The Last King of Scotland

இரண்டு காரணங்களுக்காக இன்னும் சில நாட்களுக்கு இந்த திரைப்படத்தை மறக்க முடியாது. ஒன்று ஃபாரஸ்ட் வைட்டேகரின்(Forrest Whitaker) நடிப்பு. இரண்டாவது திரையரங்குக்கு சென்றபோது நேரவிருந்த விபத்து. எதிரில் வந்த மாநகரப் பேருந்தை கவனிக்காமல் ஒரு காரை ஓவர்டேக் செய்ய முயன்று நூலிழையில் காருக்கும் பேருந்துக்கும் இடையில் வண்டியை சொருகி உயிர் தப்பினோம். இல்லையெனில் அந்த புத்தம்புதிய பேருந்துக்கு முதல் போணி நாங்களாகத்தான் இருந்திருப்போம் :)

எழுபதுகளில் உகாண்டாவில் கொடுங்கோல் ஆட்சி நடத்திய இடி அமீன் குறித்த திரைப்படம் தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லான்ட்(The Last King of Scotland). உண்மை சம்பவங்களுடன் கற்பனை கதாபாத்திரங்களை இணைத்து இடி அமீனைப் குறித்தும் அன்றைய உகாண்டா குறித்தும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் கதைசொல்லியாக லாரன்ஸ் காரிகன் என்ற கற்பனை கதாபாத்திரம்.ஸ்காட்லாண்டில் மருத்துவப் படிப்பு முடித்ததும் புது அனுபங்களுக்காக உகாண்டாவிற்கு செல்வதில் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கிராமத்தில் பணிபுரியும் ஆங்கிலேய மருத்துவருக்கு உதவியாளராக வேலையில் சேர்கிறார். அந்த காலகட்டத்தில் தான் இடி அமீன் முந்தைய அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியமைக்கிறார். தெருவெங்கும் மக்கள் கூடி நின்று பெரும் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் இடி அமீனுக்கு பெரும் வரவேற்பளிக்கின்றனர். இடி அமீன் உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு செல்லும் காரிகன் காரிகன் இடி அமீனீன் மேடைப் பேச்சால் ஈர்க்கப்படுகிறார்.

பின் ஒரு சிறிய விபத்தில் அமீனுக்கு சிகிச்சை அளிக்கும் காரிகன் அமீனுடன் நெருக்கமாகிறார். காரிகனின் மருத்துவத் திறமையாலும் நேர்மையான பேச்சாலும் ஈர்க்கப்படும் அமீன் அவனுக்கு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் தன் மருத்துவ ஆலோசகராகவும் உகாண்டா அரசின் மருத்துவ துறை ஆலோசகராகவும் நியமிக்கிறார். இருவருக்கிடையேயான நட்பு பலப்படுகிறது. பல நெருக்கடியான நிலையில் காரிகனின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார் இடி அமீன்.
நம் அன்புக்குரியவர்கள் தவறு செய்யும்போது அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இடி அமீன் செய்துவரும் கொடுமைகள் குறித்து ஆங்கிலேய அதிகாரிகள் கூறும்போதெல்லாம் காரிகன் அதை நம்ப மறுக்கிறார். இடி அமீன் உகாண்டாவின் வளர்ச்சிக்கும் ஒன்றினைந்த ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்காகவுமே பாடுபடுவதாக அவர்களிடம் சண்டையிடுகிறார்.
இடையில் காரிகன் செய்யும் சிறு தவறினால் அமைச்சர் ஒருவர் இடி அமீனால் கொல்லப்பட அவரின் சுயரூபம் வெளிப்படுகிறது. இடி அமீன் உகாண்டாவிலிருந்து வெளிநாட்டினர் அனைவரையும் வெளியேற்றுகிறார். கார்கன் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இறுதியில் கார்கன் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை உண்மை சம்பவங்களைக் கோர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
வைட்டேகர் இடி அமீனை நம் கண் முன் நிறுத்துகிறார். அவருடைய பாடி லேங்குவேஜும் பேசும் விதமும் அட்டகாசம். அவருடைய முந்தைய படங்களில் பெரும்பாலும் அடக்கி வாசித்திருப்பார் அல்லது அடக்கி வாசிக்க வேண்டிய கதாபாத்திரங்களாகவே இருக்கும்(உதா:Panic Room). இந்த படத்தில் மிரட்டியிருக்கிறார். முக்கால்வாசி படம் வரை இடி அமீனை நல்லவரைப் போல் தோன்ற வைத்து இறுதிக் காட்சிகளில் உறையவைக்கும் திரைக்கதை வைட்டேகரின் நடிப்பால் பலம்பெறுகிறது.
காரிகனாக நடித்துள்ள ஜேம்ஸ்(James McAvoy) படத்தின் முதல்பாதியில் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ருசிக்கத்துடிக்கும்போதும் பின்னர் அமீனைப் பற்றி தெரிந்ததும் உயிர் பயத்தில் உகாண்டாவில் இருந்து தப்பிக்க தவிப்பதுமாக வைட்டேகருக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
காரிகன் உகாண்டாவிற்கு வரும் ஆரம்ப காட்சிகளில் பின்னணியில் வரும் ஆப்பிரிக்க பழங்குடி இசை தாளம் போட வைக்கிறது. உகாண்டாவின் கிராமப்புறத்தை இயற்கை ஒளியில் காட்டும் ஒளிப்பதிவு இறுதிக்காட்சிகளில் இரத்தத்தின் குரூரத்தை குறைத்தே காட்டுகிறது. உடலைப் புண்ணாக்கும் ஆப்பிரிக்க சம்பிரதாயங்களைக் மாண்டேஜ் காட்சிகளாக காட்டும் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
3 லட்சம் மக்களைக் கொன்று குவித்த இடி அமீனின் குரூரத்தை படம் முழுக்க காட்டாமல் குறைவான காட்சிகளிலேயே முகத்திலறைவது போல் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு விதத்தில் படத்தை சிறப்படையச் செய்தாலும் இடி அமீனின் கொடுமைகளை முழுதாக எடுத்துச் சொல்லவில்லையோ எனத் தோன்றியது.
ஆள் அரவமற்ற இரவு நேர அண்ணா சாலையில் திரும்பி வரும்போது மனதில் அர்த்தமற்ற ஒருவித அச்சமும், அதே நேரம் 'நாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம்' என்ற எண்ணமும் ஒருங்கே தோன்றியது.16 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//
ஆள் அரவமற்ற இரவு நேர அண்ணா சாலையில் திரும்பி வரும்போது மனதில் அர்த்தமற்ற ஒருவித அச்சமும், அதே நேரம் 'நாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம்' என்ற எண்ணமும் ஒருங்கே தோன்றிய
//

Aathuu unnmai Kappi

சொன்னது...

பாக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது...

சொன்னது...

>> லாரன்ஸ் காரிகன்
i guess this isnt a fictious character..

சொன்னது...

//நம் அன்புக்குரியவர்கள் தவறு செய்யும்போது அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.//

இந்த வியாதிதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூலமே

இந்த படம் பார்க்கல... ஆனாலும் அந்த கடைசி Para ஒரு முத்து..

சொன்னது...

வருகைக்கு நன்றி நெல்லை காந்த் :)


//பாக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது...//

மின்னல்
நல்ல படம்..கண்டிப்பா பாரு செல்லம்.. :)

சொன்னது...

//i guess this isnt a fictious character.. //

யாத்திரீகன்

லாரன்ஸ் காரிகன் கற்பனை கதாபாத்திரம் தான்..உகாண்டாவில் இடி அமீனுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட Bob Astles என்ற ஆங்கிலேயரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் :)

சொன்னது...

நன்றி ppattian! :)

சொன்னது...

தவறவிட்ட படம் கப்பி :(
பர்சூட் ஆஃப் ஹேப்பின்ஸ் ம் இந்த படமும் ஒண்ணா போட்டிருந்தானுங்க எதுக்கு போறதுன்னு குழம்பி டாஸ் போட்டதில அந்த படம் ஜெயிச்சி அதுக்கு போயிட்டேன்..

நல்ல விமர்சனம்யா இந்த பாதுகாப்புணர்வு எனக்கும் நிறைய படங்கள பாத்துட்டு வரும்.எந்தெந்த படம்ன்னு ஒரு பதிவே போடலாம்

சொன்னது...

பீட்டர் கப்பி.

ஹாலிவ்வுட் படங்களின் தரத்தை பிரித்து மேயும் கப்பி நீ இன்றுமுதல்
ஹாலிசுப்புடுகப்பி...

ஹாலிசுப்புடுகப்பி உங்கள் சேவை மேல் மேல் தொடரட்டும்.

சொன்னது...

//தவறவிட்ட படம் கப்பி :(
பர்சூட் ஆஃப் ஹேப்பின்ஸ் ம் இந்த படமும் ஒண்ணா போட்டிருந்தானுங்க எதுக்கு போறதுன்னு குழம்பி டாஸ் போட்டதில அந்த படம் ஜெயிச்சி அதுக்கு போயிட்டேன்..
//

அது அருமையான படமாச்சே!! இப்ப என்ன நேரம் கிடைக்கும்போது திருட்டு விசிடில பார்த்துடுங்க :))

//
நல்ல விமர்சனம்யா இந்த பாதுகாப்புணர்வு எனக்கும் நிறைய படங்கள பாத்துட்டு வரும்.எந்தெந்த படம்ன்னு ஒரு பதிவே போடலாம்
//

உண்மை தான் அய்யனார். அதுக்கு ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.

நன்றி :)

சொன்னது...

//ஹாலிசுப்புடுகப்பி உங்கள் சேவை மேல் மேல் தொடரட்டும். //

தென்னாட்டு ஸ்பீல்பெர்க்கே சொல்லிட்டப்புறம் மறுப்பேது? :))

சொன்னது...

கப்பி,

நல்ல விமர்சனம்... DVD வாங்கி இந்த வாரம் பார்த்துருவோம்... :))

சொன்னது...

//ஹாலிசுப்புடுகப்பி உங்கள் சேவை மேல் மேல் தொடரட்டும். //

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. :)))

//தென்னாட்டு ஸ்பீல்பெர்க்கே சொல்லிட்டப்புறம் மறுப்பேது? :))//

இதுக்கும் ரீப்பிட்டு'ன்னு சொல்லனுமா??? ;-)

சொன்னது...

இடிஅமீனால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் சம்பாதித்த சொத்தை யெல்லாம் விட்டு விட்டு வெறும் கையோடும், உடம்பில் காயங்களோடும் திரும்பும் காட்சி 2 வருடத்துக்கு முன்னர் 4 சேனலில் காட்டினார்கள். படம் பார்க்கும் ஆவல் வந்துருச்சு. நாளைக்கே வருவேன், படம் பார்த்துட்டு

சொன்னது...

நன்றி ராயல்! கண்டிப்பா பாருங்க :)

//ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. :)))
//

அது சரி :))

//இதுக்கும் ரீப்பிட்டு'ன்னு சொல்லனுமா??? ;-) //

பின்ன?

சொன்னது...

//இடிஅமீனால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் சம்பாதித்த சொத்தை யெல்லாம் விட்டு விட்டு வெறும் கையோடும், உடம்பில் காயங்களோடும் திரும்பும் காட்சி 2 வருடத்துக்கு முன்னர் 4 சேனலில் காட்டினார்கள். படம் பார்க்கும் ஆவல் வந்துருச்சு. நாளைக்கே வருவேன், படம் பார்த்துட்டு //

ஆமாங்க இளா.. இந்த படத்திலும் வெளிநாட்டினரை விரட்டியடிப்பதைக் காட்டுவார்கள். குடும்பம் குடும்பமாக உகாண்டாவை விட்டு விரட்டப்படுவார்கள். படத்தில் இந்தியரின் தையல் கடையில் சில காட்சிகள் உண்டு

பார்த்துட்டு வாங்க :)