குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்

குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

- படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

- எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

- செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.


- மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

- இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

- பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

- நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

- ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

- இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

- தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

- தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

- கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

- காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

- இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!! இளைய தளபதி புகழ் ஓங்குக!!

நல்லாயிருங்க!!



57 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஹாஹாஹா....

நீங்க இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்கன்னு தெரியும்.. ஆனால் இந்த அளவுக்கு கலாய்ச்சு சூப்பரா பிட்டு பிட்டா போடுவீங்கன்னு நான் நெனச்சு கூட பார்க்கல..

கலக்கல்ஸ்... :-)

சொன்னது...

எலேய்..... அமெரிக்கால டாலர்ல காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாத்த நான் என்னத்தல சொல்ல???

எல்லாரும் பாருங்க மக்கா.. திருட்டு விசிடல பாக்காதீங்க மக்கா.... தியேட்டர்ல போய் பாருங்க மக்கா... :)))

சொன்னது...

படம் பார்த்து ....நொந்து.....நூடுல்ஸ் ஆகிட்டீங்க போலிருக்கு:)))

சொன்னது...

முக்தி அடைந்த கப்பியா??? எனக்கு இன்னமும் இந்த பாக்கியம் கிட்டவில்லை.

சொன்னது...

செல்லம்...என்னால முடியல....;))))))))))))))

கலக்கிட்ட... ;;)))

டிபிசிடி பதிவுல பினாத்தல் சொன்ன கமெண்டு தான் ஞாபகத்துக்கு வருது ;)

சொன்னது...

--எப்படி மென்மையாய் பேசவேண்டும் என்பதை 'கடப்பா' ராஜா, பவன், ஆஷிஸ் வித்யாதிரி போன்றவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.
--குறி பார்த்து எப்படி சுட வேண்டும் என்பதை இந்த படத்தின் வில்லன்களிடம் இருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.
--Blood diamond படத்தோட சாயலே இல்லாம தமிழில் வந்திருக்கும் ஒரு ஹாலி வூட் படம்.

இப்படிப்பட்ட படத்த போய் நல்லா இல்லன்னு சொல்லுரான்னுங்க. லூசுப்பசங்க.

சொன்னது...

//- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.//

அது............!

:)

சொன்னது...

\\அ-புனைவு திரைப்படம்\\

விளக்கம் தேவை ;))

சொன்னது...

ஸ்ஸ்ஸ்....யப்பா....உங்க விமர்சனத்தை படிக்கம்போதே கண்ணக்கட்டுதே... இதை தியேட்டர்ல போயும் பார்க்கணுமாக்கும் ஏன் இந்த கொலைவெறி?

ஆனா ஒண்ணுங்க நான் தியேட்டர்ல போய் பார்த்த விஜய் படம் ஒண்ணே ஒண்ணுதான்...கண்ணுக்குள் நிலவு. விஜய் அதுல நடிச்சுருக்க மாட்டாரு...அவராகவே வாழ்ந்துருப்பாரு... ஏன்னா படத்துல அவருக்கு லூசு கேரக்டரு...கரெக்டா பண்ணியிருப்பாரு.

சொன்னது...

//இப்படிப்பட்ட படத்த போய் நல்லா இல்லன்னு சொல்லுரான்னுங்க//
repetaaaaaaaaaaaaaaaaaai

சொன்னது...

தலைவா

சூப்பரோ சூப்பர்! இதை என் அமெரிக்க நண்பர்கள் அனைவருக்கும் நிச்சயம் அனுப்புவேன்....

"இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது....." நச் நச் நச்

செம செம செம....

மயிலாடுதுறை சிவா....

சொன்னது...

சாப்பிடக்கூட முடியாமெ சிரிச்சிக்கிட்டே இருக்கேன்....:-)))))

சொன்னது...

லொள்ளு சபா காரணூங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர்..

அவனுங்களுக்கு மேட்டர் பஞ்சமே வராம விஜய் பார்த்துக்குவார்..

லொ. சபாவி, விஜய் படம் தான் முதல் பிரபரென்ஸ் என்று நாம் எல்லாம் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று இந்த தருணத்தில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சொன்னது...

ஆமாம் கப்பி, நீங்க சொன்ன காரணங்களுக்காகவே பாக்கறதா முடிவெடுத்துட்டேன்.

//பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு.// கோல்கேட் ஸ்பான்சர்ஷிப்பா?

//அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.// ஆமாம். அந்த ஆளு நிறைய பேர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியிருக்கு.. பேரரசு, சிம்பு...

//ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண..// இங்கதான் உங்களுக்கு மேட்டர் புரியல.. ரவுடிங்கன்னா நாம வெளிநாட்டுக்குத்தானே போகணும்? லோகல்லேதான் மொத்த பேரையும் திருப்பாச்சி, போக்கிரியிலியே தீத்துட்டோமே!

சொன்னது...

:)))

சொன்னது...

// ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.///


அட....!

இவ்ளோ ட்விஸ்டுகள் நிறைந்த படம்தானா அது?

பார்த்துடவேண்டியதுதான்! லிங்க் கொடுங்களேன்?

சொன்னது...

//இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது//

இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !

சொன்னது...

//.:: மை ஃபிரண்ட் ::. சொன்னது...
ஹாஹாஹா....

நீங்க இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவீங்கன்னு தெரியும்.. ஆனால் இந்த அளவுக்கு கலாய்ச்சு சூப்பரா பிட்டு பிட்டா போடுவீங்கன்னு நான் நெனச்சு கூட பார்க்கல..
///

அட ஆமாம்

//மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார்.//

ஆனா இவங்க பார்க்கலா சொல்லலா?

சொன்னது...

Kuruvi 100 vathu naal kondaatathil sandhipom :-)

சொன்னது...

இதுக்குத்தான் நான் விஜய் படம் பார்க்க தியேட்டர் பக்கம் போறதே இல்லை...

மி த எஸ்கேப்புபுபுபுபுபுபுபு....


Senthil,
Bangalore

சொன்னது...

வொய் ப்ளட்? வொய் ப்ரசர்?
கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்ன்ன்...

சொன்னது...

இந்த மாதிரி எல்லாம் விஜய்ய கலாய்ச்சா அவர் நல்ல படம் கொடுத்துடுவாருன்னு மனப்பால் குடிக்காதீங்க! அவர கலாய்க்கறதுக்காகவே அவர் படத்த முதல்ல பார்த்துடுவீங்க போல;) அந்த 'எதிர்பாராத திருப்பங்கள்' டாப்;)

சொன்னது...

மக்கா, அத பாத்ததும் இல்லாம நம்ம பிளாக் உலகத்துக்கு இவ்ளோ கருத்து சொல்லிருக்கியே, உன்ன நெனச்சா....
அவ்வ்வ்...

சொன்னது...

//கோபிநாத் said...
\\அ-புனைவு திரைப்படம்\\

விளக்கம் தேவை ;))//

ரிப்பீட்டேய்!

சொன்னது...

//இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.//

கண்டிப்பா.

சொன்னது...

\\ கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்\\

ஆக இது ஒரு பின்னவீனத்துவ திரைப்படம்

சொன்னது...

குருவி பஞ்டைலாக்

சீதபேதி வந்தா
அலோபதி இல்ல ஓமியோபதில
குணபடுத்தலாம் ஆன இந்த
இளைய தளபதி அ( ந)டிச்சா
இந்தியாவுலே மருந்தே இல்ல....;
சிவா
பாண்டி.

சொன்னது...

//- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.//

No other comments needed for the movie.

சொன்னது...

எத்தனையோ இந்த மாதிரி படங்களை பாத்துருக்கோமாம் இதை பாக்கமாட்டமா... எதையும் தாங்கும் இதயம்ன்னு தெரிஞ்சே தானே படம் எடுக்கறாங்க....:)

சொன்னது...

:))))))))

சொன்னது...

ஹா ஹா ஹா.....

சொன்னது...

மை ஃபிரண்டு

//நான் நெனச்சு கூட பார்க்கல..//

படமும் இந்தளவு இருக்கும்னு நானும் நெனச்சு கூட பார்க்கல :))

//கலக்கல்ஸ்... :-)//

கலங்கிப் போயிருக்கேன்..என்னத்த கலக்கல்ஸ் :)))


ஜி

//தியேட்டர்ல போய் பாத்த நான் என்னத்தல சொல்ல???//

மக்கா..அந்த ஒரு தப்பை நான் பண்ணல :))

//எல்லாரும் பாருங்க மக்கா.. திருட்டு விசிடல பாக்காதீங்க மக்கா.... தியேட்டர்ல போய் பாருங்க மக்கா... :)))//

ரிப்பீட்டோ ரிப்பீட்டு :))

திவ்யா

//.நொந்து.....நூடுல்ஸ் ஆகிட்டீங்க போலிருக்கு:)))//

ஆமாங்க ஆமா..இடிஞ்சு இடியாப்பம் ஆயிட்டேன் :))


உதயகுமார்

உங்களுக்கும் முக்தி பிராப்திரஸ்து :))

சொன்னது...

கோபிநாத்

//செல்லம்...என்னால முடியல.//

என்னாலயும் முடியல :))

//விளக்கம் தேவை ;))//

எனக்கு மட்டும் என்ன தெரியும்..எல்லாரும் சொல்றாங்க..நானும் சொல்லுதேன் :))


ராஜா

//Blood diamond படத்தோட சாயலே இல்லாம தமிழில் வந்திருக்கும் ஒரு ஹாலி வூட் படம//

இதை மறந்துட்டனே..Blood Diamondக்கே புது அர்த்தம் கொடுத்த படம்..இதை பார்க்காம விடலாமா?

//இப்படிப்பட்ட படத்த போய் நல்லா இல்லன்னு சொல்லுரான்னுங்க//

அதானே!! குருவி மகிமை தெரியாதவங்க :))


கோவியார்

நன்றி அட்லாஸ் சிங்கமே :)

நாஞ்சில் பிரதாப்

//ஸ்ஸ்ஸ்....யப்பா....உங்க விமர்சனத்தை படிக்கம்போதே கண்ணக்கட்டுதே... இதை தியேட்டர்ல போயும் பார்க்கணுமாக்கும் ஏன் இந்த கொலைவெறி?//

பிரதாப்..இதுக்கெல்லாம் கண்ணைக் கட்டினா எப்படி?? இவருதான் தமிழ் சினிமாவோட வருங்காலமே!! இடுக்கண் வருங்கால்னு சும்மாவா சொல்லி வச்சாங்க? :))

சொன்னது...

எல்லை இல்ல

இவங்க அலும்புக்கும் எல்லையே இல்ல :))

ரிப்பீட்டுக்கு டாங்கிஸு

மயிலாடுதுறை சிவா

//நண்பர்கள் அனைவருக்கும் நிச்சயம் அனுப்புவேன்....//

அதுல யாராவது இ.த ரசிகர் இருந்து உங்களுக்கு ஆட்டோ அனுப்பிடப் போறாரு தல :))

நன்றி தலைவா!

ச்சின்னப் பையன்

//சாப்பிடக்கூட முடியாமெ சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.//

படத்தை பார்த்துட்டு ஜூரணிக்க முடியாம தவிச்சுட்டிருக்கோம்...சாப்பிட முடியலன்றீங்க :))))

டாங்கிஸ் தல!

டிபிசிடி

//லொள்ளு சபா காரணூங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர்..//

இந்த படத்தை அப்படியே லொள்ளு சபால போட்டா போதும்..எதுவுமே மாத்த வேண்டாம்..இவங்களே அப்படித்தான் எடுத்து வச்சிருக்காங்க!!

இதுல லொள்ளு சபால கிண்டல் பண்ணா இளைய தளபதிக்கு கோவம் வேற வரும்!! என்ன கொடுமை தல இது!!

நன்றி!!

சொன்னது...

பெனாத்தலார்

//பாக்கறதா முடிவெடுத்துட்டேன்.//

அது!! இனி அந்த குருவியே வந்தாலும் உங்களைக் காப்பாத்த முடியாது :))

//கோல்கேட் ஸ்பான்சர்ஷிப்பா?//

1431 பயோரியா பல்பொடி ஸ்பான்சர்..அவிங்க தான் மலேசியா சிங்கப்பூர்னு பல நாடுகள்ல விக்கறாங்க!! :))



//ஆமாம். அந்த ஆளு நிறைய பேர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியிருக்கு.. பேரரசு, சிம்பு...//

பின்ன..இத்தனை வருசமா நடிக்கறாரு..ஆனா இவங்க ரேஞ்சுக்கு வர முடியுதா?


//இங்கதான் உங்களுக்கு மேட்டர் புரியல.. ரவுடிங்கன்னா நாம வெளிநாட்டுக்குத்தானே போகணும்? லோகல்லேதான் மொத்த பேரையும் திருப்பாச்சி, போக்கிரியிலியே தீத்துட்டோமே!//

:)))

என் அறிவுக்கண்ணை தொறந்துட்டீங்க :))

நன்றி பெனாத்தல்ஸ் :)

கொத்ஸ்

படம் முழுசா பார்த்துட்டு வந்து இதே மாதிரி சந்தோஷமா சிரிக்கனும். சரியா :))


ஆயில்யன

//
பார்த்துடவேண்டியதுதான்! லிங்க் கொடுங்களேன்?//

டியூப்தமிழ்ல கீது..பார்த்து புண்ணியம் அடைவீராக :))

//
இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் !//

எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைச்சுட்டு பாருங்க..ஆப்பு இன்னும் பலமாயிருக்கும் :))

நன்னி!!


ஸ்யாம்

/Kuruvi 100 vathu naal kondaatathil sandhipom :-)//

கண்டிப்பா நாட்ஸ! 100ஆ...150, 175, 250ன்னு எத்தினி கொண்டாட்டம் இருக்கு..இதையும் ஓடவச்சு வாழவைக்கற இதய தெய்வங்கள் இல்லியா தமிழ் ரசிகர்கள் :)))

100வது நாளுக்கு திரிசா யாராவது கேஸ் போடற அளவு டிரெஸ் போடுவாங்களா? :))

சொன்னது...

சென்

//
மி த எஸ்கேப்புபுபுபுபுபுபுபு....//

அப்படிலாம் ஈஸியா எஸ்கேப் ஆக முடியாது...கலைஞர் டிவில தீபாவளிக்கு போட்ருவாங்க :))


தம்பியண்ணன்

//வொய் ப்ளட்? வொய் ப்ரசர்?
கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்ன்ன்...//

நோ ப்ளட்..நோ ப்ரசர்..
படம் பார்த்து ஒரு அரை நாள் டென்சனா இருந்தேன்..அப்புறம் தான் குருவ்யின் மகிமை தெரிஞ்சு கூல் ஆயிட்டேன் :))

சத்யா

//இந்த மாதிரி எல்லாம் விஜய்ய கலாய்ச்சா அவர் நல்ல படம் கொடுத்துடுவாருன்னு மனப்பால் குடிக்காதீங்க! //

கள்ளிப்பாலே குடிச்சாலும் அதெல்லாம் நடக்காதுன்னு நல்லாவே தெரியும் :))

//
அவர கலாய்க்கறதுக்காகவே அவர் படத்த முதல்ல பார்த்துடுவீங்க போல;) //

அட நீங்க வேற!! இந்த படத்தையே பார்க்கக்கூடாது..பார்த்தாலும் யார்ட்டயும் வாயை தொறக்கக் கூடாது..பதிவும் எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன்..அதையெல்லாம் உடைச்செறிஞ்சு பதிவெழுத வச்ச திரைக்காவியம் குருவி!!

நன்னி :))

ஜெ.கே

//பிளாக் உலகத்துக்கு இவ்ளோ கருத்து சொல்லிருக்கியே,//

ஹி ஹி..கருத்து சொல்லலைனா காலைல டிபன் இறங்க மாட்டேங்குது :))

ரிப்பீட்டெல்லம் விடாத மக்கா..இப்படி கேள்வி கேட்டா பதிலுக்கு எங்கே போவேன்? :))

முரளிகண்ணன்

//
ஆக இது ஒரு பின்னவீனத்துவ திரைப்படம்//

ஆமா தல ஆமா!! அதுவும் சாதா பின் இல்ல..மொக்கையான வளைஞ்சு நெளிஞ்ச துருபிடிச்ச பின்!! :))

சிவா

நம்மள இப்படி பேச வச்சிருச்சே குருவி :)))

நன்றி!! :)

அனானிbr/>
அஷ்டே! :))

சொன்னது...

கயல்விழி முத்துலட்சுமி

//எதையும் தாங்கும் இதயம்ன்னு தெரிஞ்சே தானே//

இதைதான்க்கா என்னால தாங்கிக்கவே முடியல :))

நீங்க பார்த்துட்டீங்களா??


ஜொள்ஸ்ண்ணே

படம் பாருங்க...இன்னும் நல்லா சிரிப்பீங்க :))


இராமண்ணே

இம்புட்டு சொன்னபிறகும் படம் பார்க்காம இருக்கலாமா? சீக்கிரம் :))

சொன்னது...

:((((((((((((((((

த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டியளே அண்ணே....?

சொன்னது...

//- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது//

உண்மை...உண்மை...உண்மை. கப்பி நீ ஒரு ஞானத்தங்கம்யா
:)

சொன்னது...

மொத்ததுல படம் திருட்டு VCD-ல பாக்க கூட லாயக்கு இல்லாத படம்னு சூசகமா சொல்ரீங்களா! செம காமெடி விமர்சனம்!

சொன்னது...

ரிஷான்

//த்ரிஷாவைப் பத்தி எதுவுமே சொல்லாம விட்டுட்டியளே அண்ணே....?//

அதெல்லாம் படம் பார்க்க டிஃபால்டான காரணமில்லையா..அதனால சொல்லல..மன்னிச்சுக்குங்ண்ணா :))

கைப்ஸ்

தல...அவ்வ்வ்... :))

ரம்யா

//மொத்ததுல படம் திருட்டு VCD-ல பாக்க கூட லாயக்கு இல்லாத படம்னு சூசகமா சொல்ரீங்களா!//

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்னு சொல்லிட்டிருக்கேன்..இப்படி கேட்டுப்புட்டீங்க :))

நன்றி!

சொன்னது...

நேத்து மல்லுக் கட்டி வீட்டுல கூப்பிட்டாங்க, இந்த சனியனைப் பாக்கப் போலாம்னு! நான் என் முடிவுல பிடிவாதமா இருந்ததாலே (இந்த விமர்சனங்கள் படிக்காமலேயே, என் உள்ளுணர்வு ஏதோ ஒண்ணு சொல்லிச்சு :) )
தப்பிச்சேன். கடுமையான எச்சரிக்கைகளுக்கு நன்றி, கப்பி!!!

//இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.//

:)))))))))

சொன்னது...

இந்த கருமாந்தரத்தை காசு கொடுத்து பாக்கணுமா ?
கீழே இருக்குற லிங்க் ல போயி ப்ரீயா பாருங்க..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=200b21cc7f752979132d

சொன்னது...

அப்ப இது காமெடி படமா?

சொன்னது...

தஞ்சாவூரான்

என்னங்க நீங்க..படத்தை கண்டிப்பா பாருங்கன்னு சொல்றேன்..நீங்க எச்சரிக்கைன்னு சொல்றீங்க :))


கீவென்

நெட்ல பார்த்தாலும் சரி.தியேட்டர்ல பார்த்தாலும் சரி..எல்லாரும் பார்த்து சந்தோஷமா இருக்கனும்..அவ்ளோ தான் ;))

தர்சன்

அதே அதே :)

சொன்னது...

எத்தனை பேர்தான்யா இருக்கிங்க விஜய் ரசிகர்கள் அந்தாளு நலன்ல எவ்ளோ அக்கறை பாரு.....

சொன்னது...

நல்ல விமர்சனம் ஆனா திரிஷாவை மறந்திட்டிங்களே...

சொன்னது...

இதைவிட பெருங்காமெடி கப்பி.. இன்று தினமலரில் குருவி தயாரிப்பாளர் உதயநிதி " முதலில் வங்கி கடன் வாங்கி ஸ்நோ பவுலிங் பிறகு ரியல் எஸ்டேட் பிறகு பட விநியோகம் பிறகு பட தயாரிப்பு. இப்படி படிப்படியாக வரும் வளர்ச்சி தான் நிரந்தரம்." ஹிஹி... இனி எங்க படிபடியா வளர்ரது? ஒருவேளை மனசாட்சியே இல்லாம இன்னொரு குருவி எடுப்பாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

சொன்னது...

//எலேய்..... அமெரிக்கால டாலர்ல காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாத்த நான் என்னத்தல சொல்ல??//

என்ன கொடுமை ஜி இது? என்னால தமிழ்ட்யூப்லயே 3 பார்ட்க்கு மேல பாக்க முடியலையே.. நீங்க டாலரை வீணாக்கிட்டிங்களே... அந்த டாலருக்கு எதுனா சாமி டாலர் வாங்கி ஊருக்கு அனுப்பி இருக்கலாம்.. கொஞ்ச பேராவது சந்தோஷ பட்டிருப்பாங்க... டிக்கெட்க்கு குடுத்த டாலர் பத்தி சொன்னிங்க.. ஓகே.. குருவி பாத்த துக்கத்த கொண்டாட மருந்து வாங்க செலவு பண்ண டாலரை இதுல சேக்கலையே.. :))

சொன்னது...

அட்டகாசமான கொலைவெறியுடன், இந்தப் படத்தைப் பார்த்து நொந்து நூலாகி, தானும் ஒரு விஜய்யாகவே மாறிய ஒருவர் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி வந்திருக்கிறது இந்தப் பதிவு!

செம காமெடி !!

சொன்னது...

தமிழன்

திரிசாவை மறக்க முடியுமா...அவங்களுக்கு பதிவுல இடம் கொடுக்கலைனாலும் மனசுல இடம் கொடுத்திருக்கேன் :))


சஞ்சய்

மனசாட்சியா..அதையெல்லாம் வச்சு படம் எடுப்பாங்கன்னு இன்னுமா நம்பறீங்க? :))

//குருவி பாத்த துக்கத்த கொண்டாட மருந்து வாங்க செலவு பண்ண டாலரை இதுல சேக்கலையே//

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணி என்ன ஆகப்போகுது அண்ணாத்த...பொதுவாழ்க்கைல இறங்கிட்டப்புறம் இதுக்கெல்லாம் கவலைபட முடியுமா :))


விஎஸ்கே

விஜய்யாகவே மாறியவனா...ஐயா ஏன் இந்த கொலவெறி? :))

சொன்னது...

Public Notice from LIC

                                  New Delhi
Date: 12-MAY-2008

Dear Policyholders,

With the help of our past experiences and keeping in view the interests of
our beloved policyholders, please be informed of the below announcement:

We will not pay money for policy holders those who die after watching the
movie  'KURUVI ' (ILLAYA THALPATHY VIJAY's New Movie) . As per the new
rules, this comes under 'SUICIDE' category, which is not eligible for
payments. We deeply regret the sorrowful deaths of those who dared to watch
this movie and extend our condolences to the bereaved families.

                                   May their souls rest in peace.

Regards,

Life Insurance Corporation of India.

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

அடப்பாவிங்களா, குட்டி குட்டி மெஸேஜ் ல வருத்துடுத்துட்டு இப்போ குருவிய பிரியாணி அண்டால போட்டு வறுத்தெடுத்துட்டீங்களே...

ன்னா.. விஜய்னா இப்போ நாங்க சொல்றோம் அதே டயலாக்....

எவ்வளவோ பார்த்துட்டோம், இத பார்க்கமாட்டோமா?! :)

சொன்னது...

இதையும் பாருங்க தல:

http://enularalkal.blogspot.com/2008/05/2008.html

சொன்னது...

Vimarsanam romba arumai...yengi kondu irundhen...yaaravadhu arudhal solla mattangalunnu...3 naalachu...pilla pacha thanni kudikkala....ellam "Kuruvi" senja maayam dhan. Ellorum ushara irunga

சொன்னது...

தீக்குருவியை
தீந்தமிழினில்
தீச்சுவையென
தீ விமர்சனம் போட்டு விட்டாய் கப்பிய்யா!

உமக்குக் கோடிக்கோடி நன்றி.

விஜய் படம்னாலே பாக்குறதில்லைன்னு ஒரு முடிவு எடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனாலும் ஏதாச்சும் ஒரு படம் உருப்படியா நடிக்கக் கூடாதான்னு நப்பாசை வரும். ஆனா... அந்த ஆசையெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக விஜய் இருப்பதை நினைத்துப் பெருமைப் படாமல் இருக்க முடிகிறது.

இங்கே ஒரு நண்பர் தொலைபேசி செய்து.. ஒரு நல்ல செய்தி. இங்கே குருவி வருகிறது. வருகின்றீர்களா என்றார். நான் விஜய் படமெல்லாம் பார்ப்பதில்லை என்றேன். இந்தியாவில் என்றால் நானும் பார்ப்பதில்லை... இங்கே என்பதால் போகிறேன் என்றார். இங்கே என்ன... எங்கே என்றாலும் விஜய் படத்தை நான் பார்ப்பதில்லை. நல்ல முடிவுதான்னு நம்புறேன். :D