எழுதியதில் பிடித்தது - 2007

சர்வேசன் >> சிவிஆர் >>


It does not matter how slowly you go so long as you do not stop

-Confucius




சென்ற ஆண்டு எழுதிய மொத்த இடுகைகள் -

இந்த பதிவில் - 34

சங்கத்தில் - 8

கீத்துக்கொட்டாயில் - 7


எழுதிய பிறகு "ஏன் எழுதினோம்" என்று தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு. அப்படியான பதிவுகள் தொடர்ந்து எழுதுவதற்கே ஒவ்வாமையையும் அயர்ச்சியையும் ஏற்படுத்திவிடுவதால் பெரும்பாலும் தவிர்க்க முயல்வேன். அப்படியும் மொக்கைகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது.

திரைப்படம் குறித்தான பதிவுகள் விமர்சனம் என்பதை விட அத்திரைப்படம் குறித்தான அறிமுகப் பதிவாகவேயிருக்கும். மோசமான திரைப்படங்களைப் பார்த்து கடுப்பாகி மொக்கை என விமர்சனம் எழுதுவதை விட நல்ல படங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருக்கிறது.

சென்ற ஆண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். என்னளவில் திருப்திகரமாகவே இருந்தன. நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் சட்டியிலும் இல்லை. அகப்பையிலும் வரவில்லை. (என்னால் கவிதை எழுத முடியாதென்பதை எப்போதோ உணர்ந்துகொண்டேன்)

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொசுவத்தி சுத்துவது பொழுதுபோக்கு. கொசுவத்தி பதிவுகள்
நிறையவே இருக்கும். நிகழ்காலத்தை மறக்க கடந்த காலத்தை மனதில் ஓட்டிப்பார்ப்பது ஒருவித போதைதான்.

சங்கத்தில் எழுதிய பதிவுகளும் இங்கு எழுதிய சில பதிவுகளும் கிச்சுக்கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதியவை.

சென்ற வருடம் நிறைய ஊர் சுற்றினாலும் பாணதீர்த்தம்-குற்றாலம் குறித்தும் பழவேற்காடு குறித்தும் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

மற்றபடி மொக்கைகள் நிறையவே இருக்கும். பிடித்த, 'பிடித்த' வீடியோக்களை இட்டிருக்கிறேன். 'ஃபீலிங்க்ஸு' என ஓவராக பொங்கியிருக்கிறேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.


சங்கத்தில் அட்லாஸ் ஆனதும் நிரந்தர சிங்கமானதும்(சிங்கம் சும்மாவே இருந்தாலும்) பெருமை. சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவுகளுக்கான பரிந்துரையில் பாஸ்டன் பாலா இடம் கொடுத்தது மிகப் பெரிய அங்கீகாரம்.


வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதிவிடுவது என்று நல்ல மூடில் இருக்கும்போதெல்லாம் முடிவெடுத்தாலும் தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. மனசாட்சி "சரக்கு அவ்வளவுதான்டா சோம்பேறி" என்று கூவுவதை ஸ்மைலி போட்டு மழுப்பிவிடுகிறேன். மேலே கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவத்தை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கலாம்.




பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஆப்புக்கு ஆப்பு என இத்தொடரில் எழுத அழைத்த அண்ணன் சிவிஆருக்கு பிடித்த பதிவு - இராஜேந்திரன் கதை



நான் அழைக்கும் ஐவர் (மன்னிச்சிருங்க மக்கா :D)

கைப்ஸ்
இராம்
ஜி
தம்பி
இளா



8 பின்னூட்டங்கள்:

சொன்னது...

போன வருஷம் நீ எழுதின பதிவு எல்லாமே வழக்கம் போல அருமையா இருந்தது... இதுல ஒண்ணு சொல்றது நொம்ப கஷடம் :-)

சொன்னது...

நீ போடுற பதிவுகள் எல்லாமே ரொம்ப சாதாரணமாக இல்லாமல் ஒரு தனி தரத்தோடு இருக்க வேண்டும் என்று முயற்சி இருப்பதாக எனக்கு எப்பவுமே தோன்றும்.
கதைகளில் எடுத்துக்கொண்ட விஷயம்,அதை சொல்லும் விதம் எல்லாமே எதார்த்தமாகவும் படிப்பவரை கதையோடு ஒன்றச்செய்து விடும்!!
மேன்மேலும் எழுதி உன் திறமைகள் செம்மைபெற வாழ்த்துக்கள்!!

என் தேர்வை போட்டுட்ட! உன்னோட தேர்வை சொல்லவே இல்லையே???
ஒன்று சொல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு 5-10 பதிவுகளாவது சொல்லலாமே !! ;)

சொன்னது...

சேதுக்கரசி & கைப்ஸ்

நேற்றிரவு போட்ட பதிவை தூக்க கலக்கத்துல என்னமோ பண்ணிட்டேன்..ஸ்மால் டெக்னிக்கல் ஃபால்ட்!! கண்டுக்காதீங்க!! நன்றி :))

வெட்டி

இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன் :))

சிவிஆர்

//நீ போடுற பதிவுகள் எல்லாமே ரொம்ப சாதாரணமாக இல்லாமல் ஒரு தனி தரத்தோடு இருக்க வேண்டும் என்று முயற்சி இருப்பதாக எனக்கு எப்பவுமே தோன்றும்.//

அப்படியா..இது எனக்கே தெரியாதே :)

வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி நன்றி. வெட்டிக்கு சொன்னதே தான்..இதுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன் :D

//என் தேர்வை போட்டுட்ட! உன்னோட தேர்வை சொல்லவே இல்லையே???//

ரொம்ம்ப முக்கியம் :))..அதான் அண்ணன் நீங்களே ஒன்னு தேர்ந்தெடுத்து சொல்லிட்டீங்களே..அது போதும் :D

சொன்னது...

செல்லம் நீயே இம்புட்டு யோசிக்கிறியே அப்போ நான் எல்லாம்!!!!

சொன்னது...

சுயசொறிதல்ல ரொம்ப தன்னடக்கமா சொறிஞ்சி இருக்கீங்க;)

சொன்னது...

நம்ம பதிவிலே நமக்குப் பிடிச்சது கண்டு பிடிக்கறது கடினமுங்க

சொன்னது...

எனக்கும் பிடித்தது இராஜேந்திரன் கதைதான்.

சொன்னது...

கோபிண்ணே

அது என்ன நீயேஏஏஎ..நெம்ப ஓவரு :)))


வ.ரா. Sathiya

புண்ணாகிடக் கூடாதுல்ல :))


சீனா

வாங்க சீனா _/\_ :)


இளா

நன்றி விவ்ஸ் :))