இரண்டு வாரங்களாக ஜோதா அக்பர் (Jodhaa Akbar) பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக சிறிது ஏமாற்றி வந்த ரஹ்மான் Back to form. இன் லம்ஹோ(In Lamho) பாடலில் மதுஸ்ரீ சொக்க வைக்கிறார். சுஃபி இசையில் ரஹ்மானின் பாடல்கள் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும். இந்த படத்தில் க்வாஜா மேரே க்வாஜா(Khwaja Mere Khwaja) பாடல். ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஜாவேத் அலி பாடியிருக்கும் Jashn-E-Baharaa அருமையான மெலடி. Azeem-O-Shaan Shehansha பாடல் அதிரவைக்கிறது. Mann Mohana பாடல் இன்னொரு இனிமையான் மெலடி. Jashn-E-Bahara பாடலுக்கான Instrumentalலில் புல்லாங்குழல் மனதை வருடுகிறது. Khwaja பாடலுக்கான Instrumental அருமை. பிப்ரவரி 15 திரைப்படம் வெளியாகிறது.
சமையலில் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்கள்
* நாம் சமைப்பதை கேவலமாக இருப்பதாக நாமே சொல்லிவிடக் கூடாது
* நாம் சமைப்பது தான் சிறந்தது என்று பெருமிதம் கொள்ள வேண்டும்
* சாப்பிடும்போது நாக்கு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட வேண்டும்
மூன்றாவது அதிமுக்கியமானது
சமையலில் ஓரளவு தேறிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். உருகுவேயில் இருந்தபோது நான்கைந்து வகைகள் மட்டுமே தெரியும். இப்போது புதிது புதிதாக முயற்சித்து எது செய்தாலும் சாப்பிடக்கூடிய அளவிலாவது வந்துவிடுகிறது. அறையில் நால்வருமே நன்றாக சமையல் செய்வதால் தினம் தினம் விருந்து தான்.
நடுங்க வைக்கும் குளிரில் கலிபோர்னியாவின் சான் டியகோ(San Diego)வில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றிருந்தோம். தண்ணீரில் நனையக்கூடிய ஒரு விளையாட்டிற்கு நாங்கள் தயங்கிக்கொண்டே சென்றோம். தன் தாத்தாவுடன் வந்திருந்த சுட்டிப்பெண் 'எனக்கு குளிரவில்லை. முழுதாக நனைய வேண்டும்' என்று கூறியபடியே குதூகலத்துடன் எங்கள் அருகில் அமர்ந்தாள். அந்த வண்டி நகரவும் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம். குளிரில் உடல் நடுங்கினாலும் அதை முகத்தில் காட்டாமல் 'எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயமே இல்லை' என்று உற்சாகமூட்டினாள். பாதி தூரம் கடந்ததும் 'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது.
சென்ற மாதம் மயாமி சென்றிருந்தபோது தங்கியிருந்த நண்பரின் வீடு இன்னும் பயமுறுத்தியபடி இருக்கிறது. கேரளா போல் இருந்த அந்த பகுதியில் அவர் ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வீட்டுக்கு சொந்தக்காரர் நடுத்தர வயதான அர்ஜெண்டின பெண்மணியாம். நாங்கள் சென்றபோது அவர் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறார். இரண்டு கருப்பு பூனைகள் வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. பார்வைக் குறையுள்ள கிழட்டு வெள்ளைப் பூனை வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு காதும் கேட்காதாம். பார்க்கும்போதே பயமாகத்தான் இருந்தது. இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை. கதவு மூடியபடிதான் இருந்தது.
அந்த பெண் வீடு முழுக்க கலைப்பொருட்கள் வாங்கி அடுக்கிவைத்திருக்கிறார். வெண்கல சிலைகள், அழகிய வேலைப்பாட்டுடனான திரைச்சீலைகள், மரத்தினாலான மேசை நாற்காலிகள், சிறிய பலிங்கு சிலைகள் என வீடு முழுக்க நிரப்பியிருக்கிறார். மின்விசிறியில் ஏலியன் முகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார். சுவரில் அங்கங்கே மிருகவதை எதிர்த்து வாசகங்கள். இந்த பொருட்களையெல்லாம் குறைவான விலையிலோ அல்லது இலவசமாக கிடைக்கும்போதோ தான் வாங்கி வருவார் என நண்பர் சொன்னார். அந்த வீட்டைப் பார்க்கும்போது ஒரு சேட்டு வீடு போன்றோ பேய் பங்களா போன்றோ அல்லது நாடக கம்பெனி போன்றோ தான் தோன்றியது.
தாய் குரங்கைக் கொன்றுவிட்டு அதன் குட்டியை காப்பாற்றும் சிறுத்தை!!
இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்.
இந்த மாத ?! தத்துவம்
Forrest Gump திரைப்படத்திலிருந்து...
"Life is like a box of chocolates. You never know what you're gonna get."
24 பின்னூட்டங்கள்:
\\இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்\\
அதே..அதே ;))
:)))) Video super
ஜோதா அக்பர் பாட்டுகள் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு பா!!
தாரே ஜமீன் பர் படம் பார்க்க போன போது ட்ரெயிலர் போட்டிருந்தாங்க!!
இவை இரண்டும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கின்றன!!
///இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை.///
பூனை மாதிரி வந்திருக்கும்! :-P
//இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன்///
யாரு பெத்த புள்ளையோ!! .....
வேற என்ன சொல்ல!! :-P
விடியோ செம சூப்பர்...
பதிவை விட CVR பின்னூட்டம் சூப்பர் ;)
நிகழ்படம் இப்போதான் பாத்தேன்!
ரத்தக்களரியா இருக்கும்னு முன்னாடி பாக்கல!!
எத்தனை எத்தனி அதிசயங்கள்பா இந்த உலகத்துல!! :-)
100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!!!
Amazing video. Thanks for sharing.
100 touch panniyatharkku vaazhuthukkal.
-Arasu
100-க்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிறேன்.
கோபிநாத்
எதே எதே? :))
ஜி
ஆமாப்பா ஆமா ;))
CVR
//பூனை மாதிரி வந்திருக்கும்! :-P//
அது சரி :))
//யாரு பெத்த புள்ளையோ!! .....
வேற என்ன சொல்ல!! :-P//
ஹி ஹி..
//எத்தனை எத்தனி அதிசயங்கள்பா இந்த உலகத்துல!! :-)//
அதே அதே
வெட்டி
நன்றி! :))
அரசு
நன்றிங்க :))
JK
நான் நன்றி மட்டும் சொல்லிக்கறேன் :))
நல்ல கதம்பம். ஜோதா அக்பர் படத்துக்கு ரகுமான் இசையா. இங்கயும் படம் வருதுன்னு தட்டி வெச்சிருக்காங்க. வந்தாப் பாக்கனும்.
சைட்டு குடுத்திருக்கீங்க பாருங்க. அது சூப்பர். நானும் ரகுமான் ரசிகருதான். :)
நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கேள்விப்பட்டேன். கத்திரிக்காக் கொழம்பு வெச்சா கோழிக் குருமாவாட்டம் இருக்குமா? உருளைய உருட்டுனா மீன் வறுவலாம்.
ஆயிரம் சினிமா கண்ட அபூர்வ கப்பி என்ற பட்டத்தை விரைவில் உங்களுக்குத் தரப் பரிந்துரை செய்கிறேன்.
100 வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கப்பி!
ஜிரா
//
நளர் நளர்னு சொல்றாங்களே...அது நீங்கதான்னு கேள்விப்பட்டேன். கத்திரிக்காக் கொழம்பு வெச்சா கோழிக் குருமாவாட்டம் இருக்குமா? உருளைய உருட்டுனா மீன் வறுவலாம்.
//
சேதி அங்க வரைக்கும் வந்துருச்சா..ஆமா வெந்நீர் வச்சாக்கூட இளநீ மாதிரி இருக்கும் :)))
என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வர முடியாதுல்ல :))
//
ஆயிரம் சினிமா கண்ட அபூர்வ கப்பி //
அவ்வ்வ்வ்வ் :))
திவ்யா
_/\_ நன்றி :)
நல்லாருக்கு கப்பி..
தொடர்ச்சியா படம் பாத்திட முடியுதான்னு ட்ரை பண்ணு..இங்க எனக்கு கொடச்சல் கொடுக்க ஒரு பெரியய்ய்ய கூட்டம் இருக்கிறதால என்னால முடியல :)
//
இங்க எனக்கு கொடச்சல் கொடுக்க ஒரு பெரியய்ய்ய கூட்டம் இருக்கிறதால என்னால முடியல :)//
:))) அவங்களையும் கட்டிப்போட்டு பார்க்க வைங்க :)))
நன்றி அய்ஸ் :))
கப்பி,
ஜோதா பாட்டு எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா உள்ளுக்குள்ள எதோ பட்சி சொல்லுது.. படம் பாக்கப்போறதுக்கு முன்னே 10 விமர்சனமாவது பாத்துட்டுப் போறது நல்லதுன்னு..ட்ரெய்லர் பாத்ததுல இருந்தே தோணிகிட்டிருக்கு..
கோவாரிகரோட 3ஆவது படம் இல்லையா? லா ஆப் ஆவரேஜஸ் வந்துடுமோன்னு ஒரு பயம். ஹ்ரித்திக் மேலேயும் நம்பிக்கை பெரிசா இல்லை.
சமையல் -- இதையெல்லாம் கல்யாணம் ஆகாத பசங்க ஆவணப்படுத்தக்கூடாது - இல்லறத்தியல் சட்டப்படி!
பினாத்தல் சுரேஷ்
எனக்கும் அந்த பயம் இருக்கு தல..ஆனாலும் தலைவிக்காக மொத நாள் பார்க்கலாம்னு இருக்கேன் :)))
//
சமையல் -- இதையெல்லாம் கல்யாணம் ஆகாத பசங்க ஆவணப்படுத்தக்கூடாது - இல்லறத்தியல் சட்டப்படி!//
ஹிஹி இது பேச்சலர் சமையல் தானே..கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்கறது வேறயில்லையா :)))
சமையல்ல நான் கத்துக்கிட்ட பாடம். நீங்க எத எப்படி சமைச்சாலும் உப்பு காரம் கரீக்டா இருந்த போதும். சாப்டுறலாம்!
நீங்க அந்த மயாமி வீட்ட பத்தி சொன்னது சந்திரமுகில வர எட்டைய புற மஹாராஜா வீட்ட பத்தி சொல்ற மாதிரி இருந்துச்சு. பாம்புக்கு பதிலா பூனையா?
ரிலீஸ் ஆன ஒரு படமும் (இந்திரலோகத்தில் உள்பட) பார்க்குற மாதிரி இல்லனாலும் உங்க துணிச்சல பாராட்டறேன். எனக்கு பிரிவோம் சந்திப்போம் ஓரளவுக்கு பரவா இல்லையா இருந்தது. ஆனா படம் கொஞ்சம் மெதுவா போகும்.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ராசா... :)
நூறாவது போஸ்டா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
சத்யா
//உப்பு காரம் கரீக்டா இருந்த போதும்//
அது தெரியாம கத்துக்கிட்ட பாடம் தானே இது :)))
//ரிலீஸ் ஆன ஒரு படமும் (இந்திரலோகத்தில் உள்பட) பார்க்குற மாதிரி இல்லனாலும் உங்க துணிச்சல பாராட்டறேன்//
நான் பீமா மட்டும் தான் பார்த்தேன்...அதுல இருந்து இன்னும் மீள முடியல..புது படமெல்லாம் பாக்கற எண்ணமே இல்ல :D
இராம்
டாங்கிஸ்ண்ணே :D
முத்துலட்சுமி
நன்றிங்கக்கா :))
andha monkey, leopard video.. was touching :)
இந்தப் பதிவை எப்ப ராசா போட்டே? இப்போ தான் பாக்குறேன். எல்லாமே சூப்பர்.
//ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார்//
ஸ்பானிஷ் பட சிடி இருக்கான்னு கேக்கலையா?
:)
//'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது//
கப்பி டச்...எங்கேயோ போய்ட்டேடா (ஞானக்) கோந்தே!!!
:)
வாங்க Dreamz :)
கைப்புள்ள
//
ஸ்பானிஷ் பட சிடி இருக்கான்னு கேக்கலையா?
:)//
அந்த அம்மணி வீட்டுல இல்ல தல..இருந்தா ஸ்பானிஷ் புலமையைக் காமிச்சிருக்கலாம் ;))
//'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது//
//கப்பி டச்...எங்கேயோ போய்ட்டேடா (ஞானக்) கோந்தே!!!
:)//
ஹி ஹி..நன்னி தல :)
உங்க கருத்து? Post a Comment