவா அருமையான அறிமுகம் கொடுத்திருக்கீங்க அண்ணாச்சி! :)


கோபிநாத்

//நோட் பண்ணியாச்சி ;))//

இதுவரை பண்ணதுல ஒரு நாப்பது பக்க நோட்டு வந்திருக்காது? :)

சொன்னது...

Borgata Hotel Casino & Spa - JTM Hub
Located within The Water Club Casino & Spa, this resort offers 공주 출장샵 an unparalleled travel 태백 출장샵 experience in the heart 계룡 출장샵 of Atlantic 광주광역 출장샵 City. Borgata Hotel Casino 영주 출장안마 & Spa is a