யார் அந்த டினா?

உருகுவே வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்க விடாத விசா விதிமுறைகள். ஆறு மாதம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால் அன்று மாலையே திரும்பிவந்தாலும் பரவாயில்லை. இப்படியான விதிமுறைகளின் ஓட்டைகள் வழியே சென்ற வாரம் அர்ஜென்டினா தலைநகர் பொய்னொஸ் ஐரிஸ்(Buenos Aires) பயணம்.

மாண்டிவிடியோவில் இருந்து விமானத்தில் சென்றால் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்பே லேண்ட் ஆகும் தூரம் தான். நான் சென்றது கப்பலில். மாண்டிவிடியோவில் இருந்து கலோனியா என்ற ஊர் வரை இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். கலோனியா வெள்ளி ஆற்றின்(Rio de La Plata) கரையில் இருக்கும் உருகுவேயின் மிகப் பழமையான நகரம். ஆற்றின் அந்தப் பக்கம் அர்ஜெண்டினா. 'Rio de La Plata' உருகுவே ஆறும்(Uruguay River) பரானா ஆறும்(Paraná River) இணைந்து உருவான கயவாய். கலோனியா பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக.

கலோனியாவில் இருந்து 'Buquebus' என்றழைக்கப்படும் கப்பல்வழிப் பயணம். பயணத்தின்போது மேல்தளத்திற்கு செல்ல அனுமதி இல்லை. முதலிலேயே கப்பலில் ஏறிவிட்டதால் ஜன்னலோர சீட்டைப் பிடித்து கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்க்க முடிந்தது. கடல் காற்றை அனுபவிக்க முடியவில்லை.

இமிக்ரேஷன் வேலைகளெல்லாம் கப்பலில் ஏறுவதற்கு முன் கலோனியாவிலேயே முடித்து அனுப்பிவிட்டதால் டாக்ஸியைப் பிடித்து ஓட்டலுக்குச் சென்றேன். செக்-இன் செய்துவிட்டு நகரை சுற்றிப் பார்க்க ஏதேனும் சிட்டி டூர் சேவை இருக்கிறதா என ஓட்டலில் கேட்டதற்கு இரண்டு மணிக்கு நேரம் குறித்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரம் எதற்கு ஓட்டல் அறையில் வெட்டியாக இருக்க வேண்டுமென ரிசப்ஷனில் வைக்கப்பட்டிருந்த ஓசி மேப்பை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன்.

முதலில் கண்ணில் பட்டது ஓபெலிஸ்க் கோபுரம்(The Obelisk). உலகின் மிக அகலமான சாலையான ஜூலை 9 சாலையின்(Nueve de Julio) நடுவிலுள்ள 220 அடி கோபுரம். நான்கு வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டதாக விக்கி சொல்கிறது. அந்த தெரு முனையில் இருந்த மெக்டொனால்ட்ஸில் 'Sin carne, sin pollo' என்று அரைகுறை ஸ்பானிஷில் பேசி ஒரு பர்கர் வாங்கி வயிற்றை நிரப்பிக்கொண்டு அந்த சாலையின் அடுத்த முனைக்கு நடக்க ஆரம்பித்தேன்.

கொர்ரியென்தெஸ் அவென்யூ(Corrientes Avenue) வழியாக ப்ளோரிடா தெருவை(Florida Street) அடைந்தேன். ப்ளோரிடா தெரு பொய்னொஸ் ஐரிஸ் நகரத்தின் பழமையான தெருக்களில் ஒன்று. நகரின் பழமையான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன. இப்போது முழுக்க முழுக்க வணிக வளாகங்களும் சிறு கடைகளும், தெருவோர இசை,ஓவியக் கலைஞர்களுமாக எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கிறது. ஒரு கலைஞர் மிகவும் இனிமையாக புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் நின்று கேட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ப்ளோரிடா தெருவில் இருந்து மே சதுக்கம்(Plaza de Mayo) நோக்கி நடந்தபோது மணி ஒன்றே கால் ஆகிவிட்டிருந்தது. இரண்டு மணிக்கு ஓட்டலில் இருக்க வேண்டுமென்பதால் ஓட்டல் நோக்கி நடந்தேன்.

சரியாக இரண்டு மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டலில் இருந்து ஒவ்வொரு ஓட்டலாக சென்று காத்திருந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்ப அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. முதல் நிறுத்தம் நான் விட்ட இடத்திலேயே. மே சதுக்கம்.

இங்கிருக்கும் காஸா ரோசாதா(Casa Rosada) என்றழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அர்ஜெண்டின அதிபரின் அலுவலகம் இருக்கிறது. அதன் அருகில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கதீட்ரல் தேவாலயமும் உள்ளது.

அன்று அங்கு ஊர்வலம் ஏதோ இருந்ததால் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அங்கிருந்த் கிளம்பிவிட்டோம். அங்கிருந்து நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற தெருக்களின் வழியாக தெற்குப்பகுதிக்கு வந்தோம்.அடுத்த நிறுத்தம் லா போகா(La Boca). போகா ஜூனியர்ஸ்(Boca Juniors) என்ற புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியின் குகை. டேங்கோ நடனக் கலைஞர்களும் ஓவியர்களும் பெருமளவில் வாழும் பகுதி.பெரும்பாலான வீடுகள் அருகிலுள்ள துறைமுகங்களில் இருந்து கப்பல்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்புத் தகரங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் பத்து குடும்பங்கள் வரை ஒன்றாக சேர்ந்து வசிப்பார்களாம். வீட்டுச் சுவர்களில் ஓவியங்களும் , பல நாட்டு தேசியக் கொடிகளும் வரையப்பட்டு வண்ணமயமாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு பலகணியிலும் சுண்ணாம்பினால் செய்த பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்.அங்குள்ள கமினிதோ(Caminito) என்ற தெரு புகழ்பெற்றது. டேங்கோ நடன அரங்கங்கள் நிறைந்த தெரு. கைவினைப் பொருட்களும் ஓவியங்களும் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. நகரின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.கமினிதோ தெருவை படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது டேங்கோ நடனக் காஸ்ட்யூமில் குறுக்கே வந்த ஒரு பெண் மூன்று அர்ஜெண்டினோ பீசோ(1 அமெரிக்க டாலர்) கொடுத்தால் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றபடி வந்தார். நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர அவருடன் இருந்த மற்ற டேங்கோ கலைஞர்களிடம் ஸ்பானிஷில் ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்தார். அவர்கள் சொன்னது புரியவில்லை என்று நான் கேட்டதும் அவர் விளக்க அதுவும் புரியாமல் மையமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.

அங்கிருந்து நகரின் வடக்குப் பகுதியிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும், தெருக்களையும், பூங்காக்களையும் காட்டிவிட்டு ஏழு மணிக்கு ஓட்டலில் இறக்கிவிட்டனர்.

அரை மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அன்றைய இரவு குறித்தும் ரிகொலெதா கல்லறைத் தோட்டம்(Recoleta Cemetery) குறித்தும் அடுத்த பதிவில்.26 பின்னூட்டங்கள்:

சொன்னது...

பதிவுக்கு நன்றி. :)

சொன்னது...

yaru pa kappi antha tina? argentina va :)

சொன்னது...

//நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர// porque?!?!

Uruguay, Argentina achu.. appadiye brazil, columbianu poitu vanthena.. South Americava cover panna mathri irukum

சொன்னது...

ஹாய் கப்பி,

//"சுண்ணாம்பினால் செய்த பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்."//

எனக்கொரு சந்தேகம், இந்த பொம்மைகள் எல்லாம் மழை காலத்தில் என்னாகும்?

சொன்னது...

நல்ல பதிவு கப்பி. நன்றாக பதிந்திருக்கிறீர்கள்.

சொன்னது...

யாருப்பா அந்த டினா? நீ அடிக்கடி ஸ்பானிஷ் க்ளாசுக்கு போகைலயே நினைச்சேன் இப்படி தப்பு தண்டா எதுனாச்சும் நடக்கும்னு.

நம்ம கலாச்சாரத்துக்க்கு ஒத்து வராதுப்பா கப்பி! நமக்காக ஒரு தாவணி இல்லாமலா போயிடும் நம்ம ஊருல! :)))

பதிவு நல்லா இருக்கு கப்பி!

சொன்னது...

//பதிவுக்கு நன்றி. :)

//

வாங்க பெத்தராயுடு..

வருகைக்கு நன்றி ;)

சொன்னது...

//yaru pa kappi antha tina? argentina va :)

//

அதே தான் தலைவா ;)

சொன்னது...

//நல்ல சுற்றுப்பயணம் கப்பி.

தொடருங்கள் //

நன்றி நிர்மல்..இன்னும் இரண்டு பதிவுகள் வரும் :)

சொன்னது...

////நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர// porque?!?!//

por qué - why
porque - because

காரணமெல்லாம் எதுவும் இல்லடா...எடுத்தக்கனும்னு தோணல..அவ்வளவுதான் ;)

//Uruguay, Argentina achu.. appadiye brazil, columbianu poitu vanthena.. South Americava cover panna mathri irukum
//
ரியோ டி ஜெனிரோவுக்கும், இகுவாசா அருவிக்கும் செல்ல வேண்டுமென ஆசை..பார்ப்போம் :)

சொன்னது...

//hola//

மகேந்திரன்...நீண்ட இடைவெளிக்குப் பிறகு..வருக வருக!! ;)

சொன்னது...

//எனக்கொரு சந்தேகம், இந்த பொம்மைகள் எல்லாம் மழை காலத்தில் என்னாகும்?
//

சுமதி,
இதை அவங்க கிட்ட கேட்கனும்னு எனக்கு தோணல...அடுத்த தபா போனா கேட்டு சொல்றேங்க :))

சொன்னது...

//நல்ல பதிவு கப்பி. நன்றாக பதிந்திருக்கிறீர்கள்.

//

மிக்க நன்றி லொடுக்கு.

சொன்னது...

//யாருப்பா அந்த டினா? நீ அடிக்கடி ஸ்பானிஷ் க்ளாசுக்கு போகைலயே நினைச்சேன் இப்படி தப்பு தண்டா எதுனாச்சும் நடக்கும்னு.

நம்ம கலாச்சாரத்துக்க்கு ஒத்து வராதுப்பா கப்பி! நமக்காக ஒரு தாவணி இல்லாமலா போயிடும் நம்ம ஊருல! :)))
//

யோவ் அது அர்ஜென்'டினா'யா :))

இப்படி எக்குத்தப்பா யோசிக்கறதுக்குன்னே டாப் லேயரை வச்சிருக்கீங்களோ ;))


//
பதிவு நல்லா இருக்கு கப்பி!
//

வளரெ நன்னி தம்பி!

சொன்னது...

ஜாவா புரவலர் கவிஞ்ஞர் கப்பிநிலவர் சுற்றுபயண கட்டுரைகளை படிக்கும் பொழுது நாமே சென்று வந்த ஒரு அனுபவம்.......... ;)

சொன்னது...

//ஜாவா புரவலர் கவிஞ்ஞர் கப்பிநிலவர் சுற்றுபயண கட்டுரைகளை படிக்கும் பொழுது நாமே சென்று வந்த ஒரு அனுபவம்.......... ;)

//

ரைட்டு!!!! :)

சொன்னது...

கப்பி பதிவு ரொம்ப நல்லாருக்கு. விவரித்த விதம் சிறப்பு.

//நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர அவருடன் இருந்த மற்ற டேங்கோ கலைஞர்களிடம் ஸ்பானிஷில் ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்தார். அவர்கள் சொன்னது புரியவில்லை என்று நான் கேட்டதும் அவர் விளக்க அதுவும் புரியாமல் மையமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.//

ஆனா மூனே மூனு பெசோவுக்குக் கணக்கு பாத்துக்கிட்டு இப்படி அல்பத்தனமா நீ பிஹேவ் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை.

சொன்னது...

////கப்பி பதிவு ரொம்ப நல்லாருக்கு. விவரித்த விதம் சிறப்பு.//

டேங்கிஸ் தல ;)

//
ஆனா மூனே மூனு பெசோவுக்குக் கணக்கு பாத்துக்கிட்டு இப்படி அல்பத்தனமா நீ பிஹேவ் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை.
//

அடப்பாவி தல...இப்படி கோக்குமாக்காவே யோசிச்சிட்டிருந்தா விளங்கிரும்யா ;))

சொன்னது...

கப்பி,
அப்படியே எங்களையும் அர்ஜெண்டினா கூப்பிட்டு போயிட்ட...

சரி டினாவை பத்தி அடுத்த பார்ட்ல வருமா?

//அன்றைய இரவு குறித்தும் ரிகொலெதா கல்லறைத் தோட்டம்(Recoleta Cemetery) குறித்தும் அடுத்த பதிவில்.//
என்னப்பா ஏதாவது பேய பார்த்தியா???

சொன்னது...

//
சரி டினாவை பத்தி அடுத்த பார்ட்ல வருமா?
//

//கப்பி,
அப்படியே எங்களையும் அர்ஜெண்டினா கூப்பிட்டு போயிட்ட...//
வாங்க வெட்டி!

//சரி டினாவை பத்தி அடுத்த பார்ட்ல வருமா?
//
அர்ஜெண்டா வச்ச தலைப்பை இப்படி ஆராயலாமா?? ;)


//
என்னப்பா ஏதாவது பேய பார்த்தியா???
//
பேய் எதுவும் பார்க்கல..ஆனா அந்த கல்லறைகளைப் பார்த்து வாயடைச்சு போயிட்டேன் ;)

சொன்னது...

//அடப்பாவி தல...இப்படி கோக்குமாக்காவே யோசிச்சிட்டிருந்தா விளங்கிரும்யா ;))//

எதுய்யா கோக்குமாக்கு?
நீதான் மூணு பெசோவுக்கு அல்பத்தனமா யோசிச்சிட்டிருந்த இத கண்டுபுடிச்சி சொன்னா கோக்குமாக்கா?
இருக்கும்யா இருக்கும்.

ஏதாவது பணங்காசு வேணும்னா நம்ம தலகிட்ட கேக்கவேண்டியதுதான. மூணு பெசோ என்ன?, முன்னூறாயிரம் பெசோ அனுப்ப எங்க தல ரெடி!

இப்பவாச்சும் தெரிஞ்சிக்க!

சொன்னது...

//எதுய்யா கோக்குமாக்கு?
நீதான் மூணு பெசோவுக்கு அல்பத்தனமா யோசிச்சிட்டிருந்த இத கண்டுபுடிச்சி சொன்னா கோக்குமாக்கா?
இருக்கும்யா இருக்கும்.
//

அட கொலம்பஸுங்களா...நல்லா கண்டுபுடிச்சீங்க...


//
ஏதாவது பணங்காசு வேணும்னா நம்ம தலகிட்ட கேக்கவேண்டியதுதான. மூணு பெசோ என்ன?, முன்னூறாயிரம் பெசோ அனுப்ப எங்க தல ரெடி!

இப்பவாச்சும் தெரிஞ்சிக்க!//

தலயோட பாசம் எனக்கு தெரியாதா?? தல இப்பவே ஒரு ஆயிரம் பெசோ அனுப்பி வை தல..

சொன்னது...

அர்ஜென்டினாவை சுற்றி பார்த்த அனுபவம் தந்தது உங்கள் பதிவு!! அருமை!

சொன்னது...

//அர்ஜென்டினாவை சுற்றி பார்த்த அனுபவம் தந்தது உங்கள் பதிவு!! அருமை! //

மிக்க நன்றி திவ்யா!

சொன்னது...

நல்ல பதிவு...சிறப்பாக பதிவு செய்யும் திறமையும் உங்களுக்கு இருக்கு...

கிளப்புங்க பட்டையை...!!!!!!

சொன்னது...

//நல்ல பதிவு...சிறப்பாக பதிவு செய்யும் திறமையும் உங்களுக்கு இருக்கு...

கிளப்புங்க பட்டையை...!!!!!!//

மிக்க நன்றி ரவி! :)