D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.



24 பின்னூட்டங்கள்:

சொன்னது...

Firstu :)))

சொன்னது...

:))))

Kadaisi parakku munnadi vara nalla theliva irundhudhu kadhai.. kadaisi para ezhudhumbodhu mattum ungalukkulla irukkara pinnaveenathuvavyaadhi lighta etti paathuruchu pola ;)

சொன்னது...

"D70" பேரை பார்த்ததும் ஓடோடி வந்தேன் (எனக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)

//'மூனேமுக்கால் ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' //
இது எந்த காலத்துல இருந்தது???

நல்ல எழுத்தோட்டம். முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு

சொன்னது...

வேளச்சேரி டூ வாவின் அடிக்கடி பயணம் செய்ததை நினைவு கூறும் வண்ணம் இந்த தலைப்பு போல.

நல்லா இருக்குப்பா கதை!

மதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)

மூனே முக்கால் னு போட்டு இருக்க கூடவே இரண்டு சொகுசு பேருந்துகளை தவிர்த்துனு போட்டு இருக்க. லைட்டா இடிக்கல ;)

சொன்னது...

kavithai saayal adikkuthuppa........
kavithai ezhutha ready aagittannu nenakkiraen.......

சொன்னது...

ஜி3

நன்னி!

மொத பின்னூட்டம் வரைக்கும் நல்லா இருந்தது..ரெண்டாவது பின்னூட்டத்துல மட்டும் உங்களுக்குள்ள இருக்க கொலவெறி லைட்டா எட்டி பார்த்துடுச்சு போல ;))


பிரேம்குமார்

//னக்கு மிகவும் பிரியமான பேருந்துத்தடம்)//

எனக்கும் :)

மூனேமுக்கால்...இத வச்சு ஒரு ஸ்டேஜ்கூட தாண்ட முடியாது? :))

நன்றி தல!!

நன்றி தல

சொன்னது...

//மதுரையில் நீ படித்ததற்கும் தங்கரீகலுக்கும், சொர்க்கத்திற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று நம்புகிறேன் ;)//

சத்தியமா கிடையாதுங்கறேன் :))


//மூனே முக்கால் னு போட்டு இருக்//

அட ஆமா..காலெல்லாம் தூக்கியாச்சுல்ல...மூனரைன்னு மாத்திட்டேன்..ஹி ஹி

நன்றி!! :)


பிரேம்குமார்

மூன்றரைன்னு மாத்திட்டேன் தல ;))



ஆனந்த்

கவிதை எழுதமாட்டேன்னு அவ்வையார் மேல நான் சத்தியம் செஞ்சதுதான் உனக்கு தெரியுமே!?

சொன்னது...

dei nee kavithai ezhuthu ezhuthama po.......ethukku avvaiyaar ellam vambukku izhukkara........ .......
athu sari ennamo vaazhkkaila panna ella sabathathaiyum kadai pidikira maathirila pesara....... nalla irukkae .........yaara yematha paakara....

சொன்னது...

//அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.
//

அவன் தான் வீட்டுக்குப் போய் விட்டத்தை வெறிக்க ஆரம்பிச்சு, மகள் கிட்ட தைரியம் சொல்ல ஆரம்பிச்சிட்டானே...அவனை பத்தி ஏன் கண்டக்டர் ஏஞ்சொல்லறாரு? நீ எனக்கு இதை வெளக்கு...

சொன்னது...

அருமை'ப்பா...

சொன்னது...

அட கதை முடிஞ்சுடுச்சா...!?

சொன்னது...

க ஃபார் கப்பி!
க ஃபார் கலக்கிங்ஸ்!
க ஃபார்...சரி வேணாம்! :))

போன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ? :)

சொன்னது...

D70 என்றதும் நிக்கான் கேமரா பதிவாச்சோ-ன்னு நினைச்சி ஓடி வந்தேன்! :)
ஆனா இந்தப் பல்லவன் D70-உம் ரொம்பப் பிடிக்கும் தான்!

//முடிவு தான் பீதிய கெளப்பிவிட்டுருச்சு//

அதான் எங்க கப்பி இஷ்டைல்! :)

சொன்னது...

கதை என்னாமே நல்லா தான் இருக்கு...ஆனா கடைசியில குழப்புற மாதிரி இருக்கு..!

சொன்னது...

\\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
க ஃபார் கப்பி!
க ஃபார் கலக்கிங்ஸ்!
க ஃபார்...சரி வேணாம்! :))

போன மாசம்-மார்கழி மாதிரி இல்லாம இந்த மாசமாச்சும் ஒரு பதிவு போட்டியே கப்பி...ஒரு கா மூத்த பதிவர் ஆயிட்டீயோ? :)
\\

என்ன தல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியா இப்போ கேட்குறிங்க...கப்பி எல்லாம் எப்பவோ மூத்த பதிவர் ஆயிட்டாரு...

அவரு என்னிக்கு வெறும் சிரிப்பான் போட ஆரம்பிச்சாரோ அப்பாவே ஆயிட்டாரு ;)

சொன்னது...

கதையின் நடை அருமை கப்பி:)

கடைசி paragraph தான் புரியல.....

உங்க எழுத்து ரேஞ்செல்லாம் புரியற அளவுக்கு , எனக்கு தேர்ச்சி இன்னும் வரல போல:((

சொன்னது...

ஒரு பேருந்து பயணத்தின் காட்சியை கண்முன் கொண்டு வருகிறது உங்கள் எழுத்து....அருமை கப்பி!!

சொன்னது...

நல்ல கதை கப்பி... என்னவோ பஸ்ல ஏறுனா சைட் அடிக்காம அப்படியே சிந்தனை வசப்படுறா மாதிரு ஒரு பில்ட்-அப்... கலக்கல் போங்க ;)

சொன்னது...

ஆனந்து..உன்னை ஏமாத்தவே முடியாது மாப்பு :))


கைப்புள்ள

தல

எல்லாத்தையும் விளக்கத்தான் முடியுமா இல்ல எல்லாம் காரணத்தோடதான் நடக்குதா? ;)


இராம்

நன்றிண்ணே!

சொன்னது...

தமிழன் - கறுப்பி

_/\_ :)



KRS

ர ஃபார் ரவிசங்கர்
ர ஃபார் ரவுண்டு கட்டி அடிக்கறது
ர ஃபார்..சரி வேணாம் விடுங்க :))

நன்றி அண்ணாச்சி :)


கோபிநாத்

ஒரு மூத்த பதிவர் என்னை மூத்த பதிவர்ன்னு சொல்றதை ஏத்துக்கறேன் (c) தம்பி ;)

நன்றி அண்ணாச்சி!!

சொன்னது...

திவ்யா

எதுனாலும் நேராவே திட்டிடுங்க :))

நன்றி!!


நட்டி

நான் எப்ப பாஸ் அப்படியெல்லாம் சொன்னேன்? :))

நன்றி!

சொன்னது...

கப்பி,
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

சொன்னது...

Lastu (illa)! :))))

சொன்னது...

தல நலமா மறுபடி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க