மதுரை 625015

மதுரை 625015. திருப்பரங்குன்றம். தியாகராசர் பொறியியற் கல்லூரி. ஆண்கள் விடுதி.

Rangers
அம்பலவான சுவாமிகள்
டவுசர் பாண்டிஸ்
ஏழரை
Drizzlers
மொக்கையன்ஸ்
Spiders
Rockers
Storm
Band of Brothers
கசமுசா
கவர்ன்மெண்ட் ஒயின்ஸ்
கிங்ஸ்
MC
கல்யாணி
மகாராஜா (திருப்பரங்குன்றம் தியேட்டர் பேருங்கோவ்)
Satanic samurais

இவையெல்லாம் கிரிக்கெட் அணிகளின் பெயர்கள். கல்லூரி விடுதியில் வெள்ளொளி கிரிக்கெட் போட்டிகள் வருடாவருடம் பிப்ரவரி மாதம் தவறாமல் நடக்கும். அணிக்கு எட்டு பேர். நுழைவுக் கட்டணம் ஐம்பது ரூபாய்.டென்னிஸ் பந்து. பெளலிங் கிடையாது. அதிகபட்சம் இரண்டு அடிகள் எடுத்துவைத்து கையைச் சுற்றாமல் வீசலாம்(Chucking). லீக் ஆட்டங்களுக்கு தலா எட்டு ஓவர்கள். காலிறுதி போட்டிக்கு பத்து ஓவர்.அரையிறுதி போட்டிகளுக்கு பன்னிரெண்டு ஓவர்கள். இறுதிப் போட்டி பதினைந்து ஓவர்கள்.

முதலாண்டு மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும். மிரட்டியாவது சேர்க்கப்படுவார்கள். ஆடத்தெரியாவிட்டாலும் 50 ரூபாய் கொடுக்க வேண்டும்.

லீக் ஆட்டங்களில் எப்போதும் நான்காம் ஆண்டு அணிகள் முதலாண்டு அணிகளோடும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு அணிகளோடும் ஆடுவார்கள். அப்போதுதான் இறுதியாண்டு மாணவர்கள் சுலபமாக காலிறுதி வரை வர முடியும். ;)

முதலாண்டு மாணவன் பேட்டிங் செய்ய இறங்கும்போதே எப்படி அவுட் ஆக விருப்பம் என கேட்டுவிடுவோம். அவன் விருப்பம் போல் குச்சி கழண்டோ, காட்ச் கொடுத்தோ ரன் அவுட்டோ ஆகலாம். முதலாண்டு மாணவன் நான்கு ரன் அடித்தாலும் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். ஒரு ஓவருக்கு அவன் எவ்வளவு அடித்தாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து ரன்கள் மட்டுமே ஸ்கோரில் ஏறும். இதே இறுதியாண்டு மாணவனாக இருந்தால் இரண்டு அடித்தால் நான்கு, நான்கு அடித்தால் ஆறு. ஒரே ரணகளம் தான். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் லவுட் ஸ்பீக்கரில் ஒரு குத்து பாட்டு போட்டு குத்தாட்டம் தான்.

இறுதியாண்டு மாணவர்கள்தான் அம்பயர்களாக இருப்பார்கள். எதிரணியில் ஜூனியர் எவனாவது தொடர்ந்து அடித்து ஆடினால் யோசிக்காமல் அவுட் கொடுக்கப்படும். Benefit of doubt எப்போதுமே இறுதியாண்டு அணிக்குத் தான் :)

காலிறுதி சுற்று ஆரம்பித்ததும் போட்டிகள் சூடுபிடித்துவிடும். சண்டை அடிதடி என அல்லோலப்படும். இறுதியாண்டு அணியை எப்போதும் தோற்கவிட மாட்டோம். அப்படியே தோற்பது போலிருந்தால் ஜூனியர்களை அழைத்து "டேய் எப்படியும் அடுத்த வருசம் நீங்க விளையாடுவீங்க. எங்களுக்கு இது தான் கடைசி. அடுத்த வருசம் நீங்க ஜெயிச்சுக்குங்க.இந்த வருசம் விடுங்கடா" என ஃபீலிங் டயலாக்கோ "டேய் ஒழுங்கா மரியாதையா தோத்துடுங்கடா. இல்ல ஒருத்தனும் ஒழுங்கா கிரவுண்டை விட்டு வெளிய வர மாட்டீங்க" என அன்பாகவோ பேசி ஜெயிக்க வைப்போம்.

இந்த போட்டிகளின் ஹைலைட்டே கமெண்ட்ரிதான். மாலை ஐந்து மணியிலிருந்தே போட்டிகள் ஆரம்பித்தாலும் இரவு எட்டு மணிக்கு மேல் கல்லூரி காலி ஆனபின் தான் கமெண்ட்ரி சூடுபிடிக்கும். மற்றவர்களை ஓட்டுவதும், மைக்கிலேயே ஜூனியரை அவுட் ஆகி வெளியே வருமாறு அழைப்பதும், ஸ்கோரை குறைத்து சொல்வதும், கடலை போடுபவர்களையும் இலை பறிப்பவர்களையும் கெட்ட வார்த்தையில் வைவதுமென ஜாலியாக இருக்கும். பல பேரின் காதல் கோட்டைகள் கமெண்டேட்டர்களின் வாயில் இடிந்து சுக்குநூறாகும்.

அன்பே
அனிதா
நீ எனக்கு
ஹனி தா!

என கவுஜ அரங்கேற்றமும் நடக்கும்.

கண்டிப்பாக தினம் ஒரு அடிதடியாவது அரங்கேறும். மின்விளக்குகள் உடைபடும். போட்டி நடத்தும் ரெப்புகள் பணம் அடிப்பதாக கம்ப்ளெயிண்டுகள் வரும். ஏமாற்றி தோற்கடிக்கப்பட்டதாக விவாதங்கள் நடக்கும். வேண்டுமென்றே வலுவான அணியுடன் மோத வைத்து தோற்கடிக்கப்பட்டதாக சண்டை எழும். சண்டை போட்டதும் குத்து பாட்டுக்கு சேர்ந்து குத்தாட்டம் போடுவார்கள். போட்டி நடக்கும் நான்கு நாட்களும் திருவிழா தான்.

வருடம் முழுக்க கிரிக்கெட்டே கதி என இருந்தாலும் இந்த நான்கு நாட்கள் இரவும் பகலும் மைதானத்திலேயே தான்.

கல்லூரி முடிந்ததும் விடுதி அறையை காலி செயவதற்கு முன் 'இனி கிரிக்கெட்டே விளையாடப் போவதில்லை' என்பது போல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அந்த நான்கு நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது.

இன்றும் விடுதி நண்பர்கள் யாரையாவது தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் கேட்கப்படும் மூன்றாவது கேள்வி "இப்பவும் கிரிக்கெட் விளையாடறயாடா?" என்பதாகத் தான் இருக்கிறது.



19 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி...

நம்ம குடும்ப ரகசியத்த இப்படி சபைல போட்டு தாக்கீட்டியே,...ஹி..ஹி..என்ன நெனப்பாய்ங்க நம்மள பத்தி...

எங்க காலத்தோட இதெல்லாம் போயிரும்னு நெனச்சிருந்தேன்...ஏன்னா நாங்கதான் கடைசி யுனிவர்சிட்டி பேட்ச். அட்டனாமஸான பொறவு நிர்வாகம் ர்ரொம்ம ஸ்ட்ரிக்ட் ஆய்டுச்சி...எங்க ஜீனியர்ஸ்யே புழிஞ்சிட்டாய்ங்க....

அதயும் தாண்டி ஆடீருக்கீகன்னு நெனய்க்கும்போது ஒரே அளுவாச்சியா(ஆணந்த கண்ணீர்யா...) வருது...

சந்தோசமா இருக்கு கப்பி...

சொன்னது...

ஆமா இப்போவெல்லாம் கிரிக்கெட் விளையாடுறீயா கப்பி?

சொன்னது...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!சேரன் கணக்கா பாட வச்சிட்டீங்களே ஜூனியர். நான் பர்ஸ்ட் இயரா இருந்தப்பா மேட்ச் பார்க்க போறதைவிட கமெண்டரி கேட்க போன நாள்தான் அதிகம். அடுத்தவனின் முக்கோண நாற்கர காதல் கதைகளை கேட்பது ஒரு குஜால்தான். ம்ம்ம், கடைசி வருடத்தில் என்னுடைய "கடலை கதைகளும்" மேடையேறிய போது கொஞ்சம் வருத்தம் தான்.

சொன்னது...

//முதலாண்டு மாணவன் நான்கு ரன் அடித்தாலும் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். ஒரு ஓவருக்கு அவன் எவ்வளவு அடித்தாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து ரன்கள் மட்டுமே ஸ்கோரில் ஏறும். இதே இறுதியாண்டு மாணவனாக இருந்தால் இரண்டு அடித்தால் நான்கு, நான்கு அடித்தால் ஆறு. ஒரே ரணகளம் தான். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் லவுட் ஸ்பீக்கரில் ஒரு குத்து பாட்டு போட்டு குத்தாட்டம் தான்.

இறுதியாண்டு மாணவர்கள்தான் அம்பயர்களாக இருப்பார்கள். எதிரணியில் ஜூனியர் எவனாவது தொடர்ந்து அடித்து ஆடினால் யோசிக்காமல் அவுட் கொடுக்கப்படும். Benefit of doubt எப்போதுமே இறுதியாண்டு அணிக்குத் தான் :)//

இப்போ இந்திய அணி ஜெயிக்கணும்முன்னா கூட இதே வழியைதான் பின்பற்றணும் போல இருக்கு. பேசாம இந்த யோசனையை BCCIக்கு அனுப்பிடலாமா?

சொன்னது...

எங்க காலத்துல அடிக்கடி மின்னொளி போட்டியில் போடப்பட்ட பாட்டுகள்,

1.ஊத்திக்கின்னு கடிச்சுக்கலாம் - நினைவிருக்கும் வரை

2. காட்டுறேன் காட்டுறேன் சொல்லிட்டு காட்டாமத்தான் போறீகளே - ஒரு ராமராஜன் படம், இந்த படம் கடைசி வரை ரிலீஸ் ஆகலேன்னு நினைக்கிறேன். காவலன் படம் பேரு அனேகமா!!

3. ஒரு அஜீத் படப்பாட்டு, ஸ்டார்டிங் மறந்து போச்சு

4. பேட்டைராப் - காதலன்

சொன்னது...

மருத பேர கெடுக்கனும்னு அலையுராங்க...:)

சொன்னது...

இப்படியெல்லாம் முதலாம் ஆண்டு மாணவர்களை ஏமாத்துறூறீர்களா?

கப்பி, இது சரியா வரலை...


ஐ மீன் எனக்கு க்ரிக்கெட்டை பத்ஹி ஒன்னும் தெரியாது.. அதனால், போஸ்டுல பாதி மேசேஜ் புரியலை.. :-P

சொன்னது...

wait for our turn.......

madurai - 625001

சொன்னது...

i too played in teh flood light match in my final year (2005 passed out).. ithe kathai than.. konjam kooda mattrame illai..

my team name was : "KUPPATHU RASCALS"

சொன்னது...

பங்காளி அண்ணன்

//நம்ம குடும்ப ரகசியத்த இப்படி சபைல போட்டு தாக்கீட்டியே,...ஹி..ஹி..என்ன நெனப்பாய்ங்க நம்மள பத்தி...
//

பெருமையா நினைப்பாங்க தல...குடும்ப ரகசியம்னாலும் நம்ம குலப்பெருமை சீனியர் :)


//எங்க காலத்தோட இதெல்லாம் போயிரும்னு நெனச்சிருந்தேன்...ஏன்னா நாங்கதான் கடைசி யுனிவர்சிட்டி பேட்ச்.
//

நீங்க தான் அந்த அதிர்ஷ்டசாலிகளா?

//
எங்க ஜீனியர்ஸ்யே புழிஞ்சிட்டாய்ங்க....
//

எங்க செட் வரைக்கும்கூட பரவால்ல..அதுக்கப்புறம் இன்னும் மோசமாயிருச்சாம்

//
அதயும் தாண்டி ஆடீருக்கீகன்னு நெனய்க்கும்போது ஒரே அளுவாச்சியா(ஆணந்த கண்ணீர்யா...) வருது...
//

அவ்வ்வ்வ்வ்வ்வ் :))

சொன்னது...

தேவ்
//ஆமா இப்போவெல்லாம் கிரிக்கெட் விளையாடுறீயா கப்பி?
//

ஆமா ஆமா :)
நீங்க? :))

சொன்னது...

//ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!சேரன் கணக்கா பாட வச்சிட்டீங்களே ஜூனியர். //

அடிக்கடி இப்படி கொசுவத்தி சுத்திப்போம் சீனியர் :))

//
நான் பர்ஸ்ட் இயரா இருந்தப்பா மேட்ச் பார்க்க போறதைவிட கமெண்டரி கேட்க போன நாள்தான் அதிகம். அடுத்தவனின் முக்கோண நாற்கர காதல் கதைகளை கேட்பது ஒரு குஜால்தான்.
//

இல்லையா பின்ன :))

//
ம்ம்ம், கடைசி வருடத்தில் என்னுடைய "கடலை கதைகளும்" மேடையேறிய போது கொஞ்சம் வருத்தம் தான்.
//

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ற பரம்பரையா நாம? :))

//எங்க காலத்துல அடிக்கடி மின்னொளி போட்டியில் போடப்பட்ட பாட்டுகள்,
//

ஆகா..அது ஒரு பெரிய லிஸ்ட் ஆச்சே...பல அஜால்குஜால் பாட்டெல்லாம் வருமே :))

சொன்னது...

//இப்போ இந்திய அணி ஜெயிக்கணும்முன்னா கூட இதே வழியைதான் பின்பற்றணும் போல இருக்கு. பேசாம இந்த யோசனையை BCCIக்கு அனுப்பிடலாமா?
//

ப்ரசன்னா

தாராளமா அனுப்பலாம்..ஆனா இதைக் கேட்டு நம்மள காலி பண்ண அவங்க ஆள் அனுப்பாம இருக்கனும் :))

சொன்னது...

மின்னலு
//
மருத பேர கெடுக்கனும்னு அலையுராங்க...:)
//

இதுல மருத பேரு எங்கிட்டு கெட்டுச்சு??


மை பிரண்ட்
//இப்படியெல்லாம் முதலாம் ஆண்டு மாணவர்களை ஏமாத்துறூறீர்களா?
//

ஏமாந்தோம்...ஏமாற்றினோம் :))

//
கப்பி, இது சரியா வரலை...


ஐ மீன் எனக்கு க்ரிக்கெட்டை பத்ஹி ஒன்னும் தெரியாது.. அதனால், போஸ்டுல பாதி மேசேஜ் புரியலை.. :-P
//

ஏமாத்தினது மட்டும் சரியா புரிஞ்சுடுச்சே :))

//

சொன்னது...

இராயல்

//wait for our turn.......

madurai - 625001
//

அப்படி போடு அருவாள :))

சாரதி

//i too played in teh flood light match in my final year (2005 passed out).. ithe kathai than.. konjam kooda mattrame illai..

//

அட வாங்க ஜூனியர்!

அது எப்படி மாறும்...அது பரம்பரை பரம்பரையா கட்டிக் காத்துட்டு வர சம்பிரதாயம் இல்லையா? :))

//my team name was : "KUPPATHU RASCALS" //
குப்பத்து ராஸ்கல்ஸா..அட்டகாசமான பேருதான்...

"குப்பத்து ராஸ்கல்ஸ் எங்கிருந்தாலும் உடனே கிரவுண்டுக்கு வரவும்..இல்லன்னா டீம் ஸ்க்ராப் பண்ணிருவோம்" :)))

சொன்னது...

கப்பி பய சொன்னது...
இதுல மருத பேரு எங்கிட்டு கெட்டுச்சு??

///

பட விமர்சனம்னு போட்ட கமெண்ட்
எப்படியிருந்தாலும் படம் நல்லா இருக்காதுனு தான்


பின்னுட்டத்திலிருந்து பதிவ படிச்சி படிச்சி சிலிப்பாயிடுச்சி....::))))

சொன்னது...

//
"குப்பத்து ராஸ்கல்ஸ் எங்கிருந்தாலும் உடனே கிரவுண்டுக்கு வரவும்..இல்லன்னா டீம் ஸ்க்ராப் பண்ணிருவோம்" :)))
//


எலே நாங்க சினீயரு லேட்டாதான் வருவோம் ஆட்டய கலச்சி பாருல அப்ப தெரியும் இந்த குப்பத்து ராஸ்கல்ஸ் யாருனு...)


(ஹி ஹி நல்லா எழுதுறாங்க கதை)

சொன்னது...

//
பின்னுட்டத்திலிருந்து பதிவ படிச்சி படிச்சி சிலிப்பாயிடுச்சி....::))))
//

அடப்பாவி மக்கா :)))

//எலே நாங்க சினீயரு லேட்டாதான் வருவோம் ஆட்டய கலச்சி பாருல அப்ப தெரியும் இந்த குப்பத்து ராஸ்கல்ஸ் யாருனு...)
//

மின்னலண்ணே,

அனவுன்ஸ் பண்றதே ஃபைனல் இயர்தான்..அது ஜூனியர் டீமா இருந்தா மட்டும் தான் ஸ்க்ராப் பண்ணுவோம்...எங்க பசங்க டீம் வரலைனா மாட்சை தள்ளிப் போட்ருவோம் :))

சொன்னது...

கப்பி,

மதுரைக்கு பிறகுதான் பீளமேடே வந்திருக்கா! கவனிக்காம விட்டுட்டேன் போல!


டீம் பேரெல்லாம் எப்படிங்க? ஹாஸ்டல்லயே தனி ரூம் போட்டு யோசிப்பீங்களோ?! :)))


// "டேய் எப்படியும் அடுத்த வருசம் நீங்க விளையாடுவீங்க. எங்களுக்கு இது தான் கடைசி. அடுத்த வருசம் நீங்க ஜெயிச்சுக்குங்க.இந்த வருசம் விடுங்கடா" // இது கேக்கவே ஜாலியா இருக்குங்க! :)