அதிமுக செய்த தவறுகள்

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னமே திமுக தான் ஜெயிக்கும் என ஒருமித்த கருத்து நிலவுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...

அதற்குள் முதல்வர் கலைஞருக்கு கடிதம் எல்லாம் வந்துவிட்டது...

அதிமுக-வின் தோல்விக்கு அல்லது திமுக-வின் (கூட்டணியின்?) வெற்றிக்கு காரணங்கள் என்ன?? அதிமுக சறுக்கியது எங்கே?...


2001-2004 அரசு
2001-2004 வரை அதிமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வென்றால் திரும்பவும் அதே போன்ற நிலை வராது என்பதற்கான நிச்சயமற்ற நிலையே நடுநிலையாள்ர்களும் கூட திமுக கூட்டணியை ஆதரிக்க வைத்திருக்கலாம்.
இந்த அரசின் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூட 2004-க்கு முந்தைய அரசை மறக்கத் த்யாராக இல்லை.

கூட்டணி
மதிமுக, விசி கூட்டணி எதிர்பார்த்த அளவு வோட்டு வாங்க உதவவில்லை. தலித் வோட்டுகள் சிதறின.

தென்மாவட்டங்களில் மதிமுக-வின் வோட்டு வங்கியும் போதவில்லை.மக்களிடையே வைகோ மேல் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பிரசாரம்
வைகோ தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பே பிரசாரத்தைத் துவங்கினாலும் கடைசி நேரத்தில் reinforce செய்யத் தவறிவிட்டார்.

அதே போல் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக பிரசாரம் செய்யாததும் தொண்டர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

மாறன் குடும்பத்தைப் சுற்றியே வியூகம் அமைத்ததும் மக்களிடையே சலசலப்பை உண்டாக்கினாலும் அவை வோட்டுகளாக மாறவில்லை.

அதே போல் என்ன தான் சன் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் ஜெயா டிவியை விட சன் டிவியைத் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற முகத்திலறையும் உண்மை....

இலவசங்களை முதலில் நையாண்டி பேசிவிட்டு பின்னர் தானும் அறிவித்தது தோல்வி பயமாகச் சித்தரிக்கப்பட்டது.

'பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் ஏன் ஏற்கனவே செயல்படுத்தவில்லை' என்ற கேள்விக்கும் அதிரடியான பதில் இல்லை.

நடிகர்களை வைத்து பிரசாரம் செய்ததும் பயனளித்ததாகத் தெரியவில்லை.

'கருத்துக்கணிப்புகளில் ஜெயிக்கற கட்சிக்கு வோட்டு' என்று திமுக கூட்டணி proactive-ஆக பிரசாரம் செய்ய அதிமுக அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் வழிமுறை எதுவும் பின்பற்றவில்லை.

மத்திய அரசுடனான உறவு
மத்திய அரசுடன் சூமூகமான உறவு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது தாங்களே சொல்லிக்கொண்டது மக்களை யோசிக்க வைத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் இருந்தால் மத்திய அரசின் உதவிகள் நேரடியாகத் தமிழகத்துக்கு வரும் என்ற மாயையை உருவாக்கவே இந்த விஷயம் பயன்பட்டது.

அரசின் செயல்பாடு
சட்டமன்றம் ஆளுங்கட்சியின் செயற்குழு கூட்டம் போல் நடந்தது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மற்றும் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களின் செயல்பாடும் ஏமாற்றத்தியே அளித்தன.
மக்களுக்கு உதவக்கூடிய பல நல்ல திட்டங்கள் அரசு கொண்டுவந்தாலும் முந்தைய திமுக அரசின் திட்டங்களைக் கிடப்பில் போட்டது, அரசுப் பணியாளரிகள் வேலை நீக்கம், TASMAC, இது போல் பல விஷயங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.

அரசு மாற்றம்
மக்களிடையே ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு. இதை அதிமுக-வின் தவறு என குறிப்பிட முடியாவிட்டலும் இந்த அரசு மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தால் ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் யோசிக்க மாட்டார்கள்.

இது போக பல காரணங்கள் உள்ளன...சசிகலா குடும்பம், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவாக இல்லாதது, பல விஷயங்களில் அரசு கொண்ட சார்புநிலை...இது போல் பல...

இந்த தேர்தலை திமுக கூட்டணியின் வெற்றியாகக் கொள்ளாமல் அதிமுக-வின் தோல்வியாகக் காண்பதே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.



3 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//அரசுப் பணியாளரிகள் வேலை நீக்கம், TASMAC, இது போல் பல விஷயங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.//

தங்களுடைய கருத்து ஏற்புடையதாக தெரியவில்லை!

சொன்னது...

ஏதேச்சதிகார போக்கு,காவல் துறையை கையில் வைத்து கொண்டு எதிர்த்தவர்கள் மீதல்லாம் வழக்கு போட்டு இழுத்தடிக்கும் ஒரு பழிவாங்கும் மனபான்மை இவையும் உங்கள் காரணங்களில் சேர்க்க பட வேண்டியவை.

அதே சமயத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் மற்றும் கூவம் நதியோர ஆக்கிரமிப்பு அகற்றிய விழயத்தில்,ஜே வின் தீவிர எதிரிகள் கூட அவரை பாராட்டுவார்கள்

சொன்னது...

பின்னூட்டத்திற்கு நன்றி நாகு...

அரசு ஊழியர்களிடையே அந்த கசப்புணர்ச்சி நீங்கவில்லை..அதுதான் உண்மை...

TASMAC என்று நான் குறிப்பிட்டது அரசுடைமையாக்கியதை மட்டுமல்ல...midas குறித்தும் தான்...

சாமி,
எதிர்த்தவர்கள் மீது வழக்கு போடுவது எல்லா அரசும் செய்வதால் அதை குறிப்பிட வேண்டாமென விட்டேன்...
எனினும் குறிப்பிட்டமைக்கு நன்றி...