இதெல்லாம் பெருமையா?

பாஸ்டன் பாலா நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்களை பட்டியலிட அழைத்திருக்கிறார். சிறு வயதில் கின்னஸ் சாதனைகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தொடர்ந்து தலைகீழாக நிற்க முயன்றதையும் வீட்டு வாசலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததையும் அப்பா தடுத்திருக்காவிட்டால் அதை இங்கே பட்டியலிட்டிருக்கலாம். 12 வயதில் தெரு டீமிற்காக கிரிக்கெட் பால் மேட்சில் முதன்முதலாக களமிறங்கியபோது டெண்டுல்கரை விட சிறு வயதில் இந்திய அணியில் இடம்பெறும் கனவு மெய்ப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. அப்படி அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தெரு கிரிக்கெட்டோடு நின்றுவிட்டது.

"இத்தனை நாளாக எழுதிக்கொண்டிருப்பதே பெருமை தான்", "பாபா கூப்பிட்டதே பெருமைதான்"[இரண்டுமே உண்மைதானே :D] என்று வழக்கமான ஜல்லி அடித்தால் எழுதும்போதே பேக்ஸ்பேஸ் பட்டனை விரல்கள் தேடுகின்றன.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெருமைபட்டுக் கொள்ளும் அல்ப மனம்தான். ஆனால் "இதெல்லாம் பெருமையா? கடமைடா" என மனசாட்சி குரல் கொடுத்து கால்களை தரைக்கு கொண்டுவந்துவிடுகிறது. மனசாட்சி அமைதியாய் இருக்கும் சமயங்களில் கண்கள் அக்கம்பக்கம் பார்த்து மனசாட்சியின் வேலையை செய்துவிடுகின்றன. நம்மை பற்றி அடுத்தவர் சொல்லும் பெருமையான விஷயங்களை ஆட்டோகிராப் நோட்டிலும் ஆர்க்குட் டெஸ்டிமோனியல்களிலும் தேடினால் எல்லாம் உள்குத்து மேட்டராக இருக்கும். :))

எதையெல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறோம் என யோசித்ததில் பட்டென நினைவுக்கு வந்தவைகளில் சில கீழே:

1. பள்ளியில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் முதலாக வந்ததை விடவும் "நல்லா படிக்கிறான். ஆனா ரொம்ப திமிர். எதிர்த்து எதிர்த்து பேசறான்" என பள்ளி முதல்வர் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது தான் பெருமையாக இருக்கிறது. மனதில் பட்டதை நேராக சொல்லிவிடுவது நமக்கு சரியென பட்டாலும் பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் "அதற்காகவெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது" என எதுவாக இருந்தாலும் மழுப்பாமல் நேருக்கு நேர் சொல்லிவிடுவதை பெருமையாகவே கருதுகிறேன்.

2. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே இரண்டாம் வருடம் படிக்கும் ஊர்க்கார நண்பனை சந்திக்க தனியாக இரண்டாம் ஆண்டிற்கான பிளாக்கில் அவன் அறைக்கு சென்றேன். அறை முழுதும் இருட்டு. கம்ப்யூட்டரில் "Dumb and Dumberer" படம் ஓடிக்கொண்டிருந்தது. திரை வெளிச்சத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் அருகில் அமர்ந்தேன். படம் முடிந்து அறைக்கதவைத் திறந்தால் உள்ளே கிட்டத்தட்ட இருபது சீனியர்கள். "டேய் ஃபர்ஸ்ட் இயராடா நீ" என ஒருவன் கேட்க அதற்குள் என் ஊர்ஸ் புண்ணியத்தில் ராகிங்கிலிருந்து தப்பியது பெரிய சாதனை. ஆனால் அதற்கு அடுத்த வாரமே மொத்தமாக மாட்டினோம் :))

"நீயெல்லாம் எதுக்குய்யா இங்க வந்தே? காஞ்சிபுரத்துல மீனாட்சி காலேஜ்லயே படிக்க வேண்டியதுதானே" என முதல் வருடமே முதல்வரிடம் பாராட்டை வாங்கினேன். இரண்டாம் ஆண்டில் துறைக்கு கூடுதல் உதவி செயலாளர், மூன்றாம் ஆண்டு உதவி செயலாளர், இறுதி ஆண்டில் செயலாளர் என ரொம்பப் பொறுப்பாக பொறுப்புகளையெல்லாம் வாங்கிக்கொண்டு டிபார்ட்மெண்ட் அசோசியேஷனுக்கு வேலை பார்த்தது அப்போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது யோசித்தால் சில சமயம் காமெடியாக இருக்கிறது. ["காலேஜ்லயே பசங்கள்ல நீ தாண்டா டாப்பர்" என நண்பர்கள் ஏற்றிவிடுவார்கள். ஒரு முறைகூட முழுதாக மூன்று மணி நேரம் பரிட்சை எழுதியிருக்காத நான் பையன்களில் டாப்பர்.எனக்கு முன்னால் நிறைய மாணவிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் சோப்பு போட்டு மார்க் எடுத்தவர்கள் :)))].

3. அரை மணி நேர அவகாசத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துவிட்டு ஒன்றரை மணி நேரம் டெக்னிகலாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கதையையும் பொன்னியின் செல்வனையும் சுஜாதா சிறுகதைகளளயும் தமிழ் இலக்கிய சூழல் பற்றியும்[அப்படின்னா என்னன்னு இப்ப வரைக்கும் தெரியாது :D] பேசிவிட்டு வேலை வாங்கியது சாதனை. "சும்மா கூப்பிட்டு கதையடிச்சு கலாய்க்கறானுங்கடா. அடுத்த கம்பெனி எப்போ வரும்" என புலம்பியபடி ஹாஸ்டலில் இங்கிலிபீசு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது செலக்ட் ஆகிவிட்டதாக சொன்னார்கள். "பார்த்தவுடனே அவிங்களுக்கு அண்ணனோட அருமை தெரிஞ்சிருக்கும்டா மாப்ள" என பெருமைபட்டுக் கொண்டேன்.அந்த ஆணியை இன்னும் பிடுங்கிக்கொண்டிருப்பது சோதனை :))

4. எப்போதும் ஊர்சுற்ற தயாராகவே இருக்கும் மனநிலை. செல்லும் இடம் குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போரடித்தால் எங்காவது கிளம்பும் ஒத்த அலைவரிசையுடைய நண்பர்கள். டிபன் சாப்பிட ஐம்பது கிலோமீட்டர் பைக்கில் சென்ற அனுபவங்கள் உண்டு. எங்கு போகிறோம் என்பது முக்கியமல்ல. எங்காவது பயணம் செய்வதே எல்லாருக்கும் குறிக்கோளாக இருக்கும். உடலும் எந்த சொகுசையும் எதிர்பார்க்காது. நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்வது தற்பெருமை கொள்ள இன்னுமொரு காரணம்.

5. "நட்புக்கு கூட கற்புகள் உண்டு" என மொக்கையான வரிகள் வந்தாலும் "ஜல்சா பண்ணுங்கடா" பாட்டை திரும்பத் திரும்ப கேட்பதற்கு காரணம் நட்புக்கு மரியாதை :). சுற்றமும் நட்பும் நாடுவது பெருமை. "ஊருக்கு வந்தா வீட்டுலயே இருக்க மாட்டான். பிரெண்ட் வீட்டுக்கு எங்கயாவது போயிடுவான்" என அப்பா பக்கத்து வீட்டுக்காரருடன் கதைப்பதைக் கேட்டுக்கொண்டே வண்டியெடுத்துக்கொண்டு நண்பன் வீட்டிற்கு கிளம்பிச்செல்வது சுகம். சிறுசிறு சண்டைகள்[like III 'C' vs III'A' ;)] தவிர யாருடனும் இதுவரை பெரிதாகப் பகைத்துக்கொண்டதில்லை. என்னை நம்பி பலர் அவர்களின் சொந்த விஷயங்களில் அறிவுரை கேட்பதும் புலம்புவதும் அவர்களைத் தேற்றுவதிலும் ஒரு சிறிய மன நிறைவு. நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது பெருமைதானே :)

6. சகிப்புத்தன்மை என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. அலைவரிசை ஒத்துவராதவராய் இருந்தாலும் அவரிடம் முகம் சுளிக்காமல் பழக முடியும். அதை மற்றவரிடம் சொல்லியும் பெருமைபட்டுக்கொள்வேன். "எப்படிடா இவனுங்க கூடல்லாம் வேலை பாக்கற?" என என் அலுவலக நண்பர்களைத் தற்செயலாக சந்தித்த நண்பன் கேட்டபோது என் அம்மா நினைவுக்கு வந்தாள். எல்லோருக்கும் நல்லவராய் இருக்க யாராலும் முடியாது என்று சொல்வது பொய்யென அவளைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

7. "அவனா ரொம்ப நல்ல பையனாச்சே. அமைதியான பையன்" என சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் வாங்கிவைத்திருப்பது பெருமை. எதுவாக இருந்தாலும் ஏரியாவுக்கு வெளியே எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு நல்ல பையனாக ஏரியாவுக்குள் வருவேன். கல்லூரியில் படிக்கும்போது அப்பா சொன்ன டயலாக் " நீ மதுரைல ராத்திரி ஃபுல்லா கூட சுத்திட்டிருப்ப. அதையெல்லாம் நான் வந்து பார்க்க போறதில்ல. ஆனா ஊருக்கு வந்தா ஒழுங்கா பத்து மணிக்கு வீடு வந்து சேரு". அதை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்க ஏரியாவுக்கு போனா நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல பையன் :)

8. மூன்று வயதில் இரண்டு சவரன் செயினுக்கு பதில் பிளாஸ்டிக் குப்பியை பண்டமாற்று முறையில் மாற்றி 'சொப்பு அண்ணனுக்கு' பெருத்த லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன். இப்போதும் யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவேன். "வெளுத்ததெல்லாம் பால், பொங்குவதெல்லாம் பீர்" என்று சொல்லும் கோஷ்டி. பலமுறை பிளாஷ்பேக்கில் நண்பர்கள் கதை சொல்லும்போதுதான் உண்மையில் நடந்ததே தெரியும். நல்ல முகங்களை மட்டும் பார்த்து ஆறாவது முகத்தை பார்க்காததால் பலமுறை நொந்துபோயிருக்கிறேன். இது போல் பலமுறை பல்பு வாங்கியிருந்தாலும் "பேசிக்காவே நான் நல்லவன்டா" என பெருமைபட்டுக்கொள்ளலாம்.

பெருமை பேச ஆரம்பித்து எங்கேங்கோ போய் எப்படியோ எட்டு தேர்த்தியாகிவிட்டது. மூச்சு முட்டுது. கதவைத் தொறங்கப்பா :)). இதெல்லாம் பெருமையா என யாரும் காமெடி கீமெடி பண்ணிடக் கூடாது. ஏன்னா பேசிக்கலி நான் நல்லவன் :))

அடுத்து எழுத நான் அழைக்கும் எட்டு பேர்
1. சின்ன தல இராயல்ஜி
2. விவ்ஸ் இளா
3. அனுபவ சித்தர் தம்பி
4. கதாசிரியர் வினையூக்கி
5. புல்லட் டிரெயின் மகேந்திரன். பெ
6. பெருசு
7. சந்தோஷ்
8. தெகா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

இத்துடன் இப்பகுதி இனிதே நிறைவடைகிறது!! :)27 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி, நீயும் இந்த பதிவை எழுத பட்ட கஷ்டம் நல்லாவே தெரியுது!! நம்மள்சின்னு குறி பாத்து மாட்டி விட்டார் பாரு இந்த பாபா. அவரைச் சொல்லண்ணும். :))

சொன்னது...

எலே கப்பி.
என்னை பத்தி ஏற்கனவே எண்கள் முறையே 4,5,6 எழுதியாச்சு மேற்கொண்டு என்னை பத்தி எழுத ஒரு மேட்டரும் இல்ல. திரும்ப திரும்ப இந்த விளையாட்டுல இழுத்து என்னை பொய் சொல்ல வைக்காதிங்க ஏன்னா நானும் பேசிக்கலா உன்ன மாதிரி ரொம்ம்ம்ப நல்ல நல்ல்ல்லவன்.
பொய் சொல்லவே தெரியாது.

சொன்னது...

nice game, it brings bloggers close to blog readers heart, i feel your friends(college,working) are gifted,

சொன்னது...

and your blogger name ('kappi paya') somewhat annoying, won't you keep some poetic name, like thendral, or some other.

this is same as 'middle class, educated, family people won't like vijay because of some local behaviour, mannerism but they like ajith'

சொன்னது...

//கப்பி, நீயும் இந்த பதிவை எழுத பட்ட கஷ்டம் நல்லாவே தெரியுது!! நம்மள்சின்னு குறி பாத்து மாட்டி விட்டார் பாரு இந்த பாபா. அவரைச் சொல்லண்ணும். :))
//

அதேதானுங்ண்ணா :))
நீங்களாவது பரவாயில்ல...எனக்கெல்லாம் நெத்தியெல்லாம் வியர்த்து மூச்சு முட்ட ஆரம்பிச்சுடுச்சு :)))
அப்புறம் வழக்கம் போல ஒரு மொக்கையை தேர்த்தியாச்சு :)))

சொன்னது...

தம்பி,

நாங்க மட்டும் எழுதலையா?? போடற மொக்கையை 1,2 என்று வரிசைபடுத்தி போடனும்..அவ்வளவுதான் :)))

//என்னை பொய் சொல்ல வைக்காதிங்க ஏன்னா நானும் பேசிக்கலா உன்ன மாதிரி ரொம்ம்ம்ப நல்ல நல்ல்ல்லவன்.
பொய் சொல்லவே தெரியாது.
//

இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு...

சொன்னது...

செந்தில்

//nice game, it brings bloggers close to blog readers heart,
//

கரெக்ட் தல!

//
i feel your friends(college,working) are gifted, //

ஆகா..டாங்க்ஸ் :)

//and your blogger name ('kappi paya') somewhat annoying, won't you keep some poetic name, like thendral, or some other.
//

அட இது என்ன புதுக்குழப்பம் :))

//this is same as 'middle class, educated, family people won't like vijay because of some local behaviour, mannerism but they like ajith' //

நீங்க ரெண்டாவது சொன்ன பாயிண்ட் கொஞ்சம் கரெக்ட் தான்...எனக்கு தெரிஞ்சே அப்படி சில பேர் இருக்காங்க ;)

சொன்னது...

அடப் பாவி கப்பி நீ உறுப்படுவியா?
அப்றாணியா சுத்துர என்னை இந்த மாதிரி எட்டு போடு ஒம்போது போடுன்னு மாட்டிவிட்டுட்டியே?
என்ன பன்ன எல்லாம் அந்த ஏழரையோட வேலை :)

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

பின்னூட்ட உயரெல்லை
8 ன்னு ஆக்கிட்டாங்களா?
என்னோட பின்னூட்டம் இன்னும் வரலியேப்பா

சொன்னது...

எட்டாவது படிக்கும் போது எட்டுகால் பூச்சிக்கு எத்தனைகால்டான்னு கேட்டார் வாத்தியார் நம்ப கப்பிபய என்ன பன்னினான் தெரியுமா?

சொன்னது...

கப்பி, 8 போட்டாச்சு. என்ன நம்மள பத்தி எழுதாம நம்ம்ம்மள பத்தி எழுதி இருக்கேன் இதோ இளாவின் 8

சொன்னது...

அழைப்புக்கு நன்றி ஜூனியர்.

சொன்னது...

//இதெல்லாம் பெருமையா?" //

இல்ல.... நீ சாட் ல லாக் இன் பண்ணிய வுடன் சடார் வர 50 சாட் விண்டோவையும் சமாளித்து அத்தன பேர்க்கிட்டவும் வறுத்து அள்ளவ பாரு அதான் சாதனை, அதான்ய்யா பெருமை....

சொன்னது...

//அடப் பாவி கப்பி நீ உறுப்படுவியா?
அப்றாணியா சுத்துர என்னை இந்த மாதிரி எட்டு போடு ஒம்போது போடுன்னு மாட்டிவிட்டுட்டியே?
//

கூல் டவுன் மகி...இதெல்லாம் கிவ் அன்ட் டேக் பாலிசி தானே :))

//
என்ன பன்ன எல்லாம் அந்த ஏழரையோட வேலை :) //

:)))

சொன்னது...

விவ்ஸ், டாங்க்ஸ் :)

சொன்னது...

சீனியர், உங்களுக்கு எட்டென்ன என்பதே போடலாமே :)

//இல்ல.... நீ சாட் ல லாக் இன் பண்ணிய வுடன் சடார் வர 50 சாட் விண்டோவையும் சமாளித்து அத்தன பேர்க்கிட்டவும் வறுத்து அள்ளவ பாரு அதான் சாதனை, அதான்ய்யா பெருமை....//

புலி,

என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீரு :))

எல்லாம் பாசக்கார பயலுகய்யா :)))

சொன்னது...

//இல்ல.... நீ சாட் ல லாக் இன் பண்ணிய வுடன் சடார் வர 50 சாட் விண்டோவையும் சமாளித்து அத்தன பேர்க்கிட்டவும் வறுத்து அள்ளவ பாரு அதான் சாதனை, அதான்ய்யா பெருமை....//
அட உண்மைய இப்படியா போட்டு உடைக்கிறது

சொன்னது...

//"அவனா ரொம்ப நல்ல பையனாச்சே. அமைதியான பையன்" என சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் வாங்கிவைத்திருப்பது பெருமை//

:)

நாங்க எதுக்கு இருக்கோம்!

ஏரியா மட்டும் சொல்லிடுங்க! மிச்சத்தை நாங்க பார்த்துக்குறோம்!

சொன்னது...

நம்ம அருமை பெருமையெல்லாம் ஊரே நாறுமெ இத இங்க வேற சொல்லி நாறனுமானு சொல்லாம இருந்தேன்

சொல்லிடவேண்டியதுதான்

சொன்னது...

/"நீயெல்லாம் எதுக்குய்யா இங்க வந்தே? காஞ்சிபுரத்துல மீனாட்சி காலேஜ்லயே படிக்க வேண்டியதுதானே" என முதல் வருடமே முதல்வரிடம் பாராட்டை வாங்கினேன்.//
இது புள்ளைக்கு அழகு... இப்படித்தான் இருக்கோணும் காலேஜ்ஜுல...

//தமிழ் இலக்கிய சூழல் பற்றியும்//
ஆனாலும் இம்முட்டு தன்னடக்கம் இருக்கக்கூடாதுப்பூ...

//
இல்ல.... நீ சாட் ல லாக் இன் பண்ணிய வுடன் சடார் வர 50 சாட் விண்டோவையும் சமாளித்து அத்தன பேர்க்கிட்டவும் வறுத்து அள்ளவ பாரு அதான் சாதனை, அதான்ய்யா பெருமை....//
கப்பி அவனா நீயீ.... என்ன இருந்தாலும் நம்ம சின்ன தல அளவுக்கு செய்ய முடியாது....நீ வேணா குட்டி தலயாய் இருந்துக்கோ இந்த மேட்டருல...

சொன்னது...

/ Rodrigo said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Até mais.//
ஒகே ஒகே நாளைக்கு சரக்கு எல்லாம் வந்துடும் கவலை படாதிங்க..

சொன்னது...

ரொம்ப அருமையா, எளிமையா, மனதில் நிற்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க... நன்றி கப்பி

சொன்னது...

//நாங்க எதுக்கு இருக்கோம்!

ஏரியா மட்டும் சொல்லிடுங்க! மிச்சத்தை நாங்க பார்த்துக்குறோம்! //

மலேரியா :))

அந்த தப்பை மட்டும் செய்ய மாட்டேன் தள :))

சொன்னது...

//நம்ம அருமை பெருமையெல்லாம் ஊரே நாறுமெ இத இங்க வேற சொல்லி நாறனுமானு சொல்லாம இருந்தேன்

சொல்லிடவேண்டியதுதான்
//

மின்னலு,

பொதுவாழ்க்கையில இறங்கிட்டப்புறம் என்ன தயக்கம்? :))

சொன்னது...

சந்தோஷ்

//இது புள்ளைக்கு அழகு... இப்படித்தான் இருக்கோணும் காலேஜ்ஜுல.../

ஹி ஹி :))

//கப்பி அவனா நீயீ....
//

நான் அவன் இல்ல :))

//
என்ன இருந்தாலும் நம்ம சின்ன தல அளவுக்கு செய்ய முடியாது....நீ வேணா குட்டி தலயாய் இருந்துக்கோ இந்த மேட்டருல... //

கண்டிப்பா சின்ன தலயை வெல்ல முடியாது :))

சொன்னது...

பாபா

//ரொம்ப அருமையா, எளிமையா, மனதில் நிற்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க...//

பெருமை எதுவுமே இல்லைங்கற மேட்டரைத்தானே :)))


அழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாலா :)