வணக்கமுங்க!

"என் இனிய தமிழ் மக்களே எங்கோ ஒரு தெக்கத்திக் கள்ளிக்காட்டின் ஏரிக்கரைகளில் கில்லி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் போல ஒரு ஓரமாக ஜல்லியடித்துக் கொண்டிருந்த உங்கள் பாசத்துக்குரிய கப்பி கான்கிரீட் காட்டிற்குள் நுழைந்து மக்கள் கூட்டத்திலே தொலைந்து புழுதிக் காற்று முகத்திலறைய மூச்சி திணறிக்கொண்டிருக்கும் ஒரு பட்டிக்காட்டானைப் போல இதோ இன்று உங்கள் முன் நட்சத்திரமாக" - பாரதிராஜா பேஸ் வாய்ஸ்ல எல்லாருக்கும் வணக்கமுங்க!

ஒரு மாசத்துக்கு முன்ன தமிழ்மணம் நிர்வாகிகளிடமிருந்து அழைப்பு வந்த போது கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. வாரத்துக்கு ஒரு பதிவு போடறதுக்கே டரியலாகுதே ஒரு வாரத்துக்கு தினம் ஒரு பதிவாவது போடனும்னா சிக்கி சின்னாபின்னம் ஆயிருமேன்னு மனசுல லேசா ஒரு கவலை வந்தது. இருந்தாலும் "எடுத்த சபதம் முடிப்பேன் தயங்காதே"ன்னு தலைவர் பாட்டு பேக்க்ரவுண்டுல மனசுக்குள்ள ஓட்டிக்கிட்டு தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்பினேன்.


ஏழு நாளைக்கு பதிவெழுதி எல்லாருக்கும் ஏழரையைக் கூட்டனுமேன்னு யோசிச்ச பிறகுதான் பதிவுக்கு மேட்டர் எப்படி தேத்தறதுன்னு பெரிய கன்பீசன் ஆஃப் டல்லாஸ் ஆகிப்போச்சு. இந்த நட்சத்திர வாரத்துல என்ன பண்ணலாம்னு நட்புகிட்ட கேட்டேன்.


"மாப்பு..நான் தமிழ்மணத்துல நட்சத்திரம் ஆக்கியிருக்காங்கடா"

"நட்சத்திரமா..ஏண்டா இந்த சினிமாக்காரனும் அரசியல்வாதியும் தான் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு அவனவன் தனக்குத்தானே விடிவெள்ளி விடியாத சனின்னு பட்டம் கொடுத்துக்கறான். நீயுமாடா"

"டேய் இது பட்டம் இல்லடா..வாரம் ஒரு பதிவரை நட்சத்திரம் ஆக்குவாங்க. இந்த வாரம் நான் நட்சத்திரம்"

"இத்தனை நாளா நீ மூட்டையக் கட்டுவியான்னு பாத்திருப்பாங்க..நீ கிளம்பற மாதிரி தெரியல..கெரகம் நட்சத்திரம் ஆக்கிவிட்டாலாவது முடிச்சுட்டு கடையை மூடுவானான்னு நட்சத்திரம் ஆக்கியிருப்பாங்க"

"டேய் நண்பனுக்கு உதவி பண்ணுடா"

"சரி வழக்கமா வாரத்துக்கு பத்து படம் பார்த்து அதுல குலுக்கல்ல ஒன்னைத் தேர்ந்தெடுத்து எழுதுவியே அது மாதிரி ஏழு படத்துக்கு எழுதிடு"

"என்ன மக்கா இப்படி சொல்லிட்ட..நான் எத்தனை படம் பார்த்தாலும் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு நல்ல படத்தைப் பத்தி தான்டே எழுதுவேன்"

"மொக்கை நாயே இப்படி ஒரு பில்டப்பா!! சரி கொசுவத்தி சுத்திரு"

"மாமா.. ஏழு நாளும் கொசுவத்தி சுத்தினா புகை எனக்கே மூச்சடைக்கும்டா. படிக்கறவங்க பாவம்"

"பாவம் பார்த்தா நீ பதிவெல்லாம் எழுதற? அப்படின்னா நீ என்னைக்கோ கிளம்பியிருக்கனுமே"

"பங்காளி! இங்க பாரு..நான் இப்போதைக்கு கிளம்பறதா இல்ல..பதிவெழுத மேட்டர் சொல்லு"

"இந்த கதை கவிதையெல்லாம்" (காதல் படத்துல வர்ற டைரகடர் டோன்ல கேட்கறான்..எனக்கு நேரம் வரும்டேய்)

"கவுஜ எழுதறதில்லன்னு நான் அவ்வையார் மேல சத்தியம் பண்ணிட்டேனே. கதை எழுதலாம். ஆனா கரு கிடைக்க மாட்டேங்குதே மாப்ள"

"கரு கிடைக்கலையா? என் கையில எதுவும் கிடைக்கறதுக்கு முன்ன ஓடிரு"

"தம்பி கோவிச்சுக்காதடா..வேற எதுனா ஐடியா கொடு"

"சரி ஆனாஊன்னா ?! போட்டு ஃபீலிங்க்ஸ விடுவியே அதையே பண்ணிடேன்"

"மச்சி இது நல்ல ஐடியாவா இருக்கு..?!-திங்கள், ?!-செவ்வாய்ன்னு ஒரு வாரம் ஓட்டிடலாம்..ஆனா கல்லைக் கொண்டு அடிப்பாங்கடா"

"அந்த பயமெல்லாம் இருந்தா பேசாம ஒன்னு பண்ணு. எதுனா இங்கிலீசோ ஸ்பானிஷோ பதிவு ஒன்னைப் படிச்சு அதை அப்படியே நீ எழுதற மாதிரி தமிழ்ல எழுதிடு"

"காப்பியா..ச்சே இந்த கப்பி ஒருக்காலும் அதை செய்யமாட்டான்"

"மனசாட்சிய மார்வாடிக் கடையில வச்சுட்டு பேசறயேடா..சரி இந்த பி.ந. எலக்கியத்துல எறங்கிடேன்"

"மாப்ள..என்னடா ஏதோ ரன்னிங் பஸ்ஸுல இருந்து எறங்கற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்ட..அதெல்லாம் படிச்சாலே தாவு தீருது..இதுல எழுதனும்னா அள்ளு கிழண்டுரும்டே"

"முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கற மாதிரி ஒத்துக்கிட்ட பிறகு ஏன்டா என் உசுரை எடுககற..எதுனா ஹாட் டாபிக்கா எடுத்து எழுது..மெசேஜ் சொல்லு"

"இளைய தளபதி விஜய் மெசேஜ் சொன்னாலே கேட்காத நம்ம மக்கள் நான் சொல்லி கேப்பாங்கன்ற?"

"அடேய் உனக்கு இப்ப என்ன தான்டா வேணும்"

"ஏழு நாள் பதிவெழுத மேட்டரு"

"அதுக்கு ஏன்டா என்கிட்ட ஏழரைய கூட்டற"

"எனக்கு மட்டும் ஆசையா மாப்பு..ஆப்பு பலமாயிருச்சு அதான்"

"தலைவர் சில வருஷத்துக்கு முன்ன சொன்னது தான்டா ஞாபகம் வருது"

"என்னது மக்கா? என் வழி தனி வழி..அதுவா?"

"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"

ஆகவே மக்களே..இந்த நிமிடம் வரை அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு என்ன எழுதப்போறேன்னு எனக்கே தெரியாது. "இந்த தபா மன்னிச்சிருங்கோ"ன்னு கேட்காத அளவுக்கு எழுதிடலாம்ன்னு மட்டும் நம்பிக்கை இருக்கு. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றியுடன் எப்பவும் போல இந்த வாரமும் உங்க பேராதரவு வேண்டி வணங்கி நிற்கும் உங்கள் பாசத்துக்குரிய கப்பி! :D78 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் :))

சொன்னது...

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நாந்தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா :))))தல கலக்குங்க!
காத்திருக்கிறோம்
நிறைய எதிர்பார்த்திருக்கிறோம் :)

சொன்னது...

//இந்த தபா மன்னிச்சிருங்கோ"ன்னு கேட்காத அளவுக்கு எழுதிடலாம்ன்னு மட்டும் நம்பிக்கை இருக்கு.///

:))))))

சொன்னது...

வாழ்த்துக்கள் Mr. கப்பி!

சொன்னது...

Hii Kappiss...
Annatheyy neenga thaan staraa...?? :))) vaalthukal....

first pathivey chummaa pulthiyaa kelapputhye.. :)))))

சொன்னது...

மொதப் பதிவே இந்த மொக்கை போட்டா இன்னும் ஓரு வாரம் எப்ப்டி கப்பி!

என்னமோ பண்ணுங்க!
:))

வாழ்த்தி வைக்கறேன்!

சொன்னது...

முதலில் வாழ்த்துக்கள் கப்பி

சொன்னது...

//ஆனா கரு கிடைக்க மாட்டேங்குதே மாப்ள"//

கடைக்கு போய் முட்டை வாங்கி உடைங்க தேவையான கரு கிடைக்கும்.
கரு உடையாமல் வேண்டும் என்றால் முட்டைய அவித்த பின் எடுக்கவும் அழகனா உருண்டையான கரு ரெடி.

இந்த க(ரு)டி போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா

சொன்னது...

வாங்க நட்சத்திரமே.....

அடிச்சு ஆடுங்க.

மொக்கை ஈஸ் அலவ்ட்:-)

சொன்னது...

//"மாப்பு..நான் தமிழ்மணத்துல நட்சத்திரம் ஆக்கியிருக்காங்கடா"//

சாதா நட்சத்திரமா இல்ல வால் நட்சத்திரமா?

சொன்னது...

வாழ்த்துகள்..
ஆக ஆரம்பிச்சிட்டீங்க.. அடிச்சு ஆடுங்க.. நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்..

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள் கப்பி!

நட்சத்திர வாரத்தில் கப்பி பய' என்ற பெயர்க்காரணமத்தைச் சொல்வீர்களா?

சொன்னது...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!!!

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள் கப்பி :))

சொன்னது...

//"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"//

உங்க ரசிகர் வட்டத்தை இப்படி சுருக்கிட்டீங்களே.. நீங்க சொல்ல வேண்டிய டயலாக்.. உலகத்தை இனி யாராலயும் காப்பாத்த முடியாது :P

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி..

சொன்னது...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் :))


"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"

சொன்னது...

வாழ்த்துகள் ராசா :)

கலக்கு. ஆரம்பமே அம்சமா இருக்குது.

சொன்னது...

அமீரக சமூகத்தின் நல்லாசி உனக்கு எப்போதும் உண்டு கப்பியாரே.

நீ அடித்து ஆடு.
கொளுத்தி போடு

சொன்னது...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஸ்டார் ஆகியிருக்குற கப்பியாருக்கு வாழ்த்துக்கள் ராசா.. வழக்கம்போல அடிச்சி ஆடு.. இந்த வாரத்துல நேயர் விருப்பம் ஒரு திரைப்பட விமர்சனம்(குருவி மாதிரி, தமிழில் இந்த மாதிரி படத்துக்கா பஞ்சம்..அடிச்சி ஆடு ராசா), அப்புறம் ஊர் சுத்தின கதையை பத்தி ஒரு பதிவு(சமீபத்துல எங்கேயும் போவலைன்னு சொல்லிறாதே, ஆபீசுக்கு போறதை எழுதினாக்கூட போதும்..)..

சொன்னது...

//கடைக்கு போய் முட்டை வாங்கி உடைங்க தேவையான கரு கிடைக்கும்.
கரு உடையாமல் வேண்டும் என்றால் முட்டைய அவித்த பின் எடுக்கவும் அழகனா உருண்டையான கரு ரெடி.//

நாராயணா....
இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா.....

சொன்னது...

வாழ்த்துக்கள்

சொன்னது...

//"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"//

தமிழர்களைன்னு சொல்லுங்க.
நாங்க ரெடி....
ம்.. நடக்கட்டும்

சொன்னது...

வாழ்த்துகள் கப்பி. சும்மாவே கதை அளப்பீரே. இப்ப எழுதக் கேக்கவா வேணும்:)
காத்திருக்கோம்.
ரெடி ஸ்டெடி ச்டார்ட் தெ ம்யூஜிக்!!

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள் ராசா... :)

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி! :)

சொன்னது...

வாழ்த்துகள் ராசா :)

கலக்கு. ஆரம்பமே அம்சமா இருக்குது.

சொன்னது...

வாழ்த்துகள்..
ஆக ஆரம்பிச்சிட்டீங்க.. அடிச்சு ஆடுங்க.. நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்..

சொன்னது...

உங்க ரசிகர் வட்டத்தை இப்படி சுருக்கிட்டீங்களே.. நீங்க சொல்ல வேண்டிய டயலாக்.. உலகத்தை இனி யாராலயும் காப்பாத்த முடியாது :P

சொன்னது...

WISH U ALL THE BEST.
THEN U MUST EXPLAIN UR NAME
"KAPPY"

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள் செல்லம் ;))

சொன்னது...

மொத பதிவே அசத்தலா இருக்கே... வாழ்த்துக்கள் ...

சொன்னது...

கப்பி

பிரிச்சு மேயுங்க ;-)

சொன்னது...

கப்பி ராசா,

கரு யாருக்கு வுமக்கு கிடைக்கலையேன்னு இத்தனை பொலம்பலா, என்னோட ரிக்வொஸ்ட் ஒரு பதிவுக்கு(வும்மோட செக்கை பழைய முகவ்ரிக்கே அனுப்பிடவும்.. :) ஸ்பானிஷ் ஏன், எப்போ கத்துக்கணுமின்னு தோணிச்சு அதெப்படி உங்கட தென் அமெரிக்கா தங்களில் இன்னமு மெருகேரிச்சின்னு சொல்லி ஒரு பதிவு போட்டு விடுங்கய்யா...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

சொன்னது...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்! கப்பி தானே இந்த வார ஸ்டார்! ஹி ஹி!!

சொன்னது...

ஆரம்ப பதிவே கலக்கல்ஸ் அறிவுஜீவி. கலக்குங்க. :-)

சொன்னது...

வாழ்த்துகள்..

சொன்னது...

/
VSK said...

மொதப் பதிவே இந்த மொக்கை போட்டா இன்னும் ஓரு வாரம் எப்ப்டி கப்பி!

என்னமோ பண்ணுங்க!
:))
/

haa haa haa
:))))))))

சொன்னது...

நட்சத்திரத்திற்கு இங்கு ஒரு வாழ்த்துக்கள் :))

சொன்னது...

Star wishes and expecting lot more experience posts rather Mokkai Posts
By
ILA & KRS & Vetti Payal

சொன்னது...

மக்கா... கிரியேட்டிவிட்டு எல்லாம் உனக்கு தானா வரும்! கவலை படாத! All the best and congrats :)

சொன்னது...

வாழத்துக்கள் கப்பி..கண்னை மூடிக்கொண்டு எதையாவது எழுதித்தள்ளுங்க...

சொன்னது...

வணக்கமுங்க....

வாழ்த்துகள்....

பேர காப்பாத்தீருங்க....

சொன்னது...

வாழ்த்துக்கள் சிறப்பான !!! படைப்புகளை தர :-)))

சொன்னது...

வாழ்த்துகள் ஊர்ஸ்
:-))

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பி

கலக்குங்க...

சொன்னது...

தல ஆரம்பமே கலக்கல்...

சொன்னது...

தமிழ்மணத்தின் நட்சத்திரமே...வாழ்க வாழ்க. நகைச்சுவைச் செல்வனே வாழ்க வாழ்க. சிரிப்பை வரவழைக்கும் சித்திரனே வாழ்க.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள். அடுத்தடுத்து என்னென்ன பதிவுகள் போட்டுத் தாக்கப் போறீங்கன்னு காத்துக்கிட்டிருக்கம்யா! :)

சொன்னது...

கப்பி,

வாழ்த்துக்கள்..கலக்குங்க

சொன்னது...

நட்சத்திர 50 :-)

சொன்னது...

நட்சத்திர நாயகனே,
நங்கையரை நாண வைக்கும் நாயகனே,
நடுநடுங்கும் கதைகளின் நாயகனே,
திரை விமர்சன தாதாவே,

சாம் ஆன்டர்சனின் ஆருயிர்த் தோழா,
எங்கள் கப்பி ராசா!

வாரம் முழுதும் நீ நட்சத்திரம்! உன்னைச் சுற்றி வரப் போகும் கோள்கள் நாங்கள்!

நட்சத்திர வாழ்த்துக்கள் கப்பி!!! :-)

சொன்னது...

எலே கப்பி,
இந்த வார இறுதியில் சுமாரா எத்தினி படம் பார்த்திருப்பே? சுமார் ஒரு இருவது படம், கூடவே ஒரு இருவது காப்பி!...இன்னுமா ஒரு விமர்சனம் கூட வரலை? ஏன் ஏன் ஏன்?

இந்த "வணக்கமுங்க" பதிவு - நட்சத்திரக் கணக்குல சேத்துக்க மாட்டோம், சொல்லிட்டேன் ஆமா! சீக்கிரம்...
வெயிட்டிங்க்ஸ் ஆஃப் நியூயார்க் ஃபார் நெக்ஸ்ட் பதிவு!

சொன்னது...

:-)))))))
ஜூப்பர் வருகைப்பதிவு!!!
இந்த வாரம் தமிழ்மணம் கலை கட்டப்போகுது!!
வாழ்த்துக்கள் கப்பி!! :D

சொன்னது...

ஆயில்யன்

டாங்கிஸ் தலைவா! :)


கருப்பன்

நன்றி!! :)


ஜொ.பா

வாங்க அண்ணாச்சி...நன்றி நன்றி :))


VSK

//மொதப் பதிவே இந்த மொக்கை போட்டா இன்னும் ஓரு வாரம் எப்ப்டி கப்பி!
//

ஆகா..இதுக்கே தளர்ந்துட்டா எப்படிங்க :D

நன்றி ஐயா!! :)

சொன்னது...

குசும்பன்

//கடைக்கு போய் முட்டை வாங்கி உடைங்க தேவையான கரு கிடைக்கும்.
கரு உடையாமல் வேண்டும் என்றால் முட்டைய அவித்த பின் எடுக்கவும் அழகனா உருண்டையான கரு ரெடி.//

முட்டையை உடைக்காம கரு எடுக்க எதுனா வழி இருக்கா? :))

//
சாதா நட்சத்திரமா இல்ல வால் நட்சத்திரமா?//

இதென்ன ஓட்டல்ல போடற தோசையா? சாதா, ஸ்பெசல், வாலுன்னுகிட்டு :)))


நன்றி தலீவா!! :))


துளசி டீச்சர்

//
மொக்கை ஈஸ் அலவ்ட்:-)//

டீச்சரே சொன்ன பிறகு என்ன கவலை :)))

நன்றி டீச்சர்!! :))கயல்விழி

//ஆக ஆரம்பிச்சிட்டீங்க//

எல்லாம் உங்கள நம்பித்தான் :))

நன்றிங்க!! :))


சுப்பையா

//நட்சத்திர வாரத்தில் கப்பி பய' என்ற பெயர்க்காரணமத்தைச் சொல்வீர்களா?//

ஐயா,
அட இதுல என்ன ரகசியம் இருக்கு..இப்படி கப்பித்தனமா இருக்கறதால கப்பிப்பய :))

நன்றிங்க ஐயா! :)

சொன்னது...

இறக்குவானை நிர்ஷன்

நன்றி!! :)


ஜி3

//உங்க ரசிகர் வட்டத்தை இப்படி சுருக்கிட்டீங்களே//

அவ்வ்வ்...பாசம் உங்க கண்ணை மறைக்குது :)))

நன்றிங்கோவ் :))


அய்யனார்

டாங்கிஸ் அய்ஸ் :))


தமிழகத்தின் தலைவா

நன்றி :))

சொன்னது...

கைப்புள்ள

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தல!! நன்னி!! :))


தம்பி

//அமீரக சமூகத்தின் நல்லாசி உனக்கு எப்போதும் உண்டு கப்பியாரே.//

ஒரு சக எலக்கியவாதியா உங்க ஆசி எப்பவும் உண்டுன்னு தெரியுமே தம்பியண்ணன் :))

நன்றி ஹை!! :))


சந்தோஷ்

நன்றி அண்ணாத்த!!

குருவி மாதிரி ஒரு படத்தைப் பார்த்துட்ட்டா..ம்ம்முடியல :)))
ஊர்சுத்தல் பதிவுதானே...போட்ருவோம் :D


திகழ்மிளிர்

நன்றி!!

சொன்னது...

குமார்

நன்றி தலைவா :)


வல்லிசிம்ஹன்

//ரெடி ஸ்டெடி ச்டார்ட் தெ ம்யூஜிக்!!//

இஸ்டார்ர்ட்ட்ட்டு :))

நன்றிங்கம்மா :)


இராம்

நன்றிண்ணே :)


பாலபாரதி

வாங்க தல! நன்றி!! :)

சொன்னது...

சிபி

என்னாச்சு? நன்னி :)))


சுடர்மணி

நன்றி!! :)


கோபிநாத்

டாங்கிஸ் அண்ணாத்த!! :)


களப்பிரர்

வாங்க தலைவா!! நன்றி!!

சொன்னது...

கானா பிரபா

மேய்ஞ்சிருவோம் :))

நன்றி தல!


தெக்ஸ்

தென்னமெரிக்கா பத்திதானே..எழுதிருவோம்!

நன்றி தெக்ஸ் :)


மை பிரண்ட்

வளரெ நன்னி டிடி :))


மங்களூர் சிவா

நன்றி தலைவா! :))

சொன்னது...

தமிழ் பிரியன்

நன்றி! நன்றி!! :)


ILA, KRS, வெட்டி

மொக்கை வேணாமா..ஹி ஹி
டாங்க்ஸ் அண்ணாத்தைஸ் :))


ட்ரீம்ஸு

நன்றி மக்கா :))


ராஜீபன்

கண்ணைத் தொறந்து எழுதினாலே தகிங்கினத்தோம்..இதுல கண்ணை மூடிக்கிட்டா :))

நன்றி!! :))


இரண்டாம் சொக்கன்

வாங்கண்ணே!! பேரைக் காப்பாத்திரலாங்கற நம்பிக்கைல தான் இருக்கேண்ணே!!

நன்றி!! :)

சொன்னது...

கிரி

எதுக்கு இவ்ளோ ஆச்சரியம் :))

நன்றி!!


பாலராஜன்கீதா

வாங்க ஊர்ஸ் :)

நன்றி!! :)


தமிழன்

நன்றி தல!! :))


ஜி.ராகவன்

உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லையா :)))

நன்றி தலைவா!! :)

சொன்னது...

மதுவதனன்

நன்றி தல!!


KRS

அட..50க்கு கரீட்டா வந்துட்டீங்களே
அண்ணாச்சி :)))

சுற்றிவரப்போகும் கோளா?? இல்ல சுத்திசுத்தி அடிக்கப்போற கோளா? :))

//சுமார் ஒரு இருவது படம், கூடவே ஒரு இருவது காப்பி!...இன்னுமா ஒரு விமர்சனம் கூட வரலை? ஏன் ஏன் ஏன்?//

இப்படி அவசரப்பட்டா எப்படி?? பிக்கப் ஸ்லோவாத்தான் இருக்கும் :)))

என்னது இந்த பதிவு கணக்குல சேர்த்துக்க மாட்டீயளா? இதெல்லாம் கள்ள ஆட்டம் :)))


சிவிஆர்

நன்றி அண்ணாச்சி :)

சொன்னது...

வாழ்த்துக்கள் மக்கா!!! இனி வாரம் காலம் கப்பியின் கையில் னு சும்மாவா சொன்னாங்க....

சொன்னது...

இந்த வாஆஆஆரம்அதிரடி வாஆஆஆரம்!!

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள், கப்பி!

சொன்னது...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் :))

சொன்னது...

வாழ்த்துக்கள் கப்பியய்யா! நான் கொஞ்சம் லேட்டா வாழ்த்து சொல்றேன். நேத்து நெட் சொதப்பல். அதான். வாழ்த்துக்கள்! சும்மா கில்லி மாதிரி ஆடனும்!!!

இப்படிக்கு

அபிஅப்பா/அம்மா/அபி/நட்டு

சொன்னது...

ஜி

//இனி வாரம் காலம் கப்பியின் கையில் னு சும்மாவா சொன்னாங்க....//

அப்படி வேற சொல்லிட்டாங்களா :))

நன்றி மக்கா


கொத்ஸ்

அதிர்வது இருக்கட்டும்?? அடி யாருக்கு? :))

நன்னி!! ))


தஞ்சாவூரான்

வாங்க தல!! நன்றி! :)


உதயகுமார்

நன்றி அண்ணாத்த!!


அபிஅப்பா

//நேத்து நெட் சொதப்பல்//

இது ஏதோ வெளிநாட்டு சதின்னு நினைக்கறேன் :))

அபிஅப்பா,அம்மா,அபி,நட்டு நெஞ்சார்ந்த நன்றிகள்!! :)

சொன்னது...

வாழ்த்துக்கள் சாமியோவ்...:))

சொன்னது...

முன்னாள் ஜூனியர்.. இந்நாள் ஸ்பான்சர்... எந்நாளும் சூப்பர் ஸ்டார் வாழ்த்துகள்

சொன்னது...

வாழ்த்துக்கள்....அடிச்சு ஆடுங்க.

சொன்னது...

சஞ்சய்

நன்றி தலைவா! :))


வினையூக்கி

எந்நாளும் ஜூனியர் தான் :)))

நன்றி அண்ணாத்த :))


சுதர்சன்.கோபால்

நன்றி தல! :)

சொன்னது...

நட்சத்திர வாழ்த்துக்கள் கப்பி!

ஆரம்ப பதிவே சும்மா அதிருது:)))

சொன்னது...

felicitaciones la estrella de dallas

espero algo de alegre.

vamos kappi

சொன்னது...

திவ்யா

நன்றிகள்! :))


பெருசு

gracias thala!!

espero que es :))

சொன்னது...

:-)))))) perfect calvin strip... kalakunga boss :-)

சொன்னது...

யாத்திரீகன்

நன்றி தலைவா! :)