குணா (எ) குணசேகர்

குணாவை நீங்கள் ஏதாவதொரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலோ மாவட்ட நீதிமன்ற வாயிலிலோ அல்லது தாலுக்கா அலுவலகத்திலோ பார்த்திருக்கலாம். இதற்கு முன் நீங்கள் அவனைப் பார்த்திராவிட்டாலும் எளிதில் அடையாளம் காண இயலும். வயது இருபத்தி ஏழு. ஐந்தரை அடி உயரம். வெள்ளை கதர் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருப்பான். ஒரு இளம்பெண் தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மறுநாள் பூப்போட்ட சட்டை அணிந்திருப்பான். வலது கையில் இரண்டு மோதிரங்களும் இடது கையில் செப்புப்பட்டையும் கழுத்தில் செயினும் உறங்கும் நேரம் தவிர எப்போதும் அணிந்திருப்பான். பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்தால் வரும் பின்விளைவுகளை வெள்ளியன்று வெளியான ஒரு நாளிதழின் வண்ணப்பக்கத்தில் அவன் படித்ததில் இருந்து அவனுடைய நோக்கியா சட்டைப் பையில் துருத்திக் கொண்டோ அல்லது அவன் உள்ளங்கை வியர்வையில் நனைந்துகொண்டோ இருக்கும்.

குணா முதன்முதலில் சண்டையில் இறங்கி அடிவாங்கியது காதலுக்காகத்தான். அதுவும் அவனுடைய நண்பனின் காதலுக்கு. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய நண்பன் செல்வம் வேறு ஒரு ஏரியா பெண்ணைக் காதலிக்க அந்த ஏரியாவிலிருந்து இவர்களை அடிக்க வந்தார்கள். அவர்களைக் கண்டதும் செல்வம் உட்பட எல்லோரும் ஓடிவிட குணா மட்டும் சிக்கிவிட்டான். குணாவிற்கு அடி பலமாக விழுந்தாலும் அவன் வாங்கியதில் பாதியையாவது அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தான். உடைந்த கையோடு வீட்டிற்கு வந்து சாக்கடையில் விழுந்து விட்டதாக வீங்கிய முகத்துடன் சொன்ன அவனை யாரும் நம்பவில்லை. குணாவின் காயத்துக்கு கட்டுப் போட்டுவிட்டுத் தலையிலும் தண்ணீர் தெளித்துவிட்டனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை கலெக்டராக வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்த குணா இறுதித் தேர்வில் கணக்கில் தேர்ச்சி பெறாததால் ஒரு வருடம் தடை ஏற்பட்டது. அதற்குள் குணாவின் லட்சியமும் மாறிவிட்டது. உடலையும் மூளையையும் வருத்திப் படித்து கலெக்டராகி சம்பாதிப்பதைவிட நேராக வேலையில் இறங்கிவிட முடிவு செய்தான். முதலில் தன் தந்தையின் உரக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பின் ஆற்று மணல் டெண்டர் எடுத்து சிறிது பணம் பார்த்து சொந்தமாக இரண்டு லாரிகள் வாங்கினான். அப்போது விசிட்டிங் கார்ட் அடிக்கும்போது பேருக்குப் பிறகு போட ஒரு பட்டம் இல்லையென்ற கவலையோடு தொலைதூரக் கல்வி திட்டத்தில் பி.பி.ஏ. சேர்ந்தான். நண்பன் ஒருவனின் அறிவுரையினால் ஒரு பெட்ரோல் பங்க் டெண்டர் எடுக்க முயன்று நீதிமன்ற வழக்கிலும் மற்ற செலவுகளிலும் ஒரு லாரியை விற்க வேண்டிவந்தது. பெட்ரோல் பங்குக்கும் அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் தன்னிடமிருந்த ஒரு லாரியை வேலையில்லாமல் இருந்த தன் மாமாவிடம் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட்டில் இறங்கிவிட்டான்.

அவன் அத்தொழிலில் சிக்கல்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு செயலில் இறங்கியது அவனுக்கு லாபத்தை பன்மடங்காக்கிவிட்டது. சட்டச் சிக்கலில் நீதிமன்ற வழக்குகளில் இருக்கும் நிலத்தைத் தேடிப் பிடிப்பான். அதன் உரிமையாளரிடம் குறைந்த விலைக்கு நிலத்தை பேரம் பேசுவான். பல வருடங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். அவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு வழக்கின் எதிர்கட்சியிடம் சென்று பேசுவான். சில சமயம் பேச்சுவார்த்தையோடு காரியம் முடிந்துவிடும்.சில சமயங்களில் கைகலப்பு வரை செல்ல நேரிடும். அப்படிப்பட்ட நேரங்களில் அவனது கட்சிப் பதவி துணை கொடுக்கும். குணாவிற்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருப்பதால் இதுமாதிரியான பிரச்சனைகளை எளிதாக தீர்த்துவிடுவான். இவனுடைய பேச்சுவார்த்தையால் வழக்கு நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்படும். பிறகு அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடுவான். எல்லா மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சரியான பங்கு சென்றுவிடுவதால் குணா அனைவருக்கும் நல்லவனாகவே இருந்தான்.

குணாவிற்கு ஒரு தேசிய கட்சியின் இளைஞர் அணி வட்டச் செயலாளர் பதவி தேடிவந்தது. இதற்கு முன் ஒரு மாநிலக் கட்சியின் உறுப்பினராக இருந்தான். அங்கு இளைஞர் அணியில் ஒரு பதவிக்கு துண்டு போட்டு சில வருடங்கள் காத்திருந்தான். இவனது சிறப்பை புரிந்துகொள்ளாமல் உள்ளூர் பெருசுகள் இவனை கண்டுகொள்ளவில்லை. தேசிய கட்சியின் புதிய மாவட்ட செயலாளர் இவனை அழைத்து இளைஞர் அணி பொறுப்பையும் தந்து கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் எவ்வளவு தூரமென்றாலும் பைக்கிலேயே சென்று கொண்டிருந்த குணா கட்சித் தோழர்களின் அன்புத்தொல்லையால் சிகப்பு நிற ஸ்கார்பியோ ஒன்றை வாங்கி கட்சியின் கொடியை பட்டொளி வீச பறக்கவிட்டான். கட்சி போஸ்டர்களில் இரண்டாம் வரிசையில் செல்போனுடன் கும்பிடு போட்டான்.

குணா பெரும்பாலான நேரங்களில் உண்மை பேசுவதில்லை என்ற கொள்கையில் இருப்பவன். அதிலும் ஒவ்வொருவரிடம் ஒரு பொய்யை சொல்லி வைப்பான். ஏதாவது ஒரு பாரில் இருந்து கொண்டு தன் வீட்டாரிடம் சென்னைக்கு சென்றிருப்பதாகவும் நண்பர்களிடம் வேலை விஷயமாக அலகாபாத் சென்றிருப்பதாகவும் தொழில்முறை நண்பர்களிடம் உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருப்பதாகவும் கட்சி நண்பர்களிடம் வட்டச்செயலாளரைப் பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் ஆளுக்கொரு பொய்யை அவிழ்த்துவிடுவான். போதையில் இருந்தாலும் சொல்லிய பொய்களை சரியாக ஞாபகம் வைத்துக்கொண்டு அடுத்த முறை அவர்களை சந்திக்கையில் அதற்கு மேல் கதைகளை அடுக்குவான்.

தன் பொய் சொல்லும் திறமையின் மீது அவனுக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கையுண்டு. ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது ஒரகடம் அருகில் ஐநூறு ஏக்கரை விலை முடித்துக் கொடுத்ததாக சொல்வான். ஜார்ஜ் புஷ் இந்தியா வந்ததும் உண்மை. ஒரகடம் அருகில் ஆயிரம் ஏக்கர் இருப்பதும் உண்மை. ஆனால் குணா அதை விலை முடித்துக் கொடுத்தானா என்பது அவனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

குணா பலமுறை காதலில் குதித்திருக்கிறான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவி தேவியைக் காதலித்தான். அவளது பெற்றோர்கள் அடுத்த வருடமே அவளது படிப்பை நிறுத்தி திருமணம் செய்துவிட்டனர். பதினொன்றாம் வகுப்பில் தன் தெருவில் வசித்த கற்பகம் என்ற கல்லூரி மாணவியைக் குணா ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்த இரண்டாவது வாரம் கற்பகத்தின் அப்பாவிற்கு மதுரைக்கு பணிமாற்றம் வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் யாரையும் காதலிக்கக் கூடாதென்ற அவனின் மன உறுதி சில பெண்களைக் காப்பாற்றியது. பின்னர் தொழிலில் முழுமையாக இறங்கிவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு பெண்ணைக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். சுவற்றில் அடித்த பந்துபோல் ஒவ்வொரு முறையும்அவனது காதல் அம்புகள் திரும்பிவந்ததில் அவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை விஷயமாக அலைந்துகொண்டு இருபத்திநாலு மணி நேரமும் சரக்கடித்து போதையில் இருந்த குணாவிற்கு சென்ற மாதம் அந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. சார்பதிவாளராக புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த மகாலட்சுமியைக் கண்டதும் காதலில் விழுந்தான். அவன் காதலில் விழுவது இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.37 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நல்ல சிறுகதை கப்பி. முடிவு உள்ளுக்குள்ளே பட்சி சொல்லிச்சுதான் என்றாலும் வந்த நேரம் எதிர்பாராதது! டப்பென்று கியர் மாற்றியது!

சொன்னது...

//அவன் காதலில் விழுவது இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.//

:))))))))))))))))))))))))))))))

இந்த ஒத்த வரிய சொல்றதுக்கா அவ்ளோஓஓஓஓஓஓஒ பில்டப்பு :P

சொன்னது...

//அதோடு அவன் கதை முடிந்தது.//

வகைப்படுத்தல் அனுபவம்ன்னு இல்ல இருக்கணும்??

சொன்னது...

//அதோடு அவன் கதை முடிந்தது.
//

oru sarithiram ivalo seekiram mudinchuduchu paaraatunga :-))))

சொன்னது...

//அதோடு அவன் கதை முடிந்தது.//

இதுக்குத்தான் இந்த ஓவர் பில்ட்-அப்-ஆ???? ;-)

சொன்னது...

இந்த மகாலட்சுமிங்களே இப்படித்தான் எசமான்.

சொன்னது...

நல்லா இருந்தது கப்பி.

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

நன்றாக இருக்கிறது!

சொன்னது...

//ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை விஷயமாக அலைந்துகொண்டு இருபத்திநாலு மணி நேரமும் சரக்கடித்து போதையில்
//

சூப்பர் கேரக்டர் :)))))))))))))

சொன்னது...

// மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.//

இருந்த மீதி கதையும் முடிஞ்சுப்போச்சு :)

சொன்னது...

எங்க காதலுக்குத் தூதுபோனியே ராசா.. இப்ப கல்யாணத்துக்கும் வருவியா கண்ணு ?

சொன்னது...

பினாத்தல் சுரேஷ்

நன்றி தலைவா! :)


G3

அந்த ஒத்த வரிதானே கதையே..அவ்வ் :))


கொத்ஸ்

//வகைப்படுத்தல் அனுபவம்ன்னு இல்ல இருக்கணும்??//

கிளம்பிட்டீரா :))

சொன்னது...

ஸ்யாம்

வாங்க நாட்ஸ்! :)


மை ஃபிரண்ட்

:))


தம்பியண்ணன்

//இந்த மகாலட்சுமிங்களே இப்படித்தான் எசமான்.//

ஆமாண்ணே ஆமா :))

சொன்னது...

ஸ்ரீ

நன்றி!! :)


குசும்பன்

டாங்கிஸ் தலீவா!! :)


ஆயில்யன்

வாங்க தல!! நன்றி!! :)


மஹாலக்ஸ்மி

இந்த பெயரில் 7-1/2.7-1/2.7-1.2.111 என்ற ஐ.பி.யில் இருந்து வந்தது யாருன்னு தெரியுது :))

சொன்னது...

:))) Nallathoru sirukathai...

சொன்னது...

இராசா.. ஒன்கிட்டே இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.... :)

சொன்னது...

//இராம்/Raam சொன்னது...
இராசா.. ஒன்கிட்டே இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.... :)//

:-))))

என்னாச்சு கப்பி?
நல்லாத் தானே இருக்கே?

சரி.....கொல-ராடோ போய் வந்தியே! எனி மோகினி கீகினி அடிச்சுப் போட்டுருச்சா ராசா? :-))

சொன்னது...

இந்தக் கதையில யாரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாது-ன்னு வேற முடிவு கட்டிட்டியா என்ன? :-)

சொன்னது...

//சார்----பதிவாளராக---- புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த மகாலட்சுமியைக் கண்டதும் காதலில் விழுந்தான்//

இந்தப் பதிவாளர் மகாலட்சுமியின் பதிவு என்னா கப்பி?
கொஞ்சம் சுட்டி கொடுங்க!

சொன்னது...

ஜி

நன்றி மக்கா! :))


இராமண்னே

இதைப் படிச்சீங்களா? குறிப்பா மூன்றாவது :))


KRS

//இந்தக் கதையில யாரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாது-ன்னு வேற முடிவு கட்டிட்டியா என்ன? :-)//

கதைனா யாராவது யார்கூடவாவது பேசியே ஆகனும்னு நீங்க முடிவுகட்டிடீங்களோ? :)//இந்தப் பதிவாளர் மகாலட்சுமியின் பதிவு என்னா கப்பி?
கொஞ்சம் சுட்டி கொடுங்க!//

அவ்வ்வ்...ம்ம்முடியல :))

சொன்னது...

//அதோடு அவன் கதை முடிந்தது.//

அட பாவமே தல என்ன இப்பிடி சொல்லிட்டிங்க...:):)

சொன்னது...

//அதோடு அவன் கதை முடிந்தது.//

வகைப்படுத்தல் அனுபவம்ன்னு இல்ல இருக்கணும்??///

ரிப்பீட்டு...

சொன்னது...

நல்லாயிருக்கு...
நல்ல வேகம் கதையில...

சொன்னது...

//இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது./

ROFL... enakku mudivu romba pidichu irundhadhu :)

சொன்னது...

தமிழன்

கொத்ஸுக்கு சொன்ன பதில் உங்களுக்கும் ரிப்பீட்டு :))


நன்றி!!


ட்ரீம்ஸு

டாங்கிஸ் மக்கா :)

சொன்னது...

சிறுகதை ரொம்ப நல்லாயிருக்கு கப்பி!

சொன்னது...

\அவனுடைய நோக்கியா சட்டைப் பையில் துருத்திக் கொண்டோ அல்லது அவன் உள்ளங்கை வியர்வையில் நனைந்துகொண்டோ இருக்கும்.\

இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட நுணுக்கமாக கூறியிருப்பது அருமை!!

சொன்னது...

கதை சூப்பர் :-)

சொன்னது...

எசமான்...கதை சூப்பர் ;))

சொன்னது...

திவ்யா

நன்றி! நன்றி!! :)


வெட்டிகாரு

டாங்கிஸு :))


ஜஸ்டிஸ் கோபிநாத்

நன்றிங்க எசமான் :)

சொன்னது...

கப்பி, நல்லாத்தான் இருக்கு கதை!!!

சொன்னது...

அருமை அருமை அருமை

சொன்னது...

அபி அப்பா

நன்றி தல! :)


ஜிரா

டாங்கிஸ் அண்ணாச்சி!! :)

சொன்னது...

/
G3 said...

//அவன் காதலில் விழுவது இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.//

:))))))))))))))))))))))))))))))

இந்த ஒத்த வரிய சொல்றதுக்கா அவ்ளோஓஓஓஓஓஓஒ பில்டப்பு :P
/

ரிப்பீட்டேேஏஏஏஏஏஏஏய்

சொன்னது...

/
இலவசக்கொத்தனார் said...

//அதோடு அவன் கதை முடிந்தது.//

வகைப்படுத்தல் அனுபவம்ன்னு இல்ல இருக்கணும்??
/

:))))))

சொன்னது...

மங்களூர் சிவா

வாங்க :))